சீதளம் 21
“வாங்க அண்ணி நான் கூட்டிட்டு போறேன்” என்ற அறிவழகி மேகாவை வேந்தனின் அறை நோக்கி அழைத்துச் சென்றவள்,
“ இதுதான் அண்ணா ரூம் இருங்க நான் அவனை கூப்பிடுறேன்” என்று கதவைத் தட்டி,
“ அண்ணா அண்ணா கதவை திறயேன்” என்று கத்திக் கொண்டிருக்க ஆழ்ந்த தூக்கத்திலிருந்த வேந்தனுக்கோ அது எரிச்சலாக இருந்தது.
புரண்டு படித்தவன்,
“ ஐயோ இந்த அம்மா கிட்ட சொல்லிட்டு தானே வந்தேன் எழுப்பாதீங்கன்னு இப்ப எதுக்கு எழுப்பறாங்க” என்று புலம்பியவாறு எழுந்து வர அதற்குள் அறிவழகியின் தொடர அழைப்பு கேட்டுக் கொண்டே இருந்தது.
“ ஐயோ இரு அறிவு வரேன்” என்று கட்டியவன் கதவைத் திறந்து,
“ என்ன அறிவு ஏன் இப்படி அண்ணா அண்ணான்னு ஏலம் விட்டுட்டு இருக்க” என்று கத்தியவன் ஏறிட்டு பார்க்க அங்கோ அவன் தங்கை அறிவழகி இருக்கவில்லை, ஆனால் அவன் தாலி கட்டிய அவனுடைய புது மனைவி கையில் பெட்டியோடு அங்கு நின்று கொண்டிருந்தாள் கைகளைக் கட்டியவாறு.
அவளை இங்கு எதிர்பார்க்கவில்லை வேந்தன்.
“ ஏய் நீ இங்க என்னடி பண்ணிட்டு இருக்க” வேந்தன் கேட்க அதற்கு மேகாவோ,
“ என்ன டி யா இன்னொரு தடவை என்னை பார்த்து டின்னு சொன்ன மரியாதை கெட்டுடும்”
என்று இவள் சத்தம் போட,
“ இப்ப அது ரொம்ப முக்கியம் அப்படித்தான் சொல்லு வேன்டி இங்க என்னடி பண்ற” என்று மீண்டும் கேட்க அதற்கு அவளோ,
“ ஓ அப்படியாடா டால்டா. தாலி கட்டிட்டு நீ பாட்டுக்கு வந்துட்டடா நான் அங்க என்னடா செய்யறது அதாண்டா நீ கட்டின தாலியோட இங்க உன் வீட்டை தேடி வந்துட்டேன்டா” என்று வார்த்தைக்கு வார்த்தை டா போட்டு அழைக்க,
“ ஐயோ மானம் போகுது” என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டவன் அவளுடைய வாயை தன்னுடைய கையால் பொத்தி அறைக்குள் இழுத்தவன் கதவை சாத்தி விட்டான்.
வேந்தனின் அறை முன்பு மேகாவை விட்டுவிட்டு வந்த அறிவழகியோ தள்ளி நின்று அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அடிபொலி அண்ணனுக்கு ஏத்த ஆளுதான் எத்தனை டா போடுறாங்க அண்ணா ஒரு டீ சொன்னதுக்கு. ம்ம் அண்ணா உன்கிட்ட அவங்க மாட்டிக்கிட்டாங்கன்னு நினைச்சேன் ஆனா பாவம் நீ தான் அவங்க கிட்ட மாட்டிகிட்ட கடவுள் உன்னை நல்லா ஆள் கிட்ட கோர்த்து விட்டு இருக்காரு என்ஜாய் அண்ணா” என்று நினைத்துக் கொண்டவன் கீழே வந்து விட்டாள்.
இங்கு அறையில் உள்ளே,
“ டேய் ஏலியன் கைய எடுடா” என்று தன் வாயில் இருக்கும் அவனுடைய கையை தட்டிவிட்டாள் மேகா.
“இப்ப எதுக்குடி இத்தனை டா போடுற” என்று அவளுடைய வாயிலிருந்து தன்னுடைய கையை எடுத்தவன் அவளிடம் கேட்க அவளோ,
“ உன்னோட இந்த கொஸ்டினுக்கு எல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது டா நான் முதல்ல குளிச்சிட்டு வந்து அப்புறமா உன் கேள்விக்கு பதில் சொல்றேண்டா” என்று நாடகப் பாணியில் சொன்னவள்,
“ ஆமா எங்க பாத்ரூம் எங்க இருக்க” என்று அவனிடமே கேட்க அவனோ அவளை ஏற இறங்க பார்த்தவன்,
“ இங்க பாத்ரூம்லாம் இல்ல அப்படியே இருந்தாலும் அது உனக்கு சொல்ல முடியாது நீ யாரடி” என்று அவன் கேட்க அவளோ, அவள் கழுத்தில் தொங்கிய தாலியை கையில் எடுத்து அவன் முன்பு காட்டியவள்,
“ இந்த தாலி நீ கட்டினது தானே”
அவன் ஆமாம் என்று தலையசைக்க அவளோ,
“ அப்போ நான் யாருன்னு உனக்கு இப்ப நல்லா தெரிஞ்சிருக்கும் ஒழுங்கா பாத்ரூம் எங்க இருக்குன்னு சொல்லு” என்று அவள் கேட்க அவனுடைய கையும் தானாக பாத்ரூம் இருந்த திசையை காட்ட அவளோ,
“ வந்து உன்ன கவனிச்சிக்கிறேன்” என்றவள் குளியலறை நோக்கி சென்றுவிட்டாள்.
இங்கு இவனோ,
“ ஊப் என்னடா இது இவ எதுக்கு இப்ப இங்க வந்து இருக்கா” என்று அவன் யோசித்துக் கொண்டிருக்க,
“ டேய் ஏலியன் வேற புது சோப்பு ஒன்னு குடுடா” என்று பாத்ரூம் உள்ளே இருந்து அவள் குரல் கேட்க,
“ அதான் உள்ள சோப்பு இருக்கே அப்புறம் என்னடி”
“ ஹான் நீ யூஸ் பண்ண சோப் எல்லாம் என்னால போட முடியாது ஒழுங்கா வேற புது சோப்பு ஒன்னு கொண்டுவா” என்று அவள் சொல்ல,
“ அடிங்க உன்ன” என்று அவன் சொல்ல,
“ இப்ப நீ கொண்டு வரியா இல்ல கத்தவா” என்று அவள் சத்தம் போட,
“ அய்யோ இவளை என்ன செய்றது” என்று தன்னுடைய தலையில் அடித்துக் கொண்டவன்,
“ இருமா தாயே கொண்டு வரேன்” என்று சொன்னவன் தன்னுடைய கபோர்டில் இருந்து ஒரு புது சோப்பை எடுத்துக்கொண்டு போய் அவளிடம் கொடுப்பதற்கு பாத்ரூமின் கதவை தட்ட,
“ இரு இரு வரேன்” என்றவள் வாயில் பிரஷ் உடன் அவனைப் பார்த்தவள் குடு என்று கை நீட்ட,
“ ஏண்டி பிரஸ் கூடவா பண்ணாம வந்த” என்று அவன் கேட்க அவளோ ,
“இங்க பாரு என்கிட்ட என்னென்ன கேள்வி எல்லாம் கேட்கணுமா எல்லாத்தையும் ஒரு லிஸ்ட் போட்டு எழுதி வச்சுக்கோ நான் வெளிய வந்ததுக்கு அப்புறமா கேளு எல்லாத்துக்கும் பதில் சொல்றேன் இப்ப சோப்பை கொடுத்துட்டு கிளம்பு” என்றவள் அவன் சோப்பை கொடுத்ததும் தான் தாமதம் கதவை அடைத்துவிட்டாள்.
“எல்லாம் என் நேரம்” என்று அவன் புலம்பிக்கொண்டிருக்க கீழே இருந்து அவனுடைய அன்னை அவனை அழைக்கும் சத்தம் கேட்டது.
“ ஹான் இதோ வரேன் மா” என்றவன் கீழே செல்ல அங்கு அவனுடைய மொத்த குடும்பமும் அவனையே முறைத்துக் கொண்டிருந்தது.
கீழே வந்தவனை செல்வரத்தினமோ பளார் என்று அவனுடைய கன்னத்தில் ஒரு அரை விட்டார்.
“ என்ன காரியம் டா செஞ்சு வெச்சிருக்க” என்று கேட்டார்.
அதற்கு அவனோ,
“ நான் என்னப்பா செஞ்சேன் நான் பண்ணது தான் சரி அந்த ஆளு எவ்வளவு பெரிய பிசினஸ் மேனா வேணா இருக்கலாம் அதுக்காக உங்களை இப்படி அசிங்கப்படுத்துனதுக்கு நான் சும்மா இருக்கணுமா அதான் அந்த ஆளு எதை காரணம் காட்டி உங்களை அவமானப்படுத்தினானோ அதைத்தான் நான் செஞ்சேன்” என்றான்.
அதற்கு அவரோ,
“ என்னவேனா பேசட்டும் நான் உன்ன அப்படி தான் வளர்த்தேனா நீ இப்படி செஞ்சதுனால அந்த ஆளுக்கும் உனக்கும் என்னடா வித்தியாசம் இருக்கு. நீ எங்க மேல உள்ள பாசத்துல அந்த ஆள பழிவாங்க அந்த பொண்ணு கழுத்துல தாலி கட்டி இருக்க. உங்க ரெண்டு பேரோட கோபத்துக்கு அந்த பொண்ணு என்னடா பண்ணுச்சு அந்த பொண்ணு கழுத்துல அவன் விருப்பமே இல்லாமல் தாலி கட்டி இருக்க” என்று அவர் சொல்ல அப்பொழுதே அவனுக்கும் அது விளங்கியது.
தான் கோபத்தில் அவளுடைய கழுத்தில் தாலியை கட்டி விட்டோமே என்று உடனே தன் தந்தையிடம்,
“ என்ன மன்னிச்சிடுங்க பா எனக்கு என்னோட தப்பு புரியுது என்னதான் கோபம் இருந்தாலும் ஒரு பொண்ணோட விருப்பம் இல்லாம அவ கழுத்துல தாலி கட்டினது தப்புதான்” என்றான் அவன்.
“ நீ என்கிட்ட மன்னிப்பு கேட்டு எந்த பிரயோஜனமும் இல்லை அந்த பொண்ண கூப்பிடு அந்த பொண்ணு கிட்ட கேளு. அவளுக்கு உன் கூட வாழ விருப்பம் இருந்தா சரி அப்படி அந்த பொண்ணு இல்லன்னு சொல்லுச்சுன்னா எந்த ஒரு பிரச்சனையும் பண்ணாம நீ கட்டின தாலிய நீ கழட்டனும் என்ன புரியுதா” என்றார் செல்வரத்தினம்.
அதற்கு அவனும் சரி என்றான்.
“ அறிவு அந்த பொண்ண கீழ கூட்டிட்டு வாம்மா” என்றார் செல்வரத்தினம். “அவளோ சரிப்பா நான் கூட்டிட்டு வரேன்” என்றவள் மேகலாவை அழைக்க சென்றாள். அங்கு அறையில் அவளைக் காணவில்லை.
“எங்க போனாங்க” என்று அவளை தேட அப்பொழுதும் அங்கு பாத்ரூமில் இருந்து தண்ணீர் விழும் சத்தம் கேட்டது.
உடனே அறிவழகியோ,
“ அண்ணி சீக்கிரம் வாங்க அப்பா கூப்பிடுறாங்க” என்றாள்.
“ ஒரு அஞ்சு நிமிஷம் இதோ வந்துடுறேன்” என்றவள் சொன்னது போலவே ஐந்து நிமிடத்தில் வெளியே வந்தாள்.
வெறும் டவலோடு வந்தவளை,
“ அண்ணி அப்பா கூப்பிடுறாங்க நீங்க ரெடியாயிட்டு கீழே வாங்க நான் கீழ போறேன்” என்றாள். அவளும் சரி என்றவள் ஒரு அழகான புடவை ஒன்றை அணிந்து கீழே இறங்கி வந்தாள். செல்வரத்தினம் அவள் கீழே வந்ததும் அவளை அழைத்தவர்,
“ இங்க பாரும்மா என் பையன் செஞ்சதை நான் நியாயப்படுத்த விரும்பல அவன் செஞ்சது பெரிய தப்பு உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைனா சொல்லிருமா விருப்பமில்லாம தாலி கட்டுனதுனால அந்த உறவு ஏத்துக்கணும்னு எந்த அவசியமும் இல்லை. உனக்கு பிடிக்கலைன்னா அந்த தாலியை உன் கழுத்துல இருந்து கழட்டிறலாம்” என்றார்.