இரவின் பிடியில் அந்த வைத்தியசாலை மயான அமைதியுடன் இருளில் புதைந்து காணப்பட்டது.
தலைமை வைத்திய அதிகாரி மிகவும் பதற்றத்துடன்,
“நர்ஸ் என்ன நடக்குது இங்க கரண்ட் போயிடுச்சா உடனே ஈபிக்கு கால் பண்ணி என்னன்னு பாக்க சொல்லுங்க..”
“ஆமா சார் திடீர்னு போயிடுச்சு இதோ சார் கால் பண்ணிட்டேன் இன்னும் 10 நிமிசத்துல வந்து பார்க்கிறேன்னு சொல்லி இருக்காங்க..”
“ஓகே பேசண்ட்ஸ் எல்லாம் பயப்பட போறாங்க சீக்கிரமா அவங்கள வந்து பார்க்க சொல்லுங்க..”
“ஓகே சார்..” என்றதும் தலைமை வைத்திய அதிகாரி வேகமாக அந்த அறையை விட்டு தனது பிரத்தியேக அறைக்குள் நுழைந்தார்.
அங்கோ ஒரு கருத்த உருவம் கால் மேல் கால் போட்டுக் கொண்டு இருக்கையில் சாய்ந்து அமர்ந்தபடி,
“என்ன விக்ரம் நீ கேட்ட பணம் இதோ இந்த பெட்டியில இருக்கு நான் கேட்ட விஷயத்தை முடிச்சிட்டியா..?”
அவ்விடத்தில் அவனை சற்றும் எதிர்பார்க்காத விக்ரமோ இருளில் அவனது கணீர் குரலை கேட்டதும் ஒரு நிமிடம் அதிர்ச்சி அலைகளுக்குள் சிக்கி மீண்டவன் அந்த உருவத்தைப் பார்த்து,
“நீங்க கேட்டது சின்ன விஷயம் இல்ல அதுல எவ்வளவு ரிஸ்க் இருக்கு தெரியுமா என்னோட டாக்டர் வாழ்க்கையே முடிஞ்சு போயிடும் ஆனாலும் உங்களுக்காக நான் இதை பண்ண சம்மதிச்சேன் ஆனா இன்னும் அதுக்கான நேரம் வரல கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..”
“விஷயத்தை முடிக்கிறேன்னு தான் பணம் கேட்ட இப்போ என்ன பின்வாங்குற நீ இல்லன்னா எனக்கு வேலை முடிக்க எத்தனையோ பேர் இருக்காங்க அது உனக்கும் நல்லாத் தெரியும்..” என்று உச்ச கோபத்தில் அந்த உருவம் மிரட்ட,
அந்நேரம் அந்த அறையின் கதவு தட்டப்பட்டது. விக்ரம் மெதுவாக கதவைத் திறக்க, நர்ஸ் கையில் குழந்தையுடன் நின்று கொண்டு இருந்தாள். உடனே கதவைத் திறந்து நர்ஸை உள்ளே அழைத்தார்.
உள்ளே வந்த நர்ஸ்,
“டாக்டர் நீங்க சொன்ன பேஷண்ட்க்கு குழந்தை பிறந்துடுச்சு இதோ பாருங்க..” என்று கூறியதும்,
உடனே குழந்தையை வேண்டி பார்த்துவிட்டு தனது பேன்ட் பாக்கெட்டுக்குள் இருந்து பணத்தினை கொத்தாக எடுத்து நர்சின் கையில் திணித்தவர்,
“நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்குல்ல இந்த விஷயம் யாருக்கும் தெரியக் கூடாது..”
“என்ன டாக்டர் கார்ட்டர்என் மேல நம்பிக்கை இல்லையா..?” என்று பணத்தைப் பார்த்து சிரித்தபடி கூறியவள்,
விக்ரம் பார்த்த பார்வையில் அவ்விடத்தை விட்டு உடனே சென்று விட்டாள்.
விக்ரம் அந்த உருவத்தை பார்த்து,
“இதோ நீங்க கேட்ட பொருள் வந்துடுச்சு..” என்றதும் அவன் புருவம் உயர்த்த,
“எல்லாம் நீங்க நினைச்ச மாதிரி பெண் குழந்தை தான்..” என்று விக்ரம் கூற,
“ஆஹா அப்படி போடு அருவாள என்னோட திட்டம் கூடிய சீக்கிரம் பழிச்சிடும்னு சொல்லு குழந்தையை தா நான் சீக்கிரமா கிளம்பனும்..” என்று அந்த உருவம் அதீத சந்தோஷத்தில் அங்கலாய்த்தது.
விக்ரம் குழந்தையை அவனது கையில் ஒப்படைக்க அவன் புயலாக அந்த நான்கு மாடி கட்டிடத்தில் இருந்து புயலாக வெளியேறி காரில் புறப்பட்டான்.
அன்று மலர்ந்த பூ போல இருந்த மழலையின் அழுகைக் குரல் ஏனோ அந்த அரக்கனின் காதில் எட்டவே இல்லை.
இவனது கீழ்த்தரமான செயலைப் பார்த்து வானமே திட்டி தூற்றுவது போல இடி மின்னல் முழங்க மழை பொழிந்தது.
எதிர்காலத்தில் இவனது பாவத்தின் சம்பளம் எதுவாக இருக்கும்..?
தாயையும் சேயையும் பிரிக்கும் அளவிற்கு பழிவெறி தோன்றக் காரணம் யாது..?
நாளை முதல் சிந்தையுள் சிதையும் தேனை சுவைத்திட நீங்கள் தயாரா..?