அத்தியாயம் 3
யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் சூர்யாவும் வருணும் இந்தியா வந்தடைந்தனர். நான்கு வருடத்திற்கு பிறகு வந்திறங்கிய வருணுக்கோ மனதில் தெளிவில்லாத பல உணர்வுகள். தன் தம்பியின் எண்ணவோட்டங்களை அறிந்ததனாலயே அடுத்தடுத்து அவன் செய்வதற்கான வேலையை கொடுத்தவன் வீட்டுக்கு செல்லாமல் நேராக சென்றதென்னவோ தனது அலுவலகத்திற்கு தான்..
வருணுக்கும் அடுத்தடுத்து செய்வதற்கான வேலையில் மூழ்க அவனுக்கோ பிற எண்ணங்கள் தோன்றவில்லை..
முன்னறிவிப்பின்றி வந்திறங்கிய தனது முதலாளியின் வருகையால் ஊழியர்களிடம் சலசலப்பு ஏற்பட்டாலும் அனைவரும் முகமன் தெரிவிக்க அதை சிறு தலையசைப்போடு ஏற்ற சூர்யாவும் வருணும் தங்களது அறைக்குள் நுழைந்து கொண்டனர்..
அலுவலகத்தில் வேலை செய்யும் ஊழியர்களில் ஒருவன் “சூர்யா சார் இன்னைக்கு வருவார்னு யாரும் சொல்லல” என்று கூற..
“இது அவங்க கம்பெனி நம்மக்கிட்ட சொல்லிட்டு வரனும்னு அவங்களுக்கு என்ன அவசியம். நம்ம வேலைல கரெக்ட்டா இருந்தா நாம பயப்பட வேண்டிய அவசியம் இல்லை” என்று இன்னொருவன் கூறினான்..
அங்கிருந்தவர்கள் அதை ஆமோதிப்பதாக தலையசைக்க கூட்டத்தில் பெண்ணொருத்தி “சூர்யா சாரும், வருண் சாரும் ரொம்ப ஆளுமையாகாவும் அழகாகவும் இருக்காங்கள்ல” என்று கூற..
“இப்படி அவங்கள ரசிச்சிட்டும், பேசிட்டும் இருந்தா நம்ம வேலை போயிடும் போய் நம்ம வேலையை பார்ப்போம்” என அங்கிருந்து கலைந்து சென்றவர்கள் தமது வேலைகளில் கவனம் செலுத்தினார்கள்..
சூர்யாவின் வருகையை அறிந்த கம்பெனியின் மேனேஜர் ராஜா சூர்யாவின் அறைக்கதவை தட்டியவாறே “சார் மே ஐ கம் இன்” என்று கேட்க..
“யெஸ் கெட் இன்” என்று சூர்யா அனுமதி அளித்ததை தொடர்ந்து உள்ளே சென்றவுடன் சூர்யாவுக்கும், வருணுக்கும் முகமன் கூறிவிட்டு “சார் நீங்க இன்னைக்கு வரப்போறதா எந்த தகவலும் கிடைக்கல” என்று கூறினார்..
“என் கம்பெனிக்கு வர நான் தகவல் சொல்லனுமா..?”
“ஐயோ இல்லை சார். நீங்க வரப்போறது தெரிஞ்சிருந்தா உங்களை க்ரண்டா வெல்கம் பண்ணிருப்போம்..”
“அதெல்லாம் வேஸ்ட் ஆஃப் டைம் வொர்க்கர்ஸ் ஸ்ட்ரைக் எப்படி போகுது..”
“எவ்வளவு பேச்சு வார்த்தை நடத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லை..”
“ம்ம் சரி மீட்டிங் அரெஞ்ச் பண்ணுங்க” என்று கூறிய சூர்யா வருணிடம் கண்ணசைக்க அவனும் கட்டை விரலை உயர்த்தி காட்டினான்..
சூர்யாவும் வருணும் இந்தியா வந்ததை வீட்டினரிடம் தெரிவித்த தேவ் தேவிகாவுடன் ஆஃபிஸ் சென்றார். சூர்யா எது செய்தாலும் அதற்கு பின் ஏதாவது காரணம் இருக்கும் என்பதால் யாரும் அவன் சொல்லாமல் வந்ததை பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை..
காரில் அலுவலகம் சென்றுக்கொண்டு இருந்த தேவ்வோ தேவிகாவிடம் “சூர்யா இந்தியா வரேன்னு சொன்னானே தவிர என்னைக்கு வரேன்னு சொல்லல மீட்டிங் அரெஞ்ச் பண்ணிருக்கான்..”
“அவன் எப்ப என்ன முடிவு எடுப்பான்னே தெரியாது. ஒருவேளை வொர்க்கர்ஸ் பிரச்சனையை யார் தூண்டி விடுறாங்கன்னு கண்டுபிடிச்சிருப்பான். அதான் அவனுங்க சுதாரிக்கிறதுக்கு முன்னாடி இங்க வந்துட்டான்” என்று தேவிகா சொல்லிக்கொண்டு இருக்கும் போதே அவர்களின் அலுவலகமும் வந்தது. காரில் இருந்து இறங்கிய இருவரும் அலுவலகத்தில் உள்ள மீட்டிங் ஹாலுக்கு சென்றனர்..
மீட்டிங் ஹாலில் இவர்களின் வருகையை தொடர்ந்து மீட்டிங் ஆரம்பிக்கப்பட்டது. தேவிகாவும், தேவ்வும் தனது இரு புதல்வர்களை பார்க்க சூர்யாவும் அவர்களை நோக்கி கனிவான பார்வையை வீசியவன் மீட்டிங்கில் கவனம் திருப்பினான். வருணோ யாரையும் நிமிர்ந்து பாராமல் அவனது பார்வையை மடிக்கணினியில் கவனம் செலுத்தினான். தேவிகாவிற்கோ வருணை அணைப்பதற்கு கைகள் பரபரத்தன, இருந்தாலும் இருக்கும் இடம் கருதி தன் உணர்வுகளை கட்டுபடுத்தியவர் மீட்டிங்கில் கவனம் செலுத்தினார்..
மீட்டிங்ல் பணியாளர்களின் வேலை நிறுத்தம் மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி விவாதிக்கப்பட்டது. இறுதியாக ஏற்கனவே ஒப்புக்கொண்ட பல ப்ராஜக்ட் குறிப்பிட்ட தேதிக்குள் முடிவடையாததால் வாடிக்கையாளர்களின் அதிருப்தியாக இருப்பதாக கூறப்பட்டது..
அனைத்தையும் கேட்ட சூர்யாவோ “வட இந்தியால இருந்து தொழிலாளர்கள் வர எல்லா ஏற்பாடும் பண்ணுங்க” என்று கூற..
அதனை கேட்டு அங்கிருந்த அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள தேவ்வும் “இப்படி வட இந்திய தொழிலாளர்களை கொண்டு வந்தா போராட்டாம் இன்னும் தீவிரமாகும்”எனக் கூறினார்..
“ஆகட்டும்..! அவங்க நோக்கம் ஸ்ட்ரைக்க கைவிடாம தொடரணும் அப்படிங்கிறது தான். நமக்கு நம்ம வொர்க்கர்ஸ் எவ்ளோ முக்கியமோ அதே மாதிரி நம்ம கிளைன்ட்ஸ்சும் முக்கியம். அவங்கள டிஸ்ப்பாயின்ட் பண்ண விரும்பல” என்றவன் மீட்டிங் முடிந்தது என்பது போல் அவ்விடம் விட்டு தனது அறைக்கு சென்றான்..
சூர்யாவை தொடர்ந்து அறைக்குள் நுழைந்த தேவ்வும் “சூர்யா என்னடா மீட்டிங்ல இப்படி பேசிட்டு வந்திருக்க?” என்று கேட்டார்..
“அப்பா என் மேல நம்பிக்கை இருக்குல்ல..”
“நான் என்னை விட உன்னை தான் அதிகம் நம்புறேன்..”
“அது போதும். எல்லாத்தையும் நான் சரி பண்றேன்” என்று கூறிய சூர்யாவும் தனது வேலையில் மூழ்கி விட மற்றவர்களும் தங்களது வேலைகளை தொடர்ந்தனர்..
மாலை வேளையில் அலுவலகத்திற்கு முன் தொழிலாளர்கள் அமர்ந்து சூர்யாவிற்கு எதிரான பதாகைகளை ஏந்தியாவாறே போராட்டம் செய்ய அதை எதிர்பார்த்து காத்திருந்ததை போல் சூர்யாவும் வருணிடம் சில கட்டளைகளை பிறப்பித்தவன் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்றான்..
தொழிலாளார்கள் போராட்டம் செய்யும் இடத்திற்கு வந்த சூர்யாவை பார்த்த போராட்டக்காரர்களின் இடையே சலசலப்பு ஏற்பட அங்கிருந்த யூனியன் லீடர் பைரவன் அவர்களை அமைதியாக இருக்க கூறினான். சூர்யாவும் அவர்களிடம் பேச முற்பட அவனை தடுத்த பைரவன் “சார் எதுனாலும் என்கிட்ட பேசுங்க” என்று கூறினான்..
“அவங்க பிரச்சினைய அவங்ககிட்ட தான பேச முடியும்”..
“அவங்க சார்பா பேசுறதுக்குதான் யூனியன் லீடரா என்னை தேர்ந்து எடுத்துருக்காங்க..”
“நான் பிரச்சனைனு சொன்னது உன்ன”..
பைரவனோ ஒருநிமிடம் அதிர்ந்து பின் சுதாரித்தவன் “என்ன சார் எங்களுக்கிடையில குழப்பத்தை உண்டு பண்ணி ஆதாயம் தேட முயற்சி பண்றீங்களா..”
பைரவை நக்கலாக பார்த்த சூர்யாவோ “குழப்பத்தை உண்டு பண்ணி யார் ஆதாயம் தேடுறாங்கன்னு கொஞ்ச நேரத்தில் தெரிஞ்சுடும்” என்று கூறியவன் அங்கிருந்த தொழிலாளார்களிடம் “உங்க அலைப்பேசியில ஒரு வீடியோ அனுப்பிருக்கேன் அதை கொஞ்சம் பாருங்க. அதற்கு பிறகு உங்ககிட்ட நான் பேசுறேன்” என்றவன் அங்கிருந்து சென்றுவிட்டான்..
பைரவனும் மற்ற தொழிலாளர்களும் தமது அலைப்பேசியில் வந்த காணொளியை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். நிலைமையை உணர்ந்த பைரவன் அங்கிருந்து தப்பிசெல்ல முயல அவன் தப்பி விடாதவாறு அங்கிருந்த சூர்யாவின் பாதுகாவலர்கள் மடக்கி பிடித்தனர்..
வருணின் அழைப்பின் பெயரில் அலுவலகத்திற்குள் நுழைந்த காவல்துறையினர் மேனேஜர் மற்றும் கணக்காளரை கைது செய்தனர். அலுவலகத்தில் நடந்த அதிரடி நடவடிக்கைகள் புரியாமல் மற்ற ஊழியர்கள் குழம்பினர். தேவ்வும், தேவிகாவும் விஷயமறிந்து அவ்விடம் வந்தவர்கள் “என்னாச்சு..?” என்று கேட்க, அந்நேரம் அவ்விடம் வந்த சூர்யாவோ “நம்மளோட நேர்மையா போட்டி போட்டு ஜெயிக்க முடியாத நம்ம எதிரி கம்பெனிக்காரன் கூட சேர்ந்து இவங்க நம்ம தொழிலாளர்களை வேலை நிறுத்த போராட்டத்துக்கு தூண்டி விட்டுருக்காங்க. அது மட்டுமல்ல அவங்களுக்கு சேர வேண்டிய போனஸ், சம்பளம் எல்லாத்துலையும் கையாடல் பண்ணிருக்காங்க. அதுக்கு பர்ஃபெக்ட்டா கணக்கு காமிச்சு எல்லாரையும் முட்டாள் ஆக்கிருக்காங்க..”
தேவ்வும் “நம்ம மேனஜர் ரொம்ப வருஷமா நம்மக்கிட்ட வேலை பார்க்கிறார். அவர் ஏமாத்தினார்னு சொல்றத நம்ப முடியல..” என்று கூறினார்..
“அந்த நம்பிக்கையை பயன்படுத்திதான் நம்மள ஏமாத்திருக்கார்..”
“சரி உனக்கு எப்படி இதெல்லாம் தெரிய வந்தது. இதுக்கு பின்னாடி யார் இருக்கா..?”
“கொஞ்ச நேரத்தில எல்லாம் தெரிஞ்சுடும்..” என்று கூறிய சூர்யா அங்கிருந்து செல்ல காவலர்களும் கைது செய்தவர்களை காவல்நிலையம் அழைத்து சென்றனர்..
சமூக வலைத்தளங்களில் வர்மா கன்ஸ்ட்ரக்சனின் முதலாளி தரமில்லாத கட்டிடங்களை கட்டி விற்றதால் கைது என்ற செய்தி பரவலாக பேசப்பட்டது..