நால்வரும் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார்கள்… இனி என்ன செய்வது…. மொத்த அலுவலகமும் காலி…. கோடீஸ்வர பிள்ளைகள் என்றால் இதற்கெல்லாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை…. இவர்களோ குடும்பத்தை காப்பாற்ற ஏதோ கடனை கிடனை வாங்கி அலுவலகத்தை தயார் செய்திருந்தார்கள்… இன்னும் பாதி கடன் முடியக் கூட இல்லை… அதற்குள் அடித்து உடைத்து விட்டு சென்று விட்டான்…..
சம்பவம் நடந்து இரண்டு நாள் ஆகி விட்டது…. இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் விழி பிதுங்கி யோசனையாகவே இருந்தார்கள்….
“பேசாம கம்ப்ளைன்ட் பைல் பண்ணலாம்…. நஷ்ட ஈடாச்சும் கிடைக்கும்ல….” முகத்தில் டன் கணக்கு சோகம் அப்பிக் கிடந்த ஆவன்யன் கேட்க…
“அட நீ வேற ஏன்டா… கேஸ் இழுத்து முடிறதுக்கே பல வருஷம் ஆகி போகும்… அதுக்குள்ள கடன்காரனுக நம்ம மேல கேஸ் போட்ருவானுங்க…..” குடும்பஸ்தனவனுக்கு மீதி மூவரை விட படும் கவலை…. குடும்பத்தை பார்த்துக் கொள்வதே இதில் வந்த வருமானத்தில்தான்….
“இத சரி பண்ண ரொம்ப செலவாகும் போல… என்னதான் பண்றது….” மாறி மாறி மூவரும் புலம்பிக் கொண்டிருக்க மிரா மட்டும் அமைதியாக இருந்தாள்… அவளுக்கும் பலத்த யோசனைதான்….
அப்போது வெளியே கார் நிற்கும் சத்தம் கேட்டது…. பழக்கப்பட்ட சத்தம்தான்…
நால்வருக்கே யார் வந்திருக்கிறார்கள் என்று புரிந்து விட…
“காய்ஸ் எதுவும் பேசாதீங்க… நான் பேசிக்குறேன்….” சட்டென மிராவிடமிருந்து ஒரு கட்டளை வந்தது…. அவள் ஒரு வார்த்தை சொல்லி விட்டால் அப்படியே கேட்டு நடப்பார்கள்… மறு பேச்சு இல்லை….
உள்ளே நுழைந்தார்கள் இருவரும்…. வைஷாவின் முகமோ அந்த இடத்தை பார்த்து குற்றவுணர்ச்சியில் வாடியது…. தரணியும் அதே பாவனையில்தான் அவர்களை பார்த்தான்…
“உக்காருங்க….” அவள் இருக்கையை காட்ட மற்றவர்கள் இருவரையும் முறைத்து வைத்தார்கள்….
“ஆக்சுவலி சாரி…. நான் எதுவும் வேணும்னு பண்ணல….” சொன்னவனின் முகத்தை கூர்ந்து பார்த்தாள்… அதில் உண்மையான வருத்தம் தெரிந்தது…. இன்று வரை அவனைக் கண்ட நேரமெல்லாம் ஆச்சர்யபட வைப்பது அது ஒன்றுதான்…. பல பேரின் போலி முகங்களைக் கண்டவளுக்கு அவனின் முகத்தில் பிரதிபலிக்கும் உணர்வுகள் மொத்தமும் நூறு வீத உண்மையாகவே இருந்தது….
அவனின் காதல், கோபம், அழுகை, இதோ இப்போது காணும் வருத்தம் எதிலுமே சிறு துளி கூட பொய்யில்லை….
“ரொம்ப கோபமா இருப்பீங்கன்னு புரியுது… ரியலி சாரி…. இத எல்லாத்தையும் நாங்களே சரி பண்ணி கொடுத்துர்றோம்….” தரணி சொல்ல ப்ரன்ட்ஸ் என்ட் கோ முகத்தில் அப்பட்டமான நிம்மதி…
“உப்ப்ப்….”
“அப்பாடா.…” அதை வெளிப்படையாகவே அவர்கள் வெளிப்படுத்த அதைக் கண்ட வைஷாவின் இதழில் சிறு புன்னகை….
“உங்களுக்கு வேணாம்னா நாங்க கம்பல் பண்ணல….” வேண்டுமென்றே அவர்களை வம்பிழுக்க தோன்றியது அவனுக்கு…
“இல்ல… இல்ல…. எங்களுக்கு ஒகேதான்….”கோரஸாக குரல் ஒலிக்க மிராதான் மூவரையும் முறைத்து வைத்தாள்…. அட காசுக்கு செத்தவங்களா என்று அவளோ மைன்ட் வாய்சில் திட்ட ஈ என்று இளித்து வைத்தார்கள்…..
“உங்க மேல கேஸ் கொடுக்கத்தான் நெனச்சோம்… ஆனா நீங்களே பெருந்தன்மையா வந்து சாரி கேக்குறதால கொஞ்சம் கன்சிடர் பண்றோம்….” அவள் ஏதோ பாவம் பார்த்து விடுவது போல் பேச வைஷாவின் பார்வையோ அப்டியா என்பது போல் வினவியது….
“ரொம்ப தேங்க்ஸ்ங்க….” தரணி மனதாரா சொல்ல…
“ஆனா எனக்கு நீங்க ஒரு பேவர் பண்ணனும்…..” மேசையில் மீதமாய் கிடந்த பேப்பர் வைட்டை உருட்டிக் கொண்டே வைஷா ஒரு கன்டிஷனை போட மொத்த பேரும் என்ன என்பது போல் அவனின் முகத்தையே பார்த்திருந்தார்கள்…
“கடைசியா நான் கொடுத்த ப்ராஜக்ட பண்ணி தரனும்…. அப்டினா இந்த மொத்த ஆபிஸையும் நீங்க கற்பன கூட பண்ணி பாக்க முடியாத அளவுக்கு கூட நின்னு பக்காவா மாத்தி தாறேன்….” உறுதியாய் அவன் சொல்ல…
“அடிச்சதுடா ஜாக்பாட்….” ஆவன்யன் வாய்விட்டே கத்தி விட்டான்….
“எங்களுக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்ல நாங்க பண்ணி தாறோம் சார்….” பாஸ் என்ன பாஸ்…. அவள் கிடக்கட்டும் என்று தீப்தியே உறுதி கொடுத்து விட பெருமூச்சொன்றை இழுத்து விட்டாள் மிரா… அவளுக்கே தெரியும்…. இந்த இடத்தை அவர்கள் நினைத்தது போல் மாற்றுவது எத்தனை கடினம் என்று… அவர்களின் பெரிய கனவே அதுவாகத்தான் இருந்தது… இப்போது அதுவே கை கூடி வர இல்லையென்று மறுக்க அவளுக்கும் தோன்றவில்லை…
“மிரா நீ என்ன நினைக்குற…” யுகன் ஒருவன்தான் அவளின் மனநிலையை அறிய விரும்பினான்…. அதன் பின்தான் மற்ற இருவருக்கும் அவர்கள் அவசரப்பட்டது புரிய பாவமாய் அவளை பார்த்து வைத்தனர்…
அவளோ மூவரையும் பார்த்து மென்னகையை படர விட…
“யாஹூ…”
“ஹூர்ரே….” நண்பர்கள் மூவரும் உற்சாகத்தில் துள்ளி குதித்தார்கள்…
“இதோ பொண்ணோட போட்டோ… இரண்டு நாள்ல அதே பீச்….” புகைப்படத்தை நீட்டியவன்…
“நாளைக்கு காலைல இங்க ரெடி பண்ண ஆள் வருவாங்க… நீங்க உங்களுக்கு என்ன வேணும் எப்டி வேணும்னு சொல்லிடுங்க… அவங்க பாத்துப்பாங்க.. இந்த விஷயமா தரணி டீல் பண்ணுவான்… நானும் அடிக்கடி வந்து பாத்துக்குறேன்….”அவர்களுக்கு தேவையானதையும் அவன் சொல்லி செல்ல தரணியும் விடைபெற்று சென்றான்….
நண்பர்களுக்கு சந்தோஷம் தாளவில்லை…. அந்த இடத்திற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என உனடியாய் திட்டம் தீட்ட தொடங்கி விட்டனர்….
“இரண்டு லப்டப்…”
“இங்க பெருசா ஒரு ப்ரொஜக்டர்…. இந்த ஜன்னல் திரய கூட மாத்தனும்….”
“முன்னால நேம் போர்ட்ட கூட மாத்தனும்டா….”
மூவரையும் கண்டு நிறைவாய் புன்னகைத்தாள் மிரா…
********************
“ஹாய் டார்லிங்..….” பப்பில் அவன் அருகில் வந்தமர்ந்தாள் செல்ல மொழி பேசும் நவநாகரிகப் பெண்…. அவள் கை தன் தோளில் பட்டதும் கொஞ்சமாய் விலகி அமர்ந்து கொண்டான் வைஷாகன்…. அடிக்கடி பெண்ணை மாற்றுவான்தான்…. அதற்காய் அவன் பெண் பித்தன் ஒன்றும் இல்லை…
“வை…. பிடிக்கலயா….” அவன் தள்ளி அமர்ந்ததும் அந்த பெண்ணின் முகம் லேசாய் கறுத்து போனது…. பார்த்தவுடன் கண்ணை கவரும் அளவிற்கு மேக்கைப்பை அள்ளி பூசி இருந்தாலும் அவளும் அழகுதான்… அவளின் உடல் நளினங்களே ஆண்களை மயக்க வைக்கும் வல்லமை கொண்டது…..
“நாட் இன்ட்ரஸ்டட்...” இயல்பாய் சொன்னவன் அங்கிருந்து எழுந்து சென்று விட…
“யூஸ்லெஸ்…..” மென்மையாய் சிரித்துக் கொண்டாள் அவள்…
“யாருடி யூஸ்லெஸ்… நீதான் யூஸ்லெஸ்…. நான்தான் சொன்னேன்ல…. ஹி இஸ் எ ஜென்ட்டில் மேன்….” பெருமையாய் ஒருத்தியின் குரல் ஒலித்தது அருகில்…. அவளுடன் சேர்ந்து சில பெண்களும் வந்து நின்று அந்த மாடல் அழகியைப் பார்த்து சிரித்து வைத்தனர்…
“என்னம்மா மிஸ் பியூட்டி.. செம்ம பல்பு போல…”
“சரிடி… ஒத்துக்குறேன்… உன் ஆளு உத்தமன்தான்…. போதுமா.... ” உதட்டை சுழித்து அழகியவள் சொல்ல மற்றவளின் பார்வையோ கூட்டத்தோடு ஆடிக் கொண்டிருந்தவனை ரசனையாய் மொய்த்தது…
“சரி சைட் அடிச்சது போதும்… லவ்வ எப்ப சொல்ல போற….” தோழியொருத்தி தோளை இடிக்க…
“நே சான்ஸ்…. அவனே சொல்லட்டும்…. அதுவரைக்கும் வைட் பண்ணுவேன்…..”
“அதுக்குள்ள எவளாச்சும் கொத்திட்டு போக போறாளுக….” கலாய்த்து அனைவரும் சிரிக்க அதே நேரம் அவனின் பார்வை அவள் மீது மட்டும் காதலாய் ஈர்த்தது…..
அந்த கண்களில் கட்டுண்டுதான் போகிறாள் பேதையவள்….
அவன் பார்வையே ஆசை மொழி பேச இதை விடவும் வார்த்தைகளால் காதலை சொல்ல முடியுமா….
ஆனால் அது அவளுக்கு வேண்டுமாய்த்தான் இருந்தது….
வா என்று அவன் விழிகள் அழைக்க மந்திரத்திற்கு கட்டுண்டவள் போல் அவனை நோக்கி நடக்க….
“ஓ…ஹோ…..” நண்பர்கள் கூட்டமோ கேலி செய்து சிரித்தது…
அது எல்லாம் அவளின் காதில் விழவில்லை…..
அவனின் மந்திரத்திற்குள்ளே அடைபட்டு கொண்டாள்….
“ஷெல் வி டான்ஸ்...” முன்பே வந்து நின்றவளிடம் கையை நீட்ட மறுக்கு தோன்றுமா காதல் கொண்டவளின் மனதிற்கு….
கையைக் கொடுத்தவளைப் பற்றி ஒரு சுற்று சுற்றியவன் இடையைப் பற்றிக் கொள்ள அவள் உடலோ சிலிர்த்தெழுந்தது….
“நாளைக்கு ஈவினிங் ஏதும் ப்ளான் இருக்கா….” ஆடிக் கொண்டே அவள் காதோரம் கிசுகிசுக்க ஏதும் திட்டம் இருந்தாலும் இல்லையென்றுதானே சொல்வாள்….
“ம்ஹூம்….” தலை தானாக இடம் வலமாக ஆட..
“பீச் போலாமா மாதுரி….” ஆசையாய் அவன் கேட்க இந்த உலகத்திலேயே அவள் இல்லை…. அவனோடு மாய உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள்…
“ம்ம்….” சம்மதமாய் மெல்லிய குரல் மட்டுமே வெளியே வந்தது…..
அவனின் நீல நிற பார்வையில் விழாத மங்கைகள் யார்தான் இருக்கிறார்கள்….
காந்தமாய் ஈர்த்து அதில் சிக்க வைத்து விடும்….
தான் காதலை சொன்னால் அவள் சரியென சொல்வாள்தான்… அது அவனுக்கும் தெரியும்… ஆனால் என்னவோ அந்த பீச்சில் வைத்து சப்ரைஸாய் செய்வதே அவனுக்கு பழக்கமாகி விட்டது….
****************************
“வழமையான ப்ளான்தானே….” அலுத்துக் கொண்டே ஆவன்யன் கேட்க…
“இந்த வாட்டி ஏதாச்சும் டிபிரண்டா பண்ணலாம்னு யோசிக்கிறேன்….” மிரா சொல்ல அனைவரும் என்ன என்பது போல் பார்த்தனர்….
“நாம பண்ணி கொடுக்குறது எல்லாம் சக்ஸஸ் ஆகுறதாலதானே நம்மகிட்ட டெய்லி வாறாங்க… அதுவே இந்த தடவ பெயிலயிர் ஆயிட்டா….”
“இனி வர மாட்டான்….” ஆவன்யனுக்குத்தான் அதிக சந்தோஷம் அதில்… பின் சிங்கிளாய் இருப்பவனுக்கு அடிக்கடி பெண்ணை மாற்றும் வித்தையைக் கண்டால் கடுப்பாகாதா என்ன….
“பட் மிரா… அவங்க நம்ம ஆபிஸ ரெடி பண்ணி தாறேன்னு சொல்லிருக்காங்க…” கொஞ்சம் நியாயமாய் தீப்தி சொல்ல…
“ஏ… கம் ஆன் தீப்… அது அவங்க உடச்சத சரி பண்ணி தாராங்க… அதுவும் இதுவும் கணக்கு வேற….” ஆவன்யனின் பதிலுக்கு…
“எக்ஸாக்ட்லி….” மிராவும் ஒத்து ஓதினாள்…
“வேலைல நூறு வீத ப்ரொபசனலா இருக்குற மிஸ்.மிராயா ப்ரொஜக்ட்ட பெயிலியர் ஆக்க ட்ரை பண்றீங்க…. என்ன விஷயம்…..” யுகனின் தீவிரமான கேள்விக்கு மற்ற இருவரும் அலார்ட் ஆயினர்…
“அதானே….”
அந்த கேள்விதான் அவளுக்குள்ளும்…. ஏன் இந்த எண்ணம் தோன்றுகிறது என இரண்டு நாட்களாய் சிந்தித்து கொண்டிருக்கிறாள்…. ஆனால் அவள் ஆழ் மனம் இதை தோற்கச் செய் என்று ஆணித்தனமாய் நிற்கிறது…..
“நத்திங் சீரியஸ்…. ஏதோ தப்புக்கு துண போற மாதிரி இருக்கு…. எப்டியும் கொஞ்ச நாள்ல அடுத்த பொண்ண பாக்க போறாரு…. நாமளும் சேந்து பொண்ணுங்க வாழ்க்கைல எதுக்காக விளையாடனும்….”இதுதான் காரணமா என்று அவள் மனசாட்சியே அவளிடம் கேள்வி கேட்க அவளுக்கே அதற்கு பதில் சொல்ல தெரியவில்லை….
❤️❤️❤️தொடரும்❤️❤️❤️