என் கண்ணாடி பூவே நீதான்டி-1

4.7
(10)

அத்தியாயம்-1

Wait a minute (uh),

get it how you live it (uh)

Ten toes in when we standin’ on business

I’m a big stepper,

underground methods

Top-notch hoes get the most,

not the lesser(most, not the lesser)
Straight terror, product of your errors Pushin’ culture, baby, got that product you can’t measure (product you can’t measure)

என்று அந்த அமெரிக்காவில் இருக்கும் புளோரிடா மாகாணத்தில் இருக்கும் ஆர்லேன்டோ பீச்சே ராப் சாங்கினால் கதிகலங்கி போய் இருந்தது. அந்த ஆர்லேன்டோ நகரத்தில் இருக்கும் பீச் மிகவும் புகழ்பெற்ற பீச் ஆகும். அது மட்டும் அல்ல அந்த ஆர்லேன்டோ பீச்சிற்கு அருகில் தான் உலக புகழ்பெற்ற வால்ட் டிஸ்னி, மற்றும் யுனிவர்செல் பூங்காக்கள் இருக்கின்ற இடமாகும்.

பூபாளம் ராகத்தை இசைக்கும் அந்த அதிகாலை நேரத்தில் வெள்ளிக்கீற்றாக கிழக்கே தன் அழகிய கதிர்களை இந்த உலகத்திற்கு காண்பித்தான் சூரிய பகவான்.

அந்த அதிகாலை பொழுதிலும் அந்த புகழ்பெற்ற பீச்சில் அனைத்து மக்களும் அறைகுறை ஆடைகளுடன் மண்ணில் படுத்து உடலில் பல சன்ஸ்க்ரீமை தடவிக்கொண்டு சன் பாத் எடுத்துக்கொண்டனர்.

பல வெளிநாட்டவர்கள் அங்கு குழுமிருந்தனர். அதில் பெண்கள் அனைவரும் கட்டாய பிக்னி உடையில் தான் கண்களை கவர்ந்துக்கொண்டு கவர்ச்சியாக இருக்க.. ஆண்களோ ஒரு குட்டி ஷார்ட்ஸை மட்டும் போட்டுக்கொண்டு கையில் வெயிலின் தாக்கத்திற்கு ஏற்ப குளிச்சியான வைன்ஸ் மற்றும் ஸ்கார்ட்சை அருந்திக்கொண்டிருந்தனர். அதில் பல பெண்களும் தான் ஆல்கஹாலில் மிதந்துக்கொண்டிருந்தனர்.

இப்படியே ராப் பாடல் அந்த இடத்தையே அதிர வைக்க.. அதனை மேலும் அதிர வைக்குமாறு அந்த கடலில் பலர் அலையில் விளையாடும் விளையாட்டான சர்ஃபிங்கை விளையாடிக்கொண்டிருக்க.. அதனை பலர் ஆர்வமாக கைத்தட்டி ரசித்துக்கொண்டிருந்தனர்.

அந்த சர்ஃபிங்கை செய்யும் பலரில் ஒருவனோ அலைகளின் செல்ல பிள்ளை போல அலைகளுக்கு ஆட்டம் காட்ட.. அவனின் வெற்று தேகமோ அந்த வெயிலின் தாக்கத்தால் சிவந்து போய் இருந்தது. நன்றாக சிவந்த நிறம். வெற்று தேகத்தில் தலையை தவிற வேறு எந்த இடத்திலும் ஒரு முடியையும் பார்க்க முடியாது.. அவ்வளவு வளவளவென இறும்பாக வைத்திருந்தான் தேகத்தை. அவன் வளைந்து, நெளிந்து அலைகளுக்கு போக்கு காட்டுவதில் பல நீர்துவாலைகள் அவனின் உடலில் பட்டு மினுமினுக்க.. அவனின் முகமோ கர்வ புன்னகையில் மிதந்தது.

வருடத்தில் ஒரு முறை அந்த ஆர்லேன்டோ பீச்சில் சர்ஃபிங் சாம்பியனுக்கான போட்டி நடைபெறும். அந்த போட்டி தான் இப்போது நடக்கின்றது. பல நாடுகளிலிருந்து பலதரப்பட்ட சர்ஃபிங் சாம்பியன்ஸ் வந்து கலந்துக்கொள்ள.. அதில் ஒருவனாக வந்து கலந்துக்கொண்டவன் தான் அந்த கம்பீர ஆடவன்.

முகம் முழுவதும் கம்பீரத்தில் மிதக்க.. அவனின் சின்ன தாடியும், தாடையில் வளர்த்திருந்த குறுந்தாடியும், அவன் தலையில் அடிக்கப்பட்டிருந்த லைட் க்ரே கலர் கலரிங்கும் அவனை அவ்வளவு கவர்ச்சியாக காட்டியது. அனைத்திற்கும் மேல் அவனின் அந்த கம்பீர உடற்கட்டு அவனை இன்னும் மெருகூட்டிக்காட்ட அங்கிருந்த பல பெண்களின் கண்களும் அவன் மீது தான். அதில் அவனின் உதடுகளும் கம்பீரமாக தான் விரிந்தது.

சரியாக ஒருமணி நேரம் வரை நடக்கும் இந்த அலைசறுக்கு விளையாட்டில் யார் அந்த ஒருமணிநேரமும் மண்ணை கவ்வாமல் இல்லை இல்லை கடலில் உப்பு தண்ணீரை கவ்வாமல் நிலைத்து நிற்கின்றார்களோ அவர்களே அதன் வெற்றிப்பெற்ற சாதனையாளர்கள் ஆவார்கள். ஆனால் அது அவ்வளவு எளிதானது அல்ல. கடலில் ஆட்டத்திற்கு அந்த சறுக்கு பலகையை சரியாக செலுத்தவில்லை என்றால் கண்டிப்பாக பலகை காலை வாரிவிட்டுவிடும்.

அதில் தான் இப்போது அந்த ஆணழகனும் சறுக்கி விளையாடிக்கொண்டிருக்கின்றான். அவன் பெயர் வினையன் ரகோத்மன். சினிமா துறையின் அமெஸிங் ஸ்டார் என்ற பட்டத்தை மக்களிடைய வாங்கிய சினிமா நடிகன்.

அவன் உடலும், தோலின் நிறமும் அவனை அப்படிதான் காட்டியது. நல்ல ஆணழகனாக, கர்வம் மிக்கவனாக, திமிர் பிடித்தவனாக காட்டியது. அவனின் உடல் மின்னுவதை பார்த்தாலே அவன் பணக்காரன் ஏன் தங்க தட்டில் சாப்பிட்டு, தங்க கட்டிலில் உருண்டு புரளுபவன் என்று மற்றவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

அவன் தான் இப்போது தன் உடல் ஏன் தன் கைகள் கூட அலைக்கடலில் படாமல் கைதேர்ந்தவனாக அலை சறுக்கு விளையாட்டை ஆனந்தமாக விளையாடிக்கொண்டிருந்தான். அவனுக்கு இது எத்தனையாவது போட்டி என்றே அவனுக்கு மறந்து போயிற்று. கிட்டதட்ட அவனின் பதினெட்டாவது வயதிலிருந்து இந்த விளையாட்டை விளையாடுகின்றான். எந்த நாட்டில் இந்த விளையாட்டிற்கான அறிவிப்பு வந்தாலும் சிட்டாக பறந்து வந்துவிடுவான் ரகோத். அந்த அளவிற்கு அந்த விளையாட்டின் மீது அவனுக்கு மோகம் அதிகம். ஏன் கர்வம் கூட.

இப்படியாக ஒருமணி நேரத்தை வெற்றிகரமாக ரகோத் முடிக்க மற்றவர்களோ மண்ணை கவ்வியிருந்தனர். ரகோத் மட்டும் அல்ல அவனை போல இன்னும் நால்வர் இந்த போட்டியினை வெற்றிகரமாக முடித்திருந்தனர். ஆனால் இவனை விட கொஞ்சம் வேகம், விவேகம் குறைவாக. அதனால் இந்த பத்தாவது ஆண்டில் அவனுக்கு இது ஆறாவது பரிசு.

ஆம் ரகோத்திற்கு இப்போது வயது இருபத்தி எட்டு. சரியாக அவன் இந்த விளையாட்டை விளையாட ஆரம்பித்து பத்து வருடம் ஓடியிருந்தது. இதனை விளையாட ஆரம்பித்த புதிதில் அவனுக்கு தோல்விகள் தான் அதிகமாக கிடைத்தது. ஆனால் முறையாக பயிற்சி எடுத்து இப்போது ஐந்தாம் தடவையாக சேம்பியன் பட்டம் வென்றுவிட்டான்.

திஸ் இயர் சர்ஃபிங் சேம்பியன் ஷீல்ட் கோஸ் டூ மிஸ்டர் வினையன் ரகோத்மன்..”மைக்கில் அந்த போட்டியின் தொகுப்பாளர் கரகோஷத்துடன் கத்த.. அதனை மிதப்பான அதே நேரம் கேலியான பார்வையை பார்த்தவாறே மேடைக்கு வந்து நின்றான் வினையன்.

கங்ராஸிலேஷன் மிஸ்டர் விஆர்..”என்றவாறே அந்த போட்டியின் விருந்தினர் ஷீல்டை தூக்கி அவனிடம் நீட்ட.. அவனோ தலையை மட்டும் ஆட்டியவாறே அந்த பரிசினை வாங்கிக்கொண்டான். அதைப்பார்த்த யாருமே இவனுக்கு உடல் முழுவதும் திமிரோ என்று தான் தோன்றும்.

பரிசினை வாங்கிக்கொண்டு கீழே இறங்கியவனோ நேராக போய் நின்றது தன்னுடைய ஸ்போர்ட்ஸ் பைக்கிடம் தான். அமெரிக்காவிற்கு சூட்டிங்கிற்காக வரவில்லை அவன். அவனுக்கு சூட் இந்தியாவில் நடக்கின்றது. ஆனால் இந்த போட்டிக்காக ஷூட்டை சேன்சல் செய்துவிட்டு வந்திருந்தான் பறந்து. இப்போது ஒருவாரம் இங்கு தங்கி தன் வாழ்நாளை கழிக்க தான் திட்டம் போட்டிருந்தான்.

ஆனால் அவன் நினைப்பதெல்லாம் நடந்துவிடுமா என்ன.. ஸ்போர்ட்ஸ் பைக்கில் கலக்கலாக ஏறி உட்கார்ந்தவனுக்கு அவன் அலைப்பேசி அழைப்பு விடுக்க.. ஹெல்மட் போட்டிருந்தவனின் காந்த கண்கள் சுருக்கியவாறே தன் போனை எடுத்து பார்த்தான். ஏனென்றால் அவனின் இந்த மாதிரியான போட்டிகளின் போதும், விடுமுறையின் போதும் அதிகப்பட்சம் அவனுக்கு ஒரு குறுஞ்செய்தி மட்டுமே வரும். ஆனால் இப்போது வந்திருக்கும் அழைப்பு அவனை யோசிக்க வைத்தது.

அதுவும் அலைபேசியில் தெரிந்த பெயரை பார்த்தவனின் கண்கள் சுருங்க. உடனே அழைப்பை எடுத்து காதில் வைக்க..

ஹலோ வினை“..

எஸ் ரஞ்சித்எதிர்முனையில் கேட்ட கணீர் குரல் அந்த பக்கம் வினை என்று அழைத்தவனை கொஞ்சம் நிதானப்படுத்திருக்க வேண்டும்.. அதனால் அந்த பக்கம் அமைதியாகி போக.

லுக் ரஞ்சித் கால் செஞ்சிட்டு இப்டிதான் பேசாம இருப்பீங்களா..”வினையனின் மிதப்பான குரலில் ரஞ்சித்திற்கு ஏற்கனவே இருந்த டென்ஷன் அதிகமாகிருக்க வேண்டும்.

அது அப்பாவுக்கு..”

ரஞ்சித்தின் இந்த ஒற்றை வார்த்தை வினையனை அமைதியாக்க போதுமானதாக இருந்தது. “அப்பாவா… அவருக்கு என்ன ரஞ்சித்இதுவரை ஒட்டுறவில்லாமல் பேசிவன் இப்போது அப்பா என்றதும் அவனின் கம்பீர குரல் கூட நடுக்கம் கொண்டதோ என்னவோ.

அதில் கொஞ்சம் குரல் தழைத்த ரஞ்சித்தோ.. “லுக் வினை நான் சொல்றத நல்லா கேளு. அப்பாவுக்கு ஒரு மைனர் ஆக்ஸிடென்ட்.. நீ கொஞ்சம் பதட்டபடாம இந்தியா வந்து சேரு..”பொறுமையாகவே எடுத்துரைத்த ரஞ்சித்.. “அவசரபடாத நிதானம் வேகமா பைக் ஓட்டாத..”கடைசி வரியை அக்கறையாக கூறியவன் போனை வைத்துவிட்டான்.

ஆனால் அதனை கேட்டவனோ அப்படியே ஸ்தம்பித்து போய்விட்டான். இந்த உலகத்தில் அவனுக்கு என்று இருக்கும் ஒரே ஜீவன், உயிர் அவனின் தந்தை மட்டுமே. அவருக்கு ஏதாவது ஒன்று என்றால் அவனால் தாங்கவே முடியாது. அவனின் அம்மா அவனை விட்டு சென்ற போது கூட.. “ஓஓஓ நான் அவங்க பிள்ளை இல்ல போல..”என்றவனை மயக்கும் மந்திரம் அப்பா என்ற வார்த்தை தான். அவனுக்கு அந்த அப்பா என்ற வார்த்தையில் தான் அவ்வளவு ஒட்டுதல்.

உடனே நினைவிற்கு வந்தவனோ தன் போனில் ஏதோ ஒரு மெசேஜை போட்டவன் நேராக அந்த பைக்கை விட்டான் அமெரிக்காவின் விமான நிலையத்திற்கு. ஆனால் அவனின் இந்த வருகை யார் யாரின் வாழ்க்கையையோ மாற்றப்போவது அவனுக்கு தெரியாமல் போனது தான் காலத்தின் கட்டாயமோ என்னவோ.

(நீதான்டி…)

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!