கார் டிரைவர் காத்திருந்தார். மானசா வெகுநேரத்திற்கு பிறகு அந்த கன்சல்டிங் அறையை விட்டு வெளியே வந்தாள்.
டிரைவர் வேறு எங்காவது போயிருப்பார் என்று நினைத்தாள். ஆனால் உடனே வந்து விட்டார். டிரைவர் அருகில் வந்து அவளின் கையில் இருந்த பைலை வாங்கிக் கொண்டார்.
இவளால் இப்போதைக்கு வீட்டை விட்டு செல்ல முடியாது. இரண்டு வாரத்திற்காவது ட்ரீட்மென்ட் செய்துக் கொண்டாக வேண்டும். அதுவரை அந்த ராட்சசனோடு அந்த வீட்டில்தான் வாழ வேண்டும் என்று புரிந்துக் கொண்டாள்.
“குழந்தையை செக் பண்ணாங்க..” என்று கடமைக்கு சொன்ன மானசா உள்ளே சென்று படுக்கையறையில் தனக்கான மாத்திரை மருந்துகளை மறைத்து வைத்தாள்.
சுவற்றில் இருந்த ப்ரித்தியின் புகைப்படத்தை திரும்பி பார்த்தாள். “நீ இருந்தா என்ன செய்வியோ அதை நான் செய்ய போறேன். உன் குழந்தை என் கையில் என் குழந்தையா வளரும்..” என்று சொன்னாள்.
சில நிமிடங்களுக்கு பிறகு குழந்தையின் அழுகை குரலில் வெளியே ஓடினாள். குழந்தையை வாங்கி நெஞ்சோடு அணைத்து தாலாட்டினாள்.
“இந்த குழந்தைக்காக மட்டும்தான் நான் இன்னும் உன்னை வீட்டுல வச்சிருக்கேன்..” என்றாள் மாமியார்.
இவள் புரிந்ததாக தலையாட்டி விட்டு குழந்தையை தூக்கிக் கொண்டு தன் அறைக்கு வந்தாள்.
குழந்தையின் அழுகை நின்று விட்டிருந்தது.
குழந்தையின் கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டவள் “உனக்காகத்தான் நானும் இங்கே இருக்கேன்..” என்று சொன்னாள்.
படுக்கையின் மீது எறும்பு ஒன்று ஊர்ந்தது. உடனே அதை பிடித்து கசக்கி தூர எறிந்தாள்.
“என் குழந்தை மேல தூசு கூட பட கூடாது..” என்று இறந்து போன எறும்பு பார்த்து மிரட்டலாக சொன்னாள்.
குழந்தையை அணைத்தபடி கட்டிலில் சாய்ந்தவள் “அம்முவுக்கு மும்மு வேணுமா? கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க. அப்புறம் அம்மா உங்களுக்கு மும்மு தரேன்..” என்று கொஞ்சலாக சொன்னாள்.
குழந்தையின் பட்டு கன்னத்தையும் ரோஜா இதழ் உதடுகளையும் தொட்டு ரசித்தாள்.
“உங்கம்மா உயிரோடு இருந்திருந்தா அவ உனக்கு பசியாத்திய நேரம் போக மீதி எல்லா நேரத்திலும் நான் உன்னை தூக்கிட்டு போய் என்னோடு வச்சிட்டு இருந்திருப்பேன். ஆனா அந்த கடன்காரி என்னையும் உன்னையும் தவிக்க விட்டுட்டு போயிட்டா..” என்று தோழியை திட்டினாள்.
குழந்தையின் கால்களை வருடினாள். நிறைய கொஞ்சி பேசினாள்.
அன்று மாலையில் குழந்தைக்கான தாய்பால் வந்து சேர்ந்து விட்டது.
அந்த பாலை பாட்டிலில் நிறைத்து எடுத்து வந்து தந்தாள் பணிப்பெண் ஒருத்தி.
“தேங்க் யூ..” என்று வாங்கிக் கொண்டாள் இவள்.
குழந்தைக்கு அந்த பாலை கொடுத்து உறங்க வைத்தாள். ஆனால் பொறாமையாக இருந்தது. என் குழந்தைக்கு நான் மட்டும்தான் பசியாத்தணும் என்று உள்ளுக்குள் முனகியவள் குழந்தையின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அமைதியாக அந்த பாலை தந்தாள்.
குழந்தை உறங்கி விட்டாள்.
இவள் பணிப்பெண் ஒருத்தியை அழைத்து குழந்தைக்கு பாதுகாப்பாக இருக்க சொல்லி விட்டு குளிக்க கிளம்பினாள். தன் மேல் இருந்து குழந்தையின் வாசம் மட்டும் கரைந்து போக கூடாது என்று விரும்பினாள்.
அவள் பாதி குளித்த நேரத்தில் அந்த பெட்ரூமுக்குள் வந்தான் தீனா.
இவளுக்கு ஒரு நொடி என்ன பதில் திரும்பி சொல்வது என்று தெரியவில்லை.
“கதவை திற. நானும் குளிக்க வரேன்..” என்றான்.
“இல்ல முடிஞ்சிடுச்சி. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவேன்..” என்றாள்.
“இப்ப கதவை திறக்குறியா? இல்ல நான் உடைக்கட்டுமா?” என்று மிரட்டினான்.
இவள் வேறு வழி தெரியாமல் வந்து கதவை திறந்தாள்.
உள்ளே நுழைந்தவன் அவளை மேலிருந்து கீழாக பார்த்து விட்டு பாத்ரூம் கதவை தாழிட்டான்.
தன் சட்டையை கழட்டி ஓரம் மாட்டினான்.
“எனக்கு லைட்டா உடம்பு வலிக்குது..” என்றாள் அவனிடம் இருந்து தப்பிக்க வேண்டுமே என்று.
“நடிக்காத. உனக்கு எல்லாமே பிடிக்கும்..” என்றவன் ஆடைகளை துறந்ததும் அவளை நெருங்கினான்.
அவளின் முகத்தை அள்ளியவன் அதே வேகத்தில் அவளின் இதழை கவ்வினான்.
அவள் பின்னால் நகர்ந்து தப்பிக்க முயன்றாள். இவன் அவளை விடாமல் அவளோடு சேர்ந்து நடந்தான்.
ஷவருக்கு வந்ததும் இவனே பைப்பை திருகினான். தண்ணீர் கொட்டியது. இருவரையும் நனைத்தது. இவன் மீண்டும் அவளின் இதழை கவ்வினான்.
அவளுக்கு கோபமாக வந்தது.
அவனிடமிருந்து விலகியவள் “எனக்கு உங்களை சுத்தமா பிடிக்கல. இப்படி கட்டாயப்படுத்தி என்னோடு இருப்பதால் உங்களுக்கு என்ன கிடைக்க போகுது?” எனக் கேட்டாள்.
“இப்படி சொல்லவே கூடாது. நான் உன் புருஷன்.” என்றவன் அவளின் இதழை மீண்டும் சிறை செய்ய வந்தான்.
இவள் கோபத்தோடு அவனை பின்னால் தள்ளினாள். இரண்டடி நகர்ந்து போய் விழுந்தான்.
“நீங்க பண்றது ரேப். எனக்கு பிடிக்காத விசயத்தை பண்ணிட்டு இருக்கிங்க. குளிக்கிறது என் பர்சனல். இதுல கூட வந்து தலையிடுறிங்க. எனக்கு எரிச்சலாக இருக்கு. உங்களாலதான் எனக்கு இந்த வீட்டையே பிடிக்கல..” என்றாள்.
இவன் முகம் மாறியது. விழிகளில் கோபம் கொந்தளித்தது.
அவள் பொறுக்க மாட்டாமல் அனைத்தையும் கத்தி விட்டாள்.
இவன் அவளை அங்கிருந்த சுவரோடு சாய்த்தான்.
“நீ என் வொய்ப்ன்னு மறந்துட்ட போல..” என்று நக்கலாக சொன்னவன் “இந்த முடியில் இருந்து அடி வரை எனக்கு மட்டும்தான் சொந்தம். உன் எண்ணம் முதல் எழுத்து வரை நான்தான் இருக்கணும்..” என்றான்.
அவளின் மீது சரிந்தவன் “நான் நல்லவனா இருக்கணும்ன்னு ஆசைப்படுறேன். என்னை கெட்டவனா மாத்தாத..” என்று சொல்லி அவளின் இதழை சிறை பிடித்தான். அவளையும் தன் ஆசைக்கு ஏற்றவாறு அபகரித்தான்.
அவள் திமிறினாள். ஆனால் தப்பிக்க முடியவில்லை. பொய்யாக அழுதாள். கஷ்டப்பட்டு கண்ணீரை சிந்தினாள். அப்போதும் அவன் மனம் இரங்கவில்லை.
அவளின் இதழை தின்றான். விழுந்த தண்ணீரின் அடியில் அவளை மூச்சு முட்ட செய்தான். முத்தத்தால் அவளை வதைத்தான். தண்ணீரோடு சேர்ந்து இறங்கிய அவளின் கண்ணீரை அவன் கவனிக்கவேயில்லை.
அவளுக்கு தன்னை பிடிக்கவில்லை என்பதை அவனும் அறிவான். ஆனால் அதை ஏற்றுக் கொள்ள அவனுக்கு மனம் வரவில்லை. அவளுக்கு நிச்சயம் ஒரு நாள் நம்மை பிடிக்கும் என்று நம்பினான்.
வெகு நேர முத்தத்திற்கு பிறகு அவளின் இதழுக்கு சுதந்திரம் தந்தான்.
“நீ விளங்கவே மாட்ட..” என்று திட்ட ஆரம்பித்தாள் அவள். இவன் அவளின் வாயை பொத்தினான்.
“அமைதியா இரு..” என்று எச்சரித்தான்.
அவளின் மேனியை களவாடத் தொடங்கினான். அதே நேரத்தில் குழந்தையும் அழ தொடங்கியது.
அவனின் கையை தள்ளி விட்டவள் “குழந்தை அழுது. என்னை விடு..” என்றாள்.
“நீ முதல்ல என்னை தள்ளி விடாம இருந்திருந்தா எப்பவோ வேலை முடிஞ்சிருக்கும். நீதான் லேட் பண்ண. சோ நான் விரும்பும் போதுதான் உன்னை விடுவேன்..” என்று சொன்னான். தனது காரியத்தை தொடர்ந்து நடக்க ஆரம்பித்தான்.
அதே நேரத்தில் வெளியே இருந்து அந்த பெட்ரூமின் கதவையும் தட்ட ஆரம்பித்தார்கள்.
இவள் அதிர்ச்சியோடு தன் கணவனை பார்த்தாள். “ரூமையும் பூட்டிட்டு வந்துட்டியா?” என்று கேட்டாள்.
“குழந்தை அழுது. உனக்கு கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா? அது உன்னோட குழந்தைதானே? இவ்வளவு கல் மனசா உனக்கு?” என்று தேம்பிக் கொண்டு கேட்டாள்.
அவன் அதற்கு பதில் சொல்லாமல் தனது வேலையை சிரத்தையோடு பார்க்க, “பக்கத்துலயும் ஆள் இல்ல. குழந்தை அவ்வளவு அழுது. என்ன காரணமோ தெரியல. என்னை விட்டு தொலைடா..” என்று கத்தினாள்.
“நீ எந்த அளவுக்கு அடம் பிடிக்கிறாயோ அந்த அளவுக்கு லேட் ஆகும். அப்புறம் நீதான் ரொம்ப பீல் பண்ணுவ..” என்று எச்சரித்தான்.
சுலோச்சனா அறையின் கதவை தொடர்ந்து தட்டிக் கொண்டிருந்தாள். குழந்தை அழுகிறது. ஆனால் மருமகளோ மகனோ குழந்தையை சமாதானம் செய்யும் குரல் கேட்கவில்லை. என்னதான் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று அவளுக்கு கோபம் அதிகரிக்க ஆரம்பித்தது.
தீனா மானசாவை முழுவதுமாக திருடி கொண்டு விட்ட போது அவளின் கண்கள் அழுதே சிவந்துவிட்டன.
அவசரமாய் ஷவரை விட்டு நகர்ந்தாள். அதே அவசரத்தோடு ஆடைகளை அணிந்து கொண்டு பாத்ரூம் கதவைத் திறந்து வெளியே ஓடி வந்தாள்.
குழந்தை பலமாக அழுது கொண்டிருந்தது.
கதவை வேறு மாமியார் தட்டிக் கொண்டே இருந்தாள்.
“குழந்தை ஏன் அழுது? கதவைத் திறங்க..” என்று அவள் தொடர்ந்து கதவை தட்ட, மானசா குழந்தையை அள்ளி எடுத்துக்கொண்டு சென்று கதவைத் திறந்தாள்.
சக்கர நாற்காலி உள்ளே வந்தது. மாமியார் இவளை கோபத்தோடு வெறித்தாள்.
மருமகள் குளித்துவிட்டு ஈரத்தோடு நிற்பதை கவனித்து சுலோச்சனாவுக்கு இன்னும் கோபம் அதிகரித்தது.
“என்னாச்சி? ஏன் குழந்தை அழுது?” என்று கேட்டாள்.
குழந்தையை நெஞ்சில் வைத்து தாலாட்டி கொண்டிருந்த மானசா “தெரியல ஆன்ட்டி. நான் குளிக்க போகும்போது நல்லாதான் இருந்தா..” என்று தேம்பிக் கொண்டே சொன்னாள்.
சுலோச்சனாவுக்கு பின்னால் நின்றிருந்த பணிப்பெண் ஒருத்தி “குழந்தை கையில எறும்பு இருக்கு..” என்று கவனித்து சொன்னாள்.
மானசா உடனே குழந்தையை அருகில் இருந்து சோபாவில் கிடத்தி குழந்தையின் ஆடைகளை அவிழ்த்தாள்.
கையில் மட்டும் அல்லாமல் உடம்பிலும் ஏழெட்டு இடத்தில் எறும்புக்கு கடித்து வைத்திருந்தது.
மானசா அவசரமாக அந்த எறும்பை தூக்கி எறிந்தாள். ஒரே எறும்பு இத்தனை இடத்தில் கடித்து வைத்து விட்டது. குழந்தையின் அழுகுரல் மானசாவுக்கு வேதனையை கொடுத்தது. அவளும் தன்னை மீறி அழுது கொண்டிருந்தாள்.
அந்நேரத்தில் தீனா குளியலறை கதவை திறந்து வெளியே வந்தான். மருமகள் குழந்தையை விட்டுவிட்டு என்ன வேலை செய்திருக்கிறாள் என்று சுலோச்சனாவுக்கு புரிந்து விட்டது. மருமகளை பார்க்கும்போது இவளுக்கு கொலை வெறியே வந்தது.
“போதும் நடிப்பதை நிறுத்து..” என்று சீறிய சுலோச்சனா “குழந்தையை தூக்குங்க..” என்று பணி பெண்களிடம் சொன்னாள்.
அந்த பணிப்பெண்களில் ஒருத்தி குழந்தையை அள்ளி எடுத்தாள்.
அந்த குழந்தையை சுலோச்சனாவிடம் கொண்டு வந்து கொடுத்தாள்.
குழந்தையை தன் மடியோடு அணைத்துக் கொண்ட சுலோச்சனா “இனிமே உங்க ரெண்டு பேர்ல யாராவது குழந்தையை தொட்டா உங்க கையை வெட்டுவேன். குழந்தைக்காக குழந்தைக்காகன்னு சொல்லி கடைசியில் குழந்தையை ஆபத்தில் கூட காப்பாத்தாம விடுறிங்க. உங்க
ளை மாதிரியான சுயநலவாதிகளை நான் பார்த்ததே கிடையாது..” என்று திட்டினாள்.
குழந்தையை தூக்கிக் கொண்டு அவள் அங்கிருந்து செல்ல, மானசா தரையோடு மண்டியிட்டாள்.