கனவு -11
டாக்டருடன் பேசிவிட்டு போனை வைத்தவன் அங்கு கட்டிலில் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் தன்னுடைய மனைவியின் அந்த சலனமற்ற முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் கௌதம்.
அவனுக்கு ஒன்றுமே புரியவே இல்லை. தன்னுடைய மனைவியா இவ்வாறு நடந்து கொள்வது.
என்னவாயிற்று அவளுக்கு இந்த கனவு அவளுக்கு வந்ததுல இருந்து அவளுடைய நடவடிக்கை கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டதை நினைத்தவனுக்கோ வேதனையே மிஞ்சியது.
எப்படியாவது அவளை இதிலிருந்து சீக்கிரம் குணப்படுத்திவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
பின்பு அவள் அருகில் வந்து அவளுடைய தலைமுடியை கோதிவிட்டவன் தானும் படுத்துக் கொண்டான்.
அவனுடைய சிந்தனை முழுவதுமே அவனுடைய மனைவியே ஆட்சி புரிந்தாள்.
கண்களை மூடி ஆழ்ந்த யோசனையில் இருந்தவன் அப்படியே உறங்கியும் போனான்.
மறுநாள் காலையில் எழுந்த கௌதம் தன்னுடைய அருகில் மனைவி இல்லாமல் இருக்க திடுக்கிட்டு எழுந்தவன் அந்த அறை முழுவதும் தேடினான்.
பின்பு குளியல் அறையிலும் தேறினான்.
“எங்க போனா இவ காலையிலேயே ஆள காணோம் அச்சச்சோ நான் எப்படி இப்படி தூங்கி போனேன்.
வரவர உனக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம போயிட்டு கௌதம் துவாரகா இப்படி இருக்கிறதுக்கு கூட நீ தான் காரணம்.
இப்படியா பொறுப்பில்லாம இருப்ப அவ காலையில எந்திரிச்சதும் என்ன மாதிரி பீல் பண்ணானு கூட தெரியல.
ஒருவேளை அந்த குழந்தையை பத்தி மறக்காம அந்த குழந்தையை தேடி போயிட்டாளோ அச்சச்சோ”
என்று தலையில் அடித்துக் கொண்டவன் அறையை விட்டு வெளியேறப் போக அவனுடைய மனைவியோ பால்கனியில் இருந்து அறைக்குள் வந்தாள்.
அவளை பார்த்த பிறகு தான் அவனுக்கு மூச்சே சீரானது.
“ஹேய் துவாரகா இங்கதான் இருக்கியா நீ நான் பயந்தே போயிட்டேன்”
என்றவாறு பெருமூச்சு விட்டுக் கொண்டு கட்டிலில் பொத்தென்று அமர்ந்தான்.
அவளோ அவனை புரியாத பார்வை பார்த்தவள் கையில் உள்ள டீ கப்பை வாயில் வைத்து ஒரு சிப் பருகியவள்,
“என்ன ஆச்சு உங்களுக்கு நான் இங்கே இல்லாம எங்க போவேன் நீங்க தூங்கிட்டு இருந்தீங்க எனக்கு முழிப்பு தட்டிட்டுச்சி சரி இந்த குளிருக்கு டீ குடிக்கணும் போல இருந்துச்சு அதான் டீ காப்போட பால்கனியில நின்னு வேடிக்கை பார்த்துகிட்டே குடிச்சிக்கிட்டு இருந்தேன்.
உள்ள வந்து பார்த்தா நீங்க ஏதோ பேய பார்த்த மாதிரி இப்படி பதர்ரிங்க”
என்று அவள் வெகு இயல்பாக கூறினாள்.
அப்பொழுது அவளை நன்கு ஆராய்ந்தவன் அவள் டாக்டர் சொன்னது போல் நேற்று அங்கு நடந்ததை மறந்து விட்டாள் என்று நினைத்து நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டான்.
ஆனாலும் அவனுடைய மனது வேதனை கொண்டது.
தன்னுடைய மனைவி நேற்று நடந்ததை முற்றிலுமாக அவளுடைய நினைவில் இல்லாமல் போய்விட்டது என்றால் என்ன அர்த்தம்.
அவளுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது.
தான் அவளை சரியாக கவனித்துக் கொள்ள தவறிவிட்டோமோ என்றும் நினைத்தது வருந்தினான்.
“என்ன துவாரகா..
ஒன்னும் இல்ல எப்பவும் உனக்கு முன்னாடியே நான் தான் எழுந்துப்பேன் இன்னைக்கி நீ எழுந்து போயிட்டியா அதான் கொஞ்சம் பயந்து போயிட்டேன் மற்றபடி வேற ஒன்னும் இல்ல”
என்று சமாளித்தான்.
“கௌதம் உங்களுக்கு டீ வேணுமா நான் எடுத்துட்டு வரவா”
என்று துவாரகா கேட்டாதற்கு கௌதமும் சரி என்று சொல்ல அவள் அவர்களுடைய ரூமில் உள்ள கிச்சனுக்கு சென்று அவனுக்காக டீ தயாரித்துக் கொண்டிருந்தாள்.
அவள் சென்று விட்டாளா என்று பார்த்து உறுதிப்படுத்திக் கொண்டவன் அந்தக் காலை வேளையிலேயே டாக்டர் அமராந்திக்கு அழைப்பு எடுத்தான்.
“டாக்டர் நான் கெளதம் பேசுறேன் நீங்க சொன்ன மாதிரி துவாரகா நேத்து அங்க நடந்ததை அப்படியே மறந்துட்டா அவளுக்கு எதுவுமே ஞாபகம் இல்ல டாக்டர் அப்படி ஒரு சம்பவம் நடந்த மாதிரியே அவ காட்டிக்கல.
நேத்து அவ அந்த குழந்தையை தூக்கி வச்சிட்டு அழுததெல்லாம் அவளுக்கு எதுவுமே ஞாபகம் இல்லை டாக்டர். எப்பவும் போல ரொம்ப கேஷுவலா இருக்கா.
எனக்கு இதை நினைச்சு சந்தோஷப்படுறதா இல்ல துக்கப்படுறதான்னு தெரியலை டாக்டர்.
இதுக்கு நீங்கதான் ஏதாவது ஒரு வழி சொல்லணும் என் துவாரகாவுக்கு என்ன பிரச்சனை டாக்டர்”
என்று அவன் பரிதவிப்போடு கேட்டான்.
அதற்கு டாக்டரோ ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டவர் கௌதமிடம் பேச ஆரம்பித்தார்.
“மிஸ்டர் கௌதம் துவாரகா ஒரு ஆழமான உணர்வு குழப்பத்துல இருக்காங்க அவங்க பாக்குறது நடந்துக்கிறது இது எல்லாம் நிஜம் இல்லைன்னு சொல்ல முடியாது
அவங்க மனசுக்கு அது நிஜம் தான்.
நேத்து நடந்த பிரச்சினையில அந்த குழந்தையை துவாரகா கிட்ட இருந்து அவங்க பிடுங்கவும் அது அவங்கள ரொம்பவே பாதிச்சிருக்கு.
தனக்கு சொந்தமான ஒரு பொருளை மத்தவங்க நம்மளோட அனுமதியே இல்லாம நம்ம கிட்ட இருந்து பிடுங்குனா நம்மளுக்கு எவ்வளவு கோபம் வரும் அதேதான் நேத்து துவாரகா வெளிகாட்டி இருக்காங்க.
அது அவங்களோட பொருள் இல்ல தான் ஆனா துவாரகா இப்ப இருக்கிற நிலைமையில அந்த குழந்தையோட அம்மா அவங்க கிட்ட இருந்து பிடுங்குனதுனால அவங்க சடனா அப்படி ரியாக் பண்ணி இருக்காங்க.
துவாரகா ஏற்கனவே அவங்க கனவ பத்தி என்கிட்ட சொல்லி இருக்காங்க அதுல அவங்களோட ஹஸ்பண்டை இன்னொரு பொண்ணு பறிச்சிக்கிறா அதை துவாரகாவால ஏத்துக்கவே முடியல.
அந்த கனவுல கூட அவங்க ஹஸ்பண்ட் அந்த இன்னொரு பொண்ணு பேச்சு கேட்டு துவாரகாவ ஒதுக்கி தள்ளிடுறாரு அதுவும் போக துவாரகாவ கொலை கூட பண்ணிறாரு இந்த விஷயங்கள் துவாரகாவோட ஆள் மனசுல ரொம்ப ஆழமாக பதிஞ்சு போய் இருக்கு.
நீங்க துவாரகாவ கொஞ்சம் கவனமா பார்த்துக்கோங்க இந்த மாதிரி சம்பவங்கள் இனிமே நடக்காத மாதிரி கவனிச்சுக்கோங்க முடிஞ்ச வரைக்கும் அவங்களை எவ்வளவு ஹாப்பியா பார்த்துக்கணுமோ அவ்வளவு ஹாப்பியா அவங்கள பார்த்துக்கோங்க. இந்த ஹனிமூன் ட்ரிப்ப நல்லா என்ஜாய் பண்ணுங்க.
உங்க லைஃப்லயும் ஒரு குழந்தை வந்துட்டா மேபி துவாரகாவோட அந்த தனிமை ஃபீல் கொஞ்சம் குறைய வாய்ப்பிருக்கு அதுவே அவங்கள சீக்கிரமா குணப்படுத்தும்.
ஆனா திரும்பவும் சொல்றேன் கௌதம் மறுபடியும் இதே மாதிரி ஒரு பிரச்சனை நடக்காம பார்த்துக்கோங்க அது உங்க கைல தான் இருக்கு”
என்றார் டாக்டர் அமராவதி.
அவரிடம் சரி என்று சொல்லி வைத்து விட்டவன் திரும்ப,
அவனுடைய மனைவியோ கையில் டீ கப்போடு அவனையே முறைத்துக் கொண்டு நின்றாள்.
‘என்ன துவாரகா இப்படி நிக்கிறா ஒரு வேலை நம்ம பேசினதை கேட்டு இருப்பாளா’ என்று யோசனை யோடு அவன் நின்று கொண்டிருக்க துவாரகாவோ,
“கெளதம் நீங்க வரவர ரொம்ப மோசம் எப்போ பாரு போன்லயே இருக்கீங்க என்ன கண்டுக்கிறதே கிடையாது போங்க கௌதம் நான் உங்க மேல கோவமா இருக்கேன்.
நம்ம எதுக்காக இங்க வந்தோம் ஆனா நீங்க இந்த போன் கூடவே எனி டைம் இருக்கீங்க”
என்று மூஞ்சை தூக்கி வைத்துக் கொள்ள கௌதமோ உஃப் என்று ஊதியவன்,
“அடடா என் பொண்டாட்டிக்கு இப்படி எல்லாம் கோபப்பட தெரியுமா இது தெரியாம போச்சே”
என்றவன் அவளை நெருங்கி வந்து அவள் கையில் உள்ள டீ கப்பை வாங்கி அங்கு உள்ள டேபிளில் வைத்தவன் அவளுக்கு பின் பக்கமாக நின்று அவளை அணைத்துக் கொண்டான்.
“சாரி தூவாரகா என் மேல தான் தப்பு நான் ஒத்துக்குறேன் தப்பு பண்ணவங்க தண்டனை அனுபவிச்சு தானே ஆகணும் சொல்லு நீ என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன்”
என்று கொஞ்சும் குரலில் கூறினான் கௌதம்.
அவனுடைய இந்த செயலில் அவளுடைய வதனமோ புன்னகையை தத்தெடுத்துக் கொள்ள அதை அவனிடம் காட்டிக் கொள்ள மறுத்தவள்,
“ஆமால்ல தப்பு பண்ணவங்க தண்டனை அனுபவிச்சு தான் ஆகணும் என்ன தண்டனை கொடுக்கலாம் உங்களுக்கு நீங்க ஒன்னும் சின்ன தப்பு பண்ணல ரொம்ப பெரிய தப்பு பண்ணி இருக்கீங்க அதனால உங்களுக்கு தண்டனையும் பெருசா தான் இருக்கணும்”
என்று சொன்னவள் நாடியில் விரலை வைத்துக் கொண்டு மேலே பார்த்து யோசித்துக் கொண்டிருக்க அவளுடைய இந்த சிறுபிள்ளைத்தனத்தில் தொலைந்தவனோ அவளுடைய கழுத்து வளைவில் தன்னுடைய இதழ்களால் ஊர்வலம் போக ஆரம்பித்தான்.