அத்தியாயம் 18
காதலின் போதும் கல்யாணத்தின் போதும் உள்ள இரு வித்தியாசம் மனசு மாறுபாடுகள் மட்டுமே!
லோகேஷ் இத்தனை சொல்லியும் புரிந்து கொள்ளாத அவரிடம் என் நண்பன் ஓகே சொல்லி இருந்த இந்த திரைப்படத்தினை எனக்காக நான் ஒப்புக்கொண்டேன் என்றால் எங்களுக்குள் இருக்கின்ற இந்த உறவும் அறுந்து போகும் சார். சோ அவன் வேண்டாம்னு நீங்க முடிவெடுத்து இருந்தா அந்த ப்ரொசீஜர் மட்டும் ஃபாலோ பண்ணுங்க. கண்டிப்பா நான் இதுல ஆக்ட் பண்ண மாட்டேன். சமயம் கிடைக்கும் போது உள்ள புகுந்து குட்டைய குழப்பும் ரகம் நான் இல்ல. உங்களால இப்ப அவன் இருக்க சிட்டுவேஷனை சமாளிக்க முடிஞ்சு அவனுக்கு மறுபடியும் வாய்ப்பு குடுத்தா நான் சந்தோஷப்படுவனை தவிர அவனோட வாய்ப்ப நான் பறிச்சிக்க மாட்டேன்.
இதுக்கு மேல உங்க இஷ்டம் மட்டும் தான். என்னைய போர்ஸ் பண்ணாதீங்க.
என்ற லோகேஷ் அவரின் அழைப்பின் மறுமுனையில் இருந்து என்ன சொல்வார் என்று காத்திருந்தான்.
சிறிது நேரம் அமைதியாக யோசித்த அந்த ராஜு பாய் என்ற தயாரிப்பாளர் சரி திலீப்ப கூப்பிட்டு நீங்க என்னோட ஆபிஸ்க்கு வந்துடுங்க. அதே மாதிரி திலீப்போட மனைவியா இருக்கிற சில்வியாவையும் கூப்பிட்டு வாங்க.
தன் தங்கையை எதற்காக அழைத்து வரச் சொல்கிறார் என்று உடனே கேட்டான். கதையில நாயகன் என்று ஒருத்தர் இருந்தால் நாயகினு ஒருத்தர் வேணும் இல்லப்பா.
நான் வியாபார நோக்கத்துல வேணா கர்ணனா இல்லாம இருக்கலாம் ஆனா குடும்ப நோக்கத்துல ஒரு நல்ல அப்பாங்கறத நீ இந்த கதை மூலமா அவங்கள சேர்த்து வைக்க முயற்சிக்கிறேன்… என்றவரின் நல் குணத்தை எண்ணி மகிழ்ந்தான் லோகேஷ்.
ரொம்ப தேங்க்ஸ் சார்.
நான் தான் லோகேஷ் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும். சின்ன வாய்ப்பு கிடைச்சா கூட அதை தனக்கு ஏத்தது போல யூஸ் பண்ணிட்டு பெரிய பேமஸ் ஆகற நிறைய ஹீரோக்களுக்கு மத்தியில வாய்ப்பு உங்க வாசல் தட்டியும் அதை நீங்க உன்னோட நண்பனுக்கா தட்டி கழிச்சீங்க பாத்தீங்களா அப்பதான் புரிஞ்சது உங்களோட நட்பு வட்டம் எப்படினு.
இந்த நட்பு வட்டத்துல நானும் ஒருத்தனா இருக்கணும்னு ஆசைப்பட மாட்டனா. .. என்றவறோ… ம்ம்ம் முதல்ல உங்களுக்குள்ள என்ன பிரச்சனைன்னு நீ என்கிட்ட ஷேர் பண்ண தான் என்ன முடிவு எடுக்கலாம் என்று நான் யோசிக்க முடியும் என்றவரிடம் அனைத்து உண்மைகளையும் ஒளிவு மறைவு இல்லாது கூறி முடித்தான்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் இருவரும் கணவன் மனைவியாக கூடாது என்று இருக்கிறார்களா என்பதை உணர்ந்த ராஜு பாய் இனிமே நான் பாத்துக்குறேன் லோகேஷ். நீ எதுக்கும் கவலைப்படாத.
இவரின் இந்த ஆறுதல் பேச்சு லோகேஷிற்கு திருப்தியை கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும்.
மறுபுறம் மாலினி கொடுத்திருந்த செய்தியினை குறித்து ஏகப்பட்ட வசனங்கள் தயாராகிக் கொண்டிருந்தனர்.. மனைவியை மறைத்து வைத்த கணவன், மனைவியோடு நடிக்க மறுத்த கணவன், மனைவி அமைந்துவிட்டால் தனது ப்ரொபஷனில் அடி வாங்கி விடுவோம் என்று அவளை மறைத்த கணவன், திலீப் சார் உச்சம் வர அவர் போட்ட நாடகங்கள் என்று எப்படி எல்லாம் முடியுமோ அப்படி எல்லாம் வசைப்பாடிக் கொண்டிருந்தார்கள் இந்த மக்கள்.
திரைப்படத் துறையில் எந்த அளவிற்கு நல்ல விஷயங்கள் பகிரப்படுகிறது அதைவிட பல மடங்கு வேகமாக கெட்ட விஷயங்கள் பகிரப்பட்டுவிடும். சில்வியாவும் திலீப் குமாரின் திருமணமும் கெட்ட விஷயம் அல்ல என்பதை இவர்கள் எப்போது புரிந்து கொள்வார்கள்.
மாலினிக்கு கிடைத்த படத்தினை அழகுற நடித்து முடித்தாள். நாளை ரிலீஸ் ஆகும் அந்த படத்தின் மூலம் மீண்டும் இவர்கள் இருவரின் ஏதாவது ஒரு நிகழ்வை அப்போது எடுத்து விட்டால் மீண்டும் அவர்கள் திரைப்படத்துறைக்கு வர தாமதமாகும் என்று கணக்குப் போட்டுக் கொண்டிருந்தாள் அவள்.
இப்போதைக்கு அவனை பத்தின கமெண்ட்ஸ் என்ன என்று தனது பி.ஏவிடம் கேட்டுக் கொண்டிருந்தாள்.
திலீப் இனிமே அடிமட்டத்துக்கு போயிடுவான் நினைக்கிறேன். ஏன்னா அவனோட ஃபேன்ஸ் முதற்கொண்டு எல்லாருமே அவனை கேவலமா பேசுறாங்க. சில்வியாவ கூட வார்த்தையால கஷ்டப்படுத்திட்டு இருக்காங்க.
இவ்வாறு பிஏ ராஜன் சொல்லவும் உள்ளுக்குள் அத்தி பூத்தார் போல் சந்தோஷப்பட்டாள்.
இவள் இவ்வாறு திட்டம் திட்டிக் கொண்டிருக்க காலமும் திலீப்பினை கை கழுவி விட முடிவெடுத்திருந்தது.
சில்வியா இன்று நடந்த அந்த விஷயம் வெறும் கனவாக வேண்டும் என்று அருகில் இருந்த விநாயகர் கோவிலிற்கு சென்று வழிபட்டுக் கொண்டிருந்தாள்.
என்ன அவர் அக்கா என்று நினைத்து ஒன்னா சேர்ந்துட்டோம். இது அவருக்கு நினைவு வரும் போது என்னதான் தப்பா பேசுவார். எனக்கு மட்டும் ஏன் கடவுளே இப்பேற்பட்ட வாழ்க்கை. நான் எந்த ஜென்மத்துல பண்ண தப்பு இந்த ஜென்மத்துல என்ன பழிவாங்குது. ஒவ்வொரு முறையும் என்னோட அக்காவோட படத்தை பார்க்கும் போது நான் எவ்வளவு குற்றவுணர்வில் தவிக்கிறனு எனக்கு மட்டும்தான் தெரியும். அவளோட வாழ்க்கைய இங்க நான் வாழ்ந்துட்டு இருக்கேன். அவ இருக்க வேண்டிய இடத்தை நான் பறிச்சிட்டு இருக்கேன். சந்தோஷமா வாழ பிறந்த இடத்தில நான் வந்து வாழ்ந்துட்டு இருக்கேன்… ஒவ்வொரு கணமும் என்ன மதில் மேல நிற்கிற பூனை போல உணர வைக்கிறது திலீப்போட பேச்சு.
என்னதான் இருந்தாலும் அது உண்மைதான். அவனை பொறுத்தவரைக்கும் அந்த இடம் வைஷியாக்கு மட்டும் தானே சொந்தம்.
நான் அந்த இடத்துக்கு வந்த இரண்டாம் பட்சம் தானே. இன்னும் மனசளவுலையும் உடலளவுளையும் நாங்க ஒன்னு சேராமல் இருப்பதற்கு காரணமே அதுதான்.
இந்த வாழ்க்கை எனக்கு நிரந்தரமா.. இல்ல நிரந்தரமில்லையானே எனக்கு தெரியல கடவுளே. காலம் முழுக்க திலீப்ப பார்த்துட்டே இருந்தா போதும்.
இன்னைக்கு நடந்த இந்த செயல் கனவா இருந்தாலும் இதுவே எனக்கு போதும். அவரோட ஸ்பரிசம் பட்ட இந்த தேகமே இனிமே நான் உயிர் வாழ போதுமானதாய் இருக்கும்.
அவளின் இந்த வார்த்தைகளைக் கேட்ட கடவுள் கூட கரைந்து விடுவார் போல ! கல் ஆகி இருக்கும் திலீப் கரைய மாட்டான் போல.
அன்று பதினோரு மணி அளவில் மதிக்கு புடவை எடுக்க இருப்பதனால் திலீப்பிற்கும் சில்வியாவிற்கும் அழைத்து வந்து கலந்து கொள்ளும்படி வேண்டிக் கொண்டார் மோகன்.
மற்றவர்களின் மீது கோபம் இருந்தாலும் அவர் மீது அவனுக்கு மரியாதை உள்ளதால் அவரது சொல்லுக்கும் வழங்கினான். கண்டிப்பா வந்துடறேன் மாமா என்றவன் துண்டித்துக் கொண்டான்.
திலீப் கிட்ட சொன்னீங்களாப்பா வரேன்னு சொன்னாங்களா என்று அனுசரணையோடு கேள்வி கேட்ட சில்வியாவிடம் வரேன்னு சொல்லிட்டாரு மா என்று பதில் அளித்தார்.
இன்று மதி தீட்டிய திட்டத்தில் முதல் கட்டம் நிகழ போவதை எண்ணி அனைவரும் ஆவலாக இருந்தார்கள்.
இதை அறியாத திலீப்பும் சில்வியாவும் தயாராகி வந்தார்கள்.
காலையில் கோவிலுக்கு சென்று இருந்த சில்வியா பச்சை வர்ண புடவை அணிந்திருந்ததால் அத்தோடு புறப்பட்டாள். காலையிலிருந்து அவளை காணாத திலீப்பும் பச்சை வண்ண ஷர்ட் வெண்ணிற பேன்ட்டோடு தயாராகி வந்திருந்தான்.
பச்சை வண்ணத்திற்கு எடுப்பாக இருக்கும் வெண்ணிற பற்சியோடு நின்றவருக்கு இது என்ன மேட்சிங் மேட்சிங் என்றாகிவிட்டது என்று புன்னகைத்தாள்…
அவளோடு ஒரு வருடம் இருந்து விட்டவனுக்கு அவள் மனதில் ஓடுவது என்ன என்பது மறந்தா போகும்.
அவள் மேட்சிங் மேட்ச் என்று நினைத்த அந்த கணமே மீண்டும் மாடிப்படி ஏறினான் அவன். கிஞ்சிக்கும் கூட அவளது உடைக்கும் அவனது உடைக்கும் சம்பந்தமே இல்லாதவாறு ப்ளூ கலர் பேண்ட்டும் ரெட் கலர் ஷர்ட்டும் அணிந்து வந்திருந்தான்.
மீண்டும் அவன் மாடிப்படி இறங்கிய போது இவனுக்கு நான் கொஞ்ச நேரம் சந்தோஷப்பட்டுட்டா கூட பொருக்காது போல என்று தனது வாயினை அவள் கோணிப்பதை கண்டு சந்தோஷத்துடன் அவள் அருகாமையில் வந்தவன் என்னைக்குமே நீ நினைக்கிற மாதிரி நான் நடந்துக்க மாட்டேன் டி தனது கை ஷர்ட்டினை மடக்கி விட்ட படி கேட்டான்.
அதுதான் போய் மாத்திட்டு வந்துட்ட இல்ல அப்புறம் என்ன?
சில்வியாவும் இவ்வாறு சொல்ல, உடை மட்டும் இல்லடி உன் உருவம் கூட என் பக்கம் நெருங்க கூடாது என்று தனது புருவத்தை உயர்த்தி அவளை எச்சரித்தான்.
உருவம் கூட தன்னோடு நெருங்க கூடாது என்று சொல்லும் இவனால் உடலளவில் என்னோடு ஒன்று சேர்ந்தான் என்று எண்ணிய அவளுக்கு இப்போதுதான் புரிந்தது அவன் வைஷியாவாக நினைத்து தான் என்னோடு கலந்துள்ளான் என்பது.
ஆனால் திலீப்பிற்கோ இப்படி தங்களுக்குள் உடலால் ஒரு உறவு அன்றைய தினம் ஏற்பட்டது என்பது துளி அளவு கூட நினைவில்லாத அளவு தானே மதுபானத்தில் மிதந்து கொண்டிருந்தான் அப்பொழுது.
நான் போய் கார் எடுத்துட்டு வந்துடறேன் என்று முன்னமே கிளம்பிய சில்வியாவை நிறுத்தி நீ கார் ஓட்டி என்னோட செல்லத்தை கொன்றது பத்தாது. நீ இந்த வீட்ல வேலைக்காரி அதுக்கு தகுந்த மாதிரி நடந்துக்க. பை த வே ஒவ்வொரு டைம் பேசும் போதும் சார் என்று சொல்லி பேசு இல்ல பொது இடம் கூட பாக்க மாட்டேன் எங்கையா இருந்தாலும் உன் மூக்க உடைச்சிடுவேன் என்று அவளை எச்சரித்தவன் அவளை முறைத்தவாறு வெளியில் வந்து தனது பிளாக் கலர் ஷூவினை மாட்டினான்.
பிளாக் ப்ளூ ரெட் என்று எந்த ஒரு சம்பந்தமும் இல்லாமல் கூட உடைய அணிவானாம் ஆனால் என்னுடைய உடைக்கு தகுந்தவாறு உடை அணிய மாட்டானா?
காரினை எடுத்து வந்தவனை முறைத்த வகையில் நின்றிருந்தவளுக்கு கதவை கூட திறந்து விடனுமா மேடம். கை கால் எல்லாம் நல்லா தானே இருக்கு திறந்துவிட்டு ஏறு.. உனக்கு இங்க யாரும் அடியாட்கள் எல்லாம் இல்ல என்றவனை முறைத்தபடியே காரினுள் ஏறினாள். அவனின் அருகாமையில் அமர்ந்திருந்த அவளுக்கு மனதில் எத்தனை போராட்டங்கள் ஓடிக்கொண்டிருந்தது என்பது பைனாக்குலர் வைத்து பார்த்தால் கூட தெரியாத அளவிற்கு ஓடிக் கொண்டிருந்தது..
எந்த விதத்திலும் உனக்கும் எனக்கும் சம்பந்தமில்லையே என்பது போலவே நடந்து கொள்ளும் திலீப்பின் செயல் தண்ணீரில் ஒட்டா தாமரை போல இவனோடு வாழும் வாழ்க்கை அவளுக்கு கசந்திட ஆரம்பித்தது .
கசந்ததின் ஆரம்பம் என்னமோ முகசுளிப்பாக இருந்தாலும் உச்சம் அதைவிட மோசமாக இருக்கும் என்பது இருவருமே அறியவில்லை.