கனவு -13
கௌதம் துவாரகாவை அழைத்துக் கொண்டு அங்கு சிம்லாவில் இருக்கும் இந்தியாவில் உள்ள பணக்காரர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் விரும்பி படிக்கும் எஸ் டி மிராஸ் இன்டர்நேஷனல் காலேஜில் தான் கௌதமின் சிஇஓ மகள் படிக்கிறாள்.
அந்த காலேஜின் அருகிலேயே பணக்காரர்கள் வந்து தங்கி தங்கள் பிள்ளைகளை பார்த்து செல்வதற்காகவே என்று இருக்கும் லக்சரி ஹோட்டலில் தான் அவரும் தங்கி இருந்தார்.
“வாவ் கௌதம் இந்த ஹோட்டல் சூப்பரா இருக்கு இந்த ஹோட்டலோட கூரை மேல அந்த பனி விழுறதை பார்க்கும்போது எவ்வளவு அழகா இருக்குல்ல”
என்று அதன் சுற்றுப்புற அழகில் மெய்மறந்து புகழ்ந்து கொண்டிருந்தாள் துவாரகா.
“ம்ம் ஆமா துவாரகா இந்த இடம் நீ சொன்ன மாதிரி ரொம்ப அழகா இருக்கு நம்ம சிஇஓ கிட்ட சைன் வாங்கிட்டு இன்னைக்கு ஃபுல்லா இங்கேயே இருக்கலாமா”
என்று அவளுடைய ஆசை அறிந்து அவன் கேட்க.
அவளோ அவனை ஆச்சரியமாக பார்த்தவள்,
“கௌதம் நிஜமாவா சொல்றீங்க இது ரொம்ப பெரிய ஹோட்டலா இருக்கே இங்க தங்கனும்னா காசு அதிகமா இருக்குமே”
“அதை பத்தி நீ கவலைப்பட வேண்டாம் உனக்கு பிடிச்சிருக்குன்னா இந்த கௌதம் என்ன வேணா செய்வேன் காசை பத்தி எல்லாம் நீ கவலை பட கூடாது.
சொல்லு இங்கு இருப்போமா”
“நிஜமாவா கௌதம் எனக்கு இந்த இடம் உண்மையிலேயே ரொம்ப பிடிச்சிருக்கு எனக்கும் இங்க இருக்க ஆசையா தான் இருக்கு”
என்றாள் துவாரகா.
“அப்படியே ஆகட்டும் மகாராணி, தங்களுடைய ஆசை நிறைவேற்றப்படுகிறது”
என்று சொன்ன கௌதம் அவளை தோளோடு கையிட்டு அழைத்துச் சென்றான் சிஇஓ தங்கி இருக்கும் அறையை நோக்கி.
அவர்கள் இருவரையும் பார்த்த சி இ ஓ இன் முகமாக வரவேற்றார்.
“உக்காருங்க மிஸ்டர் அண்ட் மிஸஸ் கௌதம்”
இருவரும் அவரை பார்த்து புன்னகைத்து விட்டு அவர் எதிரில் போடப்பட்டிருக்கும் சோபாவில் அமர்ந்தார்கள்.
பின்பு கௌதம் நான் வைத்திருந்த ஃபைலை அவரிடம் நீட்டினான்.
அவரோ அதை வாங்கியவர்,
“வெரி குட் கௌதம் நீங்க ஹனிமூன் வந்திருக்கிறதா சொன்னாங்க ஆனாலும் உங்க வேலை மேல இருக்கிற பொறுப்பை நினைக்கும் போது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு அப்புறம் இந்த ப்ராஜெக்ட் உங்க டீம் ஒரு வாரமா ரொம்ப கஷ்டப்பட்டு ரெடி பண்ணதா கேள்விப்பட்டேன்.
கண்டிப்பா இது உங்களை அடுத்த லெவலுக்கு கொண்டு போக உதவியா இருக்கும்னு நினைக்கிறேன்”
என்று சொன்னவரோ அவன் கொடுத்த ஃபைலில் சைன் பண்ணி அவனிடம் கொடுத்தார்.
“ரொம்ப தேங்க்ஸ் சார்”
என்று ஃபைலை அவன் வாங்கிக் கொண்டிருக்க, அப்பொழுது அங்கு மாடியில் இருந்து ஒரு பெண்ணின் குரல் கேட்டது.
“நான் வந்துட்டேன் என்கிட்ட இருந்து தப்பிச்சிடலாம்னு நினைச்சிங்களா முடியவே முடியாது அவ்வளவு சீக்கிரம் என்கிட்ட இருந்து நீங்க தப்பிக்கவே முடியாது”
என்றவாறு மாடியில் இருந்த படியில் காலை வைத்தவளோ நிலை தடுமாறி கீழே விழ போனாள்.
அவளுடைய குரலை கேட்டு மூவரும் மேலே பார்க்கும் பொழுது அவள் விழப்போக,
“ஐயோ என் பொண்ணு”
என்று சிஇஓ கத்த நொடியில் சுதாரித்த கௌதமோ வேக எட்டுகள் வைத்து மாடிப்படியில் ஏறியவன் கீழே விழப்போன சிஇஓ மகளை தன்னுடைய கைகளில் தாங்கினான்.
இவர்கள் இருவரும் வருவதற்கு முன்பு தந்தையும் மகளும் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடி கொண்டிருந்திருப்பார்கள் போல.
அவளுடைய கண்கள் இரண்டும் கருப்பு நிற துணையால் கட்டப்பட்டிருந்தது. கௌதம் வரவும் சிஇஓ தன்னுடைய மகளை மறந்து இவர்களை வரவேற்று அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.
அவளோ அது தெரியாமல் தன்னுடைய தந்தையை தேடிக் கொண்டு வந்தவள் மாடியில் இருந்த படியை பார்க்காமல் காலை வைத்து விழப்போனவளை கௌதம் பிடித்துக் கொண்டான்.
“ஹலோ பார்த்து வர மாட்டீங்களா”
என்று சொல்ல வாய் எடுத்தவன் அவளுடைய இரு கண்களும் கருப்பு நிற துணியால் கட்டப்பட்டிருக்க,
“ஐ அம் சாரி”
என்று சொன்னவன் அவளுடைய கண்களை மூடி இருக்கும் திரையான அந்த கருப்பு நிற துணையை அகற்றினான் கௌதம்.
மீன் போன்ற வடிவில் இருக்கும் தன் கண்களை இவ்வளவு நேரம் அந்தக் கருப்பு துணியில் மறைத்து வைத்திருந்தவளோ மெதுவாக இமைகளைத் திறந்து பார்க்க கௌதமின் முகத்தை மிக அருகில் பார்த்தவளோ அதிர்ந்தாள்.
கௌதம் அவளை தன்னுடைய கைகளில் இருந்து விடுவித்தவன்,
“ஏங்க யாராவது கண்ணை கட்டிட்டு படியில இறங்குவாங்களா”
என்று கேட்டான்.
“ஓ சாரி நான் பார்க்கல நான் என் டாட் கூட ஹைடன் சீக் ப்ளே பண்ணிட்டு இருந்தேன் அதான் பார்க்காம வெளிய போயிட்டேன் எனிவே என்ன சேவ் பண்ணதுக்கு ரொம்ப தேங்க்ஸ்” என்றாள் அவள்.
கீழே நின்று கொண்டிருந்த அவளுடைய தந்தையோ,
“என்ன சாயராமா ஜாக்கிரதையா இருக்க மாட்டியா நீ மட்டும் கீழே விழுந்து இருந்தா என்ன ஆயிருக்கும் ஒரு நிமிஷம் நான் பயந்தே போயிட்டேன்”
“டேட் நீங்க என் கூட தானே ப்ளே பண்ணிட்டு இருந்தீங்க கீழ வந்ததை சொல்லி இருக்கலாம் இல்ல என்கிட்ட சொல்லாம வந்துட்டு இப்போ என்ன குறை சொல்றீங்களா”
சாரிடாமா இவங்க வரவும் நான் உன்னை மறந்துட்டேன்”
என்று அவர் சொல்லிக் கொண்டிருக்க அதற்குள் கௌதமும் சாயராவும் அவர்கள் அருகில் வந்தார்கள்.
“இவர் பெயர் கௌதம் நம்ம ஆபீஸ்ல தான் ஒர்க் பண்றாரு ஒரு சைன் வாங்குவதற்காக வந்திருந்தாங்க நான் கூட உன் கிட்ட சொல்லி இருந்தேனே வருவாங்கன்னு அதான் அவங்க வந்ததும் சட்டுன்னு உன்கூட ப்ளே பண்ணிக்கிட்டு இருந்ததை மறந்துட்டேன் சாரிடா”
“இட்ஸ் ஓகே டேட் நோ பிராப்ளம் அதான் என்ன கீழ விழ விடாம இவரு காப்பாத்திட்டாரே சோ ஐ எம் ஆல் ரைட் டோன்ட் வரி டேய்”
என்றாள் சாயரா.
“கௌதம் ரொம்ப தேங்க்ஸ் கௌதம் நீங்க என் பொண்ணை காப்பாத்தி எனக்கு பெரிய உதவி பண்ணி இருக்கீங்க அவளுக்கு மட்டும் ஏதாவது ஒன்னு ஆகி இருந்தா என்னால அதை தாங்கி இருக்கவே முடியாது ரொம்ப தேங்க்ஸ் கௌதம்”
என்றார் அவர்.
“ஐயோ பரவாயில்லை சார் இதுக்கு போய் எதுக்கு பெரிய வார்த்தை எல்லாம் பேசுறீங்க ஏதோ என்னால முடிஞ்சது”
என்றவனோ அப்பொழுதுதான் தன்னுடைய மனைவியின் புறம் பார்வையை திருப்பினான்.
அருகில் நின்று கொண்டிருந்த தன்னுடைய மனைவியின் அருகில் வந்தவன்,
“ஓகே சார் அப்போ நாங்க கிளம்புறோம்”
என்றவன் அவளுடைய கைபிடித்து அழைக்க அவளோ ஒரு இன்ச்சி கூட நகரவில்லை.
சிலை போல் நின்று கொண்டிருந்தாள்.
ஆனால் அவளுடைய பார்வை என்னவோ அங்கு மாடர்ன் உடையில் நின்று கொண்டிருந்த சாயராவின் மேல் பதிந்திருந்தது.
அவளிடம் இருந்து எந்த அசைவும் இல்லாமல் இருக்க அவளுடைய தோளைப் பற்றி உழுக்கிய கௌதமோ,
“துவாரகா என்ன ஆச்சு உனக்கு”
என்று கேட்டான்.
கௌதம் சிறிது நேரத்திற்கு முன்பு சாயரா அங்கு மாடிப்படியில் விழப்போக இவன் ஓடிச்சென்று அவளைத் தாங்கி பிடிக்கவும் துவாரகாவிற்கு ஒரு மாதிரியாகி போனது.
தன் கணவனுடைய அணைப்பில் வேறு ஒரு பெண்ணா என்று யோசித்துக்கொண்டிருந்த சமயம் கௌதம் சாயராவின் கண்களை கட்டியிருந்த அந்த கருப்பு துணையை நீக்க அவளுடைய முகத்தை பார்த்த துவாரகாவிற்கோ பேரதிர்ச்சியே.
இருக்காதா பின்னே.
இத்தனை நாள் கனவில் தனக்கும் தன் கணவனுக்கும் இடையே வரும் சேனபதி சாயரா உருவத்தில் அச்சு அசலாக இருந்த இந்த சாயராவை பார்த்து அவள் அதிர்ந்து போய் நின்று கொண்டிருக்க,
சிஇஓ சாயரா என்று பெயரைச் சொல்லி அழைக்கவும் அவளுக்கு கூடுதல் அதிர்ச்சியாக,
“அவளுடைய பெயர் சாயரா”
என்று அவளுடைய செவியை தீண்ட மொத்தமாக உடைந்து போய் நின்றாள் துவாரகா.
தான் கனவில் கண்ட பெண் நிஜத்தில் அதுவும் தான் அவளை பார்க்கும் பொழுது தன்னுடைய கணவனின் கைவளைவில் அவள்.
அவளால் இந்த நிமிடத்தை கடக்கத்தான் முடியவில்லை.
கௌதம் அவளை உழுக்கவும் சட்டென சுய நினைவுக்கு வந்தவள்,
“கௌதம் வாங்க இங்க இருந்து போகலாம் இப்பவே. இப்பவே இங்கிருந்து போய் ஆகணும்”
என்று படபடத்தாள்.
அவளுடைய இந்த கூற்றில் திகைத்த கெளதமோ,
“என்ன துவாரகா சொல்ற இந்த இடம் உனக்கு புடிச்சிருக்கு இங்கு இன்னைக்கு இருக்கலாம்னு சொன்னியே இப்போ உடனே இங்கிருந்து கிளம்பனும்னு சொல்ற என்ன ஆச்சு உனக்கு”
என்று புருவங்கள் முடிச்சிட அவளை ஆராய்ந்தான்.
பொறுமை இழந்த துவாரகாவோ,
“உங்களுக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா கௌதம் எனக்கு இங்கிருந்து இப்பவே போய் ஆகணும்”
என்று அந்த அறையே அதிரும் அளவுக்கு கத்தினாள்.
கௌதமும் சிஇஓவும் துவாரகா கத்தியதில் அதிர்ந்து நிற்க ஆனால் சாயரா இவர்கள் இருவரும் அறியாமல் துவாரகாவை பார்த்து லேசாக இதழ் விரித்து சிரித்தாள் மர்மமாக.