தணலின் சீதளம் 42

4.2
(5)

சீதளம் 42

அவளுடைய பேச்சல் ஆடவர்கள் இருவரும் அதிர்ந்தனர்.
இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து கதிரவன் மீளாமல் அவளையே அதிர்ந்த பார்வையுடன் பார்த்துக் கொண்டிருக்க ரகுவந்தனோ, அதே அதிர்ச்சியுடன் அவளிடம் கேட்டான்.
“ ஏம்மா நீ உண்மைய தான் சொல்றியா இல்ல நாங்க கனவு ஏதும் காண்கிறோமா” என்றான்.
அதற்கு அவளோ,
“ டேய் லூசாடா நீ? நான் எந்த நிலைமையில இங்க இருக்கேன் இதுல உங்க கிட்ட நான் பொய் வேற சொல்ல போறேனா” என்றாள் அவள் சட்டென.
அதைக் கேட்ட ரகுவந்தனோ இன்னும் அதிர்ச்சி விலகாமல் இருந்த தன்னுடைய நண்பனை முதுகில் ஒரு அடி வைக்க அவனோ திடுக்கிட்டவன்,
“ ஏன்டா இப்படி அடிச்ச பரதேசி” என்று அவனை அடிக்கப் போக அவனோ கதிரவனை தடுத்தவன்,
“ டேய் என்னைய நீ அப்புறமா அடி. நான் எங்கேயும் ஓடி எல்லாம் போயிட மாட்டேன் முதல்ல அந்த புள்ள என்ன சொல்லுதுன்னு கேளுடா. நீ ஏதோ பிரம்ம புடிச்சவன் மாதிரி உட்கார்ந்து இருக்க.
அந்த பொண்ணு உன்னைத்தான் விரும்புறேன்னு சொல்லுதுடா என்னால இதை நம்பவும் முடியல நம்பாம இருக்கவும் முடியல என்னன்னு கேளுடா” என்றான் அவன்.
அவன் இவ்வாறு சொல்லவும் கதிரவனோ அவள் புறம் திரும்பியவன்,
“ என்ன காமெடி பண்ணிட்டு இருக்கியா ஒழுங்கா தாலியை கழட்டி கொடுத்துட்டு கிளம்புற வழிய பாரு சும்மா லவ்வு கிவ்வுன்னு சொல்லி என்னை டென்ஷன் படுத்தாத நீ சொல்றதுல எல்லாம் எனக்கு நம்பிக்கையும் இல்லை.
அப்படி நீ சொல்றது உண்மையாவே இருந்தாலும் எப்படி உனக்கு என் மேல லவ் வந்துச்சு.
உங்க குடும்பத்துக்கும் எங்க குடும்பத்துக்கும் செட்டே ஆகாது அப்படி இருக்கும்போது உனக்கு மட்டும் எப்படி என் மேல காதல் வந்துச்சு.
ஒருவேளை நான் ஏதாவது நல்லது பண்றத பார்த்து உனக்கு காதல் வந்துச்சா” அவளோ அவனை புரியாமல் பார்க்க,
அவளுடைய பார்வையின் அர்த்தத்தை புரிந்தவன்,
“ எப்படின்னா இந்த வயசானவங்களுக்கு தண்ணி அடிச்சு கொடுத்து ஹெல்ப் பண்றது. அப்புறம் காதல் ஜோடிக்கு ஹெல்ப் பண்றது சின்ன குழந்தைகளுக்கு சாக்லேட் வாங்கி கொடுக்கிறது. இந்த மாதிரி ஏதாவது அப்படி எதுவும் நான் பண்ணி இருக்க மாட்டேன்” என்று அவன் கெத்தாக சொல்ல.
ரகுவந்தனோ,
“ அதானே மச்சான் ஒரு பொண்ணுக்கு உன் மேல காதல் வர்ற அளவுக்கு நீ எந்த ஒரு நல்லதும் செய்யவே இல்லையே. அப்புறம் எப்படிடா இந்த பிள்ளைக்கு உன் மேல காதல் வந்துச்சு எப்படி கிடந்து யோசித்தாலும் பதில் மட்டும் எனக்கு கிடைக்கவே மாட்டேங்குதே” என்றான் அவன்.
“ டேய் அதான் மச்சான் நானும் சொல்ற இவளுக்கு வேற ஏதோ பிரச்சினை இருக்கு இந்த கல்யாணம் அவளுக்கு பிடிக்கல..
ஹான் மச்சான் இன்னொன்னு மறந்தே போயிட்டேன். நான் நேத்து இவளை கடத்தலாம்னு அங்க மண்டபத்துக்கு போனேனா. அங்க பொயிட்டு பொண்ணோட ரூம் எங்க இருக்குன்னு தெரியலையே என்ன பண்ணலாம்னு யோசிச்சுகிட்டு இருக்கும்போது கும்பிட போன தெய்வம் குறுக்க வந்த மாதிரி இவளே மண்டபத்துல இருந்து ஓடி வந்தாடா? எனக்கு இப்பதான் ஞாபகத்துக்கு வருது.
அப்போ கண்டிப்பா இவளுக்கு அந்த கல்யாணம் பிடிக்கல. பிடிக்காமத் தான் ஓடி வந்து இருக்கா இது தெரியாம இவளை நான் கடத்திட்டு வந்திருக்கேன். இப்போ மொத்தமா எண்ணிய மாட்டி விடுற மாதிரி என்னைய தான் விரும்புகிறேன்னு பொய் சொல்லி கதையை மாத்த பார்க்கிறா.
ஏய் முட்டக்கண்ணி உன்னோட பிளான் இதானே” என்றான் கதிரவன்.
“ என்னடா மச்சான் சொல்ற கல்யாணம் பிடிக்காம இந்த பொண்ணு ஓடி வந்துச்சா”
“ ஆமா மச்சான் ஓடி வந்தவளைத் தான் நான் அப்படியே அலேக்காக தூக்கிட்டு வந்துட்டேன்” என்றான் கதிரவன்.
இப்பொழுது இருவருடைய பார்வையும் அவள் மேல் கேள்வியாக விழுந்தது.
“ இங்க பாருங்க எனக்கு அந்த கல்யாணம் பிடிக்காம தான் நான் ஓடி வந்தேன் ஆனா அதுக்கு வேற ஏதோ காரணம் எல்லாம் இல்லை. நான் உங்களை விரும்புகிறதால தான் ஓடி வந்தேன்”
“ இங்க பாரு ஓங்கி அடிச்சேன்னு வை ஒரு பக்க கண்ணம் பன்னு மாதிரி அப்படியே வீங்கிடும்.
நீயும் பாரு மச்சான் நானும் வந்ததிலிருந்து பார்த்துகிட்டு இருக்கேன் திரும்ப திரும்ப அதே பொய்ய சொல்லிக்கிட்டு இருக்கா” என்று கோபம் வந்தது கதிரவனுக்கு.
“ தீரா ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேளுங்க நான் உங்கள தான் விரும்புறேன். பொதுவா ஒரு பொண்ணு மனசுல அவ்வளவு சீக்கிரம் யாரும் இடம் பிடித்தது கிடையாது.
அதே மாதிரி தான் நானும் சின்ன வயசுல இருந்து நான் உங்களை பார்த்து இருக்கேன்.
எப்ப பார்த்தாலும் என் அண்ணன் கிட்ட நீங்க சண்டை போட்டுக்கிட்டே இருப்பீங்க.
பொதுவா எங்க அண்ணன் யார் கிட்டயும் சண்டை போட்டு நான் பார்த்ததில்லை எல்லார்கிட்டயும் அன்பா தான் பழகுவாரு.
ஆனா நீங்க அவர்கிட்ட வேணும்னே வந்து சண்டை போடுவீங்க முதல்ல எனக்கு கோபம் தான் வந்துச்சு.
என்னடா இது எப்ப பார்த்தாலும் இவன் நம்ம அண்ணன் கிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருக்கானே அப்படின்னு ஆனா காலப்போக்கில அது எப்படி உங்க மேல விருப்பமா மாறுச்சுன்னு எனக்கு தெரியாது.
நீங்க சொன்னீங்களே நான் யாருக்காவது உதவி செஞ்சத பார்த்து காதல் வந்துச்சான்னு.
ஏங்க மத்தவங்களுக்கு உதவி செஞ்சா தான் காதல் வருமா என்ன நான் கொஞ்சம் வித்தியாசம்.
நீங்க உதவி செய்யாம போறதை பார்த்து தான் எனக்கு காதல் வந்துச்சு. ஸ்கூல் படிப்பு முடிஞ்சு காலேஜ் போக ஆரம்பிச்ச நேரம் அது.
நான் பஸ்சுக்காக பஸ் ஸ்டாண்ட்ல காத்துகிட்டு இருந்தேன். அப்போ ஒரு பொண்ணும் ஒரு பையனும் மூச்சு வாங்க ஓடி வந்தாங்க. அந்த சமையம் நீங்க பைக்ல வந்துட்டு இருந்தீங்க அவங்க ரெண்டு பேரும் நேரா உங்ககிட்ட வந்து அவங்களுக்கு ஹெல்ப் பண்ண சொல்லி கேட்டாங்க.
ரெண்டு பேரும் லவ் பண்றதா சொன்னாங்க நானும் நெனச்சேன். நீங்க கண்டிப்பா அவங்களுக்கு ஹெல்ப் பண்ணுவீங்கன்னு.
ஆனா அந்த நேரம் நீங்க அப்படி பண்ணுவீங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை.
அவங்க ரெண்டு பேர் கிட்டயும் யாரு என்னன்னு விசாரிச்ச நீங்க உடனே அவங்க ரெண்டு பேரோட அப்பா அம்மாவுக்கு போன் பண்ணி அதே இடத்துக்கு வர வெச்சு அவங்க ரெண்டு பேத்தையும் அந்த இடத்திலேயே பிரிச்சு விட்டுட்டீங்க.
எனக்கு அதை பார்த்து பெரிய அதிர்ச்சி தான்.
என்னடா இது அவர்களுக்கு உதவி பண்ண விருப்பம் இல்லைன்னா கடந்து போய் இருக்கலாமே அதை விட்டுட்டு இப்படி அவங்க ரெண்டு பேர் வீட்லயும் சொல்லி பிரிச்சு விட்டு இருக்க வேண்டாம்னு தோணுச்சு.
ஆனா அதுக்கப்புறம் நீங்க அவங்களுக்கு எடுத்து சொன்னது எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு.
அந்த ரெண்டு பேரன்ட்ஸும் வந்து அவங்க ரெண்டு பேத்தையும் அந்த நடு ரோடுன்னு கூட பார்க்காம அடிச்சாங்க. ஆனா அடுத்த நிமிஷம் நீங்க செஞ்ச காரியம் இருக்கு பாருங்க.
ரொம்ப பெரிய விஷயம் வேற யாரும் அந்த இடத்தில் இருந்தால அப்படி செஞ்சி இருப்பாங்களான்னு எனக்கு தெரியல நீங்க செஞ்சீங்க”
“ ஏய் நிறுத்துங்க முதல்ல இதுக்காக தான் உங்க ரெண்டு பேருக்கும் போன் பண்ணி வர சொன்னேனா விட்டா இங்கேயோ இவங்க ரெண்டு பேரையும் அடிச்சு கொன்னுடுவீங்க போல முதல்ல பெத்தவங்க பிள்ளையை புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க.
அவங்களுக்கு முதல்ல என்ன தேவை என்கிறதை தெரிஞ்சுக்கோங்க. கல்யாணம் பண்ணும் பிள்ளைய பெத்தோம் படிக்க வச்சோம்னு ஏதோ மிஷின் மாதிரி வளர்த்தா அந்த பிள்ளைகளுக்கு உங்க மேல எப்படி பாசம் வரும்.
இப்படி எல்லாத்தையும் உங்ககிட்ட இருந்து மறைக்க தான் செய்வாங்க தப்பு அவங்க மேல இல்ல பெத்தவங்களாகிய உங்க மேல தான் இருக்கு.
எப்ப பாரு அவங்க கிட்ட ஏதோ மிலிட்டரி மாதிரியே நடந்துக்கிறது.
முதல்ல அவங்க கிட்ட அன்பா பேசி பழகுங்க அவங்க மனசுல என்ன இருக்குன்னு கேளுங்க.
உனக்கு என்ன விருப்பம்னு அவங்க கிட்ட கேளுங்க சும்மா நீங்க நினைக்கிறத அவங்க கிட்ட திணிக்காதீங்க.
அப்படி நீங்க செய்யறதுனால தான் பிள்ளைங்க பெத்தவங்கள ஏதோ வில்லன் மாதிரி பார்க்குறாங்க. அவங்களுக்கான அன்பை வெளியே தேடுறாங்க. அதற்கு பெயர் தான் காதல். வீட்டில் கிடைக்காத அன்பு வெளியே கிடைக்கும் போது அதை ஏன் நம்ம எடுத்துக்க கூடாதுன்னு நினைக்கிறாங்க. ஆனா இவங்க ரெண்டு பேருக்கும் இப்போ காதலிக்கிற வயசு இல்ல ஏதோ உணர்ச்சி வசப்பட்டு ஓடி போற ரேஞ்சுக்கு வந்துட்டாங்க. அதுக்கு நீங்க தான் முக்கியமான காரணம் இனிமேலாவது பிள்ளைங்க மனச புரிஞ்சு நடந்துக்கங்க.
இந்த காதல் சிலரை வாழவைக்கும் சிலரை சாகடிக்கவும் செய்யும். நீங்க ரெண்டு பேரும் புரிஞ்சு நடந்துகோங்க இப்போ உங்க ரெண்டு பேருக்கும் பதினெட்டு வயசு தான் ஆகுது.
இது காதலிக்கிற வயசும் கிடையாது ஓடி போற நேரம் கிடையாது ஒழுங்கா படிக்கிற வழிய பாருங்க உங்க படிப்பு முடிகிற வரைக்கும் நீங்க ரெண்டு பேரும் பார்த்துக்கவே கூடாது.
உங்க காதல் உண்மையா இருந்தா நீங்க ரெண்டு பேரும் படிச்சு ஒரு நல்ல வேலையில இருக்கும்போது நீங்களே வீட்ல சொல்லுங்க அவங்களே உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைப்பாங்க”
“ சத்தியமா நீங்க இப்படி எல்லாம் செய்வீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. உங்கள ஒரு வில்லனாதான் பார்த்திருக்கேன்.
ஆனா உங்களுக்குள்ளேயும் இவ்வளவு பெரிய நல்ல மனசு இருக்குன்னு நான் அப்பதான் தெரிஞ்சுகிட்டேன். அப்பவே எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சி இருந்துச்சு”

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.2 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!