தணலின் சீதளம் 12

4.5
(14)

சீதளம் 12

அசைவற்று நின்ற மேகாவை வேந்தன் தோளைப் பிடித்து உழுக்க சட்டென அவன் புறம் திரும்பியவள் அவனுடைய கையைத் தட்டி விட்டாள்.
“இங்க பாருங்க மோதிரத்தை குடுங்க நான் போறேன்” என்று மீண்டும் அவன் முன்னே கை நீட்ட, அவனோ தன்னுடைய கையில் இருந்த மோதிரத்தையும் அவளையும் அவளுடைய கையையும் மாறி மாறி பார்த்தவன்,
“ கண்டிப்பா கொடுக்கணுமா” என்று கேட்டான்.
அவளும்,
“ ஆமா கண்டிப்பாக வேணும்” என்று அவள் சொல்ல வேந்தனோ மோதிரத்தை அவள் கையில் கொடுத்தான்.
அதை வாங்கியவளோ உள்ளே சென்று விட்டாள்.
வேந்தனோ அவளையே பார்த்துக் கொண்டு நிற்க அவன் அருகில் வந்த சக்தியோ அவனுடைய தோளில் தட்டியவன்,
“ என்ன மாப்ள பயங்கர லவ் போல இருக்கு” என்று கேட்க இவனோ,
“ டேய் அதெல்லாம் ஒன்னும் இல்லடா நீ வேற” என்றவாறு நழுவினான்.
சக்தியோ விடாமல்,
“ டேய் நடிக்காதடா அன்னைக்கு என்னடான்னா அந்த பிள்ளைக்கு உங்க வீட்ல வச்சு முத்தம் கொடுத்த. இப்ப என்னடான்னா அந்த பிள்ளை கைல முத்தம் கொடுக்கிற. இதையெல்லாம் பார்த்தா லவ்வுன்னு சொல்லாம வேற என்னன்னு சொல்றது” என்று கேட்டான் சக்தி.
அதற்கு வேந்தனோ அவனை ஏறிட்டு பார்க்க,
“ என்ன பார்க்கிற அன்னைக்கு நான் என் ரெண்டு கண்ணால பார்த்தேன்” என்று சக்தி சொல்ல உடனே வேந்தன் அவன் சொல்வது காதில் விழாதது போல் முன்னே கடந்து போக,
“ டேய் என்னடா எதுவுமே சொல்லாம போற”
“ என்ன சொல்லணும்” என்றவாறு அவனை நோக்கி திரும்பினான் வேந்தன்.
இப்பொழுது அதிர்ந்தது சக்தியே.
“ டேய் நீ என்னடா ஆ-ன்னா ஊ-ன்னா அந்த பிள்ளைக்கு முத்தம் கொடுக்கிற லவ்வான்னு கேட்டா இல்லைன்னு சொல்ற இப்படி சொன்னா இதை நாங்க என்னென்னு எடுத்துக்கறது. மத்த பசங்க மாதிரி நீ அவ்ளோ கெட்டவனும் கிடையாது. இதுவரைக்கும் எனக்கு தெரிஞ்சு பொண்ணுங்க கிட்ட எட்ட நின்னு தான் பேசி நான் பார்த்து இருக்கேன். ஆனா இந்த பொண்ணு கிட்ட எல்லாமே வேற மாதிரி நடந்துக்கிறயே டா. உன் மனசுல ஒன்னும் இல்லாமலா அப்படி நடந்துக்குற” என்று சக்தி கேட்க, அப்பொழுதும் அவன் பிடி கொடுக்காமல்,
“டேய் நீயா ஏதோ ஒன்னு நினைச்சுக்காத என் மனசுல அப்படி எல்லாம் எதுவும் கிடையாது. நல்லா இருக்குற மனச அதை இதை சொல்லி கெடுத்து விடாதே. அவ முதல் தடவை என்ன பார்த்ததுல இருந்தே என்னை சீண்டி கிட்டே இருந்தா அதான் சும்மா அவகிட்ட விளையாண்டேன். மத்தபடி நீ சொல்ற ஒரு ஈர வெங்காயமும் கிடையாது. அப்படி ஏதாவது இருந்தா உன்கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்ல போறேன். இப்ப வரைக்கும் அந்த எண்ணம் வரல இதுக்கு மேல வந்தா பாத்துக்கலாம்” என்றவன் அவனையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.
“அம்மா இந்தாங்க மோதிரம்” என்று மேகா மோதிரத்தை கொடுக்க போக, சட்டென யாரும் எதிர்பாராத வகையில் அந்தக் கூட்டத்திற்குள் நுழைந்த கதிரவனோ மேகாவின் கையில் இருந்த மோதிரத்தை தன்னுடைய கைக்கு தட்டிப்பறித்தான்.
இந்த நிகழ்வை யாரும் எதிர்பாராததால் அனைவருடைய பார்வையும் அவன்மேல் கேள்வியாக பதிய, அதை உணர்ந்தவன் போல,
“ என்ன பாக்குறீங்க இந்த நிச்சயதார்த்தம் நடக்கக் கூடாது. நானும் இதோ இங்க நிற்கிறாளே பூங்கொடி இந்த பொன்னும் காதலிக்கிறோம்” என்று மிகப் பெரிய பொய்யை தூக்கி போட்டான்.
சிறிது நேரத்தில் அந்தக் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
“ என்னங்க இது திடீர்னு இந்த பையன் வந்து இந்த பொண்ண லவ் பண்றதா சொல்றான் ஒருவேளை இருக்குமோ.” என்றும்,
“இந்த சின்னச்சாமிக்கு இது தேவைதான் ஒத்த பொண்ணா இருக்கு கால காலத்தில கல்யாணத்தை பண்ணி பேரன் பத்தி எடுன்னு சொன்னா.. இல்ல எல்லாரும் போலையும் என்னால என் புள்ள வாழ்க்கையை சீரழிக்க முடியாதுன்னு சொல்லி பெரிய படிப்பு படிக்க வச்சாருல்ல இப்ப பாரு.. இப்ப நடக்குற நிச்சயதார்த்தம் கூட இந்த பொண்ணு காதலிச்ச பையன் கூடதான்னு சொன்னாங்க.. இப்ப என்னடான்னா இன்னொரு பையன் வந்து நானும் அவளும் லவ் பண்றோம்னு சொல்றான் கலிகாலம் கலிகாலம்”
என்று ஆளாளுக்கு ஒவ்வொன்றும் குசுகுசுவென்று பேசிக் கொண்டிருக்க, பூங்கொடியின் அப்பா அதை காதில் வாங்கியவருக்கோ நிலைகொண்டு நிற்க முடியவில்லை.
அவருடைய வாடிய முகத்தைக் கண்ட பூங்கொடியோ தந்தையிடம் சென்றவள், அப்பா எனக்கு இவரை யாருன்னு தெரியாது. நான் இதுக்கு முன்னாடி அவரை பார்த்தது கூட கிடையாது. நான் லவ் பண்ணது ராம்தான். இவரை நான் இதுக்கு முன்னாடி பார்த்ததே கிடையாது இவரு பொய் சொல்றாரு”
“யாரு நான் பொய் சொல்றேனா இங்க பாரு நீயும் நானும் சேர்ந்து எடுத்துகிட்ட போட்டோவை” என்று அங்கு அனைவரின் முன்னிலையிலும் காட்டினான் கதிரவன்.
அதில் கதிரவனும் பூங்கொடியும் கட்டிப்பிடித்து சிரித்துக் கொண்டிருப்பது போல இருந்தது.
“ அப்பா அது நான் இல்ல இவர் பொய் சொல்றாரு நம்பாதீங்க”
என்று அழுக ஆரம்பித்தாள்.
கூட்டத்தில் இருந்த மற்றொருவரோ,
“ அட என்னமா நீ அந்த தம்பி தான் நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருக்குற போட்டோவை காமிக்குது. நீயும் சிரிச்ச மாதிரி தான் அதுல இருக்க. இப்ப வந்து நான் லவ் பண்ணலைன்னு சொன்னா என்ன அர்த்தம்” என்று கேட்டார்.
ராமுவோ,
“ இல்ல அப்படி இருக்காது நீங்க யாரு என் பூங்கொடிய தப்பா சொல்லாதீங்க அவ என்னதான் லவ் பண்றா இவன்தான் பொய் சொல்றான்” என்றான்.
“டேய் யாரு பொய் சொல்றா காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் ஆட்டைய போடுற மாதிரி நான் காதலிச்ச பொண்ண நீ கல்யாணம் பண்ணிட்டு போகலாம்னு நினைக்கிறாயா? ஒழுங்கா இந்த நிச்சியதார்த்தத்தை நிறுத்துங்க” என்றான் கதிரவன்.
உடனே மேகா கதிரவன் முன்னால் போய் நின்றவள்,
“ ஏய் யார் நீ புதுசா இங்க வந்து குழப்பம் பண்ணிக்கிட்டு இருக்க பூங்கொடியும் நீயும் காதலிச்சீங்களா இதை இந்த ஊர்ல எவனாவது காதுல பூ வச்சிக்கிட்டு சுத்திக்கிட்டு இருப்பான்ல அவன் கிட்ட போய் சொல்லு” என்று அவனிடம் சண்டைக்கு சென்றாள்.
கதிரவனோ,
“ ஏய் நீ யாருடி ஒழுங்கா ஓடிரு நானும் பூங்கொடியும் ரெண்டு வருஷமா காதலிச்சு கிட்டு இருக்கோம் உனக்கு என்ன தெரியும். மரியாதையா ஒதுங்கி போ இல்லன்னா என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது” என்றான் கதிரவன்.
“டேய் நீ என்ன கோமால இருந்துட்டு வந்தியா. நானும் பூங்கொடியும் பெஸ்ட் பிரெண்ட்ஸ். ஒரே காலேஜ்ல ஒன்னா படிச்சுக்கிட்டு இருக்கோம். அதோ போல இங்க நிக்கிறானே மாப்பிள்ளை நாங்க மூணு பேருமே கிளாஸ்மேட்ஸ். நீ சொன்னியே நீங்க ரெண்டு பேரும் லவ் பண்ணி ரெண்டு வருஷம் ஆகுதுன்னு இவங்க ரெண்டு பேரும் லவ் பண்ணியும் ரெண்டு வருஷம் ஆகுது. இவ இங்க ஊருக்கு வர்றது ரொம்ப அரிது தான். அதுவும் போக அவ இங்க ஊருக்கு வரும்போது எல்லாம் நானும் வந்திருக்கேன். எங்க சுத்துனாலும் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் போவோம் வருவோம் அப்படி இருக்கும்போது நீ எப்படி இவ்வளவு லவ் பண்ணி இருக்க முடியும்” என்று மேகா கேட்க.
“அது அது” என்று கதிரவன் திணற, மேகாவோ சிரித்தவாறு தன்னுடைய இரு கரங்களையும் தட்டியவள்,
“ என்னடா பதில் சொல்ல முடியாம முழிக்கிற. நீ சொல்றது எல்லாம் உண்மைன்னா ஏன் இப்போ தயங்குற இப்ப புரியுதா உங்க எல்லாருக்கும். இவன் தான் பொய் சொல்றான் சும்மா ஆளாளுக்கு வாய்க்கு வந்தபடி பூங்கொடியா பேசினீங்க அவ்வளவுதான் சொல்லிட்டேன்” என்று கத்தினாள் மேகா. இங்கு கதிரவனுக்கோ மேகா அவனை கேள்வி மேல் கேள்வி கேட்டு அவனுடைய எண்ணத்தை நிறைவேற விடாமல் செய்வதை பார்த்தவனக்கோ கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது.
இருந்த மொத்த கோபத்தையும் அவள் மேல் காட்டும் பொருட்டு அவளை அடிக்க கையை ஓங்கினான்.
அவன் இப்படி தன்னை அடிக்க கை ஓங்குவான் என்று எதிர்பாராத மேகாவோ அவனுடைய அடியில் இருந்து தப்புவதற்கு நினைக்க அதற்குள் அவளை தன்னுடைய கைச்சிறைக்குள் கொண்டு வந்த வேந்தனோ கதிரவன் ஓங்கிய கையை மடக்கிப்பிடித்தான்.
ஐயோ பாவம் ஏற்கனவே வீரா அவனை முட்டியதால் ஒரு கை தொட்டிலில் ஆடிக் கொண்டிருக்க மற்றும் ஒரு கையால் மேகாவை அடிக்க ஓங்க அதுவும் வேந்தனின் கைகளில் சிறைப்பட்டுக் கொண்டது.
“எவ்வளவு தைரியம் இருந்தா இவ்வளவு பேர் மத்தியில ஒரு பொட்ட புள்ளையா அடிக்க கை ஓங்குவ. எவ்வளவு பட்டாலும் நீயும் உன் குடும்பமும் திருந்தவே மாட்டீங்களாடா” என்றவன் பிடித்த அவனுடைய கையை இறுக்க, வலி தாங்க முடியாமல் கத்த ஆரம்பித்தான் கதிரவன்.
“ டேய் வேந்தா கைய விடுடா”
அவன் கத்த கத்த விடாமல் அவன் கையில் இருந்த மோதிர பெட்டியை பிடுங்கிய வேந்தனோ மாப்பிள்ளை பெண்ணிடம் கொடுத்துவிட்டு,
“ ரெண்டு பேரும் இவன் கண்ணு முன்னாடியே மோதிரத்தை மாத்துங்க இவனுக்கெல்லாம் அப்பதான் புத்தி வரும்” என்று சொல்லியவன் கதிரின் புறம் திரும்பி,
“ என்னடா இந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்தி எங்க குடும்பத்தை அசிங்கப்படுத்தலாம்னு நினைச்சியா? நீ என்ன பொய் சொன்னாலும் அதை நம்புறதுக்கு நாங்க என்ன சொம்ப பயலுகளா. இங்க பாரு எது செய்யறதா இருந்தாலும் நேருக்கு நேரா செய்யுங்க. இப்படி எங்க குடும்பத்தை பழி வாங்கறதா நெனச்சுக்கிட்டு ஒரு பொண்ணோட வாழ்க்கையை கெடுக்க நினைக்கிறியே நீ எல்லாம் ஒரு மனுஷனா. ஏற்கனவே ஒரு கை ஒடிஞ்சு கிடக்கு அதனால போனா போகுதுன்னு விடுறேன் இல்லேன்னு வை இந்த கையையும் உடைச்சு விட்டு இருப்பேன். அதுக்கு பிறகு திங்கிறதுக்கும் கழுவுறதுக்கும் இன்னொரு ஆளைத் தான் நீ எதிர்பார்க்க வேண்டி இருக்கும்” என்ற வேந்தன் அவனுடைய கையை விட்டான்.
“டேய் எப்பவும் நீயே ஜெயிச்சுகிட்டு இருக்க மாட்ட ஒரு நாள் இல்ல ஒரு நாள் உன்னையும் உன் குடும்பத்தையும் தோற்கடிப்பேன்டா இத ஞாபகம் வச்சுக்கோ” என்றான் கதிரவன்.
“அப்படி ஒன்னு நடந்தா பார்த்துக்கலாம் போடா” என்று வாசலை நோக்கி தள்ளிவிட்டான் வேந்தன்.
அங்கு அத்தனை பேர் சொன்னாலும் அவமானப்பட்ட கதிரவனோ மனதில் மேலும் மேலும் நயவஞ்சகத்தை உருவாக்கியவன் அவ்விடம் விட்டு சென்றான்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

1 thought on “தணலின் சீதளம் 12”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!