கனவு -17
“நீ பண்ண வேலைகளால் அவர்களின் தொழிலில் எவ்வளவு பாதிப்பு தெரியுமா உன்னால் அவர்களுடைய வறுமையை எவ்வாறு போக்க முடியும் அதை யோசித்துப் பார்த்தாயா நீ”
“தாங்கள் இந்த நாட்டின் அரசர் தானே அவர்களுக்கு நீங்கள் வேறு தொழில் செய்வதற்கு ஏற்பாடு செய்து கொடுக்கலாமே”
“ஆக இப்பொழுதும் நீ செய்தது தவறு என்று உனக்கு உரைக்கவில்லை என்னிடமே மேல் வாதம் செய்து கொண்டிருக்கிறாய்”
“என் மேல் என்ன தவறு உள்ளது மன்னா என்னால் ஒரு உயிர் துன்புறுவதை கண் கொண்டு பார்க்க இயலவில்லை ஆகையால் தான் இவ்வாறு செய்தேன். இதற்கு தாங்கள் எனக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் கூட அதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்வேன். ஆனால் மீண்டும் அவர்கள் இந்த தொழிலை செய்தால் நான் மறுபடியும் மீன்களைப் பிடித்து கடலில் விட தான் செய்வேன்”
அவளுடைய இந்த தீவிரமான பேச்சைக் கேட்டு மன்னனின் புருவங்கள் மேல் எழும்பி அவளை ஆச்சரியமாக பார்த்தன.
தான் ஒரு மன்னன் என்றும் அவளுக்கு தெரியும் ஆனாலும் என்னிடம் கொஞ்சம் கூட அவளுக்கு பயம் இல்லாமல் தான் செய்வது சரியே என்று வாதிடுகிறாள். அவளை நினைத்து மெச்சிக்கொண்டான் கௌதமாதித்தான்.
“இங்கு பாரு பெண்ணே ஆமாம் உனது நாமம் என்ன”
“எனது நாமம் அமையாதேவி”
‘அமையாதேவி அவளை போலவே அவளுடைய நாமமும் அழகாகவே இருக்கிறது’
என்று தனக்கல் கூறிக் கொண்டவன்,
“எங்கு வசிக்கிறாய் நீ”
என்று கேட்டான்.
தங்களின் கோட்டைக்கு சற்று தொலைவில் இருக்கும் மண்பானை செய்து கொண்டிருக்கும் இடத்தில் தான் நான் வசிக்கிறேன் மன்னா”
“இப்பொழுதும் உன்னை நான் சிறையில் போட போகிறேன் இதற்குப் பிறகு எவ்வாறு நீ அவர்களுடைய தொழிலை செய்ய விடாமல் தடுக்கிறாய் என்று பார்க்கிறேன்”
என்றுரைத்தான் கௌதமாதித்தன்.
அதைக் கேட்டு அவளுடைய விழிகளோ கலங்கின.
தன்னை சிறையில் இடப் போகின்றான் என்று வந்த கண்ணீர் இல்லை அவைகள்.
இத்தனை நாட்கள் அவர்கள் பிடிக்கும் மீன்களை திரும்பவும் கடலில் போட்டு உயிர் கொடுத்தாள்.
இப்பொழுது தன்னை சிறையில் இட்டால் அந்த மீன்களை எவ்வாறு காப்பாற்றுவது என்று நினைத்துதான் அவளுடைய கண்கள் கலங்கின.
அதை பார்த்த கௌதமாதித்தன்,
“இப்பொழுது அழுது என்ன பயன் நீ செய்த தவறுக்கு உன்னை சிறையில் வைத்து தான் ஆக வேண்டும் நீ அழுதால் மட்டும் உன்னை விட போவதே இல்லை பெண்ணே”
அவனை ஏரெடுத்து பார்த்த அமையாதேவியோ,
“மன்னா தாங்கள் என்னை சிறையில் இடுவதற்காக நான் கண்கள் கலங்கவில்லை இன்று தாங்கள் என்னை சிறையில் இட்டால் நாளை அவர்கள் பிடிக்கும் மீன்களை நான் எவ்வாறு காப்பாற்றுவது என்று நினைத்து தான் என்னுடைய கண்கள் கலங்குகின்றன”
அவளுடைய கூற்றில் அதிசயத்த கெளதமாதித்தனோ,
“உன்னை சிறையில் இடுவது உனக்கு பெரிதாக தெரியவில்லை ஆனால் அந்த மீன்களை காப்பாற்ற முடியவில்லை என்றுதான் நீ இப்பொழுதும் வருந்துகிறாய் உனக்கு ஏன் அந்த மீன்கள் மேல் இவ்வளவு விருப்பம்”
“எனக்கு நன்றாக நினைவு தெரிந்ததிலிருந்து இந்த மீன்களோடு தான் அதிக நேரம் என்னுடைய நேரத்தை செலவிடுவேன். எங்கள் குடிசையின் அருகில் கடல் தான் உள்ளது.
அதனால் நான் அதிக நேரம் கடலில் விளையாடும் பொழுது இந்த மீன்களும் என்னுடன் வந்து விளையாடும். அப்பொழுது ஒரு சமயம் என்னுடன் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறிய மீன் தண்ணீரில் இருந்து கரைக்கு பாய்ந்து விட்டது.
சற்று நிமிடமே ஆயினும் அது மூச்சுக்காற்றுக்கு ஏங்கியதை பார்த்ததும் நான் மிகவும் பதறி விட்டேன்.
ஆனால் அதை எப்படி காப்பாற்றுவது என்று எனக்கு அப்பொழுது தெரியவில்லை.
அது மூச்சுக்காற்றுக்கு ஏங்கி போராடி தன்னுடைய உயிரை விட்டுவிட்டது. பிறகு அதை பார்த்துக் கொண்டே நான் அழுது கொண்டிருந்தேன்.
அப்பொழுது என்னை தேடி வந்த எனது தாய் எதற்கு அழுகிறாய் என்று கேட்ட பொழுது நான் நடந்ததைக் கூறினேன். அதற்கு அவர் இதற்காகவா அழுகிறாய் அமையாதேவி இந்த சிறிய மீன் தண்ணீரை விட்டு வெளியே வந்ததனால் தான் சுவாசம் இன்றி இறந்து விட்டது நீ அதை பிடித்து தண்ணீரில் விட்டிருந்தால் அது இப்பொழுது உயிர் வாழ்ந்திருக்கும் என்று கூறினார்.
அந்த மீன் என்னுடன் விளையாடும் பொழுது தான் இறந்து விட்டது. அதை அப்பொழுது தண்ணீரில் விட வேண்டும் என்பது எனக்கு தெரியவில்லை. எனது தாய் வந்து சொன்ன பிறகு எனக்கு புரிந்தது.
அதன் பிறகு மீன்களைப் பிடிக்க மீனவர்கள் கடலுக்குச் சென்று எனது கண் முன்னையே அவைகளை துடிக்க துடிக்க அவர்கள் பிடித்துக் கொண்டு போவதை பார்க்கும் பொழுது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும்.
ஆனால் என்ன செய்வது நான் அப்பொழுது சிறுபிள்ளை ஆயிற்றே, அதனால் ஒன்றும் செய்ய முடியாமல் இருந்தேன்.
இப்பொழுதுதான் நான் வளர்ந்து விட்டேன் அதனால் இவர்கள் பிடிக்கும் மீன்களை மீண்டும் கடலில் விட்டு அவைகளுக்கு உயிர் கொடுக்கிறேன் இதில் என்ன தவறு உள்ளது மன்னா”
என்றாள் அமையாதேவி.
அவளுடைய சிறு குழந்தையின் மனதை நினைத்து பார்த்த கௌதமாதித்தனோ அவளை வெகுவாக ரசித்தான்.
பின்பு அவளுடைய கை பிடித்து அழைத்து வந்தவன் அங்கு தாங்கள் பிடித்து வந்த மீன்களை பறிகொடுத்த தொழிலாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி கொண்டிருக்க அவர்கள் அருகில் வந்தவன்,
“நீங்கள் இனி மீன் பிடிக்க செல்ல வேண்டாம் உங்களுக்கு அரண்மனையில் வேறு வேலை செய்வதற்கு நான் ஏற்பாடு செய்கின்றேன்.
தாங்கள் கவலை கொள்ள வேண்டாம் இப்பொழுது இங்கிருந்து செல்லுங்கள்” என்றான்.
“ரொம்ப நன்றி அரசே”
என்று உரைத்த அந்த தொழிலாளர்களோ அங்கிருந்து சென்றனர்.
அவன் கூறுவதை கேட்ட அமையாதேவியோ அவனை ஆச்சரியமாக பார்த்தாள்.
அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவன் அவளை அங்கேயே விட்டுவிட்டு போக அவளோ அவனைக் கேள்வியாக பார்த்து,
“மன்னா தாங்கள் என்னை சிறையில் அடைப்பேன் என்று கூறினீர்கள் இப்பொழுது இங்கேயே விட்டுவிட்டு செல்கிறீர்களே”
என்று கேட்டாள்.
அதற்கு புன்னகை பூத்த கௌதமாதித்தனோ அவள் புறம் திரும்பியவன்,
“உன்னை எப்பொழுதோ சிறையில் எடுத்து விட்டேன் அதை கூடிய விரைவில் நீ அறிவாய் இப்பொழுது நீ இங்கிருந்து செல்லலாம் அமையாதேவி”
என்றவன் அங்கிருந்து சென்று விட்டான்.
அவளுக்கோ ஒன்றும் புரியவில்லை அவன் என்ன கூறுகிறான் என்று.
தன்னுடைய விரிந்து கிடந்த கூந்தலை பின்னால் எடுத்துப் போட்டு விட்டு அவள் தன்னுடைய குடிசையை நோக்கி செல்ல அவள் போவதையே பார்த்த மன்னனோ தனக்குள் புன்னகைத்துக் கொண்டான்.
அரண்மனைக்கு வந்த மன்னனுக்கோ அவனுடைய சிந்தனை வேறெங்கும் பதிந்தது போல் தெரியவில்லை.
அமையாதேவி அவளுடைய முகமே அவனுக்கு வந்து கொண்டிருந்தது.
“என்ன ஒரு பெண் அவள் பார்ப்பதற்கு குட்டியாக தெரிகிறாள் ஆனால் அந்த பெண்ணிடம் என்னவோ உள்ளது. என்னை அவள் பால் அப்படியே இழுக்கிறது அமையாதேவி இனி தாங்கள் அந்த குடிசையில் இருக்க வேண்டியவள் அல்ல.
இந்த கௌதமாதித்தனின் ராஜ்ஜியத்தில் எமது சரி பாதியாக இருக்க வேண்டியவர் காத்திருங்கள். எமது இதயச் சிறையில் உங்களை எப்பொழுதோ சிறை பிடித்து விட்டேன்” என்று தன்னுடைய அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான் மன்னன்.
அப்பொழுது அவனுடைய அறைக்குள் வருகை தந்தனர் அவனுடைய அன்னையும் தந்தையும்.
அவர்களைப் பார்த்த கௌதமாதித்தனோ,
“அன்னையே தந்தையே தாங்கள் இருவரும் இந்த இரவு நேரத்தில் என்னை காண வந்த நோக்கம் என்னவோ”
என்று கேட்டான்.
உடனே அவனுடைய தந்தையோ,
“மகனே தாம் இப்பொழுது இந்த இளவாய் நாட்டிற்கே அரசனாகி விட்டாய் அதனால் உனக்கு திருமண ஏற்பாடு செய்யலாம் என்று நானும் உனது தாயும் முடிவு எடுத்து இருக்கிறோம்”
என்றார் அவர்.
“திருமணமா தந்தையே நானே உங்களிடம் இதைப்பற்றி பேச வேண்டும் என்று நினைத்திருந்தேன் ஆனால் தாங்கள் இருவருமே இப்பொழுது அதைக் கூறும் பொழுது நானும் நான் நினைப்பதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்”
என்ற கௌதமாதித்தன்,
“நான் அமையாதேவி என்ற ஒரு பெண்ணை நேசிக்கிறேன் இன்று தான் அவளைப் பார்த்தேன் பார்த்த கணம் முதல் என்னுள் ஆட்சி புரிகின்றாள் அந்தப் பெண்.
அதனால் தாங்கள் எனக்கு அமையாதேவியை திருமணம் செய்து வையுங்கள்”
என்று தன்னுடைய மனதில் இருப்பதை மறைக்காமல் தன் தாய் தந்தையிடம் கூறினான் கௌதமாதித்தன்.
இதற்கு அவர்கள் இருவருடைய பதில் என்னவாக இருக்கும்.