அத்தியாயம் – 9
சொன்னது போல் மதியமே வந்த திவாகர், மனைவியோடு உணவை முடித்த பின்னே உள்ள சென்றது தான், பொழுதாகியும் வெளி வராத காதல் தம்பதிகளை நினைக்க நினைக்க வெளியே இருந்த சோபாக்கு தான் வயிறு புகைய தொடங்கியது.
தான் மட்டும் இளவயதிலேயே கணவனை இழந்து, அவன் போன பின்னே சொந்தங்கள் மூலம் சொத்தை இழந்து, ஒற்றை பெண் பிள்ளையோடு இளமையை கடுமையாக எதிர்கொண்டு வேக, ஒன்றுமில்லாத குடும்பத்தில் இருந்து வசதியான அண்ணன் திவாகரை காதலித்து வெறும் கையாக ஓடி வந்தவளுக்கு, இவ்வளவு பெரிய செல்வாக்குமிக்க அழகான வாழ்க்கையா?
ஐம்பதை நெருங்கும் வேளையிலும் காதல் குறையாமல், இதயங்கள் கொண்ட அதே துடிப்பான பாசத்துடன் ஒருவரை ஒருவர் அரவணைத்துக்கொள்ளும் அந்யோண்யமும், குடும்பத்தின் மீதுகொள்ளும் அதீத அக்கறையும் சோபனாவின் கண்களுக்கு பொருக்கவே இல்லை.
போதா குறைக்கும் ஷர்மி வேறு சொல் பேச்சி கேளாமல் அடங்காமல் ஊர் சுற்ற, அந்த கோபம் கூட தேவையின்றி சரஸ்வதி குடும்பத்தின் மீது தான் பாய்ந்தது.
காலை பொழுதே அவள் வெளியே செல்லும் போது, கட்டாயம் மாலையே வீடு வர்ற வேண்டும் என சோபா கண்டிப்புடன் மிரட்டி இருக்க, மணி ஏழை தொட்டும் வராதிருக்கும் மகள் மீது கோபம் கொண்டவராக, இதோ அவளுக்கு தான் மீண்டும் அழைத்திருந்தார்.
“ஹெலோ எங்க டி இருக்க” எடுத்ததும் சோபாவின் குரல் கடுமையாகவே ஒலித்தது.
“பாய் பிரண்ட் கூட இருக்கேன் மம்மி..” முத்த சத்தங்களுக்கு இடையே வந்தது அவள் குரலும்.
அதில் முகம் சுளித்த சோபா, “அப்பன் இல்லாத பொண்ணு, சுதந்திரமா வளப்போம்னு விட்ட குத்தம் இப்டி பிஞ்சிலே சீரழிஞ்சி நிக்கிற.. உன் மாமாக்கு மட்டும் விஷயம் தெரிஞ்சிது உன்ன மட்டும் வீட்ட விட்டு துரத்தி விட மாட்டாரு, உன்ன இப்டி விளங்காம வளத்த என்னையும் சேர்த்தே அடிச்சி துரத்தி விட்டுடுவாரு..” எரிச்சலாக கத்த,
“இப்ப என்ன மம்மி உனக்கு பிரச்சனை, அதுதான் மாமா முன்னாடி நல்லா பொண்ணா இருக்கேன்ல.. இதுவரைக்கும் எம்மேல சந்தேகம் வந்த மாதிரி நடந்துகிட்டிருக்கேனா, இல்லைல.. அப்புறம் ஏன் பயப்படுற” அப்பக்கத்திலிருந்து அலட்சியமாக தான் உரைத்தாள் ஷர்மி.
“இதுவரைக்கும் வரல தான், ஆனா இனிமே தான் டி ஜாக்கிரதையா இருக்கணும்.. ரிஷிக்கு உன்ன கல்யாணம் பண்ணி வைக்கிற வரைக்கும் கொஞ்சம் அடக்க ஒடுக்கமா இருக்க கத்துக்கோ..”
“அதெல்லாம் நான் பாத்துக்குறேன் மம்மி, நீ உன் வேலைய மட்டும் பாரு”
“இப்டி உன் இஷ்டத்துக்கு எதிர்த்து பேச விட்டுட்டு தான், இப்ப நான் புலம்பிட்டு நிக்கிறேன் ஷர்மி..
இனிமே நீ பாய் பிரண்ட்ஸ் பப் அது இதுன்னு சுத்துற வேலையெல்லாம் வச்சிக்காத, இன்னும் பதினஞ்சி நிமிஷத்துல நீ வீட்டுக்கு வந்தாகனும்.. இல்ல, உன் மாமாட்ட உன்ன பத்தி பேச வேண்டியதா வரும்” மிகக் கடுமையாக சோபா உரைக்க, அப்பக்கம் செம்ம கடுப்பில் பற்களை கடித்தாள் ஷர்மி.
ஷர்மிக்கும் அவள் அன்னை போலவே வசதி வாய்ப்போடு சுதந்திரமாக வாழ தான் பேராசை. இளமை உள்ள வரை மகிழ்ச்சியாக உலகம் சுற்ற வேண்டும். ஆசைகொண்ட அனைத்தையும் வாங்கி குவிக்க வேண்டும். ஆடம்பரமான சொகுசு வாழ்க்கைக்கு அதிக பணம் வேண்டும்.
என்னதான் திவாகர் போதுமான அளவிற்கு பணம் கொடுத்தாலும், பாசத்தை கொடுத்தாலும், அதெல்லாம் வெறும் துரும்பாக தான் தெரிகிறது இருவருக்கும். பணத்தை தண்ணி போன்று செலவு செய்ய வேண்டும், எவ்வித இடைஞ்சலுமின்றி. அதற்கு ஒரே வழி தங்களை விரோதி போல பார்க்கும் ரிஷியை தான் திருமணம் செய்ய வேண்டும்.
விரசமில்லா சுடிதாரில் பார்ப்போர் கண்கள் குளிர்ந்து விடும் அளவிற்கு, அமைதி சுரூபினியாக உள்ளே வந்த ஷர்மியை அவள் தாயின் கண்களே எரிக்காத குறையாக பார்த்தன.
“என்ன மம்மி வரும்போதே ஆசையா பாக்குற..”
“ம்ம்.. உன்ன போல அடங்காத மாட்டை பெத்தேன்ல, அதான் எப்டினு பாக்குறேன்..”
“ஓஹ்.. உனக்கே அது தெரியாதா, சரி விடு மம்மி, இனிமே சொத்து நம்ம கைக்கு வர்ற வரைக்கும் நீ சொல்ற மாதிரி கேட்டு ஒழுங்கா இருக்கேன்” தாயை கேலி பேசினாலும், இனி அவர் சொல்வதை போல் கேட்டால் தான் சொத்து கைக்கு வரும் என்ற எண்ணத்தில் மெய்யாலுமே ஷர்மி சொல்ல, நம்பா பார்வை தான் சோபா பார்த்தார்.
“இன்னைக்கு இப்டி சொல்லிட்டு நாளைக்கே போயி கொட்டம் அடிக்க மாட்டியே..”
“நோ மம்மி நம்பு..” தாயின் கன்னத்தை கிள்ளிக் கொஞ்ச, இப்போது தான் சோபனா முகத்தில் நிம்மதி நிலவியது.
ஆயிரம் இருந்தாலும் மகள் வழிமாறி செல்கிறாள் என்றால் பெற்ற மனம் பரிதவிக்காதா! இதுநாள் வரை அதீத செல்லம் கொடுத்து கண்டிக்காமல் வளர்த்த தவறை, இனி செய்யக்கூடாது என்பதில் மட்டும் தெளிவாக இருந்தார் சோபனா.
இரவு உணவிற்கு மொத்த குடும்பமும் கூடி இருக்க, அண்ணன் எப்போது வாய் திறப்பார் என்ற ஆவலோடு அடிக்கடி திவாகரை பார்த்தார்.
அவரும் சோபனாவின் பார்வையினை உணர்ந்தாரோ!
“ரிஷி அப்பா உங்கிட்ட முக்கியமான விஷயம் பேசணுமே! பேசலாமா” என்றார் குரல் கனைப்போடு.
“சொல்லுங்க ப்பா”
“உனக்கும் ஷர்மிக்கும் கல்யாணம் பண்ணலாம்னு யோசிச்சு வச்சிருக்கோம், நீ என்ன சொல்ற” நேரடியாகவே விஷயத்திற்கு வந்துவிட்டார்.
“சாரி ப்பா, எனக்கு இதுல விருப்பம் இல்ல” இவனும் அனைவரின் காதிலும் உரக்க விழும் அளவிற்கு, நேரடியாகவே தன் பதிலை கூறி இருக்க, ஷர்மியின் முகம் கருத்து விட்டது.
“ஆனா ரிஷி ஷர்மி உன்ன தான் விரும்புறா, அவளுக்கு என்ன பதில் சொல்றது”
“நான் ஒன்னும் அவளை என்ன விரும்ப சொல்லலைனு சொல்லுங்க..”
“காமெடி பண்ற நேரமா இது, அவளை புரிஞ்சிக்கோ டா” எப்படியாவது அவனை சம்மதிக்க வைக்க முனைய,
“மாமா, நான் அத்தானை தான் என் மனசுல வச்சிருக்கேன், அவர் இல்லாத வாழ்க்கைய என்னால நினைச்சி கூட பாக்க முடியாது மாமா.. ஆனா அவர்க்கு தான் என்ன ஆகவே மாட்டேங்குது” கரிக்கும் கண்ணீரோடு தன் நாடகத்தை அரங்கேற்ற, கேலியாக பார்த்தான் அவளை.
“நீ அழாத ஷர்மி நான் பேசுறேன்” என்ற திவாகர், “இதுக்கு மேல ஒரு பொண்ணு எப்டி டா தன் விருப்பத்தை சொல்லுவா, அவளை கட்டிக்கோ ரிஷி” என்றவரை தடுத்தவனாக,
“உங்க தங்கச்சி பொண்ணு கண்ணீரை பாத்து பரிதாபப்பட்டு, பிடிக்காத லைஃப்குள்ள என்னால போக முடியாது ப்பா.. நீங்க லவ் மேரேஜ் பண்ணவர், சோ என் விருப்பத்துக்கு மதிப்பு கொடுப்பீங்கன்னு நம்புறேன்..
எனக்கு ஷர்மி மேல எந்த இண்டெர்ஸ்ட்டும் இல்ல, இதோட இந்த மேரேஜ் டாக்க நிப்பாட்டுங்க ப்பா..” கராராக சொன்ன ரிஷியிடம் மேற்கொண்டு பேச முடியாது தவித்தார் அவர்.
“என்ன அண்ணா அமைதியா இருக்கீங்க, அப்போ என் பொண்ணோட வாழ்க்கை, நீங்க கொடுக்க வாக்கு எல்லாமே அவ்வளவு தானா.. எனக்கும் என் பொண்ணுக்கும் நீங்க தாண்ணே எல்லாமே, இப்ப நீங்களே அமைதியா இருக்குறத பாத்தா, பயமா இருக்கு அண்ணா..” நெஞ்சை பிடித்துக்கொண்டு கண்ணீர் சிந்திய தங்கையை கண்டு, கலங்கி போனார் திவாகர்.
“உன் அத்தைக்காகவாது கொஞ்சம் யோசிச்சி முடிவெடு ரிஷி, ஷர்மிக்கு இன்னும் ஒரு வருஷம் படிப்பு இருக்கு, அதுவரைக்கும் உனக்கு டைம் வேணும்னா கூட எடுத்துக்கோடா.. அதுக்கு பிறகு கூட உன் முடிவை சொல்லு போதும்” கணவரின் பேச இயலாத நிலை கண்டு தவித்த சரஸ்வதி தான், இப்போது மகனிடம் பேசியது.
“ஓகே ம்மா, பட் எத்தனை வருஷம் போனாலும் என் முடிவு மாறாது.. பெஸ்ட் ஆப்ஷன் அவளுக்கு வேற மாப்பிளை பாத்து கட்டி வைங்க” போகும் போது அழுத்தமாக சொல்லி செல்ல, தாயும் மகளும் நாடகக் கண்ணீரோடு அவன் தாய் தந்தையை ஏறிட்டுப் பார்த்தனர்.
** ** **
நிசப்தம் சூழ்ந்த இரவின் மடியில்,
நட்சத்திரங்களின் காதல் லீலைகள் தொடங்கிய நேரமதில், பூலோக வெண்ணிலவின் முகம் தானோ, இனியவனின் அழைப்பினை கண்டதும் அத்தனை பிரகாசத்தில் மின்னியது.
“என்ன அதிசயம், இன்னைக்கு சீக்கிரம் கூப்ட்டு இருக்கீங்க..” எடுத்ததும் பேசிய பெண்ணிலவின் குரலில், இத்தனை நேரமிருந்த இறுக்கம் தளர்ந்து சற்றே ஆசுவாசமாய் உணர்ந்த ரிஷி,
“ஒண்ணுமில்ல டி, சின்ன டென்ஷன் அதான் உடனே உனக்கு கூப்ட்டேன்..” என்றான் பெருமூச்சு விட்டு.
“டென்ஷன் ஆகுற அளவுக்கு என்ன பிரச்சனை சீனியர்”
“உங்கிட்ட தான் ஏற்கனவே சொல்லி இருக்கேனே என் அத்தைய பத்தி, அவங்க அட்டூழியம் அதிகமா போச்சி.. அப்பா அவங்க மேல ரொம்பவே பாசம் வச்சிருக்கார் டி, ஆனா அவங்களுக்கு அப்டி எந்த பாசமும் யார் மேலயும் இல்ல..” என்றான் கேசத்தை அழுந்த கோதியபடி.
“அவங்க பாசமா இல்லைனு உங்களால எப்டி சீனியர் இவ்வளவு உறுதியா சொல்ல முடியிது” ஆருக்கும் அவர்களை எண்ணி கவலையாய் போனது.
“அத்தனை வசதி வாய்ப்போட கட்டிக்கொடுத்த அவங்க வாழ்க்கை பாதிலே முடிஞ்சி போச்சி, ஆனா ஒன்னும் இல்லாம வந்த எங்க அம்மா நல்லா வாழுறாங்களேன்னு அத்தைக்கு வெறுப்பு..
எப்பவும் எங்க அம்மாவ ஒரு விரோதி போல தான் பாப்பாங்க டி.. எங்க அத்தையோட சிரிப்புல கூட உண்மை இருக்காது. சிரிச்ச மேனிக்கே அம்மாவ வேலைக்காரி போல யூஸ் பண்ணிக்கிறதுல கில்லாடி..
அப்பா அம்மா கொஞ்சம் சிரிச்சி பேசினாலும் பார்வையாலே எரிச்சி பாக்குறதுன்னு இப்டி சொல்லிட்டே போலாம் ஆரா..
நான் கூட இதெல்லாம் அவங்க தெரியாம பண்றாங்கன்னு தான் ஆரம்பத்துல கண்டுக்காம விட்டேன், அப்புறம் அப்புறம் தான் அவங்க சுயநல புத்தியே எனக்கு தெரிய வந்துது..” ரிஷி சொல்ல சொல்ல கேட்டு திகைத்து போன ஆரு,
“அச்சோ இவ்வளவு நடக்குதா சீனியர், ஆனா ஆண்டி தான் பாவம் இவ்ளோ இன்னசென்ட்டா இருக்காங்களே, அதை நினச்சா தான் கவலையா இருக்கு..” என்றாள் வருத்தமாக.
“அவங்க உண்மை முகம் தெரிஞ்சா அப்பா உடைஞ்சி போவார், அதை பாத்து அம்மாவும் வருத்தப்பட்டு போவாங்களேன்னு தான், எதையும் வெளிய சொல்லாம முழுங்கிட்டு இருக்கேன்” பற்களை கடித்த ரிஷிக்கு தானே தெரியும், சோபாவும் மகளும் உண்ட வீட்டிற்கே இரண்டகம் செய்யும் இனம் என்று.
“என்ன சீனியர் டென்ஷனா” அவன் மனநிலை எண்ணி மென்மையாக கேட்டிட,
“ப்ச் அவங்கள பத்தி பேசினாலே டென்ஷன் தான் ஆகும் விடு.. சரி நீ சொல்லு, எப்டி இருக்க ஆரா” ரிஷி பேச்சை மாற்றுவதை உணர்ந்த ஆரு,
“இத்தனை நாளா வெளியூர் போனவர் போல கேக்குறீங்களே சீனியர்.. தினைக்கும் தானே வந்து பாத்துட்டு போறீங்க, நான் எப்டி இருக்கேன்னு உங்களுக்கு தெரியாதா” அப்பக்கம் அரும்புதடு வளைத்த பாவனையினை ஆடவனும் அனுபூதித்தான் போலும்.
“ஏன் தெரியாது, இன்னைக்கு நீ போட்டிருந்த காஃப்பி கலர் சுடில அப்டியே ஹாட் சாக்லேட் பேபி போல எவ்வளவு அழகா இருந்த தெரியுமா.. அதுவும் அந்த பிரீஹேர அடிக்கடி நீ ஒதுக்கி விட்டு என்ன ஒரு பார்வை பாப்பியே, நிஜமா சொல்றேன் ஆரா, ஐயம் பிளாட்..
உன்னோட அந்த ரெண்டு கேஷிவ் ஐஸ், ஜஸ்ட் வாவ்வ்வ்.. ட்ரூலி மெஸ்மரைசிங் டூ மை ஹார்ட்” அப்பக்கம் அவன் தலைசுத்தி கிறக்கமாக சொல்ல, செங்குமிழ் கன்னங்களில் கவர்ச்சி கூடி போயின.
“என்ன ஆரா சைலன்ட்டாகிட்ட” அவள் நிலை உணர்ந்து குறும்பு மிளிர கேட்டிட,
“சும்மா இருங்க சீனியர், உங்களுக்கு எப்பவும் என்ன டீஸ் பண்ணிட்டே இருக்கனும்” சிணுங்கிய பாவை முகத்தில் நாணப் புன்னகை பரவியது.
“ஏதே டீஸ் பண்றேனா.. உண்மைய சொல்றேன் டி.. யூ லுக் ஸ்டன்னிங்” இறுக்கம் தொய்ந்த ஹஸ்கி குரல் ஏறி இறங்கிட, இங்கு பெண்ணின் இதயக்கூடும் அதன் சுவாசத்தை அதிகரித்து உள்வாங்கியது.
“போதும் சீனியர், நேரமாச்சு நாளைக்கு பேசுறேன்..” அவசரமாக அழைப்பை துண்டிக்கப் போக,
“ஹேய் வெயிட் ஆரா, ரொம்ப நாளா உங்கிட்ட ஒன்னு கேட்டுட்டு இருக்கேனே அதுக்கு பதில் சொல்லிட்டு போ..” என்றான் அதே அவசரகதியில்.
“அதெல்லாம் முடியாது சீனியர், அண்ணா அண்ணிக்கு தெரியாம உங்ககூட வெளிய வர்றதெல்லாம் ரொம்ப ரிஸ்க்..” என்றதும் பெருமூச்சு விட்டான் ரிஷி.
“போ டி உனக்கே இன்னும் ஒன் மந்த்ல காலேஜ் முடிஞ்சிடும், அதுக்குள்ள ஜாலியா எங்கேயாவது வெளிய போலாம்னு பாத்தா, ஓவரா பண்ற..” முதலில் அவன் சலித்தாலும்,
“பிரண்ட்ஸ் எல்லாரும் தானே கெட் டூ கெதர் போறோம், மார்னிங் போயிட்டு ஈவினிங் வந்திடலாம் ஆரா, ப்ளீஸ் வாயேன்..” இதுவரை எந்த பெண்ணோடும் இத்தனை கெஞ்சல், கேலி, சிரிப்பு, அக்கறையோடு பழகியதில்லை அவன். ஆனால் ஆரா, அப்படி என்ன தனித்துமான பெண்ணோ தெரியாது. அவளை பிடிக்கும் அவ்வளவு தான்.
இவளோடு நேரம் செலவிட்டால் போதும், அத்தனை மனசஞ்சலங்களும் நீங்கி விடும் ரிஷிக்கு. அதன் காரணமே ஆராதனாவிடம் கெஞ்ச, மனம் கேட்கவில்லை தான். அதற்காக அண்ணன் கண்ணை மீறி வெளியே சென்றிட முடியாதே என்ற கவலையில், உள்ளம் வாடி தவித்தாள் கோதை.
“சாரி சீனியர், எங்க அண்ணாக்கு சின்னதா சந்தேகம் வந்தாலும் பெரிய ப்ராப்லம் ஆகிடும்..” தயக்கமாக சொன்னதும், கோவத்தில் அணைப்பை துண்டிக்க போனவன் காதில் விழுந்த சொல்லை கேட்டு இன்பமாக அதிர்ந்தானவன்.
“ஏய் என்ன சொல்ற நீ..”
“உண்மை தான் சீனியர், நாளைக்கு மறுநாள் எங்க வீட்ல எல்லாரும் திருப்பதி போறாங்க, பட் நான் மட்டும் லாஸ்ட் செமஸ்டர்னால போகல.. அப்ப வேணும்னா பக்கத்துல எங்கேயாவது போய்ட்டு வரலாம், இப்ப ஓகேவான்னு கேட்டேன்..” உள்ளே முழுக்க அச்சம் இருப்பினும், மனம்கொண்டவன் கெஞ்சுதல் தாங்காது உரைக்க, பளிச் புன்னகை தோன்றியது ஆடவன் முகத்தில்.
“டபுள் ஓகே டி ஆரா குட்டி.. ஆமா என்ன திடீர்னு திருப்பதி..”
“அம்மாவுக்கு ஆசை சீனியர், அவங்களுக்கு நாளுக்கு நாள் உடம்பு ரொம்ப மோசமாய்ட்டே இருக்கு.. ‘எனக்கு ஏதாவது ஆகுறதுக்குள்ள திருப்பதி பெருமாளை பாத்துட்டு வந்திடணும்னு ராகவ்’னு ரெண்டு நாளா அண்ணாகிட்ட ஒரே புலம்பல்.. அதான் இந்த திடீர் பிளான்”
“ஓகே ஓகே டி, இதுவே போதும்.. சரி நானும் நாளைக்கு முழுக்க என்னோட வர்க்க முடிச்சிட்டு, மறுநாள் உன்ன பாக்க வர்றேன் குட் நைட்..” என்று வைத்தவன் மனதிலோ பரவசம் பொங்கியது, அவளோடு தனித்திருக்க போகும் நினைவுகளை எண்ணி.
ஆராதனா மனதிலும் அதே களிப்பு தான்.
இரு மனங்களும் ஆனந்தத்தில் திலைத்திருக்க, இவர்களின் ஒட்டுமொத்த மனநிம்மதியையும் கலைக்கவே, பரமேஸ்வரனின் திருவிளையாடல் ஆரம்பமானதோ!
தொடரும்.