14
அழுது கொண்டிருந்த மானசாவின் தோளில் கையை பதித்தான் தீனா.
“சரி விடு இவ்வளவு அழுது என்ன பண்ண போற? உனக்குதான் தலை வலிக்கும்..” என்று சொன்னான்.
ஆத்திரத்தோடு எழுந்து நின்ற மானசா “யாருடா நீ சைக்கோ பயலே!? என் பிரெண்டை கொன்னுட்ட. அவ குழந்தையையும் கொல்ல திட்டம் போடுற. அப்புறம் என்ன பண்ண போற? என்னையும் கொல்ல போறியா?” என்று கேட்டு அழுதாள்.
சட்டை கூட அணியாமல் நின்று இருந்தவன் “தேவை இல்லாம சீன் போட்டுட்டு இருக்க! குழந்தைன்னா அழதான் செய்யும். என் அம்மாவை விட நீ எல்லாத்துக்கும் ஓவர் ரியாக்ட் பண்ற..” என்று வெறுப்போடு சொன்னான்.
குழந்தையின் அழுகை சத்தம் இன்னமும் ஓய்ந்திருக்கவில்லை.
“அது எப்படிடா உன்னால முடியுது? பச்ச பிள்ளை அழுது. கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாம இருக்கியே..” என்று கத்தி கேட்டாள்.
அவளின் தோள்கள் இரண்டையும் இறுக்கிப் பிடித்த தீனா “இந்த ஆடிட்டியூட்டைதான் என்கிட்ட காட்டாதன்னு சொல்றான். அந்த குழந்தை அதுவா அழுது. நான் என்னவோ அடிச்சி அழ வெச்ச மாதிரி பேசுற..” என்று கேட்டான்.
“நான் அந்த குழந்தைக்காகதான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்..” என்று இவள் நினைவுபடுத்த பார்த்தாள்.
“அந்த குழந்தையை அனாதை ஆசிரமம் அனுப்ப மாட்டேன்னு சொல்லி அதுக்கு பதிலா உன் கழுத்துல தாலி கட்டி இருக்கேன். ஆனா அதை தாண்டி அந்த குழந்தையோட குட்டி குட்டி சிணுங்களுக்கும் கூட நீ என் மேல வெறுப்பை காட்டுவது நியாயம் கிடையாது. இந்த வீட்டுல அந்த குழந்தையை பார்த்துக்க எத்தனையோ பேர் இருக்காங்க. நீ எனக்கு தேவையானதை சரியான முறையில் கவனிச்சிக்கிட்டு இருந்திருந்தா நான் ஏன் பாத்ரூம்ல உன்னை பிடிச்சி வைக்க போறேன்?” என்று சீற்றமாக கேட்டான்.
இவளுக்கு அவனோட பேசவே விருப்பமில்லை. அவனை அசிங்கத்தை பார்ப்பது போல் பார்த்துவிட்டு அந்த அறையை விட்டு சென்றாள்.
குழந்தையின் காயத்திற்கு மருந்து போட்டுக் கொண்டிருந்தாள் பணிப்பெண் ஒருத்தி. மானசா எதிரில் வரவும் எரிச்சலான சுலோச்சனா “எதுக்காக இங்கே வந்த? இனிமே என் முன்னாடியோ குழந்தை பக்கத்திலேயோ வந்தா செருப்பு பிய்யும்..” என்று திட்டினாள்.
“நான் எந்த தப்பும் பண்ணல..” என்று அழ ஆரம்பித்தாள் இவள்.
“கண்ணீரை காட்டி என்னை ஏமாத்தலாம்ன்னு நினைக்காத. நீ தப்பு பண்ணியோ இல்லையோ? ஆனா நீ உன் உடம்பு சுகத்துக்காக என் பையனை கல்யாணம் பண்ணி இருக்க. அவனோடு மட்டும் உன் உறவை நிறுத்திக்க. தேவையில்லாம என் பேத்தியை தொடாத..” என்று மிரட்டினாள்.
இவள் திட்டு வாங்குவதை பணிப்பெண்கள் கவலையோடு பார்த்தார்கள். மானசாவுக்கு கொஞ்சம் அவமானமாகதான் இருந்தது.
இவள் திட்டு வாங்கிக் கொண்டிருக்கும் போது தீனா அவர்களை தாண்டி நடந்தான்.
தீனா பணியாட்கள் முன்னால் இவள் எதிர்த்து பேசியதற்காக இவளை அடித்தான். ஆனால் இப்போது இவள் அவமானப்படுவதை பார்த்தும் பார்க்காதது போல் செல்கிறான்.
இவளுக்கு அவமானப்படுவது கூட பெரிய விஷயமாக தெரியவில்லை. ஆனால் குழந்தையை கையில் தூக்க முடியாததுதான் ரண வேதனையை தந்தது.
“என் மூஞ்சில முழிக்காம தூர போ..” என்ற சுலோச்சனா குழந்தையின் அழுகை நின்றதும் குழந்தையை தூக்கிக்கொண்டு தனது ரூமுக்கு கிளம்பி விட்டாள்.
மானசா தனது படுக்கையறைக்கு வந்தாள். மாமியாரின் கோபம் குறைந்தால் குழந்தையை கொடுத்து விடுவாள் என்ற நம்பிக்கையோடு சுவரோடு சாய்ந்து அமர்ந்தவள் தனது தலையெழுத்தை எண்ணி மனதுக்குள் புலம்ப ஆரம்பித்தாள்.
இவளுக்கு ப்ரீத்தி மீதுதான் கோபமே வந்தது. அவள் எதற்காக சாக வேண்டும்? அவள் இப்படி ஒருத்தனை திருமணம் செய்யாமல் இருந்திருந்தால் இங்கே எதுவும் வில்லங்கமாகி இருக்காது. இவளுக்கு இந்த வீட்டில் இருந்த ஒருவரை கூட பிடிக்கவில்லை.
எல்லாம் தெரிந்தும் நம்மை வெறுக்கின்றாள் இந்த மாமியார். சைக்கோவை விட மோசமாக நடந்து கொள்கிறான் கணவன். இது வீடு இல்லை. நரகமே பரவாயில்லை என்று நினைத்தாள்.
அன்று இரவு குழந்தையை எடுத்து வர மாமியாரின் அறைக்கு சென்றாள் மானசா.
தொட்டிலில் இருந்த குழந்தையின் அருகில் அமர்ந்து தாலாட்டி கொண்டிருந்தாள் சுலோச்சனா.
இவள் வந்ததும் நிமிர்ந்து பார்த்து முறைத்தவள் “இங்கே எதுக்கு வந்த?” என்று சீற்றமாக கேட்டாள்.
“குழந்தையை நைட்ல நான் தூங்க வச்சிக்கிறேனே..” என்று இவள் கெஞ்சலாக கேட்க, “குழந்தையை நீ இனி தொடக்கூடாது. அதை நான் முடிவு பண்ணிட்டேன். ஒழுங்கா என் ரூமை விட்டு வெளியே போ..” என்று கத்தாத குறையாக சொன்னாள் சுலோச்சனா.
இவள் அந்த அறையின் வாசலில் மண்டியிட்டாள்.
சுலோச்சனாவுக்கு கடுப்பானது. அன்றும் இப்படிதான் கேட்டின் வெளியே மண்டியிட்டு இல்லாத வார்த்தைகளை எல்லாம் சொன்னாள். இப்போதும் மண்டியிடுகிறாள். குழந்தை மீது உயிரே வைத்திருப்பது போல் நாடகமாடுகிறாள். நான் இவள் சொல்வதை எல்லாம் இனிய நம்பி விடுவேன் என்று அவ்வளவு மோசமாக என்னை நினைத்து விட்டாள் என்று மருமகளை மனதுக்குள் கரித்து கொட்டினாள்.
“நான் இந்த குழந்தைக்காகதான் உங்க பையனை கல்யாணம் பண்ணினேன். இந்த குழந்தையை என்கிட்ட குடுங்க ப்ளீஸ். ஈவினிங் நான் எந்த தப்பும் பண்ணல. உங்க பையன்தான் என்னை பாத்ரூம்ல அடைச்சி வச்சாரு..” என்று கண்ணீரோடு சொன்னாள்.
“எனக்கு உன் மேல இருக்கும் தப்பு மட்டும்தான் கண்ணுக்கு தெரியுது. அவன் அப்படிப்பட்டவன்னு தெரியுமில்லையா? உன்னால ஸ்ட்ராங்கா இருக்க முடியாது, குழந்தைக்காக போராட முடியாதுன்னா உனக்கு எதுக்கு இந்த குழந்தை? இந்த குழந்தைக்கு அம்மாவா இருக்கும் தகுதி உனக்கு கொஞ்சம் கூட கிடையாது. இது உன்னோட குழந்தையா இருந்திருந்தா அவன் உன்னை அடைச்சி வைக்கும்போது அமைதியா இருந்திருப்பியா? என் பேத்திக்கு ஒரு மாற்றாந் தாய் வருவான்னு நான் கனவுல கூட எதிர்பார்க்கல. ஆனா நீ வந்துட்ட. ப்ளீஸ் இந்த குழந்தையை என்கிட்ட இருந்து பிரிக்காத. எனக்கு உயிர் உள்ளவரை இந்த குழந்தையை நானே பார்த்துக்கிறேன்..” என்று முடிவாக சொன்னாள்.
ஆனால் மானசா அந்த இடத்தை விட்டு நகரவில்லை.
சுலோச்சனா கதவை நெருங்கினாள். மருமகளை பின்னால் தள்ளிவிட்டு கதவை அறைந்து சாத்தினாள்.
கீழே விழுந்த மானசா கண்ணீரோடு எழுந்து அமர்ந்தாள். மாமியார் சொன்னதும் சரிதான். நமக்கு இந்த குழந்தைக்கு அம்மாவாக இருக்கும் தகுதி இல்லை என்று நினைத்து தேம்பினாள்.
இரவு நிறைய வேலை இருந்த காரணத்தினால் தாமதமாகதான் வீட்டிற்கு வந்தான் தீனா.
அவன் தன் படுக்கையறைக்கு வந்தபோது மானசா தரையில் ஒரு ஓரமாய் படுத்திருந்தாள். பெட்ஷீட் தலையணை கூட இல்லாமல் குறுங்கி படுத்திருந்தவளை பார்க்கும்போது இவனுக்கு நெஞ்சு வலித்தது.
அவள் அருகில் பாய்ந்து போனான். அவளின் முகத்தில் கண்ணீர் தடங்கள் தெரிந்தன. முகம் வாடி போய் இருந்தது. அவளை புது மலராக மட்டுமே பார்க்க விரும்பினான்.
தொட்டிலில் குழந்தை இல்லை. அவளின் அழுகைக்கான காரணத்தை இவனால் யூகிக்க முடிந்தது.
அவளை அள்ளி தூக்கினான். கொண்டு வந்து கட்டிலில் கிடைத்தினான். உறக்கத்தில் இருந்தவள் கண்களை திறந்தாள். இவனைப் பார்த்ததும் கொஞ்சம் பயந்தாள்.
அவளின் கேசத்தை ஒதுக்கிவிட்டு கன்னத்தை வருடியவன் “அழகான தேவதை..” என்று வழக்கம்போல் பிதற்ற ஆரம்பித்தான்.
அவளுக்கு இவனை திருமணம் செய்யும் வரையிலும் நாம் அழகு என்று தெரியாது. ஆனால் இப்போது அவன் சொல்லும் அழகின் மீது அவ்வளவு வெறுப்பு வந்தது. எதற்காக இந்த அழகை ஆண்டவன் படைத்திருக்க வேண்டும்? மனிதருக்கு தேவை சுதந்திரம்தானே தவிர அழகென்ற பெயரில் அடிமை செய்ய நினைக்கும் இவனைப் போன்ற மனிதர்கள் அல்ல.
தொட்டிலை திரும்பிப் பார்த்தாள். “உங்கம்மா குழந்தையை கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க..” என்று கரகரத்த குரலோடு சொன்னாள்.
“அடுத்தவ குழந்தைக்காக ரொம்ப யோசிக்காத. உனக்கு தாலி கட்டி இருக்கேன். நான்தான் உன்னோட சொந்தமும் பந்தமும்..” என்றவன் அவளின் முகத்தின் அருகே குனிந்து அவளின் இதழை வருடினான்.
“என்னோட கஷ்டத்தைப் பார்த்து உங்களுக்கு மனசு இறங்கலதானே? நான் குழந்தைக்காகதான் கல்யாணம் பண்ணினேன்னு தெரிஞ்சும் உங்க அம்மா என்னை கேவலமா பேசுறாங்க. நீங்க என்ன கேவலமா யூஸ் பண்றீங்க. இதுக்காக நிச்சயம் நீங்க வருத்தப்படுவீங்க..” என்று மிரட்டலாக சொன்னாள்.
அவளின் கழுத்தை வலிக்காதவாறு பிடித்து அவளின் செவிமடலில் முத்தமிட்டவன் “அம்மா நம்ம ரெண்டு பேரும் மேலயும் ரொம்ப கோவமா இருக்காங்க. கொஞ்சம் டைம் கொடு. நான் அவங்ககிட்ட பேசிக்கிறேன். ஒரு ரெண்டு மூணு நாள் பொறுத்துக்க. அப்புறமா குழந்தையை வாங்கி தரேன்..” என்று சொன்னான்.
இவளின் ஏமாந்த உள்ளம் அவன் சொன்ன வார்த்தைகளை நம்பு என்று சொன்னது. காரியமாகும் வரை காலை பிடிக்க வேண்டும் என்பது போல் இவன் குழந்தையை வாங்கி தரும் வரையிலும் இவனின் ஆசைகளுக்கு மறுப்பு சொல்லாமல் இருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டாள். இல்லையென்றால் மட்டும் அவன் விட்டு விடவா போகிறான்?
அவளின் முகத்தில் கொஞ்சமே கொஞ்சம் தெளிவு வந்ததை கண்டவன் அவளின் இதழில் தன் இதழை உரசினான்.
மென்மையாய் ஒரு முத்தத்தை தந்து விட்ட விலகியவன் அவளின் ஆடையை விலக்க ஆரம்பித்தான்.
“கட்டிலை தவிர உங்களுக்கு வேற எதுவும் தெரியாதா? நான் உங்க கண்ணுக்கு வெறும் ஜடமா தெரியுறேனா?” மனம் பொறுக்காமல் கேட்டாள்.
அவளின் மேனியை அளந்தவன் “மனசை தருபவளா இருந்தா நானும் அந்த மனசை கொண்டாடி இருப்பேன். நீதான் மனசை தரமாட்டியே! அப்புறம் எதுக்காக நான் வீணா அதுக்காக டைம் வேஸ்ட் பண்ணணும்? எனக்கு இது மட்டும்தான் கிடைக்கும்ன்னா இதையே நான் கொண்டாடிக்கிறேன்..” என்று சொன்னான்.
முகத்தை மறுபக்கம் திருப்பினாள். ஆடைகளை கலைந்தவன் அவளின் ஆசைகளை எதிர்பார்க்காமல் தனது தேவைகளை தீர்க்க ஆரம்பித்தான்.
அவளின் விழிகளில் இருந்து கண்ணீர் சொட்டியது.
“ரொம்ப பண்ணாத. நான் உன்னை ரேப் பண்ற மாதிரி உனக்குள்ள நெனச்சுக்கிட்டு இருக்காத. இது தாம்பத்தியம்..” என்று சொல்லி முத்தங்களை தந்தான்.
“உனக்கு நான் தர கிஸ்ஸை பார்த்தா தெரியலையா எனக்கு உன் மேல எவ்வளவு ஆசைன்னு? என்னோட ஆசை நாயகி நீ. என்னோட தெய்வமும் நீ..” என்றான்.
அந்த வார்த்தைகளை கேட்கும்போது இவளுக்கு நெஞ்சம் கசந்தது. வாந்தி வராத குறை.
“என்னோட உடம்பையே உனக்காக தந்திருக்கேன். என் மனசையும் உனக்காக தந்து இருக்கேன். நீ என்ன சொன்னாலும் அதை நான் செய்வேன். ஆனா நீ என்னை எப்பவும் லவ் பண்ணனும். அதுவும் உண்மையா லவ் பண்ணனும்..” என்று சொன்னான்.
காதலா? அது உயிர் போனால் கூட இவளின் மனதுக்குள் உருவாகாது.
அன்றைய இரவு குழந்தை அருகில் இல்லாத காரணத்தினால் இவன் அவளை அந்த முழு இரவுக்கும் சொந்தமாய் எடுத்துக் கொண்டான். கொடுத்த முத்தங்கள் மலையளவு சேரும். இவள் பிணம் போல் கிடந்தாலும் அவன் தன் ஆசைக்கு குறை வைக்கவில்லை.
அவனே கொண்டாடினான். அவனே அவளை எடுத்துக் கொண்டான். அவள் அரை தூக்கத்தில் நுழைந்த பிறகும் அவனின் முத்தங்களும் தேடல்களும் தொடர்ந்து கொண்டே இருந்தது. அவனின் கைகள் அவளின் அத்தனை இன்பங்களையும் களவாடி தீர்த்தது.
மறுநாள் எழுந்த போது அவளுக்கு பயங்கரமான உடல் வலி. அத்தனைக்கும் காரணம் அவளின் கணவன்தான். அவனுக்கு உடல் வலி எதுவும் இல்லை. சாதாரணமாய் எப்போதும் போல் தயாராகி அலுவலகம் கிளம்பி விட்டான்.
இவள் தயாராகி கொண்டு குழந்தையை பார்க்க சென்றாள். ஆனால் மாமியார் குழந்தையின் அருகில் கூட இவளை விடவில்லை. மாமியாரின் இந்த பிடிவாதம் எந்த அளவுக்கு மோசமானது என்று அப்போதைக்கு அவளுக்கு தெரியாது.