தணலின் சீதளம் 45

4.9
(13)

சீதளம் -45

இரண்டு வாரங்கள் கடந்திருந்தன.
டாக்டர் மேகாவை ஒரு வாரம் பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று கூறி இருக்க, அவர்கள் வீட்டில் அப்பத்தாவும் அன்னலட்சுமியும் அவளை பெட்டை விட்டு கீழே இறங்கவிடாமல் நன்கு கவனித்து வந்தார்கள்.
ஆனால் அது அவளுக்கு சந்தோஷத்தை கொடுத்ததா என்றால் இல்லை.
இந்த இரண்டு வாரமும் வேந்தனுடைய பாராமுகம் அவளை மிகவும் வாட்டியது.
வேந்தன் அவளுடைய முகத்திலேயே தான் முழிக்கக் கூடாது என்பதற்காக தன்னுடைய அறையில் தங்காமல் வேறு ஒரு அறையில் தங்கி கொண்டான்.
ஆனால் இவளுக்கோ அது மிகுந்த வேதனையாக இருந்தது.
“ சரி என்னுடன் பேச வேண்டாம் அட்லீஸ்ட் என்னுடன் ஒரே அறையிலாவது இருக்கலாமே. அந்த அளவிற்கு நான் செய்யக்கூடாத ஒரு தவறை செய்து விட்டேனா” என்று நினைத்து வருந்தியது அவளுடைய மனம்.
வேந்தனோ வீராவை வீட்டிற்கு அழைத்து வந்தவன் அதை பார்க்கும்போதெல்லாம் அவனுடைய மனது மிகுந்த வேதனைக்கு உள்ளாகும்.
உடன்பிறவா தம்பியை போல் அல்லவா வீராவை அவன் பார்த்துக் கொண்டான்.
இப்படி நடக்க முடியாமல் அவன் படும் துயரத்தை வேந்தனால் கண் கொண்டு பார்க்க இயலவில்லை.
வீராவுக்காக அங்கு தனி இடம் அமைத்திருந்தான்.
அதன் கால்கள் சேதமடைந்ததை ஏற்றுக்கொண்டு, மென்மையான துணிகள், மரவுருள்கள் வைத்து இடுப்பும் கால்களும் சாயாமல் பார்த்துக்கொண்டான்.
நேரா நேரத்திற்கு அதற்கு ஆகாரம் அவனே கொடுத்தான்.
ஒரு நாளில் அவனுடைய வெளி வேலைகளை முடித்துவிட்டு வீட்டுக்கு வருபவனோ வீராவினுடையே தன்னுடைய நேரத்தை செலவழிப்பான்.
அவ்வப்பொழுது வீராவினுடைய கால்களுக்கு தைலத்தை போட்டு விடுவான்.
அவனுடைய அன்னைக்கும் அப்பத்தாவுக்கும் வீரா வீட்டுக்கு வரும் பொழுதே அவனுடைய நிலையை கண்டார்கள்.
கண்டவர்களுக்கோ பேரதிர்ச்சியாகத்தான் இருந்தது.
வேந்தனிடம் என்ன ஆனது என்று கேட்டதற்கு அவன் அனைத்தையும் கூறி முடிக்க அவர்களுக்கோ சொல்லுண்ணா துயரம் ஆட்கொண்டது.
இருந்தும் என்ன செய்வது அவர்களும் தங்களால் முடிந்த அளவிற்கு வீராவை நன்கு பார்த்துக் கொள்கிறார்கள்.
ஆனால் இது எதுவும் மேகாவுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.
அவளுக்கு தெரிந்தால் அவள் மிகவும் வருத்தப்படுவாள் என்று நினைத்தவர்கள் இப்பொழுது அவள் இருக்கும் நிலைக்கு இது தெரிய வேண்டாம் என்று அவளிடம் சொல்லவில்லை.
இங்கு சென்பகபாண்டியனோ வேந்தன் வயலில் தீ வைத்தது சென்பகபாண்டியன் என்று தெரிந்த பிறகு போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்க அவர்கள் வந்து சென்பகபாண்டியனை கைது செய்தனர்.
ஒரே நாளில் வெளியே வரவும் இருந்த மொத்த கோபத்தையும் அறிவழகியின் மேல் காட்டினார்.
“உன் குடும்பத்துக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என்னையே போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் கொண்டு போய் இருப்பாங்க அதுக்கு எல்லாம் சேர்த்து நீதான் அனுபவிக்க போற” என்றவர் கொஞ்சமும் இரக்கம் இல்லாமல் ஒரு கம்பியை பழுக்க காய்த்து அவளுடைய இரண்டு கால்களிலும் சுட சுட சூடு வைத்து விட்டார்.
ஐயோ பாவம் அந்த சூடு தாங்க முடியாமல் அந்த வீடே அதிரும் அளவிற்கு கத்தினாள் அறிவழகி.
கண்களில் இருந்து கண்ணீர் குளமாக பெருகியது.
அவளால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.
அந்த நேரம் கதிரவனும் வீட்டில் இருக்கவில்லை.
பிறகு கதிரவனுடைய அம்மா தான் சென்பகபாண்டியன் அங்கிருந்து சென்றதும் அவளை கை தாங்கலாக தாங்கியவர்,
“ பாவி மனுஷன் இப்படி சின்ன பிள்ளைன்னு கூட பார்க்காம சூடு இழுத்துட்டு போறாரு” என்று வருத்தப்பட்டவர் அவளை அவளுடைய அறைக்கு அதாவது மாட்டு கொட்டகைக்கு அழைத்து சென்றவர் அவளுடைய தீப்பட்ட காயத்திற்கு மருந்திட்டார்.
“அத்தை ரொம்ப வலிக்குது” என்று அவர் காயத்திற்கு மருந்திடுவதை கூட தாங்க முடியாமல் வலியில் கத்தினாள்
அறிவழகி.
“ நல்லா பாலும் தேனும் கொடுத்து வளர்த்த பிள்ளையை இந்த மனுஷன் இப்படி பண்றாரு. ஏன்மா உனக்கு ஏன்மா இந்த விதி உனக்கு காதலிக்க வேற யாருமே கிடைக்கலையா போயும் போயும் இவனை போய் காதலிச்சு கல்யாணம் பண்ணி இருக்கியே. அதனால உனக்கு என்ன பிரயோஜனம் வலியும் வேதனையும் தான் அனுபவிக்கிற. இங்கு வந்ததுல இருந்து ஒரு வாய் சோறாவது நல்ல சாப்பாடு சாப்பிட்டு இருப்பியா. உன்னை பார்க்க பார்க்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குமா” என்றார் அவர்.
அவளோ அந்த வலியிலும் சிரித்தவள்,
“ என் தீராவ எனக்கு ரொம்ப பிடிக்கும் பரவால்ல இது எல்லாமே என் தீராவிற்காக நான் பொறுத்துக்கிறேன்” என்றாள்.
“நீ சொல்றத கேட்கும்போது எனக்கு ஆச்சரியமா இருக்கு என் பையனுக்காக இப்படி ஒரு பொண்ணு வந்து கஷ்டப்படுறன்னா அவன் எதையுமே கண்டுக்காம அவன் பாட்டுக்கு இருக்கான் இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோ எனக்கு தெரியல” என்றார் வருத்தத்துடன்.
“ நீங்க வருத்தப்படாதீங்க அத்தை எல்லாம் ஒரு நாள் சரியாகும்” என்று அவருக்கு ஆறுதல் சொன்னாள் அறிவழகி.
இங்கு நடக்கும் கொடுமை எல்லாம் கதிரவனுக்கு தெரியாமல் அல்ல. ஆனால் செய்வது அனைத்தும் அவனுடைய தந்தையாயிற்றே, அவரை மீறி அவனால் எதுவும் செய்து விட முடியாது என்பது அல்ல.
அவனுக்கு அவனுடைய தந்தையை மிகவும் பிடிக்கும் அதற்காக அவர் என்ன செய்தாலும் துணையாக நிற்கின்றான். அது எவ்வளவு தூரம் என்று பார்க்கலாம்.
மேகாவுக்கு இப்பொழுது ஓரளவு உடல் நன்றாகவே இருந்தது.
அவளால் அந்த அறைக்குள்ளையே அடைந்து கிடக்க கஷ்டமாக இருந்தது.
இந்த இரண்டு வாரங்களும் வேறு வழியே இல்லாமல் தன் குழந்தைக்காக அந்த அறையில் சகித்துக் கொண்டு கிடந்தாள்.
அவள் கண் விழித்ததும் தான் கருவுற்று இருப்பதை தெரிந்தவளுக்கோ அவ்வளவு ஆனந்தம்.
தன்னுடைய குழந்தை.
தனக்கும் தன் கணவனுக்கும் இடையேயான அன்பிற்கு அடையாளமாக உதித்திருக்கும் குழந்தையை நினைத்தவளுக்கோ அளவுக்கடந்த சந்தோஷம் அவளை ஆட்கொண்டது.
ஆனால் அதை தன் கணவனிடம் பகிர்ந்து கொள்ளவும் அவனுடைய படந்த மார்பில் சாய்ந்து கொள்ளவும் அவளுடைய மனம் ஏங்கியது.
ஆனால் அவளுடையவனோ அவள் இருக்கும் திசை பக்கம் கூட எட்டி பார்க்கவே இல்லை.
ஏன் அப்படி ஒரு ஆள் அந்த வீட்டில் இருப்பது போலவே அவன் காட்டிக் கொள்ளவில்லை.
இவளோ மிகவும் உடைந்து போனாள் அவனுடைய இந்த பாரா முகத்தில்.
இதையெல்லாம் யோசித்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்திருந்த மேகாவுக்கோ குமட்டிக் கொண்டு வர வாயைப் பொத்திக்கொண்டு குளியலறை நோக்கி ஓடிப் போனவள் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வெளியே வந்து சுடுதண்ணீர் பாட்டிலை எடுத்து சிறிது தண்ணீர் அருந்தலாம் என்று அந்த பாட்டிலை திறக்க அதிலோ தண்ணீர் இல்லை.
அவளுடைய அத்தையை கூப்பிடலாம் என்று நினைத்து வாயை திறக்கப் போனவள் சற்று சிந்தித்துப் பார்த்தாள்.
தன்னுடைய உடல் தான் இப்பொழுது ஓரளவிற்கு பரவாயில்லை.
தானே சென்று தண்ணீரை எடுத்துக் கொள்ளலாம் அவர்களுக்கு சிரமம் கொடுக்க வேண்டாம் என்று நினைத்தவள் சுடுதண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு கீழே வந்தவள் படிக்கட்டில் வந்து கொண்டிருந்தாள்.
அப்பொழுது அவளுடைய தலை சற்று சுற்ற கண்கள் சொருக ஆரம்பித்தன.
பிடிமானத்திற்கு அவளுடைய கைகள் அங்கு தேட எதுவும் கிடைக்காமல் சட்டென்று அவள் விழப்போக ஒரு வழியை கரமோ அவளுடைய கரம் பற்றி இழுத்து தன்னுடன் அணைத்துக் கொண்டன.
அவளோ அவன் இழுத்ததும் பதறியவள் சட்டென விழித்துக் கொண்டாள் மயக்கத்தையும் மீறி.
வேந்தனோ,
“அம்மாஆஆஆஆ” என்று அந்த ஹாலே அதிரும் அளவிற்கு கத்தியவன்,
“ என்ன செய்றீங்க யாரும் இல்லையா இந்த வீட்ல” என்று கத்தினான்.
அவனுடைய குரலை கேட்டு சமையல் அறையில் இருந்து வெளியே வந்த அன்னலட்சுமி மாடிப்படியில் தன்னுடைய மகன் மருமகளை தாங்கியவாறு நிற்பதை பார்த்தவரோ,
“ ஐயோ என்னப்பா ஆச்சு மேகாவுக்கு என்ன ஆச்சு நீ ஏம்மா எங்க நிக்கிற பொண்ணு ரூம்ல தானே இருக்க சொன்னேன்” என்று அவர் பதறிப்போய் கேட்க.
அவன் பதில் கூறும் முன்பே வேந்தனோ,
“ அம்மா எதுக்காக இவ கீழே வந்தா இவளைத்தான் டாக்டர் ரெஸ்ட் எடுக்க சொல்லி இருக்காங்கல்ல இப்போ நான் வராமல் இருந்திருந்தா என்ன ஆயிருக்கும் தெரியுமா.
என் குழந்தையை என்கிட்ட இருந்து பிரிச்சிருப்பா இந்த ராட்சசி” என்று அவன் வார்த்தைகளை கடித்து துப்ப அவளுக்கோ அவனுடைய இந்த வார்த்தையின் வீரியத்தை தாங்கிக்க முடியாமல் கண்களில் கண்ணீர் கசிந்தன.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!