கனவு -26
“டாக்டர் துவாரகா எப்படி இருக்கா எப்ப கண் புளிப்பான” என்று டாக்டர் அமராந்தியிடம் கேட்டுக் கொண்டிருந்தான் கௌதம்.
“நீங்க கவலைப்படாதீங்க கௌதம் சீக்கிரமா கண் முழிச்சிடுவாங்க”
“பொய் சொல்லாதீங்க டாக்டர் நான் எப்ப எல்லாம் கேட்கிறனோ அப்பெல்லாம் நீங்க இப்படி தான் சொல்றீங்க ரெண்டு வாரம் ஆச்சு டாக்டர் அவ கண்ணு முழிச்சு
எனக்கு ரொம்ப பயமா இருக்கு டாக்டர் ஏதாவது பண்ணுங்க எனக்கு அவ திரும்ப வேணும் அவளை இப்படி என்னால பார்க்க முடியல”
என்று கலங்கிய விழிகளோடு கூறினான் அவன்.
அவனைப் பார்க்கவே பாவமாக இருந்தது.
கௌதம் எவ்வளவோ முயன்றும் அவளை தூக்கத்திலிருந்து எழுப்ப முடியாததால் நேராக டாக்டர் அமராந்தியிடம் கொண்டு வந்து சேர்த்து விட்டான்.
அவரோ அவளுக்கு தேவையான முதலுதவிகள் அனைத்தும் செய்து பார்த்தவிட்டார்.
“ சாரி கௌதம் துவாரகா கோமாவுக்கு போய்ட்டாங்க இனி அவங்களா முயற்சி செஞ்சா மட்டும் தான் முடியும் பார்க்கலாம்”
என்று கூறிவிட்டார்.
இதோ இரண்டு வாரங்கள் கடந்துவிட்டது இன்னும் அவள் கோமாவில் இருந்து வெளியே வந்த பாடு தான் இல்லை.
இந்த இரண்டு வாரங்களில் அவனுடைய நிலையோ மிகவும் மோசமாக இருந்தது.
உடல் மெலிந்து கண்களில் குழி விழுந்து நிறம் மங்கி என்று காணப்பட்டான் கௌதம்.
“கொஞ்சம் பொறுமையா இருங்க கௌதம் இது நம்ம கைல ஒன்னும் இல்ல துவாரகா ஷார்ட் டைம் கோமாவில் இருக்காங்க நம்மளால எதுவும் செய்ய முடியாது அவங்களா வெளிய வந்தா தான் உண்டு. ட்ரீட்மெண்ட் போய்கிட்டு இருக்கு நீங்க கவலைப்படாதீங்க சீக்கிரமாவே துவாரகா ரெக்கவர் ஆகி வருவாங்க” என்று டாக்டர் கூறினார்.
ஹாஸ்பிடலில் அவளை அனுமதித்திருக்கும் அறைக்கு வெளியே போடப்பட்டிருக்கும் நாற்காலியில் கவலை தோய்ந்த முகத்துடன் கௌதம் அமர்ந்திருக்க அப்பொழுது அவனுடைய தோளில் கரம் பதித்தவாறு வந்து நின்றாள் சாயரா.
யார் என்று ஏறிட்டு பார்த்தவனோ தன்னுடைய ஆபீஸின் சிஇஓவின் பெண் என்று,
“நீங்களா..”
என்று கேட்டான் கௌதம்.
ஆம் அவள் தான் அவனை அங்கு சிம்லாவில் பார்த்ததிலிருந்து அவன் இருக்கும் இடத்தை அறிந்து கொண்டவள் அவனை அடைவதற்காகவே அவனைத் தேடி இங்கு வந்து விட்டாள்.
இந்த இரண்டு வாரமும் அவன் அலுவலகத்திற்கு தொடர்ந்து செல்லவில்லை.
தன்னுடைய மனைவியின் அருகிலேயே இருந்து கொண்டான்.
இரண்டு நாள் பொறுமையாக இருந்தவள் அவனை பார்க்க முடியவில்லையே என்று என்னானது என்று விசாரிக்கும் பொழுது துவாரகாவின் நிலையம் தெரிய வர அவளுடைய மனதிலோ அவ்வளவு ஆனந்தம்.
“நம்ம கையால சாகாம இப்படி கோமாவுக்கு போயிட்டாளா எப்படியோ என்னோட ரூட்டு கிளியர் ஆனா சரி”
என்று நினைத்துக் கொண்டவள் தினமும் இங்கு கௌதமை பார்க்க வந்து விடுவாள்.
அவனோ தன்னுடைய அருகில் இருக்கும் பெண் இப்படி ஒரு நோக்கத்தில் தான் வந்திருக்கிறாள் என்று அறியாது முழுவதுமாக தன்னுடைய மனைவியின் சிந்தனையிலேயே மூழ்கி இருந்தான்.
இவளோ எவ்வளவோ அவனிடம் நெருங்கி பார்த்து விட்டாள்.
ஆனால் அவனோ கொஞ்சம் கூட அவளைப் பற்றி அவன் நினைக்கவே இல்லை.
‘என்ன இவரு நம்மளும் எவ்வளவோ நெருங்கி நெருங்கி பார்க்கிறோம் ஆனா இவரோட பார்வை என் பக்கம் கொஞ்சம் கூட திரும்பவே மாட்டேங்குது இப்படியே இருந்தா எப்படி நம்ம நினைச்சது நடக்கும்.
அந்த துவாரகா அப்படி என்ன அவ மேல இவ்வளவு பாசம்.
எத்தனை ஜென்மம் கடந்தாலும் கொஞ்சம் கூட குறையாமல் அதே காதலோட இருக்காரே அப்போ இவரையே நெனச்சுக்கிட்டு இருக்குற என்ன பத்தி இவருக்கு எந்த ஒரு கவலையும் இல்லை.
இதுக்கு ஒரே வழி தான் இருக்கு. கோமால இருக்கிறவ ஒரேடியா சாகணும் அப்பதான் நம்ம நினைச்சது நடக்கும்’
என்று நினைத்துக் கொண்டவள்,
“மிஸ்டர் கௌதம் இப்போ உங்க வைஃப்யோட கண்டிஷன் எப்படி இருக்கு”
என்று அக்கரையாக கேட்பவள் போல் கேட்டாள்.
அவனோ,
“இன்னும் கோமாவில் இருந்து வெளியே வரல மேடம்”
“என்ன கௌதம் நீங்க நான் உங்களை விட சின்ன பொண்ணு என்ன போய் மேடம்னு சொல்லி அந்நியப்படுத்தறீங்களே”
என்றாள் அவள்.
“என்னதான் நீங்க என்ன விட வயசுல சின்னவங்களா இருந்தாலும் என்னோட சிஇஓவோட பொண்ணு நீங்க. சோ மேடம் னு கூப்பிடுறது தான் சரியா இருக்கும்”
“ஐயோ அதெல்லாம் வேண்டாம் கௌதம் என்ன நீங்க சாயரானே கூப்பிடுங்க எனக்கு மேடம்னு கூப்பிடுறது பிடிக்கல ப்ளீஸ்”
என்றாள் அவள்.
“சரி ஓகே ட்ரை பண்ற மேடம் சாரி சாயரா”
“ம்ம் இது நல்லா இருக்கு உங்க வாயால என்னோட பேரை சொல்லி கூப்பிடும் போது எவ்வளவு நல்லா இருக்கு தெரியுமா”
என்று முதல்முறையாக அவனுடைய வாயிலிருந்து அவளுடைய நாமத்தை கேட்டவளுக்கோ உள்ளூர மகிழ்ச்சியாக இருக்க அதை அப்படியே அவனிடம் பகிர்ந்தாள்.
ஆனால் அவனும் அதையெல்லாம் யோசிக்கவே இல்லை.
“கௌதம் நான் ஒரு தடவை உங்க வைஃபை பார்க்கலாமா”
“வாங்க நான் உங்களை கூட்டிட்டு போறேன்”
என்றவன் அவளை அழைத்துக்கொண்டு துவாரகா இருக்கும் அறைக்குள் சென்றான்.
அங்கு மெத்தையில் மருத்துவ உடை அணிந்து மூக்கில் ஆக்ஸிஜன் மாஸ்க் பொருத்தப்பட்டிருக்க அவளுடைய உடலிலோ மருத்துவ உபகரணங்களின் வயர்களே தற்சமயம் ஆட்சி புரிந்து கொண்டிருந்தன.
அவளை அந்த நிலையில் கண்ட சாயராவின் விழிகளோ சந்தோஷத்தில் மென்னின.
ஆனாலும் குறை உயிராக இருப்பவளை ஒரேடியாக உயிரை எடுத்து விடும் நோக்கில் தான் அவள் உள்ளே வந்தது.
துவாரகாவிற்கு ஒரு பக்கம் கௌதம் நின்று கொண்டிருக்க மற்றொரு பக்கம் நின்ற சாயரா தன்னுடைய முகத்தில் கருணையை காட்டினாலும் அவளுடைய விழிகள் மட்டும் அவளை எரித்துக் கொண்டிருந்தன.
‘இந்த ஆக்சிஜன் மாஸ்கை எடுத்து விட்டுட்டா நீ ஒரேடியா இந்த உலகத்தை விட்டு போயிடுவடி’
என்று நினைத்துக் கொண்டவள் அருகில் இருக்கும் கௌதமை பார்த்தாள்.
பின்பு சட்டென இருமியவாறு நடிக்க ஆரம்பித்தாள்.
“ஐயோ என்னாச்சு மேடம் உங்களுக்கு”
என்று அவன் கேட்க அவளோ இருமியவாறு,
“தா த தண்ணி கெளதம் ப்ளீஸ் கொஞ்சம் தண்ணி கொடுங்களேன்”
என்று கேட்க அவனோ,
“இரு இருங்க சாய்ரா நான் இப்ப கொண்டு வரேன்”
என்றவன் அறையை விட்டு வெளியேறினான்.
அவன் அறையை விட்டு வெளியேறவும் நடித்துக் கொண்டிருந்தவளின் முகமோ விகாரமாக மாறியது.
துவாரகாவின் மூக்கில் செலுத்தப்பட்டிருந்த ஆக்சிஜன் மாஸ்கை எடுத்துவிட்டவள் அவளுடைய கழுத்தை தன்னுடைய இடது கையால் இறுக்கமாக பிடித்து நெரித்தவள் கண்களில் கொடூரம் மின்ன கோமாவில் இருந்தவளை பார்த்து,
“என்னடி என் கௌதம கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழலாம்னு நினைச்சியா அது உன்னோட பழைய ஜென்மத்திலையும் நடக்க விடல இந்த ஜென்மத்துலையும் நடக்க விடமாட்டா இந்த சாயரா.
அதனாலதான் இந்த ஜென்மத்திலையும் என் கையாலேயே நீ சாகணும்னு அந்த கடவுள் விதிச்சிருக்காரு.
உன்னோட உயிரை எடுத்துட்டு சந்தோசமா என் கௌதம கல்யாணம் பண்ணி போன ஜென்மத்துல கிடைக்காத என்னோட வாழ்க்கையை இந்த ஜென்மத்துல ஆசை தீர அனுபவிக்க போறேன்.
நீ செத்து நாங்க ரெண்டு பேரும் எப்படி சந்தோஷமா வாழ்றோம்ங்கிறத பார்த்து உனக்கு ஆத்ம சாந்தி கூட கிடைக்கக் கூடாதுடி”
என்று சொல்லிக் கொண்டிருந்தவளோ மற்றும் ஒரு கையையும் சேர்த்து அவளுடைய கழுத்தை நெரிக்க அப்பொழுது அவளுடைய கையில் இருந்த அந்த நாணயம் துவாரகாவின் ஸ்பரிசத்தை தீண்டியது.
இரண்டு வாரங்களாக கோமாவில் இருந்தவள் உடலும் அந்த நாணயத்தின் தீண்டலில் உயிர் பெற்றது போல இருந்ததன.
இத்தனை நாட்கள் செயலிழந்து கிடந்த அவளுடைய கை கால்களோ அசைவை ஏற்படுத்தின.
அவளுடைய மூச்சு குழலோ தற்சமயம் மூச்சுக்காக ஏங்கின.
அதை பார்த்த சாயரா,
“சாவுடி செத்துத் தொலை”
என்று சொல்லியவாறு மீண்டும் அவளுடைய கழுத்தை நெருக்க அப்பொழுது கையில் தண்ணி பாட்டிலோடு கௌதம் கதவை திறக்க சட்டென அவள் கழுத்தில் இருந்த கையை எடுத்துக் கொண்டாள் சாயரா.
“கௌதம் இங்க பாருங்க சீக்கிரம் டாக்டரை கூப்பிடுங்க இவங்களுக்கு என்னமோ ஆயிட்டு”
என்று அவள் சொல்ல கௌதமோ துவாரகாவின் அந்த நிலையைக் கண்டு அதிர்ந்தவன் வேகமாக அமராந்தியை அழைத்தான்.
அவன் அழைத்ததும் உடனே டாக்டர் குழு விரைந்து வந்தவர்கள் கௌதமையும் சாயராவையும் வெளியில் அனுப்பிவிட்டு அவளுக்கு ட்ரீட்மென்ட் செய்ய ஆரம்பித்தார்கள்.
“ச்சை போச்சு எல்லாம் போச்சு இந்த கௌதம் இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு வந்திருந்தா இன் நேரம் அவளை கொன்னு இருப்பேன் இப்படி சீக்கிரம் வந்து என்னோட காரியத்தை கெடுத்துட்டானே”
என்று கையை பிசைந்து கொண்டு நின்றாள் சாயரா.
கௌதமோ மிகுந்த படபடபோடு காத்துக் கொண்டிருந்தான்.
சிறிது நேரம் கழித்து வெளியே வந்த டாக்டர் அமராந்தியோ,
“கௌதம் இத்தனை நாளா கோமால இருந்த துவாரகா கோமாவில் இருந்து வெளி வந்துட்டாங்க”
என்று அவர் சொல்ல சந்தோஷத்தில் துள்ளி குதித்தான் கௌதம். அதேவேளை முகத்தில் கொடூரம் மின்ன அவன் அருகில் நின்று கொண்டிருந்தாள் சாயரா.
‘ ஆஆஆஆஆ செத்துருப்பான்னு நினைச்சா உயிர் பிழைச்சிட்டாளே’
என்று நினைத்துக் கொண்டாள் அவள்.
“கௌதம் நீங்க என்னோட ரூமுக்கு வாங்க உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்”
என்று அமராந்தி சென்று விட்டார்.