காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 09 🖌️

0
(0)

கதவு தட்டும் சத்தம் கேட்டிட காவ்யாவுக்கு உயிர் உடம்பில் இல்லாமல் போனதொரு உணர்வு.

 

“ஏன்டி காவ்யா. எத்தனை தடவை தான்டி உன்ன சாப்பிடாம தூங்கக் கூடாதுன்னு சொல்றது? சீக்கிரமா வந்து இந்த பாலையாவது குடிச்சிட்டு தூங்கேன்டி.” என்று சாப்பிடாமல் தூங்கும் தன் பேத்தியை அதட்டினார் பாட்டி.

 

இதில் பயந்து போய் “சடார்” என்று எழுந்து கொண்டவள் “போச்சு… போச்சு… பாட்டி மட்டும் உன்னை பாத்திச்சு அவ்ளோதான் என் கதை. சத்யா ப்ளீஸ் எப்படி வந்தியோ அப்படியே போய்டு ப்ளீஸ்… ப்ளீஸ்…” எனக் கெஞ்சினாள் அவனிடம்.

 

அவன் அங்கிருந்து அசைவதாக தெரியவில்லை. “ஏன் நான் போகணும்? இந்த வீட்டு வருங்கால மாப்பிள்ளை தானே நான். நானே போய் பாட்டிக்கிட்ட பேசி பாலை வாங்கிட்டு வந்துர்ரேன்.” என்று எழுந்து கதைவைத் திறக்கச் செல்ல

 

“டேய்… டேய்… வேணாம்டா.” என அவனை வழி மறித்தாள் காவ்யா.

 

“இப்போ எதுக்குடி சிவ பூஜையில கரடி நுழைஞ்ச மாதிரி வந்து நிக்கிற?” என்றான் புருவத்தை தூக்கி கைகளை இடுப்பில் வைத்தவாறு.

 

“உனக்கு என்ன பைத்தியமாடா? பாட்டி சும்மா ஆள் இல்லை. ஏற்கனவே நீன்னு சொன்னா அதுக்கு பத்திக்கிட்டு எரியும். இதுல என்கூட இப்படி நடு ராத்திரில உன்ன பாத்தான்னா அவ்ளோதான் சத்யா. அவ என்ன கொலேஜ் கூட வர விட மாட்டா.” என்று சினுங்கினாள்.

 

அவன் விடாப்பிடியாக நான் இங்கேதான் இருப்பேன் என்றவாறு “பாட்டி…” எனக் கூற வர அவன் வாயைப் தன் கைகளால் பொத்திப் பிடித்து

 

“டேய்… வேணாம்டா… ப்ளீஸ்.” என கண்களால் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

 

பொறுமை இழந்த பாட்டி “இவக்கிட்ட இப்படி பேசினா வேலைக்காகாது.” என கதவை வேகமாகத் தள்ள லொக் உடைந்து கதவு திறந்து கொண்டது.

 

ஆவனை காவ்யாவின் அறையில் பார்த்த பாட்டி அதிர்ந்து போக காவ்யா இப்பொழுது நடந்தது உண்மையாக இருக்கக் கூடாது என்று கண்களைக் கசக்கி பாட்டியையும் சத்யாவையும் மாறி மாறி குறுகுறுவென பார்த்தாள்.

 

அவன் எதுவும் நடக்காதது போல் “குட் மோர்னிங் பாட்டி.” என்று அவருக்கு சல்யூட் அடித்து விட்டு தற்போது காலை இல்லை இரவு என உணர்ந்தவன் “சோரி பாட்டி. குட் நைட்.” என்றான் மறுபடியும்.

 

சத்யாவை அங்கே எதிர்பாராதவறோ கோபத்தில் சிவந்து போனார். “யார் வீட்டுக்கு வந்து என்ன பண்ணிட்டு இருக்குற?” என்று கத்தினார் காட்டுக் கத்து.

 

அவர் கத்தலில் எச்சில் விழுங்கிக் கொண்டாள் காவ்யா. அதைத் தொடர்ந்து பாட்டி உள்ளே சென்று சத்யாவை முறைத்தவாறே காவ்யாவின் கையைப் பிடித்து இழுத்து வந்து நடு மண்டபத்தில் தள்ளி விட்டு அருகில் இருந்த மண் குடத்திலிருந்த தண்ணீரை அவள் தலையில் ஊற்றிவிட்டு தூக்கிப் போட்டு உடைத்து “எல்லாரும் வெளில வாங்க.” என்று கத்திட அனைவரும் வெளியில் வந்தனர்.

 

காவ்யா நடு முற்றத்தில் கையைப் பிசைந்து கொண்டு தலையைக் குனிந்து நின்றிருந்தாள். அனைவரும் வந்து நின்று “என்ன நடக்குது இங்க?” என ஆராய்ந்தனர். அவர்களின் பின்னே காவ்யாவின் அறையில் இருந்து கீழே இறங்கி வந்தான் சத்யா.

 

சத்யாவைக் கண்டதும் அனைவரும் அதிர்ச்சியில் உறைய “பாருடி உன் பொண்ணு பண்ணி வெச்சிருக்குற காரியத்தை. ஒருத்தன காதலிக்கிறேன்னு சொல்லி அவனைக் கூட்டி வந்து வீட்டுக்குள்ள வெச்சிருக்கா. இதத்தானா நாம இவளுக்கு சொல்லி கொடுத்து வளர்த்தோம். இது மட்டும் வெளில தெரிஞ்சா குடும்ப மானமே போய்டும்.” என்று தலையில் அடித்துக் கொள்ள

 

காவ்யாவை அவமானப்படுத்த தக்க சமயம் கிடைத்தது என எண்ணி உள்ளுக்குள் மகிழ்ந்த கார்த்திகா “இதத்தான் வளர்ப்பு சரி இல்லன்னு சொல்லுவாங்க. பிள்ளைங்கல ஆரம்பத்துல இருந்தே அடக்கமா வளர்த்து இருந்தா இதெல்லாம் இங்க வந்து நிக்குமா?” என்றார் குத்தலாக.

 

அதற்கு ஜால்ராவாக திவ்யங்கா “ஆமாம் அண்ணி. இந்த பொண்ணு அவ பண்ற எதையாவது நாம கேட்டோம்னா எதிர்த்து எதிர்த்து வாய் பேசுவாளே. அப்போவே நினைச்சேன். இது என்னைக்காவது இப்படி வந்து நிக்கும்னு.” என்று கூடவே சேர்ந்தார்.

 

தானும் அவளை பழி வாங்கியே தீர வேண்டும் என்ற வகையில் அனுயா “இது எங்க இனிமேல் உருப்படப் போகுது? ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?” எனக் கூறி கேலி செய்தார்.

 

சத்யாவுக்கு அவளை தன் முன்னாலையே இவ்வாறு பேசுகிறார்கள் என்ற கோபம் எழ “இங்க பாருங்க. இது வரை நீங்க பேசினதெல்லாம் போதும். இனிமேல் காவ்யாவப் பத்தி ஏதாவது தப்பா பேசினீங்கன்னா நாக்க இழுத்து வெச்சி அறுத்துடுவேன்.” எனக் கை நீட்டவும் இவனைப் பற்றி நன்றாக அறிந்து கொண்ட அவர்கள் வாய் மூடிக் கொண்டது.

 

“என்னடா தப்பு எல்லாத்தையும் பண்ணிட்டு அவளுக்கு சப்போர்ட்டாவா பேசுற?” என பாட்டி கேட்டிட

 

“அமைதி ஆகுங்க பாட்டி. இது நம்ம காவ்யா. அவ இப்படி பண்ற பொண்ணு இல்லை. சத்யாவும்தான்… பச்ச மண்ணு பாட்டி. ஜஸ்ட் ரெண்டு பேரும் பேசிட்டு இருந்திருப்பாங்க. கொஞ்சம் நிதானமா யோசிச்சு பாருங்க.” என்றான் ஆதி காவ்யாவுக்கு சாதகமாக.

 

கோபத்தில் காவ்யாவை நெருங்கி வந்த மகாலக்ஷ்மி அவளிடம் “சொல்லு. அம்மா சொல்றது உண்மையா?” எனக் கேட்க குனிந்தவாறே “ஆம்.” என தலையாட்டினாள் காவ்யா.

 

“என்னடி சொன்ன? ஆமாவா?” என அவளை அறையக் கை நீட்ட அவரது கையைத் தடுத்து நிறுத்தினான் சத்யா. இதையெல்லாம் பாத்துக் கொண்டிருந்த ஆதிக்கு

 

“டேய்… மாமா… எங்க அக்கா மேல லவ் இல்ல இல்லன்னு இப்படி நைட்டோட நைட்டா ரொமேன்டிக் பில்மே ஓட்டி இருக்கியேடா…” என்ற கடுப்பு வேறு.

 

அவன் தடுத்து நிறுத்தியவாறே “தப்பு பண்ணது நான். அவ சொல்ல சொல்ல கேட்காம ஜன்னல் வழியா வந்தது நான். என்ன அடிக்கிறதுன்னா அடிங்க ஆனால் அவ மேல உங்க நகம் கூட படக் கூடாது.” என்றான் ஒரே அழுத்தமான பார்வையில்.

 

அவன் கையில் இருந்து தன் கையை உதறிய மகாலக்ஷ்மி “நான் என்னடி சொன்னேன்? நீ விரும்பியவன காதலி. பரவால்லன்னு தானே சொன்னேன். உன் ஆசைக்கு தடை போட்டேனா? எங்கம்மா சம்மதம் இருந்தா மட்டும் போதும்னு தானே சொன்னேன். ஆனால் எதுக்குடி இப்படி பண்ண? உன்னை இந்த மாதிரி கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் சொல்லிக் கொடுத்தாடி வளர்த்தேன்? ச்சீ… என் மூஞ்சில முழுக்காதடி.” எனக் கூற காவ்யாவுக்கு கண்கள் நிறைய கண்ணீர் வர ஆரம்பித்தது. ஆனால் தவறு செய்து விட்டோம். எதிர்த்துப் பேசத்தான் வார்த்தை வரவில்லை. அமைதியாக சிலை போல் நின்றிருந்தாள்.

 

ஆதி தன் அக்காவின் மீது கொண்ட அதிக பாசத்தில் “நீங்க எல்லாரும் என்ன பேசுறீங்க? காவ்யா தப்பு பண்ற பொண்ணு இல்லை. அவ உங்க வளர்ப்பும்மா. என் அக்கா. நிச்சயமா தப்பு பண்ண மாட்டா. அவ தப்பு பண்ணா உங்க வளர்ப்பு தப்பாகிடுச்சுனு அர்த்தம். நீங்க தப்பாகிட்டீங்கனு அர்த்தம். ப்ளீஸ்…” என்று கெஞ்சினான்.

 

அவனுடன் சேர்ந்து “ஆமாம்மா என் தங்கச்சி தப்பு பண்ணக்கூடியவ இல்ல. அவளைப் பத்தி எனக்கு நல்லா தெரியும். அவ எடுக்குற முடிவு எதுவும் தப்பாகாது.” என்று கூறினார் விக்ரம்.

 

விஜயனும் விஷ்ணுவும் கூட தன் மகள் நிச்சயமாக தவறு செய்திருக்க மாட்டாள் என்ற நம்பிக்கையில் இவர்களுடன் சேர்ந்து “ஆமாம். நம்ம பொண்ணு தப்பு பண்ணிருக்க மாட்டா. முதல்ல இவனை நீங்க நாலு அறை அறையாம நம்ம பொண்ண ஏன் கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க?” என்று சத்யாவை நோக்கியவர்

 

“உன் கூட பிரச்சினை பண்ணி நாங்க அசிங்கப்பட நினைக்கல. இனிமேல் எங்க பொண்ணு மேல உன் பார்வை பட்டிச்சு தலைய வெட்டிடுவோம். இந்த வீட்டுல நிக்குற அருகதை கூட உனக்கு இல்லை. இங்க இருந்து கிளம்புடா.” என சத்யாவின் சேர்ட் கொலரை பிடித்து கத்த அவரை விலக்கி விட்டவன்

 

“இங்க பாருங்க… நானும் அவளும் ஒருத்தர ஒருத்தர் காதலிக்கிறோம். அவ இல்லாம என்னாலையும் நான் இல்லாம அவளாலையும் இருக்க முடியாது. இப்போ போறேன். ஆனால் என்ன மீறி காவ்யாவ யாருக்காவது கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சீங்கன்னா நான் மனிசனா இருக்க மாட்டேன்.” என கூறி எச்சரித்து விட்டு வெளியில் சென்று விட்டான்.

 

அனைவரும் சிலை போல அமர்ந்திருக்க காவ்யா தன் தம்பியின் தோளில் சாய்ந்து கொண்டு அவன் கரங்களைப் பற்றியவாறு அழுது கொண்டிருந்தாள். அவளின் அருகில் நின்றிருந்த மீரா “காவ்யா அழாத. எல்லாம் சரியாகிடும்.” எனக் கூறி ஆறுதல் சொன்னாள். அவளது அக்கா அகல்யா கூட அவளுக்கு தண்ணீர் எடுத்துக் கொடுத்து தலையைத் தடவி விட்டு குடிக்க சொன்னாள்.

 

“ஹேய்… விடு எல்லாமே சரி ஆகிடும். நான் இருக்கேன். யாரு என்ன பண்றாங்கன்னு பாத்துர்ரேன்.” என்றான் ஆதி அவளை சமாதானப்படுத்துமாறு. அவள் விடாமல் அவன் கைகளை இறுக்கிப் பிடித்துக்கொண்டு

 

“நான் வேணும்னே பண்ணல ஆதி. என்ன நம்பு. நாங்க சும்மா பேசிட்டுதான் இருந்தோம்.” என்றாள் அப்பாவியாக. அவளை எப்படி சமாதானம் செய்வது என தெரியாதவன் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டு

 

“எனக்குத் தெரியும். நான் உன்னை நம்பாம வேற யார நம்ப போறேன்? என் அக்காவப் பத்தி எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும்.” என்று கூறியதும் அவன் வார்த்தைகளில் கொஞ்சம் ஆறுதல் அடைந்தவள் சற்று அமைதியானாள்.

 

அதனைத் தொடர்ந்து தனது பே ஆரம்பித்தார் பாட்டி. “இங்க பாருடி… நடந்தது நடந்து போச்சு. பரவாயில்லை விடு. ஆனால் இனிமேலும் அவனைத்தான் கட்டிப்பேன்னு ஒத்தக் கால்ல நிக்காம ஒழுங்கா நான் காட்ற பையன கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமா வாழுற வழியப் பாரு. இனிமேல் நீ கொலேஜ் போகனும்னு எந்த அவசியமும் இல்லை. நீ படிச்சி டோக்டர் ஆகணும்னு இங்க யாரும் அழல.” என்றார் கண்டிப்பாக.

 

இவ்வளவு நேரமும் அழுது கொண்டு இருந்தவளுக்கு இந்தப் பேச்சைக் கேட்க கோபம்தான் வந்தது. “யார கல்யாணம் பண்ணிக்கனும் யாரக் கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு முடிவு பண்றது அவங்க அவங்க தனிப்பட்ட விருப்பம். அது அவங்களோட உரிமை. அதே போலத்தான் படிப்பும். அந்த உரிமைய நான் யாருக்கும் கொடுக்க மாட்டேன். எனக்கு உங்களை பிடிக்கும் பாட்டி. ஆனால் அதுக்காக நீங்க சொல்ற எல்லாத்தையும் கேட்டுட்டு இருப்பேன்னு நினைச்சிடாதீங்க. மை லைப் மை ரூல்ஸ்.” என்று கூறி கண்களை உள்ளங் கைகளால் துடைத்தவாறே சென்றுவிட்டாள்.

 

காதலியின் வெளிச்சத்தில் பூமி எனும் தாயின் மடியில் தூங்கிக் கொண்டிருந்த கதிரவன் கண்விழித்து கிழக்கு வானின் மேலெழ காலையிலேயே குளித்து தயாரான காவ்யா தன் புத்தகப் பையை எடுத்துக் கொண்டு வெளியில் வர அனைவரும் கூட்டாக உணவருந்திக் கொண்டிருந்தனர்.

 

அவள் யாரையும் கவனிக்காமல் சப்பளைக் காலில் போட்டவாறு “ஆதி… எனக்கு ஒரு எக்ஸேம் இருக்கு. ஸ்டேட் வரைக்கும் போய் வரனும். கொஞ்சம் ட்ரைன்ல ஏத்தி விட்டுடேன்.” என்றாள் சத்தமாக அவனை அழைத்தவாறே.

 

அவன் சாப்பிட்டுக் கொண்டு இருந்த கையை அவள் அழைப்பில் கழுவியவாறே “இதோ வரேன் காவ்யா.” என எழுந்தான்.

 

“டேய்… என்னடா? சாப்பிட்ட பாதியிலேயே எழுந்துட்ட?” என மகாலக்ஷ்மி கேட்க

 

“ம்மா… காவ்யா கூப்பிர்ரா.” என எழுந்து கொண்டான்.

 

“அவ கூப்டா அவ காலடில போய் நிக்கணுமா? நாங்கதான் சொன்னோம்ல? படிக்க எல்லாம் தேவையில்லை. வீட்டுல இருன்னு சொல்லி. அத மதிக்காம போறவளுக்கு யாரும் உதவி பண்ணத் தேவையில்லை.” என்றார் மகாலக்ஷ்மி அவளை முறைத்துப் பார்த்தவாறே.

 

“சரி. ஆதி… நீ சாப்பிடு. நானே போய்க்கிறேன்.” என்று கடுப்போடு கூறிவிட்டு நகர்ந்தாள்.

 

“ஹேய்… நில்லுடி. பெரியவங்க சொல்றோம்ன மரியாதை வோணாம்? இவ்ளோ தடவை சொல்றோம். காதுல விழல?” என பாட்டி அவளிடம் கத்தினார்.

 

“நான் ஏன் கேட்கணும். அதுதான் நான் சொல்லிட்டேனே. மை லைப் மை ரூல்ஸ்னு. எனக்கு படிக்கணும்னா படிப்பேன். காதலிக்கனும்னா காதலிப்பேன். எனக்கு பிடிச்சத மட்டும்தான் நான் பண்ணுவேன்.” என்று விட்டு திமிராகச் சென்றுவிட்டாள் காவ்யா.

 

“ஹேய்… ஹேய்… நில்லு… ஒரு நிமிசம்.” எனக் கத்தியவாறே அவள் அருகில் வந்து நின்றான் ஆதி.

 

“டேய்… என்னடா உன் பிரச்சினை? உங்கம்மாதான் உன்ன சாப்ட சொன்னால? போய் நல்லா கொட்டிக்கோ போ.” என உள்ளே கை நீட்டினாள் கோபத்தோடு.

 

“அறைஞ்சேன்னா…” என அவளை அடிப்பது போல் சைகை செய்தவாறு

 

“என்ன நினைச்சிட்டு இருக்க நீ உன் மனசுல? அவங்களும் நானும் ஒன்னா? அவங்க கூட சேத்து வெச்சி பேசுற? நீ என்ன சொன்னாலும் நான் உன் கூடவே இருப்பேன். என்னால இவ்ளோதான் சொல்ல முடியும். பேசாம மூடிட்டு வா…” எனக் கூறி முன்னோக்கிச் சென்றான்.

 

அவளுடனே புகையிரத நிலையத்திற்கு புறப்பட ஆதி அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்து அவளை புகையிரதத்தில் ஏற்றி விட்டான். பின்தான் அவளுக்கு தண்ணீர்ப் போத்தல் வாங்கிக் கொடுக்க மறந்துவிட்டது ஞாபகம் வர வேகமாக ஓடிச் சென்று தண்ணீர் போத்தல்களை வாங்கிக் கொண்டு வருவதற்கிடையில் புகையிரதம் புறப்பட்டு விட்டது.

 

அவன் காவ்யாவின் பெட்டியை பிடிக்க ஓடிக்கொண்டிருந்தான். அப்பொழுதுதான் அவசரத்தில் எதிரில் வந்த 17 வயது பெண் ஒருத்தியின் மீது மோத இவன் மோதியதில் அவள் தன் புத்தகங்களைத் தவர விட்டாள்.

 

கீழே குனிந்து அவள் அனைத்தையும் பத்திரமாக எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தாள். மறுபக்கம் அவளது துப்பட்டா அவள் கீழ் வதனத்தை மறைத்து அழகிய விழிகளை மட்டும் காட்ட ஆதிதான் அவள் விழிகளின் அழகில் மதிமயங்கிப் போனான்.

 

நொடியில் கல்லாக மாறிக் கொண்டான். அந்தப் பெண் புகையிரதத்தை தொலைத்து விடுவோம் என்ற அச்சத்தில் அவசர அவசரமாக அவனைத் தாண்டி ஓடும்போது அவளுடைய புத்தகமொன்றை அவனிடம் விட்டுச் சென்றுவிட்டாள். அவள் விழிகளின் அழகில் தன்னை மறந்தவன் புகையிரத ஹோர்ன் சத்தத்தில் மெய்யுலகம் திரும்பினான்.

 

அருகில் அவள் விட்டுச் சென்ற புத்தகம் கிடக்க அதை எடுத்து அவளது தகவல்களை ஆராய்ந்தவனுக்கு முன் பக்கத்தில் AVSV என்ற எழுத்துக்கள் எழுதி இருக்க உள்ளே புரட்டிப் பார்த்தான். ஒரு மயிலிறகும் ரோஜாப் பூவொன்றும் இருந்தது.

 

இரண்டு நாட்களின் பின்பு காவ்யா தன் பரீட்சையை கச்சிதமாக முடித்துக் கொண்டு ஊர் வந்து சேர்ந்திட புகையிரத நிலையத்தில் ஆதியைக் காணவில்லை.

 

“என்ன நடந்தது இவனுக்கு?” என்று வழி முழுக்க யோசித்தவாறே வீடு வந்து சேர்ந்தாள் காவ்யா. யாரும் அவளிடம் முகம் கொடுக்கவில்லை. அதனால் அவளும் முறுக்கிக் கொண்டு ஆதியின் அறையில் எட்டிப் பார்த்தாள். அவன்  படுத்துக் கொண்டு அந்த புத்தகத்தினுள் இருந்த மயிலிறகை பார்த்தவாறு

 

“யார் நீ? ஒரே நாள்ள எனக்குள்ள இவ்ளோ சேஞ்ஜஸ் கொண்டு வந்துட்ட. எனக்கு இது பிடிக்கல. இருந்தாலும் மனசு அத ஏத்துக்க சொல்லுது. ஏன்? ஒரு வேளை லவ்வா? அதெப்படி ஒரே நாள் தான் பாத்திருக்கேன். அதுவும் அந்த கண்ண மட்டும்தான். ஆனால் டெய்லி கனவுல வர? இந்த ரெண்டு நாளும் நீ என் தூக்கத்தை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிட்ட.” என்றான் அம் மயிலிறகை காதலாகப் பார்த்து.

 

இவன் செய்கைகளைக் கவனித்தவளோ “அடப்பாவி இரண்டே நாள்ள இவ்ளோ நடந்திருக்கா?” என வாயில் கையை வைத்துக் கூறியவள்

 

“ஓஹோ…” என சத்தமாக கத்த அதில் திடுக்கிட்டவன் புத்தகத்தினுள் மயிலிறகை அவசர அவசரமாக வைத்து அதனை எடுத்து தலையணையினுள் ஒளித்து பேச்சைத் திருப்பும் வகையில்

 

“ஹேய்… எப்ப வந்த காவ்யா?” என இழித்தான்.

 

“ச்சீ… த்தூ… டேய்… போதும்டா ரொம்ப கேவலமா சமாளிக்காத. மரியாதையா அந்த புக்க கொடுத்துடு. இல்லன்னா கொன்றுவேன்.” என தலையணையைப் பிடித்து இழுத்தாள்.

 

“எந்த புக்? அதெல்லாம் ஒன்னும் இல்லயே.” என அவனோ தலையை சொரிய ஒரே இழுவில் புத்தகம் காவ்யாவின் கையில் வந்து விட்டது.

 

அதை எடுத்துக் கொண்டு வெளியில் ஓடியவளை அவன் துரத்திக்கொண்டு “மரியாதையா அந்த புக்க கொடுத்துடு காவ்யா. கைல மாட்டின செத்தடி நீ.” என்று கூறி கத்திக் கொண்டே போனான். அவள் அதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் அங்கேயும் இங்கேயும் ஓடிக் கொண்டிருந்தாள்.

 

ஒரு கட்டத்தில் கால் தடுக்கி கீழே விழ “மாட்னியா?” என அவன் அவளைப் பிடித்துவிட்டு புத்தகத்தை அவளிடம் இருந்து பிடுங்கிக் கொண்டான்.

 

அப்போது சரிய்க வீட்டிற்குள் விக்ரம் நுழைய “டேய்… அண்ணா. ஆதிய பிடிடா…” எனக் கத்த விக்ரம் பாய்ந்து  பின்னால் இருந்து ஆதியை பிடித்துக் கொள்ள காவ்யா ஓடிவந்து அந்தப் புத்தகத்தை பறித்துக் கொண்டாள்.

 

“டேய்… அண்ணா நீயுமா கூட்டு சேர்ந்துட்ட?” என்று திமிரியவாறித் தள்ளி விட்டு அங்கிருந்து ஓடினான்.

 

“நான் எப்போவுமே காவ்யாவோட கட்சிதான்டா…” என்றவாறு மூன்று பேரும் வீட்டை கந்தல் செய்து கொண்டிருந்தனர்.

 

“ஆரம்பிச்சிட்டாளா? வயசுதான் இருபது. இவளோட நடவடிக்கைய பாத்தா சின்ன குழந்தை பண்றது மாதிரில்ல இருக்கு. எல்லாம் தலையெழுத்து.” என மகாலக்ஷ்மி தலையில் அடித்துக் கொள்ள  இறுதியாக விக்ரம் ஆதியைப் பின்னால் இருந்து பிடித்துக் கொள்ள காவ்யா புத்தகத்தை விரித்து சோதித்தாள்.

 

“டேய்… அண்ணா மரியாதையா விட்ருடா. இல்லன்னா கொன்னுடுவேன்.” என்று கத்தினான்.

 

“ஹேய். காவ்யா அத பாக்காதடீடீடீ… என் கையால செம்மயா அடி வாங்கப் போற நீ.” என மாறி மாறி கூறியவாறு விக்ரமின் கைகளில் இருந்து விடுபட முயற்சித்தான் ஆதி.

 

“சீக்கிரமா பாரு காவ்யா. இவன என்னால ரொம்ப நேரமா பிடிச்சு வெச்சிருக்க முடியாது.” என அவன் இடை தாங்க முடியாமல் பல்லைக் கடித்துக் கொண்டு விக்ரம் கூற அவள் புத்தகத்தை விரித்துப் பார்த்துவிட்டு வாயைப் பிளந்தாள்.

 

“என்னாச்சு காவ்யா?” என ஆதியை விட்டு விட்டு அவளிடம் வந்தான் விக்ரம். புத்தகத்தினுள் இருந்தது ஒரு ரோஜாப் பூவும் மயிலிறகும்.

 

“டேய்… இதுக்காடா இவ்ளோ பில்ட் அப்? நான் ஏதோ அவ போட்டோ ஏதாவது இருக்கும்னு நினைச்சேன்.” என சலித்துக் கொண்டாள்.

 

“நானே அவ முகத்தை பாத்ததில்லை. இதுக்குள்ள அவ போட்டோவ எஙக் இருந்து எடுக்குறது?” என்று இழுத்தவாறே தலையை சொரிந்தான்.

 

“அடச் ச்சீ… தூ…” என எச்சில் வராதவாறு அவனைப் பாத்து காவ்யா துப்ப

 

“நாங்க துப்பினாலும் துடைச்சிப்போம்.'” என்று அசடு வழிந்தான்.

 

அப்போதுதான் பாடசாலை முடிந்து வீட்டிற்கு வந்தாள் பல்லவி. பல்லவியை சீண்ட நினைத்த காவ்யா “இப்போ பாரு சீன.” என்று ஆதியின் காதினுள் கூறியவள்

 

சத்தமாக “ஹா… ஆதி… உனக்கு இந்த பொண்ண பிடிச்சிருந்தா நீ கவலப்படாத. யாரு வந்து தடுத்தாலும் அவளையே உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன். பாட்டி வந்தாலும் சரி. அந்த கடவுளே வந்தாலும் சரி. இந்த சொந்தம் விட்டுப் போயிடக் கூடாதுன்னு கல்யாணம் பண்ற கதையெல்லாம் இங்க பேசவே கூடாது. உனக்கு அவதான் பொண்டாட்டி. சரியா?” என்றாள் குத்தலாக.

 

பல்லவியை பார்க்க ஆதிக்கு பாவமாக இருந்தது. “ஏன் காவ்யா தேவையில்லாம வம்பு பண்ற? பாவம் அவ. சின்ன வயசுல இருந்தே என்ன கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைச்சிட்டு இருக்கா. சின்னப் பொண்ணு வேற.” என்றான் மெதுவாக.

 

“அதெல்லாம் எங்களுக்கூம் தெரியும். நான் சொல்றத மட்டும் செய். இப்போ நீ என்ன பண்றன்னா… சரி காவ்யா. நீ சொல்ற பொண்ணதான் நான் கட்டிப்பேன். நீ காட்ற பொண்ணோட கழுத்துலதான் தாலி கட்டுவேன். வேற எந்த பொண்ணையும் பார்க்க மாட்டேன்னு சத்தமா உள்ள இருக்குற பாட்டி காதுல விழுற மாதிரி சொல்ற. புரிதா?” என கேட்க அவன் திருட்டு முழி முழித்தான்.

 

“புரிதா?” என காலை எட்டி மிதித்தாள்.

 

அதில் “ஐய்யோ அம்மா…” என வலியில் முகம் சுருக்கி கத்தியவன்

 

“சரி சரி… சொல்றேன்…” என்று அவள் சொல்லிக் கொடுத்ததை அச்சு பிசுகாமல் அப்படியே சொல்லி விட்டான்.

 

அதில் மனம் உடைந்து போன பல்லவி அழுது கொண்டே உள்ளே ஓட இதைக் காதில் கேட்ட பாட்டி கோபமாகி விட்டார்.

 

“என்னடி? நீ திமிரு பிடிச்சு பெத்தவங்க சொல் பேச்சு கேட்டு நடக்காத மாதிரி அவனையும் நடக்க சொல்றீயா? நான் சொன்னது சொன்னதுதான். கார்த்திக்கோட பொண்டாட்டி என் பேத்தி பல்லவிதான். இது நடக்க யாரு தடையா வந்து நின்னாலும் நான் மனிசியாவே இருக்க மாட்டேன்.” என்றார் எச்சரித்து.

 

“வாவ் பாட்டி… வாவ்… நீ  நினைக்கிறது நடக்கலன்னா கோபம் வருதுல்ல? அதே மாதிரிதான் எனக்கும்… நான் நினைக்கிறது நடக்கனும். எனக்கும் சத்யாவுக்கும்  கல்யாணம் நடக்கனும். என் ஹஸ்பன்ட் சத்யாதான். அவ்ளோதான் நான் சொல்லுவேன்.” என்று விட்டு உள்ளே நகர

 

“நில்லுடி… என்ன சொன்ன? உனக்கே இவ்ளோ திமிரு இருந்தா உன் பாட்டி எனக்கு எவ்ளோ திமிரு இருக்கணும்? எப்படி உனக்கும் அவனுக்கும் கல்யாணம் நடக்குதுன்னு நானும் பாத்துர்ரேன். நான் காட்ற மாப்பிள்ளைக்கும் உனக்கும் தான் கல்யாணம் நடக்கும். அப்படி நடக்கலன்னா… இல்லை நடத்தி காட்றேன். நாளையன்னைக்கு அடுத்தன்னே உனக்கும் நான் பாத்து வெச்ச மாப்பிள்ளைக்கும் நிச்சயம்.” என்றிட காவ்யா அதிர்ந்து வெற்றுப் புன்னகை சிந்தியவள்

 

“முடிஞ்சா சத்யாவத் தான்டி… இந்தக் கல்யாணத்தை பண்ணிக் காட்டு பாட்டி.” என்றுவிட்டு சென்றாள்.

 

காவ்யா உள்ளே அமர்ந்து ஆழ்ந்த யோசனையில் மூழ்கி இருந்தாள். “இந்த விசயத்தை எப்படியாவது சத்யாக்கிட்ட சொல்லனும். ஆனா… நேத்து தான் ரொம்ப பெரிய பிரச்சனை நடந்துடுச்சு. இதுக்குள்ள அவனுக்கு போன் பண்ணி விசயத்தை சொல்ல ஒரு மாதிரியா இருக்கே. அப்போ ஆதிக்கிட்ட சொல்ல சொல்லிடலாமா?” என யோசித்தவாறு அவன் அறையை நோக்கிச் சென்று விடயத்தைக் கூறிவிட்டாள்.

 

அவனும் “சரி… நான் போய் மாமாக்கிட்ட சொல்லிர்ரேன்.” என்று விட்டு சத்யாவின் வீட்டுக்குப் புறப்பட்டான்.

 

இங்கோ சத்யாவின் அப்பா வாசுதேவராம் கொலை செய்யப்பட்டு இறந்துவிட்டார். சத்யாவுக்கு அவரது மரணம் அதிர்ச்சியாகவும் நம்ப முடியாமலும் இருக்க கொலை வெறியுடன் அமர்ந்திருந்தவனின் நெஞ்சில் குருதித் துளிகள் ஒட்டியிருக்க கண்கள் சிவந்து போய் மண்டபத்தில் கால்கள் இரண்டையும் மடித்து வெறியோடு அமர்ந்திருந்தான். இது எதுவும் தெரியாத ஆதி அவனது வீட்டிற்குத்தான் சென்றான். அவன் வீட்டில் கூட்டம் கூடியிருக்க என்னவென்று பார்த்தவாறே உள்ளே அவசரமாக நுழைந்தான் ஆதி.

 

காவ்யாவுக்கு அவசரமாக அழைப்பு விடுத்த நித்யா “இன்னைக்கு நிவ்ஸ் பாத்தியாடி?” எனக் கேட்க

 

“இல்லடி. ஏன்?” எனறாள் புரியாமல் விழித்தவாறே.

 

“முதல்ல போய் நிவ்ஸ் பாரு.” என்றதும் உடனே தொலைக்காட்சியில் செய்தியை பார்வையிட்டாள்.

 

“பிரபல வைத்தியரும் விஜயேந்திரா மத்திய பல்கலைக்கழக அதிபருமாமான டொக்டர். ஆர். வாசுதேவராம் இன்று காலை அடையாளம் தெரியாத நபர்களால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக இன்று விஜயேந்திரா நகரம் முழுவதுமாக கண்ணீர் அஞ்சலியும் அவரது மரணத்துக்காக நீதி வேண்டியும் போராட்டங்கள் பல்கலைக்கழக மாணவர்களால் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் அவர் கடந்த ஆண்டு வெளிநாடு சென்று நேற்று நாடு திரும்பியுள்ளதாக இருக்கும் நிலையில் அவரது திடீர் மரணம் அதிக சந்தேகத்தை ஏற்படித்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து வாசுதேவராமின் புதல்வன் சத்ய ராமிடம் பொலீஸார் விசாரணை நடத்துகையில் இந்த வழக்கை மேற்கொண்டு எடுத்துச் செல்ல வேண்டாம் எனவும் முற்றாக இந்த வழக்கை மூடுமாறும் தெரிவித்

திருப்பது ஆச்சரியத்தை உண்டாக்கி வருகிறது. ஆனால் அவரின் இந்த திடீர் முடிவினால் அனைவர் மத்தியிலும் பல குழப்பங்களும் கேள்விகளும் எழுந்துள்ளன.” என செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

 

தொடரும்…

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!