கனவு -24
அரண்மனையின் அந்த இரவு மிகச் சுமையான அமைதியோடு பரவியிருந்தது.
சாயராவின் கண்களில் இருந்த அந்த விசித்திர ஒளி கௌதமாதித்தனின் மனதை மெதுவாக சுரண்டிக் கொண்டே சென்றது.
முதலில் அவன் பார்வை குழம்பியது. “ஏன் என் மனது இப்படி கலங்குது?” என்று யோசித்தான்.
ஆனால் சாயரா அவனுக்கு அருகில் வந்து, தன் குரலில் இனிமையையும், வசியத்தையும் கலந்து பேசத் தொடங்கினாள்.
“அரசே… உன் பலம், உன் வீரியம்… என் அருகில் மட்டுமே முழுமை பெறும். என்னைத் தழுவினால் தான் உன் ஆற்றல் நிரம்பும்”
என்று அவள் மெல்ல அவன் நெஞ்சில் கை வைத்தாள்.
அந்தத் தொடுதலின் தருணத்தில், கௌதமாதித்தன் உள்ளத்தில் ஒரு சலனமோ, தீப்பொறியோ ஏறியது. அவன் மனசாட்சியின் ஓரம் அமையாதேவியின் நினைவுகள் துடித்தன.
ஆனால் வசியத்தின் வலிமை அதைக் குழப்பமாக்கியது.
சாயரா அவன் முகத்தைத் தன் விரலால் தடவி,
“இனி நீ என்னுடையவன்”
என்று மெதுவாக சொன்னாள்.
அந்தத் தொடுதலில் அவன் முழுவதும் சாயராவின் கட்டுப்பாட்டுக்குள் சென்றான்.
உதடுகள் மிக அருகே வந்தன.
அந்த நொடியில், கௌதமாதித்தன் சாயராவின் வசிய சக்தியின் வீரியத்தில் முற்றிலும் சிக்குண்டு, அவளுடன் ஒன்றாக இணையும் நிலைக்குச் சென்றுவிட்டான்.
மெல்ல அவன் உடல் சாயரா அருகே சென்றது.
அவன் உதடுகள் அவளைத் தொடும் முன், கண்களில் இருந்த குளிர்ச்சியான ஒளி சாயராவின் கட்டுப்பாட்டின் வெற்றியை வெளிப்படுத்தியது.
அங்கு மெத்தையில் சாயராவுடன் வெற்று உடலாய் இருவரும் பின்னிப்பிணைந்து கொண்டிருக்க சாயராவின் வசியத்தில் இருக்கும் தன்னுடைய கணவனை மீட்கும் பொருட்டு விரைவாக வந்த அமையாதேவி அந்தக் காட்சியை கண்டவளுக்கோ நெஞ்சை பிளந்தது போன்று இருந்தது.
ஆனாலும் சட்டென தன்னுடைய புத்தியை தெளிவுபடுத்தியவள் இங்கு நடந்து கொண்டிருக்கும் அனைத்தும் இந்த சேனபதி சாயராவின் சூழ்ச்சியை தவிர என்னுடைய மன்னன் எப்பொழுதும் என்னவனே என்ற கர்வம் மீதூர விரைந்து சென்றவள் சாயராவின் வெற்று தோளில் முகத்தை புதைத்து அங்கும் இங்கும் பிரட்டிக் கொண்டிருந்த கௌதமாதித்தனை தோளை பிடித்து பின்னே இழுத்தாள் அமையாதேவி.
அதில் இருவருடைய மோன நிலையும் களைந்து போக வெறி கொண்டவள் போல எழுந்தாள் சேனபதி சாயரா.
கூடவே அவளுடைய வசியத்தில் சிக்கி இருக்கும் கௌதமாதித்தனுக்கும் அமைதியாதேவியின் மேல் அளவு கடந்த கோபம் வந்தது.
“அமைகாதேவி தாங்கள் என்ன காரியம் செய்து கொண்டிருக்கிறீர்கள் உங்களை யார் இங்கு வர சொன்னது தாங்கள் இங்கு வந்ததும் இல்லாமல் இவ்வாறு நடந்து கொள்ள உங்களுக்கு எங்கிருந்து தைரியம் வந்தது”
என்று அவளை கேள்வி கேட்டான்.
கூடவே சேனபதி சாயரா தன்னுடைய வசீகர குரலில்,
“அரசே நாம் இருவரும் ஒன்றாக இணையும் நேரம் இவள் வந்து அதை கெடுத்து விட்டாள் தாங்கள் இவளிடம் ஏன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் நம்முடைய மகிழ்ச்சியை குழைத்தவளுக்கு தக்க தண்டனை கிடைத்தே தீர வேண்டும் எங்கே தங்களுடைய வாழ் அவளுடைய சிரசை இப்பொழுதே வெட்டி வீசுங்கள்”
என்றாள் சேனபதி சாயரா.
அமையாதேவி சாயராவை நேற்கொண்டு பார்த்தாள்.
அந்தக் கண்கள் இனி வலியில் சிதறியவை இல்லை உறுதியால் எரிந்தவையாக இருந்தன.
அவள் மெல்லக் குரல் எழுப்பினாள்.
“சாயரா… காதல் என்ற பாசம் பேய் போல எங்கோ நிழலாய் வந்துவிட்டு போவதல்ல. அது எங்கள் இரத்தத்தோடும் மூச்சோடும் கலந்த உறவு. அவருக்கும் எனக்கும் இடையிலான அந்த பாசத்தை உன் வசியம் எப்போதும் முறியடிக்க முடியாது.”
சாயரா சிரித்தாள்.
அவளுடைய அழகில் அச்சமூட்டும் இருள் மிளிர்ந்தது.
“அமையாதேவி… நீ சொல்வது கற்பனை. அவருடைய கண்கள் என்னை மட்டும் பார்க்கின்றன. அவர் உன்னைக் கைவிட்டு விட்டார்.
இத்தோடு இங்கிருந்து நீ புறப்பட்டு விட்டாள் உன் உயிர் உன் உடலில் இருக்கும் இல்லை என்றால் ஏதோ நீ காதல் பாசம் என்று பிதற்றுகிறாயே இவருடைய கையினாலே நீ உயிர் பிரிவாய்”
ஆணவமாக கூறினாள் சேனபதி சாயரா.
அமையாதேவி தன் மார்பைத் தொட்டு, வலியுடனும் பெருமையுடனும் கூறினாள்.
“நீ தான் பிறற்றுகின்றாய் சேனபதி சாயரா உன் வசியம் அவர் கண்களை மறைத்திருக்கலாம்… ஆனால் இதயத்தை இல்லை. என் மன்னனால் என்னை மறக்க முடியாது, ஏனெனில் நான் அவர் மூச்சுக்குள்ளிருக்கும் உயிர். என்னிடம் இருக்கும் அன்பு பாசம் தான் உண்மையானது… அது எங்கிருந்தாலும் அவரை என்னிடம் திரும்ப இழுத்துவிடும்.”
அவளின் வார்த்தைகள் காற்றில் முழங்கின.
அதற்கு சாயரா அந்த அறையே அதிரும் அளவிற்கு சிரித்தவள்,
“தான் இவ்வாறு கூறுகின்றாயே பார்க்கலாம் உன் காதல் வெல்கிறதா இல்லை என்னுடைய வசியம் வெல்கிறதா என்று பார்க்கலாமா”
என்றவள் கெளதமாதித்தனின் புறம் திரும்பியவள்,
“அரசே இப்பொழுது நான் உங்களுக்கு ஆணை இடுகிறேன் தங்களுடைய வாளால் இப்பொழுதே இவளுடைய சிரசை கொய்து விடுங்கள் இது என்னுடைய ஆணை”
என்று கௌதமாதித்தனுக்கு உத்தரவிட்டாள்.
அவனோ அவளுடைய வசியத்தில் இருந்து இன்னும் மீளவில்லை. அவளிடம் சரி என்பது போல் தலையை ஆட்டியவன் தன்னுடைய இடையில் வாழை தேட அதுவோ அங்கு இல்லை. பின்பு அவளுடைய அறையில் மாட்டி இருக்கும் விளை பார்த்தவன் அதை எடுக்க போக அவனுடைய செயலைக் கண்டு அமையாதேவி திடுக்கிட்டாள்.
“மன்னா தாங்கள் என்ன காரியம் செய்து கொண்டிருக்கிறீர்கள். தாங்கள் என்னை கொல்ல முயற்சித்து விட்டீர்களா”
என்று அவனிடம் கேட்டவாறே தன்னை கடந்து அந்த வாளை எடுக்க போகும் அவனுடைய தோல் புஜத்தை பிடித்து தடுத்தாள் அமையாதேவி.
“என்னை பாருங்கள் மன்னா என்னுடைய கண்களை பாருங்கள் அதில் உங்களுக்கான காதல் தெரியவில்லையா என் உயிரோடு கலந்த காதல் தான் உங்களை காப்பாற்றும்.
உங்கள் இதயத்தில் நான் வாழ்கிறேன்.
என் காதலை நீங்கள் மறந்தாலும் கூட அது உங்களை விடாது
அவளுடைய வசியத்தில் இருந்து வெளியே வாருங்கள் மன்னா என்னை மறந்துவிட முடியாது நான் தான் உங்கள் மூச்சு, உங்கள் வாழ்வு”
என்று கண்ணீர் வடிய அவள் கூறிக் கொண்டிருக்க அவனுடைய உள்ளத்திலோ சிறு நடுக்கம் உண்டானது.
ஆனால் அதையும் மீறி சாய்ராவின் வசியம் அவனை ஆட்சி கொள்ள தன்னுடைய தோள் புஜத்தை பிடித்துக் கொண்டிருக்கும் அமையாதேவியை மற்றொரு கையால் பிடித்து அங்கிருந்து தள்ளி விட்டவன் அங்கு சுவற்றில் மாட்டி இருந்த வாளை எடுத்து வந்து அவருடைய சிரசை வெட்டும் தருணத்தில் சாயராவின் வசியமோ கணப்பொழுதில் கட்டவிழ்ந்தது.
இல்லை என்றால் அமையாதேவியின் சிரசுக்கும் கௌதமாதித்தனின் கையில் இருக்கும் வாளுக்கும் இடையே சற்றே மட்டுமே இடைவெளி இருந்தது.
கீழே விழுந்த அமையாதேவியோ அவளுடைய இடையில் ஒரு சிறிய சுருக்குப்பையில் கௌதமாதித்தன் கொடுத்த அந்த நாணயம் எப்பொழுதும் அவளுடைய இடையில் இருக்கும்.
அவன் தள்ளிவிட்ட வேகத்தில் அவள் வேகமாக விழுந்து விட அதுவோ அவளுடைய இடையில் இருந்து உருண்டு ஓடுயது.
அதை பார்த்தவளோ சட்டென தன்னுடைய கையில் எடுக்க அந்த நாணயத்தில் அவளுடைய ஸ்பரிசம் பட்டதும் அவர்களுடைய உயிர் காதல் அங்கு ஆட்சி புரிய சாயராவின் வசியமோ கௌதமாதித்தனிடமிருந்து விலகியது.
தன்னுடைய உடலில் ஏதோ மாற்றம் நிகழ்ந்தது போன்று இருக்க தன்னுடைய கண்களை சுழற்றி பார்த்த கௌதமாதித்தனோ தன்னுடைய கையில் இருக்கும் வாள் அமையாதேவியின் சிரசை நோக்கி இருக்க திடுக்கிட்டவனோ அதை தன்னுடைய கையில் இருந்து விட்டெறிந்தான்.
அதே வேகத்தில் கீழே விழுந்து இருக்கும் அமையாதேவியையும் தூக்கியவன்,
“அமையா தங்களுக்கு என்னவாயிற்று தான் என் கீழே விழுந்து கிடக்கிறீர்கள்”
என்று அவளை ஆராய்ந்தவாறு கேட்டான் கௌதமாதித்தன்.
அவன் இவ்வாறு கேட்கவும் அவனை ஆராய்ந்த அமையாதேவியோ,
“உங்களுக்கு ஒன்றும் இல்லையே நான் நன்றாகத்தான் இருக்கிறேன் தாங்கள் என்னை நினைத்து கவலை கொள்ள வேண்டாம் நான் யார் என்று தெரிகிறேனா”
“என்ன பிதற்றுகிறாய் அமையா தங்களை எவ்வாறு எனக்கு நினைவு இல்லாமல் போகும் தான் ஏன் இவ்வாறு என்னை கேட்கிறீர்கள்”
என்று வினவினான்.
சாயராவுக்கோ குழப்பமாக இருந்தது என்ன நடந்தது.
‘எவ்வாறு என்னுடைய வசியத்தில் இருந்து அவர் மீண்டார்.
கூடாது நடக்கக்கூடாது எவ்வாறாகினும் அவர் எனக்கு மட்டுமே சொந்தம் அவரை இந்த அமையாதேவிக்கு விட்டுக் கொடுக்க நான் தயாராக இல்லை’
என்று நினைத்துக் கொண்டவள் அங்கு கீழே கிடக்கும் வாளை எடுத்து அமையாதேவியின் சிரசை வெட்ட போக அதை தன்னுடைய கூர்வெழிகளால் கண்டுகொண்ட கெளதமாதித்தனோ அவள் கையில் இருந்த வாளை பிடுங்கி அவளுடைய வயிற்றில் இறக்கினான்.