அத்தியாயம் 7
ஐயர் மாப்பிள்ளையை அழைத்து வாங்கன்னு சொன்னதும் சேரன் சென்று சோழனை அழைத்து வந்தான். சோழன் ஏதோ யோசனையிலே வந்து மணமேடையில் அமர்ந்தான். பொண்ணையும் அழைச்சிட்டு வாங்கன்னு சொன்னதும் கீதாவும் ராமும் கவியை அழைத்து வந்தனர். அருகில் கவி அமர்ந்தது கூட தெரியாமல் சோழன் அமர்ந்து இருந்தான்.
கெட்டிமேளம் கெட்டிமேளம் என்று ஐயர் கூறியதும் நாதஸ்வரம் முழங்க ஐயர் சோழனிடம் மஞ்சள் கயிற்றில் இருந்த பொன் தாலியைக் கொடுத்தார். அவனும் அப்போது தான் கவியின் புறம் திரும்பி அவளை முதல் முறையாகப் பார்த்துக் கொண்டே தாலியைக் கட்டினான். ராஜன் மற்றும் கீதா இருவரும் சந்தோஷமாக ஆசிர்வதித்தனர்.
ஐயர் வகிட்டில குங்குமம் வைத்து விட சொன்னார். அவன் கவியின் தோளை சுற்றி வந்து அவளது நெற்றியில் குங்குமம் வைத்தான். அப்போது தான் சோழனை நிமிர்ந்து பார்த்தாள் கவி. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அதை சரியாக சேரனும் ஃபோட்டோ எடுத்து விட்டான். பின்னர் ஊர் மக்கள் அனைவரையும் சாப்பிட அழைத்துச் சென்றனர்.
இங்கே மணமக்கள் இருவரும் ராஜனிடமும் கீதாவிடமும் ஆசிர்வாதம் வாங்கினர். அப்புறம் இங்கே பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு அழைத்துச் சென்று வந்தனர். பின்பு கவியை அழைத்து விளக்கு ஏற்றக் கூறினார் ராஜன். அவளும் விளக்கு ஏற்றினாள். இருவரையும் அழைத்து சாப்பிட வைத்து விட்டு கொஞ்ச நேரம் கீழே இருக்கும் ரூமில் ஓய்வு எடுக்கக் கூறினர். சோழன் மட்டும் தன் அறைக்கு சென்று விட்டான். கவி தான் கீழே இருக்கும் அறையில் அமர்ந்து இருந்தாள்.
சிறிது நேரத்திற்கு முன்,
சோழன் தன்னுடைய ரூமில் எப்படியோ ஒருவழியாக கல்யாணம் நின்று விட்டது என்று சந்தோஷமாக இருந்தான். அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது. இவன் சென்று திறந்தால் அவன் தந்தை நின்று கொண்டு இருந்தார். உன்ட கொஞ்சம் பேசணும் யா என்று கூறினார் ராஜன். அவனும் வழி விட்டு நின்றான். அவரும் உள்ளே சென்று பெட்ல உட்கார்ந்தார்.
சோழனும் கதவை சாற்றி விட்டு வந்து தன் தந்தையின் முன்னாள் நின்றான். என்னை மன்னித்து விடுய்யா உனக்கு கல்யாணம் பிடிக்கல என்று தெரிந்தும் இவ்வளவு ஏற்பாடு செய்து இப்போ இப்படி ஒரு சூழ்நிலையில் உன்னை நிக்க வச்சிட்டேன். அந்த பொண்ணு இப்படி பண்ணுவான்னு நான் நினைக்கவே இல்லைய்யா. என்னை மன்னிச்சிடு.
அதற்கு அவன் ஐயா என்ன பெரிய வார்த்தை எல்லாம் சொல்றிங்க அந்த பொண்ணு கல்யாணம் வேண்டாம் என்று போனதுக்கு நீங்கள் என்ன செய்வீங்க அதனால மன்னிப்பு கேட்டு என்னை கஷ்டப்படுத்தாதிங்க ஐயா அப்படின்னு சொன்னான். ஐயா ஒன்னு கேட்பேன் அத மறுக்காமல் செய்வியா யா. என்னது ஐயா என்று கேட்டான்.
ராஜன் இன்னும் கொஞ்சம் நேரத்தில் உனக்கு கல்யாணம் கண்டிப்பாக நடக்கணும்னு நினைக்கிறேன். அதற்கு நீதான்யா ஒத்துக்கணும். ஐயா அதான் பொண்ணு கல்யாணம் வேண்டாம் என்று போய்டுச்சே இப்போ எப்படி ஐயா என்று கேட்டான். அதற்கு அவர் அந்த பொண்ணு இல்ல இது எனக்கு தெரிஞ்சவங்க பொண்ணு என்று கூறினார்.
ஐயா எனக்கு இப்போது தான் கல்யாணம் நின்று இருக்கு. அதற்குள் மறுபடியும் வேற ஒரு பொண்ணு பாத்துட்டு கல்யாணம் பண்ணிக்க சொல்றிங்க. இல்லைங்க ஐயா இது சரி வராது வேண்டாம் என்று சொன்னான். அதற்கு அவர் நான் அவங்களிடம் வாக்கு குடுத்து விட்டேன் இந்த கல்யாணம் கண்டிப்பாக நடக்கும் என்று அது உன் கையில் தான்யா இருக்கு. இந்த ஐயா மேல உனக்கு மரியாதை இருந்தால் நான் குடுத்த வாக்கைக் காப்பத்துயா என்று கூறி விட்டு சென்றுவிட்டார்.
கீழே உள்ள அறையில் கீதாவும் கவியிடம் பேசிக் கொண்டு இருந்தார். கவி ஊரில் இருக்கும் போது நீ என்னிடம் கேட்டியே உங்கள் கடைசி ஆசை என்னன்னு அத சொல்வேன். ஆனால் அதை நிறைவேற்ற வேண்டியது உன் விருப்பம் அப்படின்னு சொல்லிட்டு இன்னும் கொஞ்சம் நேரத்தில் இன்னைக்கு கல்யாணம் நின்று போச்சுல அந்த பையனை நீ கல்யாணம் பண்ணிக்கனும் அப்படின்னு சொல்றார்.
நான் எப்படிம்மா அந்த பையனை கல்யாணம் பண்ணிக்கறது எனக்கு யாருன்னு கூட தெரியாது. அதுவும் இல்லாமல் நம்ம ஸ்டேட்டஸ் என்ன இங்கே வந்து எப்படி கல்யாணம் பண்ணிக்கறது அப்படின்னு சொல்லிட்டு இருக்காள். நான் சொன்னா எதுவும் செய்வேன் சொன்னல்ல இது தான் என் கடைசி ஆசை இது செய்வ னு நினைக்கிறேன். இதுல பட்டுப்புடவை இருக்கு உனக்கு என்னோட ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று இருந்தால் இதை கட்டிட்டு அந்த பெட்டியில் இருக்கும் நகை லாம் போட்டுட்டு வெளியே வா அப்படின்னு சொல்லிட்டு போய்டுறார் கீதா.
சோழன் தன் ஐயா சென்றதும் ஏதோ யோசித்து விட்டு அந்த பொண்ணிடம் பேசி கல்யாணத்தை நிறுத்தலாம் என்று வந்தான். ஆனால் அங்கே கவி ஸ்டேட்டஸ் பற்றி பேசியதை மட்டும் கேட்டு விட்டு கோபமாக சென்று விட்டான்.
இவ்வாறு நடந்ததை எல்லாம் இருவரும் அவரவர் ரூமில் அமர்ந்து நினைத்துக் கொண்டு இருந்தார்கள்.
எப்படியோ இருவருக்கும் கல்யாணம் முடிந்து விட்டது.
இப்படி கட்டாயத்தில் தொடங்கிய இவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று போகப் போக பார்ப்போம்.