கனவே சாபமா 09

4.6
(8)

கனவு -09

“என்னால உறுதியாக சொல்ல முடியும் டாக்டர் எங்க ரெண்டு பேருக்கும் இடையில இப்போ இல்ல எந்த ஜென்மத்திலும் யாராலும் உள்ள வர முடியாது.
என்னோட துவாரகா மனசுல இருக்குற அந்த வடுவ நான் சரிப்படுத்துவேன்”
என்றான் கௌதம்.
“கண்டிப்பா கௌதம் நீங்க ஹனிமூன் போயிட்டு வந்த பிறகு துவாரகாவை அழைச்சிட்டு வாங்க அவங்களோட மாற்றம் எப்படி இருக்குதுன்னு நீங்க கவனிச்சுக்கிட்டே இருக்கணும் பாக்கலாம் உங்களோட முயற்சிகல்ல கண்டிப்பா துவாரகா சீக்கிரமாவே சரியாகிவிடுவாங்கன்னு நான் நம்புறேன்”
என்றார் அமராந்தி.
“ஓகே டாக்டர் அப்போ நான் கிளம்புறேன்”
என்றவன் வெளியே வந்தான்.
அவனுக்காகவே காத்திருந்த துவாரகாவோ அவன் வெளியே வந்ததும்,
“என்னாச்சு கௌதம் டாக்டர் எதுவும் சொன்னாங்களா என்கிட்ட எதுவுமே சொல்லல எனக்கு எதுவும் பிரச்சனையா பைத்தியம் எதுவும் பிடிச்சிட்டா”
என்று அவள் கேட்க அவனுக்கோ அவளை பார்க்க பாவமாக இருந்தது.
“ஹேய் என்ன துவாரகா இது ஏதேதோ பேசிகிட்டு இருக்க அப்படி எல்லாம் உனக்கு எதுவும் இல்லை நீ வீட்டில ரொம்ப தனியா இருக்கியா இப்போ ரெண்டு மூணு நாளா நீ சரியா தூங்கல அதனாலதான் இப்படி இருக்கேன்னு டாக்டர் சொன்னாங்க எங்கேயாவது வெளியே கூட்டிட்டு போங்க சரியாயிடுவாங்க அப்படின்னு தான் சொன்னாங்க வேற ஒன்னும் சொல்லல.
அப்புறம் உனக்கு நான் இன்னொரு சர்ப்ரைஸ் சொல்லவா நம்ம ரெண்டு பேரும் ஹனிமூன் போக போறோம்”
என்று சந்தோஷமாக சொன்னான் கௌதம்.
அதே சந்தோஷம் அவனிடத்திலிருந்து அவளுக்கு தாவிவிட,
“என்ன கௌதம் சொல்றீங்க நிஜமாவா நிஜமா நம்ம ஹனிமூன் போக போறோமா எங்க போக போறோம்”
என்று அவள் ஆசையாக கேட்டாள்.
“அதை நான் இன்னும் முடிவு பண்ணல ஏன்னா என்னோட பொண்டாட்டி துவாரகா எங்க போகணும்னு ஆசைப்படுறாங்களோ, அங்கேயே கூட்டிட்டு போகலாம்னு முடிவ அவங்க கிட்டயே விட்டுரலாம்னு முடிவு பண்ணிட்டேன்.
சரி இப்ப சொல்லுங்க துவாரகா மேடம் உங்களுக்கு எங்க ஹனிமூன் போக பிடிக்கும்.
நம்ம இந்தியா குள்ள போவோமா இல்ல ஃபாரின் எங்கேயாவது போவோமா நீயே சொல்லு”
என்றான் கௌதம்.
உடனே துவாரகாவோ,
“ஃபாரின் எல்லாம் வேண்டாங்க நம்ம இந்தியா குள்ள போகலாம் எனக்கு சிம்லா ரொம்ப பிடிக்கும் நம்ம அங்க போகலாமா அங்க உள்ள குளிர் பணி அதுல நீங்களும் நானும் ஒண்ணா நடந்து போகணும் அப்புறம் இரவு நேரத்துல ஃபோன் பையர் வச்சு நம்ம ரெண்டு பேரும் அந்தப் பணியில குளிர் காயனும் இப்படி நிறைய ஆசைகள் இருக்கு போகலாமா உங்களுக்கு ஓகேவா”
என்று ஆர்வமாகவும் ஆசையாகவும் அவனுடைய முகத்தை பார்த்து கேட்டாள் துவாரகா.
அவளுடைய சந்தோஷமே தன்னுடைய சந்தோஷம் என்று வாழ்பவனுக்கு அவள் ஆசையாக கூறிய இந்த விருப்பத்தை மறுக்கவா போகின்றான்.
அவளுடைய நெற்றி முட்டி சம்மதம் கூறினான் அந்த காதல் காரன் கௌதம்.
அவன் அடுத்த நாளே சிம்லாவிற்கு கிளம்பலாம் என்று நினைத்திருக்க ஆனால் அவனுடைய அலுவலகத்திலோ அவனுடைய டீம் ஒரு முக்கியமான ப்ராஜெக்ட்டில் ஈடுபட்டிருந்ததால் ஒரு வாரம் அவனால் எங்கும் செல்ல முடியவில்லை.
அதனால் ஒரு வாரத்திற்கு பிறகு சிம்லா போகலாம் என்று முடிவு செய்திருந்தான் கௌதம்.
ஆனால் பாவம் இந்த ஒரு வாரத்தில் அவனுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்க துவாரகாவை சரியாக அவனால் கவனிக்க முடியவில்லை.
அதற்காக அவளை முழுவதுமாக கவனிக்கவில்லை என்று சொல்லிவிட முடியாது.
எவ்வளவுதான் அவனுக்கு அலுவலகத்தில் வேலைப்பளு இருந்தாலும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை என்று அவளுக்கு அழைப்பு எடுத்து அவள் என்ன செய்கிறாள் என்று விசாரித்துக் கொண்டே இருப்பான்.
அவர்கள் இருவரும் சிம்லா செல்லும் நாளும் வந்தது.
இருவரும் சிம்லா வந்ததும் ஒரு மிகப்பெரிய ஹோட்டலில் ரூம் புக் செய்து இருந்தார்கள்.
வந்த முதல் நாள் இருவரும் கலைப்பு தீர நன்கு ஓய்வெடுத்தவர்கள் அடுத்த நாள் அங்கு சுற்றி பார்க்கலாம் என்று முடிவெடுத்தார்கள்.
அங்க மிகவும் முக்கியமான சுற்றுலா தளங்களில் சென்று தங்களுடைய நேரத்தை சந்தோஷமாக கழித்தார்கள் அவள் ஆசைப்பட்டது போலவே.
அங்கு மலை உச்சியில் இருந்து சுற்றி இருக்கும் இடங்களை பார்த்து ரசிக்கும் பொழுது அவ்வளவு அழகாக இருந்தது அந்த இடங்கள்.
“கௌதம் அங்க பாருங்களேன் இங்கிருந்து பார்க்கும்போது ரொம்ப அழகா இருக்குல்ல எனக்கு இந்த இடம் ரொம்ப புடிச்சிருக்கு”
“அப்படியா என்னோட பொண்டாட்டிக்கு இந்த இடம் அவ்வளவு ரொம்ப புடிச்சி இருக்கா அப்போ என்ன பிடிக்கலையா”
என்று அவளிடம் விளையாட ஆரம்பித்தான் கௌதம்.
“என்ன கௌதம் நீங்க உங்களை விட இங்க எதுவுமே அழகு இல்ல ஏன்னா என்னோட கௌதம் அவ்வளவு அழகு”
என்று தன்னுடைய இரு கைகளையும் பெரிதாக விரித்து காட்டினாள் துவாரகா.
அதுவே அவனுக்கு வாகாக போக அப்படியே தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டான் கௌதம்‌.
“ஐ லவ் யூ துவாரகா”
தன்னை மறந்து அவனுடைய காதல் மொழியில் மூழ்கி இருந்தாள் துவாரகா.
அப்பொழுது அவளுடைய சுடிதாரை யாரோ இழுப்பது போல் இருக்க அவனுடைய அணைப்பிலிருந்து யார் என்று விலகிப் பார்த்தவளோ புன்னகை முகமாக அதிர்ந்தாள்.
ஒரு இரண்டு வயது பெண் குழந்தை அந்த குளிரில் அழகாக ஸ்வெட்டர் எல்லாம் போட்டு அப்படியே குட்டி பாண்டா போல் இருந்த அந்த பெண் குழந்தையோ அவளுடைய சுடிதாரை பிடித்து இழுத்துக் கொண்டிருந்தது.
“அடடா இந்த குட்டி தேவதை ஏன் என்னுடைய டிரஸ்ஸ புடிச்சு இழுக்குறீங்க”
என்றவாறு அதன் உயரத்திற்கு கீழே முட்டி போட்டு அமர்ந்தாள் துவாரகா.
அதுவோ தன்னுடைய மழலை மொழியில்,
“அம்மா அம்மா”
என்று பிதற்ற அவளோ,
“என்ன அம்மாவா நானா”
என்று அந்த குழந்தையிடம் கேட்டாள்.
அதுவும் ஆமாம் என்பது போல தன்னுடைய தலையை ஆட்டியது.
அது மட்டுமல்லாமல் அவளுடைய நெஞ்சில் வந்து சாய்ந்தும் கொண்டது.
அதை பார்த்த துவாரகாவிற்கும் கௌதமிற்க்கும் ஒன்றும் புரியவில்லை.
என்னடா இது யார் என்றே தெரியாத இந்த சிறு குழந்தை ஏன் அவளை அம்மா என்று சொல்கிறது என்று நினைத்துக் கொண்டார்கள்.
அதற்குள் அந்தக் குழந்தையோ தன்னுடைய பிஞ்சு விரல்களால் அவளை அனைத்து அவளுடைய கழுத்தில் தன்னுடைய முகத்தை புதைத்துக் கொண்டது.
சிம்லாவில் தற்சமயம் இருக்கும் மைனஸ் டிகிரி குளிரிலும் அந்த பிஞ்சு குழந்தையின் வெப்பம் அவளை பெரிதாய் தாக்கியது.
தானாக அவளுடைய கைகள் அந்த குழந்தையை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டன.
பின்பு அந்த குழந்தையின் அரவணைப்பில் தான் அதனுடைய தாய் இல்லை என்றும் கூட மறந்து போனாள் துவாரகா.
ஏனோ அந்த குழந்தையின் செயல் அவளை அதன் பக்கம் இழுத்திருந்தது அவர்கள் இருவரையும்.
கௌதம் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டு நின்றான்.
‘அந்த குழந்தை யார் என்றே தெரியாது ஆனால் தன் மனைவியிடம் அந்த குழந்தையின் இணக்கம் பெரிதாக தெரிகின்றதே.
பொதுவாக சிறு குழந்தைகள் அறிமுகம் இல்லாத ஆட்களுடன் கிட்ட நெருங்கவே பயப்படும்.
அப்படி இருக்கும் பொழுது இந்த குழந்தை மட்டும் எப்படி துவாரகாவிடம் இப்படி பசை போட்டது போல் ஒட்டிக் கொண்டது’
என்று அவன் நினைத்து ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தான்.
அப்பொழுது அந்த குழந்தையினுடைய பெற்றோர்கள் அங்கு வந்தார்கள்.
உள்ளே கோயிலில் நின்று சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த அந்த தம்பதிகளோ தங்கள் மகள் தங்களிடம் இருந்து விலகிச் சென்றதை கவனிக்கவில்லை.
அதுவோ நடக்க பழகிய புதிது என்பதினால் கால்கள் ஒரு இடத்தில் இருக்காமல் தன்னுடைய பெற்றோரை விட்டு சற்று தள்ளியே வந்திருக்க துவாரகா அங்கு நின்று கொண்டிருக்க பார்ப்பதற்கு தன் அன்னையைப் போல் இருக்கும் துவாரகாவிடம் வந்து தஞ்சம் அடைந்து விட்டது.
இங்கு குழந்தையை காணவில்லை என்று அங்கு பதற்றத்தோடு சுற்று தேடிக் கொண்டிருந்த அந்த குழந்தையின் பெற்றோரோ கோவிலை விட்டு வெளியே வந்தவர்கள்,
அவர்களுடைய குழந்தை துவாரகாவின் அணைப்பில் இருப்பதை பார்த்து தங்களுடைய குழந்தை கிடைத்துவிட்டது என்று நிம்மதி பெருமூச்சோடு அவர்கள் அருகில் வந்தார்கள்.
அந்தக் குழந்தையின் அன்னையோ தன்னுடைய குழந்தையை பார்த்ததும் வேகமாக துவாரகாவிடம் விரைந்து வந்தவள் அந்த பிஞ்சு குழந்தையை அள்ளி எடுத்து தன் மார்போடு அணைத்துக் கொண்டாள்.
ஆனால் அந்த நொடி துவாரகாவினால் அந்த பிரிவை தாங்கிக்க முடியவில்லை.
அந்த குழந்தை அவளுக்கு யார் கூட என்று தெரியாது.
அப்படி இருக்கும் பொழுது அவளிடம் இருந்து அந்த குழந்தையை பிரித்தெடுத்தது அவளுடைய அன்னைதான்‌.
ஆனால் அதெல்லாம் அவளுக்கு அந்த நேரம் சிந்தனையில் பதியவில்லை‌.
தன்னுடைய அணைப்பில் இருந்த குழந்தை ஏதோ தானே ஈன்றெடுத்த குழந்தையை வேறொருத்தி பிடுங்குவதை போன்று உணர்ந்தாள் துவாரகா.
அதுவே அவளுக்கு கோபத்தையும் உண்டு பண்ண எதையும் யோசிக்காமல் சட்டென அவளிடம் இருந்து குழந்தையை தன் கைக்கு பிடுங்கியவள் அந்த குழந்தையின் தாயின் கன்னத்தில் பளார் என்று அறைந்து விட்டாள்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!