கனவு -03
துவாரகாவும் கௌதமும் சிறு வயதிலிருந்தே ஒன்றாக படித்தவர்கள்.
ஒரே பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் காலத்தில் இருந்து ஒருவருக்கு மேல் மற்றவருக்கு விருப்பம்.
காலப்போக்கில் அது காதலாக உருவெடுத்தது.
கல்லூரி படிக்கும் நேரமும் வர தங்களுடைய காதலை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டார்கள் இருவரும்.
ஒரு கட்டத்தில் இருவருடைய வீட்டிற்கும் தெரியவர இரு குடும்பமும் இவர்களுடைய காதலுக்கு ஒத்துக்கொள்ளவில்லை.
காரணம் இருவரும் வேறு வேறு ஆட்கள் என்பதால்.
அதனால் இரு வீட்டிலுமே பயங்கரமான எதிர்ப்பு தெரிவிக்க அவர்களுக்காக தங்களுடைய காதலை விட்டுக் கொடுக்க முடியாது என்று நினைத்தவர்கள் குடும்பத்தை எதிர்த்து வீட்டை விட்டு ஓடி வந்து தங்களுடைய வாழ்க்கையை தொடங்கினார்கள்.
அதேசமயம் அவர்களுடைய படிப்பும் முடிவடைந்து இருந்ததால் கௌதமிற்க்கு ஒரு ஐடி கம்பெனியில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைத்தது.
தன்னுடைய உழைப்பில் தன்னுடைய காதல் மனைவியை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்த கௌதமோ துவாரகாவை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறியிருந்தான்.
அவளோ எப்பொழுதும் தன்னுடைய கணவனை நன்கு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவள் போல தான் வேலைக்கு சென்று விட்டாள் வேலை வீடு என்று இருந்து விடுவோம்,
தன்னுடைய கணவனை நன்று கவனித்துக் கொள்ள முடியாது என்று யோசித்தவள் அவனுடைய கோரிக்கையை ஏற்றுக் கொண்டவள் அவனுக்காகவே வாழ தொடங்கி விட்டாள் துவாரகா.
கௌதம் அலுவலகத்திற்கு சென்ற பிறகு அவன் சொன்னது போலவே சாப்பிட அமர்ந்தவள் அவனுக்கு போட்டோ எடுத்து அனுப்பி இருந்தாள்.
பிறகு ஸ்பீக்கரில் மெல்லிய பாடலை ஒழிக்க விட்டு அவளுக்கு என காத்திருந்த வீட்டு வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தாள் துவாரகா. மாலை கௌதம் வீட்டிற்கு வரும் வரைக்கும் இருக்கும் சின்ன சின்ன வேலைகளை ஒன்று விடாமல் செய்வதிலேயே தன்னுடைய நேரத்தை செலவிடும் துவாரகா மாலை கணவன் வந்த பிறகு அவனுடன் சேர்ந்து இரவு உணவை சமைத்து இருவரும் உண்டு விட்டு சிறிது நேரம் அன்றைய பொழுது எவ்வாறு சென்றது என இருவரும் ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டு இருக்க,
அவர்கள் இருவருடைய வாழ்க்கையும் இதுவரைக்கும் நன்றாகவே சென்று கொண்டிருந்தது.
(இனியும் அப்படி இருக்க நான் விடுவேனா என்ன. அதான் வந்து விட்டேனே அவர்களின் நிம்மதியை குழைக்க.)
அன்றைய நாள் முழுவதும் அவள் காலையில் கண்ட கனவை முற்றிலுமாக மறந்து விட்டிருந்தாள்.
எப்பொழுதும் போல தன்னுடைய காதல் கணவனுக்காக இன்றும் எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருந்தாள் துவாரகா.
அவளுடைய காத்திருப்பை வீணாக்காது நேரத்திற்கு வந்திருந்தான் கௌதம்.
பின்பு இருவரும் சேர்ந்து அன்றைய இரவு உணவை சமைத்து உண்டு முடித்து விட்டு பால்கனியில் உள்ள ஊஞ்சலில் கௌதம் அமர்ந்திருக்க அவனுடைய மடியில் துவாரகா அமர்ந்திருக்க இருவரும் தங்களுடைய கதைகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு இருந்தார்கள்.
அப்பொழுது அவளுடைய வயிற்றில் கரம் பதித்த கௌதமோ,
“இந்த குட்டி வயித்துக்குள்ள நம்மளோட பாப்பா வந்தா எப்படி இருக்கும்”
என்று அவன் கேட்க,
அவளோ வெட்கத்தை தத்தெடுத்தவள்,
“ஆமா கௌத்தம் எனக்கும் ஆசையா இருக்கு நம்மளும் இன்னும் எத்தனை நாளைக்கு தான் குழந்தையை தள்ளி போட்டுக்கிட்டே இருக்கிறது.
எனக்கும் வீட்ல தனியாவே இருக்க ரொம்ப போரிங்கா இருக்கு கௌதம் நம்ம சீக்கிரமா ஒரு பாப்பா பெத்துக்கலாமா”
என்று அவனுடைய முகம் பார்த்து அவள் ஆசையாக கேட்க அவனோ,
அவளுடைய கன்னத்தை ஒற்றை கையால் வருடியவன்,
“ஆமா துவாரகா எனக்கும் குழந்தை பெத்துக்கணும்னு ஆசை வந்துருச்சு இத்தனை நாட்களா உன்னை நல்லா பார்த்துக்கணும் உனக்கு எந்த கஷ்டத்தையும் கொடுக்கக் கூடாதுன்னு ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செஞ்சேன்.
நீ ஆசைப்பட்ட எல்லாத்தையும் உனக்கு வாங்கி கொடுக்கணும் நீ எதையாவது கேட்டா அதை இல்லைன்னு சொல்ல கூடாதுன்னு நான் கவனமாக இருந்தேன்.
நீ ஆசைப்படுற எதைனாலும் நீ கேக்குறதுக்கு முன்னாடி உனக்கு அது கிடைக்கனும்னு நான் கவனமா பார்த்துக்கிட்டேன்.
இப்பவும் கூட நீ எது ஆசைப்பட்டு கேட்டாலும் என்னால உனக்கு வாங்கி கொடுக்க முடியும்.
அதனால இதுக்கு அப்புறம் நமக்கு ஒரு குழந்தை இருந்தா நல்லா இருக்கும்னு தோணுது.
உனக்கும் அந்த ஆசை வந்துருச்சுன்னு எனக்கு நல்லாவே புரியுது. சீக்கிரமாகவே நம்ம அதுக்கான வேலையை ஆரம்பிப்போம்.
என்ன சொல்ற துவாரகா”
என்று அவன் கூறினான்.
அவளோ,
“எனக்கு தெரியும் கௌதம் நீங்க என்னை எவ்வளவு நல்லா பார்த்துக்கிறீங்கன்னு.
இனி நாட்களை கடத்த வேண்டாம் நமக்குன்னு ஒரு குழந்தை நம்ம ரெண்டு பேர் உருவத்தில நினைக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு”
என்றவள் அவனுடைய முகத்தை காதலாக பார்க்க,
அதே காதலோடு தன்னுடைய மனைவியின் முகத்தை பார்த்தவனோ முத்தத்தால் தன்னுடைய காதலை அவளுடன் பகிர்ந்து கொண்டான் கௌதம்.
தன்னவனுக்கு இணையாக தானும் சளைத்தவள் அல்ல என்பதை போல் தனக்கு வழங்கிய முத்தத்தை தானும் அவனுக்கு திரும்ப வழங்கினாள் பெண்ணவள்.
இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு காதலில் மூழ்கியவர்கள் காமத்தில் மூழ்க தொடங்க,
“துவாரகா உள்ள போமா”
என்றவன் அவள் மேல் உள்ள போதை மேலூரக் கேட்க அவளும் அதே போதையில் சரி என்று சம்மதம் சொல்ல தன்னுடைய கைகளில் அவளை தூக்கியவன் உள்ளே மெத்தையில் அவளை பூப்போன்று கிடத்தினான்.
அவள் மேல் சரிந்தவனோ காதலின் ஆழம் கண்டவன் காமத்தின் ஆழமும் அரிய அவள் கொண்டான் போல.
இருவருக்கும் இடையில் ஆடைகள் அத்தியாவசியமாக கருதப்பட அவற்றையை தூரமாக ஒதுக்கி வைத்தவர்களோ வெட்கத்தையும் கூச்சத்தையும் அச்சத்தையும் ஓரம் தள்ளிவிட்டு தங்கள் இருவருக்கும் உண்டான காதலை காமத்தின் வழியாக உடல் மொழியில் காட்டிக் கொண்டிருந்தார்கள் இருவரும்.
முட்புதர்கள் அதிகமாக காணப்பட்ட இடத்தில் தூரத்தில் இரண்டு குதிரைகள் கட்டப்பட்டிருக்க அதன் அருகில் முனங்கல் சத்தம் அதிகமாக கேட்டது.
இங்கு தன்னுடைய மன்னவனை தேடி வந்த அமையாதேவி அங்கு தூரத்தில் நிற்கும் இரண்டு குதிரைகளை கண்டவளோ அதில் ஒன்று தன்னுடைய மன்னவனின் குதிரை என்று கண்டறிந்தவள் புன்னகை முகமாக தன் மன்னவனை காணும் ஆவலில் தான் அணிந்திருக்கும் அந்த மிக நீண்ட பட்டாடையை இரு கைகளாலும் சற்று தூக்கியவள் ஓடிச் சென்றாள் அவனைக் காண.
அந்தியில் மலர்ந்த தாமரை மலரைப் போல அவளுடைய முகம் மகிழ்ச்சி ததும்ப ஓடி வந்த அமையாவோ அங்கு தான் கண்ட காட்சியில் அவளுடைய மலர்ந்த முகமோ நொடியில் பொழிவு இழந்து காணப்பட்டது.
ஆம் அங்கு அவளுடைய மன்னன் கௌதமாதித்தனும் சேனபதி சாயராவும் உடலில் ஒட்டு ஆடை இல்லாமல் அவளுடன் இன்பத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தான்.
அதை கண்டவளுக்கோ தன்னுடைய இதயத்தை யாரோ கத்தி இன்றி கையை விட்டு பிடுங்கி எடுத்தது போன்ற ஒரு வலி உருவாகியது.
அவளுடைய கண்களில் தாரைதாரையாக கண்ணீர் வெளியேற முன்னே நடக்க மறுத்த தன்னுடைய கால்களை மெதுவாக அடி எடுத்து நடந்து அவர்கள் அருகில் வந்தவள்,
“அரசே தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் தங்களுடைய மனைவியை மறந்து விட்டீர்களா.
என்னுடைய இடத்தில் இந்த வேசியை வைத்து நிகழ்த்திக் கொண்டிருக்கும் இந்த காரியம் தங்களுக்கு சரி என்று படுகிறதா”
என்று ஆத்திரத்தை அடக்கிக் கொள்ள முடியாமல் அதை வார்த்தைகளாக வெளியேற்றினாள் அமையாதேவி.
தான் இன்பத்தில் மகிழ்ந்து கொண்டிருக்கும் இந்த சமயத்தில் யார் தன்னை தொந்தரவு செய்வது என்று தலையை உயர்த்தி பார்க்க அங்கு அமையாதேவியை பார்த்த கௌதமாதித்தனுக்கும் சேனாபதி சாயராவுக்கும் ஆத்திரமே மூண்டது.
உடனே சேனபதி சாயரா தன் மேல் படர்ந்து இருக்கும் கௌதமாதித்தனை தள்ளி விட்டவள் அங்கிருந்து எழுந்து செல்ல போக அவளுடைய கையைப் பிடித்து தடுத்த கௌதமாதித்தனை,
“விடுங்கள் என்னை விடுங்கள் அரசே தாங்கள் எப்பொழுதெல்லாம் என்னுடன் இருக்கிறீர்களோ அப்பொழுதெல்லாம் இவளுக்கு எப்படித்தான் திறிகின்றதோ தெரியவில்லை.
நாம் நம்மை மறந்து இன்பம் பெறும் வேளையிலேயே தடுத்து நிறுத்துவதையே குறியாக வைத்துக்கொண்டு வருகிறாள் இவள். எனக்கு பிடிக்கவில்லை.
என்னை விடுங்கள் நான் இங்கிருந்து செல்கிறேன்”
என்று கௌதமாதித்தனின் கையை உதறி விட,
மீண்டும் அவளுடைய கையை இறுகப்பற்றிய கௌதமாதித்தனோ,
“அன்பே சாயரா என்ன வார்த்தை கூறுகிறாய் எனக்கு நீ வேண்டும் உனக்கு பிடிக்கவில்லை என்றால் அவளை இப்பொழுதே இங்கிருந்து அனுப்பி விடுகிறேன் நீ கோபம் கொள்ளாதே”
என்று அவன் சொல்ல அதைக் கண்டு மர்மமாக புன்னகைத்த சாயரா,
“அப்படி என்றால் இப்பொழுதே தங்களுடைய வாளால் அவளுடைய சிரசைக் கொய்து விடுங்கள்”
என்று அவனுக்கு ஆணையிட,
“அவ்வளவுதானா தங்களுடைய ஆசையை நிறைவேற்றுகிறேன் சாயரா”
என்ற கௌதமாதித்தன் தன் இடுப்பில் சொருகி வைத்திருந்த வாளை எடுத்து அங்கு நின்ற அமையாதேவியின் சிரசை சீவிவிட்டான்.
“ஆஆஆஆ”
என்ற அலறலோடு எழுந்த அமர்ந்தாள் துவாரகா.
கனவுகள் தொடரும்.