விரிவுரையாளர் கல்லூரி மாணவர்களுக்கு பாடம் கற்றுத் தந்து கொண்டிருக்க ஊசி விழுந்தால் கூட இடி முழக்கம் போல கேட்கும் அளவு அமைதியாக இருந்தது அந்த மண்டபம். ஆனால் அதன் அமைதியை கலைக்குமாறு ஓடி வந்தாள் நித்யா.
“Excuse me sir.” என்று விரிவுரையாளரிடம் மன்னிப்பை வேண்டிட அவரும்
“Come in.” என்று பதிலுக்கு அனுமதி கொடுத்ததும் உள்ளே அவசரமாக நுழைந்தாள் நித்யா.
மண்டபத்தில் ஏ.சி போடப்பட்டிருந்தாலும் கெமஸ்ட்ரி பாடத்தின் தாக்கம் காரணமாக கைகள் இரண்டும் ஈரத்தை வெளியிட வியர்வை நெற்றியைத் தாண்டி அவள் அழகுக்கே அழகாய் உருவான கூரிய மென்மையான மூக்கினூடாக வழிந்து மூக்கின் நுனிக்கு மேல் பயணிக்க இடம் தெரியாமல் கீழே சிந்திக் கொண்டிருந்தது. இங்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் தீவிரமாக வியர்வையை புறங்கையால் துடைத்தவாறே கெமஸ்ட்ரி நோட்ஸை தன் ஈரக் கரங்களால் எழுதிக் கொண்டிருந்தாள்.
அனுமதி கிடைத்தவுடனே சற்றும் தாமதிக்காது அவளிடம் ஓடி வந்த நித்யா மூச்சு முட்டியவாறே “ஹேய்… அங்க என்ன நடக்குது? நீ இங்க என்ன பண்ணிட்டு இருக்க? என்கூட சீக்கிரம் வா.” என்று அவளின் கையைப் பிடித்தாள்.
அவள் அழைப்பில் முகத்தை மறைத்திருந்த புத்தகத்தை சற்று விலக்கி விழிகள் மட்டும் தெரியுமாறு “என்ன ஆச்சுடி? கெமஸ்ட்ரி க்ளாஸ் நடந்துட்டு இருக்கு. நீ எதுவா இருந்தாலும் அப்பறம் வா.” என்றாள் கண்ணும் கருத்துமாக.
“நீ இப்படியே சொல்லிட்டு இரு. அங்க அவன் அத்தனை பேரையும் அடி அடின்னு அடிச்சி பொழந்துட்டு இருக்குறான். கொஞ்சம் விட்டா அடிச்சே கொன்னுடுவான்டி. சீக்கிரம் வாடி…” என்ற நித்யாவின் பதற்றத்திவ் திடுக்கிட்டவள்,
“என்னடி சொல்ற?” என்றவாறு எழுந்து புத்தகத்தை நீக்கி பதறற்மாக படபடக்கும் விழிகளோடு அவளைப் பார்த்தாள்.
“நீயே வந்து பாரு.” என்று அவள் கையைப் பிடித்து இழுத்துச் சென்றாள் நித்யா.
பழைய விளையாட்டு மையமொன்றில் புழுதியும், தூசுமாக இருக்க கல்லூரியின் சீனியர், ஜூனியர் என அத்தனை மாணவர்களும் “சத்யா… சத்யா… சத்யா…” என்று கூச்சலிட்டுக் கொண்டே விசில் அடித்து அவனை உட்சாகம் செய்து கொண்டிருந்தனர்.
அந்தப் பெயருக்கு உரித்தானவனோ இடுப்பில் துணியொன்றை இறுகக் கட்டிக் கொண்டு எதிரில் நின்றவனை அசால்டாக ஏதோ பஞ்சு மூட்டையைத் தூக்கி வீடுவது போல் வீசி எறிந்து விட்டு தன் கைகளை ஒன்றாகத் தட்டிடவே இருட்டாக இருக்கும் சூரிய கதிர்கள் மட்டும் நுழைந்து கொண்டிருக்கும் அவ் அறையினிலே தூசு துணிக்கைகள் அவன் கைகளை விட்டு காற்றில் கலந்தன.
உடற்பயிற்சி செய்து வளர்த்திருந்த வெற்றுடம்பில் இரத்தத் துளிகள் உறைந்து காணப்பட நெற்றியில் இருந்த வியர்வைத் துளிகள் மெதுவாக ஓடி வந்து அவன் தாடையினூடாக அவன் நெஞ்சத்தை தழுவி இரத்தத் துளிகளை நனைத்து ஈரமாக்கிக் கொண்டிருந்தன. அவன் தன் தலையை அசைத்து அழுத்தி நெற்றி முறித்து விட்டு எதிரியின் தோல்வியை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தான்.
அவன் அடித்ததில் அரை உயிராய் எழும்ப கூட முடியாமல் இரத்த வெள்ளத்தில் கீழே அரை மயக்கத்தில் கிடந்திருந்தான் ஒரு பாவப்பட்ட ஜீவன். ஒருவன் ஒன்று தொடக்கம் பத்து வரை எண்ணி முடிக்கும் வரை அமைதியாக இருந்த அந்த இடமே “டென்.” என எண்ணி முடித்த பிறகு ஆரவாரமாக மாறியது.
வெற்றியின் சின்னமாக ஒரு திமிர் புன்னகைய உதிர்த்துவிட்டான் அவன். “சத்யா… சத்யா… சத்யா…” என்ற ஆரவாரத்துடன் அவனைத் தூக்கி தலையில் வைத்துக் கொண்டு அனைவருமே ஆடிட சூரிய வெளிச்சத்தில் மறைந்திருந்த அவன் முகத்தைப் பார்க்க வேண்டும் என எண்ணி ஏங்கிக் கொண்டிருந்த மாதர்கள் அத்தனை பேரும் அவன் அழகில் தோன்றுத் தான் போனார்கள்.
வில் போன்ற இரு புருவங்கள். மயக்கும் சிறிய கண்கள். துப்பாக்கி போல குண்டுகளை வீசி கொன்றுவிடும் பார்வை. கத்தியை விட கூர்மையான நாசியும் கூராக தன் குணத்திற்கு ஏற்ப வெட்டப்பட்டு அடங்காமல் காணப்படும் பரிவாரம். பிரம்மன் பெண்ணைத்தான் கலை நயத்துடன் படைத்திருக்கிறான் என்றால் இவனைக் கூட அவ்வாறுதான் படைத்திருக்கிறான் போலும்.
“பச்சைக் குழந்தை போன்ற வதனமுடைய இவனா ஒரு அடாவடிக்காரன்?” என்று அனைவரும் வியந்து கேட்கும் அளவுக்கு அவன் முகம் சாந்தமாக இருந்தாலும் அவன் செயல்களோ அந்த பால் வடியும் முகத்திற்கு சம்பந்தமே இல்லாமல் இருக்கும். அவன்தான் சத்ய ராம்.
அவன் பெயர் எதிரொலித்தாலே மொத்த கல்லூரியும் நடுநடுங்கிப் போகும். சீனியர் என்ற பெயரில் வாட்டி எடுக்கிறான் அனைவரையும். கண் முன் நடக்கும் தீயதை தட்டிக் கேட்பான். அதுவே அனைவரையும் அவன் பால் கவர்ந்தது. அனைவருமே அவனை தலையில் தூக்கிக் கொண்டு “சத்யா… சத்யா… சத்யா…” என கத்தி அவன் வெற்றியைக் கொண்டாட பெண்கள் வர்க்கமே அவனை வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தது.
இவ்வாறு அவன் புகழ் பாடுமாறு அவனது பெயர் எதிரொலிக்க, திடீரென ஒன்று கூடியிருந்த கூட்டமே பிளந்து இடம் கொடுத்தது காவ்யாவுக்கு. சத்யாவின் மேல் கொலை வெறியுடன் உள்ளே நுழைந்தாள் காவ்யா. அவளைக் கண்டதும் அனைவரும் அமைதியாகிட சத்யாவை தலையில் தூக்கி வைத்திருந்தவர்கள் அவனை கீழே இறக்கி விட்டனர்.
காவ்யா வந்ததும் அவனை கைகட்டி கண் இமைக்காமல் பார்த்திட அவன் “என்னடி அப்டி பாக்குற?” என்று தலையை சாய்த்து கேட்டிடான் திமிர்க.
“பளார்…” சத்யாவின் கன்னம் பழுத்தது. அனைவரும் சற்று ஆட்டம் கண்டார்கள். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற பயத்திலும், ஆர்வத்திலும் அனைவரும் ஒருவர் காதை ஒருவர் கடித்தார்கள்.
“இப்போ எதுக்குடி அறைஞ்ச?” என்று கேட்டான் அனல் கக்கும் பார்வையோடு.
“நான் என்னடா சொன்னேன்? இப்படி அடிதடின்னு இந்த பக்கம் வரக் கூடாதுன்னு சொன்னேனா இல்லயா?” என்று கத்தானாள் பதிலுக்கு.
“நான் ஏன்டி நீ சொல்றத கேட்கணும்?” என்று அவளிடம் கத்தினான் சத்யா திமிராக.
காதைக் கசக்கிக் கொண்டவள் அவனை கடுப்பேற்றும் நோக்கில் “இப்போ ஏன் இப்படி கத்துற?” என அக்கம் பக்கம் பார்த்துவிட்டு “ஆதி…” என தன் தம்பியை அழைத்தாள் காவ்யா.
கூட்டத்தின் நடுவே இருந்து “மாம்ஸூஸூஸூஸூ….” என்று புன்னகை மாறாத முகத்தோடு எட்டிப் பார்த்தது தலை ஒன்று. (வேற யாரும் இல்லங்க… நம்ம ஆதிதான்.)
“டேய் ஆதி இவன கூட்டிட்டு வாடா நம்ம இடத்துக்கு.” என்று கூறிவிட்டு தான் பாட்டுக்கு சத்யாவை ஓரப் பார்வையால் முறைத்துப் பார்த்தவாறே சென்று விட்டாள் காவ்யா. போகும் அவளையே “யார்டா இவ?” என்றவாறு பார்த்து வைத்தான் சத்யா.
பின்னால் இருந்து உடம்பை முறுக்கி தூக்கக் கலக்கத்தில் இருந்து எழுந்து கொட்டாவி விட்டுக் கொண்டு வந்த ஆதி “என்ன? சோவ் முடிஞ்சுடுச்ச போல? சரிடா மாம்ஸூ போலாமா?” என்று கேட்டான் ஆதி இதழ்கள் விரிந்த புன்னகையோடு அவன் தோளில் கை போட்டவாறு.
“ஏதேய்… மாம்ஸா? யாரு யாருக்குடா மாமா?” என்று எகிறிக் கொண்டு அவன் கையைத் தட்டிவிட்டான் சத்யா.
“அக்கா ஹஸ்பன்ட் மாமா இல்லாம மாமியா?” என்றான் ஆதி நக்கலாக.
“என்னாது… அக்கா ஹஸ்பன்டா? டேய் யாரக் கேட்டுடா இதெல்லாம் முடிவு பண்றீங்க?” என்று இலேசாக சோர்ந்த குரலுடன் ஆதியை முறைத்தான் சத்யா.
“டேய் மாம்ஸூ… யாரக் கேட்கணும்டா? எங்க அக்கா ஆசப்பட்டா எது வேணாலும் பண்ணுவேன்டா. நீதான் அவ வருங்கால மணவாளன்… சரியா? இல்லன்னா தூக்கிட்டு போய் தாலி கட்ட வெச்சிடுவேன் பாத்துக்கோ.” என்று நாக்கை கொடுப்பின் உட்புறமாக தள்ளி லொள்ளு விட்டான் ஆதி.
“டேய்… இதெல்லாம் டூ மச்டா.”என்று அவனை முறைத்தான் சத்யா படுகோபமாக.
“சரி இப்போ நீ வரியா? இல்லையா?” என்று நேரத்தைக் கடத்தாமல் முடிவாக கேட்டான் ஆதி.
“சரி. ஏதோ பண்ணித் தொலைக்கிறேன்…” என்று இருந்த கடுப்பை அடக்கியவன் ஆதியுடன் காவ்யா சொன்ன இடத்திற்கு கிளம்பினான். இல்லை என்றால் விட்டுவிடுவார்களா அக்காவும் தம்பியும்…
ஆதி வீட்டின் பின் இருக்கும் அதே நீர்வீழ்சியில்தான். சத்யா ஒரு முடிவோடு அவளின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தான். ஆனால் ஆதி எந்தவித கவலையுமின்றி குல்பியை ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருக்க அவனை தீயாய் முறைத்துக் கொண்டிருந்தான் சத்யா.
“என்னடா மாம்ஸு. ஏதோ ரொம்ப சூடா இருக்க போல… கூலா குல்பி சாப்பிடுறியா?” என்று தான் சாப்பிட்டுக் கொண்டிருந்த குல்பியை நீட்டி அவன் மாமன்காரனை கடுப்பேற்றினான்.
“டேய் ஆதி… நான் செம்ம கடுப்புல இருக்குறேன். பேசாம ஒழுங்கா இரு. இல்லன்னு வெச்சிக்க, அக்காவையும் தம்பியையும் சேத்து போட்டுத் தள்ளிடுவேன்.” என்றான் எரிச்சலை அடக்க முடியாமல்.
அவன் பேச்சுக்கு ஆதி பதில் சொல்லிட முன்பே “போட்டுத் தள்ளிடுவியா? முடிஞ்சா போட்டுத் தள்றா பாக்கலாம். என்னோட தம்பி ஆதி இருக்கான். நீ எங்கள போட முன்ன… அவன் உன்னை போட்டுடுவான்.” என்று எதிரில் வந்த காவ்யா தினுசாக கூறியதும் ஆதிக்கு புரை ஏறிவிட்டது.
“என்ன? பத்தொன்பது வயசு சின்னப் பையன். இவன் என்னைப் போட்டுத் தள்ளுவானா? என்னடி ரீல் விடுற?” என்று சொல்லி ஆதியை மேலும் கீழும் பார்த்தவன் வயிறு குலுங்க சிரித்தான் சத்யா.
காவ்யாவுக்கு மூக்கறுந்து போனது. “டேய் ஆதி… என்னடா உன்ன ஒருத்தன் அவமானப்படுத்திட்டு இருக்கான். பாத்துட்டு சும்மா இருக்க? போ… போய் அவனை அடிடா.” என்று சிறு குழந்தை போல் புகார் வைத்தாள் தம்பியிடம்.
அதில் ஆதிதான் தடுமாறிப் போய் “ஏன் காவ்யா? நீ வேற… சும்மா இரு. நான் அப்பாவி பையன். இப்போதான்டி பத்தொன்பது வயசாகப் போகுது… என்ன நடுவுல இழுத்து விடுற… உன் கணவனிடம் மாட்டிக் கொண்டு முழிக்க நான் தயாராக இல்லை தாயே.” என்று கையெடுத்து கும்பிட்டவன் குல்பியை விழுங்குவதில் கண்ணாகிவிட்டான்.
“அடச் சீ… தூ… நீயெல்லாம் என் தம்பி. உனக்கு போயும் போய் பில்டப் கொடுத்தேனே. என்ன சொல்லனும்டா.” என்று தலையில் அடித்துக் கொண்டவள் ஆதியைக் கேவலமாக பார்த்து வைத்தாள்.
இதற்கு மேலும் பொறுமை இல்லை சத்யாவுக்கு. “சரி… எதுக்குடி வர சொன்ன?” என்று நேராக விடயத்திற்கே வந்துவாட்டான்.
“அதெல்லாம் இருக்கட்டும். நீ சும்மா கூப்பிட்டா வரமாட்டியே. இன்னைக்கு தானாவே வந்துட்ட?” என்று காவ்யா புருவம் உயர்த்திக் தன் ஆரம்ப கட்ட சந்தேகத்தை கேட்டாள்.
“வரமாட்டேன்னா… உன் தம்பி சும்மா விட்டுடுவானா?” என்றான் சத்யா சலிப்புடன்.
“அதுதானே பாத்தேன். என் தம்பிய பத்தி எனக்கு தெரியாதா?” என்று ஆதியைப் பார்த்து இல்லாத கொலரை தூக்கி விட்டுக் கொள்ள எந்த தூக்கில்டா தொங்கி சாகலாம் என்றிருந்தது சத்யாவுக்கு.
“போதும்… போதும்… உன் தம்பி புராணம். எதுக்காக என்ன வர சொன்ன? அத முதல்ல சொல்லுடி.” என்று சீறினான் அடிக்குரலில்.
“வேற எதுக்கு? இங்க பாரு… ஏற்கனவே நீ அடிதடி, வெட்டுக் குத்து கட்டப் பஞ்சாயத்து பண்ணிட்டு இருக்குறன்னு எங்க வீட்டுல நம்ம லவ்வுக்கு ரொம்ப எதிர்ப்பா இருக்காங்க. நீ இப்டியோ பண்ணிட்டு போன… பிறகு நமக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் நடக்காதுடா.” அவள் முடிவாகவே சொன்னாள்.
“என்னாது… நம்ம லவ்வா? நம்ம லவ்வு இல்லம்மா… உன் லவ்வுன்னு சொல்லு. நான் எப்போவுமே சிங்கிள்தான். உன் வீட்டாளுங்க சொல்றதும் சரிதான். நான் வெட்டுக் குத்து, அடிதடி பண்றவன்தான். நீ வேற ஒருத்தன கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமா இருமா. தீர்க்க சுமங்கலியா பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழணும்னு… நான் ஆசிர்வாதம் பண்றேன்.” என்று அவன் ஆசிர்வாதம் செய்வது போல் பாவனை செய்ய அவளுக்கு கோபம் தலைக்கேறியது.
“இப்போ முடிவா என்ன சொல்ல வர? என்னை கல்யாணம் பண்ணிக்க முடியுமா? முடியாதா?” அவள் கையை அவன் முகத்துக்கு நேராக நீட்டி தலைகுனிந்து நின்று கேட்க
“அதெல்லாம் முடியாது. கிளம்பு கிளம்பு.” என்று அவன் வேறு திசைப் பார்த்து தெனாவெட்டாக கூறினான்.
“அப்போ சரி. நீதானே என்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க மாட்ட? அப்போ நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்.” என்றவாறு ஆதியிடம் கையை நீட்டினாள் ஒரு யுக்தியுடன். ஆதி சரியான நேரத்தில் தாலியை எடுத்து காவ்யாவிடம் நீட்டினான்.
அதனை எடுத்துக் கொண்டு சத்யாவிடம் நெருங்கியவளை மேலும் கீழும் அல்ப்பமாக பார்த்து வைத்தான் சத்யா.
“ஆணும் பெண்ணும் சமம்தானே… அதனால யாரு தாலி கட்டினா என்ன?” என்று தாலியுடன் கண்கள் மின்ன அவனருகில் வந்தாள் காவ்யா.
“ஏய்… என்னடி உலர்ர? பைத்தியமாடி நீ? டேய் ஆதி… இந்த பைத்தியத்த பிடிச்சிட்டு போய் மெண்டல் ஹொஸ்பிடல்ல சேத்து விடுடா. என் உசுரை எடுக்குது…” என்றான் கண் முழியை வெளியே வருமளவு விரித்து.
ஆதி என்னவென்றால் சத்யா சொன்ன எதையும் கேட்காமல் அவனின் கைகளை பின்னால் இறுக்கமாக பிடித்து “நீ தாலிய கட்டு காவ்யா.” என்று அக்காவுக்கு ஒத்து ஊதினான் வாயில் குல்பியுடன்.
“யாராவது காப்பாத்துங்க… ஒரு பொண்ணு என்ன கட்டாயப்படுத்தி குழந்தைத் திருமணம் பண்ண பாக்குது… யாராவது காப்பாத்துங்க.” என்று கூவிக் கூவி கத்தி ஆதியிடமிருந்து திமிறினான் சத்யா. தாலியை அருகே கொண்டு வந்தவள் அவனிடம் இருந்து விலக்கி நின்று தாடையில் விரல் வைத்து சற்று யோசித்துவிட்டு
“என்னதான் இருந்தாலும்… இப்படி கண்ட இடத்துல கல்யாணம் பண்ணிக்க கூடாது. கோவில்லதான் கல்யாணம் பண்ணிக்கணும். நான் கோவிலா நினைக்கிறது எங்க வீட்ட. அதனால நம்ம கல்யாணம் அங்கதான் நடக்கணும்.” என்று கூறி விலகிட ஆதியும் சத்யாவின் கையை விட்டு விட்டு நகர்ந்ததான். அப்போதுதான் மூச்சை சீராக விட்யான் சத்யா.
பின்னால் திரும்பி ஆதிய முறைத்த சத்யா “டேய் நீயும் ஒரு பையன்தானடா? உங்க அக்காவுக்காக என் வாழ்க்கைய நாசம் பண்ண பாத்துட்டியேடா துரோகி.” என்று அவன் சட்டைய பிடித்துக் கத்தியவனிடம் பதிலுக்கு
“நீ என்னதான் சீன் போடு… இந்த வேதாளம் அந்த விக்ரமாதித்யன் சொல்ற பேச்சதான் கேட்கும்.” என்று காவ்யாவை கை காட்டினான் ஜாடிக்கு ஏற்ற மூடியாக.
கண்களை இறுக்கமாக மூடி பல்லைக் கடித்துக் கொண்டு கையை இறுக்கி நாக்கை மடித்து வைத்து தலையில் தனக்குத் தானே அடித்த சத்யா அவள் பக்கம் திரும்பி
“நீ என்னதான்டி உன் மனசுல நினைச்சிட்டு இருக்க?” என்று எரிச்சலாய் கேட்டான்.
“ஹா… அதத்தான் நானும் சொல்றேன். நான் உன்னதான்டா என் மனசுல நினைச்சிட்டு இருக்கேன்.” என்றிடவே பொங்கி எழுந்தது ஆத்திரம் சத்யாவுக்கு.
“அடிங்…” என கை நீட்டி “இவளை…” என அவளை அடிக்க அருகில் ஏதாவது கிடைக்கிறதா என தேட அவளோ பயந்து ஆதியின் பின் போய் ஒழிந்து நின்று கொண்டாள்.
“டேய்… மாமா… கூல்… கூல்டா… அவ சொல்றத முதல்ல கேளு.” என்றான் அவனை தடுத்துக் கொண்டே ஆதி.
“சரி… என் நேரம்… கேட்டுத் தொலைக்கிறேன்…” என்றான் அவளை எரிக்கும் தீப் பார்வையோடு.
“இங்க பாரு… நான் சொல்றது ஒரே ஒரு விசயம்தான். இப்படி சீர்திருத்தவாதம் பண்றேன்னு சட்டத்தை நீயே கையில எடுத்துட்டு சுத்தாத. சட்டம் தன் கடமைய தானே செய்யும்.” என்று தன் மனதில் ஓடிக் கொண்டிருப்பதை சட்டென்று உடைத்தாள் காவ்யா. அவள் வார்த்தைகளில் உச்சகட்ட கோபம் கொண்டான் சத்யா.
“பளார்…” என நொடியில் அவளை அறைந்திருக்க நிலை தடுமாறி கல்லில் மோதி கீழே விழுந்து விட்டாள் காவ்யா. அவளைப் பார்த்து தலையை கோதிவிட்டவன் ஆக்ரோஷமாக
“என்னடி சொன்ன? சட்டம் தன் கடமையை செய்யுமா? அப்போ சரி… போன வாரம் ஒரு சின்ன மைனர் பொண்ண துடிக்கத் துடிக்க ஹராஸ்மன்ட் பண்ணி கொண்ணுட்டானே ஒருத்தன். ஒரே வாரத்துல… ஒரே ஒரு வார்த்துல…” என்று விரலை நீட்டிக் காட்டி
“0வெளில வந்து இன்னைக்கு சுதந்திரமா சுத்திக்கிட்டு இருக்கான். சொல்லு… சட்டம் தன் கடமைய பண்ணதா? இல்லை. ஏன்னா காசு. காசு இருக்கிறவங்களுக்கு இப்போ சட்டம், நீதி, நியாயம் எல்லாம் விலை போக ஆரம்பிச்சிடுச்சு. காசு இல்லாதவன்??? இன்னைக்கு ஒரு விலை. நாளைக்கு ஒரு விலை. எதுக்குன்னு தெரியுமா? நீ சொன்ன சட்டம், நீதி, நேர்மை, நியாயம் இது எல்லாத்துக்கும்தான். அந்தப் பொண்ணுக்கு நியாயம் கிடைக்க வேணாம்? பச்சைக் குழந்தை. அவனெல்லாம் சாதாரணமா தூக்குல தொங்க விடக்கூடாதுடி. துடிக்கத் துடிக்க கொல்லணும். இப்போ சொல்றேன் கேளு. சட்டம் பண்ணாத அதோட கடமைய நான் பண்ணிட்டு இருக்கேன். நீ என்ன சொன்னாலும் நான் கேட்பேன்னு நினைச்சியா? நான் இப்படிதான் இருப்பேன். நீ என்னதான் கல்யாணம் பண்ணிக்கனும்னு நான் சொன்னேனா? உனக்கு பிடிச்ச எவனையாவது கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமா இரு. ஆனால் என்ன விட்டுடு.” என்று கூறிட ஆதியும் காவ்யாவும் பேய் அறைந்தது போல் ஆனார்கள்.
தன் ஜேக்கட்டை எடுத்து தோளில் போட்டவன் ஆதியையும் அவளையும் ஒரு முறை முறைத்து விட்டு நடந்து சென்றான்.
காவ்யா விழுந்து கிடக்க அது எதையும் பொருட்படுத்தாது தனது குல்பியை ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான் ஆதி. அதில் கோபமானவள் தனது ஒற்றை சப்பளை ஆதியின் மீது விட்டெறிய அவன் திடுக்கிட்டு அவளை அமர்ந்திருந்த கல்லிலிருந்து எழுந்து நின்று நோக்கினான்.
“டேய் நான் இங்க கஷ்டப்பட்டுட்டு இருக்கேன். நீ என்னடான்னா ரசிச்சு ருசிச்சு குல்பி சாப்பிட்டுகிட்டு இருக்க?” என்று கத்தினாள் சத்யாவிடம் இருந்த கோபத்தை அவனிடம்.
“இது உங்க பிரச்சினை இதுல நான் தலையிட மாட்டேன். யூ கேரி ஒன்.” என்று கூறி தன் வேலையிலேயே கவனம் செலுத்தினான் ஆதி.
காவ்யா தான் நினைத்த காரியம் நடக்கவில்லை என்ற கோபத்தில் வீட்டை நோக்கி புறப்பட்டாள். வீட்டில் மீராவும் அகல்யாவும் சரிகமபதநி… என பாட்டி சொல்லி கொடுத்துக் கொண்டிருக்கும் பாடலை சலிப்புடனும் தூக்கக் கலக்கத்துடனும் பாடிக் கொண்டிருக்க யாரும் அறியாது பூனைபோல் தன் சப்பல்களை கழட்டிக் கொண்டு உள்ளே நுழைந்தாள் காவ்யா. இல்லையென்றால்… பிடிக்காத இசையை பாடச் சொல்லி கழுத்தறுப்பார் பாட்டி.
கண்களை இறுக மூடிக்கொண்டு இருக்கும் பாட்டியின் கண்களில் பட்டு விடமாட்டோம் என்கின்ற தைரியத்தில் வீர நடை போட்டு நடந்தாள் காவ்யா. ஆனால் அவர் கண்கள் மூடிய நிலையிலும் காவ்யாவின் பேர்பியூம் வாசனை வீசவே அவளைக் கண்டு கொண்டார்.
“ஏன்டி…” என்று அவளை கண்களை மூடியவாறு அழைத்திட பதுங்கி சென்றவள் திடுக்கிட்டு சிலைபோல கையில் துப்பட்டாவின் நுனியை சுற்றியவாறே நின்றுவிட்டாள். கண்களை திறந்து தன் பாடல் பயிற்சியில் இருந்து தப்பிக்க நினைத்தவளை கூர்மையாக நோக்கினார் பாட்டி.
“என்னடி இன்னைக்கும் என்கிட்ட இருந்து தப்பிக்கிற யோசனை தானா? எது சொன்னாலும் உன் காதுல விழாதா? இது என்னடி கோலம்? இதுதான் ஒரு நல்ல குடும்பப் பெண்ணோட லட்சணமா? நான் தான் சொன்னேனே பாவாடை தாவணி கட்டிட்டு கொலேஜ் போன்னு…” என்று தன் செல்ல பேத்தியை கண்டித்தார்.
“ஆ… தாவணியா? எங்க? அதக் கட்டிட்டு போனா எல்லாப் பசங்களும் இடுப்ப இடுப்ப பாக்குறானுங்க. பொண்ணுங்க கோலேஜ்க்கு தாவணி கட்டி போறதுனாலதான் அரைவாசி பசங்க படிக்கிறதே கிடையாது.” அவள் பதிலுக்கு வாயடித்து உதட்டை சுளிக்க அவளை முறைத்தார் பாட்டி.
“லூசு பாட்டி.” என்று வாய்க்குள் கூறிக்கொண்டே அவருக்கு பழிப்பு காட்டியவாறு தோளில் புத்தக பையை போட்டுக்கொண்டு உள்ளே நுழைந்தாள்.
“அம்மா எங்க இருக்க? பசி வயித்த கிள்ளுது. சீக்கிரமா சாப்பாடு எடுத்து வை.” என்று கூறி தன் அம்மாவை வைதாள் காவ்யா.
“நான்தான் சொன்னேனேடி காலையில சாப்பிட்டுட்டு போன்னு. நீதான் சொல் பேச்சு கேட்க மாட்டியே. கெமஸ்ட்ரி பாடம் இருக்குதுன்னு சாப்பிடாம பச்சை வயித்துல போனா இப்படித்தான்.” என சாப்பிடாமல் கல்லூரி சென்று தன் மகளை திட்டிக் கொண்டார் மகாலக்ஷ்மி.
“ஒரு வேளை சாப்பிடலனா செத்துப் போய்ட மாட்டேன்மா. நீ கவல படாத.” என்று அவள் கூறிட தன் மகளின் பேச்சில் பயந்து கொண்டவர்
“ஏன்டி இப்படி பேசுற?” என்று அவளின் தலையில் தட்டி அதட்டினார்.
“அம்மா நீ என்ன லூசா? இப்படி ஏதேதோ மூட நம்பிக்கைய வளராத்து வச்சிருக்க. சொன்னதெல்லாம் நடக்காது. இதெல்லாம் பொய் மா நான் என்னோட சத்யாவ கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா நூறு வருஷம் வாழனும். அதுக்காகவே அந்த கடவுள் எனக்கு நிறைய ஆயிசு கொடுத்திருப்பாரு.” என்று தன் காதலனை பற்றி அகமும் முகமும் மலர்ந்து கூறிடவே
சாப்பிட வந்த பார்வதி பாட்டியின் காதில் அவள் கூறிய “சத்யாவை கல்யாணம் பண்ணிக்க வேண்டும்.” என்ற வார்த்தை விழுந்துவிட்டது.
“ஹ்ம்…” என்று தொண்டையை செருமிக் கொண்டு வந்தவர்
“ஆமாம்டி. நாங்க எத பண்ணாதன்னு சொல்றமோ அதயே தேடிப் பிடிச்சு பண்ணு. இங்க பாரு… உனக்காக ஒரு நல்ல மாப்பிள்ளைய நான் பாத்து வெச்சிருக்கேன். அவனைக் கட்டிக்கிட்டு சந்தோசமா வாழுற வழிய பாரு. அத விட்டுட்டு இப்படி அந்த அய்யோக்கியன் பெயரை சொல்லிக்கிட்டு அவனைத்தான் காதலிப்பேன். அவனை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு இருந்தன்னா எங்க எல்லாரையும் மறந்துடு.” என்றார் கோபத்துடன்.
மகாலக்ஷ்மிக்கு திருதிருவென்று விழித்தார் மகளைப் பார்த்து. தன் அம்மாவை ஏதாவது மரியாதை குறைவாக பேசி விடுவாளோ என்ற பயம் வேறு. ஏற்கனவே அவள் ஒரு பிடிவாதக்காரி. தன் கோபத்தை நிதானமாக வெளிக்காட்டினாலும் அவளது வார்த்தைகள் அத்தனையும் அதிக அர்த்தம் கொண்டவை. அவளது பேச்சின் தெளிவில் அனைவரும் எப்படி எதிர்ப் பேச்சு பேசுவது என திக்கு முக்காடிப் போவார்கள்.
“பாட்டி… இது என் வாழ்க்கை. இத எப்படி டிஸைட் பண்ணணும்னு எனக்கு நல்லாவே தெரியும். வாழ்க்கைய வாழப் போறது நான். நீ இல்லை. எனக்கு யார் சரி யார் தப்புன்னு நல்லாவே தெரியும். நீ அதை சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை. நீ எது சொன்னாலும் அத கேட்டுட்டு சும்மா இருப்பேன்னு நினைக்காத பாட்டி. நான் ஒன்னும் இவங்க எல்லாரையும் மாதிரி வாயில்லாப் பூச்சியில்லை. எனக்கு எந்த இடத்துல எப்படி பேசனும்னும் தெரியும் எப்படி நடந்துக்கனும்னும் தெரியும்.” என்று தான் சாப்பிட்டுக் கொண்டிருந்த உணவை பார்த்துக் கூறிக் கொண்டே உண்ட பாதியிலா கை கழுவியவாறே
“எனக்கும் சத்யாவுக்கும் நடுவுல குறுக்க நின்னா இப்படித்தான்… எந்த உறவா இருந்தாலும் கை கழுவி விட்டுடுவேன்.” என்று கூறிக் கொண்டே பாட்டியை அழுத்தமாக பார்த்தவள் பல்லைக் கடித்து கோபத்தோடா அங்கிருந்து புறப்பட்டாள்.
“வாயப் பாத்தியா வாய். எப்படி பேசிட்டு போறா பாரு. பொண்ண பொண்ணு மாதிரி வளர்க்காம பையன் மாதிரி வளர்த்து வெச்சிருக்கா. கை கழுவிடுவாளாமாம். காதல்னு ஒன்னு வந்தா பெத்த அம்மா அப்பா யாருமே கண்ணுக்கு தெரிறது இல்லை. ஏதோ பெரிய உத்தமன காதலிச்ச மாதிரி பேசுறா. அவனே ஒரு அய்யோக்கியப் பையன்.” என்று சத்யாவை வசை பாடினார் பாட்டி.
எதையும் காதில் வாங்காமலே கோபமாக அவள் இரண்டு சப்பல்களையும எடுத்து “படார்.” என கீழே எறிந்து காலில் போட்டவாறே
“பாட்டிக்கு இன்னும் கொழுப்பு குறையல… என்ன பேச்சு பேசுது பாரு…” என்று அவரை அர்ச்சித்துக் கொண்டே சப்பளை காலில் அணிந்தாள்.
தன் தாய் புராணத்தில் தன் மகளை கவனிக்க மறந்து விட்டோமே என்றவாறு கையில் சாப்பாட்டு பெட்டியுடன் ஓடி வந்து அவள் கையை பிடித்து நிறுத்தினார் மகாலக்ஷ்மி.
“எங்கடி போற சாப்பிடாம? கோபம் வந்தா போதுமே… எதுவும் தெரிறது இல்லை. அக்காவுக்கும் தம்பிக்கும் இதே வேலையாப் போச்சு. இதுல நீதான் அவனை கெடுத்து குட்டிச் சுவராக்கி வெச்சிருக்க. வர வர உங்க போக்கே சரி இல்லடி.” என்று மகளை வைதார்.
“விடுமா. இப்போ எதுக்கு வந்த? உன் அம்மாவ எதிர்த்து எனக்காக ஒரு வார்த்தை பேசினியா? இப்ப வந்து எங்களை குத்தம் சொல்லு. நான் இப்படிதான் இருப்பேன். சத்யாவதான் கல்யாணம் பண்ணிப்பேன். இத தடுக்க யாராலையும் முடியாது. புரிதா?” என்று அவர் கையை கோபமாக தட்டி விட்டவளின் முகம் கோபத்தில் உம்மென்று இருந்தது.
“சரிடி… நான் தான் சொன்னேன்ல? அந்த பையனையே நீ கல்யாணம் பண்ணிக்க. எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் உன் பாட்டி ஒத்துக்கலன்னா எனக்கும் வேற வழி தெரியாது. அப்றம்… நானுமே இந்த கல்யாணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டி வரும். அதனால முதல்ல உன் பாட்டிய சமாதானப்படுத்து.” என்று அவள் கையில் டிபன் பொக்ஸை திணித்தார்.
“அந்த பெரிசு தான் பிடிச்ச முயலுக்கு மூணு கால்ன்னு சொல்லிட்டே நிக்கும். அதுக்கு சயன்டிபிக்கா எப்படி ஆதாரம் காட்டினாலும் அது திருந்தாதுமா. அத சமாதானப்படுத்துறது சுத்த வேஸ்ட்…” என்று சலித்துக் கொண்டாள் காவ்யா.
அவள் வார்த்தையில் கோபமாகி அவளது கன்னத்தில் “சப்…” என்று சிறிதாக ஒரு அடி போட்டவர்
“என்னடி பெரிசு கிரிசுன்னு? மரியாதை இல்லாம பேசுற? வாய கிழிச்சிடுவேன்.” என்று கூறியவாறே அவள் கையில் சாப்பாட்டு பெட்டியை திணித்து
“இதைப் புடிடி. நீயும் அந்த பையனும் சாப்பிடுங்க.” என்றார் கடுகடுப்புடன்.
“ஆஆஆ…” என்று தன் கன்னத்தை தடவிக் கொண்டிருந்தவள் கொஞ்சம் புன்னகையோடே
“என் செல்ல அம்மா.” என்று அவர் கன்னத்தை கொஞ்சலாக வருடி முத்தம் இட்டாள்.
தொடரும்…