கனவு -08
அவளுடைய பதிலில் கௌதம் ஆடிப் போயிருக்க டாக்டரோ கௌதமிடம் திரும்பியவர்,
“கௌதம் நீங்க கொஞ்சம் வெளிய வெயிட் பண்ணுங்க நான் துவாரகா கிட்ட பேசிட்டு அப்புறமா நான் உங்களை கூப்பிடுறேன்”
என்றார்.
அவனோ அவரிடம் சரி என்றவன் துவாரகாவை ஒரு அடிபட்ட பார்வை பார்த்துவிட்டு அந்த அறையில் இருந்து வெளியேறினான்.
அவன் வெளியேறியதும் துவாரகாவிடம் பேச ஆரம்பித்தார் அமராந்தி.
அவள் தனக்கு முதன்முதலாக எப்போது அந்த கனவு தோன்றியது.
அதில் வந்த காட்சிகள் என்று ஒன்று விடாமல் அனைத்தையும் அமராந்தியிடம் கூறினாள்.
அவரோ அவள் கூறும் பொழுது அவளுடைய முகத்தை ஆராய்ந்தார்.
அவள் ஒவ்வொரு விஷயங்களை கூறும் போதும் அவள் முகம் காட்டும் பாவனைகளை ஒன்று விடாமல் தனக்குள் உள்வாங்கியவர் அவளிடம்,
“சரிமா துவாரகா இது பயப்படுற மாதிரியான ரொம்ப பெரிய விஷயம் எல்லாம் இல்லை.
உனக்கு சரியா தூக்கம் இல்லாதது அப்பறம் அந்த கனவையே நீ நினைச்சுக்கிட்டு இருந்ததுனால தான் உனக்கு அடிக்கடி அந்த கனவு வந்து தொந்தரவு பண்ணி இருக்கு.
நீ நல்லா தூங்கி ரெஸ்ட் எடு ஒரு வாரம் உனக்கு டேப்லெட் எழுதி தரேன் அதை மறக்காம போட்டுக்கோ ஒரு வாரம் கழிச்சு வந்து என்னை பாரு.
அப்பவும் இந்த கனவு உனக்கு வருதா இல்ல வரலையான்னு என்கிட்ட வந்து சொல்லணும் சரியா.
நீ போயிட்டு கௌதம வர சொல்லுமா”
என்றார் அவர்.
“எதுக்கு டாக்டர் அவர வர சொல்றீங்க எதா இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க”
என்று துவாரகா கேட்க அதற்கு அவளிடம் புன்னகையை பதிலளித்த அமராந்தியோ,
“ஐயோ அப்படியெல்லாம் ஒன்னும் இல்லம்மா உனக்கு எந்த பிரச்சனையும் இல்லை இது ஒரு ஸ்ட்ரெஸ்சால தான் நீ கொஞ்சம் ஓவரா ரியாக்ட் பண்ணி இருக்க.
மத்தபடி உனக்கு எந்த பிரச்சனையும் இல்லை நீ பயப்படாதே நான் கௌதம் கிட்ட வேற ஒரு விஷயம் பேசணும் அதுக்காக தான் வர சொல்றேன்” என்றார் அவளிடம்.
“ஓஓ அப்படியா சரி நான் கௌதம வர சொல்றேன்”
என்றவள் வெளியே வந்து,
“கௌதம் உங்களை டாக்டர் கூப்பிடுறாங்க”
என்றாள்.
அவனோ,
“உனக்கு ஒன்னும் இல்லையே துவாரகா ஆர் யூ ஆல்ரைட்”
“ம்ம்”
என்று அவள் தலை அசைத்தாள். அவளுடைய தலையை கோதிவிட்டவன்,
“நீ இங்கேயே வெயிட் பண்ணு நான் போயிட்டு வந்துடறேன்”
என்றவன் அவளை வெளியில் போடப்பட்டு இருக்கும் நாற்காலியில் அமர வைத்துவிட்டு தண்ணீர் பாட்டிலையும் அவள் கையில் கொடுத்து குடிக்குமாறு கொடுத்தவன் டாக்டரின் அறைக்குச் சென்றான்.
“வாங்க கௌதம்”
“டாக்டர் அவ கிட்ட பேசினீங்களா என்ன ஆச்சு அவளுக்கு”
என்று பரிதவிப்போடு கேட்டான் கௌதம்.
“என்ன கௌதம் உங்க வைஃபை உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் போல இருக்கு”
என்று அமராந்தி கேட்க அதற்கு அவனோ,
“என்ன டாக்டர் இப்படி கேக்குறீங்க எனக்கு ஏன் துவாரகா தான் எல்லாமே அவளுக்கு ஒன்னுனா என்னால தாங்க முடியாது டாக்டர்.
இப்போ ஒரு நாலு அஞ்சு நாளா அவளோட நடவடிக்கை ரொம்ப வித்தியாசமா இருக்கு என்னால அவளை அப்படி பார்க்கவே முடியல ரொம்ப கஷ்டமா இருக்கு டாக்டர்.
அவளுக்கு பயப்படுற மாதிரி எதுவும் பிரச்சனை இல்லையே”
“நோ மேன் துவாரகாவுக்கு அப்படி பெரிய ப்ராப்ளம் எல்லாம் இல்லன்னு சொல்ல முடியாது ஆனா கொஞ்சம் பெரிய பிராப்ளம் தான்”
“டாக்டர் என்ன டாக்டர் சொல்றீங்க”
என்று அவன் பதறி எழும்ப போக,
“ஹேய் கௌதம் அவசரப்படாதீங்க நான் முழுசா சொல்றேன் கேளுங்க பஸ்ட்.
இங்க பாருங்க கௌதம் உங்க மனைவிக்கு வர்றது வெறும் கனவு மட்டும் அல்ல அது ஒரு ஆழமான நினைவுகள்னு கூட சொல்லலாம்.
அவங்களுக்கு வந்த அந்த கனவை பத்தி அவங்க என்கிட்ட சொல்லும் போது அவங்களோட மனசுல ஒன்னு மட்டும் ஆழமா பதிஞ்சிருக்கு.
அது என்னன்னு தெரியுமா அந்தக் கனவுல நீங்களும் உங்க வைஃபும் அளவு கடந்த அன்போட இருக்கும் போது இன்னொரு பொண்ணு உங்களுக்கு இடையில வர்றாங்க.
அந்த சமயம் நீங்களும் உங்க வைஃபை பத்தி நினைக்காம உங்க வை வை ஃப் மேல இருக்கிற அன்பை விட அளவுக்கு அதிகமாக அந்த பொண்ணு மேல காட்டிருக்கிங்க அதை அதைத்தான் உங்க வைஃப்பால கொஞ்சம் கூட ஏத்துக்கவே முடியல.
எப்படி என்னோட கணவர் இன்னொரு பொண்ணு கூட இவ்வளவு நெருக்கமாக இருக்க முடியுது அப்போ என்னோட காதலுக்கும் என்னோட அன்புக்கும் எந்த ஒரு பலனுமே இல்லையா.
அவங்க உடம்புல இருந்து உயிரை தனியா பிரிச்சு எடுக்கற மாதிரி அவங்களோட பீலிங்ஸ் இருக்கு.
அதுதான் அவங்க மனசுல ரொம்ப ஆழமா பதிஞ்சு போயிருக்கு.
அது அவங்க மனசுல ஒரு வடு போல இருக்கு.
உங்க ரெண்டு பேருக்கும் இடையில மூணாவதா ஒரு பொண்ணு வர்றத அவங்களால ஏத்துக்கவே முடியல அதுக்காகவே அவங்க அந்த கனவை மறக்கணும் மறக்கணும்னு பல தடவை அதையே நினைச்சுகிட்டு இருக்காங்க.
அதனால கூட அதே கனவு அவங்களுக்கு திரும்பத் திரும்ப வந்து இருக்கலாம். இதுல அவங்களால சரியா தூங்க கூட முடியாம இருந்திருக்கு.
உங்க வீட்ல நீங்க உங்க வைஃப் வேற யாரெல்லாம் இருக்கீங்க”
என்று கேட்டார் அமராந்தி.
“அது வந்து டாக்டர் நானும் என் வைஃப்பும் வேற வேற காஸ்ட் சோ நாங்க வீட்டை விட்டு ஓடி வந்து தான் கல்யாணம் பண்ணிக்கட்டோம் இப்ப வரைக்கும் எங்க ரெண்டு பேர் வீட்லயும் எங்களை ஏத்துக்கல.
அதனால நாங்க ரெண்டு பேரும் தனியா தான் இருக்கோம்”
“ஓஓ ஓகே மிஸ்டர் கௌதம் உங்களுக்கு கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆகுது”
“மூணு வருஷம் ஆகுது டாக்டர்”
“சரி கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க உங்க ரெண்டு பேருக்கும் ஹெல்த் ரீதியா ஏதாவது பிராப்ளம் இருக்கா இல்ல ஏன் கேட்கிறேன்னா நீங்க கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆகுதுன்னு சொன்னீங்க அதுவும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணதா சொன்னீங்க பேபி பத்தி எனக்கு எதுவும் சொல்லலையே அதான் கேட்கிறேன்”
என்றார் தயங்கியவாறு.
“இல்ல டாக்டர் என்ன விட துவாரகா வசதியா வளர்ந்த பொண்ணு அவள் எந்த ஒரு சூழ்நிலையிலும் கஷ்டத்தை அனுபவிச்சிடக் கூடாதுன்னு நான் ரொம்ப தெளிவா இருந்தேன் அதனால எனக்கு இப்போ வரைக்கும் அவளை நல்லா பார்த்துக்கணும்னு மட்டும் தான் யோசிச்சேனே தவிர குழந்தையை பத்தி இப்ப வரைக்கும் நாங்க யோசிக்கவே இல்ல.
இப்பதான் குழந்தை பெத்துக்கலாம்னு ஒரு முடிவுக்கு வந்திருக்கோம் டாக்டர்”
என்றான் கௌதம்.
“ரொம்ப நல்ல முடிவு எடுத்திருக்கிங்க கௌதம் உங்க வைஃப் மேல உங்களுக்கு இருக்குற அன்பை பார்த்து எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு இப்போ உள்ள காலத்துல உங்கள மாதிரி பசங்கள பார்க்கும்போது ரொம்பவே சந்தோஷமாவும் இருக்கு.
சரி போனது போகட்டும் அவங்க வொர்க் பண்றாங்களா இல்ல வீட்ல தான் இருக்காங்களா”
என்று கேட்டார் அமராந்தி.
“இல்ல டாக்டர் வீட்லதான் இருக்கா”
“ஓகே மிஸ்டர் கௌதம் நீங்க இல்லாத அந்த தனிமை கூட அவங்கள அதிகமா பாதிச்சு இருக்கலாம் ஒன்னு பண்ணுங்க குழந்தை பெத்துக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கீங்க நீங்க ஏன் செகண்ட் ஹனிமூன் போக கூடாது.
ஒரு நல்ல இடத்துக்கு அவங்கள கூட்டிட்டு போங்க அது கூட அவங்களோட மைண்டை மாத்தலாம்”
“டாக்டர் நாங்க இப்ப வரைக்கும் ஹனிமூன் போகல”
“வாட் ஹனிமூன் போகலையா என்ன கெளதம் சொல்றீங்க”
“ஆமா டாக்டர் நான்தான் சொன்னேனே எனக்கு என் துவாரகாவ நல்லபடியா பார்த்துக்கணும் அது மட்டும் தான் மனசுல ஆழமா பதிஞ்சு இருந்துச்சு அதை தவிர்த்து வேற எதுக்குமே ஆசைப்படலை டாக்டர்”
இவ்வாறு அவன் கூறவும் லேசாக புன்னகைத்த அமராந்தியோ,
“சரியா போச்சு போங்க இதுக்கப்புறமாவது ஹனிமூன் போங்க ஒரு நல்ல பீஸ்ஃபுல்லான இடத்தை தேர்ந்தெடுத்து உங்க வைஃபை கூட்டிட்டு போங்க.
முடிஞ்ச வரைக்கும் அவங்களை தனிமையை ஃபீல் பண்ணாத மாதிரி பாத்துக்கோங்க. அவங்க மனசுல பதிஞ்சிருக்குற அந்த எண்ணம் முழுமையா மாறனும் அதாவது உங்க ரெண்டு பேருக்கு இடையில மூணாவதா ஒருத்தர் வர முடியாது அப்படிங்கிறத அவங்க முழுமையா நம்பனும்”
“டாக்டர் என்னால உறுதியா சொல்ல முடியும் டாக்டர் எங்க ரெண்டு பேருக்கும் இடையில் மூன்றாவதா ஒரு ஆள் இப்போ இல்ல எந்த ஜென்மத்திலும் வர முடியாது”
என்று ஆணித்தரமாக உரைத்தான் கௌதம்.
“நான் வந்துட்டேன் என்ன என்கிட்ட இருந்து தப்பிச்சிடலாம்னு பாத்தீங்களா விடுவேனா இதோ வந்துட்டேன் இனிதான் ஆட்டமே ஆரம்பிக்க போகுது”