சீதளம் -46
மேகாவுக்கோ அவனுடைய வார்த்தைகள் அம்பாய் அவளுடைய நெஞ்சில் பாய்ந்தன.
‘என்ன என் குழந்தையை நானே அளிப்பேனா அவருக்கு மட்டும் தான் அது குழந்தையா எனக்கு இல்லையா என்னுடைய வயிற்றில் முதன்முதலாக உதித்த அந்த பிஞ்சு குழந்தையை நான் கொல்ல நினைப்பேனா அந்த அளவிற்கு அவருக்கு என் மேல் வெறுப்பு வந்துவிட்டதா’ என்று நினைத்தவளுக்கோ பழையபடி அவன் ஒரு வார்த்தை சொன்னால் அதற்கு நான்கு மடங்கு பேசும் அவளுடைய வாயோ மூடிக்கொண்டன.
வார்த்தைகள் வர மறுத்தது.
அதற்கு பதிலாக அவளுடைய இரு விழிகளும் கண்ணீரை மட்டுமே சிந்தின.
அவனோ அவளை ஏறெடுத்தும் பார்த்தான் இல்லை.
ஆனால் அவனுடைய கைகள் மட்டும் அவளை தன்னுடன் உடம்பு பிடியாக பிடித்துக் கொண்டிருந்தன.
பதறிய அன்னலட்சுமியோ,
“ ஐயா வேந்தா என்னப்பா சொல்ற” என்று கேட்க.
அவனோ,
“நான் மட்டும் இப்ப வரலைன்னா இவ மயக்கம் போட்டு இதுல விழுந்து இருப்பா அப்படி விழுந்திருந்தா என்ன ஆகிருந்திருக்கும் என் குழந்தை எனக்கு இல்லாம போயிருக்கும் ஏற்கனவே என் தம்பி வீரா என்ன நிலைமையில இருக்கான். இப்போ என் குழந்தையும் என்கிட்ட இருந்து இவ பிரிக்க நினைக்கிறாளே” என்று அவன் மறந்து போய் வீராவை பற்றி கூறிவிட்டான். “அய்யய்யோ என்னப்பா சொல்ற அம்மா மேகா நீ ஏம்மா கீழ வந்த என்னை ஒரு வார்த்தை கூப்பிட்டு இருந்தா நான் வந்து இருப்பேனே” என்று அவர் கேட்க. அவளுக்கோ அவன் வீராவை பற்றி கூறியது மட்டும் காதில் தெளிவாக விழுந்தது.
“ அத்த வீராவுக்கு என்ன ஆச்சு” என்று அவள் கேட்க அப்பொழுதுதான் வேந்தன் தன்னை மறந்து வீராவை பற்றி கூறியது நினைவில் வர தன்னையே கடிந்து கொண்டான்.
அன்னலட்சுமியோ தன்னுடைய மகனை ஏறிட்டுப் பார்த்தவர் கண்களாலையே, “இப்படி உளறிட்டியே ராசா” என்று கேட்க. அவனோ தன்னுடைய பார்வையை திருப்பிக் கொண்டான்.
“ அத்தை சொல்லுங்க வீராவுக்கு என்ன ஆச்சு அவனுக்கு எதுவும் பிரச்சனை இல்லையே” என்று அவள் பதறி போய் கேட்க.
அவரோ,
“ அது வந்தும்மா வீராவுக்கு ஒன்னும் இல்ல அவனுக்கு என்ன அவன் நல்லாதான் இருக்கான்” என்று திக்கித் திணறி கூறினார்.
அவளோ அதை அவர் கூறி முடிப்பதற்குள் மாறுபட்ட அவருடைய முகம் மாற்றத்தையும் கண்டு கொண்டவள்,
“ அப்புறம் ஏன் அத்தை அவர் வீராவுக்கு ஏதோ ஆச்சுன்னு சொன்னாரு நீங்க எதையாவது என்கிட்ட இருந்து மறைக்கிறீங்களா” என்று அவள் கேட்க. வேந்தனோ,
“ அம்மா இவளை மாதிரி எல்லாரும் இருக்க மாட்டாங்கன்னு சொல்லுங்க. இவகிட்ட நம்ம ஏன் பொய் சொல்லணும். ஆமாடி நீ அன்னைக்கு வீராவுக்கு அடிபட்டச்சுன்னு அவனுக்கு ஒண்ணுமே ஆகாம நீ அடிபட்டச்சுன்னு சொன்னல்ல அதனாலயே என்னவோ இன்னைக்கு அவன் எந்த நிலைமையில இருக்கான் தெரியுமா உனக்கு”
“ அய்யா வேந்தா சும்மா இரு” என்று அன்னலட்சுமி அவரை தடுக்க நினைக்க, அவனோ அவரை தடுத்தவன்,
“ அம்மா நீங்க சும்மா இருங்க நம்ம எல்லாத்தையும் கஷ்டப்படுத்திட்டு இவ மட்டும் நிம்மதியா இருக்கணுமா இவ சொன்ன பொய்யினாலதான் என் வீரா இப்போ நடக்க முடியாம படுத்த படுக்கையா கிடக்குறான்.
அவனை அப்படி பார்க்கும் போது என் மனசு என்ன பாடு படுது தெரியுமா” என்றவன் கண்களோ கலங்கின.
வேந்தனே சத்தத்தை கேட்டு அங்கு வந்து சேர்ந்தனர் செல்வரத்தினமும் அப்பத்தாவும்.
மேகாவையும் வேதனையும் பார்த்தவர்களுக்கோ அவன் அவளிடம் அனைத்தையும் கூறிவிட்டான் என்பது தெளிவாக புரிந்தது.
ஆனால் அவனோ யாரையும் கண்டுகொண்டான் இல்லை.
தன்னுடைய மனதில் தோன்றுவதை கூறிவிட்டவன் மேகாவை தன்னுடைய அன்னையிடம் விட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டான்.
அவளோ அன்னலட்சுமி யின் அணைப்பில் இருந்தவள் கை கால்கள் படபடக்க,
“ அத்தை அவர் சொல்றது உண்மையா வீராவுக்கு என்ன ஆச்சு உண்மைய சொல்லுங்க எனக்கு என்னமோ ரொம்ப பயமா இருக்கு ப்ளீஸ் அத்தை தயவு செய்து என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க.
அவரு நான் சொன்ன பொய் உண்மை ஆயிட்டு என்கிற மாதிரி சொல்றாரு எனக்கு மண்டையே வெடிச்சிடும் போல இருக்கு வீராவுக்கு என்ன ஆச்சு அவனுக்கு ஒன்னும் இல்ல தானே” என்று கேட்டாள் அவள்.
அன்னலட்சுமி வீராவின் நிலைமை பற்றி கூற அதை கேட்ட மேகாவுக்கோ உலகமே சுற்றுவதை நிறுத்தியதை போன்று இருந்தது.
என்ன என்னுடைய வீராவுக்கு இந்த நிலைமையா எல்லாம் என்னால்தான் நான் அன்றைக்கு கூறிய பொய்யினால் தான் இன்று அவன் இப்படி இருக்கின்றான் போலும். அவர் சொல்வது உண்மைதான். அவனை உடனே பார்க்க வேண்டும் போல அவளுக்கு இருந்தது.
“ அத்த நான் வீராவை பார்க்கணும்” என்றாள்.
அன்னலட்சுமியோ,
“ இல்லம்மா வேண்டாம்” என்று அவர் மறுக்க அவளோ,
“ என்ன அத்தை நான் போய் பார்க்கணும் நான் பாத்துட்டு வரேன்” என்று சொன்னவளோ வீரா இருக்கும் இடத்தை நோக்கி சென்றாள்.
அங்கு சென்று வீராவை பார்த்தவளுக்கோ சர்வமும் நடுங்கி தொப்பென தரையில் அமர்ந்து விட்டாள் அவன். .
ஒரு காலத்தில் செழித்து உழைத்த உடம்பு… இப்போது நாலு கால்களும் தீக்காயத்தால் முழுமையாக சேதமடைந்த நிலையில், நடக்க முடியாத ஒரு படுக்கைப்பட்ட உயிராக இருந்தான்.
கொஞ்ச நாளுக்கு முன்தான் அந்த காளை, காட்டோடு கர்ஜித்துக் கொண்டு காலடியில் மணல் தூளை எழுப்பி, விழியோடு வீசிய வேகத்தைப் பார்க்க மக்கள் ‘ஆஹா!’ என்று கரையினார்கள். இப்போது அந்த விழிகளோ பொறுமையோடும் வலியோடும் அழுது கொண்டிருக்கின்றன.
தீக்காயங்கள் ஆழமாய் விரிந்துவிட்டன. தோலோடு சதை எரிந்து, மெலிந்த கால்கள் நழுவிக் கிடக்கின்றன. ஆண்மையும் வீரத்தையும் உணர்த்திய அந்த நாலு கால்களும் இப்போது செயல் இழந்திருக்கின்றன.
வேந்தன் தன் வீட்டு பின்புற சிறிய சாயல் கூடத்தில் மெத்தைப் பரப்பி வைத்திருந்தான்.
தினமும் காலை, மாலை அதற்காக நீரூட்டி, உணவு கொடுத்து, அதற்காகவே ஒரு தனி பராமரிப்பு செய்யப்படுகிற நிலையை உருவாக்கி இருந்தான்.
வேந்தன் வீராவை அவ்வளவு பாதுகாப்பாக பார்த்துக் கொண்டான். ஆனால் வீராவின் விழிகளோ பொலிவிழந்து காணப்பட்டன.
மேகாவோ வீராவை பார்த்தபடியே பித்து பிடித்தவள் போல அமர்ந்திருந்தாள்.
எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை. அவளை பார்த்ததும் வீராவோ சற்று முனங்கினான்.
அந்த முனங்களில் அவனுடைய முகத்தை பார்த்தவளுக்கு சொல்லொணா துயரம் அவளை ஆட்கொண்டது.
தான் உரைத்த பொய் இன்று உண்மையாய் மாறி வீராவை எந்த நிலைமைக்கு ஆளாக்கிவிட்டது.
தான் அவ்வாறு பொய் கூறாமல் இருந்திருந்தால் ஒருவேளை வீராவுக்கு இந்த நிலைமை வந்திருக்காதோ.
தான் செய்தது மிகப்பெரிய பிழை.
இதை எவ்வாறு போக்குவது வீராவை என்னால் இந்த நிலைமையில் பார்க்கவே முடியவில்லை.
அவளுடைய மனக்கண்ணில் அவன் அவளை முதன்முதலாக ஒரு காளையிடம் இருந்து காப்பாற்றியது நினைவில் வர அவளுடைய கண்களோ அவளுடைய அனுமதி இன்றியே கண்ணீரை வெளியேற்றியது.
மெதுவாக எழுந்து வந்தவள் வீராவின் அருகில் வந்து அதனுடைய முகத்தோடு தன் முகத்தை வைத்து கட்டி பிடித்தவள் தன்னால் முடிந்த மட்டும் அழுது தீர்த்தாள்.
அவளை வெகு நேரம் காணவில்லையே என்று செல்வரத்தினம் அப்பத்தா அன்னலட்சுமி என மூவரும் அங்கு வந்து பார்க்க அங்கு கண்ட காட்சியை கண்டவர்களுக்கோ என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
அன்னலட்சுமி கருவுற்றிருக்கும் பெண் அழக்கூடாது என்று நினைத்தவர் அவளை அழைக்க போக அப்பத்தாவோ அவருடைய கையை பிடித்து தடுத்தவர்,
“ வேண்டாம் அன்னம் அவளை கொஞ்ச நேரம் அப்படியே விடு அவளே வந்துருவா இப்ப போய் நீ அவகிட்ட எதுவும் சொல்ல வேண்டாம். ஏற்கனவே வேந்தன் அவகிட்ட முகம் கொடுத்து கூட பேச மாட்டேன்கிறான் இப்போ வீராவையும் இந்த நிலைமையில பார்த்துட்டு அவளால நிம்மதியா இருக்க முடியாது கொஞ்ச நேரம் அழுது தீர்க்கட்டும் அதுக்கப்புறம் அவ சரியாகிடுவா வாங்க நம்ம போவோம்” என்று உள்ளே சென்று விட்டார்கள்.
வீராவோ அவள் அழுவதை கண்டவனுக்கும் அதன் விழிகளிலும் கலங்கி கண்ணீர் வந்து அவளுடைய கையை நனைக்க தன்னுடைய கையில் பட்ட கண்ணீரில் கையை தூக்கி பார்த்தவள் வீராவை பார்க்க அதன் கண்கள் கலங்கி அழுவதை கண்டவளுக்கோ இதயத்தில் யாரோ அம்பால் குத்தியது போன்ற வலி உருவாகியது.
என்ன மன்னிச்சிடு வீரா தயவுசெய்து நீயாவது என்னை மன்னிச்சிடு நான் அப்படி செஞ்சிருக்க கூடாது நான் சொன்ன பொய் இப்படி உன்னை பாதிக்கும்னு நான் நினைச்சு கூட பார்க்கவே இல்ல. என்னாலேயே என்னை மன்னிக்க முடியல. வீரா உன் காலு உன்னால நடக்க முடியாம” என்றவளுக்கோ அதற்கு மேல் வார்த்தைகள் வர மறுத்தது.
அதுவும் அவளுடைய முகத்தோடு தன்னுடைய முகத்தை வைத்து உரசியது அவள் அழுவதை தாங்காமல்.
மீண்டும் வீராவை தன்னோடு அணைத்துக் கொண்டவளுக்கோ சட்டென ஒரு யோசனை வந்தது.
“ வீரா நீ எதுக்கும் கவலைப்படாதே என்னால உன்னை சரி பண்ண முடியும் என்னால் சரி பண்ண முடியும். கண்டிப்பா உன்னுடைய இந்த நிலைமையை என்னால சரி பண்ண முடியும். பழையபடி நீ நடப்ப நான் நடக்க வைப்பேன்”
என்றவள் அதனுடைய கண்களை துடைத்து விட்டு தன்னுடைய கண்களையும் துடைத்துக்கொண்டவள் வேகமாக வீட்டிற்குள் நுழைந்தாள்.