சீதளம் 35
தன் முன்னே காஃபியை நீட்டிக் கொண்டிருக்கும் அறிவழகியை அவளுடைய தலை முதல் கால் வரை ஒவ்வொரு அங்குலமாக கண்களாலையே கபலிகரம் செய்து கொண்டிருந்தான் அவளை பெண்பார்க்க வந்த மாப்பிள்ளை கபிலன்.
அவளோ கையில் உள்ள காபி கப்பை எடுத்து விட்டால் தான் அந்த இடத்தில் சிறிது நொடியேனும் நிற்க விருப்பம் இல்லை என்பதை போல் தலை குனிந்து அவள் நின்று கொண்டிருந்தாள்.
ஒரு வழியாக அவளை முழுவதும் பார்த்துவிட்டு காபியை அவன் எடுக்க, அவளோ அந்த இடத்தில் இருந்து சிட்டாக பறந்து விட்டாள்.
காபியை குடித்து முடித்த கபிலனோ பொதுவாக எழுந்து நின்று,
“ நான் பொண்ணு கிட்ட தனியா பேசணும்” என்றான்.
உடனே அவனுடைய தந்தையோ,
“ இல்லப்பா கல்யாணத்துக்கு முன்னாடி அதெல்லாம் பழக்கம் இல்லை” என்று அவர் சொல்ல,
“ வாட் என்ன டேட் சொல்றீங்க அங்க சிட்டில எல்லாம் இப்படி பொண்ணு பார்க்குற விஷயத்துக்கு கூட தனியா பொண்ணும் பையனும் ஏதாவது ஹோட்டல்ல தான் மீட் பண்ணி பேசிப்பாங்க.
இங்க வீட்டுல பொண்ணு பார்க்க வந்தும் கூட தனியா பேச விடலைன்னா எப்படி. அப்புறம் எப்படி அவங்கள பத்தி நானும் என்ன பத்தி அவங்களும் தெரிஞ்சுகிறது” என்று சொன்னான்.
அதற்கு மறுத்து கூற முனைந்த அவனுடைய தந்தையை மறுத்த செல்வரத்தினமோ,
“ விடுப்பா இதுல என்ன இருக்கு நம்ம அந்த காலத்து ஆட்கள்.
அதுக்காக இப்போ உள்ள புள்ளைங்க ஆசைய தடுக்கிறது தப்பு தானே. பொண்ணு கிட்ட தனியா ரெண்டு வார்த்தை பேசணும்னு ஆசைப்படுறாரு இதுல வேண்டாம்னு சொல்றதுக்கு என்ன இருக்கு.
நீ சும்மா இரு அவங்க போய் பேசட்டும். நாளைக்கு புருஷன் பொண்டாட்டியா வாழ போறவங்க ரெண்டு வார்த்தை இப்ப பேசுறதுல ஒரு குறையும் இல்லை”
“ சூப்பர் அங்கிள் நீங்க எங்க அப்பாவோட பிரண்டா இருந்தாலும் இப்ப உள்ள ஜெனரேஷனுக்கு ஏத்த மாதிரி பேசுறீங்க ஐ லைக் யு உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்று சிரித்தான் கபிலன்.
கபிலன் இப்படி கேட்டதில் அறிவழகிக்கும் ஏக சந்தோஷம்.
தன் மனதில் உள்ளதை அவனிடம் சொல்லி விடலாம் என்று அவள் ஆசையாக இருக்க ஆனால் அங்கு நடந்ததோ அவளை முற்றிலும் புரட்டிப் போட்டது.
அறிவழகியின் அறையில் உள்ள பால்கனியில் கபிலனும் அறிவழகியும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்று கொண்டிருந்தனர்.
இவ்வளவு நேரமும் தன்னுடைய முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டிருந்த அறிவழகியோ இப்பொழுது கொஞ்சம் இயல்பாக வைத்துக்கொண்டு நின்றாள்.
கபிலன் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான் முதலில் அவளே ஏதாவது பேசட்டும் என்று.
சிறிது நேரத்தில் அவள் எதுவும் பேசாது அமைதியாக நிற்க, இவனே தன்னுடைய பேச்சை ஆரம்பித்தான்.
“ ஹாய் என்னோட பேரு கபிலன் உன் பேரு ஸ்வீட்டி” என்று அவள் முன் கை நீட்டினான்.
அவளோ அவனுடைய கூற்றில் நிமிர்ந்தவள்,
“ என் பேரு ஒன்னும் ஸ்வீட்டி இல்ல அறிவழகி” என்று சொன்னாள்.
“ ஓஓ அறிவழகி இது கூட நல்லா தான் இருக்கு. ஸ்வீட்டினு கூப்பிடுறது எனக்கு பிடிச்சிருக்கு நான் அப்படியே கூப்பிடுறேன் ஸ்வீட்டி” என்று அவன் மீண்டும் பல்லை காட்ட,
இங்கு அறிவழகிகோ அவனுடைய இப்படி உரிமையான பேச்சில் கோபம் வந்தது.
உடனே, “இங்க பாருங்க கபிலன் நான் சுத்தி வளச்சி பேச விரும்பல நான் ஒருத்தரை விரும்பறேன்.
எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லை” என்று நேரடியாக தன்னுடைய விருப்பமின்மையை தெரிவித்தாள்.
அவனோ முதலில் அதிர்ந்தவன் பின்பு கலகலவென சிரித்தான்.
அவளுக்கோ ஒன்றும் புரியவில்லை. இவன் என்ன பைத்தியமா இப்படி சிரிக்கிறான் என்று பார்த்துக் கொண்டிருக்க,
தன்னுடைய சிரிப்பை நிப்பாட்டிய கபிலனோ,
“ ஓகே கூல் நீங்க லவ் பண்ற ஒருத்தர் யாருன்னு நான் தெரிஞ்சுக்கலாமா” என்று கேட்க அவளும் இவன் ஏன் இப்படி கேட்கின்றான்.
தனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்று சொன்னால் விட்டுவிட வேண்டியது தானே.
அதை விட்டுவிட்டு அவர் யாரு என்றெல்லாம் எதற்கு கேட்கின்றான் என்று நினைத்தவள்,
“ அதை நீங்க தெரிஞ்சுக்கிட்டு என்ன பண்ண போறீங்க” என்று அவனிடமே கேட்டாள்.
“ அட என்னமா நீ நான் ஒருத்தனை லவ் பண்றேன்னு சொல்ற எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு சொல்ற.
சரி அது யாருன்னு தெரிஞ்சா அந்த லக்கி மேனுக்கு ஒரு விஷ் பண்ணிட்டு நான் போயிடுவேன் அவ்வளவுதான்” என்றான்.
“ அது அது வந்து நான் இன்னும் அவர் கிட்டயே சொல்லல” என்று தயங்கினாள் அறிவழகி.
“ வாட் ஆர் யூ சீரியஸ் நீ உண்மைய தான் சொல்றியா” என்று அவன் மீண்டும் கேட்க, அவளோ ஆமாம் என்று தலையசைத்தாள்
பின்பு கபிலனோ,
“ தேங்க் காட் நல்லவேளை” என்று அவன் கடவுளுக்கு நன்றி கூற இவளோ அவனை வித்தியாசமாக பார்த்தாள்.
அவள் எதற்காக தன்னை இவ்வாறு பார்க்கிறாள் என்று யோசித்தேன்,
“ என்ன அப்படி பார்க்கிற நான் கூட நீ லவ் பண்றேன்னு சொல்லவும் ரொம்ப சீரியஸான லவ் போலன்னு நினைச்சேன். பார்த்தா நீ சின்ன பிள்ளை மாதிரி உன்னோட லவ்வையே சொல்லலைன்னு சொல்ற.
இதுல நீ அவர்கிட்ட சொல்லி அவருக்கு புடிச்சி எப்போ உங்க லவ் அடுத்த கட்டத்துக்கு போறது.
சோ இன்னைக்கு என்ன பண்ற உன் மனசுல இருக்குற காதல அப்படியே தூக்கிப் போட்டுட்டு என்ன கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா வாழ்க்கையை வாழ ஆரம்பி” என்று அவள் தலையில் இடியை இறக்கினான்.
அவளோ அதிர்ந்து விழித்தவள்,
“ உங்களுக்கு என்ன பைத்தியமா நான் ஒருத்தரை விரும்புகிறேன்னு சொல்லியும் இப்படி பேசுறீங்க” என்று அவள் சொல்ல,
“ இங்க பாருமா நீ ஜஸ்ட் ஒன் சைட் லவ் தான். பட் நான் உனக்கு முன்னாடி நாலஞ்சு லவ் பண்ணி ரெண்டு மூணு டேட்டிங் கூட போயிருக்கேன்.
சோ இதெல்லாம் ஒரு சின்ன விஷயம். நீ இப்பதான் ஜஸ்ட் ஒரு லவ் பண்ணி இருக்க கல்யாணம் ஆயிட்டா என்கூட வாழ்கிற வாழ்க்கையில உனக்கு அதெல்லாம் இருந்த இடமே தெரியாம போயிரும். ஷோ மனசுல எதையும் வச்சுக்காம என்ன கல்யாணம் பண்ணிக்க ரெடியா இரு சரியா” என்றவன்,
“ சரி வா போகலாம் கீழ எல்லாரும் காத்துக்கிட்டு இருப்பாங்க” என்று அங்கிருந்து கீழே வந்து விட்டான்.
அறிவழகிக்கோ என்ன செய்வது என்றே தெரியவில்லை.
சற்று முன் தனக்கு கிடைத்த ஒரு சிறிய நம்பிக்கை கூட இப்பொழுது முற்றிலும் உடைந்து விட்டதே என்று நினைத்து வருந்தியவள் மெதுவாக கீழே வந்தாள்.
அவள் அங்கு வந்ததும்,
“ என்ன மாப்ள எங்க பொண்ண உங்களுக்கு பிடிச்சிருக்கா” என்று அப்பத்தா கேட்க அதற்கு கபிலனோ,
“ ம்ம் ரொம்ப பிடிச்சிருக்கு சீக்கிரமா கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க. அப்பா இந்த மன்த்க்குள்ள கல்யாணத்தை முடிக்கிற மாதிரி பாருங்க என்னால ரொம்ப நாள் லீவு போட்டு இங்க இருக்க முடியாது. அதுக்கு ஏத்த மாதிரி பாத்துக்கோங்க” என்றான் கபிலன்.
உடனே செல்வரத்தினம்,
“ என்ன மாப்ள இந்த மாசத்துக்குள்ளயே கல்யாணம் பண்றது எல்லாம் கொஞ்சம் கஷ்டம்.
பொண்ணுக்கு இன்னும் வரும் மூணு மாசம் படிப்பு இருக்கு நீங்க சொல்றத பார்த்தா கல்யாணத்தை முடிச்சிட்டு சென்னைக்கு கூட்டிட்டு போயிருவீங்கன்னு நினைக்கிறேன் என் பொண்ணுக்கு இன்னும் ஒரு மூணு மாசம் படிப்பு இருக்கே” என்று அவர் தயங்க கபிலனோ,
“ அங்கிள் நீங்க கவலையே படாதீங்க மூணு மாசம் தானே நான் அவளுக்கு சென்னையில் படிக்கிற மாதிரி ஏற்பாடு பண்ணி விடுறேன்” என்றான்.
“ சரி மாப்ள அப்போ நீங்க சொன்ன மாதிரி இந்த மாசத்துக்குள்ளையே கல்யாணத்தை முடித்துவிடலாம்” என்று சொல்ல அதைக் கேட்ட அனைவருமே அதை ஆமோதித்தனர்.
பிறகு என்ன கபிலன் அறிவழகி திருமணம் இனிதாகவே ஏற்பாடுகள் செய்ய ஆயத்தமானது.
***
விடிந்தால் கபிலனின் கையால் தாலி வாங்கி அவனுடைய மனைவியாக அங்கீகாரம் பெற போகும் அறிவழகியோ தான் அணிந்திருந்த மொத்த நகைகளையும் கழட்டி வைத்துவிட்டு மண்டபத்தின் உள்ளே உள்ள மணமகள் அறையிலிருந்த ஜன்னலில் இருந்து கீழே குதித்தாள் தன்னுடைய காதலனை தேடி போக.
அப்போது கீழே குதித்த அவளுடைய மூக்கில் துணியை வைத்து அவளை மயக்கம் அடைய செய்து ஒரு காரில் இழுத்து போட்டுக் கொண்டு அங்கிருந்து கிளம்பியது அந்த கார்.
அறிவழகி நினைத்தது போல் அவளுடைய காதல் கைகூடுமா இல்லை இப்பொழுது கடத்திய அந்த கடத்தல்காரனால் அவளுடைய வாழ்க்கை திசை மாறி போகுமா.?