கனவே சாபமா 02

5
(8)

கனவு -02

“ஏன் இப்படி கத்துற துவாரகா என்ன கனவில எதுவும் பேய் பார்த்தியா” என்றவாறு அவள் அருகில் அமர்ந்தான் கௌதம் அவளுடைய கணவன்.
“நீங்க நீங்க என்ன கொன்னுட்டீங்க” என்று அதிர்ச்சியோடு உரைத்தாள் துவாரகா.
அதில் புருவங்கள் முடிச்சிட அவளை பார்த்த கௌதமோ,
“என்னடி இப்படி காலங்காத்தால உளர்ற நான் உன்னை கொன்னுட்டேனா.. அப்போ மேடம் என்ன சொர்க்கத்துலயா இருக்கீங்க..
இங்க பாரு நம்ம ரெண்டு பேரும் பத்து வருஷமா காதலிச்சு எவ்வளவோ பிரச்சினையை எதிர்த்து கல்யாணம் பண்ணி இருக்கோம் அப்படி இருக்கும் போது என்னோட ஆசை காதல் பொண்டாட்டிய நானே கொல்லுவேனா.. எதை சொல்றதா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமாடி”
என்றான் கௌதம்.
துவாரகாவோ,
“ஐயோ இல்லங்க ரொம்ப ஒரு மோசமான கனவு இதுக்கு முன்னாடி இப்படி வந்ததே இல்ல.. அதை நினைச்சாலே உடம்பு எல்லாம் நடுங்குது மனசெல்லாம் பதறுது”
“அப்படி என்ன துவாரகா கனவு கண்ட நீ இந்த அளவு பயப்படுற அளவுக்கு”
“நீங்க ஏன் முன்னாடியே இன்னொரு பொண்ணு கூட ஒண்ணா இருக்கீங்க அதை பார்த்துட்டு என்னால சும்மா இருக்க முடியல உங்களை வந்து தடுக்கிறேன் நீங்க என் மேல கோபப்படுறீங்க அதுக்கப்புறம் அந்த பொண்ணு சொல்றான்னு என்னை கொலை பண்ணிடுறீங்க அப்பதான் டக்குனு எனக்கு முழிப்பு தட்டிட்டுச்சி” என்று அவள் சொல்லி முடிப்பதற்குள் அந்த அதிகாலை வேலையிலையும் கூட அவளுக்கு வியர்த்து வழிந்தது.
அவளை ஏற இறங்க பார்த்த அவளுடைய கணவன் கௌதமோ அவளுடைய கூற்றை கேட்டு நகைக்க ஆரம்பித்தான்.
அவளுடைய நடு மண்டையில் நங்கு என்று கொட்டியவன்,
“இன்னொரு தடவை கனவுலையோ இல்ல கற்பனையோ என்னை இன்னொரு பொண்ணு கூட வச்சு பேசாத அதை நினைச்சாலே அருவருப்பா இருக்கு அதுவும் உன் வாயால கேட்கும் போது எனக்கு கோபம் வருது துவாரகா..
இதுதான் முதலும் கடைசியுமா இருக்கணும்”
“ஏங்க என்ன நீங்க எனக்கு மட்டும் என்ன இப்படி சொல்றதுக்கு ஆசையா என்ன.. என் கனவுல அப்படித்தான் வந்துச்சு என்னால அதை ஜீரணிக்கவே முடியல.. இந்த கனவு எனக்கு ஞாபகமே இருக்கக் கூடாது கடவுளே இன்னைக்குள்ள இந்த கனவை நான் மறந்துறணும்..
என்ன ஒரு கெட்ட கனவு இது.
சாரிங்க நான் இனிமே இதை பத்தி உங்ககிட்ட பேசமாட்டேன் என்ன மன்னிச்சிடுங்க”
என்று இரு கைகளாலும் இரண்டு காதையும் பிடித்தவாறு அழகாக தன்னிடம் மன்னிப்பை யாசிக்கும் மனைவியை அந்த காதல் கார கணவனுக்கு பிடிக்காமல் போகுமா என்ன.
“சரி சரி ஜூம் மந்திர காளி என் பொண்டாட்டி கண்ட இந்த கனவு அப்படியே அவ மூளையில் இருந்து மொத்தமா மறைஞ்சு போகட்டும் பூஊஊ”
என்றவன் தன்னுடைய கைகளால் அவளுடைய தலையை சுற்றி காற்றில் ஊதுவது போல செய்ய,
அதை கண்ட துவாரகாவோ தன்னை மறந்து சிரிக்க தொடங்கினாள்.
அவளுடைய புன்னகையில் தானும் இணைந்து கொண்ட கௌதமோ,
“வா டிபன் ரெடி பண்ணிட்டேன் நீ பிரஷ் ஆகிட்டு வா நம்ம் சாப்பிடலாம் அப்புறம் லேட் ஆகிரும் நான் கிளம்புறதுக்கு”
என்றவன் கட்டிலில் இருந்து எழுந்து கொள்ள,
அவளும் அவனுடனே எழுந்தவள்,
“நீங்க என்னை எழுப்பி இருக்கலாம் தான ஏன் நீங்களே டிபன் செஞ்சீங்க இன்னைக்கு திங்கட்கிழமை வேற நீங்க சீக்கிரமே ஆபீஸ் போகணும் மத்த நாளா இருந்தா கூட பரவால்ல என்னை எழுப்பி இருந்தா உங்களுக்கு கொஞ்சம் உதவியா இருந்திருக்கும் இல்ல..
இப்படி என்னை நல்லா தூங்க விட்டுட்டு நீங்களே எல்லா வேலையும் பார்த்து இருக்கீங்க எனக்கு கஷ்டமா இருக்கு கௌதம்”
என்றாள் துவாரகா.
“ஐயோ என் பாசக்கார பொண்டாட்டி அப்படி நீ ரொம்ப கவலைப்படுறதா இருந்தா சீக்கிரம் போய் பிரஷ் ஆகிட்டு வந்து மாமாவுக்கு ஊட்டி விடு நான் அப்படியே கிளம்பிடுவேன் டைம் சரியா இருக்கும் எப்படி என்னோட ஐடியா” என்று அவளை தன்னுடைய கைவளைவுக்குள் கொண்டு வந்தவன் கொஞ்சல் மொழிகளில் சொல்ல,
“அவ்ளோ தானே என்னோட புருஷனுக்கு இது கூட நான் செய்ய மாட்டேனா அஞ்சே நிமிஷம் இப்ப வந்துடுறேன்”
என்றவள் சொன்னது போல் குளியல் அறைக்குள் நுழைந்தவள் ஐந்து நிமிடத்தில் வெளியே வந்தாள்.
அவள் திரும்ப வருவதற்குள் ஃபார்மல் உடைக்கு மாறி இருந்தான் கௌதம்.
ஆனாலும் தன்னுடைய மனைவிக்கு ஒரு கப் காபியை எடுத்துக் கொண்டு வந்து அவர்களுடைய அறையில் வைத்திருந்தான்.
வெளியே வந்தவள் சமையலறைக்குள் செல்ல போக அவளை தடுத்து பிடித்தவன்,
“நான் போய் சாப்பாடு போட்டு வரேன் அதுக்குள்ள நீ இந்த காப்பிய குடி”
என்று அங்கு டேபிளில் இருந்த காபியை எடுத்து அவளுடைய கையில் கொடுத்து பெட்டில் அவளை அமர்த்தி விட்டு சென்றான்.
“ஏங்க நான் அப்புறமா குடிச்சிக்கிறேன் முதல்ல நான் உங்களுக்கு சாப்பாடு ஊட்டி விடுறேன் இல்லன்னா உங்களுக்கு டைம் ஆயிடும்”
என்று அவள் சொல்ல,
கிச்சனுக்குள் சென்று தட்டில் சாப்பாடு போட்டுக் கொண்டிருந்தவன்,
“எப்படி இருந்தாலும் எனக்கு நீதான் ஊட்டி விடணும் அதுக்குள்ள சீக்கிரம் குடிச்சிட்டு வா நான் சாப்பாடு போட்டு எடுத்துட்டு வரேன் டைம் ஆய்டும்னு சொல்லிக்கிட்டே இருந்தேன்னா டைம் தான் ஆகும் சீக்கிரம் குடிச்சிட்டு வா பொண்டாட்டி”
என்றவன் தட்டில் இட்டிலி போட்டு அதில் இரண்டு சிறிய கிண்ணங்கள் வைத்து ஒன்றில் தேங்காய் சட்டினி மற்றொன்றில் தக்காளி சட்னி என்று இன்னொரு கையில் தண்ணீர் டம்ளர் உடன் தங்கள் அறைக்கு வந்தான்.
சொன்னது போல் காபி கொதிக்க கொதிக்க இருந்தாலும் தன்னுடைய கணவனுக்கு நேரம் ஆனதால் அவனுக்கு சீக்கிரம் ஊட்டி விட வேண்டும் தான் இந்த காப்பியை குடிக்காமல் சாப்பாட்டு தட்டை கேட்டால் கொடுக்க மாட்டான் என்று அறிந்து வைத்திருந்தவள் வேக வேகமாக அதை குடித்து முடித்தாள் அவன் வருவதற்குள்.
அவன் உள்ளே வந்ததும் தட்டை கையில் வாங்கியவள் என்ன உணவு என்று பார்க்க,
மல்லிகை பூ போன்ற இட்லியும் அதற்கு ஏற்றார் போன்ற இரண்டு வகை சட்னிகளையும் பார்த்தவள் தன்னுடைய புருஷனின் சமையல் திறமையை நினைத்து மெச்சிக்கொண்டாள்.
“ம்ம் வாசனை சூப்பரா இருக்குங்க எப்படி நீங்க இப்படி எல்லா விதத்திலையும் பெர்ஃபெக்ட்டா இருக்கீங்க”
என்று கேட்டாள் அவள்.
அதற்கு புன்னகை புரிந்தவனோ தயாராகிக் கொண்டே,
“அப்படி பெர்ஃபெக்ட்டா இல்லைன்னா இந்த துவாரகா மேடம கல்யாணம் பண்ணி இருக்க முடியுமா அதுவும் பத்து வருஷமா உங்க பின்னாடி சுத்தி காதலிச்சு”
என்று சொன்னான் அவன்.
உடனே அவளுடைய முகம் வெட்கத்தில் சிவந்தது.
அதை கண்டு கொண்டவனோ,
“அடியே ஆபீசுக்கு டைம் ஆகுதுடி இப்படி காலையிலேயே வெட்கப்பட்டு மாமன கொள்ளாதடி சீக்கிரம் ஊட்டி விடு”
என்றான் பாவமாக கௌதம்.
“அச்சச்சோ சாரிங்க”
என்றவள் அவன் டை வாலெட் ஷூ என்று ஒவ்வொன்றாக அணிந்து கொண்டிருக்க ஒரு வயது குழந்தை சாப்பிட அடம் பிடிக்க அதன் தாய் அதன் பின்னையே ஓடிக் கொண்டு சாப்பாடு ஊட்டுவது போல தன்னுடைய மன்னாளனின் பின்னே சென்ற துவாரகா தட்டில் உள்ள மொத்த இட்லியையும் அவன் தயாராகி முடிப்பதற்குள் ஊட்டி விட்டாள்.
பின்ப அவனை ஆபிஸிக்கு வழி அனுப்பி வைத்தாள் துவாரகா.
கௌதம் போகும் முன்பு தன்னுடைய மனைவியை அறிந்தவனாக,
“இங்க பாரு துவாரகா நான் ஆபீஸ் கிளம்பிட்டேன்னு காலையில சாப்பிடாம இருக்கிற எல்லா வேலையும் பார்த்துட்டு இருக்க கூடாது ஒழுங்கா டைமுக்கு சாப்டுட்டு அப்புறமா நீ என்னமோ பண்ணு எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
காலையில சாப்பாடை மட்டும் ஸ்கிப் பண்ணவே கூடாது உனக்கு பல தடவை சொல்லி இருக்கேன்.
இன்னைக்கு உண்மையிலேயே எனக்கு ரொம்ப டைம் ஆயிட்டுமா அதனாலதான் நான் கிளம்புறேன் இல்லனா உன்ன சாப்பிட வச்சுட்டு அதுக்கப்புறம் தான் கிளம்பி இருப்பேன்”
என்று அன்பு கட்டளை இட்டான்.
அவளோ,
“ஐயோ எனக்கு தெரியும் கண்டிப்பா எனக்காக இல்லனாலும் உங்களுக்காக நான் சாப்பிடுவேன் நீங்க கவலைப்படாம கிளம்புங்க”
என்றாள்.
“சரி நான் கிளம்புறேன் ஆனாலும் உன்னை நம்ப முடியாது வேலை தான் முக்கியம்னு நீ வேலைய பார்க்க போயிருவ நான் கிளம்பின உடனே நீ சாப்பிடணும் அதை எனக்கு போட்டோ எடுத்து இன்னும் பத்து நிமிஷத்துக்குள்ள போட்டு இருக்கனும் சரியா இல்லனா நான் வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் அதுக்கு தண்டனை உனக்கு கண்டிப்பா கிடைக்கும்”
என்றவன் தன்னுடைய மனைவியின் நெற்றியில் முத்தத்தை பதித்துவிட்டு தன்னுடைய காரில் புறப்பட்டு விட்டான்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!