சீதளம் 34
“எங்க அப்பா மேல உனக்கு இன்னும் கோவம் போல இல்ல”
“ ஆமா” என்று வேந்தன் சொல்ல,
“இனி ஒரு நிமிஷம் கூட நான் உன் கூட இருக்க மாட்டேன் நான் என் அப்பா அம்மா கூட போறேன்” என்று சொல்லிவிட்டு அவள் ஒரு அடி எடுத்து வைக்க அவளுடைய கோபத்தை வெகுவாக ரசித்து கொண்டிருந்த வேந்தனோ சட்டென அவளை பிடித்து இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டவன் கட்டிலில் சரிந்து அவள் இதழில் கவி பாடத் தொடங்கினான்.
அவனிடமிருந்து தன்னுடைய இதழ்களைப் பிரித்தவள்,
“ என்ன விடு பிராடு ஏலியன் என்னை விடுடா” என்று அவனுடைய நெஞ்சை பிடித்து இவள் தள்ள, அவனோ அவளுடைய இதழை விட்டு மீண்டும் இதழை கொய்து ஆழமாக முத்தமிட்டவன்,
“ஏன்டி உங்க அப்பாவ சொல்லவும் உனக்கு அவ்வளவு கோவம் வருதா” என்று அவளுடைய நெற்றியில் இதழ் பதித்து அவன் கேட்க,
அவளோ,
“ பின்ன அவங்களே செஞ்ச தப்ப உணர்ந்து வந்து மன்னிப்பு கேட்டா நீங்க அவங்க மேல கோவப்பட்டா நான் பார்த்துக்கிட்டு சும்மா இருக்கணுமா” என்றாள்.
“ அடியே என் ஆசை பொண்டாட்டி முதல்ல எனக்கு கோபம் வந்துச்சு தான். அதுக்கப்புறம் என் அப்பா எனக்கு புரிய வச்சாரு நானும் உண்மை என்னன்னு புரிஞ்சுகிட்டேன். அதனால இப்போ உங்க அப்பா மேல எனக்கு கோபம் எல்லாம் எதுவும் இல்லை. சும்மா உன்னை சீண்டி பார்த்தேன் அவ்வளவுதான்.
ஆனால் அதுக்குள்ள என் பொண்டாட்டிக்கு எவ்வளவு கோபம் வருது” என்று வேந்தன் சொன்ன உடனே தன்னுடைய கண்களை பெரிதாக விரித்த மேகாவோ,
“ நிஜமாவா நிஜமா தான் சொல்றீங்களா உங்களுக்கு என் அப்பா மேல உள்ள கோபம் போயிடுச்சா” என்று ஆர்வமாக கேட்டாள்.
அவனோ அவளுடைய வதனத்தை ரசித்தவாறு,
“ ஆமா உண்மைய தான் சொல்றேன் நிஜமாவே உங்க அப்பா மேல உள்ள கோபம் எனக்கு போயிடுச்சு.
என்னதான் இருந்தாலும் என்னோட மாமனார் ஆச்சி எத்தனை நாளைக்கு கோபத்தை இழுத்து பிடித்து வைச்சிக்கிட்டு இருக்கிறது.
இப்படி ஒரு அழகான பொண்ண குடுத்து இருக்காரு. அவர் மேல ரொம்ப நாளைக்கு கோவத்தை காட்ட முடியுமா சொல்லு” என்று சொல்ல உடனே அவனைத் தாவி கட்டிக் கொண்டு மேகாவோ அவன் விட்ட முத்த யுத்தத்தை அவள் தொடர்ந்தாள்.
சந்தோஷத்தில் மிகப்பெரிய சந்தோஷம் தனக்கு பிடித்தவர்களை மகிழ்வித்து பார்ப்பது தான்.
காலை பொழுது விடிந்ததும் முதலில் எழும்பிய வேந்தனோ குளியலறை சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவன் மேகாவை எழுப்பி விட்டு அவளையும் தயாராக சொல்லிவிட்டு அவளுக்காக காத்திருந்தவன் அவள் வந்ததும்,
“மேக நேத்து நான் உன்கிட்ட ஒன்னு சொல்ல மறந்துட்டேன். நம்ம அறிவுக்கு அப்பா மாப்பிள்ளை பார்த்து இருக்கிறதா சொன்னாரு”
“ என்னங்க சொல்றீங்க நிஜமாவா”
“ ஆமா நைட்டே உன் கிட்ட சொல்லணும்னு நினைச்சேன் மறந்துட்டேன் அதான் இப்ப சொல்றேன். யார் இந்த மாப்பிள்ளைன்னு எனக்கு தெரியல அப்பா அவருக்கு தெரிஞ்சவர்னு சொன்னாங்க. இன்னைக்கு அவங்க கிட்ட பேசிட்டு அவங்க எப்போ அறிவ பார்க்க வருவாங்கன்னு சொல்லுவாங்க” என்றான்.
“ சூப்பர்ங்க.. ஹான் நானும் உங்ககிட்ட ஒன்னு சொல்லணும். நம்ம பூங்கொடியோட கல்யாணமும் இந்த மாசம் வருது”
“ ஓ அப்படியா ரொம்ப நல்ல விஷயம் நம்ம அறிவுக்கு இந்த சம்மந்தம் முடிவாய்டுச்சுன்னா இந்த மாசமே அவளுக்கும் கல்யாணத்தை வைச்சிடலாம்.
சரி பார்ப்போம் வா கீழ போலாம்” என்று இருவரும் வர அங்கு கிழே வர, மொத்த குடும்பமும் காலை உணவு உண்டு கொண்டிருந்தனர்.
இவர்களும் அவர்களுடன் வந்து இணைந்து கொண்டார்கள்.
அனைவரும் சாப்பிட்டு முடித்து சோபாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க அப்பொழுது சத்தியராஜ்,
“ சம்மந்தி அப்போ நாங்க கிளம்புறோம்” என்று சொல்ல செல்வரத்தினமோ,
“ என்ன சம்மந்தி அதுக்குள்ள கிளம்புறீங்க ஒரு ரெண்டு நாள் இங்க இருந்துட்டு போகலாமே”
“ இல்ல சம்மந்தி நாங்க இன்னொரு நாள் வந்து கண்டிப்பா ரெண்டு நாள் என்ன ஒரு வாரம் இருந்துட்டு போறோம். ஆனா உடனே கிளம்பி வந்ததால கண்டிப்பா நான் இப்ப அங்க போய் ஆகணும் என்ன தப்பா எடுத்துக்காதீங்க” என்றார் சத்தியராஜ்.
“ அதுவும் சரிதான் சரி சம்மந்தி நீங்க நல்லபடியாக போயிட்டு வாங்க.
இது உங்க வீடு நீங்க எப்ப வேணும்னாலும் வரலாம். எப்படி இங்க வந்து தங்குறது அப்படின்னு எல்லாம் யோசிக்க கூடாது.
எப்ப உங்க பொண்ணு எங்க வீட்டுக்கு மருமகளா வந்தாலோ அப்பவே அவ எங்க குடும்பத்துல ஒருத்தி.
அதே மாதிரி நீங்களும் எங்க குடும்பத்துல இன்னொரு அங்கமா மாறிட்டீங்க” என்று செல்வரத்தினம் சொல்ல சத்யராஜோ கண்கலங்கிவிட்டார்.
எப்பேர்பட்ட மனிதனை தான் எப்படி எல்லாம் நடத்தி விட்டோம் என்று மனம் வருந்தினார்.
“ ரொம்ப சந்தோஷம் சம்மந்தி மனசு ரொம்ப நிறைஞ்சிருக்கு நாங்க கிளம்புறோம்” என்று அனைவரிடமும் விடை பெற்ற சத்யராஜும் அவருடைய மனைவியும் கிளம்பினார்கள்.
அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் செல்வரத்தினத்திற்கு மாப்பிள்ளை வீட்டாரிடம் இருந்து போன் வர அதை எடுத்துப் பேசியவரின் முகத்திலோ அவ்வளவு ஆனந்தம்.
தன்னுடைய சந்தோஷத்தை தன் குடும்பத்திடம் பகிர்ந்து கொள்ள நினைத்த செல்வரத்தினம் புன்னகை முகமாக அவர்கள் அனைவரிடமும்,
“ இப்போ மாப்பிள்ளை வீட்ல இருந்து தான் பேசுனாங்க அவங்க நாளைக்கு பொண்ணு பார்க்க வராங்களாம்” என்று கூறினார்.
அதைக் கேட்டு அறிவழகியைத் தவிர மற்ற அனைவரின் முகத்திலும் அவ்வளவு சந்தோஷம்.
இது நான் விரும்பிய வாழ்க்கையா?
அவனை விட்டுவிட்டுப் போறேனா?
என்று சிந்தித்தவளோ வெளியே எதுவும் காட்டிக் கொள்ளாமல் கல்லூரிக்கு புறப்பட்டு சென்றாள்.
***
அந்த காலை சூரியன் கூட சிறிது மெதுவாக மேலே வந்தான்.
வீட்டை சுற்றியுள்ள பூந்தோட்டம் வரை ஒவ்வொரு இடத்திலும் ஒரு சிறிய பரபரப்பு.
செல்வரத்தினத்தின் முகத்தில் ஒரு புன்னகை மட்டும் தான் இருந்தது. ஆனால் அது ஒரு சாதாரண புன்னகையில்லை.
அந்த புன்னகைக்கு பின்னால்,
“இப்போ என் பொண்ணு ஒரு புதிய பாதையில் நடக்க போறா” என்றோர் நெகிழ்ச்சி இருந்தது.
அவர்களை காக்க வைக்காமல் மாப்பிள்ளை வீட்டார் வந்தார்கள்.
அவர்களை இன் முகமாக வரவேற்ற செல்வரத்தினத்தின் குடும்பமும் பரஸ்பரம் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
செல்வரத்தினமும் மாப்பிள்ளையின் தந்தையும் பாலிய கால நண்பர்கள் என்பதால் அந்த பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் பொருட்டு ஒருவரை ஒருவர் கேலி செய்து கொள்ள மற்ற அனைவரும் புன்னகைத்துக் கொண்டார்கள்.
இவ்வளவு நேரமும் பெண்ணை இப்பொழுது காட்டுவார்கள் அப்பொழுது காட்டுவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த மாப்பிள்ளை கபிலனோ தன்னுடைய அன்னையை முழங்கையால் இடித்து கண்களால் “பெண்ணை வரச் சொல்லுமாறு” சைகை செய்தான்.
அவனுடைய செய்கையை புரிந்து கொண்ட அவனுடைய அன்னையும் தன் கணவரின் காதை கடிக்க அவரும் தன் நண்பனின் காதை கடித்தார்.
“ சரி செல்வம் எங்க வீட்டுக்கு வர போற மகாலட்சுமியை சீக்கிரம் வர சொன்னா நாங்களும் கண்குளிர பாப்போம் இல்ல” என்றார் அவர்.
அதைக் கேட்ட செல்வரத்தினமும் புன்னகைத்தவர்,
“ அதுக்கு என்னப்பா இதோ இப்பவே வர சொல்றேன்” என்றவர் தன்னுடைய மனைவியை அழைத்து மகளை அழைத்து வரும்படி கூறினார்.
அவரோ தன் அருகில் நின்ற மேகாவை அழைத்துக் கொண்டு வந்தவர்,
“மேகா நீ போயி காபி டிரேயை எடுத்துட்டு அறிவோட ரூமுக்கு வா” என்று அவளை அனுப்பி வைத்தவர் அறிவழகியின் அறைக்குச் செல்ல அங்கு அவளோ, துளியும் இந்த திருமண பேச்சில் தனக்கு உடன்பாடு இல்லை என்பதை காட்டும் வகையில் அமர்ந்திருந்தாள்.
பார்ப்பதற்கு அவளுடைய தோற்றம் சர்வ லட்சணமாக இருந்தாலும் அவளுடைய முகமோ கலை இழந்து காணப்பட்டது.
“அறிவு என்னடி மூஞ்ச இப்படி வச்சிருக்க அங்க பாரு இந்த பட்டு புடவை, நகை எல்லாம் போட்டு எவ்வளவு அழகா இருக்க தெரியுமா. என் கண்ணே பட்டுடும் போல இருக்கு.
என் பொண்ணு அதுக்குள்ள இவ்வளவு பெரிய பொண்ணா வளர்ந்துட்டாலான்னு ஆச்சரியமா இருக்கு” என்று அன்னலட்சுமி சொல்ல அவளோ அதை ஒரு பொருட்டாக கூட நினைக்காமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.
அப்பொழுது கையல் டிரேயுடன் உள்ளே வந்த மேகாவோ,
“ அத்தை நான் கொண்டு வந்துட்டேன்” என்றாள்.
தன்னுடைய பார்வையை மேகாவின் புறம் திருப்பியவர்,
“ வாமா” என்று அவளை அழைத்துவிட்டு,
“ அறிவு வா இந்த டீயை வந்திருக்கிற எல்லாருக்கும் உன் கையால கொடு” என்று தன்னுடைய மகளிடம் அந்த ட்ரேவை வாங்கிக் கொடுத்து அவளை அழைத்து வந்தனர் அன்னலட்சுமி மேகாவும்.
தன்னுடைய மொபைலை பார்த்துக் கொண்டிருந்த அந்த மாப்பிள்ளை கபிலனோ தன்னுடைய தலையை சற்றே உயர்த்தி அறிவழகியை பார்த்தவனுக்கோ,
அவளை இப்பொழுதே திருமணம் செய்து கொண்டு தன்னுடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற முடிவை உடனே எடுத்துக் கொண்டான்.
பார்வையாளையே அவளை கபலிகரம் செய்து கொண்டிருந்தான் அவன்.