காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 15 🖌️

5
(1)

“பார்வதி வெளியில வா… பார்வதி.” எனக் மாணவர்கள் சத்தமாகக் கத்த

“டேய் யார்டா அவன் என்னையே பெயர் சொல்லி கூப்பிடுறது?” என்றவாறு வெளியே வந்தார் பாட்டிம்மா அவரது மருமகன் விஜயனுடன்.

“போச்சுடா…” என்றவாறு சத்யாவைப் பார்த்தான் ஆதி.

“டேய்… மாமா. பேசாம எஸ்கேப் ஆயிடலாம். பாட்டி சும்மாவே பரதநாட்டியம் ஆடும். இதுல இவனுங்க சலங்கைய வேற கட்டி விட நினைக்கிறானுங்க. அவ்ளோதான். மெல்ல இங்கெருந்து நகர்ந்துடு.” என்று கண்கலாளேயே சைகை செய்தான் ஆதி.

அவன் சொல்வது சரிதான் என்று சத்யாவுக்கும் தோன்ற மெல்ல அவன் பின்வாங்க அங்கிருந்த ஒருவன் அதனைக் கண்டு கொண்டு அவனை இழுத்து தன்னுடன் வைத்தவன் “ராம் அண்ணா… இது தப்பு. போரிலிருந்து பின்னால் தலை காட்டுறவன் துரோகி. அதனால கம்முன்னு இரு. எதுவா இருந்தாலும் நாம பாத்துடலாம்.” என்றான் சமாதானமாக.

 

“டேய்… செத்துடுவோம்னு தெரிஞ்சும் தூக்குல தொங்க நான் தயாரா இல்லை. அதனால வேணாம்டா. காதல் எல்லாம் அப்போவே குழி தோண்டி புதைச்சிட்டேன்.” என்றவனைப் பார்த்து அனைவருக்கும் பரிதாபமே எஞ்சியது.

 

“என்னங்கடா வீட்டுக்கு வந்து தகறாரு பண்றீங்களா?” பாட்டி கோபமாக வெளியே வந்து கத்தினார்.

 

“பின்ன, நீங்க சரியா இல்லன்னா தகறாரு பண்ணாம என்ன பண்ணுவாங்க?” எனக் கேட்டிட அவசரமாக வெளியே வந்தாள் காவ்யா.

 

“டேய்… என்னங்கடா? என்ன பிரச்சினை உங்களுக்கு?” என காவ்யா வேண்டும் என்றே பாட்டிக்குப் பயத்தில் அவர்களை திட்ட

 

“ஏய்… நேத்து பூரா ராம் வீட்டுல எங்க எல்லார் கூடவும் சந்தோசமா சிரிச்சு தானே பேசின? இப்போ வந்து இப்படி தெரியாத மாதிரி கேட்குற? என்ன டபுள் கேம் ஆடுறியா?” என்று காவ்யாவைக் கோர்த்து விட்டதும் பாட்டியின் பார்வை அவளை எரித்தது.

 

“ஹைய்யோ… போட்டுக் கொடுத்துட்டானுங்களே பாவிங்க. இப்போ இந்த பாட்டிய எப்படி சமாளிக்கிறதுன்னு தெரிலையே.” என யோசித்தவள் இஇஇ… என இழித்துவிட்டு

 

“பாட்டி… அவனுங்க பொய் சொல்றானுங்க. நேத்து நான் வீட்டுல தானே இருந்தேன். நீ கூட நைட் நான் தூங்கும் போது என் ரூமுக்கு வந்து பாத்தியே.” அவள் சமாளிப்பாக கூற

 

“அப்போ நான் உன் ரூம்க்கு வரும்போது நீ தூங்குற மாதிரி நடிச்சிட்டு நான் போன பிறகு இவன் வீட்டுக்கு போய்ருக்க.” அவளை பாட்டி அர்த்தமாக முறைக்க

 

“ஐய்யோ… வாயைக் கொடுத்து நல்லா வசமா மாட்டிக்கிட்டேனே.” என மானசீகமாக தலையில் அடித்தவள்…. “அது…” என இழுக்க அவளைக் கைகாட்டி நிறுத்தியவர்

 

“இப்போ எதுக்கு இப்படி கூட்டத்தை கூட்டி வந்து தகறாரு பண்ற ராம்? அதுதான் அவளே சொல்லிட்டால்ல? நீ வேணாம்னு. பிறகு எதுக்கு உன் புத்தி இப்படி போகுது?” என்றார் நடந்த விடயம் தெரியாமல்.

 

“ஏய்… யாரப் பாத்து என்ன வார்த்தை பேசின? எங்க ராமையே நீ இப்படி பேசுவியா பாட்டி? வயசுக்கு கூட உன் கொழுப்பும் சேர்ந்து முத்தி போச்சு.” என பாட்டியைக் கத்தினான் ஒருத்தன்.

 

“ஏய்… யார் வீட்டுக்கு வந்து என்ன பேசுறீங்க? ஏய் கார்த்திக்… நீயும் இவனுங்க கூட சேர்ந்துட்டு ஆட்டம் போடுறீயா? இனிமேல் இவன் கூட சேர்ந்து இப்படி ஏதாவது ரவ்டீஸம் பண்ணிட்டு திரிஞ்சேன்னா அடிச்சு தோலை உரிச்சிடுவேன்.” என்றார் அவனது அப்பா விஜயன் கோபமாக.

 

அவர் பேசுவதைக் கேட்ட பார்வதி பாட்டியும் “நீங்க முதல்ல இவனுங்க எல்லாரையும் அடிச்சு துரத்துங்க. இவனுங்களுக்குதான் வேலை வெட்டி இல்லன்னா நம்ம டைமையும் வேஸ்ட் பண்றானுங்க.” என்றார் சிடுசிடுத்தவாறே.

 

“முதல்ல வெளில போங்கடா பைத்தியக்காரப் பசங்களா. இல்லன்னா வீட்டுக்கு வந்து தகறாரு பண்றிங்கன்னு கேஸ் போட்டுடுவேன். பிறகு என் வாய் பேசாது. அருவாதான் பேசும்.” என்று கோபமாகக் கூறி எச்சரித்தார்.

 

“வீட்டுக்கு வந்தவங்கல இப்படி நடு ரோட்டுல நிக்க வெச்சி பேசக் கூடாது. உள்ள கூப்பிட்டு பேசனும்ன பேசிக் மேனர் கூட தெரியாதா பார்வதி?” எனக் ஒருவன் கத்த அரிவாளை எடுத்து காட்டிட “ஆத்தி…” என அவன் வாய் தானாகவே மூடிக் கொண்டது.

 

“சரி. உள்ள வந்து தொலைங்க. பேசலாம்.” என்றதும் உடனே உள் நுழைந்தது மொத்த கூட்டமும். உள்ளே தானாகவே கதிரையை எடுத்துப் போட்டு சத்யாவை அமர வைத்தனர் அனைவரும்.

 

“சரி. எதுக்கு வந்தீங்க?” பார்வதி பாட்டி சுற்றி வளைக்க விரும்பவில்லை.

 

“பொண்ணு கேட்க.” என அனைவரும் கூறியதும் புறை ஏறியது சத்யாவுக்கே.

 

“டேய்… நான் என் பாட்டுல தானடா இருந்தேன். ஏன்டா…” என்றவாறு அனைவரையும் முட்ட முட்ட விழித்தான் சத்யராய்.

 

இவர்களின் பேச்சில் சிரித்த மொத்தக் குடும்பமும் “என்னது… பொண்ணு கேட்டா… உலக வரலாற்றுலயே குடும்பத்துல இருக்கிற பெரியவங்க இல்லாம இப்படி கண்டவங்கள கூட்டிட்டு வந்து தானே தன் கல்யாணத்துக்கு பொண்ணு கேட்குறத இன்னைக்குத்தான் பாக்குறேன்.” என சிரித்துக் கொண்டே சொன்னார் பாட்டி.

 

“எங்க ஸ்டைல் அப்படிதான் பாட்டி. நாங்க எல்லாரையும் விட டிப்ரன்டாதான் இருப்போம். ஏன்னா நாங்க கெத்துல்ல?” என்றதும் அவனைத் தடுத்து நிறுத்திய சத்யா எழுந்து நின்றான்.

 

“இங்க பாருங்க பாட்டி. நான் காவ்யாவ உயிருக்குயிரா காதலிக்கிறேன். ஏன்? எல்.கே.ஜி ல இருந்து ஒன்னாவே படிக்கிறோம் பாட்டி. என்னப் பத்தி எங்கப்பாவுக்கு தெரிஞ்சத விட காவ்யாக்குதான் நல்லாத் தெரியும். எனக்கு எது பிடிக்கும்? எது பிடிக்காது? எல்லாமே அவளுக்கு நல்லாத் தெரியும். அதே மாதிரி அவளப் பத்தி அவங்க அம்மாவுக்கு தெரிஞ்சத விட எனக்குதான் நல்லாத் தெரியும். காலையில ஆறு மணில இருந்து இரவு ஆறு மணி வரைக்கும் அவ என்கூடதான் ஸ்பென்ட் பண்றா. கிட்டத்தட்ட பன்னிரண்டு மணித்தியாலம். அதே போல வீட்டுல பன்னிரண்டு மணித்தியாலம்தான் ஸ்பென்ட் பண்றா. இருந்தாலும் அதுல உங்க கூட ஸ்பென்ட் பண்றதே நாலே நாலு மணித்தியாலம்தான். நீங்க அவள புரிஞ்சிக்கிட்டத விட நான்தான் அவள நல்லாவே புரிஞ்சிக்கிட்டேன். எக்ஸேம்பில்… அவளுக்கு பிடிச்ச கலர் என்னன்னு தெரியுமா பாட்டி உங்களுக்கு?” எனக் கேட்டதும் அவர் எதுவும் தெரியாது வாயடைத்துப் போனார்.

 

“எனக்கு தெரியும். Red. சரி. அவளுக்கு பிடிச்ச பூட்?” பாட்டியிடம் பதிலில்லை.

 

“மட்டன் பிரியாணி. சரி… முக்கியமான பொய்ன்ட்கு வரலாம். உங்க கூட இருக்கும் போது அவ கூட்டுல இருக்குற கிளி மாதிரிதான் வாழுறா. ஆனால்… என் கூட இருக்கும் போது சுதந்திரமா வாழுறா. உங்க கூட வாழுறது காவ்யாவே இல்ல பாட்டி. அவ டோட்டலா டிப்ரன்ட். ஏன் கூட இருக்குற காவ்யாதான் உண்மையான காவ்யா. வாழ்க்கைய வாழப் போறது நாங்கதானே. காதல் கண்டவங்க மேல வராது. குறிப்பிட்ட ஒருத்தங்க மேலதான் வரும். இப்போ அவ என்னை காதலிச்சிட்டு வேற ஒருத்தன கல்யாணம் பண்ணா அவ எப்படியான பணக்கார வீட்டுல இருந்தாலும் அது நரகமாத்தான் இருக்கும். அதே நேரம் அது அவ கல்யாணம் பண்ணிக்க போறவனுக்கு பண்ற துரோகம். ஒருத்தன மனசுல நினைச்சிட்டு இன்னொருத்தன் கூட வாழ்றது எவ்ளோ அசிங்கம்? அதே மாதிரி மனசுக்கு பிடிச்ச என்கூட வாழ்ந்தா குடிச வீடா இருந்தாலும் அது சுவர்க்கம்தான். நேத்து வரைக்கும் என்னைக் காதலிக்கிறேன்னு சொன்னவ இன்னைக்கு வேற ஒருத்தன காதலிக்கிறேன்னு சொல்லும் போது எவ்ளோ வலிச்சது தெரியுமா? அத விட என்ன கொன்னுருக்கலாம். ஒரு சாதாரண வார்த்தையே இவ்ளோ வலிக்கிதுன்னா ஒரே அடியா பிரிஞ்சிட்டா எவ்ளோ வலிக்கும் தெரியுமா? அவ கண்ல அன்னைக்கு கூட என் மேல இருந்த காதல்தான் தெரிஞ்சது பாட்டி. நான் யோசிச்சு பாத்தேன். அவளுக்கு ஏதோ பிரச்சினை. அதனாலதான் அப்படி பேசுறான்னு. உணர்வுகளை வார்த்தைகளால சொல்லித்தான் புரிஞ்சிக்கனும்னு இல்ல பாட்டி. ரெண்டு இதயத்துக்கு இடையில இருக்குற கனெக்சன் எப்போதுமே அழியாது. அந்த பந்தம் உங்களுக்கு புரியாது. நான் இப்போ சீரியஸ்ஸா பேசுறேன். நான் கடைசியா கேட்குறேன் பாட்டி. தயவு செஞ்சு காவ்யாவயும் என்னையும் வாழ விடுங்க.” என கை எடுத்து கும்பிட்டு கேட்டான். அவன் பேசிய வார்த்தைகளில் தன் மகளை இவ்வளவு காதலிக்கும் ஒருத்தன் இருக்கிறானா? என லக்ஷ்மிக்கு கண்களில் கண்ணீர் வந்தது. அதே நேரம் காவ்யாவுக்கு புல் அரித்தது. அவனிடம் இதுவரை அவள்தான் காதல் வசனம் பேசியிருக்கிறாள். ஆனால் முதல்தடவையாக அவனிடமிருந்து உச்சகட்ட காதலுடலான வாரத்தைகளைக் கேட்கும் போது உயிர் உருகியது.

 

“வேணாம் அத்தை. சத்யாவ நான் ஏதோ தப்பானவன்னுதான் நினைச்சிட்டு இருந்தேன். ஆனால்… அவன் என் பொண்ணு மேல வெச்சிருக்குறது உண்மையான காதல்னு புரிஞ்சிக்கிட்டேன். அவன் அவள நல்லா பாத்துப்பான்ன நம்பிக்கை எனக்கு வந்துடுச்சு அத்தை. பேசாம சத்யாவுக்கு காவ்யாவ கல்யாணம் பண்ணி வெச்சிடலாம்.” விஜயன் தன் மகள் தலையை வருடியவாறே கூறினார்.

 

அதற்கு ஏளனமான புன்னகை ஒன்றை தந்த பாட்டி, “இவன் எமோசனலா நாடகம் போட்டா, அவனுக்கும் என் பேத்திக்கும் கல்யாணம் பண்ணி வெச்சிருவேனா? நீங்க சும்மா இருங்க. இவன் ஒரு க்ரிமினல். இவன கல்யாணம் பண்ணிக்கிட்டா அவ வாழக்கைதான் நாசமா போகும். இந்த சினிமா டயலொக் எல்லாம் இங்க எடுபடாது. நான் சொன்னது சொன்னதுதான். காவ்யாவுக்கு உன்ன பிடிக்கல. அதனால அவளுக்கும் நான் பாத்த பையனுக்கும்தான் கல்யாணம். முதல்ல இடத்தை காலி பண்ணுங்கடா.” எனக் கத்தியதுமே

 

“ஏய்…” என்று கோசமிட்டது அந்தக் கூட்டம். அதனை கை காட்டி தடுத்து நிறுத்தினாள் காவ்யா. அவள் ஏதோ பேசப் போக அவள் கையைப் பிடித்து தடுத்து நிறுத்தி வேண்டாம் என்று கண்களாலேயே சைகை செய்தார் மகாலக்ஷ்மி.

 

அதற்கு அவள் அவரின் கையை உதறிவிட்டு, “போதும் மா. இதுக்கு பிறகும் என்னால தாங்கிக்க முடியாது. இது எனக்கான நேரம். இதுல முடிவு நான்தான் எடுப்பேன்.” என்றவள் சத்யாவின் முன் சென்று நின்று அவன் கையோடு தன் கை சேர்த்து தோளோடு ஒட்டி நின்று அவன் முகம் பார்த்தாள். அவளிடம் தாலியைக் கொடுத்தான் ஆதி. அதை வாங்கியவள் சத்யாவிடம் அதைக் கொடுத்து “என் கழுத்துல இதக் கட்டு.” என்றாள் திமிறாக.

 

“ஏய்… காவ்யா…” எனக் கத்தினார் பாட்டி சத்தமாக தொடர்ந்து அவளை அறைய கை ஓங்கியவரின் கையைப் பிடித்து நிறுத்தினான் சத்யா.

 

“அவ மேல சின்ன துரும்பு பட்டாலும் நீங்க பெரியவங்கன்னு பார்க்க மாட்டேன்.” என்றான் அவரை முறைத்தவாறு. அவனிடமிருந்து கையை பிடிங்கிக் கொண்டார் பாட்டி.

 

“இதுதான் பாட்டி காதல். அன்னைக்கு ஏன்  நான் இவன வேண்டாம்னு சொன்னேன் தெரியுமா? அந்த ஆர்.ஜே தான் நீ அவன வேண்டாம்னு சொல்லலன்னா உங்க அம்மாவை கொன்னுடுவேன்னு மிரட்டினான். எங்கம்மாவ எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனாலத் அப்டி பண்ணேன்… சரி… இப்போ மெய்ன் பொய்ன்ட்க்கு வருவோம். அம்மாவுக்காகதான் இவன வேண்டாம்னு சொன்னேனே தவிர உங்களுக்காக இல்லை. சரி… கல்யாணத்துக்கு முன்னரே இப்படி எங்க அம்மாவ கொன்னுடுவேன்னு மிரட்டி என்னை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க நினைக்கிற கேவலமான புத்தி இருக்கிற அவன் எங்க? என்ன அடிக்க கை ஓங்கினதும் அத பாத்து துடிச்சு போன இவன் எங்க? ஏணி வெச்சா கூட என் சத்யாவுக்கு அந்த ஆர். ஜே எல்லாம் கம்பேர் ஆக மாட்டான்.” அவள் கூறியதைக் கேட்டு கோபம் கொதித்தெழுந்துவிட்டது மகாலக்ஷ்மிக்கு.

 

“ஏய்… நிறுத்துடி… யாருக்கிட்ட என்ன பேசுற? உனக்கு கொழுப்பு முத்திடுச்சு. முதல்ல அம்மாக்கிட்ட மன்னிப்பு கேளு. மன்னிப்பு கேளுன்னு சொல்றேன்ல?” என அவளைப் பிடித்து திட்டினார் மகாலக்ஷ்மி.

 

“நான் ஏன் மன்னிப்பு கேட்கனும்? அம்மா… இவ்ளோ நாளும் மனசுக்குள்ள வெச்சிட்டு வெந்து போனது போதும்மா. உனக்கும் இதே மாதிரிதான் நீ காதலிச்சவன கொன்னுட்டு அப்பாவ கல்யாணம் பண்ணி வெச்சாங்களே. நீ கூட தன்னால ஒருத்தன் செத்துட்டான்னு தினம் தினம் குற்ற உணர்ச்சில தவிக்கிறியே. உன் நிலமை எனக்கு வரணுமாம்மா? எனக்கான நீதிய நான் கேட்கனும். என்ன தடுக்காதம்மா.” அவள் கிட்டத்தட்ட தொண்டை கிழிய கத்திவிட்டாள். அவள் கூறியதைக் கேடட்தும் அவர் கண்களில் கண்ணீர் ஊறியது. அப்படாயே வாயடைத்து சிலையாக நின்றுவிட்டார்.

 

“நான் மேஜர். எனக்கு விரும்பியவங்கள கல்யாணம் பண்ணிக்க உரிமை இருக்கு. இதுல நீ தலையிட்டன்னா உன் மேல பெமினிஸ்ம் சட்டத்துல ஹியூமன் ரைட்ஸ் கேஸ் போட்டுடுவேன் பாட்டி.” என்றாள் மிரட்டலாக எச்சரித்து.

 

“ஓஓஓ… அந்தளவு போய்ட்டியாடி நீ. சரி. இவன கல்யாணம் பண்ணிக்க இந்த வீட்ட விட்டு நீ வெளில கால் எடுத்து வெச்சேன்னா உனக்கும் இந்த வீட்டுக்குமான உறவு அத்தோட முடிஞ்சது. உன்னை நாங்க எல்லாருமே தலை மூழ்கிடுவோம்.” என்று கோபமாக கூறிட

 

“அப்படியா? தாராளமா. என்ன வேணாலும் பண்ணிக்கோ பாட்டி. நான் ஒன்னும் தடுக்க மாட்டேன்.” எனத் தெளிவாகக் கூறி விட்டாள்.

 

“ஆதி அந்த தாலியைக் கொடு.” என வாங்கியவள், அதனை சத்யாவிடம் நீட்டினாள். அவன் அதனை கையில் வாங்கிக் கொண்டு காவ்யாவின் கழுத்தில் கட்ட எத்தனிக்க ஆதி அவனைத் தடுத்து நிறுத்தினான்.

 

“ஸ்டோப்… ஸ்டோப்… என்ன அக்கா? இப்படி டேரெக்டா தாலிக்கிட்ட போய்ட்டேள்? சில சில சம்பிரதாயங்கள் பண்ணனுமோனோ?”என்றவன்

 

“யாரங்கே… சத்த அந்த மாலைய கொடுங்கோ.” என்றான் ஒருத்தனிடம் கை நீட்டி

 

அவனும் மாலையை எடுத்துக் கொடுத்திட “இப்போ ரெண்டு பேரும் மாலைய மாத்திக்கோங்கோ.” என சத்தமாக சொன்னான் ஆதி. அவர்கள் இருவரும் மாலையை மாற்றிக் கொண்டதும் பாட்டியின் அருகில் நின்று மந்திரத்தை உச்சரித்தபடி பூக்களை அவர் மீது போட்டான். அவர் அவனை முறைப்பது கூட தெரியாமல் அவன் மந்திரங்களை உச்சரித்தான். பின்னர் இருவரின் கைகளையும் பிணைத்து விட்டவன் “இப்போ மாப்பிள்ளையும் பொண்ணும் அக்னிய சுத்தி வலம் வாங்கோ.” என்றதும் அவனை என்னடா என பார்த்தார்கள் அனைவருவரும்.

 

“எதேய்… அக்னியா? எங்க இருக்கு அக்னி?” என்றார்கள் யோசித்தவாறே.

 

“உங்களுக்கு தெரியலையா? அதுதான் அக்னி குண்டமா இவா இருக்காளே. அவா வயித்துல எரியிற தீயிலதான் நான் இப்போ மந்திரம் சொல்லி பூ போட்டேன். அதே போல நீங்களும் அவாள சுத்தி வந்தா அக்னிய வலம் வந்ததுக்கு சமன்தான்.” என்று ஆதி சொனதும் “ஏய்…” எனக் கத்தினார் பாட்டி.

 

“பாட்டியாரே… நீங்க கத்தினா அடங்குறது எல்லாம் அந்தக் காலம். இது வேற காலம். சோ… கொஞ்சம் அடக்கி வாசிச்சா… ரொம்ப நன்னா இருக்கும்.” என்றான் ஆதி. பாட்டியைச் சுத்தி வந்தவர்கள் ஆதியின் முன் நிற்க

 

“மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா… கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்…” என மந்திரத்தை உச்சரித்தவன் தாலியை சத்யாவின் கையில் கொடுத்துவிட்டு “கெட்டி மேளம்… கெட்டி மேளம்…” என்றிட தாலியை அவள் கட்டி மூன்று முடிச்சிட்டு குங்குமம் வைத்து தன் உயிரில் பாதி ஆக்கிக் கொண்டான் சத்யா. வில்லன் க்ரூப் அணியினரும் பாட்டியும் அவர்களை முறைத்தவாறே எதுவும் செய்ய முடியா நிலையில் நின்றிருந்தனர். 

 

தொடரும்…

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!