காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 18 🖌️

5
(1)

பொற்கதிரோன் கிழக்கு வாயிலில் அத்துமீறி நுழைய அதன் வெப்பத்திலும் வெளிச்சத்திலும் பறவைகளும் மிருகங்களும் தங்களுக்காக உணவு தேடச் சென்று விட்டன. ஆனால் இங்கு ஒருத்தன் இன்னும் எழுந்த பாடில்லை. பின்னர், நடு இரவு வரை விழித்திருந்தால் இப்படித்தான் பகல் முழுவதும் தூக்கம் பேயாட்டம் ஆடும். அதுதான் அவன் நிலை. வழமையாக காலையில் ஐந்து மணிக்கே எழுந்து விடுவான். ஆனால் இன்று அவன் தூங்கியதே ஐந்து மணிக்குத் தானே. இப்போது எட்டு மணியாகியும் தூங்கிக் கொண்டிருக்கிறான்.

 

இவன் தூக்கத்தைக் கெடுப்பதற்கே இளங்கலை அணியினர் அவன் கதவை தட்டித் தட்டி “கார்த்திக்… எழுந்துருடா… ப்ளீஸ்டா… இதுக்கு மேல எங்களால கதவ தட்ட முடியாதுடா… ஐயர் வேற வந்துட்டாரு. சீக்கிரமா வாடா…” என காட்டுக் கத்து கத்தியும் அவன் செவிகளில் அது விழாதவாறு தலையணையை இறுக்கி காதை அடைத்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தான்.

 

பொறுமையை இழந்தவர்கள் “இப்போ நீ வரியா? இல்ல கதவ உடைச்சிடவா?” எனக் கேட்டும் பதில் வராததால் யூவி கதவை உடைக்க சொல்லி யோசனை கொடுத்திட அனைவரும் அதை செயல்படுத்த ஆயத்தமானார்கள்.

 

விக்ரம் உட்பட அனைவரும் வேகமாக ஓடி வந்து தோள்ப் பட்டையால் கதவைத் தள்ள முயல அனைவருமே கதவு திறந்ததில் உள்ளே ஒருவர் மேல் ஒருவராக விழுந்து விட்டனர்.

 

விழுந்ததில் அனைவருக்கும் அடிபட்டிருந்தாலும் மீரா விக்ரம் மேல் விழ அதில் கடுப்பானது என்னவோ நம் யூவி தான்.

 

“என்னாங்கடா நீங்க? நாங்க விழுந்து இடுப்பு முறிஞ்சிடுச்சுன்னு இருக்கோம். உங்களுக்கு ரொமேன்ஸ் கேட்குது…?” என இழுத்துக் கொள்ள மீராவும் விக்ரமும் யூவியை நோக்கி பல் இழுத்து அசடு வழிய

 

“அடச்…சீ… எழுந்துருங்க…” என சொல்லிட இழித்தவாறே அவனை விட்டு நகர்ந்தாள் மீரா. இவர்கள் விழுந்தது கூடத் தெரியாமல் ஆதி கண்களை மூடி சோம்பல் முறித்துவிட்டு முன்னால் யாரையும் காணாமல்

 

“எங்க கதவைத் தட்டினவனுங்களைக் காணோம்?” என யோசித்தவாறே தேட

 

“டேய்த் தொம்பி… இங்க…” என விக்ரம் தன் இடத்தைக் காட்டகுரல் வந்த திசையை நோக்கினான் ஆதி கண்களால் ஆராய்ந்தவாறே.

 

“டேய்… அண்ணா… என்னடா? எல்லாரும் உள்ள இருக்கீங்க? நான் வெளிலல்ல தேடிட்டு இருந்தேன்.” என பாதி சிரிப்பை அடக்கிக் கொண்டு ஆதி கூறிடவே

 

“டேய்… ஏற்கனவே செம்ம காண்டுல இருக்கேன். நீ வேற கடுப்பேத்தாத. எத்தனை தரம்டா உன்னை கூப்பிடுறது? ச்சேய்… மரியாதையா வெளில வா.” எனக் கத்தினான் கடுப்போடு.

 

“சரி… சரி… போ… குளிச்சிட்டு வரேன்.” என டவளை எடுத்துக் கொண்டு குளிக்க சென்றுவிட்டான் ஆதி. குளித்து முடித்து விட்டு வேலைக்காகப் புறப்பட்டவாறே போனில் யாருடனோ தனது கைக்கடிகாரத்தை சரிசெய்தவாறே பேசிக் கொண்டிருக்க உள்ளே “கார்த்திக்…” என அழைத்தவாறே மறுபடியும் நுழைந்தான் விக்ரம்.

 

உள்ளே நுழைந்தவன் ஆதியின் கோலத்தைப் பார்த்து “என்னடா இது? எங்க போகப் போற?” எனக் மேலும் கீழும் பார்த்தவாறு கேட்டான்.

 

தன் வேலைகளை செய்தவாறே “வேற எங்க போறது? நான் என்ன உங்களை மாதிரியா? எனக்கு நிறைய வேலை இருக்கு. நான் போகணும். சைட்ல ஏதோ பிரச்சினையாம்.” எனக் கூறியவாறே வெளியில் செல்ல எத்தனிக்க அவனை இழுத்துப் பிடித்து நிற்க வைத்தான் விக்ரம்.

 

“என்னடா நினைச்சிட்டு இருக்குற உன் மனசுல? அதுதான் பாட்டி சொன்னாங்களே இன்னைக்கு நிச்சயம்னு. இப்போ வந்து இப்படி செய்ற?” என அவனை முறைத்தான் விக்ரம்.

 

“நிச்சயம்னா என்ன? இந்த திகதில, இந்த நேரத்துல இவங்களுக்கு அவங்களுக்கு கல்யாணம்னு சொல்லுவாங்க. அவ்ளோ தானே? இத சொல்றதுக்கு எதுக்குடா நான்? அவன் அவன் ஆயிரத்தெட்டு வேலை இருக்குன்னு தலைவலில திரிரான். இதுல இது வேறயா? நீங்க கல்யாணம் பண்ணுங்க இல்ல தோசை, சப்பாத்தின்னு எது வேணாலும் பண்ணுங்க. ஆனால் என்ன விட்டுடுங்க அவ்ளோதான் எனக்கு தெரியும். டூ யூ அன்டர்ஸ்டூட்?” எனக் கேட்டுவிட்டு அவன் தோளைத் தட்டி

 

“பாட்டி அப்படித்தான் ஏதாவது சொல்லுவாங்க. கொஞ்சம் சாமாளிச்சிடு. சடங்காவது சம்பிரதாயமாவது…” என்று அண்ணனைக் கோர்த்து விட்டு வெளியில் சென்று விட்டான்.

 

வெளியில் வாசல்படியை மிதிக்கவில்லை. “நில்லு…” என அவனைத் தடுத்து நிறுத்தினார் பாட்டி.

 

“இடியட்ஸ்.” என வாய்க்குள்ளால் திட்டியவன் திரும்பி ஒரு மூச்சை இழுத்து விட்டு  “என்ன… பாட்டி?” எனக் கேட்டான் எரிச்சலாக.

 

“நீ இப்படி போனா? எவன்டா அவளை நிச்சயம் பண்ணிப்பான்?” எனக் கேட்டார் கோபமாக.

 

“ஏன் பாட்டி சாவடிக்கிறீங்க? நான் இன்னைக்கு நல்ல மூட்ல இருக்கேன். தயவு செஞசு அதக் கெடுத்துடாதீங்க. ப்ளீஸ்… உங்க எல்லாரையும் கெஞ்சி கேட்குறேன். அதுவும் இல்லாம உங்க கூட என்னால இப்போ ஓர்கியூமன்ட் பண்ண எல்லாம் நேரமில்லை.” என்றான் சிணுங்கிக் கொண்டே.

 

“அதெல்லாம் முடியாது. ரெண்டு நிமிசம்தான். அதுக்கு பிறகு நீ எங்க வேணாலும் போ. நான் தடுக்கல.” என அதிகாரமாக கூறினார் பாட்டி.

 

“சரி… வரலன்னா விடவா போறீங்க? வந்து தொலைக்கிறேன்.” என முனுமுனுத்தவாறே உள்ளே சென்று அமர்ந்து கொண்டான்.

 

“டேய்… என்னடா? இப்படியே இருந்துட்ட? போய் வேஷ்டி சட்டைய போட்டுட்டு வாடா.” என சிறு குழந்தைக்கு கூறுவது போல கூறிக் கொண்டிருந்தான் விக்ரம்.

 

“நான் என் வேலையெல்லாம் விட்டுட்டு உள்ள வந்து உட்கார்ந்ததே பெரிய விசயம். இதுல என்ன டோர்ச்சர் பண்ணிங்கன்னா எழுந்து நான் பாட்டுக்கு போய்ட்டே இருப்பேன்.” எனக் கூறி எழுந்து செல்ல முயற்சிக்க அவன் முன் வந்து நின்ற விக்ரம்

 

“டேய். இத மட்டும் பண்ணுடா…” எனக் கெஞ்சிக் கூறியும் அவன் வாயிலிருந்து

 

“நோ… வே.” என்ற சொல்லைத் தவிர எதுவுமே வரவில்லை.

 

அதில் கடுப்பானவன், “டேய்…உள்ள வரியா?” என அழைக்க ஏதோ ரகசியம் கூறப் போகிறான் என்ற நம்பிக்கையில் உள்ளே அவனுடன் சென்றுவிட்டான் ஆதி.

 

கட்டிலில் அமர்ந்தவன் “என்னதான் பிரச்சினை உங்களுக்கு?” எனக் கேட்டான் சலிப்புடன்.

 

சற்றும் தாமதிக்காமல் விக்ரம் அவனைப் பிடித்துக் கொள்ள அனைவருமாக சேர்ந்து அவனைப் பிடித்து ட்ரவ்ஸரின் பெல்ட்டை இழுக்க அதை எதிர்பார்க்காதவனோ கண் முழி வெளியே வருமளவு அதிர்ந்து

 

“டேய்… டேய்… என்னடா பண்ற? யாராவது வாங்களேன். என்ன இங்க ரேப் பண்ண பாக்குறான்… பாட்டி… காப்பாத்துங்க யாராவது. ஸம்பொடி ஹெல்ப் ப்ளீஸ்.” என்று அலரினான் ட்ரௌஸரை இழுத்துப் பிடித்துக் கொண்டே.

 

விக்ரம் விடாமல் அவனை தொந்தரவு செயய எழுந்து அவனை தூக்கிப் போட்டு ஆதி நகர மறுபடியும் அவனைப் பிடித்து அந்த வேஷ்டியை விக்ரம் கட்டிவிட முயல அவன் தள்ளிவிட்டு வெளியில் ஓடினான்.

 

“அப்பா… கார்த்திக்க பிடிங்க.” என விக்ரம் கத்த அவனைத் துரத்திக் கொண்டே அவனைவரும் மூச்சுவாங்க வெளியில் ஓட யாராலும் அவனைப் பிடிக்கவே முடிவில்லை.

 

அவன் திடீரென சமையலறைக்குள் ஓட அவன் பின்னே அவர்களும் ஓட உள்ளே நடந்த கலவரத்தில் கோதுமை மா தவறி ஆதியைத் தவிர அனைவரது தலைகளிலும் கொட்டி அந்த வீடே நாசமாகிவிட்டது. அவர்கள் தலையில் மாவு கொட்டி பேய் மாதிரி தோற்றமளிக்க அதைப் பார்த்து விழுந்து விழுந்து பலமாக சிரித்தவன் வெளியில் ஓடிட பாவம், அவர்களால்தான் அவனைப் பிடிக்க முடியவில்லை.

 

இதில் இடையில் ஊற்றப்பட்டிருந்த தண்ணீரில் கால் தடக்கி விக்ரமுக்குத்தான் பலமான அடி. இவை அனைத்தையும் பார்த்து யூவி வயிறு குலுங்க குலுங்க சிரித்துக் கொண்டிருந்தாள். யூவி மாத்திரமல்ல மஹாலக்ஷ்மி, பாட்டி, மீரா, பல்லவி, அபி குழந்தைகள் என வீட்டில் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். வீடே சிரிப்பு வைத்தியசாலை போல ஆகிவிட்டது.

 

ஆறு ஆண்டுகளுக்கு பிறகு. அதாவது காவ்யா திருமணமாகிப் போனதற்கு பிறகு இன்றுதான் மறுபடியும் இந்த வீடு இவ்வளவு கலகலப்பாக இருக்கிறது எனக் கூட கூறலாம். இவ்வாறு ஓடி ஓடி முடியாதவர்கள் ஒரு இடத்தில் நின்று மூச்சு வாங்கியவாறே

 

“டேய்… நீ மனிசன்டா?  இவ்ளோ தூரம் ஓடுற. இப்படி ஸ்டெடியா ஸ்டைலா நிக்கிற?” என விஜயன் கேட்க விஷ்ணு

 

“உன் கூட ஓடி… ஓடி… என்னால முடியலடா. வயசான காலத்துல ஓட முடியாதுடா. தயவு செஞ்சு வேஷ்டிய வாங்கி கட்டிர்ரா.” எனக் கெஞ்சிக் கூறிட

 

“சரி… உங்களை எல்லாம் பாத்தா பாவமா இருக்கு… கொடுங்க அதைக் கட்டிட்டு வரேன்.” என்றான் புன்னகை கலந்த கேலியோடு.

 

“இவனப் போய் பையனா பெத்ததுக்கு, ஒரு பசு மாட்டை பெத்திருந்தா பாலாவது கறந்திருக்கும்.” என தலையில் அடித்துக் கொண்டார் விஜயன்.

 

“ஹப்பா… முடியலடா சாமி…” என்றவாறு அவனிடம் வேஸ்டியைக் கொடுக்க சில நொடிகளில் அதனை கட்டிக் கொண்டு விசில் அடித்தவாறே வந்தான் ஆதி.

 

ஐயர் நல்ல நேரம் வரும்வரை அமைதியாக அமர்ந்திருக்க ஆதிக்கோ சலித்து விட்டது. அவன் தூக்கம் தாங்காமல் கண்ணை மூடி விக்ரமின் தோளில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். சில நேரங்களின் பின் அவனைத் தட்டி எழுப்பி விட்டவன்

 

“டேய்… எங்க எல்லாம் தூங்குவ?” என அதட்டி விட்டான்.

 

“ச்சேய்… இடியட்ஸ்…” என்றவாறே தன் ஸ்மார்ட் போனை எடுத்து அதில் ப்ரீ பயர் விளையாடிக் கொண்டு இருந்தான் ஆதி.

 

“சூட் பண்ணு… அப்படித்தான். அப்படித்தான். கில் ஹிம்…” அவன் கத்த விக்ரமுக்கு தாங்க முடியாமல் அவன் ஸ்மார்ட் போனை பறித்து தன் போக்கெட்டினுள் வைத்துக் கொண்டான்.

 

“டேய்… டேய்… டேய்… சூட் பண்ணிட போறானுங்கடா.” ஆதி கத்தினான்.

 

“சும்மா சின்னக் குழந்தை மாதிரி பண்ணிட்டு இருக்குற? ச்சேய்…” என்றவுடன் அவனுக்கு எழுந்து தன் முன்னால் நிச்சயத்திற்காக வைக்கப்பட்டிருந்த அத்தனை தட்டுக்களையும் எட்டி உதைத்து

 

“போங்கடா நீங்களும் உங்க சம்பிரதாயமும்.” எனக் கத்த வேண்டும் என்பது போல இருந்தது. ஆனால் அடக்கி வைத்துக் கொண்டான் தன் உணர்ச்சிகளை. ஆனாலும் இன்னும் தாமதமாகியும் ஐயர் அமைதியாகவே இருக்க அவர் காதின் அருகில் சென்றவன்,

 

“ஐயரே… மரியாதையா மந்திரத்தை சொல்லி இந்த முட்டாள்தனத்தை ஸ்டொப் பண்ணு.” என கூறினான் கடுப்புடன்.

 

“ஏன் இப்படி சொல்றேள்? அது அது அதுக்குரிய நாளியிலதான் நடக்கணும். நல்ல நேரமாக சத்த காலம் இருக்கு. அது வரைக்கும் சத்த பொறுத்துக்கோங்கோ.” என இவனிடம் சம்பிரதாயம் பேச அதில் கடுப்பானவன்

 

“மரியாதையா இப்போ வாசிக்க போறியா இல்லையா? இல்லன்னா கொலேஜ் பேய்ருக்காளே உன் பொண்ணு. அவளை ஆள் வெச்சி தூக்கிடுவேன்.” என வில்லங்கமாக கூறினான்.

 

அதில் பயந்தவர் “அபச்சாரம்… அபச்சாரம்… என்ன பேசுறேள்? என் பொண்ண எதுவும் பண்ணிடாதேள். சத்த இருங்கோ. இப்போவே ஆரம்பிச்சிர்ரேன்.” எனக் கூறி மீராவுக்கும் விக்ரமிற்குமான நிச்சயப் பத்திரத்தை வாசித்தார். அதன் பின்னே ஆதிக்கும் பல்லவிக்குமான நிச்சயதார்த்த ஓலையை வாசிக்க ஆரம்பித்து விட்டார்.

 

“ஸ்ரீ விநாயகப் பெருமான் திருவருள் துணை கொண்டு நிகழும் மங்களகரமான சோபகிருது ஆண்டு தை மாதம் திருவோண நட்சத்திரம் சித்த யோகம் கூடிய சுபயோக சுப தினத்தில் தெய்வத்திரு புகழேந்தி பார்வதி தம்பதியரின் பேரனும் விஜயன் ஸ்ரீஷ்டி மகாலக்ஷ்மி அவர்களின் குமாரனுமான ஆதிஷேஷ கார்த்திகேயன் என்கிற மணமகனுக்கும் தெய்வத்திரு புகழேந்தி பார்வதி தம்பதியரின் பேத்தியும் சிவராமன் திவ்யங்கா அவர்களின் திருவளர்ச் செல்வியுமான பல்லவி ஸ்ரீதேவியிற்கும் பெரியவர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது.” வாசித்து முடித்ததும் அதியின் கையில் மாலையைத் திணித்தார் மகாலக்ஷ்மி.

 

“இவங்க கொடுமை தாங்க முடியலையே கடவுளே… ஸ்ஸுப்பாஆஆஆ…” என்று கண்களை விரலால் கசக்கி சொன்ன ஆதி மாலையை வாங்கி வேண்டா வெறுப்பாக பல்லவியின் கழுத்தில் போட அவளும் ஆதிக்கு மாலையை அணிவித்தாள். ஏற்கனவே தடுமல் வந்து இருந்தவன் அவள் போட்ட பூவின் வாசம் ஒத்துக் கொள்ளாமல் “ஹச்சு…” என்று தும்ம அவன் வேஷ்டி அவிழ்ந்து கீழே விழுந்தது. அதை வேக வேகமாகப் பிடித்துக் கொண்டான் ஆதி. அதைப் பார்த்த  ஒருத்தியோ ப்ரெண்ட்ஸ் பட விஜய் போல் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தாள் தொடர்ச்சியாக.

 

அனைவரும் எட்டி அவளை நோக்க அவளோ சிரிப்பை அடக்க முடியாமல் வயிறு வலிக்க கண்களில் தண்ணீர் ஊற்ற சிரித்து உருண்டு கொண்டிருந்தாள்.

 

“Shut up your bloody mouth.” என ஆதி வேகமாக கத்த வாயை நொடிப்பொழுதில் அடைத்தவள் அப்போது கூட சிரிப்பை அடக்க முடியாமல் அடக்கியவாறு தவித்துக் கொண்டிருந்தாள். அவளை கோபமாக முறைத்துப் பார்த்தவனோ அனைவரிடமும் திரும்பி

 

“என்ன எல்லார மாதிரியும் நினைச்சிடாதீங்க. எனக்கு அடுத்தவங்களை சந்தோசப்படுத்தவும் தெரியும். அடுத்தவங்க சந்தோசத்தை பிடிங்கி எறியவும் தெரியும். பாத்துக்கிறேன்…” என்று பல்லைக் கடித்துக் கூறிவிட்டு வெளியில் சென்றுவிட்டான்.

 

ஆனால் இவள் அவன் போன பின்பும் கூட நன்றாக சிரித்து விட்டிருந்தாள். சற்று நேரம் கழிந்த பின் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் ஓடிவந்து அவளை “விளையாடலாமா?” என அழைத்தன.

 

“என்ன விளையாடலாம்?” என்றாள் உதட்டில் கை வைத்து யோசித்தவாறே.

 

“ஹைட் என்ட் சீக்.” என்று மூன்று குழந்தைகளும் கத்த

 

“அதுக்கென்ன? விளையாடலாமே.” என தயாராகிக் கொண்டு

 

“விளையாட்டோட விதிமுறைய சொல்லுங்கப்பா.” என்றாள் கொஞ்சலாக.

 

அவள் கையில் கருப்புத் துணியைக் கொடுத்து “இதக் கண்ல கட்டுங்க.” என்றான் ரோஹன். நிஷாவின் சகோதரன். அதை எடுத்துக் கண்களில் இறுக்கமாகக் கட்டியவள் இருட்டாக இருப்பதை உணர்ந்து

 

“அம்மா… என்ன இது இருட்டா இருக்கு?” என்றவாறே சற்று வெளிச்சம் தெரியுமாறு கட்டை தளர்த்தினாள்.

 

“அதெல்லாம் அப்படிதான். நீங்க துணியை இறுக்கமா கட்டுங்க.” என்றாள் நிவி கட்டளையாக.

 

யூவிக்கு இருட்டு என்றால் பயம் என்பதால் “நான் கட்ட மாட்டேன்பா. இருட்டுன்னா எனக்கு பயம்.” என்று கூறி விட்டாள்.

 

அதற்காக “நானே கட்டி விடுறேன். வாங்க.” என அவளை இழுத்து அவள் கண்களைக் கட்டி விட்டாள் நிஸா.

 

குழந்தையின் கட்டு அவிழ்ந்து கீழே விழ மறுபடியும் கட்டி விட்டாள். அது மறுபடியும் மறுபடியும் அவிழ்ந்து விழ ரோஹனும் நிவியும் முப்பத்தி இரண்டு பற்களும் வெளியில் தெரியுமாறு சிரித்துவிட்டனர். இதில் நிஸாவுக்கு கோபம் வர “கார்த்திக் அங்கிள் இங்க கொஞ்சம் வாங்க…” என ஆதியை அழைத்தாள்.

 

“ஆமாம்… இப்போ எதுக்கு இந்த சனியன எதுக்கு கூப்பிடுறா…” என்று கண்களை உருட்டினாள் யூவி.

 

போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தவன், அவள் அழைப்பில் அதனை துண்டித்து விட்டு அவள் அருகில் வந்து நின்று “என்ன? டூ யூ வோன்ட் எனி ஹெல்ப் நிஸ்?” என்று வினவினான்.

 

“வீ ஆர் கொய்ங்க் டூ ப்ளே ஹைட் என்ட் சீக். யூவி ஆன்டி ஆள் வளர்ந்திருக்காங்களே தவிர ஒழுங்கா துணி கூட கட்ட தெரியல. நீங்க கொஞ்சம் கட்டி விடுறீங்களா? ப்ளீஸ்…” எனக் கேட்க யூவியை விநோதமாக நோக்கினான் ஆதி.

 

“குழந்தைக்கே தெரிஞ்சிருக்கு. உனக்கு அறிவில்லன்னு…’ என கூறிவிட்டான் அவள் முகத்தில்.

 

அவள் அவன் பார்வையை உடைக்குமாறு “இல்லை எனக்கு கட்ட தெரியும். நானே கட்டிக்கிறேன். நீங்க போங்க.” என்றாள் வேகமாக.

 

“யாரைக் கட்டிக்க போற?” என்றான் சாதாரணமாக எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாது.

 

அவன் கேள்வியை புரிந்து கொள்ளாதவள் “வட்?” என்றவாறு அவனை வாயைப் பிளந்து விழிகளை விரித்துக் கேட்டாள்.

 

“கட்டிக்க போறேன்னு சொன்னியே. அதுதான் யாரைக் கட்டிக்க போறன்னு கேட்டேன்?” என்றான் புருவங்களை உயர்த்தி. அவன் கேட்டது அவ்வளவு மொக்கையாக இருந்தாலும் அவன் பந்தாவுக்கு மாத்திரம் குறைச்சல் இருக்கவில்லை.

 

“ஹெலோ. நான் சொன்னது துணியை.” என்றது யூவி சொன்னதும்தான் தாமதம்

 

“ஓஹ்…” என்று அவள் தோளைப் பிடித்து சுழற்றியவன் அவள் பின்னால் கருப்புத் துணியை மிக நெருக்கமாக நின்று முடிக் கற்றைகளை விலக்கி அவள் முகத்தை தலை சாய்த்துப் பார்த்தவாறே கட்டி விட்டான்.

 

அவன் திடீர் செயலில் தன்னை மறந்து போனவள் முகத்தில் அவன் மூச்சுக் காற்று அனலாய் தெறிக்க வியர்வை நெற்றியிலிருந்து சிந்திக் கொண்டு இருந்தது யூவிக்கு.

 

அவன் பேர்பியூம் வாசம் தன் பக்கம் ஈர்த்து இழுக்க இனம் புரியாப் புதிராகவே இருந்தன அவளது உணர்வுகள். அவள் ஆடாமல் அசையாமல் ஒரே இடத்தில் நிற்க அவனுக்கு அடுத்த தொலைபேசி அழைப்பு வந்ததும் உடனே நகர்ந்தான் அவ்விடம் விட்டு.

 

அவன் மோதிரத்தில் மாட்டிக் கொண்ட யூவியின் துப்பட்டா முனையினால் அவள் சற்று தடுமாறி விட்டாள் போல. தடுமாற்றத்தோடு அவள் தன் துப்பட்டாவைப் பிடித்து இழுத்து சரியாகப் போட்டுக் கொண்டாள்.

 

குழந்தைகளும் யூவியும் ஹைட் என்ட் சீக் விளையாடிக் கொண்டிருக்க எதிரே தொலைபேசியை நோண்டியவாறு வந்த ஆதியின் மேல் முட்டிவிட்டாள் யூவி. இருவரும் ஒருவர் மேல் ஒருவர் புரள இறுதியாக அவள் கண் கட்டை அவிழ்த்து விட்டு அவனை பார்த்தாள் யூவி. அவனும் அவள் விழியழகில் மதி மயங்கி கண்களை சிமிட்டி சிமிட்டி அவளைப் பார்த்துக் கொண்டே இருக்க மீண்டும் தொலைபேசி அழைப்பு…

 

அதில் தன்னிலைக்கு வந்தவன் “இது வேற… நொய்… நொய்னு அடிச்சிட்டே இருக்கு… ச்சேய்… காலையிலேயே சாவடிக்கிறானுங்க… இதுல இந்த ஸ்டுப்பிட் வேற…” எனக் கூறி அவளை வைதுவிட்டு நகர்ந்தவன் அவளைப் பார்த்து

 

“உன்னை வந்து வெச்சிக்கிறேன்…” என்று திரும்பிப் பார்த்து கூறிவிட்டு சென்று விட்டான்.

 

மறுபடியும் குழந்தைகளிடம் சென்றுவிட்டாள் யூவி. “அவன் கிடக்குறான் லூசுப்பயன்… நீங்க வாங்க நாம விளையாடலாம்… இந்த ஹைட் என்ட் சீக் எல்லாம் வேணாம். வேற… என்ன விளையாடுறது?” யோசித்தாள்.

 

“நீங்களே சொல்லுங்க.” என்றன குழந்தைகள்.

 

“க்ரிக்கெட் விளையாடலாமா?” எனக் கேட்டாள் முகம் நிறைய உற்சாகத்தோடு.

 

“க்ரிக்கெட்டா? அப்படின்னா என்ன?” என வாயைப் பிளந்து கொண்டு கேட்டாள் நிவி.

 

“என்னாது… க்ரிக்கெட்னா தெரியாதா?” என அதிர்ந்து போய் கேட்டாள் இடுப்பில் கை வைத்தவாறு.

 

“இல்லை. க்ரிக்கெட் எல்லாம் தெரியும். ஆனால் எப்படி விளையாடுறதுன்னு தெரியாதே…” என்றான் ரோஹன் பாவமாக.

 

அதில் குழம்பியவள் “அப்போ தல தோனிய தெரியுமா? ஸச்சின் டென்டுல்கர்?” என்றாள் பாவமாக.

 

தலயின் பெயரைக் கேட்டதும் குழந்தைகள் கடகடவென “ஆமாம்… எங்க கார்த்திக் அங்கிள்கு ரொம்ப பிடிக்கும். அதனால் எங்களுக்கும் பிடிக்கும்.” என்று வாயைப் பொத்தி சிரித்தன.

 

“நோமா… உங்க கார்த்திக் அங்கிளுக்கு பிடிக்குமா? ஹெஹ்ஹெஹ்ஹெ…” என ஆதியை வாயை சுளித்து பழித்துக் காட்டியவள்

 

“உங்க கார்த்திக்கு மட்டும் இல்லை. எல்லாருக்குமே பிடிக்கும். சரி… என்கிட்ட பெட் இருக்கு ஆனால் போல் இல்லையே. அதே மாதிரி விக்கெட்டும் இல்லை. என்ன பண்றது?” என்று யோசனையுடன் என்ன செய்வதென்று பார்த்தாள்.

 

“உள்ள போய் ஏதாவது கிடைக்குமான்னு தேடி பாக்கலாம்.” என குழந்தைகள் யோசனை சொன்னதும் அவர்களுடன் நடையை விட்டாள் வீட்டினுள்ளே.

 

ஒவ்வொருவரும் ஒவ்வொரு அறையினுள் புகுந்து தேட யூவி ஆதியின் அறையினுள் தெரிந்தோ தெரியாமலோ நுழைந்திருந்தாள். உள்ளே சென்றவள் அறையை மொத்தமாய் சோதனையிட அங்கே கிடைத்தது ஒரு போல் கீபோர்ட்டும் போஸ்டர் ட்யூப்பும்தான்.

 

“ஐ… கிடைச்சிருச்சு…” என அதை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தவள்

 

“பசங்களா… எக்யூப்மன்ட்ஸ் கிடைச்சிடுச்சு. வாங்க விளையாடலாம்.” என அழைத்துக் கொண்டு வெளியில் சென்று போஸ்டர் ட்யூப்பை விக்கெட்டாகவும் போல் கீபோர்ட்டை பந்தாகவும் பயன்படுத்தி விளையாடிக் கொண்டிருந்தனர்.

 

அங்கேதான் போனில் பின் பக்கமாகத் திரும்பியவாறு யாருடனோ பேசிக் கொண்டிருந்தான் ஆதி. குழந்தைகள் பந்தை வீச பெட்டைப் பயன்படுத்தி ஒரே அடிதான். ஆதியின் கார் கண்ணாடி க்ளோஸ்.

 

“சலார்.” என்ற சத்தம் கேட்க காதைக் கைகளால் போத்தி ஒற்றைக் கண்ணை மூடி “இவ்வ்வ்…” என உதட்டை சுளித்து மெதுவாக காரைத் திரும்பிப் பார்த்தாள்.

 

“யார் இதை பண்ணதுதுது?” என கோபமாக பல்லை நறநறவென கடித்தான் ஆதி. ஆசியாக் கண்டத்தை விட பெரிய ஓட்டை ஆதியின் காரில்.

 

ஆதி கோபமாக கத்திய கத்தலில் யூவி அவனைப் பார்த்து பயத்துடனேயே தடுமாறி “நான் தான்.” என அப்பாவி போல் கையைத் தூக்கி திருட்டு முழி முழித்தாள். அவன் கோபமாக அவளை நெருங்க அவள் இதயம் தடக் தடக் என்றது.

 

“ஐய்யய்யோ… சிடுசிடுமூஞ்சி வரானே. அறையப் போறான் என்ன…” என பயத்தில் உதறல் எடுத்தது யூவிக்கு. அவள் அருகில் வந்து நின்று அவளை முறைத்துக் கொண்டு நின்றான் ஆதி.

 

பயத்தை முழுங்கிக் கொண்டவள் தைரியத்தை வரவழைத்துவிட்டு “என்ன முறைப்பு? எங்க பசங்க இருக்காங்க. நீ என்ன ஏதாவது பண்ணணும்னு நினைச்சா அவனுங்க சும்மா விட மாட்டானுங்க.” என திமிராக பெட்டை நிலைக்குத்தாக வைத்து அதில் கையை தாங்கிக் கொண்டு கூறினாள்.

 

ஆனால் அவனுக்கு சிரிப்புத்தான் வந்தது. உள்ளுக்குள் அடக்கி வைத்தவன் “எங்க அந்தப் பசங்க? கொஞ்சம் பாப்போம்…” என அவள் பின்னே எட்டிப் பார்த்தான்.

 

“இதோ…” என்றவாறு பின்னால் நோக்கினாள் யூவி. ஆனால் அங்கு ஒரு ஈ காக்காய் கூட இல்லை. ஆதிக்கு பயத்தில் அனைத்து பட்சிகளும் பறந்து விட்டன.

 

“அடப் பாவிங்களா? இப்படி கடைசில கவுத்து விட்டுட்டு போய்டுச்சுங்களே. ஆப்பு இருக்குன்னு தெரிஞ்சும் அது மேலையே ஏறி உட்கார்ந்துட்டேனே. இப்போ என்ன பண்றது?” என எண்ணிக் கொண்டே

 

“நான் இல்லை.” என விக்கெட்டின் பின் ஒழிந்து கொண்டாள்.

 

“ஏய்… மரியாதையா வெளில வா.” என பல்லைக் கடித்த அவன் குரல் அதிகாரமாய் ஒலித்தது. அதில் பயந்து வெளியில் வந்தவள்

 

“சோரி… சோரி..சோரி… இனிமேல் நான் இப்படி பண்ண மாட்டேன். ப்ளீஸ்… ப்ளீஸ்…” என தலையைக் கவிழ்த்தவாறு கெஞ்சினாள்.

 

“அப்படியா? உன்னை சும்மா இப்படி விட்டுடுவேன்னு நினைக்கிறியா? உன்னை…” என அவள் கிட்ட வந்தான்.

 

அவள் அதிர்ஷ்டமோ தெரியவில்லை. அவனுக்கு மீண்டும் தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் கடுப்பாகியவன் “கோட்… உன் நல்ல நேரம்… நான் ரொம்ப பிஸியா இருக்கேன். ஆனாலும் இப்படியே விட்டுட்டு போனா நண்டு மாதிரி எங்கயாவது ஓடித் திரிஞ்சு தொல்லை கொடுத்துட்டே இருப்ப. சோ, அதனால…” என்றவாறு அவள் இடையே தன்வசமாக்கியவன் அவளைத் தூக்கி அருகில் இருந்த சுவரின் மேல் உட்கார வைத்து விட்டான்.

 

அவன் செய்கைகளில் அவளுக்குள் புகைந்து கொண்டிருக்க “என்ன பண்ற? பைத்தியமா உனக்கு?” என அவனைக் கத்திக் கொண்டே இருந்தாலும் அவன் ப்ளூடூத்தை காதில் வைத்துக் கொண்டு சென்று விட்டான் வெளியில்.

 

“ச்சேய்… இவனெல்லாம் இவங்க அம்மா பெத்தாங்களா இல்லை எப் ஸ்டோர்ல டவ்ன்லோட் பண்ணாங்களான்னே தெரியலை. சரியான சிடுமூஞ்சி. மனித உணர்வுகளுக்கு மதிப்பே கொடுக்கத் தெரியாதவன். ஆள் வளர்ந்தானே தவிர டீஸன்ட் டிஸ்ஸிப்லின்னு எதுவுமே தெரியல இடியட். ஸ்டுப்பிட்.” என அர்ச்சித்து விட்டாள் அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டே. அவன் போன பின் வந்தனர் நிஸாவும் ரோஹனும்.

 

“அடப் பாவிங்களா. என்ன அவன்கிட்ட கோர்த்து விட்டுட்டு ஓடிப் போய்ட்டீங்களேடா. பயந்தாங்கொள்ளிங்களா…” என முகத்தைத் திருப்பிக் கொண்டே

 

“இவ்ளோ நேரமும் நீங்க எங்கடா இருந்தீங்க? ஒரு பிரச்சனைன்னு வரும்போது தனிய விட்டுட்டு போய்டீங்கல்ல? போங்கடா… உங்க கூட பேசமாட்டே

ன். அதுலையும் முக்கியமா இந்த நிவி கூட பேச மாட்டேன். பெரிசா சொன்னாளே. கார்த்திக்ன்னா என்ன பெரிய கொம்பா? அவரும் மனிசன்தானே… அப்படி இப்படின்னு சீன் போட்டா… இப்போ எங்க போனா?” என்றாள் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு.

 

தொடரும்…

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!