காலையில் எல்லோரும் சேர்ந்து காப்பி குடித்துக் கொண்டு இருக்கும் போது, கதிர், “ஆமா எங்க அண்ணனையும், கேசவன் அப்பாவையும் காணோம்” என்று கேட்டான். அங்கு தேவச்சந்திரன் ராமச்சந்திரனை அழைத்துக் கொண்டு வர, அவருக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து வந்தனர். குணவதி இருவருக்கும் காப்பி போட்டு எடுத்து வந்து குடுக்க, அதைக் குடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தனர். அதிலிருந்து காளையனும் கேசவனும் உள்ளே வந்தனர். எங்க போயிருந்தீங்க என்ற மோனிஷாவின் கேள்வி பதில் சொல்லாமல் இருவரும் சிரித்தனர்.
காளையன் “பொறுமை, பொறுமை. மலர் என்கூட வா” என்றான். “எங்க? எதுக்கு? ” என்று கேள்வி கேட்டாள். அதற்கு அவன் சிரித்துக் கொண்டு கையை பிடித்து வெளியே கார் அருகில் அழைத்து வந்தான், மற்றவர்களும் என்னவென்று பார்க்க வெளியே வந்தனர். காளையன் மலர்னிகாவிடம், “அம்மணி நீங்க எங்கிட்ட இதுவரைக்கும் எந்த பொருளோ, எதுவுமே கேட்டதில்லை. எங்கிட்ட நீங்க கேட்ட முதல் விசயம், அதை நான் உங்களுக்கு குடுக்க முடியாதுனு எவ்வளவு தவிச்சேன்னு எனக்குத்தான் தெரியும்.
ஆனால் அதை இப்போ உங்களுக்கு தரமுடியும்னு நினைக்கிறப்போ, நெஞ்சே வெடிக்கிறளவு சந்தோசமா இருக்கு. ” என்றான். மலர்னிகாவிற்கு எதுவோ புரிவது போல இருக்க கண்ணீருடன் அவனைப் பார்க்க, அவனும் கண்களில் கண்ணீருடன் தலையசைத்தான். காரின் கதவை திறந்தான். மலர்னிகா நடுக்கத்துடன் காளையன் கைகளை பிடித்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டாள்.
காரில் இருந்து இறங்கினார் இத்தனை நாள் காளையனிடம் மலர்னிகா கேட்டுக் கொண்டு இருந்த இனியரூபன். அவரை பார்த்ததும் அனைவரும் வாயடைத்து நின்றனர். துர்க்கா மெல்ல நடந்து அவர் அருகில் வந்தார். தன் கைகளைப் பிடித்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டு நின்றவளிடம் குனிந்து, “அம்மணி கண்ணை திறந்து பாருங்க யாருனு” என்று சொல்ல, மெல்ல கண்களை திறந்து பார்க்க அவளின் தந்தை சிரித்துக் கொண்டு நின்றிருந்தார்.
துர்க்கா அவரை அணைத்துக் கொண்டு அழுதார். மலர்னிகாவும் அவரை அணைத்துக் கொண்டு அழுதாள். இதைப் பார்த்த அனைவர் கண்களும் நிறைந்தன. பின்னர் இனியரூபனுக்கும் ஆர்த்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றனர். கேசவன் என்னதான் இருந்தாலும் தன்னோட உயிர் நண்பனான இனியரூபனை கொலை செய்ய விரும்பவில்லை. அதனால் அவரை வீட்டின் கீழே உள்ள அறையில் அடைத்து வைத்திருந்தார். நேரத்துக்கு சாப்பாடு என்று அவருக்கு குறையில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.
காலையில் காளையனுடன் சென்று அவரை இங்கே அழைத்து வந்தார். அப்படியே மலர்னிகாவின் சொத்துக்களை மீண்டும் அவள் பேரில் மாற்றி எழுதி அதை அவளிடம் குடுக்க, அவள் அதை வாங்கவில்லை. அவள் ஊருக்கு செல்ல விரும்புவதாக கூற, காளையன் அதை மறுத்து அவள் பிஸ்னஸ் செய்ய வேண்டும் என்று கூறினான், அதன் பின்னரே அவள் சம்மதித்தாள்.
இனியரூபன் உயிருடன் வந்தது அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. இரண்டு நாட்கள் சென்னையில் இருந்து விட்டு அனைவரும் தேன்சோலையூர் சென்றனர். அங்கிருந்த மாரியம்மன் கோயிலில் ஊர் மக்கள் மூக்கின் மீது விரல் வைக்கும் படி, காமாட்சி முகேஷ், ஹர்ஷா நிஷா, திருமணத்தை நடத்தி வைத்தனர். எல்லாம் நல்லபடியாக முடிந்தது.
அன்றிரவு காளையன் அணைப்பில் இருந்த மலர்னிகா காளையனிடம், “நீங்க எனக்கு எவ்வளவோ பண்ணியிருக்கிறீங்க, நான் உங்களுக்கு எதுவும் பண்ணலையே, உங்களுக்கு ஏதாவது குடுக்கணும் நினைக்கிறன். ஆனால் என்ன தர்றதுனு தெரியலை. உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க நான் தர்றேன்” என்றாள்.
காளையன் அவளிடம், “நான் உங்கிட்ட எதிர்பார்த்து எதுவும் பண்ணலை. ஆனால் எனக்கு உங்கிட்ட இருந்து ஒண்ணே ஒண்ணு மட்டும் வேணும் ” என்றான். அவளும் என்னவென்று கேட்க,” எனக்கு உன்னை மாதிரியே அப்பாமேல பாசம் வைக்கும் குட்டி மலர்னிகாவை பெத்துக் குடு “என்றான். அவளும் சரி என்றாள். அவன் அவளைப் பார்த்து சிரிக்க, அதன் பின்னரே அவன் கேட்டது புரிய அவனிடம் அடைக்கலமானாள். அவள் காதோரம் குனிந்து கேட்டதற்கு அவள் வெட்கத்துடன் தலையசைத்து பதிலளித்தாள். இருவரும் இணைய இல்லறம் நடந்தேறியது.
அடுத்த நாள் ஹர்ஷாவுடன் நிஷாவும் ஊட்டிக்கு செல்ல, நீலகண்டன் ஊரிலேயே இருந்து விட்டார். முகேஷ் காமாட்சி சென்னை சென்றனர். கேசவனும் மோனிஷா சபாபதியும் ஊரில் இருந்தனர். சபாபதி இங்கேயே ஒரு பிஸ்னஸை ஆரம்பிக்கப் போவதாக கூறிவிட்டான். காளையன் மலர்னிகா மும்பை சென்றனர்.
பழையபடி மலர்னிகா கம்பனியை பொறுப்பேற்றாள். காளையனை பிரியாத கதிர் அவர்களுடன் சென்று, மலர்னிகாவிற்கு பிஏ ஆனான். காளையன் இவர்களை காலையில் கம்பனியில் விட்டு மதியம் சாப்பாடு சமைத்துக் கொண்டு உணவை உண்ண வைத்து விட்டு, பின்னர் மாலையில் மீண்டும் வந்து அவர்களை அழைத்துச் சென்றான். ஹர்ஷாவும் மலர்னிகாவும் அவனை பிஸ்னஸில் பார்ட்னராக சொல்ல மறுத்து விட்டான்.
மனைவியின் வளர்ச்சியை பார்த்து பெருமை அடைந்தான். கணவன் வீட்டு வேலைகள் மட்டுமே செய்கிறான் என்று அவனை மலர்னிகா எப்போதும் தாழ்த்தி பார்த்ததே இல்லை. இருவரிடமும் எந்த தாழ்வுணர்சியும் வரவில்லை. காளையனும் மலர்னிகாவும் அழகிய மனமொத்த வாழ்க்கை ஒன்றை வாழ்ந்தனர்.
மலர்னிகாவின் திறமைக்கு சான்றாக அந்த வருடத்தின் சிறந்த பிஸ்னஸ்வுமன் விருது மலர்னிகாவிற்கு வழங்கப்பட்டது. மேடையில் மனைவி வாங்கும் விருதை கீழே இருந்து கண்களில் பெருமையுடன் கைதட்டியவாறு பார்த்துக் கொண்டு இருந்தான் காளையன். அவள் காளையனைப் பற்றி பேசிவிட்டு கீழே வந்து, விருதை அவனிடம் குடுத்து விட்டு, அவன் காலில் விழுந்தாள். பதறியபடி அவளை குனிந்து தூக்கிவிட்டவன் எதுவும் பேசவில்லை.
வீட்டிற்கு வந்ததும் அறைக்குச் சென்றவன், குளித்துவிட்டு கோபத்துடன் வந்து பால்கனியில் நின்றான். மலர்னிகா வந்து என்னவென்று கேட்க, “எதுக்கு அம்மணி அத்தனை பேரு முன்னிலையில என்னோட கால்ல விழுந்தீங்க? உங்களை எல்லோரும் புகழ்ந்து பேசும்போது என்னோட கால்ல நீங்க விழலாமா?” என்றான்.
அவளும் சிரித்துக் கொண்டு, “நான் என்னோட புருஷன் கால்லதான் விழுந்தேன். நான் இப்படி உயர்ந்த இடத்தில இருக்க, என்னோட புருஷன்தானே காரணம். அதுதான். எத்தனை பேருக்கு உன்னை மாதிரி புருஷன் கிடைப்பாங்க. எனக்கு கிடைச்சிருக்கு. அதுக்கு நான் நன்றி சொல்ல வேண்டாமா?” என்று கண்கலங்கியவளை இழுத்து அணைத்து முத்தம் வைத்தான். அவளும் அவன் முத்தத்தில் உருகி நின்றாள்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
Supero super divima