காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 28 🖌️

5
(1)

யூவியின் முகத்தில் தட்டி எழுப்பிக் கொண்டிருந்தான். அவள் எழும்புவதாக இல்லை. உடனே அருகிலிருந்த நதியில் நீரை அள்ளி அவள் முகத்தில் தெளிக்க அப்போதும் அவள் எழும்புவதாக தெரியவில்லை. அவளது கையைப் பிடித்து நாடியை பரிசோதித்துப் பார்த்தான். அவள் இதயத் துடிப்பு தெரியாததால் அவன் இதயமே நின்றுவிட்டது.

 

“நோ…” எனக் கத்தியவாறே மயக்கத்திலிருந்து எழுந்தான். அதிக இரத்த இழப்பினாலும் அதிகமாக மூச்சு வாங்க ஓடி வந்ததினாலும் மயக்கம் போட்டு கீழே விழுந்திருந்தான். கண் விழித்ததுமே அவன் பார்த்தது யூவியையே. அவனது நெஞ்சில் தலை சாய்த்து அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தாள். “யூவி… யூவி…* எனக் கத்தியவாறே அவள் முகத்தில் தட்டினான்.

 

“ஹ்ம்…” என அவள் சினுங்கிய பின்னரே அவன் நிம்மதியடைந்தான்.

 

“ஓஹ்… கனவா? நானும் நிஜம்னு பயந்துட்டேன்.” என்றவாறு யோசித்தவன் அவள் தலையை தூக்கி கீழே வைத்துவிட்டு. இலைச் சருகுகளை கூட்டி கற்கலை உரசி நெருப்பை வரவைத்து தீ மூட்டினான். பின்னர் ஆற்றில் தனது முகத்தை கழுவி விட்டு கொஞ்சம் நீர் அருந்தியவன் தனது ஜெக்கட்டை கழட்டி கையில் எடுத்துவிட்டு அவள் அருகில் சென்று படுத்துக் கொண்டான்.

 

அவளது தலையைத் தாங்கி தன் நெஞ்சில் வைத்துவிட்டு ஜேக்கட்டை எடுத்து அவளுக்கு குளிருக்காக போர்த்திவிட்டான். பின்னர் தானும் தூங்கிப் போனான்.

 

காலையில் கதிரவன் தன் பொற் கதிர்களை வீசி ஜனித்திருக்க இலைக் கீற்றுகளிடையே தன் உடலை வந்தடைந்த ஒளிக் கதிர் தேகத்தை சுட்டெரிக்க சிறு அசைவோடு கண்களைத் திறந்தான் ஆதி.

 

கண் விழுத்தவன் தன் மேல் போர்த்திக் கிடக்கும் ஜேக்கட்டை எடுத்து தன் நெஞ்சில் சாய்ந்து கொண்டு துயில் கொள்ளும் யூவியைப் பார்த்தான். வெண்மை நிற பளிங்கு பொம்மை போல மெதுவாக வாய் திறந்து அவன் நெஞ்சில் தூங்கிக் கொண்டிருந்தவளை இமைக்காமல் ரசித்துக் கொண்டிருந்தான். உடனே கண்களை வேறு திசையை நோக்கி திருப்பியவன், அவள் தலையை மெதுவாக தூக்கி கீழே வைத்துவிட்டு உணவுக்காக ஏதாவது தேடி நடந்தான்.

 

அவன் அவ்வாறு உணவு தேடிச் செல்ல, மெல்ல கண் விழிந்து பார்த்தாள் யூவி. சுற்றிலும் இலைகளாகவே காணப்பட்டன. உடனே எழுந்தவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். யாரையும் காணவில்லை. தன் மேல் போர்த்திக் கிடந்த ஜெக்கெட்டை எடுத்து முகர்ந்து பார்த்தவள் அது ஆதியினுடையது என்பதை அதன் வாசத்தாலேயே கண்டு கொண்டாள்.

 

“ஆதி…” என மெதுவாக உரைத்தவள், அவனைத் தேடி மெல்ல நொண்டியவாறு நடந்தான். ஆனால் இடையிலேயே ஒரு புதை குழியில் மாட்டிக் கொண்டாள். புதை குழி மெல்ல மெல்ல அவளை ஈர்க்க உள்ளே மெது மெதுவாகச் சென்று கொண்டிருந்தாள் யூவி. ஆனால் மறந்தும் அவள் வாயில் ஆதியின் பெயர் வராமலில்லை. “ஆதி… ஆதி…” எனக் கத்தினாள் மொத்தக் காட்டிற்கும் எதிரொலிக்கும் படி.

 

உணவு தேடச் சென்றவனுக்கு மரவள்ளிக் கிழங்குகள் மாத்திரமே கிடைத்தன. உடனே அவற்றை எடுத்தவன் யூவியைத் தேடி வேக வேகமாக ஓடிவந்தவனுக்கு அதிர்ச்சியே காத்துக் கொண்டிருந்தது. “யூவி… யூவி…” எனக் கத்தியவன் சுற்றும் முற்றும் தேடிப் பார்த்தான். அவளைக் காணவில்லை.

 

இங்கே அவள் மொத்தமாக புதை குழியினுள் சென்றிருந்தாள். மூக்கு வரை உள் ஈர்த்துவிட்டது அவளை. மூச்சுத் திணறி துடித்துக் கொண்டிருந்தாள். அவனும் அவ்விடத்தை வந்து சேர்ந்துவிட்டான். ஆனால் அவள்தான் அவன் கண்களில் படவில்லை. இறுதியாக தலையைப் பிடித்துக் கொண்டு கத்தியவன் “யூவி…” என்றான் நெஞ்சம் வெடிக்கும் வலியோடு.

 

அவள் “ஆ… ஆ… ஆதி.” என்றவாறு கத்த அது அவனுக்கு கேட்கவில்லை. ஆனால் மறுபடியும் அவள் அவன் பெயரை “ஆதி.” என உச்சரிக்க அப்போது கூர்ந்து காதில் கேட்டவன் பின்னால் திரும்பிப் பார்த்தான் அவள் புதைகுழியில் மாட்டிக் கொண்டிருப்பதை. அவன் ஓடிச் சென்று தனது கையைக் கொடுத்து அவளை வெளியே கொண்டுவர முயற்சிக்க அது முடியவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்து விட்டான். அவளால் வெளியில் வர முடியவில்லை.

 

மூச்சு திணறிக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் துடித்துக் கொண்டிருந்தவள் சாந்தமாகிவிட்டாள். அவனுக்கு மொத்தமாக பயம் தொற்றிக் கொண்டது. கனவில் பார்த்தது நிஜமாகிவிடும் என்ற பயம். உடனே அருகிலிருந்த ஆல மர விழுதுகளை இடுப்பில் கட்டியவன் அவள் கையை இன்னொரு நுனியில் கட்டினான். பின்னர் மரத்தை சுத்தி அவன் வலம் சுழியாக நடக்க மரத்தில் விழுதுகள் பின்னி அவள் தானாகவே வெளியில் வந்தாள்.

 

வெளியில் வந்தவள் மூச்சுக்கு போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவளுக்கு முதலுதவி வழங்கியவன் அவளை கையில் ஏந்தி நதியின் அருகே அழைத்து வந்து நீரை முகத்தில் தெளித்தான். அவள் மெல்ல இருமிக் கொண்டு கண் விழிக்க அவளை அணைத்துக் கொண்டவன் “தங்க் கோட் உனக்கு ஒன்னும் ஆகல.” என்று அவள் கையைத் தன் கைக்குள் வைத்துக் கொண்டான்.

 

அவனை விலக்கியவள் முகத்தைக் கழுவிவிட்டு “நான் வரேன். நீ போ.” என்று கூற

 

“சரி. இங்கேயே இரு. வேற எங்கேயும் போய்டாத.” என்றவன் தீ மூட்டி நெருப்பில் கிழங்குகளை வேக வைக்க ஆரம்பித்தவன் அவள் வருவதற்குள் காயங்களுக்காக மஞ்சள் செடிகளைப் பறித்து மருந்தும் தயாரித்து வைத்திருந்தான்.

 

அவள் தனது தொலைபேசியைப் பார்க்க அவன் அவளைப் பார்த்து “இது காடு. அதனால சிக்னல் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்.” என்றான்.

 

பின்னர் அவள் “உன்…” என அவன் போனை பற்றிக் கேட்க முன்னரே “என் போன்ல சார்ஜ் இல்ல.” என்றான் பார்வையை அவளை நோக்கி வீசியவாறு. அவள் அப்படியே அமர்ந்து கொள்ள அவன் தயாரித்த உணவுகளை  நீட்டினான். சில நிமிடங்கள் அமைதியாக கழிய அவன்தான் பேச்சை ஆரம்பித்தான்.

 

“என் மேல இன்னும் கோபம் போகலையா?” அவன் மெதுவாக வினவ

 

இல்லை என்றவாறு தலையாட்டியவள் “உன் மேல கோப பட எனக்கு என்ன உரிமை இருக்கு?” என அவனை நோக்கினாள்.

 

“தயவுசெஞ்சு அப்படி சொல்லாத. ப்ளீஸ்…” என அவளைப் பார்த்தவன் “நான் என்ன சொல்ல வரேன்னு கொஞ்சம்  கேட்குறியா?” என்றதும் அவளிடம் பதில் இல்லை.

 

அவளது அமைதியை சம்மதமாக எடுத்துக் கொண்டு “எக்ஸ்ஸுவல்லி நான் உன்கிட்ட விளையாடினேன். நீ என் மாமாவோட பொண்ணுல்ல? எனக்கு உன்கிட்ட விளையாட உரிமை இல்லையா? நான் உரிமை இருக்குன்னு நினைச்சிட்டுதான் உன்கிட்ட விளையாடினேன். அவ்ளோதான். மத்தபடி நான் உன்ன காயப்படுத்த நினைக்கலை. நீயே வந்து பாட்டிக்கிட்ட சொல்ல சொன்னாக் கூட நான் சொல்லியிருக்க மாட்டேன். Trust me.” அவள் கையைத் தன் கைக்குள் வைத்துக் கொண்டான்.

 

“ஏன்?” என கேட்டாள் ஒரே வார்த்தையில்.

 

“ஏன்னா…. ஏன்னா… எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். அதே நேரம் வீட்டுல இருக்குற எல்லார பத்தியும் எனக்கு நல்லாவே தெரியும். ஏற்கனவே என் அக்கா பிரச்சினையில நான் நல்லாவே பாத்துட்டேன். இப்போதான் எல்லாரும் பழைய நிலைக்கு திரும்பி இருக்காங்க. இதுல உன் பிரச்சினைய கொண்டு வந்தா திரும்பவும் மனஸ்தாபங்கள்தான் அதிகமாகும். இதக் கூட புரிஞ்சிக்க முடியாத அளவு நான் ஒன்னும் முட்டாள் இல்ல.” என ஆறுதலாக சொன்னான்.

 

“அப்போ நீ என்ன டோர்ச்சர் பண்ணது கூட விளையாட்டுன்னு சொல்றியா?” என அவள் கண்களில் வெறுப்புடன் கேட்க

 

அவளை திரும்பி ஆழமாக பார்த்து ஒரு புன்னகையை வெளியிட்டவன், மீண்டும் முன்னால் பார்வையை செலுத்தி “உண்மைய சொல்லனும்னா, நான் எவ்ளோ சந்தோசமான ஆள் தெரியுமா? எப்போவுமே சிரிச்சிட்டே இருப்பேன். சோகம், தனிமைன்னா என்னன்னு கூட தெரியாது. அது என் அக்கா இருக்குற வரைக்கும்.” என்றும்

 

“அப்படின்னா… இப்போ?” என கேட்டாள் ஒரு வினாக் குறியோடு.

 

“அது என்னன்னா… என் அக்கா சத்யாவ கல்யாணம் பண்ணிக்கிட்ட பிறகு என் கூட யாருமே பேசுறது கிடையாது. எங்க அம்மா கூடத்தான். வீட்டுல இருக்குற யாரும் என் முகத்தை கூட பாக்க விரும்பல. அதனாலதான் நான் வீட்டுக்கு வரவே இல்லை. ப்ரண்ட் வீட்டுலதான் இருப்பேன். தனிமையிலதான் வாழ்ந்துட்டு இருந்தேன். வாழ்க்கையே ரொம்ப வெறுமையா இருந்தது. அது கூட பரவால்ல. இரவானா அக்கா கூட போன்ல பேசினா சரி ஆகிடும். அன்னைய நாளோட கவலை எல்லாம் மறந்துடுவேன். பட்… காவ்யா செத்ததுக்கு பிறகு அப்படி இல்லை. மொத்தமா தனிமையாகிட்டேன். யார் கூடவும் பேசுறதே இல்லை. அந்த தனிமையே எரிச்சலையும் கோபத்தையும் எனக்குள்ள கொண்டு வந்தது. என் தனிமைய கோபமா மாத்தி எல்லார் கிட்டயும் மோசமா நடந்துக்க ஆரம்பிச்சேன். எல்லாரையும் கத்தி விட்டுடுவேன். காவ்யா இப்படி சூசைட் பண்ணிட்டாளேன்ன கோபம் இருந்தது. அத அவ மேல காட்டாம எல்லார் மேலையும் காட்டினேன். பட் லாஸ்டா யோசிச்சு பாக்கும் போதுதான் அவ சூசைட் பண்ற அளவு முட்டாள் இல்லன்னு தோனுச்சு. சோ… அவ சாவு ஒரு கொலைதான். அந்த கொலைகாரன கண்டு பிடிக்கதான் இங்க வந்தேன். அதுதான் உன்கிண்டயும் நடந்தது.” சிறு குழந்தை போல் முகத்தை வைத்துக் கொண்டான்.

 

அவன் வலியைப் புரிந்து கொண்டவள் கண்களில் கண்ணீர் துளிர்க்க அவன் தோளில் கை வைத்து “புரியிது. தனிமைய நானும் பீல் பண்ணிருக்கேன். அது எவ்ளோ கொடுமைன்னும் தெரியும். கிட்டத்தட்ட உன் நிலமையிலதான் நானும் இருக்கேன். உன்ன என்னால புரிஞ்சிக்க முடியும். ஆனால் ஒன்னு மட்டும் புரியல? வீட்டுல யாரும் உன்கூட பேசலன்னு சொன்ன? பட் இப்போ…” என கேட்க

 

“யாஹ்… ஒரு தடவை பாட்டிதான் கோல் பண்ணாங்க. எங்க பொண்ணையும் இழந்துட்டோம். உன்னையும் இழக்க விரும்பல்லன்னு. கன்வின்ஸ் பண்ணாங்க. பட் அவங்க பல்லவிக்காகதான் அப்படி என்கிட்ட அன்பா பேசினாங்கன்னும் எனக்கு தெரியும்.” அவன் முகத்தில் வேதனையின் சுவடுகள்.

 

“அப்போ உனக்கு பல்லவிய பிடிக்காதா?” யூவியின் முகத்தித் சந்தோச ரேகைகள்.

 

“யார் சொன்னா அவள எனக்கு பிடிக்கும்னு? எனக்கு அவ மேல எல்லாம் இன்ட்ரஸ்ட் இல்ல.” சலித்துக் கொண்டே சொன்னான்.

 

“அப்போ… அன்னைக்கு வந்த முதல் நாள்ள ஏன் அப்படி நடந்துக்கிட்ட?” அவள் மனம் சற்று இலேசாக ஆரம்பித்திருந்தது.

 

“பின்ன… நான் அப்படி நடந்துக்கலன்னா யாருக்காவது டவ்ட் வந்துடாது? ஸ்டார்ட்டிங்க்ல அவங்க ரூட்ல தானே போகனும்? எனக்கு இந்த வீட்டுல இருக்க பல்லவிதான் செஸ் கொய்னா இருக்கா. சோ அவளுக்கு கொஞ்சம் ஐஸ் வெச்சா தானே என் வேலை முடியும்.” என அவன் உரைக்க அவனை புன்னகையோடே பார்த்தவன்

 

“பரவால்ல. நீ நல்லாதான் ஸ்கெட்ச் போடுற. ஆனால் ஒன்னே ஒன்னு சொல்றேன். தயவு செஞ்சு உன்னோட எக்டிவிடி அடுத்தவங்கள பாதிக்காம பாத்துக்க.” என்று பழையபடி பேச ஆரம்பித்துவிட்டாள்.

 

“கண்டிப்பா. நீ இருக்கும் வரை நான் ரொம்ப சந்தோஷமாவும் இருப்பேன். யாரையும் காயப் படுத்தாமலும் இருப்பேன்.” என்றவன் விழி நிறைய காதலுடன் “இருப்பல்ல?” என அவளிடம் கை நீட்ட

 

அவள் அதனை தான் ஒரு நண்பியாக இருக்க வேண்டும் என கேட்கிறான் என தவறாக புரிந்து கொண்டு அவன் கை மீது கையை வைத்து. “நிச்சயமா இருப்பேன்.” என்றாள் பொங்கி வழிந்த நட்புடன்.

 

“ஆனால் ஆதி… நீ சொன்னதுக்கான அர்த்தம்தான் புரியல. நான் இருந்தா நீ அடுத்தவங்கல காயப்படுதாம இருப்பேன்னு சொன்ன? What you mean?” என கேட்க

 

“அதாவது… நானே எனக்குள்ள சில சேஞ்ஜஸ்ஸ பீல் பண்ணேன் யூவி. அதாவது நான் முன்ன மாதிரி இப்போ எல்லாம் லோன்லியா பீல் பண்றதில்லை. நான் இங்க வந்த ஆரம்பத்துல எல்லாம் உன்கூட ரொம்ப ஹார்ஸா நடந்துக்கிட்டேன். இப்போ நான் பழைய ஆதி மாதிரி ஆகிட்டேன். அதற்கு காரணம் என்னன்னு தெரியுமா?” அவளை தலைசாய்த்துப் பார்த்தான்.

 

அவள் என்ன என்பது போல பார்க்க “நீதான்.” என்றான் புன்னகை மாறாமல்.

 

“நானா? எப்படி?” மிரண்ட கண்களோடு கேட்டாள் யூவி.

 

“உன் கூட நான் டெய்லி சண்ட போடுறேன்ல? எப்போ பாத்தாலும் உன்ன கத்திக்கிட்டே இருப்பேனே. அதுலையே என் தனிமை கரைஞ்சு போய்டுச்சு. தனியா இருக்கோம்ன எண்ணத்தாலதான் நான் இப்போ நடந்துக்கிட்டேன். இப்போ அந்த எண்ணமே இல்ல. காணாம போச்சு. உன் கூட சண்ட போடுறதே ஒரு காரணமாகிடுச்சு. நீ என்கூட இருந்தா நான் உன் கூட சண்ட போட்டுட்டே இருப்பேன். அது என்னோட லோன்லினஸ்ஸ இல்லாம பண்ணிடும். சோ… என்னோட சேன்ஜ்க்கு காரணம் நீதானே.” என்றதும்

 

“அதுவும் உண்மைதான். ஏன்னா நீ இவ்ளோ ஸ்வீட்டா எல்லாம் பேச மாட்ட. எப்போ பாத்தாலும் கத்திட்டே இருப்ப. யூவி… நான் யாருன்னு தெரியுமா? என் பேர் என்னன்னு தெரியுமா? என் ஊர் என்னன்னு தெரியுமான்னு டயலொக் பேசிட்டு இருப்ப.” என அவனைப் போல இமிடேட் செய்ய அவன் சிரித்தவாறே அவளை ரசித்துக் கொண்டிருந்தான்.

 

“நாம சிரிச்சது எல்லாம் போதும்னு நினைக்கிறேன். இப்போ காயத்துக்கு மருந்து போடனும்.” என அவன் உதிர்க்க

 

“அது சரி… நீ எப்படி என்ன காப்பாத்தின?” ஆச்சரியமாக கேட்டாள் யூவி.

 

“என் தோள்ளதான் தூக்கிட்டு வந்தேன்.” என்றான் புன்னகையோடு. அதை கேட்டதும் அவள் முகம் மாறிவிட்டது.

 

“நீ என் உயிரைக் காப்பாத்திருக்க.” என்றவள் “ரொம்ப ரொம்ப தங்க்ஸ் ஆதி. நீ இல்லன்னா நான் அந்த சிறுத்தையால செத்திருப்பேன். அது மட்டும் இல்லாம நீ என்ன புதைகுழில இருந்தும் காப்பாத்திருக்க. இதுக்காக நான் எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.” என நன்றியுணர்வுடன் பார்த்தாள்.

 

“ஏய்… இப்போ தானே சொன்னேன். அதுக்குள்ள நீ என்னையும் உன்னையும் பிரிச்சு பாக்குறியா? நமக்குள்ள இனிமேல் நோ தங்க்ஸ்… நோ சோரி.” என அவளிடம் கூற அவனை அணைத்துக் கொண்டாள் யூவி.

 

“சரி… உனக்கு ரொம்ப காயம் பட்டுருக்குல்ல? கொஞ்சம் கைய காட்டு நான் மருந்து போட்டு விடுறேன்.” என்று பாசமாக பார்த்தான் ஆதி.

 

“இல்ல. உனக்குதான் அதிகமா அடி பட்டிருக்கு. நீ முதல்ல கைய காட்டு.” என அவள் கேட்க

 

“அது சின்ன காயம்தான். நீ முதல்ல மருந்து போட்டுக்கோ.” என அவன் கூற அவள் மாறி

 

“உனக்குதான் ரொம்ப அடி. நீ முதல்ல மருந்து போடு.” எனக் கூற மாறி மாறி இதுவே நடக்க

 

“கொஞ்ச நேரம் வாய மூடிட்டு சும்மா இரு.” என அவளை முறைத்துவிட்டு அவளது கையிலிருந்த காயத்திற்கு மருந்து போட்டுவிட்டு கழுத்திலிருந்த காயத்திற்கும் மருந்து போட்டுவிட்டான் ஆதி. அவளுக்கே மருந்து சரியாக இருந்தது.

 

மீச்சம் மீதி வைக்காமல் அவன் மருந்து போட்டுவிட “இதுக்குதான் சொன்னேன். உனக்கு அடி பட்டிருக்கு. நீதான் மருந்து போடனும்னு. பாத்தியா? இப்போ பாரு மருந்து இல்ல. இப்போ என்ன பண்றது? நீ சொல்ற பேச்ச கேட்குறதே இல்ல ஆதி. நீ ஒரு பைத்தியம் போ.” என அவள் திட்ட.

 

“சரி. சோரி…” என அவன் தன் காதைப் பிடித்து மன்னிப்பு கேட்க சிரித்தவாறே அவள்

 

“பார்ரா… சோரியெல்லாம் கேட்குற. சரி… நாம இனியும் இங்க இருந்தா ரொம்ப கஷ்டம். வா… எப்படி வந்தோமோ அப்படியே வீட்டுக்கு போய்டுவோம். எல்லாரும் நம்மள தேடுவாங்க.” என கவலை கொண்டாள்.

 

“சரி.” என இருவரும் ஒரு பக்கமாக நடக்க ஆரம்பித்தனர்.

 

நடந்து நடந்து களைத்துப் போயிருக்க உச்சி வெயில் மூளையை கசக்கிப் பிளிந்தது. ஆதிதான் யூவியை தோளில் சுமந்து கொண்டு வந்திருந்தான்.

 

“வேண்டாம். வேண்டாம்.” எனக் கூறியும் கேட்காமல் அவளை தோளில் போட்டு அழைத்து வந்தான். ஒரு கட்டத்தின் பின் அவனால் கூட முடியவில்லை.

 

அவளை இறக்கி விட “ரொம்ப பசிக்கிது ஆதி. என்ன பண்றது?” என கேட்டாள் வயிற்றை பிய்த்து உதறும் பசியோடு

 

“பசிக்கிதா?” ஏஎனக் மூச்சு வாங்க கேட்டவன் “சரி. உன் துப்பட்டாவ கொடு.” என்றான் ஏதோ ஒரு யோசனையில்.

 

உடனே அவனை முறைத்துப் பார்த்தவள் “ஏன்?” எனக் கேட்டாள் கண்கள் இடுங்கிய கோபத்தோடு.

 

“ஆயிரம் கேள்வி கேட்காத. கொடுன்னா கொடு.” என்றான் அவள் வாயை பொத்திய பின்.

 

“அதெல்லாம் கொடுக்க முடியாது. உன் புத்திய…” என அவள் இழுக்க

 

“ஏய்… நீ என்ன பத்தி என்ன நினைச்ச? ஓஓஓ… புரிஞ்சது. புரிஞ்சது. ரொம்பதான் ஆசை. நீங்க பெரிய உலக அழகி ஒன்னும் இல்ல. உங்க பின்னாலேயே நாங்க வர்ரதுக்கு. பேச்ச பாத்தியா பேச்சு.” என்றவன் “இந்த நதில நிறைய மீன் இருக்கு. அத பிடிக்கதான் உன் துப்பட்டா கேட்டேன். கொடுக்க முடியாதுன்னா பசியிலேயே கிடந்து சாவு.” என்றவனூக்கு மூக்குககு மேல் கோபம் வந்துவிட்டது.

 

“ஐய்யய்யோ… நம்மதான் ஓவரா பேசிட்டோமோ.” என சிந்தித்தவள் “சோரி ஆதி… இந்த பசங்களை நம்பவே கூடாதுன்னு ஒரு தியரி இருக்கு. அதனாலதான் அப்படி.” என கூறியவள் பின்னால் திரும்பி நிற்பவனிடம் தனது துப்பட்டாவை கொடுத்தாள்.

 

“பெரிசா பேச வந்துட்டா…” என அவளை திட்டியவன் ஆற்றில் மீனைப் பிடிக்க படாத பாடு பட்டுக் கொண்டிருந்தான்.

 

இங்கே அபி யூவியைக் காணாமல் “அம்மா… யூவிய காணோம்மா. வீட்டுல எல்லா இடத்திலும் தேடி பாத்தேன். எங்கதான் போனான்னே தெரியலம்மா.” என அழ ஆரம்பித்துவிட்டாள்.

 

“கார்த்திக்கையும் காணோம் அத்தை. கோபி கொடுக்க கதவை தட்டினேன். ஆனால் அவர காணோம். எங்கதான் போனாருன்னே தெரியல.” என மீராவும் பதற்றமாக சொன்னாள்.

 

“அவங்க போனுக்கு கோல் பண்ணி பாத்தீங்களா?” என கேட்டார் மகாலக்ஷ்மி.

 

“இல்லை” என்றதும் “அத முதல்ல பண்ணுங்க.” என்றார் மகாலக்ஷ்மி.

இருவரின் தொலைபேசிக்கும் பல தடவைகள் அழைத்துப் பார்த்தனர். யூவியின் தொலைபேசி தொடர்பு எல்லைக்கு அப்பால் என்று காட்டியது. ஆதியின் தொலைபேசி ஸ்விட்ச் ஓப் செய்யப்பட்டது என காட்டியது.

 

அதே வேளை புதிதாக ஆதிக்கு வந்த தொலைபேசி எண்ணைப் பற்றி அறிந்து கொண்டு அவனுக்கு அழைப்பு விடுத்தான் ரித்து ஆனால் அழைப்பு ஏற்கப்படாத காரணத்தால் அவனை நேரிலே காணலாம் என்றுவிட்டு அவனது வீட்டை நோக்கி நகர்ந்தான்.

தொடரும்…

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!