காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 11 🖌️

5
(2)

காவ்யா பாட்டியின் பக்கம் போய் நின்று “பாட்டி எனக்கு சத்யா வேணாம். நீங்க எல்லாரும்தான் வேணும்.” என கண்ணீருடன் கூற

 

பாட்டி கர்வமாய் “பாத்தியாடா… எங்க பொண்ணு. எங்க ரத்தம். எங்களுக்கு துரோகம் பண்ண மாட்டா. அவ நாங்க சொல்றதுதான் கேட்பா.” என பெருமையாகக் கூறிக் கொண்டார். சத்யாவுக்கு பாரிய அவமானம்.

 

“கேட்டேல்ல? நீ வேணாமாம். இப்போ வெளில போறியா? இல்லை கழுத்தை பிடிச்சு தள்ளணுமா?” என்றார் ஆர்.ஜே திமிராக.

 

“டேய்…” எனக் கத்தியவாறு அவன் சட்டையைப் பிடித்தான் சத்யா.

 

அவனைத் தள்ளி விட்டவன் “போடா… அவதான் மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிட்டாளே. இனிமேல் காவ்யா பக்கம் உன் பார்வை பட்டிச்சுன்னா கொன்னுடுவேன்.” என மிரட்ட அவனுக்குத்தான் அவமானமாகப் போனது.

 

ஒரே ஒரு பார்வைதான் காவ்யாவை நோக்கி வீசினான். அந்தப் பார்வையில் அவள் மொத்தமாக செத்தே போய் விட்டாள். இவையெல்லாம் பார்த்து ஆதி மனம் தாங்க முடியாமல் காவ்யாவிடம் சென்று அவள் கையைப் பிடித்து இழுத்தான்.

 

“காவ்யா… என்ன பேசுற நீ? உனக்கு என்ன ஆச்சு? நீ நல்லா தானே இருந்த? ஏன் இப்படி திடீர்னு மாத்தி பேசுற? இவ்ளோ நேரமா சத்யாவத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்ன? இப்போ ஏன் இப்படி பேசுற? சொல்லு…?” என அவளை பதற்றத்துடன் வினவ அவள் வாயில் எந்த வார்த்தைக்குமே இடமில்லாமல் போனது.

 

மறுபடியும் மறுபடியும் அவன் அவளிடம் “ஏன் இப்படி அமைதியா நிக்கிற. சொல்லு… எனக்கு சத்யாதான் வேணும்னு சொல்லு. சொல்லு காவ்யா.” என அவளை உலுக்கினான். ஆதியின் தோளைத் தொட்டு நிறுத்திய சத்யா “வேண்டாம்.” என்றவாறு தலையை அசைத்துவிட்டு சிந்திய ஒற்றைக் கண்ணீர்த் துளியுடன் தலைகுனிந்தவாறு வெளியே சென்றுவிட்டான்.

 

போனவனை கைதட்டி அழைத்த ஆர்.ஜே “நீ தெரிஞ்சோ தெரியாமலோ என்ன ரொம்ப சீண்டிப் பாத்துட்டடா. இதுக்கான தண்டனைய நான் உனக்கு கொடுப்பேன்.” எனக் கூறிட ஒரு வெற்றுப் புன்னகையை மாத்திரம் விட்டுச் சென்றான் சத்யா.

 

இங்கே நடந்த அத்தனையையும் பார்த்து ஆதிக்கு கோபம் பொங்கி எழ கையிலிருந்த பிஸ்டலால் சுவரிலிருந்த குடும்ப புகைப்படத்துக்கு குறி வைத்து சராமாரியாக சுட்டுத் தள்ளினான். கண்ணாடிகள் உடைந்து சிதறிப் பறந்தன. அருகே இருந்த மேசையை கோபமாக அவன் எட்டி உதைத்ததும் அது வேகமாகச் சென்று சுவரில் இடித்துக் கொண்டது.

 

“டேய்… சொந்த வீட்டுக்குள்ளேயே இருந்துட்டு அவனுக்கு சாதகமா பேசுற. உன் கோபத்தை எல்லாம் வேற எங்கயாவது காட்டு. எங்ககிட்ட காட்டாத.” என்று பாட்டி கத்தினார். அதில் இன்னும் கோபமானவன் காவ்யாவை ஒரு அனல் பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டான்.

 

பாட்டி ஆர். ஜே வின் கையைப் பிடித்து “எங்கள மன்னிச்சிடுங்க. ஏதேதோ ஆகிடுச்சு. உங்களுக்கு ரொம்ப பெரிய அவமானம் ஆகிடுச்சு. சீக்கிரமா கையில மருந்து போட்டுக்கோங்க. ரத்தம் ப்ளீடிங்க் ஆகிட்டு இருக்கு.” என்றதும்

 

“ச்சே… அதெல்லாம் இல்லை. இன்னைக்கு இல்லன்னா என்ன? இன்னொரு நாள் நல்லா ஊரையே கூப்பிட்டு கல்யாணத்தை பண்ணிடலாம். அதே மாதிரி அம்மாவும் என் கல்யாணத்தை பாத்த மாதிரி இருக்கும்.” என்றவன்

 

“அப்போ நான் கிளம்புறேன்.” எனக் கூறிவிட்டு காவ்யாவைப் பார்த்து ஒரு கர்வமான புன்னகையுடன் “போய் வரேன்.” என்றுவிட்டு போய்விட்டான்.

 

வெளியில் அவன் சென்றதும் அவன் போனிற்கு அழைப்பு வந்திருந்தது. உடனே அதனை ஏற்று “ஹலோ…” என்றான். அந்தப் பக்கம் அவன் தாயார் ரஞ்சனா.

 

“என்னடா கல்யாணம் முடிஞ்சதா?” என்றார் திமிராக.

 

“இல்லம்மா… இடையில அந்த ராம் வந்து எல்லாத்தையும் கலைச்சு விட்டுட்டான். டேம்ன் இட்…” என்று கத்தினான்.

 

“என்னடா சொல்ற? அவன் எங்க அங்க வந்தான்? அவன் அவனோட அப்பா சாவுக்குல்ல கதறிட்டு இருந்திருக்கனும்?” என்றார் கோபத்துடன்.

 

“இல்லம்மா. நான் தான் சொன்னேனே. அவனும் காவ்யாவும் ஒருத்தரை ஒருத்தர் காதலிக்கிறாங்கன்னு. அதுதான் கல்யாணத்தை நிறுத்த வந்தான். ஆனால் நான் யாருக்கும் தெரியாம காவ்யா அம்மா பின்னாடி பிஸ்டலை வெச்சு அவ அம்மாவைக் கொன்னுடுவேன்னு மிரட்டி அவனை வேணாம்னு சொல்ல வெச்சு அவனை நல்லா அவமானப்படுத்திட்டேன்.” என்றவனுக்கு சத்யாவை நினைத்து எரிச்சல்தான் வந்தது.

 

“தட்ஸ் மை போய். பட்… எனக்குதான் அந்த கண்கொல்லாக் காட்சிய காண முடியாம போய்டுச்சு. எனிவேய்… எப்படியாவது அடுத்தது அவனுக்கு நாள் குறிச்சிடு. உன் அப்பாவ கொன்ன அந்த வாசுதேவ ராம் குடும்பம் சின்னா பின்னமாகி சிதர்ரத நான் பாக்கனும். அவன் சாவு சாதாரணமா இருக்க கூடாது. துடிக்க துடிக்க அவனைக் கொல்லனும்.” என்றார் வன்மம் கக்கிய விழிகளுடன்.

 

“யூ டோன்ட் வொர்ரி… அவனுக்கு சாவு நெருங்கிடுச்சு.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்து விட்டான்.

 

ரஞ்சனா வாசுதேவ ராம் இறந்ததற்கு பிறகுதான் தன் கணவனின் அஸ்தியை கரைப்பேன் என்ற ஒரு முடிவுடன் இருந்தார். அதனால்தான் தற்போது அவரது அஸ்தியை கரைக்க இராமேஸ்வரம் வரை சென்றுள்ளார். அதனால்தான் தன் மகனிடம் நான் வரும் வரை காத்திருக்காது திருமணத்தை செய்து கொள் எனக் கூறிவிட்டார்.

 

உள்ளே நடு முற்றத்தில் கனத்த மனதுடன் நின்றிருந்தாள் காவ்யா. அவளை சமாதானப்படுத்த அவள் அருகில் வந்தார் மகாலக்ஷ்மி. அவர் முகத்தின் முன் கையை நீட்டி நிறுத்தியவள். “நான் எவ்ளோ கெஞ்சினேன். எனக்காக நீ என்ன பண்ண? என் வாழ்க்கைய நீங்க எல்லாருமா சேர்ந்து நாசம் பண்ண பாத்துட்டீங்க. என்னையும் சத்யாவையும் நீங்க பிரிச்சிட்டீங்க. உங்க யாருக்குமே மனசாட்சியே இல்லை. மனிதாபிமானம் இல்லாத மிருகங்க நீங்க. உங்க முகத்துலை முழிக்கிறதே பாவம். ச்சேய்…” எனக்கூறியவாறு தன் அறைக்குள் ஓடிச் சென்று கதவை அடைத்துக் கொண்டு கதவின் அருகே சாய்ந்து அமர்ந்து அழுதாள்.

 

சத்யா வீட்டின் உள்ளே ஏதோ இலக்கின்றி நடந்து சென்று தடுமாறி விழுந்தான் படி தடக்கி. அவனை எழுப்பி விட அவனது விக்கி கை கொடுக்க நிமிர்ந்து அவனை ஒரு பார்வை பார்த்தவன் “வேணாம்டா… இப்போ நீ கை கொடுத்து தூக்கி விட இருக்க. இதுவே பழகிப் போச்சுன்னா நாளைக்கு நீ இல்லங்கும் போது இன்னும் வலிக்கும். அதனால நீங்களும் போய்டுங்கடா. எல்லாருமே என்னை விட்டு போய்ட்டாங்க. அம்மா… அப்பா… இப்போ… என்னோட காவ்யா… இல்லை. என்னோட காவ்யா இல்லை. அவ இப்போ வேற ஒருத்தனோட காவ்யாவா மாறிட்டாளே. என்ன வேணாம்னு சொல்லிட்டாடா அவ. அவளுக்கு அப்படி சொல்ல எப்படிடா மனசு வந்திச்சு? நானா போய் காதலின்னு சொன்னேன்? அவளா தானே வந்து காதலிக்கிறேன்னு சொல்லி என் மனசுல காதல உருவாக்கினா. இப்போ இப்படி விட்டுட்டு போய்ட்டாளே…” என மனம் தாங்காது கண்ணீர் விட்டான் சத்யா.

 

அவனைப் பிடித்து அணைத்து “அப்படி எல்லாம் பேசாதடா. உனக்காக நாங்க இருக்கோம். செத்தாலும் உன்னை விட்டுப் போக மாட்டோம்டா. உயிர் போனாலும் கூட உனக்காகத்தான் போகுமே தவிர உன்னை விட்டு பிரிஞ்சி போய்ட மாட்டோம்டா.” என்றான் வினோத்.

 

அவனின் பேச்சை கேட்ட விநோத் சத்யா அருகில் வந்து அவன் தோள் பற்றி “ஆமாம்டா. உனக்காக நாங்க இருக்கோம்டா. உயிர கொடுக்க சொல்லு. கொடுக்குறோம். ஆனால் உன்னை விட்டு போக மட்டும் சொல்லாதடா.” என அவனை மறுபக்கம் அணைக்க

 

“ஹாடா… பிரச்சனை வரும்போது கூட இருக்குறவன்தான் உண்மையான நண்பன். இப்படி ஏன்டா நீயே இடையில விட்டுட்டு போக சொல்ற? எங்கள்ல யாராவது இந்த நிலமையில இருந்திருந்தா நீயும் இப்படித்தானாடா விட்டுட்டு போய்ருப்ப? பதினேழு வருச நட்புடா நம்மோடது. சாவும் உன்கூடதான் எங்க வாழ்க்கையும் உன்கூடதான்டா.” என கண்களைக் கசக்கிக் கொண்டு அவனைக் கட்டிக் கொண்டு அழ

 

“டேய்… உங்களை மாதிரி ப்ரண்ட்ஸ் கிடைக்க நான் என்ன பண்ணேன்னே தெரியலடா. வரம்டா… நீங்க எனக்கு கிடைச்ச வரம்டா… ஏன்டா என் மேல இவ்ளோ பாசம் வெச்சிருக்கீங்க?” என அவர்களை அணைத்துக் கொண்டு கதறி அழுதான்.

 

“சத்யா அழாதடா. நீ அழுது இன்னைக்கு தான்டா பாக்குறோம். நேத்து அப்பா சாவுக்கு கூட நீ அழல. ஆனா இப்போ அழுற?” என யாதவ் கேட்டதும்

 

அதற்கு விக்கி “ஆமாம்டா உன்னை இப்படி எங்களால பாக்க முடியாதுடா. தயவு செய்து அழாதடா ப்ளீஸ்…” என்று கவலையாக சொன்னான்.

 

“கண்ணைத் துடைச்சிக்கோடா நண்பா. எங்களுக்காக. ப்ளீஸ்டா…” என யாதவ் கெஞ்சவும்

 

“முடியலடா… சத்தியமா என்னால முடியல. நான் கொஞ்ச நேரம் தனியா இருக்கனும்.” என்றான் எதையோ வெறித்துப் பார்த்தவாறே.

 

“சரிடா… நாங்க வெளில இருக்கோம். நீ போய் ரெஸ்ட் எடு.” என்றுவிட்டு சென்றுவிட்டனர் அனைவரும்.

 

இந்தப் பக்கம் நீர்வீழ்ச்சியின் அருகிலிருந்த பாறையில் அமர்ந்து கொண்டு கற்களை நீரினுள் வேகமாகவும் கோபமாகவும் எறிந்து கொண்டிருந்தான் ஆதி. அவன் அருகில் வந்து நின்றாள் காவ்யா. “ஆதி…” என நடுங்கும் குரலால் அழைக்க

 

“இப்போ எதுக்கு இங்க வந்த?” என்றான் கற்களை இன்னும் வேகமாக எறிந்து பார்வையை அவளிடம் செலுத்தாது.

 

“ஆதி… நான் சொல்றத முதல்ல கேளு…” என அவள் தயங்கியவாறு கூறியதும் “சடார்.” என்று எழுந்தவன் அவள் முன் நின்று

 

“என்ன கேட்கணும்? இன்னும் என்ன கேட்கணும்? அதுதான் எல்லார் முன்னாடியும் எங்கள அவமானப்படுத்திட்டீயே.” எனக் கத்தினான் வெறுப்புடன்.

 

“இல்லை ஆதி… நான் வேணும்னே பண்ணல. நான் சூழ்நிலையாலதான் அப்படி பண்ணேன். ப்ளீஸ்… நான் சொல்றத முதல்ல கேளு.” என்று கூறினாள் அவன் கரங்களைப் பிடித்து தவிப்புடன்.

 

அவள் கைகளை உதறி விட்டவன் “எதக் கேக்க சொல்ற? பாட்டி எனக்கு சத்யா வேணாம். நீங்கதான் வேணும்னு சொன்னீயே. இப்போ எதுக்குடி வந்து ட்ராமா போடுற?” என்று எரிந்து விழுந்தான்.

 

மறுபடியும் “ப்ளீஸ்… நான் சொல்றத கேளு ஆதி.” என்று கெஞ்சிவளின் முகத்தின் நேரே கை காட்டி அவள் பேசுவதை நிறுத்தியவன்.

 

“சத்யா ஏன் வந்தான்னு தெரியுமா? அந்த ஆர். ஜே உன்னக் கல்யாணம் பண்ணிக்க போறான்னதாலதான். இந்த இடத்துல வேற எவனாது உன்னை கல்யாணம் பண்ணிக்க இருந்திருந்தான்னா அவன் வந்திருக்கவே மாட்டான். அவன் அப்பா செத்துப் போய் சரியா ஒரு நாள் கூட ஆகல. அந்த வலியும் வேதனையையும் தள்ளி வெச்சிட்டு உனக்காக இங்க வந்தான். ஏன்னா அந்த ஆர். ஜேவை பத்தி சத்யாவுக்கு மட்டும் இல்லை உனக்கே நல்லா தெரியும். ஆனால் நீ இன்னைக்கு அந்த கேவலமானவனுக்காக சத்யாவையே வேணாம்னு சொல்லிட்ட. நாங்க ரெண்டு பேரும் கடைசி வர உனக்காக தானே பேசினோம். ஆனால் நீ… இப்படி எங்களை அசிங்கபடுத்திட்டல்ல? உனக்காக இவ்ளோ தூரம் வந்தோம்ல? எங்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். என் புத்திய பழைய செருப்பாலையே அடிக்கணும். இப்போ உனக்கு சந்தோசமா? போ… போயி… உன் பாட்டிக் கூடவும் உன் குடும்பத்துக்கு கூடவும் சந்தோசமா இரு. இன்னொரு விசயம்…” என நிறுத்தியவன்

 

“இனிமேல் என் மூஞ்சில முழுக்காத நீ. உன்னை பாத்தாலே இரிட்டேட் ஆகுது. கை நீட்டி அடிச்சிற போறேன்.” என்று கூறிவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

 

“அப்போ நீ நான் சொல்றத கேட்க மாட்ட. அப்படி தானே? பரவால்ல ஆதி. நீ என் பேச்ச கேட்க வேணாம். ஆனால் சரியான நேரம் வரும் போது நீயே புரிஞ்சிப்ப.” என்று புறங் கையால் கண்களை துடைத்தவள் அங்கிருந்து நகர்ந்து சென்றாள்.

 

அவன் கவலைகள் அவனுள் தனிமையை ஏற்படுத்தி அவனின் உணர்வுகளைத் தூண்டிக் கொண்டிருந்தது. இதற்கு முன்னர் அவனது தந்தை வெளிநாட்டில் இருந்த போதும் கூட உணராத தனிமை இப்போது கண்ணாடிச் சிதல்களாய் அவன் உணர்ச்சிகளைக் குத்திக் கிழித்துக் கொண்டிருக்கிறது. காரணம் தான் தெரியவில்லை. தாய் இல்லாமல் அவள் அரவணைப்பே இல்லாது சிறுவயதில் தனிமையில் கஸ்டப்பட்டு வாழ்ந்திருந்தான்.

 

என்னதான் தந்தை தாயாக இருந்து அவனைப் பார்த்துக் கொண்டாலும் உள்ளுக்குள் அவனுக்கும் தாய் இல்லாத உணர்வு நிறையவே ஊடுருவி இருந்தது. யாராவது அவனிடம் பாசமாக ஒரு வார்த்தை பேசினாலும் மொத்தமாக உருகிப் போவான். அப்படியானவனுக்கு இத்தனை வருடமாக கஸ்டத்தில் “நான் இருக்கிறேன்.” என கைப் பிடித்து ஆதரவு கூறவும் கவலைப் படும்போது தலையை வருடி ஆறுதல் கூறிடம் தடுமாறி விழுந்தால் கைத் தந்து ஊக்கம் அளிக்கவும் திட்டித் திட்டி அவனை நல்வழிப்படுத்தவும் தந்தை என்ற ஸ்தானத்தில் வாசுதேவராம் இருந்தார்.

 

ஆனால் இப்போது முழு அநாதையாக தன்னை உணர்ந்தவனுக்கு இந்த உலகில் தனக்கென யாரும் இல்லை என்ற உணர்வு தோன்ற இனிமேல் “எதற்காக வாழ வேண்டும்? யாருக்காக வாழ வேண்டும்?” என்ற கேள்விகள் அடுக்கடுக்காக எழ வாழ்வதை விட சாவதே மேல் என முடிவு செய்து விட்டான்.

 

கத்தியை எடுத்தவன் கை நரம்புகளை வெட்ட முயல அதற்குள் நினைவுக்கு வந்தது அவன் தந்தையின் முகமும் சற்று நேரத்திற்கு முன் தன்னை வாரி அணைத்து தோள் கொடுத்த தோழர்களின் முகமுமே.

 

“தந்தையை கொன்றவனை கொன்று சமாதி கட்டி விட்டு தான் சாக வேண்டும்.” என்று முடிவுடன் கத்தியை தூக்கி எரிந்தவன் கைகள் போக்கெட்டில் விடாமல் அடித்துக் கொண்டிருந்த தொலைபேசியை தேடியது. அழைப்பை ஏற்கக் கூடாது என நினைத்தவன் திரையில் தெரிந்த பெயரைப் பார்த்ததும் உடனே அழைப்பை ஏற்றான்.

 

“ஹலோ… சொல்லு.” என்றவனின் எதிரில் ஆதி.

 

“ஹலோ… நான் ஒரு முக்கியமான விஷயம் பேச வேணும்.” என்றான் தயங்கித் தயங்கி.

 

“சரி. நான் வீட்டுல தான் இருக்கேன்.” என்று சத்யா மெதுவாக கூறியதும்

 

“இதோ இன்னும் பத்து நிமிசத்துல அங்கு இருப்பேன்.” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டான் ஆதி.

 

சரியாக பத்து நிமிடங்களின் பின் அவசர அவசரமாக உள்ளே நுழைந்தான் ஆதி. அவசரமாக தலைதெறிக்க நுழைந்தவனை பார்த்தவாறே சோபாவில் அமர்ந்திருந்த சத்யா கண்களைக் காட்டி உட்காரச் சொல்ல உடனடியாக தான் வந்த விடயத்தை கூற ஆரம்பித்தான்.

 

“நான் ஒரு க்ளூ கண்டுபிடிச்சிருக்கேன். இதோ.” என கையில் வைத்திருந்த புகைப்படத்தை நீட்ட அதில் அதிர்ச்சி பிளஸ் ஆச்சரியம் கலந்த ஒரு மனநிலையை அடைந்தான் சத்யா.

 

அந்த புகைப்படத்தில் சத்யாவின் அம்மா அப்பா மற்றும் ஆர்.ஜே வின் அம்மா, அப்பா நால்வரதும் புகைப்படங்கள் இருக்க அதில் சத்யாவின் பெற்றோர் இருவரின் முகத்திலும் சிவப்பு நிற புள்ளடி இடப்பட்டிருந்தது. மேலும் அதன் பின்னே ஒட்டி இருந்த சத்யாவின் புகைப்படத்தில் சிகரெட் தனலை வைத்து எரிக்கப்பட்டிருந்தது.

 

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தவன் “இது எப்படி உனக்கு கிடைச்சது?” என வினவினான்.

 

“இது என்னோட வீட்டுல தான் கிடைச்சது. இதுல வாசு சேர் போட்டோ இருந்ததும் சந்தேகத்துல கொண்டு வந்தேன்.” என்பதை பதிலாக கொடுத்தான் ஆதி.

 

“அது புரிது. ஆனா இது எப்படி உன் வீட்டுல வந்தது?” என அடுத்த கேள்வியை கேட்டான் சத்யா தாடையைத் தேய்த்தவாறு.

 

“ஐ திங்க் இது அந்த… ஆர். ஜே பொக்கெட்ல தான் இருந்து தவறுதலாக விழுந்திருக்கும். ஏன்னா சேர கொன்னவன் அவன் தானே. அதனால தான் அவரோட மூஞ்சிக்கு க்ளோஸ் மார்க் போட்டிருக்கான்.” என்றதும் சத்யாவுக்கும் அது புரிந்தது.

 

“ஆனால் அவனுக்கும் என் அப்பாக்கும் என்ன சம்பந்தம்? இந்த போட்டோல இருக்கும் மத்த இரண்டு பேரும் யாரு? ஏன் அவன் என் அம்மா போட்டோக்கு க்ளோஸ் மார்க் போட்ருக்கான்? அது மட்டுமில்லாம என் டேட்ட கொலை செய்ற அளவுக்கு அவனுக்கும் அவருக்கும் என்ன விரோதம்? இதற்கெல்லாம் பதில் எங்க கிடைக்கும்?” என அடுக்கடுக்காக தன் மனதில் ஓடிய கேள்விகளை உதிர்த்த சத்யாவுக்கு தலைதான் சுற்றியது.

 

அதற்கு ஆதி “அதுக்கான பதில் இங்கதான் கிடைக்கும்.” என்றான் அந்த வீட்டை அளந்தவாறு.

 

“கரெக்ட்… கரெக்டா சொன்ன.” என்றவாறு

 

“சேர்ச்.” என்று சத்யா கத்திட உள்ளே வந்தனர் அவனது நண்பர்கள். அவர்களிடம் நடந்ததை கூறியதும் அவர்களும் தேட ஆரம்பித்தனர்.

 

உடனே தன் தந்தை அறையினுள் நுழைந்து ஏதாவது கிடைக்குமா என தேடினான் சத்யா. ஆதி மற்ற அறைகளுக்கு சென்று தேடலை ஆரம்பித்தான். வினோத், விக்கி என அனைவரும் மீதி இருக்கும் மூலைகளை அலசினர். அனைவரும் வீட்டை சல்லடை போட்டு சலித்து எடுத்தனர்.

 

ஆனால் யாருக்குமே எந்தவித தடயங்களும் கிடைக்கவில்லை. மறுபடியும் இரண்டாவது தடவையாக முயற்சியை கைவிடாது நுணுக்கமாக வீட்டின் ஒவ்வொரு இடத்திலும் சோதித்தனர். ஆனால் அப்போதும் எதுவும் கிடைக்கவில்லை. இறுதியில் மனம் உடைந்து போனவன் சலிப்பாக சோபாவில் அமர்ந்து விட்டான் கைகளை வைத்து தலையை தாங்கியவாறு.

 

“இப்போ என்னதான் செய்றது? வீட்டுல எந்த இடத்துலையும் எந்த க்ளூவும் கிடைக்கல. நான் இதுக்கான பதிலை எங்க இருந்து கண்டுபிடிப்பேன்?” என யோசித்தவனுக்கு தலை வலிதான் மிஞ்சியது.

 

ஆதி சத்யாவை சற்று உற்சாகப்படுத்துவதாக “இங்க இல்லன்னா வேற எங்கேயாவது தடயங்கள் கிடைக்கலாம். அதனால மனசு விடாம தேடுவோம். நானும் என் ப்ரண்ட் கிட்ட சொல்லி ஆர்.ஜே வ பத்தி அத்தனையையும் நோட் பண்ண சொல்றேன். நீங்களும் தேடுற முயற்சியில இருங்க.” என்று கூறிவிட்டு “நான் வரேன்.” என விடை பெற்று சென்றான்.

 

தன் வீட்டிற்குச் சென்றவன் உள்ளே செல்ல மனம் வராது வெளியிலேயே நின்று கொண்டான். இருந்தாலும் எவ்வளவு நேரம் வெளியில் நிற்க முடியும்? என்று யோசித்து விட்டு உள்ளே நுழைந்தால், அவன் வருவதற்கும் அனைவரும் உணவு உண்பதற்கும் நேரம் சரியாக இருந்தது. அனைவரும் அமைதியாக உணவை உண்டு கொண்டிருக்க உள்ளே நுழைந்தவன்

 

“உங்களுக்கு எல்லாம் எப்படி சாப்பிட மனசு வருதுன்னே தெரியல. மனசாட்சி இல்லாத காரியத்தை செஞ்சிட்டு எதுவுமே நடக்காதது போல இப்படி உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டு இருக்கீங்க? மனுசங்களா நீங்க? எப்படி சாப்பாடு ஒட்டுதோ…” என்றதும் அனைவருக்கும் புறை ஏறிவிட்டது.

 

சாப்பிடாமல் அனைவரிடமும் இருந்து விலகி நின்ற காவ்யாவை ஒரு பார்வை பார்த்தவன், “எல்லாத்தையும் செஞ்சிட்டு இப்போ நாடகம் போடுறத பாரு. இந்த வீட்டுல இருக்கிற அத்தனையும் விஷம். என்கூட பிறந்த இது… எல்லாத்தையும் விட பெரிய விஷம். அக்கான்னு கூப்பிட்ட பாவத்துக்கு நல்லா வெச்சு செஞ்சிட்டா. கூடவே இருந்து கடைசில குழி பறிக்கிற இந்த ஜென்மத்தை எல்லாம்… என்னன்னு சொல்ல?” என்று கடுகடுத்துவிட்டு அவள் மனதைக் காயப்படுத்தி அவளை ஒரு தீப்பார்வையால் எரித்து சாம்பலாக்கியவன் கோபமாக உள்ளே சென்றான்.

 

காவ்யாவிடம் சாப்பாட்டு தட்டை எடுத்துக்கொண்டு வந்த மகாலக்ஷ்மி அவளை அருகில் இருந்த கதிரையில் அமர்த்திவிட்டு சாப்பாட்டை எடுத்து அவள் வாயின் அருகில் வைக்க ஒரே ஒரு எறியில் தட்டு பறந்து சென்று எங்கோ விழுந்தது.

 

“உங்களுக்கு எல்லாம் அசிங்கமா இல்ல… ஏன் எனக்கு இவ்ளோ பெரிய விஷயத்தை இப்படி எதுவும் நடக்காத மாதிரி வந்து கேவலமா நடிச்சிட்டு இருக்கீங்க? இன்னைல இருந்து இந்த வீட்டில இருக்குற யாருமே எனக்கு ஒட்டும் இல்ல உறவும் இல்லை. என்னோட காதல என்கிட்ட இருந்து பறிச்சிட்டீங்க. என்னோட தம்பியையும் கூட என்கிட்ட இருந்து பிரிச்சிட்டீங்க. என்னோட ஒட்டுமொத்த சந்தோஷத்தையும் நாசமாக்கிட்டீங்க. என் வாழ்க்கையே நாசம் பண்ணிட்டீங்க. ஒரு பொண்ணோட உணர்வுகளை புரிஞ்சுக்காம அத காலடியில் போட்டு நசுக்கிட்டீங்க. நீங்களா தானே என்னையும் சத்யாவையும் பிரிக்க ஒருத்தனை கட்டாயப்படுத்தி எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சீங்க. ஆனா இப்போ சொல்றேன் கேட்டுக்கோங்க. உங்க கண்ணு முன்னாடியே சத்யாவை கல்யாணம் பண்ணி காட்டுறேன். இது என்னோட சத்தியம். இது நடக்கலன்னா என் உயிரை விட்டுர்ரேன். இது நடக்கும். நடத்திக் காட்டுரேன். நடக்க வைப்பேன்.” என கூறி உணவு உண்ணாது அறைக்குச் சென்று கதவை “படார்.” என அடைத்து விட்டாள்.

 

“அவ அப்படிதான் சொல்லுவா. ஆனால் அவ சொல்றது எதுவுமே நடக்காது. அவளுக்கும் நான் பாத்த மாப்பிள்ளைக்கும்தான் கல்யாணம். இது நான் கொடுக்குற சத்தியம்.” என இந்தப் பக்கம் பாட்டி சபதம் எடுத்துக் கொண்டார்.

 

அவள் பேசிய அனைத்தையும் கேட்டே மகாலட்சுமிக்கு கண்களில் நீர் கோர்த்தது. “தன் மகளே தன்னை வெறுக்கும் அளவு நடந்து கொண்டேனே.” என நினைக்க நினைக்க மாரடைப்பு வந்துவிடும் போல இருந்தது. இதயம் குற்ற உணர்ச்சியில் கனக்க, உணர்வுகளை அவரால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அழுதவாறே அவரும் தன் அறைக்குச் சென்றுவிட்டார். உள்ளே இருந்த காவ்யா கண்களை துடைத்துக் கொண்டு சத்யாவிடம் நடந்ததைக் கூறலாம் என்று எண்ணி அவனுக்கு அழைத்தாள்.

 

ஆனால் அவன் மூளையில் இருந்த பிரச்சினையில் அவள் அழைப்பு வந்திட அவள் பெயரை திரையில் பார்த்ததும் காதல் ஒருவித வெறுப்பாக மாறியது. இன்னும் கோபம் அதிகரிக்க வேகமாக “காவ்யா…” எனக் கத்தியவாறு தொலைபேசியை கீழே எறிந்து உடைத்தவன் அதன் மீது தன் கால்களைக் கொண்டு கசக்கினான்.

 

உள்ளே இருந்த கண்ணாடி அவன் காலில் குத்தி இரத்தம் அவன் நடந்து செல்லும் பாதை முழுக்க காலடியாக பதிந்தது. அழைப்பை மறுக்கப்பட மறுபடி மறுபடி அழைத்தவள் இறுதியாக முடியாமல் தோற்றே போய் விட்டாள். வலி மனதை உருக்க தலையணையை கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள்.

 

“சத்யா… நான் வேணும்னே உன்னை அவமானப்படுத்த இப்படி பண்ணல. அவன் என் அம்மாவ கொன்னுடுவேன்னு மிரட்டினதாலதான் நான் இப்படி பண்ண வேண்டி ஆகிடுச்சு சத்யா. உனக்கு நான் எப்படி சொல்லுவேன்?” என அழுது கொண்டே இருந்தாள் தொடர்ச்சியாக.

 

இருவரின் இதயமும் தனிமையில் தவிக்க சுகமான காதல் சுமையாகிப் போனது. யாருமில்லா இருண்ட குகையினுள் அடைத்துப் போட்டது போல் ஆகிவிட்டது இருவர் மனமும். இருந்தாலும் இதயத்தால் ஒன்றிணைந்தவர்கள் அல்லவா? ஒருவர் உணர்ச்சி இன்னொருவரைத் தாக்க கண்ணீருக்குத்தான் பஞ்சம் இல்லாமல் போனது.

 

அமைதியான அறையில் அமைதியாக இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் ஆழமாக யோசிக்க காதல் கூட கோபம் என்ற ஒரு சுவரினால் தடித்துக் கொண்டு வந்ததே தவிர சற்றும் குறையவில்லை. இப்படி தன்னை ஏமாற்றி விட்டாள் என்ற ஒரு வெறுப்பு அவனுள் எழுந்தாலும் அந்த வெறுப்பால் அவன் காவ்யா மீது கொண்ட காதலை வெல்ல முடியாமலே போனது.

 

🎶🎶🎶

 

ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன் உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா கண்ணே

 

தடுமாறி நடந்தேன் நூலில் ஆடும் மழையாகி போனேன் உன்னால் தான் கலைஞனாய் ஆனேனே தொலை தூரத்தில் வெளிச்சம் நீ உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

 

மேலும் மேலும் உருகி உருகி உனை எண்ணி ஏங்

கும் இதயத்தை என்ன செய்வேன் ஓ உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்

 

🎶🎶🎶

 

இப்படியே இரவு முழுவதும் கண்ணீரை இழுத்துப் போர்த்திக் கொண்டு கழிந்தது.

 

 

 

தொடரும்…

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!