சீதளம் 38
“அறிவு நீ உன்னுடைய காதல தேடிப்போ கண்டிப்பா உன் காதல் கைகூடும். எப்படியும் இங்க பிரச்சனை வரத்தான் செய்யும். கொஞ்ச நாள்ல அதை மறந்துடுவாங்க. ஆனா நீ காதலிச்ச உன் வாழ்க்கை உனக்கு கிடைச்சு நீ சந்தோஷமா இருந்தா காலப்போக்கில இவங்க அதை மறந்து விடுவாங்க” என்று உதவ முன் வந்தாள் மேகா.
அதைக்கேட்ட அறிவழகிக்கோ அவ்வளவு ஆனந்தம்.
தன்னுடைய குடும்பமும் தன்னுடைய காதலுக்கு பச்சைக்கொடி காட்டி இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.
தானும் இப்படி யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு ஓடிப் போகும் நிலமை வந்திருக்காதே என்று நினைத்தவளுக்கோ ஒரு பக்கம் வேதனையாக இருந்தாலும்,
மற்றொரு பக்கம் மேகா அவளின் காதலை புரிந்து கொண்டு அவளுக்கு உதவ முன் வந்தது மிகுந்த ஆனந்தத்தையே கொடுத்தது.
இவ்வளவு நேரமும் சற்று உறுத்தலாகவே இருந்த அவளுடைய மனது மேகாவின் வார்த்தைகளால் கொஞ்சம் நிம்மதி அடைந்தது.
அதே சந்தோஷத்தோடு அவள் மேகாவை இறுக அனைத்து விட்டு,
“ ரொம்ப தேங்க்ஸ் அண்ணி எங்க நீங்களும் என்ன புரிஞ்சிக்க மாட்டீங்களோன்னு நினைத்து ரொம்ப பயந்து போயிட்டேன்” என்று அவள் சொல்ல அவளுடைய தலையை கோதி ஆறுதல் படுத்திய மேகாகவோ,
“ அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல முதல்ல உன் மனசுல இருக்குறத யாருகிட்டயாவது சொல்லு அறிவு.
நீ வெளியே சொன்னா தானே மத்தவங்களுக்கு தெரியும். யாருக்குமே தெரியாம உனக்குள்ளேயே மறைச்சு வச்சுக்கிட்டா எப்படி மத்தவங்களுக்கு தெரியும். அவங்க எப்படி உன்னை புரிஞ்சுபாங்க. சரி ஆனது ஆகிப்போச்சு இனி நடக்கிறதுக்கு ஒன்னும் இல்ல. நீ எடுத்த முடிவுல உறுதியாக இருக்க தான அதை முதல்ல சரியா பயன்படுத்து. இனி உன்னோட வாழ்க்கையில என்ன நடந்தாலும் அதை தைரியமா எதிர் கொள்ள பாரு. உனக்கு எப்பவும் நான் துணை இருப்பேன்” என்றாள் மேகா.
அவளுக்கு பலமுறை நன்றி கூறிய அறிவழகியோ பால்கனியில் இருந்து கீழே குதிக்க முயற்சிக்க அப்பொழுது அங்கு கீழே வேந்தன் நின்று கொண்டிருந்தான்.
அவனைப் பார்த்த அறிவழகியோ திடுக்கிட்டாள்.
“அண்ணி அண்ணா நிக்கிறாரு இப்போ என்ன பண்றது” என்று அறிவழகி கேட்க, சற்று எட்டிப் பார்த்த மேகாவும் அங்கு வேந்தனை கண்டு கொண்டவள்,
“ அய்யய்யோ இவரா” என்றவள் சற்று யோசித்து பிறகு ஒரு முடிவுக்கு வந்தவள் போல,
“சரி நீ இங்க இருந்து போகிறதுக்கு ரெடியா இரு உங்க அண்ணன நான் பாத்துக்கிறேன்” என்றவள் அங்கிருந்து கிளம்பி நேராக வேந்தனிடம் வந்தாள்.
அந்த இரவு பொழுதில் அங்கு அவளை எதிர்பார்க்காத வேந்தனோ அவளுடைய அழகில் மயங்கியவன் அவளை ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்க,
மேகா அவனை அழைத்தாள்.
“ என்னங்க இங்க பாருங்க உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” என்று முகத்தில் கலவரத்தோடு நிற்க.
அவனோ அதை கவனிக்காமல்,
“ ஐயோ என் பொண்டாட்டி எவ்வளவு அழகா இருக்க உன்னை பார்த்தாலே அப்படியே என்னோட ஐம்புலன்களும் உன் பக்கம் ஈர்க்குது அப்படி என்னடி மந்திரம் செஞ்ச” என்று அவன் காதல் ரசத்தை பொழிய ஆரம்பிக்க அவளோ,
‘ ஐயோ இந்த ஏலியன் வேற நேரம் காலம் தெரியாம’ என்று மனதிற்குள் புலம்பியவள்,
“ இங்க பாருங்க நான் சொல்ல வந்த விஷயமே வேற நீங்க என்னடான்னா. வீட்ல இருந்து போன் வந்தது வீராவுக்கு அடிபட்டு இருக்காம் எப்படின்னு தெரியல்லை உங்களுக்கு போன் பண்ணாங்களாம் நீங்க எடுக்கலைன்னு எனக்கு போன் பண்ணாங்க கொஞ்சம் என்னன்னு பாருங்க” என்று அவள் சொல்ல அதைக் கேட்ட வேந்தனோ,
“ என்ன மேகா சொல்ற வீராவுக்கு அடிபட்டு இருக்கா எப்படி யார் போன் பண்ணா உனக்கு” என்று அவன் கேட்க.
அவளோ,
“ நம்ம வீட்டு சமையல்காரர்தான் போன் பண்ணாங்க நீங்க சீக்கிரம் போய் பாருங்க” என்று அவனை அங்கிருந்து அனுப்புவதிலேயே அவள் குறியாக இருக்க அவனும் வீராவுக்கு அடிபட்டுவிட்டது என்று தெரிந்ததும் எதைப் பற்றியும் யோசிக்காமல்,
“ சரி நான் போய் என்னன்னு பாத்துட்டு வரேன்” என்று அங்கிருந்து கிளம்பினான்.
அவன் அங்கிருந்து கிளம்பி நேராக வீட்டுக்கு வந்து வீராவை பார்த்த பொழுது அவனுக்கு எதுவும் ஆகவில்லை. அவன் நன்றாகவே இருந்தான்.
“ என்னது இது மேகா வீராவுக்கு அடிபட்டு இருக்குனு வீட்ல இருந்து போன் பண்ணாங்கன்னு சொன்னா இங்க வந்து பார்த்தா வீராவுக்கு எந்த பிரச்சனையும் இல்லையே அவன் நல்லா இருக்கான் என்கிட்ட எதுக்கு மேகா பொய் சொல்லணும்” என்று அவன் யோசித்துக் கொண்டிருக்க அப்பொழுது திடீரென நன்றாக அமர்ந்திருந்த வீராவோ எழுந்து கத்த ஆரம்பித்தான்.
ஒரு இடத்தில் நிற்காமல் தன்னை கட்டிய கயிற்றில் இருந்து அவன் விடுபட போராடினான்.
இங்கு யோசனையில் மூழ்கிய வேந்தனோ, வீராவை கண்டு என்ன ஆனது அவனுக்கு திடீரென்று என்று நினைத்தவன் வீராவின் அருகில் போக, அவனோ அடங்காமல் ஒரு இடத்தில் நிலையாக நிற்காமல் அந்த கயிற்றில் இருந்து தன்னை அவிழ்க்கவே போராடிக் கொண்டிருந்தான்.
“ வீரா என்ன பண்ணிக்கிட்டு இருக்க என்ன ஆச்சு உனக்கு திடீர்னு ஏன் இப்படி நடந்துக்கிற” என்று அவன் கேட்க. வீராவோ அவனுடைய பேச்சை காதில் வாங்காமல் தலையை அங்குட்டும் இங்குட்டும் ஆட்டியது.
அவன் எதையோ தன்னிடம் சொல்ல முயற்சிக்கிறான் என்பதை நொடியில் புரிந்து கொண்ட வேந்தனோ அவனுடைய கயிற்றை அவிழ்த்து விட, நொடியும் தாமதிக்காமல் வேந்தனை தாண்டி வேகமாக ஓடினான் வீரா.
வீராவின் பெயரை அழைத்துக்கொண்டே வேந்தனும் அதுவின் பின்னை ஓட வீராவோ அவர்களுடைய வயலுக்கு அருகில் வந்தது.
வேந்தனும் அவன் பின்னே ஓடி வர அவன் வயலுக்கு வருவதை பார்த்த வேந்தனோ,
‘இங்கு எதற்க்காக இந்நேரத்துக்கு இப்படி ஓடிவரான்’ என்று யோசித்துக் கொண்டே வர, அவர்கள் வயலை நெருங்க நெருங்க கருகிய வாடை அவனுடைய மூக்கை துளைத்தது.
“ என்ன இது இந்த ராத்திரி நேரத்துல ஏதோ கருகுற வாடை இப்படி வருது” என்றவன் யோசித்துக் கொண்டே வந்தவனுக்கு பேரதிர்ச்சி அங்கு காத்துக் கொண்டிருந்தன.
அவர்களுடைய வயலில் யாரோ தீ வைத்துக் கொண்டிருந்தார்கள்.
அதை பார்த்தவனோ சற்று அதிர்ந்தான்.
பின்பு வீராவை பின் தொடர்ந்து அவன் செல்ல வீராவோ வந்த வேகத்தில் அங்கு தீ வைத்து கொண்டிருந்த ஒருவனுடைய முதுகில் தன்னுடைய கொம்புகளால் ஒரு இடி இடித்தது அது.
வீரா இடித்த இடியில் அவனோ குப்புறப் போய்விழ அடுத்து அவன் அருகில் இருந்த மற்றொருவனையும் வீரா நெருங்கியது.
வீரா தன்னை நெருங்குவதை பார்த்த அந்த மற்றையவனோ அங்கிருந்து ஓட்டம் பிடிக்க அந்த இருவரையும் மடக்கி பிடித்த வேந்தனோ அவர்களை அடி வெளுத்து விட்டான்.
“ சொல்லுடா யார் நீங்க எதுக்காக எங்க வயல்ல தீ வச்சீங்க” என்று அவன் கேட்க. அவர்கள் இருவருமோ அவனிடம் எதுவும் கூறவில்லை.
வேந்தன் மீண்டும் அவர்கள் இருவரையும் அடிக்க ஒரு கட்டத்தில் வலி தாங்க முடியாதவர்கள் ‘சங்கர பாண்டியன்’ தான் தீ வைக்க சொன்னார் என்பதை கூறினார்கள்.
அவனுக்கோ ஆத்திரம் அடங்கவில்லை. “அவன கொல்லாம விட மாட்டேன்டா” என்று அவர்கள் இருவரையும் கட்டிப்போட்டு வைத்தவன் இப்பொழுது பற்றி எரிந்து கொண்டிருக்கும் வயலை அனைக்க முற்பட்டான்.
அவனுடன் இணைந்து வீராவும் வயலை அனைக்க முற்பட்டு அங்கு கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் தீக்குள் இறங்கியது.
பாவம் அந்த வாயில்லா ஜீவனுக்கு அப்பொழுது தெரியவில்லை இதனால் தனக்கு என்ன பாதிப்பு வரப்போகிறது என்று.
அவனோ மோட்டரை ஆன் பண்ணி தண்ணீர் அடிக்க வீராவோ அந்த நெருப்புக்குள் இறங்கி தன்னுடைய கால்களால் அந்த தீயை அணைக்க முற்பட்டது.
பாவம் அதனுடைய நான்கு கால்களும் புன்னானது.
வேந்தனோ வீராவை அழைத்துக் கொண்டே ஒற்றை ஆளாக அந்த வயலில் எரிந்து கொண்டிருந்த நெருப்பை அணைத்து முடித்தவன் வீராவை பார்க்க அந்தோ பரிதாபம்.
அங்கு பற்றி எரிந்த நெருப்பில் வீராவின் நான்கு கால்களும் வெகுவாகவே காயம் பட்டிருந்தன. அவனால் எழுந்து நிற்க கூட முடியவில்லை.
அவனுடைய முனங்கள் சத்தம் மட்டுமே கேட்டது வேந்தனுக்கு.
அதை பார்த்த வேந்தனுக்கோ உள்ளம் சில்லு சில்லாய் உடைந்தது.
இந்த வாயில்லாத ஜீவனின் நன்றியை நினைத்த அவனுடைய மனமோ அதனுடைய தற்பொழுது நிலைமையை நினைத்து மிகவும் வருந்தினான்.
உடனே அதன் அருகில் அமர்ந்தவன் வீராவை கட்டிக்கொண்டு அழுதான்.
வீராவை எழுப்ப முயற்சிக்க, அவனால் சிறிது கூட தன்னுடைய கால்களை அசைக்க முடியவில்லை.
வீராவின் கண்களிலோ கண்ணீர் சுரந்து கொண்டிருந்தன.
அதை பார்த்த வேந்தனுக்கோ இதயத்தில் ரத்தமே வடிந்து விடும் போல இருந்தன.
நொடியும் தாமதிக்காமல் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கினான் வேந்தன்.
வீராவை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு நேராக மண்டபத்திற்கு வந்தான்.
முதலில் திருமணத்தை நன்றாக முடிப்போம் இந்த பிரச்சனையை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தான்.
தன்னிடம் ஏன் மேகா பொய் கூறினாள் என்று நினைத்து அவள் மேல் கோபமாக வந்து நின்றவனுக்கோ மீண்டும் ஒரு இடியாக அவனுடைய தங்கை ஓடிப் போய் இருக்க, அப்பொழுதே அவனுக்கு ஓரளவு புரிந்து விட்டது.
மேகா தன்னிடம் பொய் கூறியதற்கான காரணம் இதற்கு அவளும் உடந்தை என்று நம்பினான்.