கனவே சாபமா‌ 22

5
(5)

கனவு -22

வசியம் கௌதமாதித்தனின் மீது ஆதிக்கம் செய்ய அவள் நினைத்தது போலவே அவளை தேடி அவளுடைய அறைக்கு வந்தவன் அவளை தன்னோடு இறுகணைத்துக் கொண்டான்.
அதற்காகவே காத்திருந்தவள் அவனை தானும் அணைத்துக் கொண்டாள்.
இருவரும் பாம்பை போன்று ஒருவர் உடலோடு மற்றொருவர் பின்னிப் பிணைந்து கொண்டிருந்தனர்.
அவனோ தன்னுடைய கைகளாலும் இதழ்களாலும் அவளுடைய மேனி முழுவதும் வலம் வர அவளோ அவனுக்காகவே தன்னை படைக்கப்பட்டது போல முழுவதுமாக வாரி வழங்கிக் கொண்டிருந்தாள்.
இவனோ அவளுடைய வசியத்தால் உண்டான போதையில் அவள் மேல் கிறங்க அவளோ அவனுடைய அந்த கம்பீரமான ஆண்மையின் போதையில் கிரங்க இருவரும் தங்களுடைய ஆடைகளை அகற்றி விட்டு வெற்று உடலாக ஒருவரை ஒருவர் பின்னிப்பிணைந்து கொண்டிருக்க, இவனோ போருக்கு தயாராக நிற்கும் தன்னுடைய ஆயுதத்தை செலுத்தப் போக சட்டென அவள் மேலிருந்து எழுந்தான் கௌதமாதித்தன்.
இவ்வளவு நேரமும் அவள் மேல் இருந்த மோக வலையில் இருந்த கௌதமாதித்தன் திடீரென அந்த வலை அறுக்கப்பட்டு ஏதோ தீச்சுட்டார் போல அங்கிருந்து வெளியே வந்தவனோ அவனுடைய அறைக்கு வந்துவிட்டான்.
சற்று நிமிடம் அவனுக்கு நடந்த அனைத்தையும் அவன் நினைத்துப் பார்த்தான்.
தான் எவ்வாறு அந்த பெண்ணுடன் இவ்வளவு நெருக்கமாக அதுவும் என்னுடைய அமையா இருக்க வேண்டிய இடத்தில் இன்னொரு பெண்.
நான் எவ்வாறு இப்படி நடந்து கொண்டேன் என்று யோசித்தவனுக்கோ விடை தான் கிடைத்த பாடு இல்லை.
இங்கு சேனபதி சாயராவோ
அவள் எதிர்பார்த்த தருணம் கணப் பொழுதில் நிகழ இருந்த சமயம் அவன் இவ்வாறு அவள் மேல் இருந்து எழவும் ஏமாற்றம் அடைந்தவள் தன்னுடைய விழிகளை திறந்து பார்த்தாள்.
அங்கோ அவன் இருக்க வில்லை. கோபம் இயலாமை என்று அவளை அலைக்கழித்தன.
“சற்று நிமிடம் சற்றே நிமிடத்தில் எல்லாம் இப்படி பாழாய் போய்விட்டதே, நான் எங்கு தவறிழைத்தேன் எல்லாம் நான் நினைத்தது போல் அல்லவா நடந்து கொண்டிருந்தது அப்படி இருக்கும் பொழுது எப்படி என்னுடைய மாய வலையில் இருந்து அரசர் விடுபட்டார்.
இந்த தருணத்தில் நானும் அவரும் இணைந்து இருந்தால் இந்த பிறவி முழுவதும் அவர் என்னுடைய கட்டுப்பாட்டில் அல்லவா இருந்து இருப்பார். எல்லாம் கெட்டுப் போய்விட்டது என்ன நடந்திருக்கும் எதனால் நான் உருவாக்கிய அந்த வசியத்தில் இருந்து அவர் அறுபட்டு இருப்பார்.
அவருடன் இருந்த இந்த சொற்ப நேரம் எவ்வளவு இனிமையாக இருந்தது. ஆண்மைக்கே பேர் போன அந்த உடல் அமைப்பு ஆஹா என்ன ஒரு வசீகரம் நான் அவரை வசியம் செய்து என் பக்கம் இழுத்தேன் ஆனால் அவரோ அது எதுவும் செய்யாமலேயே என்னை அவர் பால் இழுத்து கொண்டிருக்கிறாரே. அடுத்த முறை இப்பொழுது நிகழ்ந்த தவறை நடக்க விடக்கூடாது. அடுத்த முறை தங்களுடன் இணைந்தே தீருவேன் அதன் பிறகு உங்களுக்கு அந்த அமையாதேவியின் நினைவு மொத்தமாக அகன்று விடும்.
உங்களுடைய நினைவு ஆவி முழுவதும் இந்த சேனபதி சாயரா மட்டுமே ஆட்சி செய்வாள்”
என்று தனக்குள் உரைத்துக் கொண்டவள் கௌதம் இவ்வளவு நேரம் ஆண்டு கொண்டு இருந்த அவளுடைய உடலை தொட்டுப் பார்த்து இன்புமுற்றாள் அவள்.
அமையாதேவியோ கௌதமாதித்தனுக்காக காத்துக் கொண்டிருந்தவள் வெகு நேரம் ஆகியும் அவன் வராமல் இருக்க அவனுடைய நினைப்பிலேயே இறுந்தவள் அவன் கொடுத்த அந்த நாணயத்தை தன்னுடைய கையில் வைத்து அதில் ஒரு பக்கம் இருக்கும் சூரிய கதிர்கள் இருக்க அதில் தன்னவனின் முகத்தை பார்த்தவள் அதை தன்னுடைய இதழில் வைத்து முத்தமிட அங்கு சாயராவுடன் இணைய இருந்த சமயம் அவளுடைய வசியத்தில் இருந்து அறுபட்டான் கௌதமாதித்தன்.
இப்படியே சேனபதி சாயரா ஒவ்வொரு நாளும் அரசர் அமையாதேவியுடன் தனிமையில் நேரத்தை கழிக்கும் பொழுதெல்லாம் இவள் மந்திரத்தை உச்சரித்து உச்சரித்து அவனை தன்வசம் இழுத்து தன்னுடைய அறைக்கு வரச் செய்து விடுவாள்.
ஆனால் விதியோ அவர்கள் இருவரும் ஒன்றாக இணையும் சமயம் கௌதமாதித்தன் அந்த மாய வலையில் இருந்து விடுபட்டு அங்கிருந்து சென்று விடுவான்.
இவளோ அவ்வாறு நடக்கும் பொழுதெல்லாம் கொதித்து போவாள்.
ஏன் எவ்வாறு இது நடக்கிறது என்று தெரியாமல் பித்து பிடித்தவள் போல் தலையைப் பிடித்துக் கொண்டிருப்பாள்.
அதே சமயம் அங்கு அமையாதேவியோ கௌதமாதித்தனின் இந்த செயலில் வெகுவாக துவண்டு போவாள்.
“ஏன் மன்னர் இப்பொழுது எல்லாம் என் உடன் வித்தியாசமாக நடந்து கொண்டிருக்கிறார்.
என்னவாயிற்று அவருக்கு தன்னை பிடிக்கவில்லையா இல்லையே தினமும் என்னுடன் ஆசையாக தான் வருகிறார் ஆனால் என்னுடன் நெருக்கமாக இருக்கும் சமயம் ஏன் என்னை தனியாக தவிக்க விட்டு செல்கிறார் அவருக்கு என்னவாயிற்று”
என்று அமையாதேவி ஒரு பக்கம் யோசனையில் தவித்துக் கொண்டிருந்தாள்.
ஆனால் சாயராவோ தான் நினைத்த காரியம் இன்னும் நடக்கவில்லையே என்று அகங்காரத்தில் கொதித்து போனவள் தன்னுடைய வசியம் செய்யும் வித்தையை இப்பொழுது கௌதமாதித்தனின் மேல் அதிகமாக செயல்படுத்த ஆயத்தமானாள்.
எப்பொழுதும் போல கௌதமாதித்தன் தன்னுடைய மனைவியை தேடி தன்னுடைய அறைக்கு வந்தவன் தன் மனைவி யோசனையில் இருப்பதை கண்டு அவள் அருகில் வந்து அவளுடைய நாடியை பிடித்து தன் முகம் பார்க்க செய்தவன்,
“அமையா தங்களுக்கு என்னவாயிற்று ஏன் அங்கு குளத்தில் தாமரை போல் மலர்ந்திருக்கும் தங்களுடைய முகம் இன்று ஏன் இவ்வளவு வாடிப்போய் இருக்கிறது”
என்று அவளை ஆராய்ந்தபடி கேட்டான்.
அவன் இவ்வாறு கேட்டதும் அவளுடைய விழிகளோ லேசாக கலங்க ஆரம்பித்தன.
அதை பார்த்தவனுடைய இதயத்திலோ யாரோ அம்பை பாய்ச்சுவது போல இருக்க அதை நொடியும் தாங்கிக் கொள்ள முடியாதவன்,
“அமைய என்ன இது தாங்கள் ஏன் இப்பொழுது கண் கலங்குகிறீர்கள் தங்களுக்கு எதுவும் பிரச்சனையா என்னிடம் சொல்ல ஏன் தயங்குகிறீர்கள் எதுவாயினும் தயங்காமல் என்னிடம் சொல்லுங்கள்.
என் அமையா விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தால் என் இதயத்தில் இருந்து ரத்தம் அல்லவா வழிந்து விடும்”
“மன்னா இடைப்பட்ட காலமாக தாங்கள் என்னிடம் எவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்று தங்களுக்கு தெரியாதா அப்படி இருக்கையில் நான் எவ்வாறு ஆனந்தமாக இருப்பேன்”
என்றாள் அமையாதேவி.
கௌதமாதித்தனோ,
“தாங்கள் என்ன கூறுகின்றீர்கள் அமையா நான் எப்பொழுதும் உங்களிடம் நன்றாக தானே நடந்து கொள்கிறேன் தாங்கள் இவ்வாறு கூற காரணம் என்ன”
என்று மன்னன் கேட்டான். அமையாதேவியோ,
“இல்லை மன்னா தாங்கள் சிறிது காலமாக என்னிடமிருந்து சற்று விலகியே இருக்கிறீர்கள் என்னால் அதை தாங்கிக்கவே இயலவில்லை நாம் இருவரும் மகிழ்ச்சியான தருணங்களில் நம்மை மறந்து இருக்கும் வேலையில் தாங்கள் என்னை விட்டு பிரிந்து செல்கிறீர்கள். சிறிது காலமாக இவ்வாறு தான் நடந்து கொண்டிருக்கிறது என்னால் அந்த பிரிவை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை மன்னா.
நான் என்ன தவறு செய்தேன் எதற்காக என்னிடம் இப்படி நடந்து கொள்கிறீர்கள் தயவு செய்து கூறுங்கள் நான் தங்களுக்கு ஏற்ப என்னை மாற்றிக் கொள்கிறேன் ஆனால் இவ்வாறு நடந்து கொள்ளாதீர்கள்”
என்றவளுக்கோ கண்ணீர் வழிந்தன.
“அமையா தாங்கள் சொல்வது எனக்கு ஒன்றும் புரியவில்லை என்னுடைய இதயத்தில் ராணியாக குடியிருக்கும் தங்களை நான் எப்படி அவமதிப்பேன் தாங்கள் கூறுவது போல் நான் ஒரு காலமும் நடந்ததில்லை. ஆனால் தாங்கள் ஏன் இவ்வாறு கூறுகிறீர்கள் என்றும் எனக்கு தெரியவில்லை. போனது போகட்டும் இனி தாங்கள் இவ்வாறு கவலை கொள்ளும் அளவிற்கு எதுவும் நடக்காது வாருங்கள்”
என்றவன் அவளைத் தன்னோடு அணைத்துக் கொண்டான்.
தன்னுடைய ஒற்றைக் கையால் அவளுடைய வெற்று இடையை வருடியவனோ மற்றொரு கையால் அவளுடைய மேல் கச்சையை அவிழ்த்தான்.
அதில் இவ்வளவு நேரமும் கவலையில் மூழ்கியிருந்த அமையாதேவியின் முகமோ இப்பொழுது தன்னவனின் தீண்டலினால் உண்டான செழிப்பில் வெட்கத்தை தத்தெடுத்துக் கொண்டன.
அவளுடைய வெட்கத்தை ரசித்தவாறு கௌதமாதித்தனின் கைகளோ அவளுடைய வெற்று முன்னழகை கைகள் கொண்டு மேலும் அழகை மெருகேற்றின.
அவளை அப்படியே தன்னுடைய கைகளில் அள்ளி எடுத்தவன் பஞ்சு மெத்தையில் அவளை கிடத்தி அவள் மேல் கவிழ்ந்து அவள் மேல் இருக்கும் மொத்த ஆசையையும் காட்டுவது போல தன்னுடைய இதழ் கொண்டு அவளுடைய இதழை பூட்டினான் கௌதமாதித்தன்.
இங்கு அதே நேரம் தன்னுடைய அறையில் சேனபதி சாயரா கண்களை மூடி அமர்ந்தவள் மந்திரத்தை உச்சரித்து தன்னுடைய வசிய வேலையை தொடங்கி இருந்தாள்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!