என் காதல் முகவரி நீயே 9

5
(3)

அத்தியாயம் 9

தனது இருக்கையில் தலையில் கை வைத்தவாறே அமர்ந்திருந்த ஒளிர்மதியோ வேலையை ராஜினாமா செய்யும் முடிவோடு ஹெச் ஆர் அறை நோக்கி சென்றாள். அவளது நடவடிக்கைகளை சிசிடிவி மூலம் பார்த்து கொண்டிருந்த சூர்யாவோ அவளை தொடர்ந்து அவனும் ஹெச் ஆர் அறை நோக்கி சென்றான்..

 

ஹெச் ஆர் அறைக்கு அனுமதி கேட்டு நுழைந்தவளோ வேலையை ராஜினாமா செய்வதற்காக கேட்க, அவளை அதிர்ந்து பார்த்தவரோ “ஏன் மா இன்னைக்கு தானே வேலைக்கு சேர்ந்த என்னாச்சு? ஏதும் பிரச்சனையா?” என்று கேட்க..

 

அவள் பதில் கூறும் முன்னே உள் நுழைந்த சூர்யாவோ ஒளிர்மதியை பார்த்தவாறே ஹெச் ஆரிடம் “என்னாச்சு?” என்று கேட்க..

 

ஹெச் ஆரும் சூர்யாவிடம் ஒளிர்மதி கூறியதை கூறினார். இப்பொழுது ஒளிர்மதியை அழுத்தமாக பார்த்தவனோ “ஏன் இப்ப வேலைய விடணும்னு நினைக்கிறீங்க மிஸ் ஒளிர்மதி?” என்று கேட்க..

 

அவனை பார்த்தவளோ “கொஞ்சம் பர்ஸ்னல் இஸ்யு” என்று கூற..

 

“உங்க பர்ஸ்னல் விஷயத்தை எதுக்கு வேலைல கொண்டு வரீங்க..” என்று அவன் கேட்ட கேள்வியில் என்ன பதில் கூற என்று அவள் திணற..

 

அவளை பார்த்தவனோ “கம் டூ மை கேபின்” என்று கூறியபடியே சென்றான்..

 

அவனை தொடர்ந்து அவன் அறைக்குள் அனுமதி பெற்று நுழைந்தவளை இருக்கையில் அமர கூற..

 

அவள் இருக்கையில் அமர்ந்ததும், தன் இருக்கையை விட்டு எழுந்தவன், அவள் அருகே சென்று அவளின் இருக்கையை தன் நோக்கி திருப்பியவன், அவளது இருக்கையின் இருபக்கமும் தனது கைகளை வைத்தவாறே அவள் முகம் நோக்கி குனிந்தான்..

 

அவனின் இந்த அதிரடியில் அதிர்ந்தவளோ அவனது நெருக்கத்தில் கண்களை மூடினாள்..

 

அவளது அழகு முகத்தை ரசித்தவன் அவள் காதோரம் குனிந்து ” நீ பர்ஸ்னல் சொன்னது என்னதான” என்று கேட்க..

 

அவனது மீசை முடியும், உதடும் அவள் காது மடலை உரச, அவளுக்குள்ளோ ஓர் சிலிர்ப்பு. அவன் என்ன கூறினான் என்று கூட அவளுக்கு தெரியாத நிலை..

 

தன் நெருக்கத்தில் பேசாமடந்தையாக இருக்கும் அவளின் நிலையை அவன் மனம் ரசிக்கதான் செய்தது. மெதுவாக அவள் இதழ் நோக்கி குனிந்த தருணம் அவனது அறைக்கதவு தட்டப்பட்டது..

 

அதில் சுயம் அடைந்த இருவரும் ஒருவரை ஒருவர் இமை மூடாமல் பார்க்க “சார் மே ஐ கமின்” என்ற அழைப்பில் சுதாரித்தவன் ஒளிர்மதியின் இருக்கையை பழைய நிலையில் வைத்துவிட்டு தனது இருக்கையில் சென்று அமர்ந்தான்..

 

“யெஸ் கம் இன்” என்று அவன் அனுமதி அளித்தவுடன் உள் நுழைந்தவரோ புதிதாக கிடைத்த ப்ராஜெக்ட் பற்றி விளக்கினார்..

 

அவரிடம் அனைத்தையும் கேட்டவனோ “இதை புதுசா வேலைல சேர்ந்தவங்க கிட்டயும் கொடுத்து, ப்ரொப்போசல் ரெடி பண்ண சொல்லுங்க, யார் பர்ஃபெக்ட்டா பண்றாங்களோ அவங்களுக்கு இந்த வாய்ப்பை கொடுக்கலாம்” என்று கூற..

 

“சார் இப்ப வந்தவங்களை நம்பி எப்படி இந்த ப்ராஜெக்ட்ட கொடுக்க முடியும்” என்று கேட்க..

 

“நாம திறமையானவங்களுக்கு தான் வாய்ப்பு கொடுக்குறோம். எல்லாரும் ப்ரொப்போசல் ரெடி பண்ண போறாங்க, எது பெஸ்ட்டோ அதை அக்சப்ட் பண்ணபோறோம். இது அவங்களுக்கும் ஒரு நல்ல எக்ஸ்பீரியன்ஸா இருக்கும்..”

 

“ஓ கே சார்” என்றபடியே அவர் சென்று விட..

 

இப்பொழுது ஒளிர்மதியை பார்த்தான். அவளோ எதுவும் கூறாமல் அவனையே வெறித்து பார்க்க, அவனோ “விட்டத மறுபடியும் தொடங்கலாமா?” என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் புருவம் உயர்த்தி கேட்க..

 

அதில் பதறியவளோ “என்ன பண்றீங்க இது ஆஃபிஸ்” என்று கூற..

 

அவளை சீண்டும் பொருட்டு “நீ காண்ட்ராக்ட் சைன் பண்ணிருக்க, வேலைய விட்டு போகனும்னா ஒரு கோடி தரணும் இல்லைனா நாங்களா உன்னை வேலையை விட்டு தூக்கனும்” என்று கூறிவிட்டு இதழுக்குள் சிரித்துக்கொள்ள..

 

“நீங்க இதை தான் சொன்னீங்களா?” என்று கேட்டவளிடம், “நீ வேற ஏதாச்சும் எதிர்பார்த்தியா?” என்று மறுபடியும் சீண்ட அவனை மனதுக்குள் திட்டியவாறே அவன் அறையை விட்டு வெளிவந்தாள்..

 

அவள் சென்ற பின் வாய் விட்டு சிரித்தவன் “கொல்றடி என்னை” என்று கூறிக் கொண்டான்..

 

நிரல்யாவோ இளந்தீரனுக்கு அழைக்க வேலையாக இருந்த அவனோ அழைப்பை ஏற்கவில்லை. சோர்வாக சென்று மஞ்சரியின் அருகே சென்று அமர்ந்தாள்..

 

“என்னமா உன்னோட உயிர் உன் அழைப்பை எடுக்கலயா” என்று மஞ்சரி நக்கலாக கேட்க..

 

“போடி நானே வருத்ததில இருக்கேன். நீ வேற ஏண்டி என்னை கிண்டல் பண்ற..”

 

“நீ அசைன்மெண்ட் முடிக்கலன்னு கவலை பட்ட மாதிரி இல்லையே..”

 

“நான் ஏன் வருத்தப்படணும் நான் தான் ஏற்கனவே முடிச்சிட்டேனே..”

 

“பாதி நேரம் காதல் காய்ச்சல் வந்த மாதிரி தானே சுத்துவ, எப்ப முடிச்ச..?”

 

“அதெல்லாம் அப்பவே முடிச்சிட்டேன். அப்பதான என் ஆளை லவ் பண்றதுக்கு எனக்கு எந்த தொந்தரவும் இருக்காது..”

 

“நீ கனவுல மட்டும் காதல் பண்ணு. காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் தூக்கிட்டு போன மாதிரி எவளாச்சும் உன் ஆளை கொத்திட்டு போக போறா, அப்ப தெரியும்..”

 

“ஏண்டி இப்ப அபசகுணமா பேசுற” என்றவள் கோபமாக அவ்விடம் விட்டு செல்ல, கோபமாக செல்லும் தன் தோழியை சமாதானம் செய்ய அவளை பின்தொடர்ந்து சென்றாள் மஞ்சரி..

 

இங்கு இளந்தீரன் முன் அமர்ந்திருந்தாள் புதிதாக வேலைக்கு சேர்ந்த பெண். அவள் செய்ய வேண்டிய வேலைகளை கூறிவிட்டு அவன் சென்றிட அவன் அழகிலும், ஆளுமையிலும் மயங்கி நின்றாள் அவள்..

 

தேவிகாவும் அலுவலக வேலைகளை கவனித்தவாறே, சூர்யா மற்றும் ஒளிர்மதியியையும் கவனித்து கொண்டிருந்தார். வெளி வேலை விஷயமாக தேவ் அலுவலகத்தில் இல்லாததால் அவருக்கோ இவ்விஷயத்தை யாரிடம் கூறுவது என்று குழம்பியவர், பின் மனதுக்குள் திட்டம் தீட்டியவாறே அலுவலகம் முடியும் நேரத்திற்காக காத்துக்கொண்டிருந்தார்..

 

கோபமாக அமர்ந்திருந்த நிரல்யாவை ஒட்டி அமர்ந்த மஞ்சரியோ “சாரி டி” என்று கூற..

 

அவளை முறைத்த நிரல்யாவோ அவளை விட்டு சிறிது தள்ளி அமர்ந்தாள். அவளின் சிறு பிள்ளைதனத்தை எண்ணி சிரித்தவளோ அவளை நெருங்கி அமர்ந்து தோளோடு சேர்த்து அணைத்துக்கொண்டவாறே “அறிவாளியா இருக்கிற நீ ஏண்டி லவ் விஷயத்தில இப்படி இருக்க” என்று கேட்க..

 

“லவ் பண்ணி பாரு அப்ப தெரியும், என் நிலைமை..”

 

“நீ லவ் பண்றத பார்த்து, எனக்கு லவ் பண்ணனும்னு ஆசை கூட வரமாட்டேங்குது”என்று மஞ்சரி கூற..

 

“எவன்கிட்டயாது உன் மனசை பறிக்கொடுத்துட்டு நீயும் என்னை மாதிரி புலம்பதான் போற பாரு..”

 

“சரி என்னை விடு எத்தனை வருஷமா உன் தீராவ நீ லவ் பண்ற, ஸ்கூல்ல இருந்து அப்படிதான” என்க..

 

அதற்கு ஆமாம் என்று தலையாட்டினாள் நிரல்யா..

 

“சரி ப்ரக்டிக்கல்லா கொஞ்சம் யோசி. நீ லவ் பண்றது உன் ஆளுக்கு தெரியாது. நம்மளை ஒரு பொண்ணு உருகி உருகி காதலிக்கிறான்னு தெரிஞ்சா தானே அவனும் உன்னை லவ் பண்ணலாமா, வேண்டாமான்னு யோசிப்பான்..”

 

“ஆனா மறுபடியும் என்னை ரிஜெக்ட் பண்ணிட்டா..”

 

“மறுபடியும் முதல்ல இருந்தா” என்று கூறிய மஞ்சரி தலையில் கைவைத்து அமர..

 

அவள் அருகே வந்த நிரல்யாவோ “சாரி டி நீ மேல சொல்லு” என்று கூற..

 

“எங்க மேல சொல்ல. நீ உன் லவ்வ சொல்றதுக்குள்ள நான் மேல போய் சேர்ந்திடுவேன் போல..”

 

“அப்படிலாம் சொல்லாத டி..”

 

“உன்னாலயும் வேற யாரையும் காதலிக்க முடியாது, அவனையும் யாருக்கும் விட்டு கொடுக்க முடியாதுன்னா போய் உன் லவ்வ சொல்லு..”

 

இதனை கேட்ட நிரல்யா ஏதோ கூற வர அவளை நோக்கி கையெடுத்து கும்பிட்டவாறே “அம்மா தாயே இப்பவே நாக்கு தள்ளுது, ஆளை விடு” என்று கூறியவள் அடுத்து அவள் ஏதும் கேட்டகும் முன் ஓடியே விட்டாள்..

 

இளந்தீரனிடம் பதிதாக வேலைக்கு சேர்ந்த பெண்ணின் அலைப்பேசி ஒலி எழுப்ப, அந்த அழைப்பை ஏற்றவளோ “நம்ம திட்டப்படி எல்லாம் நடக்கும். இளந்தீரன் எனக்கு தான்” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தாள் ஸ்ருதி..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!