கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 6

4.7
(6)

            அத்தியாயம் 6

சோழபுரம்,

சோழபுரத்தின் உள்ளே வந்து விட்டனர் கவியும் கீதாவும். அங்கு உள்ள ஒரு டீக்கடையில் ராஜன் அவர்களின் வீடு எங்கே இருக்கு என்று ராம்பிரசாத் போய் கேட்டார். அதற்கு அவர் இந்த ஊரிலே பெரிய வீடுன்னா ஐயாவோடது தான்.

இன்னைக்கு சோழன் தம்பி கல்யாணம் அதற்கு வந்துருக்கிங்களா அப்படின்னு சொல்லிட்டு அவரே இந்த தெருவில் இரண்டு தெரு‌ தள்ளி

போனிங்கனா பெரிய அளவில் கேட்டோடு சுற்றியும் தோட்டத்தோடு வாசலில் பந்தல் அமைத்து வாழைமரம்லாம் கட்டி ஒரு பெரிய வீடு இருக்கும் அந்த வீடு தான்.

நானும் கல்யாணத்திற்கு தான் போறேன் முகுர்த்தம் நெருங்க போது சீக்கிரமா வாங்கன்னு சொல்லிட்டு போய்டுறார். அவர்களும் அவர் கூறியது போல பெரிய வீட்டை நோக்கி சென்றனர். அந்த பெரிய வீட்டைப் பார்த்ததுமே கவிக்கு மிகவும் பிடித்துப் போனது.

அதையும் கீதாவிடம் கூறினாள். இங்கே பாருங்க அம்மா நம்ம ஊர்ல எவ்வளவு நெருக்கம் நெருக்கமாக வீடு லாம் இருக்கும். இங்கே எவ்வளவு அழகாக சுற்றியும் வயல்வெளியும் தோட்டமுமா ஊரே சூப்பராக இருந்தது. அது இல்லாமல் இந்த வீட்டை பாருங்கள் எவ்வளவு பெரியதா வீட்டை சுற்றி தோட்டத்தோடு செமயா இருக்கு. பின்னர் மூவரும் உள்ளே சென்றனர்.

சிறிது நேரத்திற்கு முன், ராஜனும் சேரனும் கல்யாண பெண்ணை அழைக்க சென்றார்கள். ஆனால் அங்கே பெண் வீட்டார் ஏதோ சோகத்தில் அமர்ந்து இருந்தனர். ராஜன் அவர்களிடம் சென்று பெண்ணை வர சொன்னால் என்னாச்சு இன்னும் அனுப்பாமல் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். பொண்ணு இன்னும் ரெடி ஆகலையா அப்படின்னு கேட்கிறார்.

அதற்கு பெண்ணின் தந்தை என்னை மன்னித்து விடுங்கள் ராஜன் ஐயா இந்த பொண்ணு இப்படி பண்ணுவான் என்று எதிர்பார்க்கவே இல்ல இப்படி எல்லாரையும் ஏமாத்திட்டு போயிட்டாளே நான் இப்போ சோழன் தம்பிக்கு என்ன பதில் சொல்றது என்ன மன்னிச்சிடுங்க அப்படின்னு சொல்றாரு.

ராஜன் என்ன ஆச்சு என்ன பேசுறீங்க புரியிற மாதிரி சொல்லுங்க ன்னு சொல்றார். என்னோட பொண்ணு இங்க இல்லைங்க ஐயா எங்க போனான்னு தெரியல ஏதோ எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை எனக்கு புடிச்சவர இன்னைக்கு கல்யாணம் பண்ணிக்க போறேன் என்ன தேடாதீங்க என்ன மன்னிச்சிடுங்க அப்பா அம்மா ன்னு லெட்டர்ல எழுதி வச்சுட்டு போய்ட்டான்னு அவர் சொன்னார்.

ராஜன் தான் எப்படியாவது சோழன்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நினைச்சேன் இப்போ இப்படி ஆகிடிச்சே இனி‌ சோழன நான் எப்படி வேற கல்யாணத்திற்கு ஒத்துக்க வைப்பேன் என்று சோகமா சேரனிடம் கூறிக் கொண்டு இருந்தார். அப்போது சோழனும் வந்து விட்டான் என்னானது என்று கேட்டு தெரிந்து கொண்டான். அவனிடம் பெண்ணின் தந்தை என்னை மன்னித்து விடுப்பா சோழன். இந்த பொண்ணு இப்படி பண்ணுவான்னு நான் நினைக்கவே இல்லை என்று சொல்றார்.

சோழன் தான் தன் அப்பாவிடம் நான் தான் எனக்கு கல்யாணம் வேண்டாம் என்று எவ்வளவு தடவை சொன்னேன் கேட்டிங்களா இப்போ என்ன இங்கே மணமேடையில் வந்து நிக்க வச்சிட்டிங்களே என்று கோபமாக பேசிவிட்டு தன்னுடைய அறைக்கு சென்று விட்டான். ஆனால் அவனுக்கு கோபம் எல்லாம் இல்லை வெளியே கோபமாக பேசிவிட்டு அறைக்கு சென்று ஜாலியாக படுத்து விட்டான் அப்பாடா எப்படியோ கல்யாணம் நின்னுடுச்சு என்று சந்தோஷமாக இருந்தான்.

இங்கே ராஜனும் சேரனும் தான் சோகத்தில் அமர்ந்து இருந்தனர். அந்த பெண் வீட்டார் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு விட்டு வீட்டை விட்டு வெளியேறினர். அப்போது தான் கவி, கீதா, ராம் பிரசாத் மூவரும் உள்ளே வந்து கொண்டிருந்தனர். கல்யாணம் இப்படி நின்று விட்டதே என்று ஊரார் பேசிக் கொண்டு செல்வதை பார்த்துக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தனர்.

கல்யாணம் நின்று விட்டது என்று தெரிந்ததும் கீதா ஒரு முடிவுடன் ராஜனை நெருங்கினார். கவி அந்த வீட்டை சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டு இருந்ததால் கீதாவை கவனிக்க வில்லை. ராமும் கீதா ஏதோ முடிவு எடுத்து விட்டார் என்று அவருடனே ராஜனிடம் சென்றார்.

ராஜனிடம் அண்ணா என்று அழைத்து உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்று கூறினார். நீங்க என்று கேட்டார் ராஜன். அதற்கு கீதா எல்லாமே சொல்றேன் அண்ணா இன்னைக்கு உங்க பையனுக்கு கல்யாணம் கண்டிப்பா நடக்கும் நீங்கள் வாங்க என்று சொன்னார். கல்யாணம் நடக்கும்னு சொன்னதும் அவரும் கீதாவை ஒரு அறைக்கு அழைத்துச் சென்று பேசினார்.

கீதாவும் ராமும் அவருடன் சென்றனர். அங்கு சென்று என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை ஆனால் ராஜன் மிகவும் சந்தோஷமாக என்னோட மருமகள் பேரு என்ன அவள் எங்கே இருக்கிறாள் என்று கேட்டார். அதிலேயே கீதாவும் ராமும் ராஜன் கல்யாணத்திற்கு ஒத்துக்கொண்டு விட்டார் என்று கவி நிலா வெளியே தான் இருக்கிறாள். ஆனால் அவளுக்கு எதுவுமே தெரியாது.

நீங்கள் இப்போதே எதுவும் அவளிடம் சொல்ல வேண்டாம். இதுக்கு மேல மறைக்க முடியாது அப்படின்ற சூழ்நிலையில் மட்டுமே அவளிடம் சொல்லுங்கள். அதே போல் உங்கள் மகனுக்கும் தெரிய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

சரிம்மா நான் போய் சோழனை வர சொல்கிறேன்.

நீங்களும் கவியிடம் கூறி விட்டு கல்யாணத்திற்கு தயார் செய்யுங்கள் என்று சென்றுவிட்டார்.

சோழன் இந்த கல்யாணத்திற்கு ஒத்துக் கொள்வானா. கவியும் என்ன முடிவு எடுப்பாள் என்று அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!