கனவே சாபமா 10

5
(7)

கனவு -10

ஹனிமூனுக்காக சிம்லா வந்த கௌதமும் துவாரகாவும் அங்கு மலைமேல் இருக்கும் ஹனுமன் கோவிலுக்கு வந்திருக்க அப்பொழுது ஒரு சிறு குழந்தை அவளை அன்னை என்று அணைத்துக் கொண்டது.
அவளோ அந்த அணைப்பில் திளைத்து இருந்த சமயம் அந்த குழந்தையின் அன்னையோ அவளிடம் இருந்து குழந்தையை பிடுங்கிக் கொள்ள அதை நொடியும் தாங்கிக் கொள்ள முடியாத துவாரகாவோ மீண்டும் அந்த குழந்தையை அவளிடம் இருந்து தன்னுடைய கைக்கு பிடுங்கியவள் அந்த குழந்தையின் தாயின் கன்னத்தில் விட்டால் ஒரு அறை.
“எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்ட இருந்து குழந்தை பரிச்சிருப்ப”
என்று ஆக்ரோஷமாக கேட்டாள் துவாரகா.
அதில் அவளைத் தவிர மற்ற மூவரும் அதிர்ந்து நின்றனர்.
“ஹலோ என்னங்க நீங்க இது என்னோட குழந்தை என்ன எப்படி நீங்க அடிக்கலாம்”
என்று அந்த குழந்தையின் தாய் அவளிடம் கேட்க அவளோ,
“என்ன ஏது உன்னோட குழந்தையா யார் சொன்னா இது என்னோட குழந்தை” என்று அவள் சொல்ல கௌதமுக்கோ பேரதிர்ச்சி.
உடனே அவள் அருகில் வந்தவன்,
“துவாரகா என்ன பேசுற நீ நமக்கு குழந்தையே கிடையாது அந்த குழந்தை உன்னை அம்மானு சொன்னதும் நீ அதுக்கு அம்மா ஆகிடுவியா அவங்க தான் அந்த குழந்தையோட அம்மா அப்பா ஃபர்ஸ்ட் நீ அவங்கள அடிச்சதுக்கு சாரி சொல்லு”
என்றான் கௌதம்.
“இல்ல கௌதம் இது என்னோட குழந்தை இந்த குழந்தையை நான் யாருக்கும் தர மாட்டேன்”
இதை கேட்ட அந்த குழந்தையின் தந்தைக்கோ ஆத்திரம் அதிகரித்தது.
“ஹலோ என்ன விளையாடுறீங்களா அது என்னோட குழந்தை குழந்தையை காணோம்னு தேடி வந்தா நீங்க புடிச்சு வச்சிருக்கீங்க என்ன குழந்தை கடத்துற கும்பலா நீங்க”
என்று வார்த்தையை விட கௌதமோ,
“ஹலோ சார் அதிகமா பேசாதீங்க கோயிலுக்கு வந்தவங்க குழந்தையை பத்திரமா பார்த்துக்காம கவனக்குறைவா இருந்துட்டு இப்போ இங்க வந்து கத்திக்கிட்டு இருக்கீங்களா”
“சாரி சார் நீங்க சொல்றது உண்மைதான் குழந்தையை கவனிக்க வேண்டியது எங்க பொறுப்பு தான் ஒரு சின்ன அஜாக்கிரதையால தப்பு நடந்து போச்சு தான்.
நான் இல்லைன்னு சொல்லல அதுக்காக உங்க கிட்ட நான் மன்னிப்பு கேட்டுக்குறேன் ஆனா உங்க வைஃப் எப்படி என்னோட வைஃப் அடிக்கலாம்”
என்றார் அவர்.
“இங்க பாருங்க உங்க குழந்தை என் வைஃபை அவங்க அம்மான்னு நினைச்சு டக்குனு ஒட்டிக்கிட்டாங்க அதனால என் வைஃப் ஏதோ அந்த குழந்தையை தன்னோட குழந்தையா நினைச்சுட்டாங்க உங்க வைஃப் வேகமா வந்து அவகிட்ட இருந்து குழந்தையை பிடுங்கவும் அவ கோபப்பட்டு அடிச்சிட்டா ஏதோ தன்னோட குழந்தையை பிரிச்சி எடுக்கிறதா கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டா அதுக்காக நான் சாரி கேட்டுக்குறேன் இதுக்கு அப்புறமாவது குழந்தையை பத்திரமா பாத்துக்கோங்க”
என்றவன் துவாரகாவிடம் திரும்பி,
“துவாரகா நீ என்ன பண்றேன்னு உனக்கு தெரியுதா இது நம்மளோட குழந்தை கிடையாது நமக்கு இன்னும் குழந்தை பிறக்கல இது அவங்களோட குழந்தை அவங்க கிட்ட கொடுத்திரு”
என்றான் கௌதம்.
துவாரகாவோ அந்த குழந்தையின் முகத்தை பார்த்தாள்.
அந்த பிஞ்சு குழந்தையின் முகத்தைப் பார்த்தவளுக்கோ அதை அதனுடைய தாயிடம் கொடுக்க கொஞ்சமும் விருப்பம் இல்லை என்பதை அவளுடைய முகம் தெளிவாக காட்டியது. அப்பொழுது அவளுடைய கையில் இருந்த குழந்தையோ அதனுடைய தாயைப் பார்த்து கையை ஆட்டி தன்னுடைய மழலை குரலில் அம்மா என்று அழைக்க துவாரகாவுக்கோ அப்பொழுதுதான் நிதர்சனம் புரிந்தது.
அந்த குழந்தை தன்னுடைய குழந்தை இல்லை.
ஆனாலும் அதை அவளிடம் கொடுக்கவும் விருப்பம் இல்லை. சட்டென ஒரு முடிவுக்கு வந்தவள்
அந்த குழந்தையின் பெற்றோரிடம்,
“உங்களை அடிச்சதுக்கு சாரி அப்புறம் இந்த குழந்தையை எனக்கே குடுத்துறீங்களா”
என்று கேட்டு அந்த பெற்றோரின் தலையில் இடியை இறக்கினாள் நம் துவாரகா.
அந்த இடி அவர்கள் தலைமையில் மட்டுமல்ல அவளுடைய கணவனின் தலையிலும் சேர்த்து தான் விழுந்தது.
“துவாரகா என்ன உளர்ற நீ”
“ஹலோ என்னங்க பேசுறீங்க எங்க குழந்தையை எப்படி உங்களுக்கு கொடுக்க முடியும் குழந்தையை கொடுங்க முதல்ல”
என்ற அந்த குழந்தையின் தாய் அவள் கையில் இருந்து தன்னுடைய குழந்தையை பிடுங்கிக் கொண்டாள்.
“நீங்க ரெண்டு பேரும் நல்லா தான இருக்கீங்க ஒரு குழந்தையை பெத்துக்க வேண்டியது தானே இப்படி அடுத்தவங்களோட குழந்தைக்கு ஆசைப்படுறீங்க”
என்று அவளை திட்டி விட்டு குழந்தையோடு அங்கிருந்து கிளம்பி விட்டார்கள்.
ஆனால் அந்த குழந்தையின் பிரிவை தாங்கிக்க முடியவில்லை துவாரகாவிற்கு.
அந்த இடத்திலேயே மடங்கி அமர்ந்தவள்,
“கௌதம் கௌதம் எனக்கு அந்த குழந்தை வேணும் எனக்கு அந்த குழந்தை வேணும் தயவு செஞ்சு அவங்களுக்கு சொல்லி புரிய வைச்சு அந்த குழந்தையை என்கிட்ட வாங்கி கொடுங்க”
என்று அவள் அழுக ஆரம்பித்து விட்டாள்.

கௌதமுக்கோ என்ன செய்வது என்று தெரியவில்லை அவளுடைய இந்த மாற்றத்தை பார்த்து.
“துவாரகா நீ என்ன பேசுறேன்னு தெரிஞ்சு தான் பேசுறியா அந்த குழந்தை நம்மளோட குழந்தை கிடையாது”
“எனக்கு தெரியும் கௌதம் ஆனா அந்த குழந்தை என்ன அம்மான்னு சொல்லுச்சு அது என்ன கட்டிப் பிடிச்ச போ எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா அந்த உணர்வை என்னால வார்த்தையால சொல்ல முடியல அந்த பிஞ்சு விரல்கள் என்னைத் தொடும் போதும் அந்த குழந்தை என்னோட கழுத்துல முகத்தை புதைச்சுகிட்டு சாஞ்சிட்டு இருக்கும்போதும் எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு எனக்கு அந்த குழந்தை வேணும் கௌதம்”
“துவாரகா நீ பேசுறது ரொம்ப தப்பு அந்த குழந்தை உனக்கு சொந்தமானது கிடையாது. நம்ம அதே மாதிரி நிறைய குழந்தைகளை பெத்துக்கலாம்” என்றான் கெளதம்.
அவளோ அவன் சொல்வதை காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை.
அவளுக்கு அப்பொழுது அந்த குழந்தை அவளுக்கு வேண்டும்.
அது மட்டுமே அவளுடைய சிந்தையில் ஓடிக் கொண்டிருந்தது.
“இல்ல கௌதம் எனக்கு அந்த குழந்தை வேணும் எனக்கு அந்த குழந்தை வேணும்”
என்று பைத்தியம் பிடித்தது போல் கத்திக் கொண்டிருந்தவளை பார்த்த கௌதமுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
அங்கு சுற்றி நின்ற ஆட்கள் கூட்டம் அவர்களை விசித்திரமாக கூட பார்த்துவிட்டு சென்றது.
அதையும் அவள் பொருட்படுத்தவே இல்லை.
அவளுடைய எண்ணம் அந்த குழந்தை அவளுக்கு வேண்டும்.
இதனால் கௌதம் தான் பாவம் ஒரு வளியாகிவிட்டான்.
அவளை எப்படி சமாதானப்படுத்துவது அடுத்தவர்களுடைய குழந்தைக்கு ஆசைப்படும் தன்னுடைய மனைவியை என்ன சொல்லி அவளுக்கு புரிய வைப்பது.
எவ்வளவோ சமாதானப்படுத்தியும் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாத துவாரகா வெகு நேரமாக அங்கு அழுது கரைந்ததால் அவனுடைய மடியில் மயங்கி விழுந்தாள்.
அவளை சமாதானம் செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்த கௌதமுக்கோ அவள் மயங்கி விழுந்தது அவனுக்கு சாதகமாக போக எதைப் பற்றியும் யோசிக்காமல் உடனே அவளை தன்னுடைய கைகளில் ஏந்தியவன் தாங்கள் தங்கி இருக்கும் ஹோட்டல் அறைக்கு வந்து விட்டான்.
கட்டிலில் அவளை மெதுவாக படுக்க வைத்தவன் போர்வையை எடுத்து அவளுக்கு நன்கு போத்திவிட்டு டாக்டர் அமராந்திக்கு அழைப்பு எடுத்தான்.
மறுமுனையில் அமராந்தி அழைப்பை ஏற்க இங்கு நடந்த அனைத்தையும் அவன் ஒன்று விடாமல் கூரி முடித்தான்.
அதைக் கேட்ட அமராந்தியோ,
“என்ன கௌதம் சொல்றீங்க நீங்க சொல்றதெல்லாம் உண்மையா”
என்று கேட்டார்.
கௌதமம் ஆம் என்று சொல்ல,
நான் கொடுத்த டேப்லெட் எல்லாம் அவங்க சரியா போட்டாங்களா அப்புறம் இந்த ஒரு வாரமும் அவங்க நல்லா தூங்குனாங்களா”
என்று அவர் கேட்க.
“அது வந்து டாக்டர் எனக்கு லாஸ்ட் ஒன் வீக் வொர்க் கொஞ்சம் ஜாஸ்தியா இருந்துச்சு அதனால துவாரகாவ கொஞ்சம் சரியா கவனிக்க முடியல பட் டேப்லட்ஸ் எல்லாம் போட்டியான்னு அவ கிட்ட கேட்கும் போது எல்லாம் போட்டுட்டேன்னு சொன்னா பட் இந்த ஒரு வாரமோ அவ கனவை பத்தி என்கிட்ட எதுவும் சொல்லல அப்புறம் எங்களுக்குள்ள எதுவும் சண்டையும் வரல அதனால நான் கொஞ்சம் கேர்லெஸ்ஸா இருந்துட்டேன்”
“என்ன கௌதம் இப்படி பொறுப்பில்லாம பேசுறீங்க அவங்களோட கண்டிஷன் என்ன மாதிரி இருக்குன்னு உங்ககிட்ட நான் அவ்வளவு தெளிவா சொன்னேன் அப்படி இருந்தும் இப்படி நீங்க கேர்லெஸ்ஸா இருந்து இருக்கீங்க”
“சாரி டாக்டர் தப்பு என் மேல தான் இனி சரியா பாத்துக்குறேன்”
“என்ன கௌதம் இப்படி சொல்றீங்க சரி இப்போ துவாரகா எங்க”
என்று கேட்டார் அவர்.
“அங்க ரொம்ப நேரமா அந்த குழந்தை வேணும்னு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி ஒரு கட்டத்துல மயங்கி விழுந்துட்டா நானும் எவ்வளவோ அவளை சமாதானப்படுத்த முயற்சி பண்ணேன் ஆனா அவ எதையும் கேட்கிற நிலைமையில இல்ல அதனால அவளை எழுப்பாம அப்படியே கொஞ்ச நேரம் தூங்கட்டும்ன்னு ரூமுக்கு கூட்டிட்டு வந்துட்டேன்”
“அந்த குழந்தையோட பேரண்ட்ஸ் துவாரகா கிட்ட இருந்து அந்த குழந்தையை பிடுங்காம இருந்திருந்தா இந்த நிலைமை வந்திருக்காது அவங்க துவாரகா கிட்ட இருந்து அந்த குழந்தையை பிடுங்குனதுனால எங்க தனக்கு சொந்தமான ஒன்னை இன்னொருத்தர் பிடுங்கிவிட்டாங்களே அப்படின்னு தான் அவங்க மனசுல பதிஞ்சு போய் இருக்கு.
அந்த பொருள் தனக்கு சொந்தம் இல்லை என்கிறது அவங்களுக்கு தெரிந்தே இருந்தாலும் அந்த பிரிவை அவங்களால தாங்கிக்க முடியல. அதோட வெளிப்பாடு தான் அவங்க அப்படி நடந்து இருப்பாங்க.
மேபி இப்போ அவங்க மயக்கத்தில் இருந்து எழும்பும்போது அதையே நெனச்சுக்கிட்டு இருக்காங்களா இல்ல அதை பத்தி எதுவுமே கேட்காம நார்மலா இருக்காங்களான்னு அவங்க எழும்பினதுக்கு அப்புறம் எனக்கு சொல்லுங்க”
என்றார் டாக்டர்.
“என்ன டாக்டர் சொல்றீங்க இப்படி எல்லாம் கூட இருக்குமா நீங்க சொல்றத பார்த்தா எனக்கு ரொம்ப பயமா இருக்கு”
“பயப்படாதீங்க கௌதம் இப்போ கேன்சருக்கே மருந்து கண்டுபிடிச்சுட்டாங்க அப்படி இருக்கும்போது இது அந்த அளவுக்கு ஒரு பெரிய விஷயம் கிடையாது நீங்க துவாரகா எழுந்த பிறகு எப்படி ரியாக்ட் பண்றாங்கன்னு எனக்கு உடனே சொல்லுங்க அதுக்கப்புறம் தான் அவங்களோட கண்டிஷன் எந்த மாதிரி இருக்குன்னு நம்ம தெரிஞ்சுக்கிட்டு அதுக்கு ஏத்த மாதிரி அவங்களுக்கு ட்ரீட்மென்ட் பண்ண முடியும்”
என்றார் அமராந்தி.
“ஓகே டாக்டர் நான் கண்டிப்பா சொல்றேன்”
என்றவன் போனை வைத்துவிட்டு தன்னுடைய மனைவியின் அந்த சலனமற்ற முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!