கனவே சாபமா‌ 23

5
(8)


கனவு -23

முழு நிலா வெள்ளி ஒளியில் தோட்டம் மலர, கைகளில் கை பிணைந்து நடக்கும் காதலர்கள், கண்களில் மட்டும் உரையாடி நெஞ்சம் நிறைந்த இரவை அனுபவித்தனர்.
வெகு நாட்களுக்குப் பிறகு உடலால் ஒன்றிணைந்தவர்கள் மகிழ்ச்சியில் திளைத்து கொண்டிருந்தனர்.
அந்த மிகப்பெரிய கட்டிலில் கௌதமாதித்தன் சாய்ந்து அமர்ந்திருக்க அவனுடைய தோளில் வாகாக தன்னுடைய தலையை சாய்த்து அமர்ந்திருந்த அமையாதேவியோ அவனுடைய கையில் தன்னுடைய கையை கோர்த்துக்கொண்டு கதைகள் பேசிக் கொண்டிருந்தாள்.
அவளுடைய கதைகளை கேட்டுக் கொண்டு தன்னுடைய கண்களாலும் கைகள் கொண்டும் அவளை வருடிக் கொண்டிருந்தான் கௌதமாதித்தன்.
அப்பொழுது திடீரென அவனுடைய செவியில் அமையாதேவியின் அந்த குரல் இல்லாமல் சாயராவின் அந்த வசிய குரல் ஒலித்தது.
“அரசே தங்களுக்கு இந்த சேனாபதி சாயராவின் நினைவு வரவில்லையா தங்களுடைய நினைவில் உழன்று கொண்டிருக்கும் தன்னை காண தங்களுக்கு ஏன் தாமதம் வாருங்கள் வந்து என்னுடன் ஐக்கியமாகுங்கள் வாருங்கள் அரசே”
அந்தக் குரலில் தன்னுடைய தோளில் சாய்ந்திருந்த அமையாதேவியை சட்டென உதறிவிட்டு எழுந்தான் கௌதமாதித்தன்.
இதை சற்றும் எதிர்பார்க்காத அமையாதேவியோ அதிர்ந்து அவனைப் பார்க்க அவனோ அவளை கண்டுகொள்ளவே இல்லை.
ஏதோ பிரம்மை பிடித்தவன் போல் அவளை விட்டு அகன்று நடந்து சென்று கொண்டிருந்தான் அறையை விட்டு வெளியேறி.
“மன்னா தாங்கள் எங்கு செல்கிறீர்கள்”
என்று அவனை அழைத்துக் கொண்டு தன்னுடைய ஆடையை சரி செய்தவள் அவன் பின்னே போக கௌதமாதித்தனோ எங்கும் விலகாமல் தன்னுடைய இலக்கு சேனபதி சாயராவின் மடியில் தஞ்சம் புகுவது என்பது போல் நேராக அவளை நோக்கி சென்று கொண்டிருந்தான்.
அமையாதேவியோ அவன் பின்னையே சென்றவள் அவன் எங்கு செல்கிறான் என்று பார்க்க அங்கு பணிப்பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் அறைகள் இருக்க அதில் ஒற்றை கதவை அவன் திறந்து உள்ளே போவதை பார்த்தவளுக்கோ அதிர்ச்சியாக இருந்தது.
ஒருவாறு தன்னை சமப்படுத்தி கொண்டவள் அங்கு போய் பார்க்க பார்த்த கணம், அமையாதேவியின் உள்ளம் ஆயிரம் துண்டுகளாய் சிதறியது.
மூச்சே நிற்க, இரத்தம் ஓட மறந்து, உலகமே அவளைக் கைவிட்டது போல நெஞ்சில் ஒரு தாங்க முடியாத வலி உருவாகியது.
அங்கு கௌதமாதித்தனின் அணைப்பில் இருந்தால் சாயரா.
அவளால் அதற்கு மேலும் முன்னேறவும் முடியவில்லை அவர்கள் இருவருடைய அந்தக் கோலத்தைக் கண்டு.
நடக்க மறுத்த தன்னுடைய கால்களை பின்னே எடுத்து வைத்தவள் இனியும் தன்னுடைய உயிர் தன் உடலில் இருக்க வேண்டுமா இதை பார்த்த பின்பு என்று நினைத்தவள் கால் போன போக்கில் நடந்து சென்று கொண்டிருந்தாள்.
அவளுடைய எண்ணம் முழுவதுமே கெளதமாதித்தனே நிரம்பி இருந்தான்.
“ஒரு பெண்ணை பார்த்ததும் எனை மறந்தாரோ? என் உயிரோடு என் காதலோடு இவ்வளவு எளிதில் விலகிவிட்டாரோ?” என்று துயரம் அவளை தின்றது.
இத்தனை நாட்கள் தன்னிடம் இருந்து விலகியதற்கு காரணம் இதுதானா. தன்னிடம் அவர் ஒதுக்கம் காட்டியதற்கு இதுதான் காரணமா.
இல்லையே அப்படி என்றால் சற்று நிமிடம் வரை அவர் என்னுடன் அவ்வளவு இணக்கமாக இருந்தாரே கணப் பொழுதில் அல்லவா அவருடைய செயல் மாறியது.
ஏதோ ஜடம் போல் அல்லவா என்னை விட்டு அகன்று சென்றார்.
என்ன காரணமாக இருக்கும் என்று சிந்தனையில் மூழ்கியவள் எங்கு செல்கிறாள் என்று கூட அவளுக்கு தெரியவில்லை.
அவளுடைய செவியல் அவளுடைய அன்னையின் குரல் கேட்டது.
“அமையாதேவி அமையாதேவி எங்கு சென்று கொண்டிருக்கிறாய் நான் அழைத்துக் கொண்டே இருக்கின்றேன் உன்னுடைய செவியில் விழவில்லையா”
என்று அவளை அழைத்துக் கொண்டே வந்தவர் அவள் கைப்பிடித்து நிறுத்தினார்.
அதில் சுயநினைவு வந்தவள் போல அன்னையின் புறம் திரும்பியவள்,
“அன்னையே தாங்கள் இங்கு அரண்மனையில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்”
என்று வினவ.
“என்ன பிதற்றுகிறாய் அமையாதேவி நீதான் இங்கு வந்திருக்கிறாய்”
என்று அவருடைய குடிசையை கைகாட்டியவர்,
“ஆனால் நான் அரண்மனைக்கு வந்து இருக்கிறேன் என்று கூறுகின்றாய் என்ன ஆனது உனக்கு”
என்று அவளுடைய அன்னை கேட்க,
தன்னை சுற்றி பார்த்தவள் அப்பொழுதுதான் தான் நிற்கும் இடத்தை கண்டாள்.
ஆம் கால் போன போக்கில் வந்தவளோ தன்னுடைய அன்னையின் இல்லத்திற்கு வந்திருந்தாள்.
அவளுடைய வாடிய முகத்தை கண்ட அவளுடைய அன்னையோ,
“என்ன அமையாதேவி உனக்கு என்னவாயிற்று”
என்று கேட்க அவளோ அவரை கட்டி அணைத்துக் கொண்டு நடந்ததை கூறினாள்.
“அன்னையே நான் என்ன தவறு இழைத்தேன் எனக்கு ஏன் இவ்வாறு நடக்க வேண்டும் சற்று நிமிடம் வரை என் உடன் ஆனந்தமாக இருந்தவர் கனப்பொழுதில் என்னிடம் இருந்து பிரிந்து வேறு ஒரு பெண்ணை அணைத்துக் கொண்டு நிற்கிறார் அதை கண்டு என் மனம் சுக்கு நூறாய் உடைந்து விட்டது அன்னையே”
என்று தன்னுடைய மனக்குமுறலை தன் அன்னையிடம் கூறினாள்.
அவளுடைய அன்னையோ,
“நீ கூறுவது உண்மையா அமையாதேவி அரசர் அவ்வாறு நடந்து கொண்டாரா”
“ஆம் அன்னையே என் கண் முன்னால் அவர் அந்த சேனபதி சாயராவை அணைத்துக் கொண்டிருப்பதை கண்டு என்னால் அங்கு நிற்கவே முடியவில்லை என் இதயம் தூள் தூளாக உடைந்தது போல் இருந்தது நான் ஏன் இன்னும் உயிரோடு இருக்க வேண்டும் என்னுடைய உயிரை மாய்த்து கொள்ள போகின்றேன்”
என்று கூறிக் கொண்டிருந்தவளோ சட்டென நிதானித்தாள்.
“அன்னையை நான் ஒன்று கண்டேன்”
என்று தன் அன்னையிடம் கூறியவள் தான் கண்டதை நினைவு படுத்தினாள்.
“கௌதமாதித்தனின் அணைப்பில் சாயரா இருப்பதை கண்டவளுடையா மூலையோ தற்சமயம் செயல் இழந்தது போன்று இருந்தது.
இப்பொழுது அவள் நினைவில் வந்தது என்னவென்றால், கௌதமாதித்தன் கை அணைப்பில் இருந்த சாயராவோ தன்னுடைய கையில் வைத்திருந்த மையை எடுத்து அணைப்பில் இருந்த வாரே மீண்டும் அதை கௌதமாதித்தனின் பிடரியில் தடவி அவன் அறியாமல் வாய்க்குள்ளையே மந்திரத்தை உச்சரித்தவள்,
“அரசே தாங்கள் இப்பொழுது என்னுடன் ஒன்றாக இணைய வேண்டும்
நேரம் தாழ்த்தாமல் முன்னேறுங்கள்” என்று அவள் கூற அவனுடைய விழிகளோ எங்கும் நோக்காமல் அவளை மட்டுமே நோக்கியவாறு அவளுடைய ஆடைகளை களைய ஆரம்பித்தான்.
அதை தன்னுடைய அன்னையிடம் கூறினாள் அமையாதேவி.
அவள் கூறியதும் அந்த அனுபவம் வாய்ந்த அவளுடைய தாய்க்கோ அனைத்தும் புரிந்தது.
“மகளே அமையா நீ சொல்வதை பார்த்தால் அந்த சாயரா சாதாரண பெண்ணல்ல போல இருக்கிறது.
கவளை கொள்ளாதே மகளே என்னதான் அவள் அரசரை வசியம் செய்திருந்தாலும் அவளுடைய வசியத்துக்கும் ஒரு பிழை உண்டு.
எந்த வசியமும் நிழல் போல தான் இருக்கும் வெளிச்சம் வந்துவிட்டால் நிழல் கலைந்து விடும்.
அவள் அரசரை மயக்கும் வசியம் தன் பார்வையில் ஓசையும் மட்டும்தான்.
அவரது உள்ளம் உண்மையிலேயே அவளிடம் செல்லவில்லை.
அதனால், அந்த வசியத்தை முறியடிக்க வேண்டும் என்றால், நீ செய்ய வேண்டியது ஒன்று
முதலில், அவர் கண்கள் உன்னையே பார்த்து நின்று விட வேண்டும்.
அன்பும் நம்பிக்கையும் நிறைந்த உன் பார்வை, அவர் உள்ளத்தின் ஆழத்தில் தூங்கிக்கிடக்கும் பாசத்தை எழுப்பும்.
அதன் பிறகு அந்த சாயராவால் ஒன்றும் செய்ய இயலாது துவண்டு விடாதே மகளை புறப்படு விரைவாக அங்கு புறப்படு”
என்று மகளுக்கு தைரியம் ஊட்டினார் அவளுடைய அன்னை.
திக்கு தெரியாமல் திணறிக் கொண்டிருந்தவளுக்கோ தன் அன்னையின் கூற்று அவளுக்கு மிகுந்த பலத்தை உண்டு பண்ணியது போல இருந்தன.
தன்னுடைய அன்னையை அனைத்து நன்றி கூறியவள் உடனே தன்னுடைய மன்னவனைத் தேடி அரண்மனைக்கு புறப்பட்டாள்.
“மன்னா தங்களை என்னிடம் இருந்து யாராலும் உங்களை பிரிக்க முடியாது பிரிக்கவும் விடமாட்டேன் இதோ வருகிறேன்”
இங்கு முழுவதுமாக சாயராவின் வசியத்தில் சிக்குண்ட கௌதமாதித்தனோ கொஞ்சம் கொஞ்சமாக அவள் வசம் சென்று கொண்டிருந்தான்.
சாயரா தன்னுடைய எண்ணம் ஈடு ஏறப் போகின்றது என்று நினைத்தவள் எவ்வித தயக்கமும் இன்றி தன்னை தாராளமாக கௌதமாதித்தனுக்கு தன்னுடைய உடலை படைக்க ஆயுத்தமானாள்.
சேனபதி சாயராவின் வசியத்தில் இருந்து கௌதமாதித்தனை மீட்டெடுக்க விரைவாக வந்து கொண்டிருந்த அமையாதேவி அவர்களுடைய அறைக்கதவை படார் என திறந்து பார்த்த பொழுது அங்கு அவள் கண்ட காட்சியோ அவளுடைய நெஞ்சை பிளந்தது போன்று இருந்தது.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!