காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 14 🖌️

5
(7)

சத்யா குளித்துவிட்டு வெளியே வர, ஒரு கூட்டம் கரம் விளையாட, இன்னொரு கூட்டம் செஸ் விளையாட அடுத்த கூட்டம், மொனோபோலி விளையாட மற்றொரு கூட்டம் கார்ட்ஸ் என பொழுதைக் கழிக்க சில பேர் சேர்ந்து கொண்டு டீவியில் மெட்ச் பார்த்தவாறு பொப்கோர்னை கொட்டிவிட்டு வீட்டை நாசம் செய்து கொண்டிருந்தனர்.

 

அடுத்த பக்கம் பெண்கள் குழுவினர் சமைத்துக் கொண்டு இருக்க “டேய்… என்னங்கடா? என் வீட்டையே போய்ஸ் ஹொஸ்டலா மாத்திட்டீங்க?” என்றான் பாவமாக.

 

“அதெல்லாம் அப்படித்தாண்னா இந்த பிரச்சினைக்கு முடிவு கிடைக்குற வரைக்கும் நாங்க இங்கதான் இருப்போம்.” என்றார்கள் கூட்டாக.

 

“டேய்… இதுக்கு முடிவே கிடைக்கப் போறதில்லைடா. என்ன அரெஸ்ட் பண்ணாத்தான்டா முடிவு கிடைக்கும். ஆனால் நீங்க அதை பண்ண விடுறீங்க இல்லையே.” என்றவனுக்கு இனி தன் வாழ்க்கை எப்படிப் போனால் என்ன என்றவாறு இருந்தது.

 

“என்ன அண்ணா பேசுற நீ? அதெப்படி உன்னை அரெஸ்ட் பண்ண விடுவோம். நீ சும்மா கூலா இரு நாங்க பாத்துக்குறோம்.” எனக் கூற உடனே காவ்யாவின் பக்கம் திரும்பியவன்,

 

“ஏய்… என்ன காப்பாத்திக்க எனக்கு தெரியும். நீ எதுக்கு எனக்கு பெய்ல் வாங்கி தந்த?” என்றான் கடுப்புடன்.

 

“ஏன் என் ஹஸ்பண்ட்க்கு நான் பெய்ல் வாங்கித் தராம வேற யாரு வாங்கி தருவா?” என காதல் வழிய கண்ணடித்துக் கேட்டாள் காவ்யா.

 

அத்தனை பேரும் ஒரே குரலில், “என்னா…து… ஹஸ்பன்டா?…” என வாயைப் பிளந்து கேட்க,

 

“அடச் சீ… வாய மூடுங்க.” என அனைவரிடமும் கூறிய சத்யாவை தனியாக அழைத்துச் சென்றாள் காவ்யா.

 

“இங்கப் பாரு உன் மூஞ்சில முழிக்கவே எனக்கு விருப்பமில்லை. நீ பெய்ல் எப்படி வாங்கினன்னு எனக்கு தெரியாது. ஆனால் அதுக்கு எல்லாம் சேர்த்து ரொம்ப தங்க்ஸ். இப்போ கிளம்பு.” எனக் கோபமாக கூறினான் சத்யா.

 

“ஏன் கிளம்பனும்?” என ஒரு மார்க்கமாக அவள் அவனைத் தள்ளி விட்டு கதவில் கையை சாய்த்து அவனை நெருங்கியபடி கேட்க அவள் விழிகளைப் பார்த்தவன் மனதோ “என்னாக் கண்ணு…” என வர்ணிக்க மூளையோ

 

“டேய்… வேண்டாம்டா. சூனியக்காரிங்கள கூட நம்பிடலாம். ஆனால் இவள நம்பவே கூடாது. Br careful…” என எச்சரிக்க அவள் கண்களை விட்டு தன் பார்வையை கட்டாயப்படுத்தி திருப்பியவன்

 

“உன்னை எனக்கு பிடிக்கல. நீ என்ன ரொம்ப அசிங்கப்படுத்திட்ட. உன்னால நான் ரொம்ப அவமானப்பட்டுட்டேன். இது எல்லாத்தையும் விட என்ன வேணாம்னு சொல்லிட்டல்ல நீ. இப்போ எதுக்கு வேண்டாம்னு தூக்கி எரிஞ்சவன் கிட்ட வந்த?” என கண்களை வேறு எங்கோ திருப்பிக் கொண்டு கேட்டான்.

 

அவன் கன்னத்தைப் பிடித்து திருப்பியவள் இரு கைகளையும் அவன் கழுத்தை வளைத்து வைத்துக் கொள்ள, “என்னப் பண்ற நீ? முதல்ல நகரு…” என அவளை முறைத்தான் சத்யா.

 

“ஸ்ஸ்ஸ்ஸ்…” என அவன் வாயில் கை வைத்து சொல்லியவள் அவன் பேச்சைக் கட்டிப் போட்டு விட்டாள்.

 

அவள் அருகாமையில் எச்சில் விழுங்கிய சத்யாவிடம் “இந்தக் கண்ணப் பாத்து சொல்லு. நான் சொன்னதெல்லாம் உண்மைன்னு நினைக்கிறியா?” எனக் கேட்க, அவள் கண்களில் தென்பட்ட காதலில் சிலையாகிப் போனான்.

 

சற்று நேரம் கழித்தும் அவன் அமைதியாக இருக்க அவனை உலுக்கியவள், “சத்யா… சொல்லு நான் சொன்னது உண்மையா இருக்கும்னு நினைக்கிறியா?” என்றாள் வலியுடன்.

 

அவளைத் தள்ளி விட்டுவிட்டவன் “இங்கப் பாரு… இவ்ளோ நேரமும் நீ பேசின. இப்போ நான் பேசுறதக் கேளு.” என பேசத் தொடங்கினான். ஆனால் இதையெல்லாம் மறைந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தனர் அந்தக் கூட்டத்திலிருந்த நான்கு பேர்.

 

“நான் இப்போ பேசுறதெல்லாம் சீரியஸ். விளையாட்டு இல்லை. நீ எப்போ நான் வேணாம்னு சொன்னியோ அப்போவே என் லைப்ல இருந்து உன்னை ஒட்டு மொத்தமா தூக்கிப் போட்டுட்டேன். நீ எனக்கு தேவையில்லை. இனிமேலும் நீ இப்படி டூயட் பாடி என்ன ஏமாத்தனும்னு நினைக்காத காவ்யா. அது இனிமேலும் நடக்காது. உன் லைப பாத்துட்டு நீ போ. என் லைப பாத்துட்டு நான் போறேன். உன் கனவுக் காதலன் ஆர்.ஜே இருக்கான்ல? அவனக் கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமா இரு. ஆனால் ஒன்னு சொல்லிக்கிறேன். ஒரு விசயத்துக்கு மட்டும் என்ன மன்னிச்சிடு. நீ விதவையாக காரணமா நான்தான் இருப்பேன். உன் வருங்கால கணவன் சாவு என் கையாலதான்.” எனக் கோபமாகக் கூறிக் கொண்டு வெளியில் செல்ல கதவைத் திறந்ததும் கதவு திறக்க முடியாமல் போனது. கேடிப் பசங்க பூட்டி விட்டு செற்றுவிட்டனர் கதவை.

 

“டேய்… யாரு கதவை லொக் பண்ணது? திறங்கடா…” என அவன் அடித்துக் கொண்டிருக்க, இங்கே அந்த நான்கு பேரும் கூட்டத்தை கூட்டியிருந்தனர். அந்தக் கூட்டத்தில் அனைவரும் சேர்ந்து ஒரு ப்ளேன் போட்டுவிட்டனர். அது எந்த ப்ளோன் என்றுதான் தெரியவில்லை.

 

“டேய்… கதவத் திறங்கடா இடியட்ஸ்… பைத்தியங்களா… கதவை ஏன்டா பூட்டினீங்க?” என சத்ய் கத்த

 

“டேய்… உள்ள அவளும் இருக்காளா?” என சத்யா கத்துவதை கேட்டு கோபமாக கேட்டான் ஆதி அந்த ஸ்டுடன்ட் யூனியன் தலைவனிடம்.

 

“ஆமாம்.” என அவன் கூறிட,

 

“அவளை ஏன்டா உள்ள வெச்சு பூட்டினீங்க?” ஆதி கோபமாக கேட்க

 

“அப்போ தானே பிசிக்ஸ் வெர்க்கௌட் ஆகும்.” அவன் கண்ணடித்தான்.

 

“டேய். முட்டாள். அது பிசிக்ஸ் இல்லடா. கெமிஸ்ட்ரி.” என்றான் ஆதி தலையில் அடித்துக் கொண்டு.

 

“ஏதோ. பிசிக்ஸோ, கெமிஸ்ட்ரியோ எல்லாமே புரியாதது மாதிரி தானே சொல்லித் தராணுங்க.” என சலித்துக் கொள்ள,

 

அதைப் பார்த்து தலையில் தட்டிக் கொண்டவன், “அதெல்லாம் என்னவோ பண்ணித் தொலைங்க. முதல்ல அந்த கதவ போய் திறங்கடா. இல்லன்னா உடைச்சிட போறான். சத்யாதான் பாவம். அவளால ரொம்ப உடைஞ்சு போய்ட்டான்.” என எரிச்சலாக கூறினான்.

 

“நீ என்ன சிவ பூஜையில கரடி புகுந்த மாதிரி. நாங்க தான் சொல்றோம்ல? காவ்யா மனசு விட்டு பேசட்டும். அதுவரைக்கும் நீயும் கதவ திறக்க கூடாது. நாங்களும் கதவ திறக்க மாட்டோம். புரியுதா?” என அவனை முறைக்க

 

“அதெல்லாம் முடியாது. நான் போய் கதவ திறப்பேன். உங்களால எதுவும் பண்ண முடியாது.” என கூறிக் கொண்டே எழும்ப முயல,

 

அவனின் கழுத்தில் கத்தியை வைத்தவன் “டேய்… இப்போ மட்டும் எழுந்தன்னா சொருகிடுவேன்.” என்றதும் வேறு வழி தெரியாமல் எச்சில் விழுங்கியவாறு அமர்ந்தான் ஆதி.

 

உள்ளே இருந்தவனுக்கு இன்னும் கோபம் பொத்துக் கொண்டு எழ ஒரே உதையில் கதவை உடைத்தே திறந்து விட்டு வெளியே வந்து நின்றான். “டேய்… எவன்டா அவன் கதவை வெளில பூட்டினது?” எனக் கத்த

 

“இவன்தான்ணா.” என பயத்தில் ஆதியை மாட்டி விட்டனர் அனைவரும்.

 

அதில் திடுக்கிட்டவன், “ஹேய்… நான்லாம் கதவை லொக் பண்ணல. இவனுங்க பொய் சொல்றானுங்க.” என அவனை முறைத்துக் கொண்டே முன்னால் நின்ற சத்யாவிடம் கூறினான்.

 

“தனியா மாட்டுவல்ல? அப்போ இருக்குடா உனக்கு.” என கையைக் கசக்கினான் சத்யா.

 

இவை அனைத்தும் நடந்து முடிய சோபாவில் கையால் முகத்தை தாங்கி சோகம் கொண்டவாறு சத்யா அமர்ந்திருக்க, “ஏன் இப்படி ஏதோ பறிபோன மாதிரி உட்கார்ந்துட்டு இருக்க?” என ஒருத்தன் வினவினான்.

 

அவனோ ஒரே தொனியில் “வாழ்க்கை நாடகமா… என் பொழப்பே பொய்க் கணக்கா…” எனப் பாட்டுப் பாடினான்.

 

“ஏன்ணா? சோகமா இருக்கியா?” எனக் கேட்டான் அவன் வழியிலே ஒருவன்.

 

ஆமாம் என அவன் தலை அசைத்ததும்

“அப்போ குளுக்கோஸ் அடிக்கிறியா?” என அவன் சத்யாவின் அருகில் வந்து ஆர்வமாக அமர,

 

“என்னது? குளுக்கோஸா? அதென்ன குளுக்கோஸ்?” என யாதும் அறியாத பச்சைப் பிள்ளை பாவமாக வினவ, உள்ளே இருந்து எடுத்தான் ஒரு சிகரெட்டை. (புகைப்பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும். உயிரைக் கொல்லும்.)

 

அதைப் பார்த்ததும் அலரி அடித்து அவனை விட்டு விலகிய சத்ய் “டேய்… என்னடா பண்ணிட்டு இருக்கீங்க? அத தூக்கி வெளில போடுடா.” என அவனை காலாலேயே எட்டி உதைத்தான்.

 

அவன் அழுதவாறு “ஏங்கண்னா அடிக்கிற?” முதுகை தடவினான்.

 

“நீ பண்ண காரியத்துக்கு உன்னை அடிக்க கூடாதுடா…” என அவன் முகம் மலர கூறியதும்

 

“ஆமாம்… ஆமாம்…” என தலையாட்டினான் அப்பாவி. இல்லை அடப்பாவி.

 

உடனே கோபமான முகமாக மாற்றியவன், “உன்னை கொல்லனும்டா…” என அவனை ஏறிப்போட்டு மிதிக்க,

 

அதைத் தடுத்து நிறுத்திய ஒருவன், “அண்ணா… என்ன அண்ணா நீ வேற, நீ எல்லாம் எவ்ளோ கெத்து. பட், ஒரு தம் அடிக்க தெரியல. நீ எல்லாம் வேஸ்ட். பெயருக்கு கெத்தா இருக்க கூடாது. கொஞ்சம் மாஸ்ஸா இருக்கனும்னா ஒன்னு ரெண்டு கெட்ட பழக்கமும் வேணும். அவன எப்படி போட்டு சுருட்டி எடுத்த? பட், ஒரு தம் பிடிக்க தெரியாத அளவு சின்னப் பையனா இருப்பன்னு நினைச்சு கூட பாக்கலண்ணா…” எனக் கூறி சிரிக்க அனைவருமே வாயைப் பொத்திக் கொண்டு சிரித்து வைத்தனர்.

 

“இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே நம்ம உடம்ப ரணகளமா ஆக்கிட்டானுங்களே…” என மைன்ட் வொய்சில் சொன்ன சத்யாவுக்கு கௌரவ குறைச்சல் வர, “டேய்… யாரப் பாத்துடா சிகரெட் அடிக்க கூட தெரிலன்னு சொன்னீங்க? இங்க கொடுடா ஒன்ன.” என ஒருத்தனின் கையிலிருந்து பிடிங்கி எடுத்து சிகரெட்டை வாயில் வைத்து நெருப்பு வைக்க, அனைவரும் சிரித்து விட்டனர்.

 

“டேய்… எதுக்குடா சிரிக்கிறீங்க?” என எரிச்சலாக சத்யா கேட்டதும்

 

“அண்ணா… சிகரெட்டோட பில்டர் சைடதான் வாயில வைக்கணும். ஆனால் நீ… பில்டர் சைட்ல நெருப்பு வெக்கிற…” என்றதும்

 

“இந்த அசிங்கம் தேவையாடா சத்யா உனக்கு?” என கையைக் கசக்கி பல்லைக் கடித்து நெஞ்சில் குத்தித் தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டவனைப் பார்த்து

 

“ஏண்னா… உண்மையிலேயே உனக்கு சிகரெட் பிடிக்க தெரியாதா? இல்லை காவ்யா அண்ணி இருக்காங்கன்னு சீன் போடுறியா?” எனக் கேட்டதும்

 

“டேய்… நான் எதுக்குடா அவளுக்கு பயப் படணும்? அவ யாரு முதல்ல எனக்கு? ஒரு தடவை தம் அடிச்சனா… எங்க அப்பா அத பாத்து ஏறிப் போட்டு மிதிச்சாரா… அதுல இருந்தே தம்முன்னாலே அந்த எக்ஸ்பென்சிவ் உதைதான் ஞாபகத்துக்கு வரும். அதனாலேயே தம் எல்லாம் தொட்டே பாக்குறது இல்லை.” என மேலே பார்த்து கூற அனைவரும் ப்லேஸ்பேக்கில் சென்று மீண்டும் நினைவு திரும்பிட

 

“த்தூ…” என எச்சில் வராது துப்பினார்கள் அனைவரும். சத்யாவுக்குப் பாரிய அவமானமாய்ப் போனது.

 

“சரி அண்ணா இதோ இப்படி பிடி.” சத்யாவின் வாயில் தம்மை வைத்து நெருப்பை கொழுத்திவிட்டவன் தன் வாயிலும் தம்மை வைத்து நெருப்பை கொழுத்தி விட்டு புகையை வளையம் வளையமாக விட்டுக் கொண்டிருக்க, பாவம், அப்பாவி பையன் சத்யாவுக்குத்தான் வளையம் போட வரவில்லை. அவனுக்கு காற்றில் உப்… உப்பென ஊதிக் கொண்டிருக்க, அவன் காதைப் பிடித்து திருகினாள் காவ்யா.

 

“ஏன்டா டேய்… நீங்களும் கெட்டுப் போனது இல்லாம அவனையும் கெடுத்து குட்டிச் சுவராக்குறீங்க? இனிமேல் தம்மு கிம்முன்னு ஏதாவது வீட்டுக்குள்ள வரட்டும்…. பிச்சிடுவேன் பிச்சு… நகருங்கடா. கங்கை நீர் ஊத்தி கழுவ போறேன்.” என அவனை துறத்தி விட

 

“ஏய்… என்ன? என் வீட்டுல இருந்துட்டு எங்க ஆளுங்களையே அடிப்பியா நீ?” சத்யா எகிற

 

“உன் பெயருதான் ராம்னு பாத்தா உனக்கும் அந்த பெயருக்கும் பதினோராம் பொருத்தம் கூட இல்லை. அந்த அளவு கெட்டுப் போய்ட்ட நீ.” எரிந்து விழுந்தாள்.

 

“ஏய்… மொத்தமே பத்து பொருத்தம் தான் இருக்கு. அதுல எங்க இருந்து பதினோராம் பொருத்தம் வரது? புதுசா நீ என்ன கண்டு பிடிச்சுருக்கியா?” அவன் கோபமாக கேட்க

 

“அட ராமா…” அவள் சீதையின் ராமரை அழைக்க

 

“சொல்லு… பக்கத்துல தானே இருக்கேன். கண்ணு என்ன குருடா?” அவன் தன்னை நினைத்துக் கொண்டான்.

 

“அட லூசுப் பயலே. உன்ன சொல்லலடா. நான் என் ராமர கூப்பிடுறேன்.” அவள் தலையிலடிக்க

 

“ஏய். அவரு உன் ராமர் இல்ல. சீத்தாவோட ராமர்.” என்று நகத்தைக் கடித்தவாறு

 

“படுத்துறானே ராமா…” என்றவாறு நொந்து கொண்டு ஓடிவிட்டாள்.

 

சற்று நேரங்கள் கழிய சத்யா இரவு நேர உணவை உண்பதற்காக சமையலறைக்குள் செல்ல, உள்ளே பாத்திரம் முழுக்க உணவாக இருந்தது. கண்ணைப் பிதற்றிக் கொண்டு அரிசி, எண்ணெய், மிளகு, கடுகு, கராம்பு, வெள்ளைப்பூண்டு, கறிவேப்பிலை, சூப்கட்டி, மிளகாய்த்தூள், உப்பு, வெங்காயம், மிளகாய், பெருஞ்சீரகம், நச்சீரகம், தேசிக்காய், கருவாப்பட்டை, ரம்பை, தேயிலைத்தூள், சீனி, சக்கரை, கோப்பித் தூள் என அத்தனையையும் எண்ணிப் பார்த்தவன் வீட்டில் உணவுக்காக பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தையும் தேடிடவே அனைத்தும் காலியாக இருந்தது.

 

“அடப் பாவிங்களா. ஒரு திங்க்ஸையுமே காணோமே. ஒரே நாள்ள வீட்டை இப்படி பஞ்சம் பிடிச்சதா மாத்திட்டீங்களேடா.” என்றவாறே அதிலிருந்து மிஞ்சியிருந்த உணவை எடுத்து சாப்பிட்டு விட்டு தனது அறைக்கு வந்து பார்த்தான். அனைவரும் நன்றாக குறட்டை விட்டு தூங்கி கொண்டிருந்தார்கள். ஆனால் அவனுக்குத்தான் தூங்க இடமில்லை.

 

“அடப் பாவிப் பசங்களா. என் வீட்டுல எனக்கே தூங்க இடமில்லாம பண்ணிட்டீங்களேடா.” என உலரியவாறு அங்கிருந்த மூலையில் தூங்க இரண்டு நிமிடங்கள் கழிய அவனால் தூங்கவே முடியவில்லை. ஒரு பக்கம் ஒருத்தன் தனது காலை அவன் மேல் போட இன்னொருவன் குறட்டை சத்தம் காதைப் பிய்த்துக் கொண்டு உள்ளிறங்க அடுத்தவன் தில்வாலே பாடலை கத்திக் கத்திப் பாடிக்கொண்டே தூங்கியிருந்தான். புரண்டு புரண்டு பார்த்தான். காதில் பஞ்சை வைத்துப் பார்த்தான். முடியவில்லை. ஒருவழியாக தலையணையை எடுத்துக் கொண்டு வெளியில் சென்று கண்ட இடத்தில் தூங்கிக் கொண்டிருந்தான்.

 

இங்கு தனது போனில் “ட்ரீமம்… வேகபம்… க்ரிட்டிகல் கன்டிஸனம்… எர்த்தம்… க்வேக்கபம்…” பாடலுக்கு ரீல்ஸ் செய்து அப்லோட் செய்தவாறே வந்தாள் காவ்யா. “என்ன குரங்கு நடு ஹோல்ல தூங்குது?” என்றதும் ஒற்றைக் கண்ணைத் திறந்து அவளைப் பார்த்தவன்,

 

“நான் குரங்குன்னா அப்போ நீ யாரு? கொரில்லா.” என மனதில் திட்டியவன் அவளை கண்கானிக்கும் பொருட்டு வேண்டுமென்று கண்ணை மூடிக்கொண்டான்.

 

“சரி… குரங்கு நல்லா தூங்கிட்டு இருக்கு. பேசாம ஒரே ஒரு செல்பி எடுத்துக்கலாம்.” என அவன் வயிற்றில் ஏறி அமர இடை தாங்காது “அம்மா…” என கத்த வந்தவன் தானே தன் வாயைப் பொத்தி சகித்துக் கொண்டு

 

“அரிசி மூட்டை. அரிசி மூட்டை. என்னா வெய்ட்டு. ச்சேய்… அப்படி என்னத்த தின்னு தொலைச்சான்னு தெரிலயே. என் வயித்துக்குள்ள இருக்குற இன்டெஸ்டைன் எல்லாம் வெளில வந்துடும் போலயே. இப்போவே நாக்குத் தள்ளுதே.” என மனதுக்குள் அவளை வசை பாடிவிட்டான்.

 

இங்கே ஒருத்தி செல்பியை ஒவ்வொரு கோணலிலும் எடுத்து “இப்போ சரி. After long time… Selfie with monkey @SathyaRam. (பைத்தியங்களின் லொக்கா) என ஒரு ஸ்டோரிய இன்ஸ்டால போஸ்ட் பண்ணி இந்த குரங்க டெக் பண்ணி விட்டுடலாம்.” எனக் கூறிவிட்டு அதனை செய்தும் முடித்துவிட்டாள்.

 

இங்கே ஒருவன் வயிற்றிலுள்ள இங்க்ரீடியன்ஸ் எல்லாம் வெளியே வர, கண்ணக் கட்டுதே என காவ்யாவின் தோளை சுரண்டினான். “கொஞ்சம் இருப்பா. இது அப்லோட் ஆகிடட்டும்.”என்றதும் மீண்டும் மீண்டும் சத்யா சுரண்ட

 

“அட கொஞ்சம் சும்மா இரேன்.” என பின்னால் திரும்பி பார்க்க

 

“ஆமாம். மேடம் ஏத்தனை கிலோ?” என வினவியதும், தலையை சொரிந்து கொண்டே காவ்யா

 

“வயசையும் வெய்ட்டையும் பொண்ணுங்க கிட்ட கேட்க கூடாதுன்னு உனக்கு தெரியாதா?” என முறைத்தாள் சமாளிப்பாக.

 

“அடிங்… முதல்ல எழுந்திருடி அரிசி மூட்டை.” என திட்ட உடனே எழுந்து நின்னவளைப் பார்த்து

 

“எம்மா என் ஸ்பினல் கோட் உடஞ்சு போச்சே…” என இடுப்பை பிடித்து கத்தினான் சத்யா.

 

“ஏன்டி வலில துடிக்கிறேன். தூக்கி விட கை கொடுக்க மாட்டியா?” என்றதும்

 

“சோரி போஸ்.” என்று கையைக் கொடுத்து எழுப்பி விட்டாள். அவளை ஏற இறங்கப் பார்த்தவன்

 

“மேடம் என்ன பண்ணிட்டு இருந்தீங்க?” என்றான் புருவம் உயர்த்தி.

 

“அதுவா… அது… வந்து…” எனத் திணறியவள் “ஆஹ்… இந்த ட்ரென்டிங் சோங் இருக்குல்ல? ட்ரீமம்… வேகபம்… அதுக்கு ரீல்ஸ் பண்ணி அப்லோட் பண்ணிட்டு இருக்கேன்.” அவள் ஆர்வமாக

 

“என்னாது… ட்ரீமம் வேகபமா?” அவன் முகம் அஷ்ட கோணலாக போனது சத்யாவுக்கு.

 

“ஏன் உன் மூஞ்சி அப்படி கோணலா போகுது?” எனக் கேட்டாள் அவனை நோக்கியவாறு.

 

“எங்க பாடு… கேப்போம்.” அவன் கூற அவளும் தொண்டையை செருமிக் கொண்டு பாட ஆரம்பித்தாள்.

 

“ட்ரீமம் வேகபம்…. க்ரிட்டிகல் கன்டிஸனம்… ஹேய்… எர்தம் க்வேகபம் ஹில்தூல் சப் சேகபம்… பேஸ்டூ பேஸம்… தர்தி பூத்தரம்… திங்க்ஸும் தன்டரும்… டவ்னும் அன்டரும்… சை…” அவள் பாடிக் கொண்டிருக்கும் போதே அவள் வாயைப் பொத்தியவன்

 

“இதுக்கு மேல பாடாத தாயே. உன்ன கும்பிட்டு கேட்டுக்குறேன்.” அவன் கையெடுத்து கும்பிட

 

“ஏன்… நான் பாடினது நல்லா இல்லையா?” அவள் முறைக்க

 

“நீ பாடினதெல்லாம் நல்லாதான் இருந்தது. நானே நீ ஸ்ருதி எடுத்ததுல மெய் மறந்து போய்ட்டேன்… ஆனால்… அந்த பாட்டோட லிரிக்குக்கு அர்த்தம் தெரியுமா உனக்கு? ச்சேய்… சேய்… முதல்ல அந்த ரீல்ஸ யாராவது பாக்குறதுக்குள்ள ரிமூவ் பண்ணுடி.” அவன் முகத்தை சுழிக்க

 

“ஏன்? அப்படி என்ன இருக்கு அந்த பாட்டுல? ஏன் ரிமூவ் பண்ண?” அவள் ஒன்றும் புரியாது கேட்க

 

“இங்க வா சொல்றேன்.” அவன்  அவள் காதைப் பிடித்து இழுத்து கூற வாயில் கை வைத்தவள்

 

“ஆஹ்… என்னடா சொல்ற…” அவள் முகமும் கோணலாக

 

“ஆமாம்… புதுசா ஒரு பாட்டி ட்ரென்டிங்க் ஆனா எந்த மொழினாலும் பரவால்ல. லிரிக் என்னன்னாலும் பரவால்லை… உடனே ரீல்ஸ் பண்ணி அப்லோட் பண்ண வேண்டியது.” நாக்கைக் கடித்து தலையில் அடித்துக் கொண்டான்.

 

“எனக்கென்ன தெரியும்?” அவள் மூஞ்சைத் தொங்கப் போட்டுவிட்டாள்.

 

“ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன். உனக்கு வாய்க்கிறவன் செத்தான்டி. பாவம் எந்த அப்பாவி பையனோ. உன்கிட்ட அடி வாங்கியே சாகப் போறான்.” என்றதும் அவன் சேர்ட்டினை இழுத்துப் பிடித்து

 

“அது வேற யாரு நீதான்.” என்றாள் சிரிப்புடனே.

 

“எஹேய்…” என அவளை தள்ளிவிட்டு தன் சேர்ட்டை சரி செய்தவன் “நாங்கெல்லாம் உஷார் ஆகிட்டோம். இந்த மீன் உன் தூண்டில்ல சிக்காது.” என்றதும்

 

“தூண்டில்ல சிக்காது. வலையில சிக்கும்ல?” என்றாள் மர்ம புன்னகையுடன்.

 

“இல்லை சிக்காது. வலையையே கடிச்சு துப்பிடும்.” என்று கடிப்பது போல் பாவனை செய்து காட்டியவனின் தலையில் நங்கென்று அவள் கொட்ட

 

“இப்போ எதுக்கு கொட்டின?” என அவன் கோபம் எழ கத்தினான்.

 

“போடா… குரங்கு” என வாயை சுழித்து நக்கல் காட்டிவிட்டு போக

 

“போடி போடி நீ இல்லன்னா எனக்கு பொண்ணு கொடுக்க யாருமில்லையா என்ன?” என பின்னால் திரும்ப அவன் பின் தலையில் அடிப்பது போல் அவள் சைகை செய்ய பின்னால் திரும்பி அவள் கையைப் பிடித்தவன்

 

“இந்த பின்னால திரும்பி இருக்கும் போது நக்கலா ஏதாவது பண்ற வேலை எல்லாம் என்கிட்ட வெச்சிக்காத. ஏன்னா எங்களுக்கு பின்னாடியும் கண்ணு இருக்கு.” என கூறியவன் “ஓடிப் போயிடு…” மிரட்ட முகத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டு சென்றுவிட்டாள்.

 

“எம்மாடியோய். ஒரு தொல்லை தொலைஞ்சது.” என கூறியவாறு அங்கேயே தூங்கிவிட்டான். காலையிலே சத்யாவுக்கு பெய்ல் கிடைத்த விடயம் தெரிந்ததும் வீட்டையே இரண்டாக்கிவிட்டனர் மாணவர்கள்.

 

கத்திக் கூப்பாடு போட “கொளுத்துங்கடா அந்த வெடில.” என ஆதி கூறிட வெடிலை ஆண்டாள் அக்காவின் காலினுள்ளேயே கொளுத்திப் போட்டு விட்டார்கள்.

 

“எம்மா… எம்மா… நெருப்பு… நெருப்பு…. காலுக்குள்ள கொளுத்திட்டானுங்களே லூசுங்களா.” என அனைவரையும் திட்டியவாறு “இவனுங்கள கொஞ்சமாவது திட்டுங்க தம்பி. இம்சை இம்சை சரியான இம்சை. நேத்து இரவுல இருந்து சரியான முறைக்கு தொல்லையோ தொல்லை. வீட்டுல ஒரு பொருள் இருந்த இடத்துல இல்ல. வீட்டையே நாசம் பண்ணிட்டானுங்க.” என அவர் ஒரு புறம் புலம்ப

 

“ச்சேய்…” என தலையில் கை வைத்தவாறு “நான் சொன்னா மட்டும் கேட்டுடுவானுங்களா? சாவடிக்கிறானுங்களே…” என சத்யா ஒருபுறம் புலம்ப

 

“அதெல்லாம் சரிதான். எங்களுக்கு எங்க ட்ரீட்?” எனக் கேட்கவும்

 

“ட்ரீட் என்னடா ட்ரீட்? கல்யாண சாப்பாடே போடுவான்டா எங்க அண்ணன்.” என்றான் வேறொருத்தன்.

 

“எதேய்… கல்யாண சாப்பாடா? என்னடா உலர்ரீங்க?” என சத்யா எரிச்சலாக கேட்க

 

“தூக்குங்கடா மாப்பிள்ளைய.” என்றான் ஒருத்தன். அடுத்த நிமிடம் காவ்யாவின் வீட்டில் நின்றிருந்தது அந்த கூட்டம். காவ்யா காலையிலேயே நேரத்துடன் எழுந்து வீட்டின் ஜன்னல் வழியே உள்ளே வந்துவிட்டாள்.

 

இங்கே ஒருத்தன் “ஏய் பார்வதி… வெளில வா.” எனக் கத்த

 

“டேய்… பாட்டிடா.” என அவனைத் தடுத்தான் ஆதி.

 

“பாட்டியாவது பூட்டியாவது. எங்க அண்ணாவ தப்பா பேசினா உங்க பாட்டி கூட எங்களுக்கு பார்வதிதான்.” என்ற ஒருத்தன் கல்லை விட்டெரிந்து

 

“ஏய்ப்…. பார்வதி வெளில வா…” என கத்த ஜன்னலால் எட்டிப் பார்த்தாள் காவ்யா.

 

“அடப் பாவிங்களா என்னடா இது பாட்டி மட்டும் இவனுங்க பெயர் சொல்லி கூப்பிர்ரத கேட்டிச்சுன்னா நாக்க வெட்டி எடுத்துடும். இன்னைக்கு இவனுங்க செத்தானுங்க. இவன சொல்லி தப்பில்லை. இந்த சத்யாவை சொல்லனும். இவரு பெரிய துட்டன் பரம்பரை. வந்துட்டாரு பெருசா எள்ளாளன் கோட்டைய பிடிக்க.” என சொல்லிவிட்டு கீழே சொன்றாள் இன்று நடக்கப் போகும் விடயம் அறியாமல்.

 

தொடரும்…

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!