சீதளம் 36
கபிலன் ஆசைப்பட்டது போலவே அதே மாதத்தில் நல்ல முகூர்த்தம் ஒன்று வந்து விட இரு விட்டார் சம்மதத்துடன் அந்த முகூர்த்தத்திலேயே அவர்கள் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது.
அனைத்து வேலைகளும் நல்லபடியாக நடந்து முடிய விடிந்தால் பிரம்ம முகூர்த்தத்தில் அவர்கள் இருவருடைய திருமணம்.
ஆனால் நடுராத்திரியில் அறிவழகியோ தான் அணிந்திருந்த மொத்த நகையையும் கழட்டி வைத்தவள் மணமகள் அருகில் இருந்த ஜன்னலின் ஊடாக கீழே குதித்தாள் தன் காதலனை தேடி போக.
அவள் குதித்த சிறிது நேரத்தில் ஒரு இருட்டு உருவம் அவளுடைய மூக்கில் துணியை வைத்து அழுத்தி காருக்குள் இழுத்து போட்டு அங்கிருந்து புயல் வேகத்தில் பறந்தது.
அதிகாலை முகூர்த்த நேரம் நெருங்கி வர மண்டபத்தில் பட்டு வேஷ்டி சட்டையில் கபிலன் மேடையில் அமர்ந்து ஐயர் கூறிக் கொண்டிருக்கும் மந்திரத்தை திருப்பி உச்சரித்துக் கொண்டிருந்தான்.
மணமகளை அழைத்து வர ஐயர் கூற மணமகளை அழைக்க சென்றவர்களோ கதவு உள்பக்கம் பூட்டி இருப்பதால் வெகுநேரமாக அதை தட்டிக் கொண்டிருந்தனர் அன்னலட்சுமி மேகாவம்.
எவ்வளவோ தட்டியும் கதவைத் திறந்த பாடு இல்லை.
உடனே அன்னலட்சுமிக்கு பதற்றம் உண்டானது.
சட்டென மேகாவிடம் திரும்பியவர்,
“ அம்மாடி சீக்கிரம் வேந்தனையும் மாமாவையும் கூட்டிட்டு வா எனக்கு என்னவோ பயமா இருக்கு” என்று அவர் பதட்டத்தோடு சொல்ல அவளோ எச்சிலை விழுங்கிக் கொண்டு கைகளை பிசைந்தவாறு அவரிடம் சரி என்றவள் ஒரு அடி எடுத்து வைக்க,
அதற்குள் வேந்தனோ கலைந்த கேசத்துடனும் அவனுடைய வேஷ்டி சட்டையில் ஆங்காங்கே கரைகள் இருக்க அப்படியே அவள் முன்பு வந்து நின்றவனை கண்டவளோ சற்று ஆடித்தான் போனாள்.
அவனோ அவளை கொலை வெறியோடு முறைத்துக் கொண்டு நிற்க.
வேந்தனை பார்த்த அன்னலட்சுமியோ சற்றும் தாமதிக்காமல் அவனிடம் வந்தவர்,
“ ஐயா வேந்தா ரொம்ப நேரமா கதவை தட்டிக் கிட்டே இருக்கோம். அறிவு கதவை திறக்கவே மாட்டேங்குறா எனக்கு என்னவோ பயமா இருக்கு. நீ கொஞ்சம் என்னன்னு பாருய்யா” என்று அவர் சொல்ல,
இவனோ மேகாவின் மேலிருந்த பார்வையை திருப்பியவன் அவளை பிறகு கவனித்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டு இப்பொழுது கதவை தட்ட ஆரம்பித்தான்.
எங்கே இவ்வளவு நேரமும் இவர்கள் இருவரும் தட்டியும் திறக்காத அறிவழகி இப்பொழுது இவன் தட்டியா திறக்கப் போகின்றாள்.
முடிந்த மட்டும் கதவை தட்டிப் பார்த்தவன் பின்பு தன்னுடைய புஜங்களால் கதவை இடித்தான்.
அவனுடைய பலம் கொண்ட புஜத்தின் இடியை தாங்க முடியாத அந்த கதவு அவனுக்கு வழிவிட்டு திறந்து கொண்டது.
உள்ளே வந்து பார்த்தவர்களுக்கு அதிர்ச்சியே கூடியது.
அறிவழகி அந்த அறைக்குள் இருக்கவில்லை.
அன்னலட்சுமி அவளுடைய பெயரை அழைத்துக்கொண்டு அந்த அறையில் பாத்ரூம் எல்லா இடங்களிலும் தேடிப் பார்க்க அவளோ அங்கு எங்கும் இருக்க வில்லை.
ஆனால் வேந்தன் உடைய பார்வை மட்டும் மேகாவை கொள்ளாமல் கொன்றது.
அவனுடைய பார்வையின் அர்த்தம் புரிந்து கொண்டவளோ எதையும் வெளி காட்டாமல் குனிந்த தலை நிமிராமல் நின்று கொண்டிருந்தாள்.
அவளைத் தேடிய அவளுடைய அன்னையோ பால்கனிக்கு வர அப்பொழுது பால்கனி கம்பியில் இருந்து கீழே துணி தொங்கப்பட்டிருக்க அதை பார்த்தவருக்கோ உள்ளம் நடுங்கியது.
உடனே வேந்தனை அழைக்க அவனும் வந்து பார்த்தவன் புரிந்து கொண்டான் என்ன நடந்திருக்கும் என்று.
அதற்கு உரு துணையாக இருந்தது தன்னுடைய மனைவி தான் என்றும் புரிந்தவனுக்கோ மேகாவின் மேல் எல்லையில்லா கோபம் துளிர்த்தது.
“ அம்மா நம்ம அறிவு இல்ல அவ நம்மளை எல்லாத்தையும் ஏமாத்திட்டு போய்ட்டாமா” என்று அவன் சொல்ல அன்னலட்சுமியோ திடுக்கிட்டவர்,
“ ஐயா வேந்தா என்னையா சொல்ற நம்ம அறிவு அப்படி எல்லாம் பண்ணி இருக்க மாட்டா. அவளை நான் அப்படி வளர்க்கல” என்று கண்களில் கண்ணீர் வர கூறினார்.
“ இங்க பாருங்கம்மா இதைப் பார்த்துமா நீங்க இன்னும் நம்புறீங்க. அவ நம்மகிட்ட மனசு விட்டு பேசி இருந்தா கூட இவ்வளவு தூரத்துக்கு நம்ம கொண்டு வந்திருக்க மாட்டோம்.
இப்படி எல்லார் முன்னாடியும் அசிங்கப்படவும் இருந்திருக்காது.
ஆனா எதையுமே சொல்லாம இப்படி கடைசி நேரத்துல நம்மளை தல குனிய வச்சிட்டு போயிட்டாளே” என்றான்.
“ ஐயா நீ என்ன என்னென்னமோ சொல்ற எனக்கு நெஞ்செல்லாம் பதறுது. இப்போ அங்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கிட்ட நம்ம என்ன பதில் சொல்றது.
இந்த விஷயம் வெளியே தெரிஞ்சா உங்க அப்பாவோட மானம் மரியாதை என்னத்துக்கு ஆகுருது.
எனக்கு ரொம்ப பயமா இருக்கு வேந்தா” என்று அன்னலட்சுமி கூறிக் கொண்டிருக்க, அப்பொழுது மாப்பிள்ளையின் அம்மா, அப்பா, செல்வரத்தினம், அப்பத்தா அனைவரும் அந்த அறைக்குள் நுழைந்தார்கள்.
உள்ளே வந்த அப்பத்தாவோ மேகா அங்கு நிற்பதை கண்டு,
என்னமா அங்க ஐயர் பொண்ண கூட்டிட்டு வர சொல்லி கூப்பிட்டுக்கிட்டே இருக்காரு நீங்க என்னடான்னா இவ்ளோ நேரம் ஆகியும் வராம இருக்கீங்க எங்க அறிவு” என்று அவர் கேட்க.
அவருடைய குரலை கேட்டு பால்கனியில் இருந்து உள்ளே வந்த அன்னலட்சுமிமையும் வேந்தனையும் கண்டவர்களோ சற்று திடுக்கிட்டார்கள்.
அவர்கள் இருவருடைய கலங்கிய கோலத்தை கண்டவர்களுக்கோ எதுவும் புரியவில்லை.
செல்வரத்தினமே,
“ அன்னோ என்ன ஆச்சு ஏன் உன் முகம் இப்படி இருக்கு” என்று கேட்க அவரோ ஓவென்று கதறியவர்,
“ என்னங்க நம்ம பொண்ணு நம்மளை ஏமாத்திட்டு போயிட்டா. அவளைக் காணோம். ரொம்ப நேரமா நான் கதவை தட்டி அவ திறக்கவே இல்லை.
நம்ம வேந்தன் வந்து கதவை உடைச்சு உள்ள வந்தான்.
அவளை எங்கேயுமே காணோம். பதறிப் போய் எல்லா இடத்துலயும் தேடுனா பால்கனி வழியா அவ இங்கிருந்து போய்ட்டா. எனக்கு இப்ப என்ன பண்றதுன்னு தெரியல” என்று அழுதார். அதைக் கேட்ட நொடி செல்வரத்தினத்திற்கு திடுக்கிட்டது.
தங்களுடைய மகளா இவ்வாறு செய்தாள் என்று அவரால் அதை ஜீரணிக்க முடியவில்லை.
மாப்பிள்ளை வீட்டாரும் அவர்களை பார்க்க என்ன சொல்லி அவர்களை சமாளிப்பது என்று தெரியாமல் அவர்கள் திணற,
அப்பொழுது ஐயர் எவ்வளவோ மறுத்து கூறியும் கேட்க மறுத்த கபிலனோ மாலையும் கழுத்துமாக மணப்பெண்ணின் அறைக்குள் நுழைந்தவன் காதிலோ அன்னலட்சுமிக் கூரிய அனைத்தும் விழுந்து.
‘ அடிப்பாவி நேரம் பார்த்து இப்படி கழுத்தறுத்திட்டாலே அவகிட்ட அவ்வளவு சொல்லியும் இப்படி சொல்லாத காதலுக்காக என்ன இத்தனை பேர் முன்னாடி அவமானப்படற அளவுக்கு வச்சிட்டு இப்படி ஓடிட்டாளே’ என்று நினைத்துக் கொண்டவன் அந்த கோபத்தை அவர்களிடம் காட்டினான்.
“ சபாஷ் சபாஷ்” என்று கைகளை தட்டியவாறு உள்ளே நுழைந்தான் கபிலன்.
‘உங்க பொண்ணை ரொம்ப நல்லா வளர்த்து இருக்கீங்க.
அவளுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னா இந்த கல்யாணத்தை பேசும்போது முடியாதுன்னு சொல்லி இருக்க வேண்டியதுதானே.
இப்படி ஊர் அறிய எல்லாருக்கும் பத்திரிகை கொடுத்து வர வச்சி தாலி கட்டுற கடைசி நேரத்துல எங்க குடும்பத்தை மூக்க உடைக்குற மாதிரி செஞ்சுட்டாளே” என்று அவன் கோபமாக கத்தினான்.
செல்வரத்தினமோ,
‘ மாப்ள அப்படியெல்லாம் சொல்லாதீங்க நாங்க எங்க பொண்ண அப்படி வளர்க்கல” என்று அவர் ஏதோ சொல்ல வர அவர் முன் கைநீட்டி தடுத்து நிறுத்தியவன்,
“ நிறுத்துங்க அதான் உங்க பொண்ணு சிறப்பா செஞ்சிட்டு போயிட்டாளே. இதுல நீங்க இன்னும் என்ன விளக்கம் சொல்ல போறீங்க.
ஊருக்கு பெரிய மனுஷனா இருந்துகிட்டு ஒரு பொண்ணை எப்படி வளர்க்கணும்னு தெரியல உங்களுக்கு” என்று அவன் வார்த்தைகளை விட, கைகளை முறுக்கய வேந்தனோ,
“ டேய் வார்த்தைகளை அளந்து பேசுடா” என்று கபிலனுடைய சட்டை காலரை பிடித்தான்.
அவனுடைய கைகளை உதறிவிட்ட கபிலனோ,
“ அடங்குடா ஒரு பொண்ண வளர்க்க தெரியாம வளர்த்துட்டு இப்போ நான் சொன்னதும் உங்களுக்கு கோபம் வேற வருதா. உங்களுக்கு என்ன.
இப்படி மண்டபத்துல மத்தவங்க முன்னாடி அவமானப்பட்டு நிற்கிறது எங்க குடும்பம் தானே.
இதுல இனிமே எனக்கு எவன் பொண்ணு கொடுப்பான். மாப்பிள்ளைக்கு என்ன குறையோ அதனால் தான் பொண்ணு ஓடி போச்சுன்னு அவன் அவன் வாய்க்கு வந்ததை பேசுவான். அவங்க எல்லாருக்கும் என்ன தெரியும் உங்க பொண்ணு எவனையோ காதலிச்சு ஓடிப்போனான்னு. பாக்குறவங்க எல்லாரும் என்ன தான குறை சொல்லுவாங்க” என்று அவன் கத்தினான்.