கனவு -16
இரவில் மீன் பிடிக்க சென்றவர்களோ அதிகாலையில் கரைக்கு வந்தவர்கள் மீன்பிடி படகை கரையில் நிறுத்திவிட்டு வளையில் சிக்கி இருக்கும் மீன்களை எடுத்து கரைக்கு மாற்றிக் கொண்டிருந்த தொழிலாளிகளோ தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தன.
“நம் அரசர்கிட்ட நம்மளோட பிரச்சனையை சொல்லிட்டோம். அவரும் பார்த்துக்குறதா சொல்லி இருக்காரு அதனால நம்பி இன்னைக்கு நம்ம பொழப்ப நடத்தலாம் என்று நினைக்கிறேன்”
என்று ஒருவர் சொல்ல மற்றொருவரோ,
“ஆமாம் அய்யா நம்ம அரசர் இந்த சின்ன வயசுலயே எந்த ஒரு பிரச்சினையும் சாதுரியமாக கையாளும் திறமை கொண்டவர்.
அப்படி இருக்கும் பொழுது நம்முடைய பிரச்சினையை அவர் கேட்டு அறிந்து கண்டிப்பாக நமக்கு உதவி செய்வார்”
என்றார் மற்றவர்.
மற்றும் ஒருவரோ,
“இன்றைக்கு மட்டும் அந்த திருடன் வரட்டும் நம்ம அரசர் கிட்ட சரியா மாட்டி அவனோட நிலைமை என்ன ஆகப்போகுதோ தெரியல”
என்று ஆளாளுக்கு ஒவ்வொன்று பேசிக்கொண்டு மீன்களை கூடையில் எடுத்து போட அதுகளோ அப்பொழுதுதான் தண்ணீரில் இருந்து பிடித்தது போல துள்ளிக் கொண்டிருந்ததன.
அனைவரும் மீன்களை எடுத்து போட்டு திரும்ப ஐயோ பாவம் இரவெல்லாம் கஷ்டப்பட்டு பிடித்த மீன்கள் வழக்கம் போல அங்கு இல்லாமல் மாயமாக மறைந்து போனது.
அதை கண்ட மீனவத் தொழிலாளர்களோ தலையில் அடித்துக் கொண்டு,
“ஐயோ ஐயோ ஐயோ ஐயோ போச்சே நம்ம கஷ்டப்பட்டு பிடிச்ச மீன் எல்லாம் போச்சு”
என்று வாயில் வயிற்றில் அடித்துக் கொண்டு குழம்பிக் கொண்டிருக்க அந்த மீன்களை எங்கிருந்து அவர்கள் பிடித்தார்களோ அதே கடலில் மீண்டும் அவைகளை கொட்டி அதுகளுக்கு உயிர் கொடுத்த அந்த மர்ம நபரோ இவ்வளவு நேரமும் சுவாசத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்த அந்த மீன்கள் தண்ணீரில் விழுகவும் துள்ளிக் குதித்துக் கொண்டு நீந்தி போவதை பார்த்த அந்த மர்ம மனிதரோ புன்னகைத்துக் கொண்டிருந்தார்.
வழக்கம்போல் தான் வந்த வேலை நல்லபடியாக யாருக்கும் தெரியாமல் முடிந்து விட்டது என்று நினைத்து அங்கிருந்து நகர போக அந்த மர்ம நபரின் கைமுட்டியை வலுவாக பிடித்து இழுத்தன ஒரு வழிய கரம்.
யார் என்று அந்த மர்ம நபர் பார்க்க அங்கோ ஆறு அடிக்கு சற்றும் குறையாத உயரத்தில் ஒரு வலிய ஆண்மகன் அதுவும் அவர்கள் நாட்டின் அரசனே அங்கு நிற்க,
அதை பார்த்து சற்று பயந்து போன அந்த மர்ம நபரோ அச்சம் கொண்டார்.
“என்ன உன்னை யாரும் பார்க்கவில்லை என்று நினைத்தாயோ யார் நீ முதலில் உன் முகத்தை மூடி இருக்கும் அந்த திரையை விளக்கு”
என்று அதிகாரமாக உரைத்தான் கெளதமாதித்தன்.
அந்த மர்மநபரோ முடியாது என்று தலையை இடவலமாக ஆட்டியவர் மன்னனின் கைப்பிடியில் இருந்து விலக போராடினான்.
மன்னனின் பிடியோ உடும்பு பிடியாக இருக்க அந்த மர்ம நபரால் சிறிது கூட அசைக்க முடியவில்லை.
“என்ன நினைத்தாய் என்னுடைய பிடியில் இருந்து தப்பித்து விடலாம் என்று நினைத்தாயோ உன்னால் முடியவே முடியாது”
என்று கூறிய கௌதமாதித்தன் தன்னுடைய மற்றொரு கையால் அந்த மர்ம நபர் முகத்தை மறைத்திருந்த திரையை விளக்கினான்.
முகத்தை மறைத்திருந்த திரை விலகியதும் அந்த முகத்தைப் பார்த்த கௌதமாதித்த மன்னனோ சற்று அதிர்ந்து போய் நின்று விட்டான்.
இருக்காதா பின்னே அந்த மர்ம நபர் ஒரு ஆண் என்று மன்னன் நினைத்திருக்க அங்கு நின்றதோ பதினாறு வயது நிரம்பிய பருவ மங்கை அவள்.
மன்னன் கையில் வாளோடு, திருடன் என்று நினைத்து நிமிர்ந்த பார்வையால் அவளை நோக்கிய அந்த கணம், அவனது சுவாசமே நின்றது.
அவள் முகம் மங்கலான நிலவொளியில் புது மலர் இதழைப் போல மிருதுவாக இருந்தன.
பார்வையில் பனித்துளி பாய்ந்த மஞ்சள் மலரைப் போல மினுங்கும் கண்ணுகள்,
சிறிது பயமும், சிறிது வியப்பும் கலந்த அந்த வெளிப்பாடு, ஒரே நேரத்தில் அவனை மயக்கி விட்டது.
அவள் நெற்றியில் மெல்ல சுருண்டு விழுந்த கருநிற கூந்தல் ஒரு பக்கம் கன்னத்தை வருட,
கன்னங்கள் ஆழ்ந்த செம்மை பூத்திருந்தன.
கன்னத்தின் மீது நிலவொளி சாய்ந்து, அது பொற்கோலம் பூசியது போல் தோன்றியது.
அவள் உதடுகள் இளநீர் சொட்டின் இனிமை கலந்த சிவப்பு,
சொல்ல வார்த்தைகள் இருந்தும் சொல்லத் தயங்கும் பதுமையின் அழகுடன் இருந்தது.
அந்த மங்கையின் முகம்,
“திருடன்” என்று அவன் நினைத்த இடத்தில்,
“தேவி” என்று நெஞ்சை வணங்கச் செய்தது.
இப்பொழுது அவள் உடலை மறைத்திருந்த அந்த கருப்பு நிற துணியை அவளுடைய கூர் வழிகளை பார்த்துக் கொண்டு விளக்கினார் மன்னன் கௌதமாதித்தன்.
அவளுடைய முகத்தை மட்டும் பார்த்தவன் அப்படியே இருந்திருக்கலாம் வீணாக அவளுடைய உடலை மூடிய அந்த திரையை விலக்கிய மன்னன் கௌதமாத்தனின் இதயமோ அந்த கணம் தாளம் தப்பி துடிக்க தொடங்கின.
பெண்ணா அவள்.
அவள் வயது பதினாறு தான் ஆனாலும், இயற்கையே கைவண்ணம் தீட்டிய சிற்பம் போல அவளுடைய உடல் வடிவம் இருந்தது.
நீண்ட நாட்களாக வானத்தில் சுழலும் மெல்லிய மேகங்கள் போல, அவளுடைய தோள்கள் மென்மையான வளைவுடன் கீழிறங்கி இருந்தன.
இடுப்பில் ஓரளவு மெல்லிய வளைவு, அது மேலிருந்து கீழ் பார்வையைப் பிரித்துப் பிடிக்கும் விதமாக இருந்தது.
அவளுடைய தோல் நிறம், வெண்ணிலாவின் மங்கலான ஒளியால் தழுவப்பட்ட பால் வெண்மை போல. வெயிலின் தீக்கதிரும் அதைக் காயவோ, கருவோ செய்ய முடியாத மென்மை. காற்று தொட்டாலே மெல்ல அசையும் பனித்துளி போன்ற சின்னக் கை விரல்கள், விரல்கள் முடியும் இடத்தில் கூட பசுமை மலர்களின் நறுமணம் பரவியது போல தோன்றியது.
அவள் நின்ற விதமே, ஒரு வில்லின் நூல் நன்றாக இழுக்கப்பட்டு நிமிர்ந்திருப்பது போல உறுதியானதாயும், அதேசமயம் மழைத்துளி விழும் தருணத்தில் இருக்கும் மென்மையாயும் இருந்தது.
அந்த சிறு வயதின் அழகு, கண்ணால் பார்க்கும் ஒருவரின் மனதில் மறக்க முடியாத ஓர் ஒவியத்தைப் பதித்தது. அவனோ அவள் மேல் பதித்த பார்வையை சற்று கூட விளக்க முடியவில்லை.
அவள் இடைவளைவு மெல்லிய காற்றில் அசையும் இளநீர்க் கொம்பைப் போல நெகிழ்ந்து நிற்க,
அதில் தங்கியிருந்த அந்த இயற்கை வடிவம் கண்களுக்கு மாயையைப் போல் தோன்றியது.
ஆடையின் மெல்லிய அசைவும், இடைவளைவில் விழுந்த ஒளிச்சாயலும் சேர்ந்து, அந்த அழகை மேலும் கூர்மையாக்கியது.
மன்னன் அவளைப் பார்த்த அந்த கணமே, உலகம் சுற்றுவது நின்றதுபோல் ஆனது.
அவளின் இடையழகைத் தழுவிய பார்வை, ஒரு நதி நீரின் ஓட்டத்தைப் போல மென்மையாக, ஆனால் அடங்காத வலிமையுடன் பாய்ந்தது.
அது திரும்பவே முடியாத ஓர் இழுப்பு. அந்த வளைந்த அழகை விட்டு விலகுவது, உயிரை பிரிக்கிற துன்பம் போல.
அவன் உள்ளத்தில் அடங்காத ஏக்கம் எழ, சுவாசமே கனமாகியது.
பார்வை மெல்லப் பருகிக்கொண்டே, ஒவ்வொரு நொடியும் அவனின் உள்ளத்தைக் கவர்ந்திழுத்தது.
அந்த இடையில் பதிந்த மென்மையும், பூரண வட்டமும், அரசனின் கண்ணை சங்கிலியால் கட்டியபடி வைத்தது.
அவள் அசைவின் ஒவ்வொரு அலைவும், மன்னனின் மனதில் ஒரு போர் வெடித்தது.
பார்க்க வேண்டுமா? விலக வேண்டுமா?
ஆனால் அந்த போர் தோல்வியடைந்தது. பார்வை எப்போதும் அவளிடமே சிக்கிக்கொண்டது.
வெகு நேரம் மன்னன் அவளை பார்வையாளையே ருசித்துக்கொண்டிருக்க அந்தப் பார்வையின் வீச்சை தாங்க முடியாத மங்கை அவளோ,
“என்னை விடுங்கள்”
என்று அவள் குரல் கொடுக்க அதில் இவ்வளவு நேரமும் அவளுடைய அழகில் கட்டுண்டு கிடந்த மன்னனோ சுயநினைவு பெற்றான் போல.
“பெண்ணே யார் நீ இப்படி மீன் பிடி தொழிலாளிகர்களின் பிழைப்பில் மண்ணை அள்ளி போடுகிறாயே இதனால் அவர்கள் குடும்பம் எவ்வளவு வறுமையை சந்திக்கும் என்று நீ அறிய வில்லையா”
“நான் அறிவேன் மன்னா ஆனால் அவர்கள் குடும்பம் வறுமையில் வாட கூடாது என்பதற்காக பாவம் இந்த மீன்களை கொள்ளுவதா அதுகளுக்கும் குடும்பங்கள் இருக்குமல்லவா அதுகளும் பாவமில்லையா சொல்லுங்கள் மன்னா”
அவளுடைய இந்த கூற்றில் திகைத்த மன்னனோ அவளின் சிறுபிள்ளை தனத்தை வெகுவாக ரசித்தான்.
இந்த மீன்களுக்காக இரக்கப்படும் அவளுடைய குனம் கௌதமாதித்தனை அவள் பால் இழுத்தான்.