சீதளம் 20
கட்டுக்கடங்காத கோபத்தில் இங்கிருந்து சென்னை சென்றவனோ அங்கு மேகாவின் வீட்டிற்கு சென்று அவளுக்கு நடக்கவிருந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்தி அவள் கழுத்தில் தாலி கட்டியவன் அதே வேகத்தில் வீடு வந்து சேர்ந்தான்.
இங்கு அவன் வீட்டிலோ அவன் அங்கிருந்து சென்றதும் அவனுக்கு எவ்வாறு இந்த விடயம் தெரிந்தது ஒருவேளை தங்கள் மகள் சொல்லி இருப்பாளோ. இல்லையே தான் அவளிடம் சத்தியம் வாங்கினேன் அவனிடம் சொல்லி விடக்கூடாது என்று. பின்பு எப்படி அவனுக்கு தெரிந்தது என்று யோசித்தார் அன்னலட்சுமி.
அன்று மாலை வீட்டிற்கு வந்த அறிவழகியிடம் அன்னலட்சுமி கேட்க அவளோ தான் சொல்லவில்லை என்று சொன்னதும்,
“ நீயும் சொல்லலனா உங்க அண்ணனுக்கு எப்படி இந்த விஷயம் தெரிஞ்சது அவன் இங்க வந்து எங்க கிட்ட என்ன நடந்ததுன்னு கேட்டுட்டு கோவமா இங்க இருந்து போனான்” என்று சொல்ல அதைக் கேட்டு புன்னகைத்த அறிவழகையோ,
“ ஐ சூப்பர் அண்ணாவுக்கு விஷயம் தெரிஞ்சிட்டா கண்டிப்பா இதுக்கு அண்ணா பலமா பதிலடி கொடுக்கும் இப்ப நான் ஹேப்பியா இருக்கேன்” என்று அறிவழகி சொல்ல அதற்கு அன்னலட்சுமியோ,
“என்னடி இப்படி சொல்ற நானே பயந்து போய் இருக்கேன் நீ வேற என்னென்னமோ சொல்லி பயம் காட்டாத”
“அம்மா நீங்க கவலையே படாதீங்க அண்ணாவ பத்தி எனக்கு நல்லா தெரியும் அவன் இந்நேரம் சென்னைக்கு கிளம்பி இருப்பான்” என்று சொல்ல அப்பத்தாவோ,
“ அடி ஆத்தி என்ன நடக்குமோ தெரியலையே” என்று அவர் ஒரு பக்கம் பயப்பட அறிவழகியோ,
“ அப்பத்தா அண்ண தரமான சம்பவம் செய்யாம இங்க வரமாட்டான்” என்றாள்.
அதேபோல நேற்று காலை கிளம்பியவன் இன்று இரவு ஆகியும் வராமல் இருக்க அன்னலட்சுமிக்கும் வடிவுக்கரசிக்கும் பயம் பிடித்துக் கொண்டது.
அன்றைய இரவும் கழிந்து விட அதிகாலை ஐந்து மணி போல் எழுந்த அன்னலட்சுமி வாசலை பெருக்குவதற்காக வெளியே வர அப்பொழுதே வேந்தனுடைய கார் அவர்கள் வீட்டு வாயிலில் வந்து நின்றது.
உடனே மகனை கண்டு கொண்ட அன்னலட்சுமிக்கு அப்பொழுது தான் உயிரே வந்தது.
“ ஐயா ராசா எங்கய்யா போன ரெண்டு நாளா வீட்டுக்கே வரல நீ. எத்தனை முறை போன் பண்ணாலும் எடுக்கவே இல்ல எங்கய்யா போன” என்று வந்ததும் வராததுமாக இரண்டு நாளாக மகனைப் பார்க்காத ஏகத்தில் அவனுக்கு என்னானதோ ஏதானதோ என்று விசாரித்தார் அன்னலட்சுமி.
தாயின் பரிதவிப்பை கண்ட வேந்தனுக்கோ அப்பொழுதுதான் புரிந்தது தன்னுடைய கோபத்தில் இவர்களை மறந்து விட்டோமே என்று.
“ அம்மா எனக்கு ஒன்னும் இல்லம்மா நான் நல்லா தான் இருக்கேன் வாங்க உள்ள போவோம்”
“ என்னைய்யா முகம் எல்லாம் இப்படி சோர்ந்து கிடக்குது தூங்கவே இல்லையா கண்ணு ரெண்டும் செவந்து போய் இருக்கு” என்று மகனை ஆராய அவனோ,
“ அம்மா எனக்கு ரொம்ப சோர்வா இருக்கு நான் போய் தூங்குறேன் என்னை எழுப்பாதீங்க” என்று அவன் சொல்ல அன்னலட்சுமியோ,
“ ஐயா ஒருவாய் காபி தண்ணியாவது குடிச்சிட்டு போயேன்” என்று கேட்க அவனோ,
“ அம்மா வர்ற வழியில நான் குடிச்சிட்டு தான் வந்தேன் நான் போய் கொஞ்ச நேரம் தூங்கி எழுந்திட்டு வாரேன்” என்று அவன் சொல்ல அதற்கு மேலும் அவனை வற்புறுத்த நினைக்காத அன்னலட்சுமி,
“ சரிய்யா நீ போய் தூங்கு” என்று விட்டார்.
அவனும் தன்னுடைய அறைக்கு வந்தவன் பயணத்தின் களைப்பு தீரும் பொருட்டு குளியலறை சென்று குளித்துவிட்டு அப்படியே தன்னுடைய கட்டிலில் படுத்து விட்டான்.
அடுத்த சற்று நேரத்தில் ஆழ்ந்த நித்திரைக்கும் சென்று விட்டான்.
அவனுடைய மனதில் இருந்த கோபம் குறைந்தால் போல நிம்மதியான உறக்கத்திற்கு சென்று விட்டான் வேந்தன்.
சற்று நேரம் கழித்து ஒவ்வொருவராக எழுந்து வர அப்பொழுது அன்னலட்சுமி வடிவுக்கரசியிடம் மகன் வந்த விடயத்தை கூறினார்.
அப்பொழுது செல்வரத்தினமும் அறிவழகியும் வந்தார்கள்.
“ என்ன அண்ணா வந்துட்டானா எப்போ எங்கம்மா இருக்கான்” என்று ஆர்வமாக அறிவழகி கேட்க அனைவருக்கும் பொதுவாகவே அவர்,
“ இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் வந்தான் பாவம் புள்ள ரொம்ப சோர்வா இருந்தான் கொஞ்ச நேரம் தூங்கி எழும்பி வாரேன்னு அவன் ரூம்க்கு போய்ட்டான்” என்றார்.
“ என்னம்மா சொல்ற அவ்வளவுதானா நான் என்னென்னவோ எதிர்பார்த்தேன் ஆனா எதுவுமே நடக்கல போலயே” என்று ஏமாற்றமாக அவள் அங்கு உள்ள சோபாவில் அமர, உடனே அன்னலட்சுமி அவளை முறைத்தவர்,
“ என்னடி நீ என்ன நெனச்ச நானே ரெண்டு நாள் கழிச்சு என் புள்ளைய பார்த்த சந்தோஷத்துல இருக்கேன் நீ என்னடான்னா இப்படி சொல்ற” என்று கேட்க அவளோ,
“ பின்ன என்னம்மா உன் பிள்ளைக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லை எவ்வளவு பெரிய பிரச்சனை நடந்திருக்கு இவன் வந்த கோபத்துக்கு இங்கிருந்து சென்னைக்கு போயிட்டு அவங்க அப்பாவ நாலு வார்த்தை நல்ல கேட்டுட்டு மேகா கழுத்துல தாலிய கட்டி எனக்கு அண்ணி ஆக்கி வீட்டுக்கு கூட்டிட்டு வருவான்னு நினைச்சா இவன் என்னடான்னா எதுவுமே செய்யாம சும்மா வந்திருக்கான் நான் மட்டும் அவனுக்கு அம்மாவா இருந்திருந்தா அவனை வீட்டுக்குள்ளேயே நடையேத்தி இருக்க மாட்டேன் உனக்கு சாமர்த்தியம் பத்தல போம்மா” என்று அறிவழகி சொல்ல,
“ எடு விளக்கமாத்த என்ன பேச்சுடி பேசுற நீ சொன்ன மாதிரி ஏதாவது நடந்திருந்தா என் பிள்ளை நிலமை என்னத்துக்காகிறது நல்லவேளை அவன் ஒன்னும் உன்னை மாதிரி கிடையாது. கோபம் குறைகிற வரைக்கும் எங்கேயோ இருந்துட்டு இப்ப வீட்டுக்கு வந்து இருக்கான் நான் கும்பிடுகிற அந்த மீனாட்சி தான் அவனுக்கு அப்படி ஏதும் புத்தி போகாம நல்லபடியா கொண்டு வந்து என்கிட்ட சேர்த்து இருக்காங்க. அம்மா தாயே வர்ற சித்திரை மாசம் திருவிழாவுக்கு உனக்கு பொங்கல் வைக்கிறேன் தாயே” என்று அவசரமாக அந்த மீனாட்சி அம்மனுக்கும் ஒரு வேண்டுதல் வைத்தார் அன்னலட்சுமி.
அந்த நேரம் அவர்களுடைய வீட்டின் கதவைத் தட்டினாள் மேகா.
அனைவருடைய பார்வையும் வாசலை நோக்கியது.
அங்கு மேகாவோ கையில் பெரிய பெட்டியுடன் கழுத்தில் வேந்தன் கட்டிய தாலி தொங்க வாசலில் நின்று கொண்டிருந்தாள்.
அவளுடைய அந்தக் கோலத்தை பார்த்து அறிவழகியைத் தவிர மற்ற மூவருக்கும் பெரிய அதிர்ச்சியே.
தங்களுடைய மகள் சொன்னது போல் தான் நடந்திருக்குமோ. இந்த பெண் கழுத்தில் தாலியோடும் கையில் பெட்டியுடனும் இங்கு வந்து நிற்கிறாள் என்றால் என்று மூவருமே அதிர்ச்சியோடு நிற்க அறிவழகிக்கோ அந்த அதிர்ச்சி எல்லாம் இல்லை. இப்பொழுதுதான் அவளுக்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது. தன்னுடைய அண்ணன் தான் நினைத்தது
போலவே தான் செய்து கொண்டு வந்திருக்கிறான் என்று நினைத்தாள். ஆனால் என்ன தாலி கட்டி தன்னுடன் அழைத்து வருவான் என்று எதிர்பார்த்தால் தனியே வந்து விட்டான் அவ்வளவுதான் வித்தியாசம்.
அதனால் என்ன இங்கு இப்பொழுது மேக வந்து அவளுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து விட்டாள்.
“ ஐ அண்ணி வாங்க வாங்க” என்று மகிழ்ச்சி துள்ளலுடன் இன் முகமாக அவளுடைய கையைப் பிடித்து உள்ளே அழைத்து வந்தாள் அறிவழகி. மேகாவோ வேந்தன் அங்கிருந்து சென்றதும் தன்னுடைய தந்தை தாழியை கழட்ட சொல்ல அதை கழட்ட மாட்டேன் என்று சொன்னவள் உடனே அங்கிருந்து மதுரைக்கு கிளம்பினாள். இனி தன் வாழ்க்கை அந்த ஏலியனுடன் தான் என்று முடிவு எடுத்த பின்பு இங்கு வந்து சேர்ந்தாள்.
‘அது எப்படி எவ்வளவு தைரியம் இருந்தால் என் கழுத்தில் தாலியை கட்டிவிட்டு எதுவும் நடவாதது போல் வந்து விட்டால் நான் சும்மா இருக்கணுமா. ஏண்டா இவ கழுத்துல தாலிய கட்டுனோம்னு காலத்துக்கும் நீ பீல் பண்ணனும் டா’ என்று வேந்தனை மனதுக்குள் கருவிக்கொண்டாள் மேகா. உள்ளே வந்தவள்,
“ எங்க உங்க புள்ள” என்று அன்னலட்சுமிடம் கேட்டாள்.
“ அண்ணி அண்ணனா மேல அவர் ரூம்ல தூங்குறாரு” என்று அறிவழகி சொல்ல,
“ ஓ செய்யறது எல்லாம் செஞ்சுட்டு இவனுக்கு தூக்கம் ஒன்னு தான் கேடு எங்கே இருக்கு உங்க அண்ணாவோட ரூம்” என்று அவள் புறம் திரும்பியவள் கேட்க,
“ வாங்க அண்ணி நான் கூட்டிட்டு போறேன்” என்ற அறிவழகியோ அவளை கையோடு அழைத்து சென்றவள் பூட்டி இருந்த வேந்தனுடைய அறையின் முன்னே அவளை விட்டுவிட்டு கதவையும் தட்டி விட்டு சென்றாள். அவனோ ஆழ்ந்த நித்திரையில் இருந்தவன் கதவு தட்டும் சத்தம் கேட்டு கதவை திறக்க அங்கு தான் கட்டிய தாலிக்கயிறோடு நின்ற மேகாவை கண்டு திடுக்கிட்டு போனான் வேந்தன்.
♥️♥️♥️♥️♥️♥️