சீதளம் 31
“அட அண்ணி வந்துட்டீங்களா வாங்க வாங்க. உங்களை பார்த்து எத்தனை நாள் ஆகுது. உங்ககிட்ட நிறைய பேசணும்” என்று உள்ளே வந்ததும் வராததுமாக மேகாவை பிடித்துக் கொண்டாள் அறிவழகி.
அவள் உள்ளே வந்ததும் அனைவரும் அவளிடம் ‘எக்ஸாம் எல்லாம் நல்லா செஞ்சியாம்மா’ என்று விசாரித்தனர்.
அவளும்,
“ம்ம் எல்லா எக்ஸாமும் சூப்பரா பண்ணி இருக்கேன் நல்ல ரிசல்ட் வரும்” என்று சந்தோசமாக பதில் உரைத்தாள்.
உடனே அன்ன லட்சுமியோ,
“சரிமா நீ போய் குளிச்சிட்டு வா நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என்றார்.
அவளும் சரி என்று தன்னுடைய அறை நோக்கி செல்ல போக வேந்தனோ,
“அப்பா நான் வயலுக்கு போயிட்டு வரேன்” என்று வெளியில் போக அதை காதில் வாங்கிய மேகாவோ,
‘இத்தனை நாள் கழிச்சு பொண்டாட்டி வந்து இருக்காளே அவ கூட கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ணுவோம்ன்னு தோணுதா இந்த ஏலியனுக்கு. வயலுக்கு போறேன் வாய்க்காலுக்கு போறேன்னு போறத பாரு’ என்று வாய்க்குள் முணுமுணுத்தவள் செட்டென அவனை நோக்கி திரும்பி,
“என்னங்க கொஞ்சம் இருங்க நானும் உங்க கூட வயலுக்கு வரேன்” என்றாள்.
“என்ன நீ என் கூட வயலுக்கு வருகிறாயா” என்று அவன் ஆச்சரியமாக கேட்க.
“ஆமா நான் இப்ப அப்படித்தானே சொன்னேன் உங்க காதுல மாத்தி எதுவும் விழலையே” என்று அவள் கேட்க.
“நீ இப்பதான் ஊர்ல இருந்து வந்திருக்க ரொம்ப டயர்டா இருப்ப நான் உன்ன இன்னொரு நாள் கூட்டிட்டு போறேன்” என்று அவன் சொல்ல.
“எனக்கு ஒன்னும் டயர்டா எல்லாம் இல்ல இங்க பாருங்க நான் ஆக்டிவா தான் இருக்கேன்” என்று சுற்றி அனைவரும் இருக்க தங்கு தங்கு என குதித்து காட்டினாள் மேகா.
அதை பார்த்து அனைவருக்கும் சிரிப்பு வர அவளிடம் காட்டிக் கொள்ளாமல் மௌனமாக சிரித்தார்கள்.
வேந்தனோ,
‘ஐயோ இவ என்ன பண்றா சரியான லூசு பொண்டாட்டி இவளை வச்சுக்கிட்டு நான் என்ன செய்யப் போறேன்னு தெரியல’ என்ற அவன் தலையில் அடிக்காத குறையாக புலம்ப,
“இங்கு அவனுடைய மனைவியோ,
“பார்த்திங்க தானே நான் ஆக்டிவா தானே இருக்கேன் இங்கேயே வெயிட் பண்ணுங்க நான் போய் குளிச்சிட்டு வந்து சாப்பிட்டு ரெண்டு பேரும் போகலாம்” என்று சொன்னவள் வேகமாக தன்னுடைய அறை நோக்கி சென்றாள்.
அவள் சொன்னது போலவே சிறிது நேரத்தில் குளித்து முடித்து வந்தவள் அன்னலட்சுமி சுட சுட இட்லி சாம்பார் சட்னி என வைக்க ஒரு பிடி பிடித்தவள் வேந்தனுடன் வயலுக்கு புறப்பட்டாள்.
இவ்வளவு நாட்களும் அவளுடைய குறும்புத்தனத்தை மிஸ் செய்த வேந்தனும் வெகுவாக அவளை ரசித்துக் கொண்டிருந்தான்.
வரும் வழி எங்கும் தன்னுடைய சுட்டிகார மனைவியை புல்லட்டின் கண்ணாடி வழியாக பார்த்துக் கொண்டே வந்தான் வேந்தன்.
அவர்களுடைய வயல் வந்ததும் அவன் இறங்கி முன்னே செல்ல அவளோ அவன் பின்னோடு சென்றவள் வயலில் கால் வைக்கும் முன் சற்று தயங்கி நின்று கொண்டிருந்தாள்.
தன்னுடன் வந்தவள் எங்கே காணவில்லை என்று சற்று தூரம் வந்தவன் அவளை திரும்பி பார்க்க, அவளோ அங்கு கரையிலேயே நின்று கொண்டிருந்தாள்.
“ஓய் என்ன அங்கேயே நின்னுட்ட வரலையா?
வயலுக்கு வரேன்னு அவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்ணி வந்த இப்ப அங்கே நின்னுட்ட” என்று அவன் கேலி செய்ய அவளோ,
“என்னால இந்த புடவையை கட்டிக்கிட்டு இதுல வர முடியல அதான் என்ன செய்யறதுன்னு யோசிச்சிகிட்டு இருக்கேன்.
இப்படி இருக்கும்னு தெரிஞ்சிருந்தா வேற டிரஸ் போட்டு வந்து இருப்பேன். நீங்களாவது சொல்லி இருக்கலாம்ல. எனக்குத் தான் தெரியாது உங்களுக்கு தெரியும் தானே”
என்று தான் புடவை கட்டியதால் வயலில் இறங்க முடியாமல் அவள் தவிக்க அதை அவனிடமே கோபமாக காட்டினாள் மேகா.
அவனோ,
“எது புடவையை கட்டிட்டு வயல்ல இறங்க முடியலையா?
கொஞ்சம் அங்க சுத்தி பாரு எவ்வளவு பொம்பளைங்க சேலையை கட்டிட்டு தான் வயல்ல இறங்கி வேலை பார்க்குறாங்க.
உனக்கு இந்த சேலையை கட்டிட்டு வயல்ல இறங்க கஷ்டமா இருக்கா” என்று கேட்டவாறு அவள் அருகில் வந்தான்.
அவளோ அவன் சொன்னது போல அங்கு சுற்றி பார்க்க அங்கு பல பெண்கள் சேலையை தூக்கி வரிந்து கட்டிக்கொண்டு வயலில் புள் நட்டிக் கொண்டிருந்தார்கள்.
“நான் என்ன இதுக்கு முன்னாடி வயல்ல வேலை பார்த்து இருக்கேனா எனக்கு அவங்களை மாதிரி கெட்டதெல்லாம் தெரியாது.
இப்ப இதை கட்டிக்கிட்டு நான் எப்படி உள்ள வர்றது ப்ளீஸ் ஏதாவது ஹெல்ப் பண்ணுங்க” என்று அவள் பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு கேட்க.
“என்னது உதவியா அதுவும் என்கிட்ட கேட்கிறது இந்த மேகாமேடம் தானா” என்று அவன் கிண்டல் செய்ய, அவனை முறைத்தவள்,
“என்ன பழி வாங்குறீங்களா இப்போ உங்களால உதவி செய்ய முடியுமா முடியாதா” என்று அவள் கோபமாக கேட்க.
இவனுக்கோ அவளை அப்படியே அள்ளி எடுத்து கொஞ்ச வேண்டும் போல் தோன்றியது.
‘அடியே வெள்ளை தக்காளி போதும்டி ஏற்கனவே இவளை இத்தனை நாள் கழிச்சு பார்த்ததில உடம்பெல்லாம் ஒரு மாதிரி பண்ணுது. இதில் இவ வேற சின்ன பிள்ளை மாதிரி பண்றேன்னு சொல்லிட்டு என்னென்னமோ பண்ணிக்கிட்டு இருக்காளே.
டேய் வேந்தா கொஞ்சம் அமைதியா இருடா.
ஏற்கனவே அவ செம கோவத்துல இருக்கா நீ ஏதாவது செய்ய போய் பிறகு அவ காளி ஆத்தாவா மாறினாலும் மாறிருவா’ என்று தன்னைத் தானே சமன்படுத்திக் கொண்டவன் நெஞ்சை நீவி விட்டு கொண்டு,
“சரி நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்” என்றவன்,
“கொஞ்சம் கிட்ட வா” என்று அழைக்க அவளோ,
“ஏன் நீ எங்க கிட்ட வந்தா ஆகாதா நான் தான் வரணுமா”
“அடியே உதவி தேவைப்படுவது உனக்கா இல்லை எனக்கா?”
“எனக்குத் தான் ஆனாலும் நான் வரமாட்டேன் நீங்க பக்கத்துல வாங்க” என்று வீம்பாக நின்று கொண்ட மனைவியை செல்லமாக திட்டிக் கொண்டவன், அவளுக்கு மிக அருகில் வந்து அவள் தொங்க விட்டிருந்த அவளுடைய முந்தானையை அவளுடைய இடையோடு கையெட்டு அந்த முந்தானையை கொத்தாக பிடித்தவன்,
அதை சுற்றி அவளுடைய இடையில் சொருகினான்.
அதில் விக்கித்தவளோ கண்கள் வெளியே குதிக்கும் அளவிற்கு அவனை ஏறெடுத்து பார்க்க,
அவனோ தன்னுடைய வேலையில் கவனமாக இருந்தான்.
பின்பு அவளுடைய இடுப்பில் இருந்த கொசுவ புடவையை சற்று மேலே தூக்கியவன் அதையும் அவளுடைய இடையில் சொருக,
அவனுடைய கையோ சற்று அவளுடைய இடையில் இருந்து உள்ளே செல்ல பெண் அவளுக்கோ ஒட்டுமொத்த நாணமும் அவளுடைய முகத்தில் சூடி கொண்டது.
மஞ்சள் நிற மேனியாலோ செக்க செவேலென சிவப்பாக காட்சியளிக்க அப்பொழுதே அவளுடைய நிலையை உணர்ந்தான் வேந்தன்.
அவளுடைய சிவந்த மேனியை கண்ட வேந்தனோ தன் இதழ்கள் கொண்டு மேலும் சிவக்க வைக்க நினைத்தான்.
மெதுவாக அவளுடைய காதின் அருகில் குனிந்தவன்,
“மேகா கொல்ரடி சத்தியமா என்னால என்ன கண்ட்ரோல் பண்ணிக்கவே முடியலடி.
பக்கத்துல மோட்டர் ரூம் இருக்கு அங்க போவோமா” என்று கிசுகிசுக்க.
அவனுடைய இந்த கிசுகிசுப்பான பேச்சில் சிவந்த மேனியோ சற்று நடுக்கத்தை தத்தெடுக்க, பல நாட்கள் கழித்து தன் கணவனின் அருகாமை அவளுக்கும் இனிமையை தர தலையை குனிந்து கொண்டு அவனுடைய பறந்த மார்பில் சாய்ந்து கொண்டாள் மங்கை அவள்.
வேந்தனோ அவளை தன்னுடைய கைகளில் அள்ளிக்கொண்டு மோட்டார் ரூம் சென்றவன் அங்கு சுற்றி வேலை பார்த்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் விடுமுறை அளித்தான்.
இருவரும் தங்கள் மனதில் உதித்த காதலை ஒருவரிடம் மற்றொருவர் பகிர்ந்து கொள்ளவில்லை.
ஆனால் உடலால் உணர்வுகளால் ஒருவரில் ஒருவர் ஆழமாக சங்கமித்து கொண்டார்கள்.
“நிலா காயுது
நேரம் நல்ல நேரம்.
நெஞ்சில் பாயுது
காமன் விடும் பானம்.
தண்ணீர் கேட்கும் ஏ கண்ணே தாகம் தனிஞ்சதா?
அத்தான் தேவை நான் தந்தேன் ஆசை குறஞ்சுதா?
கொட்டிக்கிடக்குது ஊரளவு
இதில் வெட்டி எடுத்தது ஓரளவு.
இன்று கொடுத்தது இதுவரைக்கும்
இனி நாளை இருப்பது இருவருக்கும்.
அன்பே நீ அதிசய சுரங்கமடி”
Nxt epiii sekrama upload panunga siss eagerly waiting….. ❤️❤️❤️❤️❤️