கனவு -21
மாலை நேரத்தில் அரண்மனையின் அந்த பெரிய வாசல் திறந்து இருக்க மனதில் முழு வஞ்சகத்துடன் தன்னுடைய காலடியை எடுத்து வைத்தாள் சேனபதி சாயரா.
அங்கு போடப்பட்டிருந்த அரியணையில் கௌதமாதித்தன் கம்பீரமாக அமர்ந்திருக்க அவனுடைய மடியில் அமையாதேவி வெட்கம் கலந்த நானத்துடன் அமர்ந்திருப்பது போல் அவளுடைய கண்களுக்கு தெரிய சாயராவின் விழிகளோ இரத்தமாக சிவக்க தொடங்கியது.
‘நான் இருக்க வேண்டிய இடத்தில் இவளா’
என்று நினைத்துக் கொண்டாள்.
அவளுக்கு இந்த அரியணை மீதோ அல்லது அதிகாரத்தின் மீதோ அவளுக்கு ஆசை எல்லாம் இல்லை. ஏனென்றால் அவளுடைய நாட்டில் அவள் தான் இளவரசி.
தந்தைக்கு ஒற்றை மகளாக இருப்பவள் அவளை திருமணம் செய்யும் ஆண்மகன் அந்த நாட்டுக்கும் அரசனே.
அப்படி இருக்கும் பொழுது ராஜியத்தின் மீதும் அரியணை மீதும் அவளுக்கு துளியும் நாட்டமில்லை.
ஆனால் சிறு வயதிலிருந்து இப்பொழுது வரை முகத்தைக் கூட பார்க்காமல் கௌதமாதித்தனை கணவனாக நினைத்து இத்தனை ஆண்டு காலம் வாழ்ந்து வந்தவளுக்கு இப்பொழுது தன்னுடைய இடத்தை வேறு ஒருவள் நிரம்பி விட்டால் என்பதை அவளால் தாங்கிக் கொள்ளவே இயலவில்லை.
எப்படியாவது தன்னுடைய இடத்தை தானே எடுத்துக்க வேண்டும் என்று நினைத்து விட்டாள்.
காதல் ஒருவரை நல்லவராகவும் மாற்றும் கெட்டவராகவும் மாற்றும் என்பார்கள்.
அதில் சேனபதி சாயரா இரண்டாவது ரகம்.
தன்னுடைய காதலுக்காக எந்த எல்லைக்கும் செல்வேன் என்பது போல அவளுடைய சுயநலம் மட்டுமே அவளுக்கு பெரிதாக தெரிந்தது.
“அமையாதேவி என்னுடைய காதலை பறித்த உன்னை என் அத்தான் மூலமாகவே இங்கு இருந்து அடித்து துரத்த வைப்பேன் இதுவே என்னுடைய இலக்கு”
“வாம்மா வா இப்பொழுது தான் வந்தாயா”
என்று கௌதமாதித்தனின் அன்னை ராணி அவளை இன் முகமாக வரவேற்றார்.
பின்பு தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்றார் அவளை.
சேனாபதி சாயராவின் முகம் கடுமையை பூசிக் கொண்டாலும் அவளிடம் நன்றாகவே உரையாடினாள்.
“அத்தை நான் இங்கு உங்கள் அண்ணன் மகளாக வரவில்லை.
ஒரு பணி பெண்ணாகவே வந்திருக்கிறேன் ஆகையினால் தாங்கள் இதற்குப் பிறகு என்னை தெரிந்தது போல் எந்த இடத்திலும் காட்டிக்கொள்ள வேண்டாம் நான் நினைத்த காரியம் ஈடேறும் வரை தாங்கள் என்னிடமிருந்து விலகியே இருங்கள்.
ஒரு பணி பெண்ணை எவ்வாறு நடத்துவீர்கள் அதுபோலவே என்னிடமும் நடந்து கொள்ளுங்கள்”
“ஆகட்டும் சாயரா நீ எது செய்தாலும் நாங்கள் உன்னுடன் இருப்போம்”
என்று வாக்கு கொடுத்தார்.
அவரிடம் தலை அசைத்து அங்கிருந்து பணியாளர்கள் தங்கும் இடத்திற்கு புறப்பட்டாள்.
அப்பொழுது ராணியின் அறைக்கு அருகில் கௌதமாதித்தன் அறை இருக்கவே அவள் அதை கடந்து போகும் பொழுது உள்ளே இருந்த வந்த சிரிப்பின் சத்தங்கள் அவளை இம்சித்தன.
உள்ளே கெளதமாதித்தன் அமையாதேவியுடன் சந்தோஷமாக இருக்க அந்த சத்தங்கள் தெளிவாக செவிகள் விழ அவள் உடல் எல்லாம் தீயாய் தகித்தது.
கை விரல்களை இறுக்கமாக மடக்கியவள் ஓங்கி கௌதமாதித்தனின் அறைக் கதவை தட்டினாள்.
அங்கு உள்ளே இன்பத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவர்களை கதவு தட்டும் ஓசை கலைத்தது.
“தாங்கள் இருங்கள் யார் என்று நான் பார்த்து வருகிறேன்”
என்று அமையாதேவியை அமரச் சொல்லிவிட்டு கம்பீரமான தோற்றத்தோடு அந்த மிகப்பெரிய கதவைத் திறந்து யார் என்று பார்த்தான் கௌதமாதித்தன்.
இவ்வளவு நேரம் கடுமையாக இருந்த தன்னுடைய முகத்தில் அழகு பதுமையாக மாற்றிக் கொண்டு நின்றாள் சேனபதி சாயரா.
“அரசே நான் சேனபதி சாயரா இங்கு அழகு கலை பணி செய்து கொண்டிருக்கிறேன்.
அரசி அமையாதேவியை அலங்கரிக்கும் அந்த அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது தாங்கள் அனுமதி தந்தால் என்னுடைய பாக்கியத்தை நிறைவேற்றுவேன் அனுமதி தருவீர்களா”
என்று நளினமாக கேட்க அவளுடைய அந்தக் குரலில் ஈற்கப்பட்டான் கௌதமாதித்தன்.
தான் இன்பமாக இருக்கும் இந்த நேரத்தில் தொந்தரவு செய்தது யார் அவருக்கு தக்க தண்டனை கொடுக்கவே வந்திருந்த கௌதமாதித்தனை சாயராவின் குரல் அவள்புறம் கவர்ந்தெடுத்தது.
“அரசே நான் உள்ளே வரலாமா”
என்று அவள் அனுமதி கேட்க. அரசருடைய கால்களோ தானாக அவளுக்கு வழி விட்டது.
அவன் தனக்கு வழிவிட்டதும் தன்னுடைய இடையை அழகாக வளைத்து தன்னுடைய பாதங்களை முன்னே எடுத்து வைத்தவள் தடுமாறி விழுவது போல் கௌதமாதித்தனின் கையில் விழுந்தாள் அவள்.
அவனோ அவளுடைய குரலில் வசீகரிக்கப்பட்டு அவளையே பார்த்துக் கொண்டு நிற்க அவள் தடுமாறி அவனுடைய கைகளில் விழவும் தன்னோடு தாங்கி பிடித்துக் கொண்டான்.
அவன் அவளைத் தாங்கியதும் சாயராவின் முகம் மெதுவாக மலர்ந்தது.
தன்னுடைய எண்ணம் சிறிது சிறிதாக ஈடேறிக் கொண்டிருக்கிறது என்று நினைத்து மகிழ்ந்தவள் தன் கையில் மறைத்து வைத்திருந்த அந்த வசிய மருந்தை கௌதமாதிக்கனுக்கே தெரியாமல் அவனுடைய பிடறி முடியில் தடவி விட்டாள்.
இவ்வளவு நேரமும் அவளுடைய வசீகர குரலில் மயங்கி நின்றவன் இப்பொழுது அவள்பால் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை இழக்க ஆரம்பித்தான் கௌதமாதித்தன்.
“மன்னா இங்கு என்ன நடக்கிறது”
என்று கேட்டவாறு அவர்கள் அருகில் வந்தாள் அமையாதேவி.
அவளுடைய குரலை கேட்டதும் சட்டென ஒரு மாய வலையில் இருந்து அறுபட்டது போல் ஆனது கௌதமாதித்தனுக்கு.
தன்னுடைய கையில் சேதுபதி சாயரா இருப்பதை பார்த்தவன் அவளை நேராக நிற்க வைத்து விட்டு அமையாதேவி இடம் வந்துவிடடான்.
“மன்னித்து விடுங்கள் அரசி நான் தங்களை அலங்கரிக்க வந்துள்ளேன் என்னுடைய பணியை நான் தொடங்கலாமா”
என்று பவ்யமாக கேட்டாள் சேனபதி சாயரா.
அமையாதேவிக்கோ அதில் கொஞ்சமும் விருப்பமில்லை.
“இல்லை வேண்டாம் தாங்கள் இங்கிருந்து செல்லலாம்”
என்றாள் அமையாதேவி.
அதை கேட்டதும் சாயராவின் முகமோ ஏமாற்றத்தில் சுருங்கியது.
‘என்ன இது இவள் இவ்வாறு கூறுகிறாள் இவளுக்கும் வசிய மருந்தை அவளுடைய சிரசில் வைத்து விடலாம் என்று நினைத்தால் இவள் தன்னை புறக்கணிக்கிறாளே’
என்று எண்ணியவன்,
“மன்னித்து விடுங்கள் அரசி மீண்டும் தங்களிடம் யாசிக்கிறேன் என்று தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் எனக்கு ஒரு முறை வாய்ப்பளித்து பாருங்கள் என்னுடைய கை வண்ணத்தில் தாங்கள் இன்னும் அழகு கூடி மின்னுவீர்கள்”
என்றாள்.
ஆனால் அமையாதேவியோ முடிவாக வேண்டாம் என்று மறுத்து விட்டாள்.
முதல் முறையாக ஏமாற்றத்தை கண்ட சாயராவுக்கோ அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
கௌதமாதித்தனை ஒரு பார்வை பார்த்தவள் வந்த வழியே திரும்பிச் சென்று விட்டாள்.
அவள் அங்கிருந்து சென்றதும் அமையாதேவியின் அருகில் வந்த கௌதமாதித்தனோ,
“அமையா தாங்கள் ஏன் அப்பணி பெண்ணின் சேவையை வேண்டாம் என்று மறுத்து விட்டீர்கள்”
மன்னா தாங்கள் இவ்வாறு கூறுகிறீர்கள் என்றால் நான் அழகாக தங்களுடைய கண்களுக்கு தெரியவில்லையா”
என்று கேட்டாள்.
உடனே மறுத்த கௌதமாதித்தனோ,
“நான் அவ்வாறு கூறவில்லை அமையா தாங்கள் என்னுடைய விழிகளுக்கு எப்பொழுதும்
பேரழகியாகத் தான் தெரிவீர்கள்”
“பின்பு ஏன் மன்னா என்னை அலங்காரம் செய்து கொள்ள சொல்கிறீர்கள்”
என்று கேட்டாள் அமையாதேவி.
‘சரி விடுங்கள் அமையா தங்களுக்கு விருப்பமில்லை என்றால் தங்களை நான் கட்டாயப்படுத்த மாட்டேன்”
என்றவாறு அவள் அருகில் வந்தவன் அவளுடைய இதழில் முத்தமிடப் போக அதற்கு அவளோ தன்னை வாகாக அவனுக்கு கொடுக்க இதழ்கள் இதழ்களோடு சங்கமிக்கும் நேரம் சட்டென கௌதமாதித்தனின் நினைவில் வந்தாள் சேனபதி சாயரா.
அதில் பட்டென அவளிடம் இருந்து விலகினான்.
“என்னவாயிற்று மன்னா தங்களுக்கு”
என்று அமையாதேவி கேட்க கண்களை மூடியவனுக்கோ, சேதபதி சாயராவின் உருவமே வந்து வந்து போனது.
கண்களை திறந்தால் அவன் முன்னே அவனுடைய மனைவி அமையாதேவி. கண்களை மூடினால் சேனபதி சாயரா என்று அவனுக்கு காட்சி அளித்தார்கள்.
“ஒன்றுமில்லை அமையா தாங்கள் சங்கடம் கொள்ள வேண்டாம் தாங்கள் படுத்துக் கொள்ளுங்கள் நான் இப்பொழுது வருகின்றேன்”
என்றவன் அந்த அறையில் இருந்து வெளியேறினான்.
இங்கு பணிப்பெண்களுக்கு என்று ஒதுக்கப்பட்டு இருக்கும் அறைகளில் ஒரு அறையில் தங்கி கொண்டாள் சேனபதி சாயரா.
அவள் கண்களை மூடி ஏதோ மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருக்க அது கௌதமாதித்தனின் செவிகளில் அவள் தன்னை அந்த வசீகர குரலில் அழைப்பது போலவே அவனுக்கு கேட்டது.
தன் காதுகளில் ஒலிக்கும் அந்த வசீகர குரலில் சிக்குண்டவன் போல் அவள் இருந்த அறைநோக்கி சென்றவன் நேராக அவளுடைய அறை கதவை திறந்து அவள் முன்பு போய் நின்றான்.
இவ்வளவு நேரமும் கண்களை மூடி வாய்க்குள் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தவள்,
“என்னுடைய வசீகர குரலால் தாங்கள் வந்து விட்டீர்களா. இந்த சாயாராவை தேடி வருவீர்கள் என்று எனக்குத் தெரியும் இன்னும் ஏன் தாமதம் கொள்கிறீர்கள் தாங்கள் வந்ததன் நோக்கத்தை நிறைவேற்றுங்கள்”
என்று உரைத்தாள்.
அவனோ அவளுக்கு புன்னகையை பதிலளித்தவன் கழுகின் இறக்கை போன்று இருக்கும் இரு புஜங்களையும் விரித்து அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான்.