மானசாவின் உடம்பை வருடியது அவனின் கரம். இவளுக்கு ஆத்திரமாக வந்தது.
என்னை தொடாதே என்று கத்த விரும்பினாள்.
போதை தெளியாமல் இருந்தவன் “நீ எப்படிப்பட்ட தேவதை தெரியுமா? அப்படியே முழுசா சிக்கிட்டேன். உன்னை பார்த்த செகண்ட் என் நெஞ்சுக்குள்ள மலரால் நிரம்பிய பூமலை வெடிச்சது. என் உதடுகள் உன் பேரை சொல்லவே படைக்கப்பட்டது போல கர்வப்பட்டது. நீ எவ்வளவு அழகு தெரியுமா? என் அனதர் சோல் நீ. என் சொர்க்கம். என் லைஃப் உன் காலடியில் இருக்கு. உனக்காக நான் பொறந்து இத்தனை வருசமும் காத்திருந்திருக்கேன். என்னால நம்பவே முடியல. இவ்வளவு நாளா எங்க இருந்த நீ? என்னோட நெஞ்சை கொத்தி போக ஆண்டவன் உன்னை படைச்சானா?” என்று போதை குரலில் கேட்டான்.
இவளுக்கு அவனின் வார்த்தைகள் அனைத்தும் ஈட்டியாக காதுக்குள் குத்தின. அத்தனையும் வலிகளை தந்தன.
அவன் பேசாமல் இருந்தாலே போதும் என்று நினைத்தான். ஆனால் அவன் அப்போதுதான் பேசவே ஆரம்பித்திருந்தான்.
“நான் எத்தனையோ நாள் எத்தனையோ விதமான கஷ்டப்பட்டு இருக்கேன். ஆனா என்னோட மொத்த கஷ்டமும் உன் கண்ணை பார்த்தது தீர்ந்து போச்சு. என்னோட ஆன்மா நரகத்தில் இருந்து உன்னால விடுபட்டுச்சி. என் தெய்வம் நீ. தேவதை நீ. இந்த பூமியை விட அதிக சக்தி வாய்ந்த ஜீவன் நீ..” என்றான்.
இந்த குடிகாரன் பேச்சைக் கேட்க வேண்டிய தலையெழுத்தா எனக்கு என்று அவள் உள்ளுக்குள் புலம்பினாள்.
அவளின் கழுத்தில் இதழ் பதித்தான்.
“ப்ளீஸ் விட்டுடுங்க. எனக்கு வேணாம்..” என்றாள் சிறு பயத்தோடு.
குடிகாரனை பார்த்தால் யாருக்கு பயம் வராது? அதுவும் அவன் வேறு இவளுக்கு பிடிக்காத ஒருவன். அவனை போதையில் பார்க்கும்போது இவளுக்கு மிருகத்தை பார்ப்பது போல் இருந்தது. இதயத்தின் துடிப்பும் அதிகமானது.
ஆனால் அவனோ இவளின் பயத்தை உணராமல் “அப்படி சொல்லக்கூடாது. நான் உன்னோட புருஷன். தாலி கட்டி இருக்கேன் பாரு..” என்று எடுத்து காட்டினான்.
“உனக்காக உயிரையே தருவேன் மானசா..” என்று உளறினான்.
எப்படிப்பட்ட பொய்யான வார்த்தை இது. உயிரை தருவானாம். ஆனால் இப்போது விட்டுவிடு என்று சொன்னால் மட்டும் கேட்க மாட்டானாம்.
“நீ என்னோட மது கோப்பை. என்னோட பழச்சாறு. உன்னை சாப்பிடலன்னா எனக்கு பசிக்காது. தூக்கம் வராது..” என்று சொன்னான்.
இதற்கு முன் இப்படியா இருந்தாய் என்று கேட்க இவளுக்கு ஆசை. ஆனால் முடியவில்லை.
“ஒருநாள் என் ஆன்மாவை உன்னோட இதயத்தை சுத்தி வேலியா போடுவேன்..” என்றவன் அவளை இதழ்களை தேடிப் பிடித்துக் கவ்வினான்.
மதுவின் வாசத்தில் அவளுக்கு குமட்டியது. ஆனால் அதை அவன் பார்க்கவும் இல்லை. அவளை விடவும் இல்லை.
இதழை உறிஞ்சினான். பூவிலிருந்து தேனை குடிக்கும் வண்டு போல் அல்லாமல் கரும்பிலிருந்து சாறை எடுக்கும் யானையை போல் அவனின் முத்தம் கடினமானதாக இருந்தது.
அவளின் உதடுகள் இரண்டும் அவனின் உதடுகளுக்கு இடையே சிக்கி தவித்தன. உறிஞ்சினான். உறிஞ்சி கொண்டே இருந்தான். இவள் சுளித்த முகத்தை மாற்றிக்கொள்ளவில்லை. வரும் ஆத்திரத்திற்கு அவனை தூர தள்ளிவிட்டுவிட்டு குழந்தையை தூக்கிக்கொண்டு இந்த ஊரை விட்டு ஓடிப் போக வேண்டும் போல் இருந்தது.
இதழ்களை கருணையே காட்டாமல் வதைத்து முடித்தவனின் உதடுகள் அவளின் முகம் முழுக்க முத்தங்களை பதித்தன. கண்களை இறுக்க மூடிகொண்டாள். வேட்டையாடும் மிருகத்தை பார்த்தால் கூட அவளுக்கு இவ்வளவு பயம் இருக்காது. துடிதுடித்த இதயத்தை உள்ளுக்குள் எவ்வளவு சமாதானப்படுத்தினாலும் அமைதியாக முடியவில்லை.
முகம் முழுக்க அவனின் இதழ் எச்சில் பரவியது. அவளுக்கு அருவருப்பாக இருந்தது. கண்ணீர் அவளின் கட்டுப்பாட்டை தாண்டி கொண்டு இமைகள் வழியே இறங்கியது.
அவன் அதைக் கூட கவனிக்கவில்லை. கண்ணீரையும் சேர்த்து திருடி கொண்டான். அவளின் கண்ணீர் சுவை கூட இவனுக்கு கரிக்காமல் இனித்தது.
அவளின் கழுத்து முழுக்க கவ்வி இழுத்தான். ஒவ்வொரு இஞ்சையும் முத்தமிட்டே வதைத்தான். இவளுக்கு ப்ரீத்தியின் ஆன்மா தன் அருகில் நின்று பார்த்துக் கொண்டிருப்பது போலவே இருந்தது.
என் கணவனை திருடி கொண்டாள் என்று அவளின் ஆன்மா கதறியழுவது போல் தோன்றியது.
இவளின் விழி நீர் இறங்கி கொண்டே இருந்தது. அவனின் முத்தம் தொடர்ந்து கொண்டே இருந்தது.
மேனி முழுக்க பல ஆயிரம் முத்தங்களை தந்திருப்பான். அவளின் பெண்மையை மென்மையாகவும் சோதித்தான். வன்மையாகவும் சோதித்தான்.
அவன் சாதாரண நிலையில் இருந்திருந்தால் இவளின் உடம்பு இந்த உறவை ஏற்றுக்கொண்டு இருந்திருக்குமோ என்னவோ? ஆனால் அவன் மீதிருந்து வந்த வாசம் அவளின் உடம்புக்கும் பிடிக்கவில்லை.
அவளின் உடம்பின் மறு பாதி ஆகினான். அவனின் ஆண்மையின் வீரம் அப்பாவியாக இருந்த அவளை வெற்றி கொள்ள ஆரம்பித்தது.
கண்மூடி இருந்தவள் பற்களையும் சேர்த்து கடித்தாள். இப்படியே செத்துப் போய் விட வேண்டும் என்று தோன்றியது. இந்த குற்ற உணர்வுக்கு மருந்தே இல்லையா என்று மனம் கேட்டது.
அவனின் வாசம் நாசியை தீண்டாத வரை இவளுக்கு பிரச்சனை இல்லை. அவன் அவளின் மேனியில் தனது காதல் ஓவியத்தை காமம் என்ற பெயரில் எழுதி முடித்தான். அவனின் பார்வைக்கு நாம் உண்மையிலேயே ஒரு காதல் தேவதைதான் என்று இவளுக்கு தெரியவில்லை. நாம் காதலை கூட தவறாகதான் அவளுக்கு புரிய வைத்துக் கொண்டிருக்கிறோம் என்று இவனுக்கும் தெரியவில்லை.
அவளுடனான கூடல் முடித்து அவளையே அணைத்தபடி கண்மூடினான் இவன். சற்று நேரத்தில் அவன் உறங்கி விட்டான். ஆனால் இவளுக்கு உறக்கம் வரவில்லை.
அவனை விட்டு விலகியவள் பாத்ரூமுக்கு சென்று தன்னை சுத்தம் செய்து கொண்டாள்.
வெளியே வந்ததும் போர்வையை எடுத்து தரையில் விரித்து அதில் தலையணையை போட்டாள்.
குழந்தையின் சின்ன பெட்டை அந்த போர்வையில் ஒரு பகுதியில் வைத்தவள் குழந்தையை கொண்டு வந்து அந்த பெட்டில் படுக்க வைத்தாள். தலையணையில் சாய்ந்தவள் குழந்தையை பூ போல் அணைத்தபடி கண் மூடினாள். குழந்தையின் வாசம் நாசியை தொட்ட பிறகு அவளுக்கு நிம்மதி என்ற ஒன்று உண்டானது. அதன் பிறகே தூக்கமும் வந்தது.
காலையில் தலைவலியோடு கண்களை திறந்தான் தீனா. அவன் குடிகாரன் கிடையாது. பிசினஸ் பார்ட்டிக்கு போனால் கூட மதுவை வேண்டாம் என்று மறுத்து விடுவான். ஆனால் நேற்று மானசாவை அறைந்து விடவும் மனம் இவனை கொலையாய் கொல்ல ஆரம்பித்துவிட்டது. அந்த குற்ற உணர்வில் இருந்து தப்பிக்கதான் மதுவை கை கொண்டு இருந்தான். ஆனால் இப்போது தன் மாதாஜியை நினைத்தும் மனைவியை நினைத்தும் கவலையாக இருந்தது.
இரவு முழுக்க இவனை விட்டு விலகி இருந்த குற்ற உணர்வு இப்போது மீண்டும் வந்து பிடித்துக் கொண்டது. இரவில் அவள் அழும் போதும் அவளோடு கூடியது நினைவுக்கு வந்தது. நெற்றியை பிடித்தான். நல்லா சொதப்பி வச்சிட்டேன் என்று தன்னைத் திட்டிக் கொண்டவன் அருகில் இருந்த இடத்தைப் பார்த்தான். அங்கே மனைவி இல்லை.
அவனின் பார்வை அலைபாய்ந்தது. சுவர் ஓரமாக போர்வையை விரித்து அதில் குழந்தையோடு சேர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள் மானசா.
இவன் கட்டிலை விட்டு இறங்கினான். மனைவியின் முன்னால் சென்று நின்றான். அவள் இரவெல்லாம் விழித்திருந்த குழந்தையை பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு இப்போதுதான் கண்மூடி இருந்தாள்.
அவளின் அருகில் அமர்ந்தான். கழுத்தில் பல் தடமும் நகத்தடமும் இருந்தது. இவனுக்கு குற்ற உணர்வு கழுத்தை கவ்வியது.
நெஞ்சை தேய்த்துக் கொண்டான். அவளின் கேசத்தை ஒதுக்கி விட்டான்.
குழந்தை விழித்திருந்தது. மேலே இருந்த கூரையை பார்த்தபடி அமைதியாய் படுத்திருந்தது. குழந்தையை எடுத்து போய் தொட்டிலில் போட்டுவிட்டு அவள் அருகில் படுத்துக்கொள்ள வேண்டும் என்று இவனுக்கு ஏக்கம் உண்டானது. ஆனால் நேற்று குழந்தை தூக்க தெரியாமல் தூக்கி பெரிய வம்பை இழுத்து வைத்து விட்டோம் என்பதை நினைவிற்கு வந்ததும் தனது திட்டத்தை அப்படியே ஒதுக்கி தள்ளிவிட்டு குளிக்க கிளம்பினான்.
குளித்து முடித்த நேரத்தில் தலைவலி டபுள் மடங்காகி விட்டது.
ரூமுக்கு வந்து உடையை மாற்றினான். தலைவலி மாத்திரையை தேடினான். அவனின் அறையில் அது இல்லை. பணியாட்கள் யாரிடமாவது கேட்கலாம் என்று கிளம்பினான்.
அவன் வெளியே வந்த போது ஹாலில் அமர்ந்திருந்த அம்மா இவனைப் பார்வையால் துளைத்தாள். இவனுக்கு அம்மாவின் பார்வையை பார்த்து உள்ளம் நடுங்கியது. இத்தனை ஆண்டுகளும் அம்மாவிடம் நல்ல பெயர் வாங்கி விட்டு இப்போது இப்படி கெட்டுப் போய்க் கொண்டிருக்கிறோமே என்று அவனுக்கே வருத்தமாய் இருந்தது.
இவனை கண்டதும் தன் அருகில் இருந்த ஒரு பூஜாடியை தூக்கி அடித்தாள் சுலோச்சனா. அந்த கண்ணாடி பூஜாடி அவனின் நெற்றியில் பட்டு கீழே விழுந்து உடைந்தது. ஜாடி நெற்றியில் மோதியதில் அவனை நெற்றி உடைந்து ரத்தம் கொட்டியது. அம்மாவுக்கு அப்போதும் ஆத்திரம் தீரவில்லை.
“உன்னை நான் எப்படி பார்த்து பார்த்து வளர்த்தேன்? என்னோட உயிரை வாங்க உனக்கு என்னடா அவ்வளவு ஆசை? பொண்டாட்டி செத்த மறுநாளே இன்னொரு பொண்ணு வேணும்ன்னு கேட்ட. இப்ப குடி பழக்கமும் சேர்ந்திடுச்சி. உன்னை வளர்த்தியதில் அப்படி என்ன நான் தப்பு பண்ணினேன்? இல்ல ப்ரீத்தி உனக்கு அப்படி என்ன குறை வச்சா?” என்று கண்ணீர் வழியும் கண்களோடு கேட்டாள்.
கர்ச்சீப்பை எடுத்து ரத்தம் கொட்டிய தன் நெற்றியை அழுத்தி பிடித்த தீனா அம்மாவிடம் எதுவும் பேசாமல் “தலைவலி மாத்திரை இருந்தா கொண்டு வாங்க..” என்று பணியாட்களை பார்த்து கேட்டான்.
“விஷ மாத்திரை கொண்டு வந்து கொடுங்க..” என்றாள் சுலோச்சனா.
ஆனால் சம்பளம் தரும் முதலாளிக்கு விஷமாத்திரையை கொண்டு வந்து தர யாருக்கும் தைரியம் இல்லை.
பெண்ணொருத்தி மாத்திரையையும் சுடு நீரையும் கொண்டு வந்து இவனிடம் நீட்டினாள். மாத்திரையை விழுங்கியவன் ஓரமாய் நின்றிருந்த டிரைவரிடம் “ஹாஸ்பிட்டல் போகலாம்..” என்றான். நெற்றிக்காயம் ரொம்ப வலித்தது. நிறைய வேலை இருக்கிறது. இந்த காயத்தை பார்த்துக்கொண்டு நேரத்தை வீணடிக்க முடியாது.
அவனும் டிரைவரும் அங்கிருந்து கிளம்ப, சுலோச்சனாவுக்கு குற்ற உணர்வு கழுத்தை கவ்வியது.
உடைந்து கிடந்த பூஜாடியை பணிப்பெண் ஒருத்தி சுத்தம் செய்தாள்.
நம் மகனை நாமே அடிக்க வேண்டி வந்துவிட்டதே என்று உள்ளுக்குள் புலம்பிய சுலோச்சனாவுக்கு மானசாவின் மீது ஆத்திரம் வந்தது. அவள்தான் நம் மகனை மயக்கி விட்டாள் என்றே நம்பினாள்.
இத்தனை ஆண்டுகளும் ஒழுக்கமாக இருந்த மகன் எப்படி திடீரென்று கெட்டுப் போவான்? எல்லாம் அந்த சிறுக்கி செய்த வேலை என்று மனதுக்குள் கெட்ட வார்த்தைகளால் மானசாவை திட்டினாள்.
எட்டு மணிக்கு மேல்தான் உறக்கம் கலைந்து எழுந்தாள் மானசா. அருகில் குழந்தை இல்லை. அதிர்ச்சியோடு எழுந்து அமர்ந்தாள். அங்கிருந்து சோபாவின் மீது அமர்ந்திருந்த பணிப்பெண் குழந்தைக்கு புட்டி பால் மூலம் பசியாற்றிக் கொண்டிருந்தாள்.
குழந்தைகள் பார்த்த பிறகுதான் இவளுக்கு உயிரே வந்தது.
அவளின் முகத்தைப் பார்த்த பணிப்பெண் “இனிமே குழந்தையோடு கீழே தூங்குவதா இருந்தா உங்க போர்வையை சுத்தி எறும்பு சாக்பீஸ் கொண்டு கோடு போட்டுக்கங்க. இல்லன்னா எறும்பு குழந்தையை கடிச்சிடும்..” என்று அறிவுரை சொன்னாள்.
இதை யோசிக்காமல் போய்விட்டோமே என்று மானசாவுக்கு தன் மீதே கோபம் வந்தது.
“குழந்தையை வெளியே கொண்டு போறேன். நீங்க ரெடியாகி வந்து வாங்கிக்குங்க..” என்று சொல்லிவிட்டு அந்த பணிப்பெண் குழந்தையை தூக்கிக்கொண்டு சென்றாள்.
இவள் குளிக்க செல்லலாம் என்று எழுந்து நின்றாள்.
போர்வையை அவள் மடித்து வைத்த நேரத்தில் அந்த அறைக்குள் புகுந்தான் அவளின் கணவன். நேராய் வந்து அவளின் கையை பிடித்தான்.