காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 10 🖌️

5
(1)

வீட்டு வாசலின் முன் மாணவர்கள் கூட்டம் கூடியிருக்க, அனைவரையும் உள்ளே போக விடாமல் தடுத்தவாறு பொலிஸ் அதிகாரிகள் நிற்க பூகம்பமே வெடித்தது. உள்ளே சத்யா போட்டிருந்த வெண்மை நிற டீ சேர்ட்டில் இரத்தம் படிந்து தன் தலைமுடி கோலம் கலைந்து கண்கள் வெடித்து சிவந்து நரம்புகளுக்குள் சினம் ஊடுறுவ கண்ணீர் ஒரு பக்கம் கண்களை எரித்துக் கொண்டு வெளியேற இன்னும் இரத்தம் நாடி நாளம் நரம்பு என அனைத்திலும் பழி உணர்வு ஊடுறுவி கொதிக்க கைகள் இரண்டையும் பொத்தி பற்களைக் கடித்தவாறு நடு மண்டபத்தில் கொலை வெறியுடன் அமர்ந்திருந்தான் சத்யா. அவனை நோக்கி தலையைக் குனிந்தவாறு அவனருகில் வந்து அவன் தோள்களைப் பற்றிய அமர்ந்தான் அவனது நண்பன் வினோத்.

 

“சத்யா… அப்பாவுக்கு பியுனரல் பண்ணணும்…” என்றதும் பாய்ந்து அவன் சேர்ட் கொலரை பிடித்து பல்லைக் கடித்தான்.

 

“என் அப்பாவ ஒருத்தன் கொன்னுருக்கான்… அவன இன்னுமாடா உங்களால கண்டு பிடிக்க முடியல? உங்களை எல்லாம் என்னன்னு சொல்றது? அசிங்கமா இல்லை?” என சிங்கம் போல கர்ஜிக்க

 

“டேய்… என்னடா பேசுற? அவன் யாரா இருந்தா என்ன? அதெல்லாம் பிறகு பாத்துக்கலாம். முதல்ல அப்பாவுக்கு பியூனரல் பண்ணணும்.” என்றிட அடுத்த நிமிடம் கொலரில இருந்த கை அவன் கழுத்தில் இருந்தது.

 

“என்ன? பியூனரல் பண்ணணுமா? என் அப்பாவ ஒருத்தன் கொன்னிருக்கான். அவன் உயிரோட இருக்கும் போது நான் எப்படிடா என் அப்பாவுக்கு குழி தோண்டுவேன்? முதல்ல அவனுக்கு குழி தோண்டிட்டு அதுக்கு அப்றமா என் அப்பாக்கு பியூனரல் பண்றேன். இங்க பாரு… நீ என்ன பண்ணுவ ஏது பண்ணுவன்னு எனக்கு தெரியாது. அவன் யாரு? என்ன பண்றான்? எதுக்கு என் அப்பாவ கொன்னான்னு இன்னும் டூ ஹவர்ஸ்ல எனக்கு தெரிஞ்சாகணும். இல்லை… இன்னும் வன் ஹவர்… இன்னும் வன் ஹவர்ல… எனக்கு தெரிஞ்சாகணும்.” என்றான் கட்டளையாக அவனை தீப் பார்வையில் எரித்தவாறு.

 

அங்கிருந்து நகர்ந்து படியேறி மேலே செல்ல முயற்சித்தவன் காதுகளுக்கு வெளியே நின்று கத்தும் மாணவர்களின் “கம் அவ்ட் சத்யா.” எனும் சத்தம் காதுகளைத் துளைக்க வெளியில் வந்து தலைமுடியைக் கோதியபடி தலையை உயர்த்தி கம்பீரமாக நின்றான். செய்தியாளர்கள் பொலீஸார்களை தான்டி அத்துமீறி நுழைந்து அவனருகில் வந்தனர்.

 

“சேர்… உங்க அப்பா சாவுக்கு நீங்க நியாயம் கேட்க மாட்டீங்களா?”

 

‘அவர் சாவுக்கு யார் காரணம்னு நினைக்கிறீங்க?

 

“உங்க அப்பா சாவு கொலைன்னு சொல்றாங்களே. ஆனால் கொலைகாரன கண்டு பிடிக்க நீங்க எந்த எக்ஸனும் எடுக்குற மாதிரி தெரியலையே.”

 

“சேர்… நீங்க கேஸ் போட வேணாம்னு சொன்னீங்க. அதுவும் இல்லாம போஸ்ட்மார்ட்டம் பண்ண கூட விடலையே. இதுக்கு பின்னாடி ஏதாவது உள்குத்து இருக்கா?”

 

“உங்களுக்கும் வாசு சேருக்கும் சில மனஸ்தாபங்கள் இருந்திச்சு. அதனால நீங்களே அவர கொன்னுட்டு கதைய மாத்திட்டீங்க. அதனாலதான் கேஸ் போட விட மாட்றீங்கன்னு சொல்றாங்க. அது உண்மையா?”

 

என ஆளுக்கு ஆள் கேள்விகள் எழுப்ப அவன் கொடுத்தது ஒரே ஒரு பதில்தான். கைகள் இரண்டையும் ஒன்றாக இணைத்து “சத்தியமே வெல்லும்…” என்றவன் திரும்பி நடக்க

 

“சேர்… சேர்… வன் மோர் குவெஸ்ஸன்… ப்ளீஸ்…” என அனைவரும் உள்ளே அத்துமீறி நுழைய அவர்களைத் தடுத்தார்கள் பொலிஸ் அதிகாரிகள்.

 

உள்ளே சென்றவன் ஒரு நிமிடம் நிற்க அனைவரும் அவனை நோக்கினர். அவன் திரும்பி வெளியில் பார்வையை செலுத்தி கண்களாலேயே ஆதியை அழைத்தான்.

 

“லெட் ஹிம் இன்.” என்று ஆதியை கை காட்ட அவனை மாத்திரம் உள்ளே அனுப்பினார்கள் பொலிஸ் அதிகாரிகள். உள்ளே அவன் நுழைந்ததும் அவன் முகத்தை பார்க்காது திரும்பி நின்றவாறே “ஹ்ம்… சொல்லு…” என்றான் சத்தமாக.

 

“அப்பா… எப்படி.” எனத் தலையைக் கவிழ்த்துக் கேட்டவனுக்கு பதில் வேறது வந்தது.

 

“வந்த விசயத்தை சொல்லு…” என்றான் அவசரமாக.

 

“இல்லை சும்மா. உன்னை பாக்கத்தான் வந்தேன்…” என்று அவன் நிலமையைக் கருதி பொய்யுரைத்தான்.

 

அவன் பக்கம் திரும்பி “பொய் சொல்றியா?” என்று அவனை மேலும் கீழும் பார்த்தவன் கூர்மையான பார்வையுடன். “காவ்யா ஏதாவது சொல்ல சொன்னாளா?” என்றான் சந்தேகமாக.

 

அவன் கேள்விகளில் பயந்து போனவன் தடுமாறியவாறே எச்சில் விழுங்கி தன்னை சமப்படுத்தி “இல்லை… இல்…லை.” என்றான் தடுமாறியவாறு.

 

“இப்போ உண்மைய சொல்லப் போறியா இல்லையா? காவ்யா என்ன சொல்ல சொன்னா?” என தீர்க்கமாக வினவினான்.

 

“அவளுக்கு நாளைக்கு கல்யாணம் பண்ண போறாங்க.” என்றான் தலை குனிந்து நின்று.

 

“என்ன சொல்ற?” என்றான் சாதாரண அதிர்ச்சியுடன்.

 

“ஆமாம்… அவளுக்கு நாளைக்கு வேற ஒருத்தன் கூட கல்யாணம் பண்ண போறாங்க. ஆனா… அவக்கிட்ட நிச்சயம்னுதான் சொல்லி வெச்சிருக்காங்க. அவ ஏதாவது பண்ணி கல்யாணத்தை நிறுத்திடுவான்னுதான்… காலையில அவக்கிட்ட சொல்லி கல்யாணத்துக்கு சம்மதிக்க வெச்சிடலாம்னு அப்படி பண்ணாங்க.” என்று காவ்யாவுக்கே தெரியாத உண்மையை அவனிடம் கூறினான் அவன் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையில்.

 

“சரி… அவ்ளோ தானா? இத சொல்லதான் இங்க வந்தியா?” என சாதாரணமாக கூறியவன் “சரி… கிளம்பு.” என்று எந்தக் கவலையும் இல்லாமல் கூறிவிட்டு மேலே செல்ல முற்பட

 

அவன் செய்கை ஆதிக்கு எரிச்சலைத்தான் தந்தது. “இங்க பாரு மாமா… இந்த நேரத்துல இப்படி பேசக் கூடாதுதான். இருந்தாலும்… சொல்றேன். காவ்யா உன்னை ரொம்ப சின்சியரா லவ் பண்றா. நீ இல்லன்னா அவ செத்துடுவா. அவளால நீ இல்லாத வாழ்க்கைய நினைச்சி கூட பார்க்க முடியாது. நாளைக்கு நீ வந்து கல்யாணத்தை நிறுத்துற… இல்லன்னா அவள உயிரோட பார்க்க முடியாது.” என்று ஒரே அடியில் கூறிவிட்டு வெளியே சென்று விட்டான். ஆதி.

 

அவன் பேச்சை நினைத்து வெற்று புன்னகை உதிர்த்தவன் மேலே குளியலறைக்குள் சென்றுவிட்டான். ஹீட்டரை ஒன் செய்தவன் டீ சேர்ட்டைக் கழட்டிவிட்டு பாத் டப்பில் உட்கார நீரின் சூட்டில் அவன் உடம்பில் படிந்த ரத்தத் துளிகள் உறுகி கரைய தலைமுடியைக் கோதிவிட்டவாறு தன் தொலைபேசி அழைப்பை ஏற்றான்.

 

அவன் எதுவும் பேசாமல் மறு பக்கம் இருப்பவர் பேசுவதை மாத்திரமே கேட்டுக் கொண்டிருந்தான். எதிரில் இருந்தவன் அவன் அப்பாவை கொன்றவன் பெயரைக் கூறிட அதைக் கேட்டவன் கண்கள் அனலைக் கக்கின.

 

அதே கோபத்துடனும் ஆத்திரத்துடனும் அவன் பெயரை ‘ஆர். ஜே…’ என கத்தியவாறு அருகில் இருந்த கண்ணாடியை கைகளால் ஓங்கி குத்தினான். கண்ணாடிச் சுவர் அவன் கோபத்தின் தாக்கத்தில் சில்லு சில்லாய் உடைந்து சிதறின. அவன் கைகளினுள் கண்ணாடித் துகள்கள் இறங்கி ரத்தம் வெளியே தெறிக்க அவ்விடம் முழுக்க செங்குருதி வாசம் கமழ்ந்தது.

 

“ஆர். ஜே நீ பண்ணது சின்ன விசயம் இல்லை. என் அப்பாவையே கொன்னுட்டல்ல? உனக்கும் எனக்கும் தானடா பிரச்சினை. ஆனால் எதுக்காகடா என் அப்பாவ கொன்ன? உனக்கு ரொம்பப் பெரிய தண்டனைய கொடுப்பேன்டா. நீ சாதாரணமா சாக கூடாது. துடிக்க துடிக்க சாகணும். நீ தினம் தினம் நரக வேதனைய அனுபவிப்ப. உன் சாவு என் கைலதான்டா…” எனக் கத்தினான் ஆக்ரோஷமாக.

 

ஆர்யன் ஜோஸப் (ஆர். ஜே) வாசுதேவ ராமின் தங்கை ரஞ்சனாவின் மகன். ரஞ்சனா, வாசுதேவ ராம்தான் தன் கணவரைக் கொன்றார் என்று நம்பி அவரை கொன்று பழி தீர்க்க வேண்டும் என்ற வெறியுடன் வாழ்கிறார். இதனாலேயே வாசுதேவ ராமையும் அவரின் குடும்பத்தையும் வேரோடு அழிக்க வேண்டும். அவரையும் அவரது மகனையும் நீ பழி வாங்கி தீர வேண்டும் என பழி உணர்ச்சியை மகனுக்கு ஊட்டி வளர்த்தார். இப்போது அதை செய்தும் காட்டி விட்டார்.

 

அவரது அடுத்த இலக்கு சத்யா. ஆனால் இந்த விடயம் எதுவும் சத்யாவுக்கு தெரியாது. இப் பிரச்சினையிலேயே சத்யாவின் அம்மாவைக் கொன்று விட்டனர். ஆனால் அவனிடம் சத்யாவின் தந்தை வாசுதேவ ராம் அவனது அம்மா சாதாரணமான விபத்திலேயே இறந்தார் எனக் கூறி வைத்திருந்தார். அது மட்டுமல்லாது ரஞ்சனா அவனது அத்தை என்பதையும் அவனிடமிருந்து மறைத்து விட்டார். வாசுதேவராம் தன் தங்கையின் கணவரை கொல்லவில்லை. கொலை நடந்த இடத்தில் இருந்தாரே தவிர அவருக்கும் ரஞ்சனாவின் கணவன் சாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

 

சத்யாவுக்கும் ஆர்.ஜேவுக்கும் இடையில் அறிமுகம் உண்டானதே காவ்யாவை காதலிக்கிறேன் என்று ஆர்.ஜே அவளிடம் பிரச்சினை செய்ததில் ஏற்பட்ட சண்டையில்தான். ஆனால் ஆர். ஜேவுக்கு சத்யாவும் காவ்யாவும் ஏற்கனவே காதலிக்கிறார்கள் என்று தெரிந்துதான் அவர்களைப் பிரிக்க காவ்யாவை காதலிப்பதாக நடித்தான்.

 

இன்னும் கூறப் போனால் காவ்யா அவள் சத்யாவை காதலிக்கிறாள் எனத் தெரிந்ததும் ஆர். ஜேவுக்கு அளவு கடந்த கோபம் பொத்துக் கொண்டு வந்தது. அதிலே காவ்யாவை எப்படியாவது சத்யாவைக் கொன்றாவது அடைந்து விட வேண்டும் என்ற ஒரு வெறி அவனுக்குள் தோன்றியது. இது அனைத்தையும் வைத்து மொத்தமாக அவனைப் பழி வாங்கவே அவனது தந்தையையும் கொன்று விட்டான்.

 

குளித்துக் கொண்டு வெளியில் வந்து நீர் சொட்ட சொட்ட கட்டிலில் விழுந்தவன் “டேட்… நீங்களும் அம்மாவ மாதிரியே என்னை அனாதை ஆக்கிட்டு போட்டீங்க?” என்றவாறு கண்களை மூடி அழுதவன் அப்படியே கனத்த மனதுடன் தூங்கிப் போனான்.

 

காலையில் பாட்டி காவ்யாவிடம் உண்மையைக் கூற… வீட்டில் உள்ள அனைத்தையும் தூக்கிப் போட்டு உடைத்து எறிந்தாள். “நோ…” எனக் கதறியவாறு. அவளால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை.

 

“நான் இந்தக் கல்யாணத்தை பண்ணிக்க மாட்டேன். என்னால இத பண்ணிக்க முடியாது. வாழ்ந்தாலும் சத்யா கூடதான் வாழுவேன். செத்தாலும் சத்யா கூடதான் சாவேன். அவனைத் தவிர யாரையுமே என்னால நினைச்சு கூட பார்க்க முடியாது.” எனக் கத்தியவாறு நிற்க

 

“இங்க பாருடி… அதெல்லாம் தெரியாது. இன்னைக்கு நாங்க பாத்து வெச்ச மாப்பிள்ளைக்கும் உனக்கும் கல்யாணம். அவ்ளோதான். நீ என்னதான் அடம் பிடிச்சாலும் இந்த கல்யாணம் நடந்தே தீரும்.” என்று மாறி கத்தினார்.

 

“முடியாது. நடக்காது. நான் அவனை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். என்னால அவனை கல்யாணம் பண்ணிக்க முடியாது. ப்ளீஸ்… பாட்டி…” எனக் கெஞ்ச அவளை வற்புறுத்திய சக்தி இழுத்துக் கொண்டு அறையினுள் வைத்து பூட்டச் செல்ல

 

“டேய்… என் அக்கா மேல இருந்து கைய எடுடா.” என அவன் கழுத்தை பிடித்தான் ஆதி அவனை முறைத்தவாறே.

 

சக்தி பாட்டியைப் பார்த்தான். அவர் ஆதியிடம் திரும்பி “கார்த்திக்… நீ இந்த விசயத்துல தலையிட்டன்னா இங்க நடக்குறதே வேற…” என்று மிரட்டினார்.

 

அவருக்கு மரியாதையில் அவன் கழுத்தை விட்டவன் காவ்யாவிடம் திரும்பி “நீ பயப்படாத காவ்யா. இந்த கல்யாணம் நடக்காது. நீ இல்லை… இங்க யாரு நினைச்சாலும் இந்த கல்யாணத்தை நடத்த முடியாது.”  எனக் கூறி அனைவரையும் முறைத்து விட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தான்.

 

காவ்யாவை எந்த பொருளுமே இல்லாத ஒரு அறையில் வைத்து வைத்து விட்டனர். உள்ளே ஏதாவது பொருள் இருந்தால் அதை வைத்து ஏதாவது செய்து தப்பித்து விடுவாள் என்ற பயம்.

 

உள்ளே அவள் கண்களைக் கசக்கி “சத்யா…  காப்பாத்து…” என்று தலையணையில் முகம் தாழ்த்தி கதறி அழுது கொண்டிருந்தாள். அவள் கதறல் யார் காதிலும் விழவில்லை.

 

அவளுக்காக மகாலக்ஷ்மி “கடவுளே. இந்த அநியாயத்தை நான் எங்கன்னு போய் சொல்லுவேன்? என் பொண்ண ஏன் இப்படி கொடுமை படுத்துறாங்க? இவங்க கிட்ட இருந்து என் பொண்ண காப்பாத்துங்க கடவுளே. அவ சின்னப் பொண்ணு. இப்படி அவளை அடைச்சு வெச்சு கட்டாயப் படுத்தி கல்யாணம் பண்ணி வைக்க போறாங்க. அந்த சத்யா கெட்டவனாவே இருந்துட்டு போகட்டும். அத அவளுக்கு சொல்லி புரிய வைக்காம இப்படி அவளை கொடுமைப் படுத்துறாங்களே. இத கேட்க யாரும் இல்லையா? என் பொண்ணுக்கு என் கண்ணு முன்னாடி அநியாயம் நடந்தும் அத தடுக்க முடியாத பாவி ஆகிட்டேனே.” என்று அழுது புலம்பினார்.

 

“சாமி… ஏன் காவ்யா அக்காவுக்கும் மட்டும் இப்படி நடக்குது? பாட்டி ஏன் இப்படி பண்றாங்க? அவங்க ஏன் இப்படி மனசாட்சியே இல்லாம நடந்துக்குறாங்க? காவ்யா அக்காவை எப்படியாவது காப்பாத்தி இந்த கல்யாணம் நடக்காத மாதிரி பண்ணிடு கடவுளே.” என வேண்டிக் கொண்டாள் பல்லவி.

 

“கிருஷ்ணா… உனக்கு தான் எல்லாமே தெரியுமே. ஆனால் இந்த அநியாயத்தை தடுக்க மாட்டியா? கண்ணு முன்னாடி காவ்யாவுக்கு அநியாயம் பண்றாங்க. அநியாயம் நடக்கும் போது கடவுள் மனிச ரூபத்துல வந்து அத தடுப்பாருன்னு சொல்லுவாங்க. அப்படி யாரையாவது அனுப்ப மாட்டியா கிருஷ்ணா? பாஞ்சாலிக்கு உதவி பண்ண மாதிரி ஏதாவது மந்திரம் பண்ணியாவது சத்யாவையும் காவ்யாவையும் சேத்து வெச்சிடு கிருஷ்ணா.” என தன் கடவுள் கிருஷ்ணாவிடம் வேண்டிக் கொண்டாள் மீரா.

 

உள்ளே அழுது அழுது கண்கள் சிவந்து காவ்யாவினால் முடியவில்லை. கல்யாணத்திற்கு நேரம் நெருங்கியது. காவ்யாவை தயார்படுத்த புடவையுடனும் நகைகளுடனும் வந்தார் மகாலக்ஷ்மி கண்கள் நிறைய கண்ணீருடன்.

 

அவர் கதவைத் திறந்ததும் பாய்ந்து கட்டிக் கொண்டாள். “ம்மா… இங்க பாரும்மா… உன் பொண்ணை எவ்ளோ சித்திரவதை பண்றாங்க. கட்டாயக் கல்யாணம் பண்றது சட்டப்படி தப்புமா. இதை பண்ண வேணாம்னு சொல்லுமா. ப்ளீஸ் சொல்லு… எனக்கு இப்படி அநியாயம் நடக்குது. ஆனால் நீ ஏன் இப்படி கல்லு மாதிரி நிக்கிற? போய் இந்த அநியாயத்தை தட்டிக் கேளு…” என அவரை உலுக்கி உலுக்கி அழுது புலம்பினாள்.

 

போதாததற்கு அவர் காலில் விழுந்து “ப்ளீஸ்… நான் உன்னை கெஞ்சி  கேட்குறேன். எனக்கு என் காதலை கொடுத்துடுமா… என்னை இவங்க கிட்ட இருந்து காப்பாத்து ப்ளீஸ்… இவங்க சொன்னா எல்லாம் கேட்குற ஜென்மம் இல்லை. முதல்ல இவங்க மனிசனுங்களே இல்லை. மனிதாபிமானம் இல்லாத மிருகங்க… ப்ளீஸ்… நீயும் இவங்கள மாதிரி மாறிடாத… உன் பொண்ணு வாழ்க்கைய நாசம் பண்ணிடாதம்மா… ப்ளீஸ்… உன்னை கெஞ்சி கேட்குறேன்…” என காலில் விழுந்து கதறியவளின் கையில் புடவையை வைத்து

 

“என்ன மன்னிச்சிடுடி. அன்னைக்கு எனக்கு நடந்த அதே அநியாயாம் உனக்கும் நடக்குது. ஆனால் என்னால தட்டிக் கேட்க முடியலடி. எனக்கு வேற வழி தெரியல. இத கட்டிக்கிட்டு வந்துரு…” என்று அழுதவாறு கூறிக் கொண்டு தன் கையறியா நிலையை நினைத்து உள்ளுக்குள் குற்ற உணர்ச்சியில் குறுகி நின்றார்.

 

காவ்யாவுக்கு வேறு வழி தெரியவில்லை. புடவையைக் கட்டிக் கொண்டு மனம் கனக்க நின்றிருந்தாள். அவளை அழைத்துச் சென்றாள் அகல்யா. என்னதான் திருமணத்துக்காக அவள் புடைவையைக் கட்டிக் கொண்டு வந்தாலும் சத்யாவைத் தவிர யாரையும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற ஒரு முடிவிலேயே இருந்தாள். அதனால்தான் கைகளுக்குள் விஷப் போத்தலை மறைத்து வைத்துக் கொண்டாள்.

 

சூரிய வெளிச்சம்  உடம்பைத் துளைத்துக் கொண்டு குளிரில் நடுங்கும் தேகத்தில் ஊடுறுவ கண்களை விழித்து எழுந்து அமர்ந்து முதல் வேலையாக நாட்காட்டியை ஆர்.ஜே வின் சாவை குறித்துக் கொண்டிருந்தான் சத்யா. அப்போது அவசரமாக அங்கே ஓடி வந்தான் அவனது நண்பன் விக்கி.

 

“சத்யா… காவ்யாவை காப்பாத்தனும். உடனே வாடா… காவ்யா வாழ்க்கைய காப்பாத்து…” என்று அவன் கைப் பிடித்து இழுத்தான்.

 

“என்ன உலர்ர? அவளுக்கு என்னாச்சு?” என சாதாரணமாக கையை விலக்கிக் கேட்டான்.

 

“அவளுக்கு கட்டாய கல்யாணம் பண்ணி வைக்க பாக்குறாங்கடா.” என பதற்றமாகக் கூறினான் விக்கி.

 

அவனைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தவன் “அவ்ளோ தான? இதுக்கா இவ்ளோ டென்சனா இருக்க? இது எனக்கு நேத்தே தெரியும். கல்யாணம் தானே பண்ணிக்க போறா? பண்ணிக்கிட்டு சந்தோசமா வாழட்டும்.” எனக் கூறி அறையை தாண்டி வெளியே செல்ல

 

“அவளுக்கு யாரை கல்யாணம் பண்ணி வைக்க போறாங்க தெரியுமா? அந்த கொலைகாரன. அவனை கட்டிக்கிட்டு அவ சந்தோசமா இருப்பான்னு நினைக்கிறியாடா?” என்று சத்யாவின் டீ சேர்ட்டை பிடித்து கத்தினான்.

 

அவனைத் தள்ளிவிட்டவன் மேலும் கீழும் பார்த்து புருவம் உயர்த்தி  “ஆர்.ஜே?” என ஆச்சரியமாக வினவ

 

“ஆமாம். அவள கல்யாணம் பண்ணிக்க போறவன் வேற யாருமில்லை. அந்த ஆர்.ஜே தான். இப்போ சொல்லு. கல்யாணத்தை நிறுத்தலாமா வேணாமா?” என்க அடுத்த நிமிடம் கார் புழுதி பறக்க காவ்யாவின் வீட்டை நோக்கி புறப்பட்டது.

 

ஆர். ஜேதான் மாப்பிள்ளை எனத் தெரிந்ததும் காவ்யாவுக்கு அவ்வளவு ஆத்திரமும் அடங்காத கோபமும் எழுந்தது. இருந்தாலும் தன் கோபததை அடக்கிக் கொண்டு அவன் அருகில் அமர்ந்து கொண்டாள். அவள் நெற்றியில் இருந்து கொட்டும் வியர்வையைப் பார்த்து துணியை கொடுத்தவன்

 

“என்ன? நம்ப முடியலையா? பெருசா நான் ராமத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னியே எங்க அவன்? வீட்டுல குறட்டை விட்டு தூங்கிட்டு இருக்கானா? அவன் அப்பாவை போட்டுட்டேன். கூடிய சீக்கிரமே அவனையும் போட்டுடுவேன். நான் தான் சொன்னேனே நீ எனக்குத்தான். எனக்கு மட்டும்தான் சொந்தம். அந்த ராம உன்கிட்ட நெருங்க விட மாட்டேன்.” என்று அவளை முறைத்தான்.

 

அவன்தான் சத்யாவின் அப்பாவைக் கொன்றவன் எனத் தெரிந்ததும் அவள் கண்களில் அதிர்ச்சி. இருந்தாலும் அதன் பின் அவன் கூறியதை எண்ணி ஒரு ஏளனப் புன்னகையை வெளியிட்டவள் “அதையும் பாத்துடலாம்.” என்றுவிட்டு தெனாவெட்டாக அமர்ந்திருந்தாள்.

 

நேரம் செல்ல மந்திரத்தை முடித்த ஐயர் “கெட்டிமேளம்… கெட்டிமேளம்…” எனக் கூறி அவனிடம் தாலியைக் கொடுத்ததும் காவ்யாவுக்கு நெஞ்சம் படபடத்தது. சத்யாவைத் தேடி கண்கள் ஏங்கின. இதயம் லப் டப் லப் டப்பென அடித்துக் கொள்ள இனி அவள் வாழ்க்கை முடிந்தது என எண்ணி கையில் இருந்த விஷப் போத்தலில் மூடியைத் திறந்தாள்.

 

அதே நேரம் டப்பென்று பாரிய சத்தமொன்று கேட்க அனைவரும் காதுகளை பொத்திக் கொண்டனர். காவ்யா உட்பட… புழுதி பறக்க ஒரு கார் வந்து நின்றது. வீடு முழுக்க புழுதியை அள்ளி அந்தக் கார் எறிய யாராலும் எதையுமே தெளிவாகப் பார்க்க முடியவில்லை.

 

🎶🎶🎶

 

யாா்ரா யாா்ரா இவன் ஊர கேட்டா தொியும்

பாா்ரா முன்ன வந்து நின்னு பாா்ரா புாியும்

கூரா நிற்க்கும் கத்தி கண்ணுக்குள்ள மிளிறும்

தாறுமாறா கில்லி பேர கேட்டா அதிரும்

வரலாம் வரலாம் வா வரலாம் வா பைரவா

வரலாம் வரலாம் வா வரலாம் வா பைரவா

 

🎶🎶🎶

 

வெளியில் இருந்து உள்ளே கெத்தாக நடந்து வந்தான் சத்யா. இடது கையில் தன் ஜெக்கட்டை தோளில் போட்டவாறும் வலது கையில் ஒரு பிஸ்டலை நெற்றியில் தேய்த்தவாறு கண்களில் நீல நிற கூலிங் க்ளாஸ் என கையில் வைத்திருந்த மின்ட் வர்க்க சீவிங் கம்களை எறிந்து வாயால் அதைப் பிடித்து சாப்பிட்டவாறே உள்ளே நுழைந்தான் சத்யா.

 

அவன் வருகைக்கு விசில் அடித்தான் ஆதி. “BGM போடு… BGM போடு…” என்றதும் உள்ளே கம்பீரமாய் நடந்து வந்து நின்றான்.

 

“ஏக்… தோ… தீன்… சார்…” என தன் கையிலிருந்த பிஸ்டலை மேல் நோக்கி அழுத்தி குண்டுகளை வெடிக்க செய்தான்.

 

அதில் மீரா, பல்லவி, மகாலக்ஷ்மி, விக்ரம், அகல்யா என அத்தனை பேருக்கும் சற்று நிம்மதி நிலவியது. ஆனால் ஏனையவர்களுக்கு சத்யா திருமணத்தை கலைத்து விடுவான் என்ற பயம்.

 

காவ்யா கர்வப் புன்னகையுடன் “க்யூயுய்…” என விசில் அடித்தாள். உள்ளே நடந்து வந்தவனின் சட்டையை வேகமாகச் சென்று பிடித்தான் சக்தி.

 

அவன் செயலில் கோபம் கொண்டவன் தன் கையிலிருந்த பிஸ்டலின் முனையை அவன் வாய்க்குள் வைத்து “ஹேய்… என்ன? லந்தா? ஒரே ஒரு சூட். தலை வெடிச்சி பீஸ் பீஸாகிடும்…” என்று கூறி மிரட்ட அவன் கண்களில் உயிர் பயம் தென்பட்டது.

 

சக்தியை இழுத்துக் கொண்டு வந்தவன் கீழே தள்ளிவிட்டு அருகில் கிடந்த நாற்காலியை இழுத்து அதில் காலுக்கு மேல் கால் போட்டு அமர்ந்தவன் ஆதியிடம் “கெட்ச்.” என பிஸ்டலைத் தூக்கிப் போட அதை தடுமாறியவாறே எப்படியோ பிடித்துக் கொண்டான் ஆதி.

 

“டேய்… மச்சான்… நம்ம ப்ரோ ரொம்ப சூடா இருக்காரு. கொஞ்சம் பாத்துக்கோ.” என்றதும்

 

“சரிடா மாம்ஸு…” என்றவன் சக்தியை இழுத்து அவனின் தலையில் பிஸ்டலை வைத்துப் பிடித்துக் கொண்டான்.

 

“டேய்… ரொம்ப ஓவரா சீன் போட்ட புல்லட்டை வாய்க்குள்ள இறக்கிடுவேன்.” என்றிட சக்தி பயம் தாங்காது

 

“வேணாம்… வேணாம்…” என வாயில் கன்னை பன் போல் வைத்து மிரட்டும் ஆதியைப் பார்த்து உலரிக் கொண்டிருந்தான். சத்யாவின் வருகையில் ஆர்.ஜே. அவனைப் பார்த்துக் கொண்டே கோபமாக எழுந்து நின்றாள்.

 

“ஹேய்ப் பேபே… உன்ன ரொம்ப அழ வெச்சிட்டாங்களா இவங்க?” என சத்யா காவ்யாவிடம் கேட்க

 

“ஆமாம் பேபே.” என சினுங்கி கண்களைக் கசக்கியவள் தன் கழுத்தில் கிடந்த மாலையை பிய்த்து எறிந்து ஆர். ஜேவை நோக்கி சொடக்கிட்டு

 

“இப்போ கட்றா தாலிய… உன்னால முடிஞ்சா.” என சவால் விட்டாள் சத்யா இருக்கும் தைரியத்துடன்.

 

அவள் பேசிர தொனியில் “ஏய்…” என அவளைக் கை நீட்டி எச்சரித்தான் ஆர்.ஜே.

 

“ஹேய்… என்னடா சவுன்டு? நீ ஒரு ஆம்பளையா இருந்தா ஆவளை தொர்ரா பாக்கலாம்…”  என்றான் சத்யா அவன் மேலுள்ள கொலைவெறியுடன்.

 

சத்யாவை நோட்டமிட்ட ஆர். ஜே அவன் கையில் பிஸ்டல் இல்லை என்ற தைரியத்தில் தைரியமாக காவ்யாவின் அருகில் தாலியை நீட்ட சத்யா வைத்திருந்த இன்னொரு பிஸ்டல் முனையிலிருந்து குண்டுகள் ஆர். ஜேவின் தோளைத் துளைத்துக் கொண்டு சதைகளினூடாக உள்ளே ஏறிட இரத்தம் சீறி காவ்யாவின் முகத்தில் தெறித்தது.

 

“டேய்…” என வலியில் கத்தியவன்

 

“சத்யா… நீ என்கூட மோதி ரொம்ப பெரிய தப்பு பண்ற…” என்றான் கோபமாக தோளைப் பிடித்துக் கொண்டே.

 

பாட்டி உட்பட அனைவருக்கும் இதயம் படபடத்தது. பாட்டி பயத்தில் “யாராவது போலீஸுக்கு போன் பண்ணுங்க.” என்று கத்தினார்.

 

சத்யாவின் கண்களில் தெரிந்தது சாதாரண கோபம் இல்லை. அவன் பார்வையே ஆர்.ஜேவை எறித்து சாம்பலாக்கியது. நாற்காலியை விட்டு எழுந்தவன் அவன் சேர்ட்டைப் பிடித்து “என் அப்பாவ கொன்னுட்டியேடா… உன் சாவு என் கையில்தான்.” என துப்பாக்கியை அவன் தலையில் வைத்து

 

“இப்போவே உன்னை கொன்னுர்ரேன்.” எனக் கூறியவன் பிஸ்டலை அழுத்த முயல அனைவரும் பயத்தின் உச்சத்திற்கே போனார்கள்.

 

சட்டென்று பிஸ்டலை எடுத்தவன் “இல்லை… உன்னை சாதாரணமா கொல்லக் கூடாதுடா. துடிக்க துடிக்க கொல்லனும். ஒரு உயிரோட வேல்யூ என்னன்னு உனக்கு புரிய வைக்கனும். நரகம்னா என்னன்னு காட்டனும்டா. காட்டுவேன்…” என்றான் சினத்தின் அடையாளமாய் மாறி.

 

அவனை ஏளனமாக பார்த்து சிரித்த ஆர். ஜே “நீ… ஒரு உயிரோட வேல்யூ பத்தி பேசுற… நீ யாருன்னு எனக்கும் தெரியும்டா… வேஷம் போடாத.” என்று பொறிய

 

சத்யா உடனே பாட்டியிடம் திரும்பியவன் “நான்தான் சொன்னேன்ல? காவ்யா என் லைப். அவள வேற எவனுக்காவது கட்டி வைக்க நினைச்சிங்க… கொன்னு புதைச்சிடுவேன்னு… பின்ன எதுக்காக இப்படி பண்ணீங்க?” என்றான் அழுத்தமாக.

 

“எங்க வீட்டுப் பொண்ண யாருக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு எங்களுக்கு தெரியும்டா.” என்றார் முகத்தில் எறிந்தது போல்.

 

“அப்படியா?” என்று காவ்யாவை கேலியாக நோக்கினான் சத்யா. காவ்யாவின் முகம் கொஞ்சம் பதற்றத்தில் ஆழ்ந்திருந்தது.

 

“ஆமாம்டா… அவங்க பொண்ண யாருக்கு வேண்டுமானாலும் கட்டித் தருவாங்க. உனக்கு என்னடா பிரச்சினை?” என்றான் ஆர்.ஜே இடையில்.

 

“அப்படியா? சரி. அத அவ வாயாலேயே சொல்லட்டும். அவ இந்த கல்யாணத்தை சுய விருப்பத்தோடதான் பண்ணிக்கிறான்னு. அவ அப்படி சொல்லிட்டா நான் இங்க இருந்து கிளம்பிடுவேன். இனி இவ வாழ்க்கைக்குள்ளேயே வர மாட்டேன்.”  என்று முடிவாக கூறிவிட்டான்.

 

அதற்கு பாட்டியும் “இங்க பாருடிம்மா… நாங்க வேணும்னா இவன தூக்கிப் போட்டுட்டு எங்க கிட்ட வா. இல்லன்னா அவன்கூடயே போய்டு. எங்க யாரு மூஞ்சிலையும் முழிக்காத. அந்த ஆதித்ய வர்மா எப்படிப் போனானோ அப்படியே போயிடு.” என்றார் கோபத்துடன்.

 

அவளுக்குத்தான் என்ன செய்வது என்று புரியவில்லை. ஒருபக்கம் தன் குடும்பம். இன்னொரு பக்கம் தன் காதலன். அவள் கனநேரமாக யோசனையில் ஆழ்ந்துவிட்டு ஒரு முடிவுக்கு வந்தவளாக பாட்டியின் அருகில் வந்து நின்றாள். “என்ன மன்னிச்சிடு சத்யா.” என்றதும் பா

ட்டிக்கு கர்வம் தலை தூக்கியது.

 

“பாத்தியாடா. எங்க வீட்டு பொண்ணு. எங்க ரத்தம். எங்களுக்கு துரோகம் பண்ண மாட்டா.” என்று கூறிவிட்டார். ஆனால் இதில் அதிர்ந்து போனது என்னமோ ஆதியும் சத்யாவும்தான்.

 

தொடரும்…

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!