கனவு -14
கௌதமும் துவாரகாவும் தாங்கள் தங்கி இருந்த ஹோட்டல் அறைக்கு வந்தார்கள்.
துவாரகாவோ அங்கிருந்து கிளம்பிய வேகத்தில் இங்கு தங்களுடைய அறைக்கு வந்ததும் அவள் வேக வேகமாக தங்களுடைய உடைமைகளை எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.
கௌதமுக்கோ ஒன்றும் புரியவில்லை அவளுடைய செயலினால்.
“துவாரகா என்ன ஆச்சு உனக்கு அதான் அங்கிருந்து வந்துட்டோமே இப்ப எதுக்கு நம்ம டிரஸ் எல்லாம் எடுத்து பேக் பண்ற”
“என்ன கௌதம் நீங்க சும்மா சும்மா என்ன கேள்வி கேட்டுகிட்டே இருக்கீங்க எனக்கு இங்க இருக்க பிடிக்கல இப்பவே நம்ம வீட்டுக்கு போகணும் அவ்வளவுதான்”
“அப்படி என்ன ஆச்சு துவாரகா இங்க”
என்று அவன் கேட்டு அதற்கு அவளுடைய முறைப்பை பரிசாக வாங்கினான் கௌதம்.
ஆனால் அவள் பதில் ஏதும் சொல்லாமல் தன்னுடைய வேலையை பார்த்துக் கொண்டிருக்க கௌதமுக்கோ அவளுடைய செயலுக்கு உடன்படுவதை தவிர வேறு வழி இல்லை.
இங்கு சாயராவோ அவர்கள் அங்கிருந்து சென்றதும் தன்னுடைய அறைக்கு வந்தவள் கதவைப் பூட்டுவிட்டு சந்தோஷத்தில் துள்ளி குதித்தாள்.
“ஓஹோ வாவ் கௌதம் என்னுடைய கௌதம் என்னுடைய கௌதமாதித்தனை நான் பார்த்துட்டேன். இனி ஒரு நிமிஷம் கூட என்னால உன்னை பிரிந்து இருக்க முடியாது ஆதித்தன்.
அதே உருவம் அதே உடம்பு பிடி அப்பா இப்பொழுது நினைத்தால் கூட என்னுடைய உடம்பு சிழிற்கிறது. தங்களை எவ்வாறு கண்டுபிடிக்க போகிறேன் என்று பலமுறை யோசித்து யோசித்து திணறிப் போய் இருக்கிறேன் ஆனால் தாங்களே என்னை தேடி வந்து என்னை அதிர்ச்சிக் குள்ளாக்குவீர்கள் என்று சிறிதும் நான் எதிர்பார்க்கவே இல்லை எதிலிருந்த என்னை தங்களுக்கு தெரியவில்லையா தங்களுக்கான சரிபாதி ஆனவள் நான்தான். அந்த அமையாதேவி கிடையாது.
அந்த ஜென்மத்தில் உங்களை நான் பறிகொடுத்து இருக்கலாம் ஆனால் இந்த ஜென்மத்தில் யாராலும் ஏன் உங்கள் பத்தினி அந்த அமையாதேவியாலும் கூட முடியாது எப்படியாயினும் தங்களுடன் ஒன்று சேர்ந்தே தீருவால் இந்த சேனாபதி சாயரா காத்திருங்கள் ஆதித்தன் விரைவில் உங்களை வந்து சந்திக்கின்றேன் அந்த அமையாதேவிக்கும் ஒரு முடிவை கட்டுகிறேன்.
இன்றைக்கு அவளுடைய செயலை பார்த்தால் அவளுக்கும் பழைய ஜென்மத்து ஞாபகங்கள் திரும்ப வந்துவிட்டது போல் தான் தெரிகிறது. அதுவும் நல்லதுக்கு தான் அவளுக்கு பழைய நினைவுகள் தெரியாவிட்டால் என் புருஷன் எப்படி நான் விட்டுச் செல்வேன் என்று பல போராட்டங்கள் செய்வாள்.
அந்த ஜென்மத்துலையும் அப்படி செய்துதான் என்னிடமிருந்து தங்களை பிரித்து விட்டாள்.
ஆனால் இந்த ஜென்மத்தில் அவளிடம் இருந்து தங்களை பிரித்தே தீருவேன் இந்த சாயரா வருகிறேன் ஆதித்தன்”
என்றாள் சாயரா.
இங்கு துவாரகாவுக்கோ சாயராவை அங்கு பார்த்ததிலிருந்து அவளால் இயல்பாக இருக்கவே முடியவில்லை.
அவள் தன்னுடைய கணவனை தன்னிடம் இருந்து பிரித்து சென்று விடுவாளோ.
தன் கணவன் அவள் பேச்சைக் கேட்டு தன்னை கொன்று விடுவானோ.
தான் கனவில் கண்ட அனைத்தும் நிகழ்ந்து விடுமோ.
என்று பலவாறு சிந்தித்துக் கொண்டே இருந்தாள்.
இந்த இரண்டு நாட்களும் சிம்லாவில் அவனுடன் தனிமையில் நேரத்தை கழித்தவள் சற்றே அந்த கனவை மறந்து இருந்தாள்.
ஆனால் சாயராவை பார்த்த கணம் முதல் மறந்து போன அந்த கனவுகள் மீண்டும் அவளுடைய நினைவில் உயிர் பெற்றன.
அதன் விளைவு அவளை ஒரு பைத்தியக்காரி என்று சொல்லும் அளவுக்கு அவளைக் கொண்டு சென்றது.
கொஞ்சம் கூட அவள் தூங்காமல் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டே இருந்தாள் அவளுடைய நினைவுகள் அந்த கனவை நோக்கி போகக் கூடாது என்று.
ஆனால் அவள் அந்த கனவை பற்றி நினைக்கவே கூடாது என்று யோசித்து யோசித்து அது மட்டுமே அவளுடைய நினைவில் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொண்டது.
ஆனால் அவள் ஒன்றில் மட்டும் தெளிவாக இருந்தாள்.
தான் உறங்கக் கூடாது உறங்கினால் அந்த கனவு வந்து விடுமோ அந்த கனவில் இன்னும் என்னென்ன காட்சிகள் தனக்கு தெரியுமோ என்று பயந்து போனவள் தன்னுடைய தூக்கத்தை முற்றிலுமாக தொலைத்தாள்.
கௌதமுக்கோ அவளை இப்படி பார்க்கவே முடியவில்லை.
அவளுடனே இருந்தவன் அவள் தூங்காமல் விழித்துக் கொண்டிருப்பதை பார்த்து கவலை உற்றவன் அவளை தூங்கச் சொல்ல அவளோ,
“இல்ல கவுதம் நான் தூங்க மாட்டேன் நான் தூங்க மாட்டேன் தூங்கினா அந்த கனவு வரும் என்னால தூங்க முடியாது நீங்க தூங்குங்க”
என்று அவனைத் தூங்கச் சொன்னாள்.
“என்ன துவாரகா இப்படி அர்த்தமில்லாம பேசுற எல்லாத்துக்கும் தினமும் எல்லாம் கனவு வராதுமா நீ இப்படி தூங்காம இருந்தா உன்னோட உடம்பு தான் கெட்டுப் போகும்.
நீ தூங்கு உனக்கு அந்த கனவு வராது நான்தான் சொல்றேன்ல”
“உங்களுக்கு என்ன தெரியும் நீங்க எப்படி சொல்றீங்க அந்த கனவு வராதன்னு அது வரும் கண்டிப்பா வரும் நான் எப்ப தூங்க வேன்னு பார்த்து இருந்து அந்த கனவு வரும்.
இந்த ரெண்டு நாள் தான் நான் அந்த கனவை பத்தி நினைக்காம கொஞ்சம் சந்தோஷமா இருந்தேன் ஆனா அவளை அங்க பார்த்த நிமிசத்துல இருந்து என் மனசும் மூளையும் அந்த கனவை தான் நினைச்சுக்கிட்டு இருக்கு.
எப்படி நான் கனவுல பார்த்த அந்த பொண்ணு நேர்ல வர முடியும் அப்போ அது கனவில்லையா நிஜமா இனி நடக்க போறது தான் எனக்கு கனவா வந்திருக்கா அப்போ நீங்க என்ன விட்டு பிரிஞ்சி அவ கிட்ட போயிருவீங்களா சொல்லுங்க கௌதம் சொல்லுங்க உங்களால என்ன விட்டு பிரிஞ்சு இருக்க முடியுமா”
“துவாரகா இன்னொரு தடவை இப்படி பேசின அடிச்சிருவேன் என்னடி பைத்தியம் மாதிரி உளர நீ என் பொண்டாட்டி டி என்னோட காதலி பத்து வருஷமா காதலிச்சி எவ்வளவோ கஷ்டங்களை அனுபவிச்சு அதுக்கு பிறகு தான் உன்ன கல்யாணம் பண்ணி இருக்கேன் அப்படி இருக்கும்போது இப்படி பைத்தியக்காரத்தனமா ஏதோ கனவு கண்டேன் பொண்ண பார்த்தேன் உன்கிட்ட இருந்து பிரிஞ்சி அவ கூட போயிருவேன்னு லூசு மாதிரி உளறிக்கிட்டு இருக்க.
இங்க பாரு அப்படி எதுவும் நடக்காது”
“இல்ல கெளதம் உங்களுக்கு தெரியாது அவ என்ன வேணா செய்வா உங்கள என்கிட்ட இருந்து கண்டிப்பா பிரிச்சு கூட்டிட்டு போயிருவா என்னால அதை ஏத்துக்க முடியாது நான் செத்துப் போயிருவேன் கௌதம் என்னால நீங்க இல்லாத ஒரு வாழ்க்கையை யோசிச்சு கூட பார்க்க முடியாது கௌதம் தயவு செஞ்சு என்னை விட்டு பிரிஞ்சு போயிராதீங்க”
என்று உடைந்து போய் அழ ஆரம்பித்தாள் துவாரகா.
கௌதமோ அவளுடைய நிலையை கண்டு நொந்து போனவன் அவளுக்கு என்ன சொல்லி அவளை தேத்துவது என்று அவனுக்கு புரியவில்லை.
தன் மார்போடு அவளை அனைத்தவன் அவளுடைய தலையை கோதி விட அந்த அணைப்பில் அடங்கிப் போனவள் நேரம் ஆக ஆக அவளுடைய கண்களோ தூக்கத்தை தழுவியது.
அவள் தூங்கிவிட்டாள் என்று உறுதி செய்தவன் மெதுவாக தன்னில் இருந்து அவளை பிரித்து எடுத்து மெத்தையில் கிடைத்துவிட்டு போர்வையை அவளுக்கு நன்கு போத்திவிட்டு தன்னுடைய மொபைலை எடுத்துக்கொண்டு வெளியே வந்தவன் டாக்டர் அமராந்திக்கு அழைப்பு எடுத்து அனைத்தையும் அவரிடம் கூறினான்.
அவரோ அவன் கூறிய அனைத்தையும் கேட்டுக் கொண்டவர்,
“என்ன கௌதம் நீங்க நான் உங்களுக்கு அப்பவே சொன்னேன் தானே இந்த மாதிரி இன்னொரு தடவை நடக்காம பாத்துக்கோங்கன்னு”
“ஐயோ டாக்டர் எனக்கு என்ன தெரியும் துவாரகா கனவுல பார்த்த பொண்ணு அங்க இருப்பாங்கன்னு இது ஒரு ஆக்சிடென்ட் எதிர்ச்சியா நடந்த விஷயம்”
“புரியுது கௌதம் ஆனா துவாரகாவோட நினைவு முழுவதுமே இப்போ அந்த கனவை பத்தி மட்டும் தான் யோசிச்சுக்கிட்டு இருக்கும் சரி இப்ப துவாரகா என்ன செய்றாங்க”
என்று டாக்டர் கேட்டார்.
“அவளை இப்பதான் டாக்டர் தூங்க வச்சேன் தூங்க மாட்டேன்னு ரொம்ப அடம் பிடிச்சா தூங்குனா அந்த கனவு வரும் நான் தூங்க மாட்டேன் அப்படின்னு சொல்லிக்கிட்டு இருந்தா ஆனா தூங்காம இருந்தா இன்னும் அவ அதையே நெனச்சுக்கிட்டு இருப்பான்னு தான் அவளை தூங்க வச்சுட்டு தான் நான் உங்ககிட்ட போன் பேசுறேன்”
“கௌதம் வாட் தூங்குறாங்களா ஐயோ கௌதம் என்ன காரியம் செய்து இருக்கீங்க”
என்று கேட்டார் டாக்டர் அமராந்தி.
“ஏன் டாக்டர் அவ தூங்கின என்ன”
“கௌதம் உங்கள பொருத்தவரைக்கும் துவாரகா சாதாரணமா கனவு காண்கிறாங்கன்னு தான் நீங்க நினைச்சுக்கிட்டு இருக்கீங்க ஆனா அது அவங்க மனசுலயும் மூளையையும் ஒரு பெரிய தாக்கத்தை உண்டு பண்ணி இருக்கு இதனால அவங்க கோவமாவுக்கு போக கூட வாய்ப்பு அதிகமா இருக்கு கௌதம்”
என்று டாக்டர் சொல்ல அதைக் கேட்டு அதிர்ந்தான் கௌதம்.