சீதளம் 23
வேந்தனுடைய வீட்டில் ஹாலில் அனைவரும் அமர்ந்திருந்தார்கள்.
அப்பொழுது வடிவுக்கரசி தன்னுடைய மகனிடம்,
“ஐயா நாளைக்கே நல்ல முகூர்த்த நாள் ஜோசியர் குறிச்சி கொடுத்திருக்காரு நாம நாளைக்கே இவங்க ரெண்டு பேருக்கும் ரிசப்ஷன் வச்சிருவோமா” என்று கேட்க,
“அம்மா நாளைக்கு எப்படிம்மா” என்று செல்வரத்தினம் கேட்க அதற்கு வடிவுக்கரசியோ,
“ஐயா புதுசா கல்யாணம் ஆனவங்க ரொம்ப நாளைக்கு பிரிச்சு வச்சா அது நல்லா இருக்காதுய்யா அதனாலதான் நான் அடுத்த முகூர்த்தத்திலேயே அவங்களுக்கு பங்க்ஷன் வச்சிரலாம்னு பார்க்கிறேன்” என்று சொல்ல அதை ஆமோதித்த செல்வரத்தினமோ,
“சரிமா அப்போ அப்படியே பண்ணிடலாம் எல்லா ஏற்படும் செஞ்சுருவோம்” என்றார்.
“அம்மாடி மேகா உன்னோட லக்கேஜ் எடுத்துட்டு அறிவு கூட அவ ரூம்ல தங்கிக்கோமா இன்னைக்கு மட்டும். நாளைக்கு பங்க்ஷன் முடிஞ்சதும் நீ என் பேராண்டி ரூமுக்கு போ” என்றார் அப்பத்தா.
“அவ இன்னைக்கு மட்டும் இல்ல இன்னும் எத்தனை நாள் வேணாலும் அவ அறிவுடைய ரூம்லயே இருக்கட்டும் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” என்று சொல்லிய வேந்தன் அனைவருடைய முறைப்பையும் பரிசாக வாங்கிக் கொண்டான்.
“என்ன பேராண்டி உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு என் பேத்தி உன் தங்கச்சி கூட தங்கனுமா நல்ல கதையா இருக்கு இன்னைக்கு ஒரு நாளைக்கு மட்டும் தான் என் பேத்தி உன் தங்கச்சி கூட அவ ரூம்ல தங்குவா நாளைக்கு பங்க்ஷன் முடிஞ்சதும் உன்னோட ரூம்ல தான் இருப்பா சும்மா கண்டதையும் பேசிக்கிட்டு இருக்காத” என்ற அப்பத்தா மேகாவின் புறம் திரும்பி,
“அம்மாடி மேகா நீ போம்மா அவனோட ரூம்ல இருந்து உன்னோட லக்கேஜ் எடுத்துட்டு வா” என்றார்.
அவளும் “சரி பாட்டி” என்றாள்.
உடனே வடிவுக்கரசியோ,
“ஆத்தா வாய் நிறைய அப்பத்தான்னு சொல்லு தாயி” என்று அவர் கேட்க அதற்கு லேசாக புன்னகைத்த மேகாவோ,
“சரிங்க அப்பத்தா இப்ப சரியா” என்று கேட்டாள்.
“என் ராஜாத்தி” என்றார்.
அவள் ஹாலில் இருந்து வேந்தனுடைய அறைக்குச் செல்ல அவளுக்கு முன்னமே அவனுடைய அறைக்குள் வந்த வேந்தன் அவள் வரவிற்காக காத்திருந்தான்.
அவன் எதிர்பார்த்தது போலவே மேகா உள்ளே வர கதவிற்கு பின்னால் மறைந்து இருந்த வேந்தனோ அவள் உள்ளே வரவும் கதவை அடைத்து தாழிட்டான்.
அந்த சத்தத்தில் வெடுக்கென திரும்பியவள் அங்கு வேந்தனை கண்டு ஏகத்துக்கும் முறைத்து தள்ளினாள்.
‘இந்த ஏலியன் இங்கே என்ன செய்யுது’ என்று நினைத்தவள்,
“நீ இங்கே என்ன பண்ற” என்று அவனிடமே கேட்டு விட்டாள்.
“லூசு இது என்னோட ரூம் என்னோட ரூம்ல நான் இருக்காம வேற யார் இருப்பா” என்றான் வேந்தன்.
“ஹலோ மிஸ்டர் ஏலியன் இது உங்க ரூமா இருந்திருக்கலாம் எப்போ இந்த தாலியை என் கழுத்துல கட்டினிங்களோ அப்பவே எனக்கும் இந்த ரூம்ல ஈக்குவல் ரைட்ஸ் இருக்கு” என்று அவள் சொல்ல,
“என்னடி சும்மா தாலி கட்டினேன் தாலி கட்டுனேன்னு சொல்லிக்கிட்டு இருக்க. உனக்கு என்ன சுத்தமா பிடிக்காது அப்படி இருக்கும்போது நீ சொல்றதெல்லாம் நம்ப முடியல”
“நம்புனா நம்பு நம்பாட்டி போ” என்று அவள் சொல்லிவிட்டு அவளுடைய லக்கேஜை எடுக்க போக இவனோ அவள் அருகில் வேகவேகமாக வந்தவன் அவள் இடையோடு கை கொடுத்து தன் பக்கம் திருப்பி தனக்கு நெருக்கமாக பிடித்து வைத்தவன்,
“என்னடி நான் பேசிகிட்டு இருக்கேன் நீ பாட்டுக்கு போயிட்டு இருக்க” என்று வேந்தன் கேட்க அதற்கு அவளும்,
“யோவ் லூசாயா நீ நானும் போன போகுதுன்னு பொறுமையா போனா ரொம்ப ஓவரா போற இங்க பாரு எனக்கு உன்ன சுத்தமா பிடிக்காது தான். இப்ப இல்ல எப்பவும் பிடிக்காது இந்த ஏலியனை”
“அப்புறம் எதுக்குடி இங்க வந்திருக்க உனக்கு யாரை பிடிச்சிருக்கோ அவன் கிட்டயே போக வேண்டியது தானே. அதான் நான் வரும்போது ஒருத்தனுக்கு இளிச்சுக்கிட்டே மோதிரத்தை மாட்டி விட போன இல்ல” என்று அன்று நடந்த நிச்சயதார்த்தத்தை கண்ட வேந்தனுக்கு கட்டு கடங்காமல் கோபம் வந்தது.
சற்று நேரம் தாமதித்து இருந்தால் கூட இன் நேரம் அவளுக்கு வேறு ஒருத்தனுடன் நிச்சயதார்த்தம் நடந்தே இருக்கும்.
அந்த கோபத்தை இப்பொழுது காட்டினான் அவளிடம்.
அவனுடைய கோபத்தை பார்த்த மேகாவுகோ அவன் தன்னை விரும்புகிறான் என்று அவனுடைய தந்தை கூறுவதை கேட்டவளுக்கு அவனை மேலும் சீண்டி பார்க்க ஆசை வந்தது.
“என்ன ஏலியன் செய்றது அதான் நீ வந்து அவனுக்கு மோதிரத்தை போட விடாம என் கழுத்துல தாலி கட்டிட்டியே ஆனாலும் அவன் ரொம்ப அழகா இருந்தான். ஃபாரின் மாப்பிள்ளை வேற” என்று அவனுடைய முகத்தை பார்த்துக் கொண்டே அவள் சொல்ல அவனுக்கோ வெறி ஏறியது.
“சொல்லுவடி சொல்லுவ இன்னொரு தடவை என் முன்னாடி அவன பத்தி பேசின அப்படியே கழுத்த நெருச்சி கொன்னுடுவேன். இங்க பாரு உன் கழுத்துல தாலி கட்டினது நான்தான். நான்தான் உன்னோட புருஷன் இந்த ஜென்மத்துல அது மாறாது” என்று அவன் கத்த அவளோ லேசாக புன்னகைத்தவள்,
“இப்பதான் ஒருத்தர் என்கிட்ட சொன்னாரு நீ ஏன் இங்க இருக்க உங்க அப்பா வீட்டுக்கு போக வேண்டியது தானே சும்மா தான் உன் கழுத்துல தாலி கட்டினேன் அப்படி இப்படின்னு இப்ப என்னடா மாத்தி பேசுறாரு” என்று அவள் கிண்டல் செய்ய,
அவளுடைய இந்த கேள்விக்கு அவனால் பதில் சொல்ல முடியவில்லை.
விட்டா இவ பேசிக்கிட்டே இருப்பா என்று மனதில் நினைத்தவன் சட்டென அவளை மேலும் தன் உடலோடு இறுக்கியவன் அவளுடைய இதழில் முத்தமிட ஆரம்பித்தான்.
அவளோ அவனிடமிருந்து விலக போராடியவள் ஒரு கட்டத்தில் தன் கழுத்தில் தாலி கட்டிய கணவன் தான் அவனை தன் துணைவனாக ஏற்றுக்கொண்டோம் இனி இது எல்லாம் நடப்பது இயல்பு தானே. அதை தான்தான் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என எண்ணியவள் அவனுடைய முத்தத்தில் லைத்து போனாள்.
அவனும் அவள் எதிர்ப்பு காட்டாமல் அமைதியாக இருக்கவும் அவனுடைய இதழ் முத்தத்தில் சுதந்திரமாக ஈடுபட்டவன் போல அவளை தன்வசம் ஆக்கிக் கொண்டிருந்தான் கொஞ்சம் கொஞ்சமாக.
ஒரு கட்டத்தில் அவளுக்கு மூச்சு முட்டுவது போல் இருக்க அவனுடைய கைகளில் இருந்து தோய்ந்து சரிய அவளை தன்னுடைய கைகளில் தாங்கியவன் தன்னுடைய இதழ்களை அவளுடைய இதழிலிருந்து பிரித்து எடுத்தான்.
அப்பொழுதே பெரிய மூச்சு எடுத்து தன்னை சமப்படுத்திக் கொண்டு நின்றவள்,
“டேய் ஏலியன் என்னைய முத்தம் கொடுத்து கொள்ளலாம்னு பிளான் பண்றியா. இங்க பாரு நான் ஒன்னும் இன்னும் மனசால உன்னை ஏத்துக்கல உனக்கு வேணா என் மேல விருப்பம் இருக்கலாம் ஆனா எனக்கு உன்ன இப்ப வரைக்கும் பிடிக்கல இன்னொரு தடவை என்கிட்ட இந்த மாதிரி நடந்து கிட்ட கொன்னுடுவேன் உன்ன” என்றவள் அவனை விரல் நீட்டி எச்சரிக்க அவனோ அவளைப் பார்த்து நக்கலாக புன்னகைத்துக் கொண்டவன்,
“என்னடி செய்வ” என்று கேட்டான். “என்ன செய்வேனா அத நான் செய்யும்போது பாத்துக்கோ வழியை விடு ஆளையும் மூஞ்சியும் பாரு. ஆ ஆ கிராதகா உதடு வலிக்குதுடா ஒரு முத்தம் கூட உனக்கு எப்படி கொடுக்கிறதுன்னு தெரியலை” என்று அவள் சொல்ல அவனோ,
“எனக்கு முத்தம் கொடுக்க தெரியலையா சரி எனக்கு தெரியல நீ எனக்கு சொல்லிக் கொடு” என்று அவள் முகத்துக்கு முன்னால் அவனுடைய முகத்தை கொண்டு போக,
“ அதுக்கு வேற ஆளை பாரு” என்று அவனை தள்ளி விட்டவள் தன்னுடைய லக்கேஜை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினாள்.
“சரியான திமிர் பிடித்தவ கொஞ்சமாவது அவ திமிரு அடங்கி இருக்கா இனி அடக்குறேண்டி உன் திமிர அப்புறம் என்ன சொன்னா என்ன பிடிக்கலையாமா போடிங்க சீக்கிரமே உன் வாயாலயே ஐ லவ் யூ ன்னு சொல்ல வைக்கிறேன் டி அப்படி சொல்ல வைக்கல என் பேரு மதுரைவேந்தன் இல்லடி” என்று சொல்லிக் கொண்டான் வேந்தன்.
ஆனால் பாவம் இவன்தான் அவள் பின்னாடி நாய்க்குட்டி போல சுத்த போகிறேன் என்று அறியவில்லை வேந்தன்.
Lovlyyyyyyyyyy epiiiiii ❤️❤️❤️❤️