கனவு -20
“அத்தை மாமா தாங்கள் இருவரும் என்னிடம் ஒரு வார்த்தை கூட கூறாமல் இப்படி அத்தானுக்கு ஒரு ஏழை பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளீர்களே இது உங்களுக்கே நியாயமாக படுகிறதா.
சிறு வயது முதலே நான் அத்தான் மீது எவ்வளவு அன்பு வைத்துள்ளேன் என்று தாங்கள் அறியாததா நமது நாட்டின் வழக்கபடி திருமணத்திற்கு முன் ஒருவரை ஒருவர் சந்திக்கக் கூடாது என்பதற்காக தானே நான் இப்பொழுது வரை அத்தானை நேரில் சந்திக்கவே இல்லை.
ஆனால் தாங்கள் என்னிடம் எதையுமே கூறாமல் இப்பொழுது அவருக்கு திருமணத்தை செய்து வைத்துவிட்டு என்னிடம் வந்து கூறுவது இது எந்த விதத்தில் நியாயம்”
“இங்கு பாரம்மா சாயரா எங்களுக்கும் இந்த திருமணத்தில் முழுமையான உடன்பாடு இல்லை ஆனால் எங்கள் மகன் அரசாக ஆன பிறகு அவனிடம் எங்களால் வாதம் செய்யவும் முடியாது.
அவனே வந்து தான் எங்களிடம் அந்த பெண்ணை திருமணம் செய்து வைக்குமாறு கூறினான்.
எங்களுக்கும் வேறு வழி இல்லை ஆகையினால் தான் இந்த திருமணத்தை நடத்த வேண்டிய நிலை.
நீ புரிந்து கொள் எங்களை தவறாக எண்ணிக் கொள்ளாதே நாங்களும் நீதான் எங்களுக்கு மருமகளாகவும் எங்கள் இளவாய் நாட்டின் வருங்கால அரசியாகவும் வருவாய் என்று எவ்வளவு ஆசையாக இருந்தோம் ஆனால் அந்த பெண் அவனை எப்படியோ மயக்கி இப்பொழுது அவனுடைய மனைவியாகவே ஆகிவிட்டாள்”
“தாங்கள் என்ன கூறுகின்றீர்கள் அப்படி என்றால் இந்த திருமணம் நீங்கள் ஏற்பாடு செய்தது கிடையாதா”
“என்ன சாயரா இவ்வாறு கூறுகின்றாய் எங்களை பொறுத்தவரை நீதான் எங்களுக்கு மருமகளாக வரவேண்டும் என்று நினைத்திருந்தோம்”
இதைக் கேட்டதும் சாயராவின் முகம் மலர்ந்தது.
‘அப்படி என்று அந்த பெண் தான் ஏதோ செய்து தனக்கு சொந்தமாக இருந்தவனை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்’ என்று நினைத்துக் கொண்டாள்.
“அத்தை இப்பொழுதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை அந்தப் பெண்ணை துரத்தி விட்டு என்னிடமிருந்து பறிபோன என்னுடைய இடத்தை மீண்டும் கைப்பற்றுவேன்”
“என்ன கூறுகின்றாய் சாயரா கௌதமாதித்தன் அந்த பெண்ணை விரும்பி திருமணம் செய்து கொண்டுள்ளான் அப்படி இருக்கும் பொழுது நீ எப்படி அந்த பெண்ணை துரத்துவாய் அவன் உன்னை கொன்று விடுவான்”
“அப்படியா பார்க்கலாம் அத்தை அவர் என்னை கொள்கிறாரா இல்லை அந்தப் பெண்ணை கொள்கிறாரா என்று பார்க்கலாம்.
என்னை அவ்வளவு சாதாரணமாக நினைத்து விட்டீர்களா தாங்கள். நான் ஒரு பொருள் மீது ஆசை வைத்து விட்டேன் என்றால் அது எனக்கே கிடைத்து ஆக வேண்டும் அப்படி அது எனக்கு கிடைக்காமல் வேறு யாருக்கும் கிடைத்தால் அதை பார்த்துக் கொண்டு நான் சும்மா இருக்க மாட்டேன் மீண்டும் அதை என்னிடமே பறித்துக் கொள்வேன் அப்படி இருக்கும் பொழுது இத்தனை ஆண்டு காலமாக என் மனதில் அத்தானின் மீது அளவுகடந்த ஆசையை வளர்த்துக் கொண்டு என்னுடைய அத்தனை இன்று யாரென்றே தெரியாத ஒரு சாதாரண ஏழை பெண்ணுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு நான் பார்த்துக் கொண்டு இருப்பேனா. முடியவே முடியாது என் அத்தானை திருமணம் செய்து கொண்டு இந்த ராஜ்ஜியத்தை ஆளலாம் என்று நினைத்து வந்த அந்த பேதைப் பெண்ணை இனி அவளுடைய வாழ்வில் துன்பத்தை மட்டுமே சந்திக்க போகின்றாள் என் அத்தானே அவளை விரட்டி அடிப்பார் பார்த்துக் கொண்டே இருங்கள் அதை நிகழ்த்தி காட்டுவேன் இந்த சேனபதி சாயரா”
“எவ்வாறம்மா இது நிகழும் நீங்கள் இருவரும் இத்தனை ஆண்டுகள் வரை சந்தித்ததே இல்லை அப்படி இருக்கும் பொழுது இது எந்த வகையால் சாத்தியமாகும்”
“அத்தை இதுதான் எனக்கு கிடைத்த மிகப்பெரும் ஆயுதமாக கருதுகிறேன் அவர் முன் சென்று என்னுடைய அடையாளத்தை நான் காட்டிக் கொள்ளப் போவதில்லை இப்போதைக்கு. இப்பொழுது அரண்மனைக்கு ஒரு பணி பெண்ணாக மட்டுமே நான் அங்கு வருகை தர போகின்றேன் பின்பு நான் நினைத்த காரியத்தை செய்து முடித்த பின்பு தான் என்னுடைய உண்மையான அடையாளத்தை அனைவருக்கும் தெரியப்படுத்துவேன் தங்களும் அதுவரை என்னுடைய அடையாளத்தை வெளியிட வேண்டாம்.
அத்தை மாமா தாங்கள் இருவரும் இதே போன்று என்னுடன் எப்பொழுதும் இருங்கள் மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்”
என்றாள் கண்களில் கொடூரம் மின்ன.
அதைக் கேட்ட அவர்கள் இருவரும் ஆனந்தத்தோடு அவளை ஆசீர்வதித்தனார்.
புதியதாக இப்பொழுது தான் திருமண பந்தத்தில் இணைந்திருக்கும் அவர்கள் இருவரையும் பிரிப்பதற்காக இங்கு ஒரு சதி திட்டமே நடந்து கொண்டிருக்க ஆனால் இது எதுவும் அறியாத அந்த காதல் பறவைகளோ சந்தோஷமாக பறந்து கொண்டிருந்தன.
***
மாலை நேரம் அரண்மனையின் ஒரு இடத்தில் மந்திரச் சாயலை பரப்பியது.
வானத்தின் எல்லை, சூரியன் தன் பொற்குடையை மெதுவாக மூடி வைக்கும் தருணம் போல செம்பு, ஆரஞ்சு, ஊதா என கலந்த கனவுப் பரப்பாக மாறியிருந்தது.
அமையாதேவி அரண்மனையில் இதுவரைக்கும் அங்கு சென்றே இருக்காத ஒரு இடத்திற்கு அவளுடைய கண்களை ஒரு துணியால் கட்டியவாறு தன்னுடைய கைவளைவுக்குள் வைத்துக் கொண்டு அந்த இடத்திற்கு அழைத்துச் சென்றான் கௌதமாதித்தன்.
“மன்னா தாங்கள் என்னை எங்கு அழைத்துச் செல்கிறீர்கள் அதுவும் என்னுடைய விழிகளை கட்டிவிட்டு இது தங்களுக்கு சரியாக படுகிறதா தங்களை பார்க்காமல் என்னுடைய விழிகள் இந்த சிறையில் அடைப்பட்டு தவிக்கின்றது.
தாங்கள் விரைவில் அதற்கு விடுதலை அளித்தால் தங்களை கண்டு மகிழ்ச்சி பெரும் அல்லவா”
அவளுடைய பேச்சை கேட்டு அவனுடைய உள்ளமோ நெகிழ்ந்தது.
ஆனாலும் அவளுடைய இந்த காதல் மொழி பேச்சில் சிக்காமல் தந்திரமாக புன்னகைத்துக் கொண்டான்.
“அமைய தங்களுக்கு அவ்வளவு அவசரம் வேண்டாம் சற்றே காத்திரு இன்னும் இரண்டு அடிகள் எடுத்து வைத்தால் போதும்”
என்று கூறியவாறு அவளை அழைத்து வந்தான் கௌதமாதித்தன்.
அவளுக்காகவே ஏற்பாடு செய்திருந்த அந்த இடத்திற்கு வந்ததும்
அவள் விழிகளை இவ்வளவு நேரமும் தன் வசத்தில் வைத்திருந்த அந்த மெல்லிய துணியை அகற்றினான்.
இவ்வளவு நேரமும் இருட்டை மட்டுமே கண்ட அவளுடைய வழிகள் தன்னுடைய மன்னவனை காணும் ஆவலில் இமைகளை திறந்து பார்த்தவள்
முன் கண்ணில் விரிந்தது
ஒரு பெரிய, பரந்த குளம்,
அதில் நீலம், சிவப்பு, பொன்னிறம், வெள்ளி, கருப்பு என
நூறு வண்ணங்களில் மின்னும் மீன்கள் மிதந்துகொண்டிருந்தன.
நீரின் மேல் மல்லிகை, தாமரை மலர்கள் மலர்ந்திருந்தன.
சூரியன் மறைந்து நிலவு எழும் அந்த நேரத்தில்,
மின்னும் விளக்குகள் நீரில் பிரதிபலித்து,
மீன்களின் வண்ணங்களும் ஒளியும் கலந்து ஒரு கனவு உலகம் போல இருந்தது.
அமையாதேவி வியப்பால் வாயை மூடவே முடியவில்லை.
“இது… எல்லாம் எனக்காகவா?”
என்று மெளனமாகக் கேட்டாள்.
கௌதமாதித்தன் அவளது முகத்தைப் பார்த்தான்.
அந்த கண்களில் தெரியும் பிள்ளைத்தனமான மகிழ்ச்சி,
அவளது உதடுகளில் மலர்ந்த சிரிப்பு
அவன் மனதை ஆழமாகத் தொட்டது.
“உனக்கு மீன்கள் பிடிக்கும் என்று நீ சொன்னாய்…
நான் அதைக் கடல் நிறையக் கொண்டு வந்தேன்”
நீரின் ஒலி, மீன்களின் அசைவு,
மெதுவாக வீசும் இரவுக்காற்று
அனைத்தும் இருவரின் இதய துடிப்பை இன்னும் வேகமாக்கியது.
அப்பொழுது கௌதமாதித்தன் தன்னுடைய இடுப்பில் மறைத்து வைத்திருந்த ஒரு தங்க நாணயத்தை அவள் கையை பிடித்து அதில் வைத்து அவளுக்கு காட்டினான்.
ஏற்கனவே அதிர்ச்சியில் இருந்த அமையாதேவியோ இப்பொழுது அதை என்ன என்று பார்த்தவளுக்கோ மயிர் கால்கள் கூச் எறிந்தன அதை பார்த்ததும்.
ஆம் அந்த தங்க நாணயத்தில் ஒரு பக்கம் சூரிய கதிர்கள் இருக்க மற்றொரு பக்கம் அமையாதேவியின் அந்த சாந்தமான முக உருவம் பொறிக்கப்பட்டிருந்தது.
இதற்கு முன்பு அந்த நாணயத்தை தன்னுடைய கழுத்தில் அணிந்திருந்த கௌதமாதித்தனோ இப்பொழுது அதை ஒரு நாணயமாக மாற்றி அதில் தன்னுடைய மனைவியின் உருவத்தையும் செதுக்கி அதை அவளுக்கே தன்னுடைய நினைவாக பரிசாக கொடுத்தான்.
அவள் கண்களில் கண்ணீர் மின்னியது.
அந்த கண்ணீரைப் பார்த்தவுடன்,
அவன் மெதுவாக அவளது கையைப் பிடித்தான்,
அவளை அருகே இழுத்தான்.
அவன் அவளது இடுப்பில் கையை வைத்து மெதுவாகத் தழுவினான்.
அவள் அவனது மார்பில் தலைவைத்தாள்.
மார்பின் நடுக்கத்தில் அவன் இதயத் துடிப்பை கேட்டாள்.
“நீங்க இவ்வளவு செய்திருக்கீங்க நான்”
என்று சொல்ல முயன்றாள்,
ஆனால் அவனது விரல்கள் அவளது கன்னத்தில் தடவியவுடன்,
அவள் வார்த்தைகளை மறந்து கண்களை மூடினாள்.
கௌதம் மெதுவாக அவளது நெற்றியில் முத்தமிட்டான்.
பின் அவளது மூக்கின் நுனி, கன்னங்கள்
இறுதியில், நிலவொளியில் பிரதிபலித்த நீர் போல, மென்மையாக அவளது உதடுகள் மீது தனது உதடுகளை வைத்தான்.
முத்தம் முதலில் மெல்லியது
ஆனால் அந்த தருணத்தின் உணர்வு,
மீன்களின் விளையாட்டு, நீரின் இசை,
இருவரின் மூச்சும் ஒன்றாக கலக்கச் செய்தது.
அமையாதேவி அவனை இன்னும் நெருக்கமாக அணைத்தாள்.
அவன் அவளது முதுகில் கைசூழ்ந்து,
அவளை தன் உலகின் மையமாக வைத்தான்.
அந்த இரவு,
வண்ண மீன்களுக்குள் ஒரு காதல் கதை பிறந்தது.
அதேநேரம் இளவாய் நாட்டின் அரண்மனையின் வாயலில் மனம் முழுவதும் வன்மத்துடனும் சதி திட்டத்துடனும் தன்னுடைய முதல் காலடியை வைத்தாள் சேனபதி சாயரா