எபிலாக் -42

5
(8)

உயிர் 42:

 

எபிலாக்:

 

நேஹா கூறியதைக் போலவே கள்ளிக்குடி கிராமத்தில் மகளிர் கைவினை பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சி மையம் அமைத்து அதில்  பெண்கள் தயாரிக்கும் கைவினை பொருட்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதை செயல்படுத்த ஆரம்பித்தாள்.

கள்ளிக்குடி மட்டுமின்றி சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும் பல பெண்கள் ஆர்வமுடன் முன்வந்து கற்றுக்கொண்டனர்.

அவர்களுக்கென்று நிரந்தர வருமானத்திற்கு வழிவகுத்துக் கொடுத்தாள்.

இரு வருடங்களுக்கு முன்பு லண்டனுக்கு சென்று மீனாட்சி திறம்பட நடத்தும் தனது நிறுவனத்தை பார்வையிட்டு வந்தாள். டிரஸ்ட்டிற்கு பணம் சரியாக செல்கின்றதா..? எங்கெங்கு எவ்வளவு தொகை எதற்காக செலவிடப்பட்டிருக்கின்றது. யார் கைகளுக்கு பெற்றிருக்கின்றது…? போன்ற கணக்கு வழக்குகளை மீனாட்சி சரிபார்த்து நேஹா விடம் கொடுத்தாள். சிரித்தபடி, ” உன்னை நம்பி மாட்டேனா மீனாட்சி…?” என்றதற்கு ,” உறவு வேற…வியாபாரம் வேற… இரண்டும் தனித்தனியாதேன் இருக்கனும். சும்மாயில்ல எத்தனை கோடி ரூபாய்… எல்லாத்துக்கும் கணக்கு சரியா இருக்கனும்..நேஹா. செய்ற வேலைக்கு உண்மையா இருக்கனும்..நான் சரியா பண்ணிருக்கேனான்னு நீதான் சொல்லனும்…” என்றாள்.

” பெர்ஃபெக்ட் மீனாட்சி…” என்று அவளை தட்டிகீ கொடுத்தாள்.

ஈஸ்வரன் தனது  புது வீட்டில்  பெற்றோருடனும் , நேஹாவுடனும் குடியேறினான்‌.

அவனது கடின உழைப்பினை மட்டுமே நம்பினான்.

இரண்டு வாழைத் தோப்பினை வாங்கினான். மேலும் சில பயிர்களை பயிரிட்டு அதிக லாபத்தை ஈட்டினான்.

அவனது செல்லப் பிள்ளைகளான நெற்கதிர்கள் பச்சை பசேலென செழிப்புடன் வளர்ந்து நின்றது.

எப்போதும்‌ போல கயிற்றுக் கட்டிலில் படுத்து நெற்கதிர்களை ரசித்திருந்தான் ஈஸ்வரன்.

தனது தேவையறிந்து செயல்படும் நேஹாவின் மீது நாளுக்கு நாள் அன்பும் காதலும் கூடித்தான் போனது அவனுக்கு.

அக்மார்க் குடும்பத்தலைவியாக மாறிப் போனாள் நேஹா.

லண்டனிலோ வளர்ந்து வரும் பெண் தொழிலதிபராக சிறிது சிறிதாக முன்னேறிச் கொண்டிருந்தாள் மீனாட்சி .

இரு பெண்களின் வாழ்க்கை மாறித்தான் போனது. ஆனால் மனம் நிறைந்த சந்தோஷத்துடன்.

நான்கு வருடங்கள் கழித்து..

மகனுடன் போராடிக் கொண்டிருந்தாள் நேஹா…

“ டேய்…விதார்த்…மரியாதையா ஜட்டியை போடுடா…இல்லன்னா எல்லாரும் ஷேம் ஷேம் சொல்லுவாங்க…” என்றாள்.

“ போ…மம்மி…அதெல்லாம் போட மாட்டேன்…” என்று ஓடிக் கொண்டிருந்தான் ஈஸ்வரன் நேஹாவின் புதல்வனான விதார்த்.

புகழினி மற்றும் பாண்டியனின் புதல்வன் அஷோக் விதார்த்தை கேலி செய்து கொண்டிருந்தான்.

சற்று நேரத்தில் இருவரும் கட்டிப்புரண்டு சண்டையிட்டுக் கொள்ள ஈஸ்வரனும் பாண்டியனும் வந்து இருவரையும் விலக்கினர்.

“ அடேய்…! அடேய்…!ஏன்டா ‌எப்ப பாத்தாலும் இப்படி சண்டை போட்டுட்டே இருக்கீங்க..? நேரமாச்சு…நாங்களெல்லாம் ஆத்தங்கரையில போய் நிலாச்சோறு சாப்பிட போறோம்…நீங்க ரெண்டு பேரும் வரலன்னா இங்கயே இருங்க…யமுனா பாப்பாவும் வர்றா…நாங்க போறோம்…”என்றான் பாண்டியன்.

இரண்டு வாலுகளும் அடித்துப் பிடித்து கொண்டு எழுந்து, “என்ன யமுனா பாப்பா வர்றாளா…? சரி நாங்க போய் ரெடி ஆகுறோம்…அம்மா ஜட்டி போட்டு விடுங்க….” என்று கத்தியபடி உள்ளே ஓடினான் விதார்த் .

“ அம்மா…! பவுடர் போட்டு விடுங்க…”என்றபடி உள்ளே ஓடினான் அஷோக்.

கிட்டத்தட்ட இருவருக்கும் மாதங்களில் தான் வயது வித்தியாசம்.

ஆதி மற்றும் மீனாட்சியின் புதல்வி யமுனா.. இருவரையும் விட ஒரு வருடம் சிறியவள்.

முதல் சில மாதங்களுக்கு நேஹாவின நிறுவனத்தை ஆதி தான் நடத்திக் கொண்டு இருந்தான் ‌

மீனாட்சியை மேலும் சில பாடப்பிரிவுகளை படிக்க வைத்து அவளுடனே இருந்து நிறுவனத்தின் மேலாண்மை, திட்டமிடல் ,விற்பனை ஆகியவைப் பற்றி புரிய வைத்தான்.

அவளுக்கு பக்கபலமாக இருந்து மெல்ல மெல்ல தொழிலை கற்றுக் கொடுத்து..அவளை தனியாகவே நிறுவனத்தை கையாள வைத்தான்.

முதலில் ஏகப்பட்ட தடுமாற்றங்கள், தோல்விகள் நேர்ந்தாலும் அதிலிருந்து தொழிலை எவ்வாறு மேம்படுத்த வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுத்தான்.

இப்போது நன்றாகவே

நிறுவனத்தை கையாள ஆரம்பித்து விட்டாள் மீனாட்சி.

அனைவரும் வித விதமான உணவுகளை தயாரித்து எடுத்துக் கொண்டு ஆற்றங்கரைக்கு வந்திருந்தனர்.

மீனாட்சி தேனியில் இருந்து வந்திருக்க.

யமுனாவுடன் அஷோக்கும் விதாரத்தும் விளையாடினர்.

அவர்களை போலவே வேறு சிலரும் உணவினை எடுத்துக் கொண்டு ஆற்றங்கரையில் குடும்பத்துடன் அமர்ந்திருந்தனர்.

பௌர்ணமி முழு நிலவு பாலொளியை எங்கும் வீசி இரவினை இதமாக்கிக் கொண்டிருந்தது.

பெரியவர்கள் குழந்தைகளுடன்

அமர்ந்திருக்க…மற்ற மூன்று ஜோடிகளும் தத்தமது இணையுடன் ஆற்றுத் தண்ணீரில் வெவ்வேறு திசைகளில் கால்களை நனைத்தபடி நடந்து கொண்டிருந்தனர்.

எங்கிருந்தோ அலைப்பேசியிலிருந்து மிதந்து வந்த பாடல் வரிகள் செவியில் விழுந்தது

“ எல்லாருக்கும் எழுதி வச்சான்…

எங்களை தான் கட்டி வச்சான்…

பொண்ஜாதியோ பூந்தோரணம்.,.

நானோ ரொம்ப சாதாரணம்…

வெண்ணிலவ மேகம் போல

என்னை அவ மூடி வைப்பா…

மத்தவங்க கண்டு பட்டா …

தத்தளிப்பா….தான் தவிப்பா..

ஊருக்கவ ராணி போல…

எனக்கு அவ அம்மன் போல…

சொல்லப்போனா என்னைப் போல…

பாக்கியவான் யாருமில்லை…

தாயையை கூட தாரம் போல..

ஈடு செய்ய யாரும் இல்ல…

எல்லாம் என்‌ யோகம்…

ராத்திரியில் பாடும் பாட்டு…

கேட்க கேட்க ஆசையாச்சு…

ஆத்தங்கரை ஈரக்காத்து…

மேல பட்டு மோகம் ஆச்சு…”

இவர்களின் மகிழ்ச்சிக்கு சாட்சியாக நிலவின் பிம்பம் அழகாக தண்ணீரில் மிதந்தது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!